புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தந்தையா?,கணவரா?  Poll_c10தந்தையா?,கணவரா?  Poll_m10தந்தையா?,கணவரா?  Poll_c10 
53 Posts - 42%
heezulia
தந்தையா?,கணவரா?  Poll_c10தந்தையா?,கணவரா?  Poll_m10தந்தையா?,கணவரா?  Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
தந்தையா?,கணவரா?  Poll_c10தந்தையா?,கணவரா?  Poll_m10தந்தையா?,கணவரா?  Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
தந்தையா?,கணவரா?  Poll_c10தந்தையா?,கணவரா?  Poll_m10தந்தையா?,கணவரா?  Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
தந்தையா?,கணவரா?  Poll_c10தந்தையா?,கணவரா?  Poll_m10தந்தையா?,கணவரா?  Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
தந்தையா?,கணவரா?  Poll_c10தந்தையா?,கணவரா?  Poll_m10தந்தையா?,கணவரா?  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
தந்தையா?,கணவரா?  Poll_c10தந்தையா?,கணவரா?  Poll_m10தந்தையா?,கணவரா?  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தந்தையா?,கணவரா?  Poll_c10தந்தையா?,கணவரா?  Poll_m10தந்தையா?,கணவரா?  Poll_c10 
304 Posts - 50%
heezulia
தந்தையா?,கணவரா?  Poll_c10தந்தையா?,கணவரா?  Poll_m10தந்தையா?,கணவரா?  Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
தந்தையா?,கணவரா?  Poll_c10தந்தையா?,கணவரா?  Poll_m10தந்தையா?,கணவரா?  Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
தந்தையா?,கணவரா?  Poll_c10தந்தையா?,கணவரா?  Poll_m10தந்தையா?,கணவரா?  Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
தந்தையா?,கணவரா?  Poll_c10தந்தையா?,கணவரா?  Poll_m10தந்தையா?,கணவரா?  Poll_c10 
21 Posts - 3%
prajai
தந்தையா?,கணவரா?  Poll_c10தந்தையா?,கணவரா?  Poll_m10தந்தையா?,கணவரா?  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
தந்தையா?,கணவரா?  Poll_c10தந்தையா?,கணவரா?  Poll_m10தந்தையா?,கணவரா?  Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
தந்தையா?,கணவரா?  Poll_c10தந்தையா?,கணவரா?  Poll_m10தந்தையா?,கணவரா?  Poll_c10 
2 Posts - 0%
Barushree
தந்தையா?,கணவரா?  Poll_c10தந்தையா?,கணவரா?  Poll_m10தந்தையா?,கணவரா?  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
தந்தையா?,கணவரா?  Poll_c10தந்தையா?,கணவரா?  Poll_m10தந்தையா?,கணவரா?  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தந்தையா?,கணவரா?

Page 1 of 3 1, 2, 3  Next

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun May 15, 2011 3:29 pm

"கனிமொழி ஒரு பெண் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதனால் அவர் மேல் பரிவு கொண்டு அவரை சிறைக்கு அனுப்பாமல் பிணை வழங்க வேண்டும் " என்பது மாதிரியான ஒரு வாதத்தை இந்தியாவின் ஆகப் பிரபலமான வழக்கறிஞர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான திரு. ராம்ஜெத்மலானி அவர்கள் பாட்டியாலா சிறப்பு நீதி மன்றத்தில் வாதாடிய போதுதான் இவ்வளவு வலுவானதா இந்த வழக்கு என்ற ஆச்சரியம் பிறந்தது. வழக்கமாக இது மாதிரியான சிறிய அளவிலான நீதி மன்றங்களில் அவர் வாதாடுவதில்லை. எடுத்த எடுப்பிலேயே "பரிவு" வேண்டி இறங்கி விண்ணப்பித்த அனுபவம் இதற்கு முன்னால் அவருக்கு உண்டா? என்பது தெரியவில்லை. ஆனால் அப்படி இருக்க வாய்ப்பில்லை.

தான் நேரில் வந்து வழக்காடுவதற்கு கொஞ்சமும் பொருத்தமில்லாத இடமாக அவர் கருதக் கூடிய இடத்திற்கு அவரை அழைத்து வந்து வாதாட வைத்த சக்தி எது? ஆயிரம் விமர்சனங்கள் அவர்மீது இருந்தாலும் அவரது கம்பீரமான ஆளுமையில் நமக்கு கொஞ்சமும் சந்தேகம் கிடையாது. அப்பேற்பட்ட கம்பீரம் இறங்கி வந்து "பரிவை" பணிந்து இறைஞ்ச வேண்டியத் தேவை என்ன?

இரண்டுக்கும் காரணம் கருணாநிதி எனும் தந்தைதான். வர மறுத்து, வேண்டுமானால் தனது உதவி வழக்கறிஞர்களில் ஒருவரை அனுப்புவதாகவும் சொன்ன ஜெத்மாலினியிடம் கருணாநிதி அவர்களே நேரடியாகத் தொலைபேசி, வரச் சொல்லி மிகவும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டதாகவும், அன்றைய தினம் வேறு ஒரு முக்கியமான வழக்கு சம்பந்தமாக வெளியூரில் இருந்த அவர் பாட்டியாலா வருவதற்கு அவர் கேட்டபடி ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்து தரப் பட்டதாகவும் செய்திகள் சொல்கின்றன. அவர் நீதிமன்றத்தில் பரிவுக்காக இறைஞ்சியதற்கு “ என்ன செய்தேனும் , என்ன விலை கொடுத்தேனும், தம் மகளைக் காப்பாற்ற வேண்டும் “ என்ற தந்தை கருணாநிதியின் உருக்கமும் கண்ணீரும் காரணமாக இருந்திருக்கக் கூடும்.

” குற்றம் நடக்கவில்லை என்றோ, இந்த வழக்கில் சேர்த்துப் பேசப்படுபவர்கள் எல்லாம் இந்தக் குற்றத்தில் பங்கில்லாதவர்கள் என்றோ நான் வாதிட வரவில்லை” என்று ஜெத்மலானி நீதிமன்றத்தில் எடுத்துச் சொன்னபோதே இந்த வழக்கு எவ்வளவு வலிமையானது என்பதோடு ஜெத்மலானி அல்ல அவரைப் போல ஆயிரம் மடங்கு வல்லமை வாய்ந்தவர்களாலும் யாரையும் காப்பாற்ற முடியாது என்பதும் தெளிவானது. இவ்வளவும் நம்மைப் போன்ற சாமானியர்களுக்கே தெளிவாய்ப் புரியும் போது கருணாநிதிக்குப் புரியாதா?. நிச்சயமாய் புரியும்தான். தெரிந்தும் ஏன் இவ்வளவு செலவு செய்கிறார்.

இங்குதான் தனது குடும்பத்திற்காக யாரையும் பலிக் கடா ஆக்கக் கொஞ்சமும் தயங்காத, தன் மீது உயிரையே வைத்திருக்கக் கூடிய தொண்டனைப் பலிகொடுத்தேனும் தன் குடும்பத்தைக் காப்பாற்றத் துடிக்கும் ஒரு கொடூரமான குடும்பத்தலைவரான கருணாநிதி வெளிப் படுகிறார். அவர் இவ்வளவு தூரம் துடியாய்த் துடிப்பது, ஸ்பெக்ட்ரம் ஊழலே நடக்கவில்லை என்று நிறுவ அல்ல. அது இயலாது என்பதும் அவருக்குத் தெரியும். இந்த ஊழலில் கூட்டுச் சதியாளராக குற்றம் சுமத்தப் பட்டுள்ள தனது மகள் கனிமொழியை, யாரைக் காவு கொடுத்தேனும் அந்தக் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்து பத்திரமாக வீட்டிற்கு கூட்டி வந்துவிடவேண்டும் என்பதுதான். அதன் விளைவுதான் “ இந்தக் குற்றத்திற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டியவர் ஆ.ராசாதான் “ என்று ராம் ஜெத்மலானி நீதிமன்றத்தில் சொல்கிறார்.

முதல்வரின் மகளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி சார்பாக வாதாடுகிற ஒரு வழக்கறிஞர் என்றால் தி.மு.க சார்பில் வாதாடுகிற வழக்கறிஞர் என்றுதானே பொருள். தனிப்பாட்ட கனிமொழியைக் காப்பாற்ற அவரது வீட்டில், அவரது அம்மாக்கள், அப்பா, அண்ணன்கள் மற்ற குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் கூடி நாம் இவ்வளவு தூரம் பேச வேண்டிய அவசியமில்லை. ராசாவைக் காப்பற்ற இவ்வளவு வேகமாகக் கூட்டப் படாத கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டப் படுகிறது. கனிமொழியைக் காப்பாற்றுவது கட்சியைக் காப்பாற்றுவது என்கிற மாதிரி முடிவெடுக்கப் படுகிறது. அமைச்சர்களும் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் டெல்லிக்குப் பறக்கிறார்கள். ராசாத்தி அம்மாளும் அமைச்சர் பூங்கோதையுடன் பறக்கிறார். முதல்வரும் இந்த விசாரனையைப் பார்ப்பதற்காக டில்லி போக ஆசைப் பட்டிருக்கிறார். அவருக்கும் விமான பயணச்சீட்டு போடப் பட்டிருந்தது என்றால் ராம் ஜெத்மலானி இந்த வழக்கின் தி.மு.க வழக்கறிஞர் என்பதுதான் பொருள். இவர் இந்த ஊழலுக்கு ராசாதான் முழுப் பொறுப்பெற்க வேண்டும் என்று சொல்கிறார் என்றால், ” ராசாதான் ஊழலுக்கு முழுப் பொறுப்பு” என்று தி.மு.க வழக்கறிஞர் சொல்வதாகத்தான் கொள்ள முடியும்.இன்னும் கொஞ்சம் பாமரத்தனமாகக் கொள்வதெனில் “இந்தக் குற்றத்திற்கு முழுப் பொறுப்பும் ராசாதான்” என்ற ஜெத்மலானியின் குரல் தி.மு.க வின் குரல்தான்.

இல்லை என்று கருணாநிதியோ மற்ற யாருமோ சொல்ல வந்தால் நமது கேள்வி ஏன் அதை வெளிப்படையாக யாரும் மறுக்கவில்லை என்பதுதான். ராசா குற்றவாளி என்று எல்லோரும் சொன்னபோது ,”ராசா தலித்துகளின் தகத்தாய சூரியன்” என்றும் அவர் ஒரு தலித் என்பதால்தான் எல்லோரும் அவர் மீது அபாண்டமாக குற்றம் சுமத்துகிறார்கள் என்றும் சொன்ன கருணாநிதி ஜெத்மலானி சொன்னபோது மறுக்கவே இல்லையே, ஏன்?. அவரை விடவும் ஒருபடி மேலே சென்று கொதித்துக் குரல் கொடுத்த வீரமணி இந்த நொடி வரை ஜெத்மலானிக்கு கண்டனம் தெரிவிக்கவில்லையே, ஏன்?

காரணத்தைத் தேடி காத தூரம் போக வேண்டியதில்லை.அது நம் காலடியிலேயே கிடக்கிறது. ராசா, விட்டால் உண்மையை சொல்லிவிடுவாரோ என்ற பயத்தில்தான் ராசாவுக்காக பேசினார்களேயொழிய வேறில்லை. இன்று தன் மகளை நோக்கி குற்றச்சாட்டு நீள்கையில் ராசாவைக் காவு கொடுத்து தன் மகளைக் காப்பாற்றத் தயாராகி விட்டார் கருணாநிதி. வேறு மொழியில் சொல்வதெனில் “அப்பாவி தலித் ராசா தி.மு.க வால், குறிப்பாக அதன் தலைவர் கருணாநிதியால் பலிகடா ஆக்கப் பட்டுவிட்டார்”.

இப்படிச் சொல்வதால் ராசா ஏதோ குற்றமற்றவர் என்று சொல்வதாகவோ, அல்லது அவர் தண்டிக்கப் படக் கூடாது என்றோ நாம் சொல்லவில்லை. குற்றவாளிகள் மிகக் கடுமையாகத் தண்டிக்கப் படவேண்டும், அவர்கள் சூறையாடிய மக்கள் பணத்தை மீட்க வேண்டும். நமது ஆதங்கமெல்லாம் ராசா என்பவர் வெறும் கருவி மட்டுமே. இந்தக் கருவியைப் பயன்படுத்திய கரங்களும் கடுமையாகத் தண்டிக்கப் படவேண்டும் என்பதுதான்.

ராசா என்பவர் தி.மு.க.வில் சாதாரண நபரல்ல. அதன் ஆளுமைமிக்க கொள்கை பரப்புச் செயலாளர்.மத்திய அமைச்சர். அவரைக் காப்பாற்ற இப்படி ஒரு வேகத்தைக் காட்டாத கட்சியும் தலைமையும் ஒரு மாநிலங்களவை உறுப்பினருக்காக கிடந்து அலைகிறது என்றால் அவர் தலைவரின் மகள் என்பதைத் தவிர வேறு என்ன?

நீரா ராடியாவும் கனிமொழியும் பேசிக்கொண்ட தொலைப்பேசி உரையாடல்கை அவரோ கருணாநிதியோ இன்றுவரை மறுக்கவில்லை. எனில் நீரா ராடியா மூலம் ராசாவுக்கு கனிமொழி தொலை தொடர்புத் துறையை வாங்கித் தரத் தலையால் தண்ணீர் குடிக்க வேண்டிய அவசியமென்ன? இதில் டாடா போன்ற தொழில் அதிபர்கள் அக்கறை காட்ட வேண்டியதின் அவசியம்தான் என்ன?

எவ்வளவு சப்பைக் கட்டு கட்டினாலும் உண்மை இதுதான். தனக்கு சாதகமான அமைச்சரை டாடா கனிமொழி மூலமாக உருவாக்குகிறார். ஒரு பெரிய ஊழல் உருவெடுக்கிறது. ராசாவை பயன்படுத்தி சிலர் சுருட்டுகிறார்கள் அவர்கள் யார் யார் என்பது வெளிச்சத்துக்கு வரவேண்டும். அவர்கள் ஈவு இரக்கமற்ற முறையில் தண்டிக்கப் படவேண்டும்.

இத்தோடு விடவில்லை ஜெத்மலானி. “ கலைஞர் தொலைக் காட்சியில் வெறும் இருபது சதவிகிதப் பங்குகளை மட்டுமே வைத்திருக்கக் கூடிய அப்பாவி கனிமொழி . அவருக்கு தொலைக் காட்சி நிர்வாகத்தில் எதுவும் தெரியாது. அனைத்துக்கும் பொறுப்பு சரத்குமார் ரெட்டிதான்” என்றும் சொல்லியிருக்கிறார். இது ஏதோ விளையாட்டு விஷயமில்லை.

. ”புதிய தமிழகம்” பத்திரிக்கை சொல்கிறது கலைஞர் தொலைக் காட்சியின் ஆண்டு வரவு 63,12,45,076 ரூபாய், ஆண்டு செலவு 61,47,55,422ரூபாய்.ஆக தொலைக் காட்சியின் ஆண்டு வருமானம் 63.12 கோடி, செலவு 61.47 கோடி. நிகர லாபம் வரி செலுத்துவதற்கு முன் 1.64 கோடி, வரி செலுத்திய பின் 1.36 கோடி. இது அவருக்கு நன்றாகத் தெரியும். வருடத்திற்கு 1.36 கோடி ரூபாய் வருமானம் பெறும் ஒரு நிறுவனத்திற்கு 214 கோடி ரூபாய் ஒருவன் கடனாகக் கொடுத்தான் என்பதையோ,1.36 கோடி மட்டுமே வருவாய் ஈட்டக் கூடிய ஒரு நிறுவனம் தடாலடியாக ஏறத்தாழ 30 கோடி ரூபாய் வட்டியுடன் சேர்த்து திருப்பியது என்பதையோ எந்த நீதி மன்றமும் ஏற்காது என்பது ஜெத்மலானிக்குத் தெரியும். அதனால்தான் அவர் கலைஞர் தொலைக் காட்சியின் அனைத்துக்கும் ரெட்டிதான் பொறுப்பென்கிறார்.

ஆக அவர்கள் தெளிவாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள். ஊழலுக்கு ராசாவையும், தொலைக் காட்சிப் பிரச்சினைக்கு சரத்குமார் ரெட்டியையும் பலிகொடுப்பதென்று.

ஆக, முதலில் ராசாவின் மீது எதிர் கட்சியினரும் பத்திரிக்கைகளும் குற்றம் சாட்டினார்கள். கருணாநிதிக்கு யாரைச் சார்ந்து நிற்பது என்பதில் பிரச்சினையே இருக்க வில்லை. ராசாவா அவர்மீது குற்றம் சாட்டுபவர்களா என வந்தபோது தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் சம்பாதித்துத் தந்த ராசாவைக் காப்பாற்ற முயற்சி செய்தார்.

பிறகு ராசாவா? மகள் கனிமொழியா என்று வந்தபோதும் அவருக்கு பிரச்சினை எழவில்லை. ராசாவைக் காவு கொடுத்து கனிமொழி பக்கம் நிற்கிறார்.

ஆனால் இன்னொரு நெருக்கடி அவருக்கு வரப் போகிறது. மனைவி தயாளுவா? மகள் கனிமொழியா ? யாரைப் பழிகொடுத்து யாரைக் காப்பாற்றுவது என்ற நெருக்கடி வரும் போது அவர் யார் பக்கம் நிற்கப் போகிறார்? அது இரண்டு குடும்பங்களின் பிரச்சினையாகவும் உருவெடுக்கும். ஆனால் உறுதியாய் நம்பலாம், அப்போதும் யார் அவருக்கு அதிகம் தேவையோ அவரை சார்ந்து நிற்பார்.

நமக்கு சந்தேகம் ஒன்று இருக்கிறது. மகள் கனிமொழிமேல் வழக்கு பாய்ந்ததும் இவ்வளவு பதற்றத்தோடு அவரைக் காப்பாற்றுவதற்காக ராசாவை பலி கொடுக்கத் தயாராகிவிட்டீர்கள். கேட்டால் சொல்வீர்கள் ராசாவா? கனிமொழியா என்றால் கனி மொழிதானே. ஒரு தந்தை அதைத் தானே செய்ய முடியும் என்று அவர் சொல்லக் கூடும். அது சரி, தனது தொண்டனா?, மகளா என்று வந்தபோது அவர் சராசரித் தந்தையானது சரிதான் என்று ஒரு வாதத்திற்கு வைப்போம். அடுத்து வருகிற மூன்றாவது குற்றப் பத்திரிக்கையில் அவரது மனைவி தயாளு அவர்களது பெயர் வரக்கூடும் என்றே தகவல்கள் சொல்கின்றன. அப்படி நடந்து, தயாளுவா? கனிமொழியா? , யாரைப் பழி கொடுத்து யாரைக் காப்பது என்று ஒரு நிலை வந்தால் யார் ஜெயிப்பார், கணவர் கருணாநிதியா? தந்தை கருணாநிதியா?

நமது ஆசையும் கோரிக்கையும் இரண்டு.

ஒன்று, இவர்களின் உண்மையான கோர முகத்தை இப்போதாவது ராசாவும் ரெட்டியும் புரிந்துகொள்ள வேண்டும்.

இரண்டு, இவர்கள் இருவரும் இனியும் இவர்களை நம்பாமல் உண்மையை உரத்துச் சொல்ல வேண்டும்.

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

தந்தையா?,கணவரா?  38691590

இரா.எட்வின்

தந்தையா?,கணவரா?  9892-41
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun May 15, 2011 3:54 pm

இது முழுவதும் உங்கள் கருத்தா நண்பரே...?

தந்தையா?,கணவரா?  Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun May 15, 2011 3:58 pm

ANTHAPPAARVAI wrote:இது முழுவதும் உங்கள் கருத்தா நண்பரே...?
இது அவரோட சொந்த கருத்தா இருந்தாலும்,இல்லைன்னாலும் சொல்லி இருக்கற கருத்து நிஜம் தானே,
யாரை வேணுமானாலும் பலி கொடுத்து தன் மகளை காக்க நினைக்கும் கருணாநிதி,மகளா மனைவியா என்ற நிலை வரும்போது என்ன செய்வார் என்று பொறுத்து தான் பார்க்கணும்.
எட்வின் நீங்க சொல்லி இருக்கறது எல்லாமே சரி.ஆனா அந்த சகுனி கருணாநிதிய நம்பிட்டு இருக்கும் ஒன்றும் அறியா தொண்டனை இந்த கருத்து சென்று சேர வேண்டுமே

தந்தையா?,கணவரா?  Uதந்தையா?,கணவரா?  Dதந்தையா?,கணவரா?  Aதந்தையா?,கணவரா?  Yதந்தையா?,கணவரா?  Aதந்தையா?,கணவரா?  Sதந்தையா?,கணவரா?  Uதந்தையா?,கணவரா?  Dதந்தையா?,கணவரா?  Hதந்தையா?,கணவரா?  A
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun May 15, 2011 4:00 pm

ANTHAPPAARVAI wrote:இது முழுவதும் உங்கள் கருத்தா நண்பரே...?

ஆமாம் தோழா . இதை எழுதியமைக்காக கிடைக்கும் எந்த விளைவிற்கும் நானே பொறுப்பு.

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

தந்தையா?,கணவரா?  38691590

இரா.எட்வின்

தந்தையா?,கணவரா?  9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun May 15, 2011 4:01 pm

உதயசுதா wrote:
ANTHAPPAARVAI wrote:இது முழுவதும் உங்கள் கருத்தா நண்பரே...?
இது அவரோட சொந்த கருத்தா இருந்தாலும்,இல்லைன்னாலும் சொல்லி இருக்கற கருத்து நிஜம் தானே,
யாரை வேணுமானாலும் பலி கொடுத்து தன் மகளை காக்க நினைக்கும் கருணாநிதி,மகளா மனைவியா என்ற நிலை வரும்போது என்ன செய்வார் என்று பொறுத்து தான் பார்க்கணும்.
எட்வின் நீங்க சொல்லி இருக்கறது எல்லாமே சரி.ஆனா அந்த சகுனி கருணாநிதிய நம்பிட்டு இருக்கும் ஒன்றும் அறியா தொண்டனை இந்த கருத்து சென்று சேர வேண்டுமே

ராசாவும் நமக்கு நல்ல நண்பர்தான் சுதா

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

தந்தையா?,கணவரா?  38691590

இரா.எட்வின்

தந்தையா?,கணவரா?  9892-41
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun May 15, 2011 4:05 pm

இரா.எட்வின் wrote:
உதயசுதா wrote:
ANTHAPPAARVAI wrote:இது முழுவதும் உங்கள் கருத்தா நண்பரே...?
இது அவரோட சொந்த கருத்தா இருந்தாலும்,இல்லைன்னாலும் சொல்லி இருக்கற கருத்து நிஜம் தானே,
யாரை வேணுமானாலும் பலி கொடுத்து தன் மகளை காக்க நினைக்கும் கருணாநிதி,மகளா மனைவியா என்ற நிலை வரும்போது என்ன செய்வார் என்று பொறுத்து தான் பார்க்கணும்.
எட்வின் நீங்க சொல்லி இருக்கறது எல்லாமே சரி.ஆனா அந்த சகுனி கருணாநிதிய நம்பிட்டு இருக்கும் ஒன்றும் அறியா தொண்டனை இந்த கருத்து சென்று சேர வேண்டுமே

ராசாவும் நமக்கு நல்ல நண்பர்தான் சுதா
எப்படி எதிரிக்கு எதிரி நண்பர் என்ற முறையில?
கருணாநிதி இன்னிக்கு நம்மளை போல பொது மக்களுக்கு எதிரி,ராசாவுக்கோ நம்பிக்கை துரோகி கருணாநிதி
என்ற வகையில எட்வின்

தந்தையா?,கணவரா?  Uதந்தையா?,கணவரா?  Dதந்தையா?,கணவரா?  Aதந்தையா?,கணவரா?  Yதந்தையா?,கணவரா?  Aதந்தையா?,கணவரா?  Sதந்தையா?,கணவரா?  Uதந்தையா?,கணவரா?  Dதந்தையா?,கணவரா?  Hதந்தையா?,கணவரா?  A
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun May 15, 2011 4:06 pm

இரா.எட்வின் wrote:
ANTHAPPAARVAI wrote:இது முழுவதும் உங்கள் கருத்தா நண்பரே...?

ஆமாம் தோழா

நல்லா சிந்திச்சிருக்கீங்க நண்பா! ஆமா சாமி போடாம, சுயமா சிந்திச்சீங்க பாருங்க. அதுக்கு ஒரு சூப்பருங்க நன்றி

தந்தையா?,கணவரா?  Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun May 15, 2011 4:12 pm

உதயசுதா wrote:
இரா.எட்வின் wrote:
உதயசுதா wrote:
ANTHAPPAARVAI wrote:இது முழுவதும் உங்கள் கருத்தா நண்பரே...?
இது அவரோட சொந்த கருத்தா இருந்தாலும்,இல்லைன்னாலும் சொல்லி இருக்கற கருத்து நிஜம் தானே,
யாரை வேணுமானாலும் பலி கொடுத்து தன் மகளை காக்க நினைக்கும் கருணாநிதி,மகளா மனைவியா என்ற நிலை வரும்போது என்ன செய்வார் என்று பொறுத்து தான் பார்க்கணும்.
எட்வின் நீங்க சொல்லி இருக்கறது எல்லாமே சரி.ஆனா அந்த சகுனி கருணாநிதிய நம்பிட்டு இருக்கும் ஒன்றும் அறியா தொண்டனை இந்த கருத்து சென்று சேர வேண்டுமே

ராசாவும் நமக்கு நல்ல நண்பர்தான் சுதா
எப்படி எதிரிக்கு எதிரி நண்பர் என்ற முறையில?
கருணாநிதி இன்னிக்கு நம்மளை போல பொது மக்களுக்கு எதிரி,ராசாவுக்கோ நம்பிக்கை துரோகி கருணாநிதி
என்ற வகையில எட்வின்

அப்படி இல்லை சுதா,
எனக்கு அவர் நல்ல நண்பரே. ஒரே ஊர். 2009ல் பொங்களன்று அவர் ஊரில் என்னை அம்பேத்கார் பற்றி பேச அழைத்தார்.

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

தந்தையா?,கணவரா?  38691590

இரா.எட்வின்

தந்தையா?,கணவரா?  9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun May 15, 2011 4:15 pm

ANTHAPPAARVAI wrote:
இரா.எட்வின் wrote:
ANTHAPPAARVAI wrote:இது முழுவதும் உங்கள் கருத்தா நண்பரே...?

ஆமாம் தோழா

நில்லா சிந்திச்சிருக்கீங்க நண்பா! ஆமா சாமி போடாம, சுயமா சிந்திச்சீங்க பாருங்க. அதுக்கு ஒரு சூப்பருங்க நன்றி

47 வயது எனக்கு. நான் +2 படிக்கிறபோது எழுதிய கவிதை ஒன்று மணோண்மணியம் சுந்தரனார் பகலை கழகத்தில் பாடமானது. அந்த வகையில் பார்த்தால் 30 ஆண்டுகளாக எழுதி வருகிறேன். ஒன்று மட்டும் நிச்சயம் இந்த முப்பது ஆண்டுகளில் நான் யாருக்கும் தலை ஆட்டியதில்லை நண்பரே

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

தந்தையா?,கணவரா?  38691590

இரா.எட்வின்

தந்தையா?,கணவரா?  9892-41
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun May 15, 2011 4:19 pm

இரா.எட்வின் wrote:
ANTHAPPAARVAI wrote:
இரா.எட்வின் wrote:
ANTHAPPAARVAI wrote:இது முழுவதும் உங்கள் கருத்தா நண்பரே...?

ஆமாம் தோழா

நில்லா சிந்திச்சிருக்கீங்க நண்பா! ஆமா சாமி போடாம, சுயமா சிந்திச்சீங்க பாருங்க. அதுக்கு ஒரு சூப்பருங்க நன்றி

47 வயது எனக்கு. நான் +2 படிக்கிறபோது எழுதிய கவிதை ஒன்று மணோண்மணியம் சுந்தரனார் பகலை கழகத்தில் பாடமானது. அந்த வகையில் பார்த்தால் 30 ஆண்டுகளாக எழுதி வருகிறேன். ஒன்று மட்டும் நிச்சயம் இந்த முப்பது ஆண்டுகளில் நான் யாருக்கும் தலை ஆட்டியதில்லை நண்பரே

மன்னிக்கவும் ஐயா, "நில்லா" என்று தவறாக Type செய்து விட்டேன். அதை அறிந்ததும் உடனே அதை திருத்தியிருக்கிறேன். மேலே பாருங்கள். நன்றி

தந்தையா?,கணவரா?  Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக