ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
அதை நாங்கள் சரியாய் செய்வோம். Poll_c10அதை நாங்கள் சரியாய் செய்வோம். Poll_m10அதை நாங்கள் சரியாய் செய்வோம். Poll_c10 
Dr.S.Soundarapandian
அதை நாங்கள் சரியாய் செய்வோம். Poll_c10அதை நாங்கள் சரியாய் செய்வோம். Poll_m10அதை நாங்கள் சரியாய் செய்வோம். Poll_c10 
heezulia
அதை நாங்கள் சரியாய் செய்வோம். Poll_c10அதை நாங்கள் சரியாய் செய்வோம். Poll_m10அதை நாங்கள் சரியாய் செய்வோம். Poll_c10 
i6appar
அதை நாங்கள் சரியாய் செய்வோம். Poll_c10அதை நாங்கள் சரியாய் செய்வோம். Poll_m10அதை நாங்கள் சரியாய் செய்வோம். Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதை நாங்கள் சரியாய் செய்வோம்.

2 posters

Go down

அதை நாங்கள் சரியாய் செய்வோம். Empty அதை நாங்கள் சரியாய் செய்வோம்.

Post by இரா.எட்வின் Thu Apr 21, 2011 12:43 am


சமீபத்தில் மிகவும் பரபரப்பாகப் பேசப் பட்டவர்கள் இரண்டு பேர். அதில்
ஒருவர் இந்த உலகமே இதுவரை நினைத்தும் பார்த்திராத அளவில் நடைபெற்ற ஒரு
ஊழலோடு சம்பந்தப் பட்ட முன்னால் அமைச்சர் ராசா அவர்கள். இன்னொருவர் ஊழலை
உண்ணாவிரதமிருந்து கேள்வி கேட்ட அன்னா ஹசாரே. ஊடகங்கள் ஊதிப்
பெரிதுபடுத்துவதாக கலைஞர் திரும்பத் திரும்பச் சொன்னாலும் ராசா விசயத்தில் அவை முடிந்த வரை மூடிப் பாதுகாக்கவே முயற்சித்தன என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஹசாரே விசயத்தில் ஊடகங்கள் ஆன மட்டும் ஊதிப் பெரிதாக்கவே செய்தன. அதன் தாக்கமாக
ஹசாரே மிகப் பெரிய கதானாயகராகக் கட்டமைக்கப் பட்டார். இந்தியாவில் உள்ள
எல்லா மொழிகளிலும் ஹசாரேவிற்கு கவிதைகள் இயற்றப்பட்டன, பல மொழிகளில் அவரை
வாழ்த்தி பாடல்கள் தோன்றின, படைப்பாளிகள் அனைத்து வடிவங்களிலும் அவரை
வாழ்த்தியும் ஆதரித்தும் படைப்புகளத் தந்தனர், இயங்கும் பெரும்பான்மையான
வலை தளங்கள் ஹசாரேவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தன. இளைஞர்களும்
யுவதிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு அவர் குறித்த குறுஞ்செய்திகளைப்
பறிமாறினார்கள். இந்த இடைப் பட்ட காலத்தில் ஏதேனும் குழந்தைகளுக்கு
அவரது பெயர் சூட்டப் பட்டதா என்று உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் அதற்கு
வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன.

மிகுந்த சிரமம் எடுத்து இயல்பாகவே நடந்ததுபோல காட்டிக்கொள்ளப் பட்டாலும்
படு செயற்கையாக இவரை இப்படி வலிந்து கட்டிக் கொண்டு தூக்கிப் பிடிக்க
வேண்டிய அவசியமென்ன?. அவசர அவசரமாக அறக்கட்டளைகள் , அவசர அவசரமாக நிதிக்
குவிப்பு அதைவிட அவசரமாக அவரைப் பற்றி பொது மக்களுக்கு எடுத்துச்
சொல்லவே இந்தப் பணம் பயன்படும் என்பது மாதிரியான அறிவிப்பு, குவிந்த
பணமும் கொட்டிய மனிதர்களும் இதற்குப் பின்னால் ஏதோ அரசியல் இருக்கக் கூடும் என்றே
சொல்கின்றன.

யார் இந்த ஹசாரே? என்பது குறித்து நாம் அதிக அக்கறை காட்டப் போவதில்லை.
இவ்வளவு பரபரப்பாகப் பேசப்பட இவர் செய்ததுதான் என்ன?



இதை இதற்கு முன்னால் யாருமே செய்தது இல்லையா? ஏற்கனவே யாரேனும் இதற்கான
உழைப்பைத் தந்திருக்கிறார்கள் என்றால் இளைஞர்களும் கிழவர்களும்,
யுவதிகளும், கிழவிகளும் சில அரசியல் வாதிகளும் ,அரசு அலுவர்களும்
ஆசிரியர்களும் ஒருவரை ஒருவர் முந்தித் தள்ளிக் கொண்டும், சுவற்றில்
முட்டிக் கொண்டும் உணர்ச்சிக் கொந்தளிக்க அவரைக் கொண்டாடுவதேன்?
ஜனத்திரளின் உணர்ச்சிகளைக் கொந்தளிக்கச் செய்து அவர்களை ஹசாரேவை நோக்கித்
தள்ளுவதற்கு ஊடகங்கள் எடுத்துக் கொண்ட முயற்சிக்கும் உழைப்பிற்கும்
பின்னால் இருக்கக் கூடிய அவசியமும் அரசியலும் என்ன?

ஹசாரேவின் சொந்த வாழ்க்கைக் குறித்து மாதவராஜின் பதிவில் இருப்பதைத்
தவிரக் கூடுதலாய் ஒரு ஐந்து வார்த்தைகள் அளவுக்குக் கூடத் தெரியாது.
அதுத் தேவையுமில்லை. ஹசாரே என்ன செய்தார்? ”தீராத பக்கங்களிலும்” மற்ற
செய்தி ஊடகங்களிலுமிருந்து நான் தெரிந்து கொண்டவகையில் லோக்பால் வரைவுக்
குழுவில் பொது சேவகர்களையும் சேர்க்க வேண்டும் என்பதே இவரது கோரிக்கை.
இது நிராகரிக்கப் படவே உண்ணாவிரட்கத்திற்கு பந்தல் போட்டு விட்டார்.
எனக்குத் தெரிய அன்னா ஹசாரே செய்தது இவ்வளவுதான். இது அவரது உரிமை.
எங்கள் ஊருக்குப் பக்கத்தில் அவர் பந்தல் போட்டிருந்தால் ஒருக்கால்
நானும் கூட சென்று வாழ்த்திவிட்டு வந்திருக்கக் கூடும். லோக் பால்
வேண்டும் என்றுகூட அவர் என்றைக்கும் போராடியதாகத் தெரியவில்லை. லோக்பால்
வரைவுக் குழுவில் பிரதினிதித்துவம் கேட்ட அளவில் மட்டுமே அவரது
போராட்டம்.

அவருக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்து பயந்துபோன மத்திய அரசு அவரது
பெயரையும் கபில் சிபில், நம்ம ப.சிதம்பரம், பிரணாப் முகர்ஜி போன்ற ஊழல்
எதிர்ப்பாளர்களை உள்ளடக்கிய குழுவில் இவரையும் இணைக்கிறது. பழரசம்
குடித்து போரை முடித்துக் கொள்கிறார். இதை விட நகைச்சுவை என்னவெனில்
அடுத்தநாள் வரைவரிக்கையை நாடாளுமன்றம் நிராகைக்கும் என்றால் அதை நான்
ஏற்பேன். இதில் இறுதி முடிவெடுக்க வேண்டிய இடம் அதுதான் என்பதை தான்
உணர்ந்தே இருப்பதாக சொல்கிறார்.

இதில் நாமென்ன சொல்ல இருக்கிறது? ஒரே கேள்விதான், இதற்கு ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம்?

உண்ணாவிரதம் இருந்த போது வசூலானத் தொகை ஏறத்தாழ தொண்ணூறு லட்சத்தைத்
தாண்டும் என்றும் அதில் ஜிண்டால் மட்டும் இருபத்தி ஐந்து லட்சம்
வழங்கியுள்ளதாகவும், பந்தல் செலவுக்கு பத்து லட்சம் வரை செலவானது என்றும்
மீதித் தொகயைக் கொண்டு மேலும் நிதி வளர்த்து அது கொண்டு ஹசாரேவை
மக்களிடம் கொண்டு செல்லும் எண்ணத்தோடு செயல் படுவதாகவும் மாதவராஜின்
பதிவிற்கு பின்னூட்டமிட்ட காஸ்யபன் சொல்கிறார்.

நாடாளுமன்றம் நிராகரித்தால் அதை தான் ஏற்பதாக சொன்னவரை, ஊழலை வாய்ப்புக்
கிடைத்த போதெல்லாம் கொண்டாடியவர்களோடு இணைந்து ஊழலுக்கெதிராக செயல் பட
சம்மதித்த ஒருவரை இப்படி வம்படித்து மல்லு கட்டிக் கொண்டு பெரிய
போராளியாய் சித்தரிக்க வேண்டிய அவசியம் ஊடகங்களுக்கு ஏன் வந்தது?

லோக்பால் வரைவு கமிட்டியில் இடம் கேட்டல்ல , லோக்பால் மசோதாவைக்
கொண்டுவருவதற்காக பல ஆண்டுகளாகப் போராடி வரும் இடது சாரிகளைக் கண்டு
கொல்லாமல் போனதற்கு என்ன காரணம்?

அதைக் கூட விடுங்கள், இடது சாரிகள் செய்வதை சொல்லிவிடால் அமெரிக்கா
பணப்பையை இறுக்கி மூடிக் கொள்ளும், இன்னும் சில வெறுப்புகளையும்
இழப்புகளையும் சம்பாரிக்க வேண்டும் என்று நீங்கள் அச்சப் படுவதில் கூட
ஒரு நியாயம் இருக்கிறது.

சகாயம் மாதிரி ,சங்கீதா மாதிரி ஊழலுக்கெதிராய்ப் போராடிக் கொண்டிருக்கும்
அதிகாரிகளை நீங்கள் ஏன் கொண்டாடவில்லை?

கூறியது கூறல் குற்றமென்பார்கள். திருமத் திரும்ப, சலிக்க சலிக்க, அறுவறுப்பாய் தோன்றுமளவுக்கு நீங்கள் எல்லோரும் ஹசாரேயை கொண்டாடியதால் நான் ஒரே ஒருமுறை இதை சொல்வது நியாயம் என்றே படுகிறது. மகளுக்கு உடல் நலம் மோசமாகிறது. உடனே அவளை மருத்துவமனையில் சேர்க்க சொல்கிறார்கள். அந்தக் குழந்தியின் தந்தையிடம்
பணம் இல்லை. ஒரு நண்பரிடம் கடன் பெற்று மகளை மருத்துவ மனையில்
சேர்க்கிறார். சம்பளம் வந்ததும் அந்தக் கடனைத் திருப்பி விடுகிறார். இவ்வளவு நேர்மையான அதிகாரி கிடைப்பது எவ்வளவு அரிது.

இவர் யார் என்பது தெரியும் உங்களுக்கு. தெரிந்தும் அந்தக் குழந்தையின்
தந்தையும் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவருமான சகாயம் அவர்களை ஏன் நீங்கள்
கண்டு கொள்ளவே இல்லை.

பின்னிரவில் , தன்னந்தனியாக சென்று வாக்களர்களுக்கு கொடுப்பதற்காக
வைக்கப் பட்டிருந்த ஐந்தேகால் கோடி ரூபாயை , அது பெரிய இடத்துப் பணம் ,
கை வைப்பதால் மோசமான பின் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்று
தெரிந்திருந்தும் அதைக் கைப் பற்றி நடவடிக்கை எடுத்த சங்கீதா என்ற இளம்
அதிகாரியை நீங்கள் ஏன் கண்டுகொள்ளவில்லை?

இதற்கெல்லாம் காரணம் என்னவென்று மண்டையைப் போட்டுக் குடைந்துகொண்டிருந்த
போது ஹசாரே, தான் குஜராத் முதல்வர் மோடியை பெரிதும் சிலாகித்து
மதிப்பதாகக் கூறினார். அப்பாடா, நம்மருகே இருக்கும் சகாயத்தை,
சங்கீதாவைக் கொண்டாடாத நீங்கள் ஹசாரேவை ஏன் கொண்டாடுகிறீர்கள் என்று
புரிந்து போனது.

உடைத்தே ஆக வேண்டும் என்று நாங்கள் போராடிக் கொண்டிருக்கும் ஜாதியை
கவ்விப் பிடித்து பாதுகாக்கும் மதத்தை வெறியோடு கைக்கொண்டு அலையும் ஒரு
மனிதரை சிலாகிக்கும் ஒருவரை நீங்கள் மக்களிடத்திலே கொண்டு போவோம் என்று
கிளம்பும் போது ஜாதியை அழித்தொழிக்க அதைப் பாதுகாத்து வரும் மதக்
கட்டுமானத்தை எதிர்க்கும் நாங்கள் அதற்கெதிராய் இயங்க வேண்டியது அவசியம்.

அது உங்கள் அரசியல். அதை எதிர்த்து போராடவேண்டிய எதிர் அரசியல்
எங்களுடையது. அதை நாங்கள் சரியாய் செய்வோம்.


( நேற்று நள்ளிரவுக்கு பத்துப் பதினைந்து நிமிடங்கள் இருக்கும் போது பேசிய ப்ரியாவிடம் ஹசாரேவைப் பற்றிய மாதவராஜ் பதிவு குறித்து பேசிக் கொண்டிருந்த போது சரி, நீ ஒன்னு போடு என்று என்னை விரட்டி எழுதச் சொன்ன ப்ரிய்யவிற்கு இந்தப் பதிவு)


”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

அதை நாங்கள் சரியாய் செய்வோம். 38691590

இரா.எட்வின்

அதை நாங்கள் சரியாய் செய்வோம். 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்


பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

அதை நாங்கள் சரியாய் செய்வோம். Empty Re: அதை நாங்கள் சரியாய் செய்வோம்.

Post by இரா.எட்வின் Thu Apr 21, 2011 6:38 am


இது குறித்து பேசலாம் வாங்க...


”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

அதை நாங்கள் சரியாய் செய்வோம். 38691590

இரா.எட்வின்

அதை நாங்கள் சரியாய் செய்வோம். 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்


பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

அதை நாங்கள் சரியாய் செய்வோம். Empty Re: அதை நாங்கள் சரியாய் செய்வோம்.

Post by இரா.எட்வின் Fri Apr 22, 2011 6:53 am

மீண்டும் இதை விமர்சிக்க அழைக்கிறேன்


”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

அதை நாங்கள் சரியாய் செய்வோம். 38691590

இரா.எட்வின்

அதை நாங்கள் சரியாய் செய்வோம். 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்


பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

அதை நாங்கள் சரியாய் செய்வோம். Empty Re: அதை நாங்கள் சரியாய் செய்வோம்.

Post by மஞ்சுபாஷிணி Fri Apr 22, 2011 9:53 am

சகாயம் சங்கீதா இருவரின் தைரியத்தை நாம் போற்றியே ஆகவேண்டும்..

நீங்க சொன்னதை வெச்சு பார்த்தால் அப்ப ஹசாரே நல்லவரில்லையா? இத்தனை நாள் செய்திகளில் ஆஹா ஓஹோன்னு போட்டிருப்பதை பார்த்து அவரும் நல்லதை செய்திருக்கார்னுல்ல நினைச்சேன்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அதை நாங்கள் சரியாய் செய்வோம். 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அதை நாங்கள் சரியாய் செய்வோம். Empty Re: அதை நாங்கள் சரியாய் செய்வோம்.

Post by இரா.எட்வின் Fri Apr 22, 2011 12:52 pm

மஞ்சுபாஷிணி wrote:சகாயம் சங்கீதா இருவரின் தைரியத்தை நாம் போற்றியே ஆகவேண்டும்..

நீங்க சொன்னதை வெச்சு பார்த்தால் அப்ப ஹசாரே நல்லவரில்லையா? இத்தனை நாள் செய்திகளில் ஆஹா ஓஹோன்னு போட்டிருப்பதை பார்த்து அவரும் நல்லதை செய்திருக்கார்னுல்ல நினைச்சேன்....

வணக்கம் சுபா,
அப்படி அல்ல. ஒரு சாதாரண நிகழ்ச்சிக்காக இவ்வளவு கொண்டாடுவதின் பின்னணியில் ஒரு அரசியல் இருக்கிறது.
அவர் பெயர் சேர்க்கப் பட்டவுடன் போராட்டத்தைக் கைவிடுகிறார். அந்தப் பட்டியலில் ஊழலை ஆதரிக்கும் நபர்களின் பெயர்கள் இருப்பதை அங்கீகரிக்கிறார்.

நாடாளுமன்றம் இந்தக் குழுவை நிராகரித்தால் அதை ஏற்பதாக சொல்கிறார்.

போக அவர் மீதும் குற்றச்சாட்டுகள் வருகின்றன. உறுதி ஆனால் பதிவோம்.


”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

அதை நாங்கள் சரியாய் செய்வோம். 38691590

இரா.எட்வின்

அதை நாங்கள் சரியாய் செய்வோம். 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்


பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

அதை நாங்கள் சரியாய் செய்வோம். Empty Re: அதை நாங்கள் சரியாய் செய்வோம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum