புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 1:47 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 1:44 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 1:38 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 12:49 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 12:47 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 12:46 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 12:45 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 12:44 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 12:42 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 12:40 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 5:56 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 5:33 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 5:21 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 5:18 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 4:55 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 4:53 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 4:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:25 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 2:41 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 2:39 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 1:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 11:53 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 5:29 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 1:14 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 1:12 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 1:11 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 1:08 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 1:06 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 1:04 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 11:24 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 10:54 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:33 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 9:50 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 9:05 am

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:54 am

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:53 am

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:10 am

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:01 am

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:00 am

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:58 am

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:58 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:57 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 7:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எம்.ஆர்.ராதா- சிறு குறிப்புகள்  Poll_c10எம்.ஆர்.ராதா- சிறு குறிப்புகள்  Poll_m10எம்.ஆர்.ராதா- சிறு குறிப்புகள்  Poll_c10 
85 Posts - 79%
heezulia
எம்.ஆர்.ராதா- சிறு குறிப்புகள்  Poll_c10எம்.ஆர்.ராதா- சிறு குறிப்புகள்  Poll_m10எம்.ஆர்.ராதா- சிறு குறிப்புகள்  Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
எம்.ஆர்.ராதா- சிறு குறிப்புகள்  Poll_c10எம்.ஆர்.ராதா- சிறு குறிப்புகள்  Poll_m10எம்.ஆர்.ராதா- சிறு குறிப்புகள்  Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
எம்.ஆர்.ராதா- சிறு குறிப்புகள்  Poll_c10எம்.ஆர்.ராதா- சிறு குறிப்புகள்  Poll_m10எம்.ஆர்.ராதா- சிறு குறிப்புகள்  Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எம்.ஆர்.ராதா- சிறு குறிப்புகள்  Poll_c10எம்.ஆர்.ராதா- சிறு குறிப்புகள்  Poll_m10எம்.ஆர்.ராதா- சிறு குறிப்புகள்  Poll_c10 
250 Posts - 77%
heezulia
எம்.ஆர்.ராதா- சிறு குறிப்புகள்  Poll_c10எம்.ஆர்.ராதா- சிறு குறிப்புகள்  Poll_m10எம்.ஆர்.ராதா- சிறு குறிப்புகள்  Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
எம்.ஆர்.ராதா- சிறு குறிப்புகள்  Poll_c10எம்.ஆர்.ராதா- சிறு குறிப்புகள்  Poll_m10எம்.ஆர்.ராதா- சிறு குறிப்புகள்  Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
எம்.ஆர்.ராதா- சிறு குறிப்புகள்  Poll_c10எம்.ஆர்.ராதா- சிறு குறிப்புகள்  Poll_m10எம்.ஆர்.ராதா- சிறு குறிப்புகள்  Poll_c10 
8 Posts - 2%
prajai
எம்.ஆர்.ராதா- சிறு குறிப்புகள்  Poll_c10எம்.ஆர்.ராதா- சிறு குறிப்புகள்  Poll_m10எம்.ஆர்.ராதா- சிறு குறிப்புகள்  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
எம்.ஆர்.ராதா- சிறு குறிப்புகள்  Poll_c10எம்.ஆர்.ராதா- சிறு குறிப்புகள்  Poll_m10எம்.ஆர்.ராதா- சிறு குறிப்புகள்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
எம்.ஆர்.ராதா- சிறு குறிப்புகள்  Poll_c10எம்.ஆர்.ராதா- சிறு குறிப்புகள்  Poll_m10எம்.ஆர்.ராதா- சிறு குறிப்புகள்  Poll_c10 
3 Posts - 1%
Barushree
எம்.ஆர்.ராதா- சிறு குறிப்புகள்  Poll_c10எம்.ஆர்.ராதா- சிறு குறிப்புகள்  Poll_m10எம்.ஆர்.ராதா- சிறு குறிப்புகள்  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
எம்.ஆர்.ராதா- சிறு குறிப்புகள்  Poll_c10எம்.ஆர்.ராதா- சிறு குறிப்புகள்  Poll_m10எம்.ஆர்.ராதா- சிறு குறிப்புகள்  Poll_c10 
2 Posts - 1%
Shivanya
எம்.ஆர்.ராதா- சிறு குறிப்புகள்  Poll_c10எம்.ஆர்.ராதா- சிறு குறிப்புகள்  Poll_m10எம்.ஆர்.ராதா- சிறு குறிப்புகள்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எம்.ஆர்.ராதா- சிறு குறிப்புகள்


   
   
கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Wed Apr 20, 2011 2:55 pm

எம்.ஆர்.ராதா பற்றி சுவையான சிறு குறிப்புகள்

சினிமாவில், சீர்திருத்தங்கள், நாடகத்தில், கலகக்காரர். அரசியல் மேடையில்
சீறினால், இடியாக இறங்குவார். தனிமையில் சீண்டினால், வெடியாக வெடிப்பார்.
எம்.ஆர்.ராதா... எவருக்கும் அஞ்சாத ராஜா!

மதராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன் என்பதன் சுருக்கம்... எம்.ஆர்.ராதா.
ஜெர்மன் போர்க்கப்பலான 'எம்டன்' சென்னையில் குண்டு வீசிய அன்று பிறந்தவர்
என்பதால் அவரது வாழ்க்கை முழுவதும் வெடிச் சம்பவங்கள் நிறைய!

அப்பா ராஜகோபாலன், இந்திய ராணுவத்தில் இருந்தவர். முதலாம் உலகப்போரில்
பங்கேற்று மெசபடோமியாவில் பலியானவர். அதற்காகப் பெற்ற வீரப்பதக்கத்தை
எப்போதும் பொக்கிஷமாகவைத்து இருப்பார் ராதா!

சின்னவயதிலேயே வீட்டுக்கு அடங்காத பிள்ளை. அதனால் பள்ளியில் படிக்க மனம்
இல்லை. 'நான் ஓர் அநாதை' என்று சொல்லி, ஆலந்தூர் அரங்கசாமி நாடகக் குழுவில்
சேர்ந்தார். நல்லத்தங்காள் நாடகத்தில் அவள் கிணற்றில் வீசும் குழந்தைகளில்
ஒன்றாக மேடையேறியது முதல் அனுபவம் 'நாடகத்தில் நடிக்கச் சொல்லிக்
கொடுத்தது ஜெகநாதய்யர்தான்' என்பார்!

ராதா நடித்த முதல் படம் 'ராஜசேகரன்' (1937), கடைசிப் படம் 'பஞ்சாமிர்தம்'
(1979), சினிமா வாய்ப்பு கிடைத்ததும் பலரும் நாடகத்தை விட்டுவிடுவார்கள்.
ஆனால், சினிமா - நாடகம் இரண்டையும் விடாமல் வைத்திருந்தவர் இவர்
மட்டும்தான்!

'உலக பாட்டாளி மக்களே ஒன்று சேருங்கள்' என்று சொல்லி, அரிவாள் சுத்தியல்
சின்னத்தைக் காட்டுவதைத் தனது ஆரம்ப கால நாடகங்களில் வழக்கமாக வைத்திருந்த
ராதா, அதன் பிறகு திராவிடர் கழகக் கொடியையும் பெரியார் படத்தையும்
காட்டிவிட்டுத்தான் நாடகத்தை ஆரம்பிப்பார்!

ரத்தக் கண்ணீர் நாடகம் 3 ஆயிரத்து 21 நாட்கள் அரங்கேற்றப்பட்டது.
தூக்குமேடை நாடகம் 800 நாட்களும், லட்சுமிகாந்தன் நாடகம் 760 நாட்களும்
அரங்கேற்றப்பட்டுள்ளன!

ப்ளைமெளத், அம்பாஸடர், இம்பாலா எனப் பலப் பல கார்களை வைத்திருந்தார்.
இம்பாலாவில் ஒரு நாள் எருமை மாட்டுக்கு வைக்கோல் எடுத்துச் சென்றதைப்
பார்த்துப் பலரும் ஆச்சர்யப்பட்டார்கள். 'நமக்குப் பயன்
படுறதுக்குத்தானப்பா கார். தகரத்துக்கு கலர் பெயின்ட் அடிச்சதுக்காக,
தலையிலயா தூக்கிட்டுப் போக முடியும்?' என்று கேட்டார்!

நாடகம் நடந்துகொண்டு இருக்கும்போது செருப்பு, கல், அழுகிய முட்டை போன்றவை
எதிரிகளால் வீசப்படுவது வாடிக்கை அந்தப் பொருட்களை மறு நாள் கண்காட்சியாக
வைப்பார். 'நேற்று பேடிகள் விட்டுச்சென்ற சாமான்கள்' என்று அதில்
எழுதிவைப்பார்!

எம்.ஜி.ஆரை 'ராமச்சந்திரா' என்றும், சிவாஜியை 'கணேசா' என்றும் அழைப்பார். மற்ற நடிகர்களை எல்லாம் வாடா, போடாதான்!

இவரது நாடகங்களைத் தடை செய்வதற்காகவே காங்கிரஸ் ஆட்சி நாடகத் தடைச் சட்டம்
கொண்டு வந்தது. அந்தச் சட்டம் விவாதத்துக்கு வந்தபோது டவுசர், பணியனோடு
சபை வளாகத்துக்குப் போய் விட்டார். ஒரு நாடகத்தைத் தடை செய்தால், அதையே
பெயர் மாற்றி மறு நாள் போடுவார்!

என்.எஸ். கிருஷ்ணனைச் சுடுவதற்காக உளுந்தூர்பேட்டையில் கள்ளத் துப்பாக்கி
வாங்கினார். விஷயம் தெரிந்து, 'நண்பன் கையால் சாகக் கொடுத்து
வைத்திருக்கணும்' என்று என்.எஸ்.கே சொன்னதும், மனம் மாறி கட்டி அணைத்தார்
ராதா. திருப்பதி கோயிலுக்கு குண்டுவைக்கப் போய் வெடி மருந்தைக் காயவைத்து,
அது வெடித்துச் சிறு விபத்தான சம்பவமும் உண்டு!

எம்.ஜி.ஆரை அவரது ராமாவரம் தோட்டத்தில் சுட்டு, தானும் சுட்டுக்கொண்டதாகப்
பதிவான வழக்கில் ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை தரப்பட்டது. 'நண்பர்கள்
ரெண்டு பேரும் துப்பாக்கியை வெச்சு விளையாடிக்கிட்டோம். என்னடா துப்பாக்கி
கண்டு பிடிக்கிறானுங்க. நானும் சாகலை... ராமச்சந்திரனும் சாகலை. இதுல
எல்லாமா டூப்ளிகேட் வர்றது?' என்று அதற்கும் காமெடி விளக்கம் கொடுத்தார்!

நான்கரை ஆண்டு காலம் சென்னை மத்தியச் சிறையில் இருந்தார் அவர் மீது
ஆர்வம்கொண்டவராகக் காட்டிக்கொண்ட கைதி ஒருவர், ஒரு நாள் சமையல் செய்து
கொடுத்தார். ராதா வளர்த்த பூனை அதை முதலில் சாப்பிட்டதும் சுருண்டு
விழுந்து செத்துப்போனது. ஆய்வுக்கு அனுப்பப்பட்ட அந்த உணவில், விஷம்
கலக்கப்பட்டு இருந்தது பின்னால் தெரிய வந்தது!

'அடியே காந்தா... ஃபாரின்ல நீராவியில் கப்பல் விடுறான்... நீங்க நீராவியில
புட்டு செஞ்சு வயித்துக்குள்ள விடுறீங்க', 'ஊருக்கு ஒரு லீடர்...
அவனவனுக்கு ஒரு கொள்கை. அவனவனுக்கு ஒரு பட்டினிப் பட்டாளம்.... நான்
சென்ஸ்' - இப்படி ராதாவின் வார்த்தைகளைவைத்தே மிமிக்ரி நடிகர் ஆனவர்கள்
அதிகம்!

ராமாயணத்தை அதிகப்படியாகக் கிண்டலடித்தவர். 'கீமாயணம்' என்று நாடகம்
போட்டார். ராமன் வேடத்தில் இருக்கும்போதே கைது செய்தார்கள். பக்தர்கள் மனம்
புண்படுகிறது என்று வழக்குப் போட்டார்கள். 'மனம் புண்படுபவர்கள் யாரும் வர
வேண்டாம்' என்று விளம்பரம் கொடுத்தார்!
'நீங்கள் எதில் அதிக இன்பம் காண்கிறீர்கள்?' என்று கேட்டபோது.
'எதிர்ப்பில்தான், மக்கள் எதை விரும்புகிறார்களோ... அதை எதிர்ப்பதுதான் என்
பழக்கம் 'என்றார்!

ராதாவுக்கு எழுதப்படிக்கத் தெரியாது. எவ்வளவு நீளமான வசனங்களாக
இருந்தாலும், யாராவது வாசித்தால் அப்படியே மனதுக்குள் ஏற்றிக்கொள்வார்.
அவர் சொல்லச் சொல்ல எழுதப்பட்டவை சிறு சிறு வெளியீடுகளாக அந்தக் காலத்தில்
வெளிவந்தன. 'அண்ணாவின் அவசரம்', 'ராமாயணமா? கீமாயணமா?' என்ற இரண்டும் அதிக
சர்ச்சையைக் கிளப்பிவை!

ரத்தக் கண்ணீர், பாகப்பிரிவினை, பாவ மன்னிப்பு, பலே பாண்டியா, பாலும்
பழமும், தாய் சொல்லைத் தட்டாதே, படித்தால் மட்டும் போதுமா, பெரிய இடத்துப்
பெண், தொழிலாளி, பெற்றால்தான் பிள்ளையா ஆகிய படங்கள் ராதா வாழ்ந்து காட்டிய
படங்கள், 118 படங்கள் நடித்த ராதா 1963-ம் ஆண்டில் சாதனையாக 22 படங்கள்
நடித்தார்!

மு.கருணாநிதி என்று அதுவரை அழைக்கப்பட்டு வந்தவரை 'கலைஞர் கருணாநிதி'
என்று அழைத்துப்பட்டம் கொடுத்தவர். 'நடிகவேளின் தலைமுடியும் நடிக்கும்'
என்று கலைஞரும் பாராட்டி இருக்கிறார்!

''திராவிட இயக்க ஆட்சி தமிழகத்தில் மலரும் போது ராதாதான் கலைத் துறை
அமைச்சராக நியமிக்கப்படுவார்'' என்று பகிரங்கமாக அறிவித்தார் அண்ணா, 67-ல்
ஆட்சி மலர்ந்தபோது, ராதா கடுங்காவல் தண்டனை பெற்று சிறையில் இருந்தார்!

தன்னைப் பார்க்க இளைஞர்கள், மாணவர்கள் வந்தால் விரட்டுவார். ''போய்ப்
படிங்கடா... நாங்க எங்க வேலையைப் பார்க்கிறோம். நீங்க உங்க வேலையைப் போய்ப்
பாருங்கடா'' என்பது அவரது அழுத்தமான கருத்து!

விழாக்கள், பாராட்டுக்கள் ஆகியவற்றில் விருப்பம் இல்லாத காமராஜர்,
ராதாவுக்கு மட்டும் தான் புனித ஆடை போர்த்தும் விழாவை நடத்தினார். 'ஆடையில்
என்ன புனிதம் வேண்டிக்கிடக்கு? போர்த்துகிறவர் புனிதர்... அதனால
ஏத்துக்கிறேன்' என்று அங்கும் கர்ஜித்தார் ராதா!

'மக்களின் அஞ்ஞானத்தைப் போக்க விஞ்ஞானம் மட்டும் போதாது. ராதா நடத்துவது
போன்ற நாடகங்களும் தேவை' என்று சொன்னவர் விஞ்ஞானி சர்.சி.வி.ராமன்!

''சுட்டாள்.... சுட்டான்.. சுட்டேன்'' என்ற தலைப்பில் நாடகமும்
சினிமாவும் எடுக்கத் திட்டமிட்டார். வி.என். ஜானகி சுட்டாள்,
எம்.ஜி.ஆர்.சுட்டான், நான் சுட்டேன்... என்று விஷயம் அறிந்தவர்களால்
விளக்கம் சொல்லப்பட்டது!

''தமிழினத்துக்குத் துரோகம் செய்கிறவர்களை ஒழிக்க ஒரு தற்கொலைப் படை
வேண்டும். அதுதான் என்னுடைய லட்சியம், 300 பேர் அதற்குக் கிடைத்தால்
போதும்'' என்று தனது கடைசிக் காலத்தில் சொல்லிக்கொண்டே இருந்தார்!
நன்றி
TMT



யாதும் ஊரே யாவரும் கேளிர்
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Wed Apr 20, 2011 4:18 pm

\தன்னைப் பார்க்க இளைஞர்கள், மாணவர்கள் வந்தால் விரட்டுவார். ''போய்ப்
படிங்கடா... நாங்க எங்க வேலையைப் பார்க்கிறோம். நீங்க உங்க வேலையைப் போய்ப்
பாருங்கடா'' என்பது அவரது அழுத்தமான கருத்து!/

என்ன தெளிவு,என்ன தெளிவு



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

எம்.ஆர்.ராதா- சிறு குறிப்புகள்  38691590

இரா.எட்வின்

எம்.ஆர்.ராதா- சிறு குறிப்புகள்  9892-41
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 05/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Apr 20, 2011 4:34 pm

நிறைய விஷயங்கள் அறிய முடிந்தது...

அன்பு நன்றிகள் பகிர்வுக்கு கார்த்தி.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

எம்.ஆர்.ராதா- சிறு குறிப்புகள்  47
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Wed Apr 20, 2011 5:18 pm

கார்த்திநடராஜன் wrote:எம்.ஆர்.ராதா பற்றி சுவையான சிறு குறிப்புகள்

...............................................
...............................................

'அடியே காந்தா... ஃபாரின்ல நீராவியில் கப்பல் விடுறான்... நீங்க நீராவியில
புட்டு செஞ்சு வயித்துக்குள்ள விடுறீங்க', 'ஊருக்கு ஒரு லீடர்...
அவனவனுக்கு ஒரு கொள்கை. அவனவனுக்கு ஒரு பட்டினிப் பட்டாளம்.... நான்
சென்ஸ்' - இப்படி ராதாவின் வார்த்தைகளைவைத்தே மிமிக்ரி நடிகர் ஆனவர்கள்
அதிகம்!

.....................................

'நீங்கள் எதில் அதிக இன்பம் காண்கிறீர்கள்?' என்று கேட்டபோது.
'எதிர்ப்பில்தான், மக்கள் எதை விரும்புகிறார்களோ... அதை எதிர்ப்பதுதான் என்
பழக்கம் 'என்றார்!

..................................

''தமிழினத்துக்குத் துரோகம் செய்கிறவர்களை ஒழிக்க ஒரு தற்கொலைப் படை
வேண்டும். அதுதான் என்னுடைய லட்சியம், 300 பேர் அதற்குக் கிடைத்தால்
போதும்'' என்று தனது கடைசிக் காலத்தில் சொல்லிக்கொண்டே இருந்தார்!
நன்றி
TMT

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



எம்.ஆர்.ராதா- சிறு குறிப்புகள்  Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 19/03/2011

Postஅசுரன் Wed Apr 20, 2011 5:43 pm

படிக்காமலே மேதையாக இருந்திருக்கிறார். அஞ்ஞானத்தை எதிர்த்தவர் என்ற புகழ் இவரை சாரும். பதிவுக்கு பாராட்டுக்கள்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Apr 21, 2011 2:44 am

பகுத்தறிவு நாயகன் எம் ஆர் ராதா. நன்றி கார்த்தி.

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Apr 21, 2011 5:58 am

நிஜ வாழ்க்கையில் நடிக்கத் தெரியாத நடிக்க வேள் !!!!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Thu Apr 21, 2011 6:07 am

வியப்பூட்டும் மனிதர் குறித்த விதவிதமான தகவல்கள்..

பகிர்வுக்கு நன்றி நண்பரே..

இம்பாலாவில் வைக்கோல் ஏற்றிச்சென்ற நிகழ்வு தொடர்பாக ஒரு சுவையான தகவலை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்..




எம்.ஆர்.ராதா- சிறு குறிப்புகள்  0018-2எம்.ஆர்.ராதா- சிறு குறிப்புகள்  0001-3எம்.ஆர்.ராதா- சிறு குறிப்புகள்  0010-3எம்.ஆர்.ராதா- சிறு குறிப்புகள்  0001-3
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Apr 21, 2011 6:18 am

பகிர்வுக்கு நன்றி நண்பரே எம்.ஆர்.ராதா- சிறு குறிப்புகள்  677196 எம்.ஆர்.ராதா- சிறு குறிப்புகள்  677196 எம்.ஆர்.ராதா- சிறு குறிப்புகள்  678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Thu Apr 21, 2011 6:40 am

உயர்ந்த பகுத்தறிவு வாதி எம்.ஆர். ராதா. அவர்கள்

கடந்த சனவரி மாதம் நான் தாயகம் சென்றிருந்த போது, என் மகன்களுடன் (சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்) இரத்தக்கண்ணீர் திரைப்படத்தின் சில பாகங்கள் யூடியூப் -ல் இருந்து பார்த்துக்கொண்டிருந்தேன். அவர்கள் இருவரும் அந்த அளவிற்கு இரசிப்பார்கள் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை.

என்னங்க மாம் இவ்வளவு சூப்பரா ஆக்ட் பண்ணி இருக்கார் எம் .ஆர். ராதா என மிகமிக ரசித்துப் பார்த்தார்கள்.
அவர்கள் ரசித்த காட்சிகளில் சில..

மேடைக் காட்சி: "ஊருக்கொரு தலைவன் அவனுக்கொரு பட்னிப் பட்டாளம்"

அவர் அம்மாவிடம் உரையாடும் காட்சிகள் : அவுட் ஹவுஸில் இருக்க சொன்னா இங்கேயேன் வந்தே? என்று கேட்பது, அவரை கவுன் போட சொல்வது, யாராவது வந்தா தூண் பின்னாடி மறைஞ்சு இருந்து நாய் மாதிரி எட்டிப்பாக்கறே...நான்சென்ஸ்... உன்னை என் அம்மான்னு சொல்றதுக்கே வெக்கமா இருக்குன்னு சொல்வது... யாராவது வந்தா... மோகன் தூங்கறான், மோகன் மாடில இருக்கறான்னு சொல்லக் கூடாது... தொரை தூங்கறார்... தொரை படிக்கறார், தொரை மாடியில இருகறார்ன்னு சொல்லனும் என்று சொல்வது ... இப்படி நிரய காட்சிகள் ரசித்தனர்

அவரின் மாமனாரிடம் பேசும் காட்சியும் மிக மிக ரசித்தார்கள் : ஓ.. நீ தான் மாமனாரா... உன்ன கல்யாணத்துல பாத்தது... அன்னைக்கு நீ பேர் பாடியில இருந்தே இப்போ சட்டை போட்டிருக்கே அதான் உன்னை அடையாளம் தெரியலே...

இப்படி நிறைய காட்சிக்கள் அப்படத்தில் ரசித்து ரசிது மகிழ்ந்தனர்.

கடைசியில்...எம்.ஆர்.ராதா படத்தினைப் பார்த்த தாக்கமாக என்னிடம் என் சிறிய மகன் கூறியது...
மாம், என்னை இனி நீங்க தொரை னு தான் கூப்பிடனும்னு சொன்னதும்... இன்றும் போனில் பேசும்போது How are you dorai? என்று நான் கேட்பதும் சகஜமாகிவிட்டது. புன்னகை



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக