ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிப்ஸ் புல்லட்டின்....

+2
balakarthik
Aathira
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

டிப்ஸ் புல்லட்டின்.... Empty டிப்ஸ் புல்லட்டின்....

Post by Aathira Sat Apr 16, 2011 5:44 pm

.1 வாசனையே இல்லைன்னா அனோஸ்மியாதான்.

நல்ல குடைமிளகாய் போல பெரிய மூக்காக இருக்கும். ஆனால் எந்த மணத்தையும் அது அறியாது அல்லது சில நேரங்களில் நல்ல மணமான பொருட்கள் கூட கெட்ட மணமாக அந்த மூக்குக்குத் தெரியும். இந்த நோயைத்தான் அனோஸ்மியா (Anosmia) என்பர். இதற்கு ஏன் இப்பெயர் ஏற்பட்டது? அனோஸ்மியா என்பது கிரேக்கச் சொல். an [no] -osmia [smell] ஆமாம் no smell என்பதே இச்சொல்லின் பொருள். இது மொத்தமாக மூக்கு தன் மணம் உணர் திறனை இழப்பது. ஹிப்போஸ்மியா (HYPOSMIA) என்று ஒரு மூக்கு நோய் உள்ளது. இது மூக்கின் ஒரு பக்கம் மட்டும் மணத்தை உணரும். மூக்கு நரம்பின் செயல்திறன் பாதிக்கப்பட்டால் மூக்கு இவ்வாறு மணத்தை உணராது அல்லது வேறு மாதிரி உணரும். அதனால் மூக்குக்கு வாசனை
தெரியலைன்னா நல்ல மருத்துவர் எங்கே இருக்காருன்னு வாசனை பார்த்து போய் காண்பிக்கறது நல்லது.

.

Last edited by Aathira on Sat Apr 16, 2011 6:13 pm; edited 1 time in total

டிப்ஸ் புல்லட்டின்.... Aடிப்ஸ் புல்லட்டின்.... Aடிப்ஸ் புல்லட்டின்.... Tடிப்ஸ் புல்லட்டின்.... Hடிப்ஸ் புல்லட்டின்.... Iடிப்ஸ் புல்லட்டின்.... Rடிப்ஸ் புல்லட்டின்.... Aடிப்ஸ் புல்லட்டின்.... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

டிப்ஸ் புல்லட்டின்.... Empty Re: டிப்ஸ் புல்லட்டின்....

Post by Aathira Sat Apr 16, 2011 5:49 pm

2. பல்லேலக்கா... பல்லேலக்கா......

நம்ம பல்லையெல்லாம் யாரு பாது காக்கிறாங்கன்னு தெரியுமா? என்று கேள்வி கேட்டு ஒரு பற்பசையைக் காட்டி அப்பப்ப நம்மள முட்டாள் ஆக்குகிற பற்பசை விளம்பரங்கள் ஏராளமாய் வந்துகொண்டிருக்கின்றன. இதைப் பார்த்தவுடன் நாம் ஏதோ பெரிய சுத்தக்காரங்க மாதிரி குழந்தைகள் ஏதாவது கொஞ்சம் தின்னவுடன் வாயைக் கொப்பளி, பல் தேய்ச்சுட்டு வா என்று மிரட்டுகிறோம். ஆனா ஒவ்வொரு முறை ஏதேனும் தின்றவுடன் வாய் கொப்பளிப்பது பரவாயில்லை. பல் தேய்ப்பது கைக்கும், தண்ணீருக்கும்
பற்பசைக்கும் மட்டுமில்லைங்க பல்லுக்கும் தேய்மானம்தான் என்கிறது . புதிய மருத்துவ ஆராய்ச்சி. ஏன்னா நாம் உண்ணும் எந்தப் பொருளிலும் ஒரு அமிலம் இருக்கும். இது பல்லில் உள்ள எனாமலை இளகும் நிலைக்கு ஆளாக்கும். அந்த அமிலம் இருக்கும்போது பல் துலக்கினால் பல் பலம் குறையும் வாய்ப்பு இருப்பதாகவும் எனாமல் கரையும் வாய்ப்பு இருப்பதாகவும் புதிய மருத்துவ ஆராய்ச்சி கூறுகிறது. அதுமட்டுமல்ல பற்பசையும் அதிகம் பயன்படுத்தக் கூடாதாம். அதனால் காலை, இரவு என்ற இரு வேளை மட்டும் அதுவும் உணவு
உண்டபின்பு ஒரு மணி நேரமோ குறைந்த பட்சம் அரை மணி நேரமோ இடைவெளி விட்டு பல் துலக்குபவர்களின் பல்லுக்கு பலமான .எதிர்காலம் உண்டு. அடிக்கடி பல் தேய்த்தால் பல்லேலக்கா....பல்லேலக்கா...என்று பல் ஆட்டம் கண்டு விடும்.. அப்பரம் திருச்சிக்கும் மதுரைக்கும் மட்டுமல்லங்க
டாக்டர்களிடம் பல்லுக்கும் பில் கட்ட வேண்டியதுதான். ஜாக்கிரதை....

டிப்ஸ் புல்லட்டின்.... Aடிப்ஸ் புல்லட்டின்.... Aடிப்ஸ் புல்லட்டின்.... Tடிப்ஸ் புல்லட்டின்.... Hடிப்ஸ் புல்லட்டின்.... Iடிப்ஸ் புல்லட்டின்.... Rடிப்ஸ் புல்லட்டின்.... Aடிப்ஸ் புல்லட்டின்.... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

டிப்ஸ் புல்லட்டின்.... Empty Re: டிப்ஸ் புல்லட்டின்....

Post by Aathira Sat Apr 16, 2011 5:54 pm

3. குண்டு ஆசாமிகளே ஜாக்கிரதை... ஆண்கள் ஸ்பெஷல்:

இப்போதெல்லாம் பெண்களுக்குப் போட்டியாகப் ஆண்களும் குண்டாவது என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள். அவர்களைச் சொல்லி குற்றமில்லை. அவர்களின் பணி அப்படி. பொதுவாக ஐ டி பிரிவில் பணி புரியும் இளைஞர்களுக்குச் சத்தான ஆகாரம், குளிர்ச்சாதன் அறை, ஒரே இடத்தில் அமர்ந்து மணிக்கணக்கில் பணி, அது முடிந்தால் உறக்கம். இதுவே உலகமாக மாறிவிட்டது. அதிக எடையுள்ள பெண்களுக்குக் கருத்தரிக்கும் வாய்ப்பு குறைவு என்று அடித்து சொன்ன மருத்துவ ஆய்வுகள் இப்போது அதிக எடையுள்ள ஆண்களுக்கு வாரிசுகளைக் காணக்கூடிய வாய்ப்புகள் அருகி வருகின்றது என்கின்றன. எடை கூடுவது பெரும்பாலும் கொழுப்புச்சத்தினால். இதனால் இதயம் பாதிப்படைகிறது, இரத்த அழுத்தம் ஏற்படுகிறது என்ற பழைய பல்லவிகளுக்கு இப்போது புதிய சரணமும் இயற்றப் பட்டுள்ளது. உடல் எடைக்கும் உயிரணுக்களின் எடைக்கும் தொடர்பு உள்ளது. கூடுதல் உடல் எடை உயிரணுக்களைப் பாதிக்கிறது.. இதனாலும் பிள்ளைப் பேற்றை இழக்கவேண்டி வரும். எனவே ஆண்களே நீங்கள் என்ன வேலை பார்த்தாலும் உடல் உழைப்பை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள். அல்லது உடற்பயிற்சியைச் செய்தாவது எடைக்கு தடை விதியுங்கள். எவ்வளவு பணம் இருந்தாலும் கொஞ்சிக் குலவ குழந்தைச் செல்வம் இல்லாவிட்டால்
வாழ்வு வெறுமையாகப் போய்விடும்...

டிப்ஸ் புல்லட்டின்.... Aடிப்ஸ் புல்லட்டின்.... Aடிப்ஸ் புல்லட்டின்.... Tடிப்ஸ் புல்லட்டின்.... Hடிப்ஸ் புல்லட்டின்.... Iடிப்ஸ் புல்லட்டின்.... Rடிப்ஸ் புல்லட்டின்.... Aடிப்ஸ் புல்லட்டின்.... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

டிப்ஸ் புல்லட்டின்.... Empty Re: டிப்ஸ் புல்லட்டின்....

Post by Aathira Sat Apr 16, 2011 5:57 pm

4. இதுவும் ஆண்கள் ஸ்பெஷல்....

மன்னிச்சுக்கோங்கப்பா...... மறுபடியும் உங்களுக்கே....என்னடா திரும்பத் திரும்ப
ஆண்களுக்கே டிப்ஸா என்று தவறாக நினைக்க வேண்டாம். இப்போது உலகில் நிலவி வரும் குழந்தையின்மைப் பிரச்சனைக்கு பெரும்பாலும் ஆண்களே காரணம் என்கின்றன மருத்துவ ஆய்வுகள். நீரிழிவு என்ற சர்க்கரை நோய் யாருக்கு வரும். பெருமாலும் 40 ஐக் கடந்த பெரியவர்களுக்குத்தான் வரும்.
அதனால்தான் நாற்பதைத் தாண்டினால் நாலை குறைக்கனும் என்பார்கள்.. இப்பொழுதெல்லாம் இளைஞர்களுக்கும் நீரிழிவு நோய் வருகிறது. அதற்கும் காரணம் நாகரிக வாழ்வியல் முறையே. இதன் ஒட்டுமொத்தமான முடிவாக இப்போது நீரிழிவு நோயினாலும் ஆண்களுக்கு உயிரணுக்கள் பாதிப்பு அடைகிறதாம். இவர்கள் என்னதான் பாதாம் பிஸ்தா தின்னும் பெரிய பிஸ்தாவாக இருந்தாலும் இவர்களின் உயிரணு நோஞ்சானாக மாறிவிடுகிறதாம். அதனால் ஒன்று கருத்தரிக்கவே முடியாமல் போகிறதாம். அடுத்து மீறி கருத்தரித்தாலும் கருச்சிதைவு ஏற்பட்டுவிடுகிறதாம். இதையும் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள் ஆண்களே.. நம் நாட்டின் பலமே மகத்தான மனித வளம்தான்!!!

டிப்ஸ் புல்லட்டின்.... Aடிப்ஸ் புல்லட்டின்.... Aடிப்ஸ் புல்லட்டின்.... Tடிப்ஸ் புல்லட்டின்.... Hடிப்ஸ் புல்லட்டின்.... Iடிப்ஸ் புல்லட்டின்.... Rடிப்ஸ் புல்லட்டின்.... Aடிப்ஸ் புல்லட்டின்.... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

டிப்ஸ் புல்லட்டின்.... Empty Re: டிப்ஸ் புல்லட்டின்....

Post by Aathira Sat Apr 16, 2011 6:05 pm

5. நிரோடிக் பயம்: இது பெண்கள் ஸ்பெஷல்:

சும்மா ஆண்களுக்கே ஸ்பெஷல்னு கோபிக்ககூடாதே அதனால் பெண்களுக்கும் ஒரு ஸ்பெஷல். பொதுவாய் பெண்களே எதற்கும் பயப்படுவார்கள்.. சொர்ணா அக்காக்ககள் தவிர. இந்த நோய் தாக்கியவர்கள் எல்லாவற்றிற்கும் பயப்படுவார்கள். இந்த நோய்க்கு என்ன அறிகுறி என்று கேட்கிறீர்களா? அதுதான் முதலிலேயே கூறினேனே. எல்லாவற்றிற்கும் பயப்படுவார்கள். பஸ் நிறுத்தத்தில் நிற்கும் போது பஸ் நிறுத்தாமல் போய்விடுவானோ என்று பயம், ஆட்டோவில் ஏறினால் இறங்கும்போது ஆட்டோ டிரைவர் அதிகம் துட்டு கேட்பாரோ என்று பயம். காலையில் குறித்த நேரத்தில் எழாமல் தூங்கிவிடுவோமோ என்று பயம். டிவியில் பாம்பைக் கண்டால், வெட்டும் அல்லது அடிதடி காட்சியைக் கண்டால், சாலையில் விபத்தைக் கண்டால், இரத்தத்தைக் கண்டால் என்று எல்லாவற்றிற்கும் பயந்து கொண்டே இருப்பார்கள். இந்த நோயால் உடல் அளவிலும் அவர்கள் வியர்வை, படபடப்பு, நடுக்கம், வேகமான இதயத்துடிப்பு சில நேரங்களில் மயக்கம் ஆகிய பாதிப்புகளை அடைவார்கள். பொதுவாக இந்நோய் மணமான பெண்களுக்கு வருகிற நோய். இந்நோயைப் போக்க ஒரே ஒரு மருந்துதான். அவர்கள் மன தைரியததை வளர்த்துக் கொள்ள வேண்டும். எது நடந்ததோ அது நல்லதாகவே நடந்தது. எது நடக்க இருக்கிறதோ அதுவும் நல்லதாகவே நடக்கும். என்ற எண்ணத்துடனும் கடவுள் நம்பிக்கையுடனும் இருந்தாலே போதும். தியானம் செய்தல், மெல்லிய இசையைக் கேட்டல், எல்லோரிடமும் சிரித்துப் பேசி மகிழ்தல் ஆகியவற்றுடன் எவ்வளவோ பாத்துட்டோம் இதப் பாக்க மாட்டோமா என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.

டிப்ஸ் புல்லட்டின்.... Aடிப்ஸ் புல்லட்டின்.... Aடிப்ஸ் புல்லட்டின்.... Tடிப்ஸ் புல்லட்டின்.... Hடிப்ஸ் புல்லட்டின்.... Iடிப்ஸ் புல்லட்டின்.... Rடிப்ஸ் புல்லட்டின்.... Aடிப்ஸ் புல்லட்டின்.... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

டிப்ஸ் புல்லட்டின்.... Empty Re: டிப்ஸ் புல்லட்டின்....

Post by balakarthik Sat Apr 16, 2011 6:22 pm

காசினியக்கா டிப்செல்லாம் ஓகே அந்த புல்லேட்டு எங்கே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் டிப்ஸ் புல்லட்டின்.... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

டிப்ஸ் புல்லட்டின்.... Empty Re: டிப்ஸ் புல்லட்டின்....

Post by Aathira Sat Apr 16, 2011 6:35 pm

balakarthik wrote:காசினியக்கா டிப்செல்லாம் ஓகே அந்த புல்லேட்டு எங்கே டிப்ஸ் புல்லட்டின்.... 677196 டிப்ஸ் புல்லட்டின்.... 677196 டிப்ஸ் புல்லட்டின்.... 677196 டிப்ஸ் புல்லட்டின்.... 677196 டிப்ஸ் புல்லட்டின்.... 677196 டிப்ஸ் புல்லட்டின்.... 677196 டிப்ஸ் புல்லட்டின்.... 677196
டிப்ஸ் புல்லட்டின்.... 740322 டிப்ஸ் புல்லட்டின்.... 740322 இதுல இருக்கு...

டிப்ஸ் புல்லட்டின்.... Aடிப்ஸ் புல்லட்டின்.... Aடிப்ஸ் புல்லட்டின்.... Tடிப்ஸ் புல்லட்டின்.... Hடிப்ஸ் புல்லட்டின்.... Iடிப்ஸ் புல்லட்டின்.... Rடிப்ஸ் புல்லட்டின்.... Aடிப்ஸ் புல்லட்டின்.... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

டிப்ஸ் புல்லட்டின்.... Empty Re: டிப்ஸ் புல்லட்டின்....

Post by balakarthik Sat Apr 16, 2011 6:50 pm

Aathira wrote:
balakarthik wrote:காசினியக்கா டிப்செல்லாம் ஓகே அந்த புல்லேட்டு எங்கே டிப்ஸ் புல்லட்டின்.... 677196 டிப்ஸ் புல்லட்டின்.... 677196 டிப்ஸ் புல்லட்டின்.... 677196 டிப்ஸ் புல்லட்டின்.... 677196 டிப்ஸ் புல்லட்டின்.... 677196 டிப்ஸ் புல்லட்டின்.... 677196 டிப்ஸ் புல்லட்டின்.... 677196
டிப்ஸ் புல்லட்டின்.... 740322 டிப்ஸ் புல்லட்டின்.... 740322 இதுல இருக்கு...

டீச்சராச்சே அதான் சிலபசுல உள்ளதுமட்டும் சொல்லிதரிங்க நாங்க ஏதாவது அறிவாளிகனக்கா கேள்விகேட்டா இப்படி பெரம்ப தூக்கவேண்டியது ஆண்டவா என்னமாதிரி அப்பாவி குழந்தைங்கள இந்தமாதிரி டீச்சருங்ககிட்டேருந்து காப்பாத்துப்பா ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!!

ஈகரை தமிழ் களஞ்சியம் டிப்ஸ் புல்லட்டின்.... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

டிப்ஸ் புல்லட்டின்.... Empty Re: டிப்ஸ் புல்லட்டின்....

Post by மஞ்சுபாஷிணி Sat Apr 16, 2011 7:46 pm

ஆஹா அருமையான பயனுள்ள டிப்ஸ் பானு.......

எல்லாருமே இதை படித்து பயன்பெற்றால் நன்மை.....

அன்பு வாழ்த்துக்கள் பானு பகிர்வுக்கு....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

டிப்ஸ் புல்லட்டின்.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

டிப்ஸ் புல்லட்டின்.... Empty Re: டிப்ஸ் புல்லட்டின்....

Post by மஞ்சுபாஷிணி Sat Apr 16, 2011 7:48 pm

Aathira wrote:
balakarthik wrote:காசினியக்கா டிப்செல்லாம் ஓகே அந்த புல்லேட்டு எங்கே டிப்ஸ் புல்லட்டின்.... 677196 டிப்ஸ் புல்லட்டின்.... 677196 டிப்ஸ் புல்லட்டின்.... 677196 டிப்ஸ் புல்லட்டின்.... 677196 டிப்ஸ் புல்லட்டின்.... 677196 டிப்ஸ் புல்லட்டின்.... 677196 டிப்ஸ் புல்லட்டின்.... 677196
டிப்ஸ் புல்லட்டின்.... 740322 டிப்ஸ் புல்லட்டின்.... 740322 இதுல இருக்கு...

சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

டிப்ஸ் புல்லட்டின்.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

டிப்ஸ் புல்லட்டின்.... Empty Re: டிப்ஸ் புல்லட்டின்....

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum