புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாஷிங்டனில் திருமணம் - சாவி  Poll_c10வாஷிங்டனில் திருமணம் - சாவி  Poll_m10வாஷிங்டனில் திருமணம் - சாவி  Poll_c10 
44 Posts - 61%
heezulia
வாஷிங்டனில் திருமணம் - சாவி  Poll_c10வாஷிங்டனில் திருமணம் - சாவி  Poll_m10வாஷிங்டனில் திருமணம் - சாவி  Poll_c10 
22 Posts - 31%
வேல்முருகன் காசி
வாஷிங்டனில் திருமணம் - சாவி  Poll_c10வாஷிங்டனில் திருமணம் - சாவி  Poll_m10வாஷிங்டனில் திருமணம் - சாவி  Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
வாஷிங்டனில் திருமணம் - சாவி  Poll_c10வாஷிங்டனில் திருமணம் - சாவி  Poll_m10வாஷிங்டனில் திருமணம் - சாவி  Poll_c10 
2 Posts - 3%
viyasan
வாஷிங்டனில் திருமணம் - சாவி  Poll_c10வாஷிங்டனில் திருமணம் - சாவி  Poll_m10வாஷிங்டனில் திருமணம் - சாவி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாஷிங்டனில் திருமணம் - சாவி  Poll_c10வாஷிங்டனில் திருமணம் - சாவி  Poll_m10வாஷிங்டனில் திருமணம் - சாவி  Poll_c10 
236 Posts - 43%
heezulia
வாஷிங்டனில் திருமணம் - சாவி  Poll_c10வாஷிங்டனில் திருமணம் - சாவி  Poll_m10வாஷிங்டனில் திருமணம் - சாவி  Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
வாஷிங்டனில் திருமணம் - சாவி  Poll_c10வாஷிங்டனில் திருமணம் - சாவி  Poll_m10வாஷிங்டனில் திருமணம் - சாவி  Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
வாஷிங்டனில் திருமணம் - சாவி  Poll_c10வாஷிங்டனில் திருமணம் - சாவி  Poll_m10வாஷிங்டனில் திருமணம் - சாவி  Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
வாஷிங்டனில் திருமணம் - சாவி  Poll_c10வாஷிங்டனில் திருமணம் - சாவி  Poll_m10வாஷிங்டனில் திருமணம் - சாவி  Poll_c10 
12 Posts - 2%
prajai
வாஷிங்டனில் திருமணம் - சாவி  Poll_c10வாஷிங்டனில் திருமணம் - சாவி  Poll_m10வாஷிங்டனில் திருமணம் - சாவி  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வாஷிங்டனில் திருமணம் - சாவி  Poll_c10வாஷிங்டனில் திருமணம் - சாவி  Poll_m10வாஷிங்டனில் திருமணம் - சாவி  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வாஷிங்டனில் திருமணம் - சாவி  Poll_c10வாஷிங்டனில் திருமணம் - சாவி  Poll_m10வாஷிங்டனில் திருமணம் - சாவி  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
வாஷிங்டனில் திருமணம் - சாவி  Poll_c10வாஷிங்டனில் திருமணம் - சாவி  Poll_m10வாஷிங்டனில் திருமணம் - சாவி  Poll_c10 
7 Posts - 1%
mruthun
வாஷிங்டனில் திருமணம் - சாவி  Poll_c10வாஷிங்டனில் திருமணம் - சாவி  Poll_m10வாஷிங்டனில் திருமணம் - சாவி  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாஷிங்டனில் திருமணம் - சாவி


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 16, 2011 5:54 pm

நகைச்சுவை என்றாலே நம் நினைவுக்கு வருவது கல்கி, தேவன், சாவி போன்ற எழுத்தாளர்கள் தான். சிரிக்க வைப்பது மட்டுமில்லாமல் சிந்திக்கவும் வைப்பது கல்கியின் எழுத்து என்றால், மனம் விட்டு சிரிப்பது ஒன்றையே நோக்கமாகக் கொண்டிருப்பது மகாதேவன் என்னும் தேவனின் எழுத்து. அவரது புகழ்பெற்ற கதாபாத்திரமான துப்பறியும் சாம்புவை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதே போன்று வாழ்க்கையின் சோகங்களையும், சுகங்களையும் சம நோக்கோடு எடுத்துக் கொண்டு நகைச்சுவையாக எழுதுபவர்களில் குறிப்பிடத்தகுந்தவராக விளங்கியவர் சாவி என்றழைக்கப்படும் சா.விஸ்வநாதன். விசிறி வாழை, நவகாளி யாத்திரை போன்ற பல நூல்களை சாவி எழுதியிருந்தாலும் அவரை பரவலாக அனைத்து தரப்பு வாசகர்களுக்கும் அடையாளம் காட்டிய நூல் ‘வாஷிங்டனில் திருமணம்’ தான். இன்றும் நம்மைச் சிரிக்க வைக்கும் கற்பனையும் அங்கதமும் கலந்த அந்நூலை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. அந்நூலிலிருந்து சில பகுதிகள்….

“கல்யாணத்துக்கு முதல்நாள் ‘ஜான் வாசம்’ என்ற பெயரில் ஒரு ‘ப்ரொஸெஷன்’ நடக்கிறது. ….. ஜான்வாசம் என்பது பிள்ளையை மட்டும் காரில் ஊர்வலமாக அழைத்துச் செல்லும் ஒரு ‘பங்ஷன்’. பந்துக்களும், நண்பர்களும் காரைச் சூழ்ந்து கொண்டு மெதுவாக நடந்து செல்கிறார்கள். எல்லோருக்கும் முன்னால் நாதசுரக்காரர்கள் போகிறார்கள். தவில் என்பது ‘டிபிள் ஹெடட் இன்ஸ்ட்ருமெண்ட்’. இதை வாசிப்பவருக்குக் குடுமி உண்டு. இவர் ஒரு பக்கத்தை ‘ஸ்டிக்’கால் ‘பீட்’ செய்து கொண்டு, மறுபக்கத்தைக் கையால் அடிக்கிறார். எப்படி அடித்தாலும் தவில் கிழிந்து போவதில்லை. தாலி கட்டும் நேரத்தில் சிலர் ஆள்காட்டி விரலை வேகமாக ஆட்டி இவரைப் பயமுறுத்துகிறார்கள். உடனே தவில்காரர் பயந்து ‘டமடம’ என்று தவிலைக் கொட்டி முழக்குகிறார். அப்போது இவருடைய குடுமி அவிழ்ந்து போகிறது. உடனே வாசிப்பை நிறுத்திவிட்டுக் குடுமியைக் கட்டிக் கொள்கிறார். இவருக்குக் குடுமி கட்டுவதற்கென்று தனி ஆசாமி போட வேண்டும்.

மணப்பெண் என்பவள், தலையைக் குனிந்தபடி, எந்நேரமும் தரையைப் பார்த்தபடியே இருக்கிறாள். அவள் எதையோ தொலைத்துவிட்டுத் தேடிக் கொண்டிருப்பவள் போல் தோன்றுகிறது. இதனால் ஃபோட்டோவில் அவள் முகம் சரியாக விழுவதில்லை. மணமகனுக்கும், மணப்பெண்ணுக்கும் முன்னால் ‘ஹோமம்’ செய்யப்படுகிறது. ‘சமித்து’ எனப்படும் குச்சிகளில் நெய்யை ஊற்றி ‘ஸ்மோக்’ உண்டாக்குவதற்கு ஹோமம் என்கிறார்கள். நெய்யை ஹோமத்தில் கொட்டி வீணாக்குவது நேருஜிக்குப் பிடிக்கவில்லை. எனக்கு நெய்யே பிடிக்கவில்லை. இந்த ‘ஸ்மோக்’ சுற்றி உட்கார்ந்திருப்பவர்களின் கண்களில் புகுந்து எரிச்சலை உண்டாக்குகிறது. கல்யாண மண்டபத்தில் ஹோமம் நடக்கிற முற்றத்தில் தொழிற்சாலைகளில் உள்ளது போல் ஒரு புகை போக்கி கட்டி, புகையை மேலே அனுப்புவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

மணப்பெண் தாலி கட்டிக் கொள்வதற்கு முன்னால், கூரைச் சேலை கட்டிக் கொள்கிறாள். ஆங்கிலத்தில் இதை ‘Roof Saree’ என்று கூறலாம். மணப்பந்தலில் எல்லோரும் சப்பணம் போட்டுக் கொண்டு மணிக் கணக்கில் உட்கார்ந்திருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் தட்சணை என்கிற ‘பூரி’ வழங்கப்படுகிறது. அதாவது ஒரு ரூபாய். இரண்டு ரூபாய் ‘டிப்ஸ்’ தரப்படுகிறது. இந்தியாவில் வேலை செய்யாமல் சும்மா உட்கார்ந்து கொண்டிருப்பவர்களுக்கெல்லாம் பணம் தருகிறார்கள். இது கொஞ்சம் கண்டிக்கத்தக்கது. ஆனாலும் சப்பணம் போட்டு உட்காரும் கலையில் இந்தியர்கள் வல்லவர்களாயிருக்கிறார்கள். இவ்வளவு நேரமாக மணப்பந்தலில் உட்கார்ந்திருப்பவர்கள், உடனே சாப்பாட்டுக்கும் அதே போஸில்தான் உட்காருகிறார்கள். இது எப்படித்தான் அவர்களால் முடிகிறதோ, தெரியவில்லை. இப்படிச் சம்பணம் போட்டு உட்கார்ந்து கொண்டிருப்பதற்காக அவர்களுக்கு இரண்டு ரூபாயும் கொடுக்கலாம், இருநூறு டாலரும் கொடுக்கலாம்.

பந்தலில் கூடியிருப்பவர்கள் எந்நேரமும் ‘சளசள’ வென்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். அத்துடன் ஸ்திரீகள் புதுப் புடவைகளைக் கட்டிக்கொண்டு, குறுக்கும் நெடுக்கும் அலையும் போது உண்டாகும் ‘சரக் சரக்’ என்ற புடவைச் சத்தம் வேறு. இதனாலெல்லாம் மந்திரச் சத்தம் நம் காதில் சரியாக விழுவதில்லை.

தாலி கட்டும் போது மணப்பெண் தன் தந்தையின் மடியில் உட்கார்ந்து கொள்கிறாள். மணமகன், மனைவியாகப் போகிறவளின் எதிரில் நின்றுகொண்டு, அவள் கழுத்தில் தாலியைக் கட்டுகிறான். இவ்வளவு நேரம் செலவு செய்து திருமணம் செய்கிறவர்கள் தாலி கட்டிக் கொள்ளும் நேரத்தில் மணப்பெண் செளகரியமாக உட்கார்ந்து கொள்வதற்கு ஒரு சோபா செட் வாங்கிப் போட்டிருக்கலாம்.
அட்சதை எனப்படும் ‘ரைஸ்’களை ரெட் பவுடரில் கலந்து அவ்வப்போது மணமக்கள் தலையில் இறைக்கிறார்கள். ரைஸ்தான் தென்னிந்தியாவில் முக்கிய உணவுப் பொருள். அதை இப்படி வீணாக்குவது எனக்குச் சரியாகப்படவில்லை. என்னிடம் கொடுத்த எல்லா அட்சதைகளையும் நான் வாயில் போட்டுத் தின்றுவிட்டேன். அரிசியை ‘ரா’வாகச் சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கிறது. அதை வீணாகச் சாதமாக்கிக் கொடுத்து விடுகிறார்கள். இவ்வளவு அரிசிகளையும் பெரிய பெரிய பாத்திரங்களில் போட்டுக் கொதிக்க வைக்கிறார்கள். ஆனால், ஒரே ஒரு அரிசியை மட்டும்தான் கையில் எடுத்து நசுக்கி, வெந்து போய்விட்டதா என்று பார்க்கிறார்கள். இதற்குப் ‘பதம் பார்ப்பது’ என்று சொல்கிறார்கள். ஒரே ஒரு பருக்கையை மட்டும் எடுத்துப் பதம் பார்த்துவிட்டு, ஒரு பானைச் சோறும் வெந்துவிட்டது என்று எப்படித்தான் கண்டுபிடிக்கிறார்களோ, தெரியவில்லை.

சாப்பாட்டில் அப்பளம் என்னும் வட்டமான ஒரு ‘வஸ்து’வைப் போடுகிறார்கள். ‘அதை எப்படி வட்டமாகச் செய்கிறார்கள்? எப்படி நொறுங்காமல் செய்கிறார்கள்?’ என்பதெல்லாம் விளங்காத மர்மங்களாயிருக்கின்றன. தென்னிந்தியாவில் பாட்டிமார்கள் என்றொரு கூட்டம் இருக்கிறது. அவர்களால் தான் இவை தயாரிக்கப்படுகின்றனவாம். அப்பளம் தின்பதற்கு ருசியாக இருக்கிறது. நான் எவ்வளவோ முயன்றும் ஒரு அப்பளத்தைக் கூட அப்படியே முழுசாக வாயில் போட்டு விழுங்க முடியவில்லை. சாப்பிடுகிறவர்கள் இதைத் துண்டு துண்டாக்கிச் சாப்பிடுகிறார்கள். அப்பளத்தை உடைக்கும்போது, மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஏனெனில் துண்டுகளாக உடைத்துச் சாப்பிடுவதென்றால் அவ்வளவு பிரயாசைப்பட்டு வட்டமாகச் செய்திருக்க வேண்டியதில்லை அல்லவா?”

பின்குறிப்பு :- இதெல்லாம் தென்னிந்தியிவிற்கு வந்த ஹாரி ஹாப்ஸ் என்னும் தம்பதியர், அங்கு நடக்கும் ஒரு திருமணத்தைப் பார்த்து விட்டு எழுதிய குறிப்புகள் என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருக்கிறார் சாவி.

வாஷிங்டனில் திருமணம்
வெளியீடு -கிழக்கு பதிப்பகம்
33/15, எல்டாம்ஸ் ரோடு,
ஆழ்வார்பேட்டை,
சென்னை-600 018.
தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604.
விலை:ரூ.80.



ஈகரை தமிழ் களஞ்சியம் வாஷிங்டனில் திருமணம் - சாவி  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 18, 2011 7:57 pm

இந்த நூலை நான் சிறுவயதிலும் வாசித்திருக்கிறேன்.. பிறகு கல்லூரியில் வாசிக்கும் காலத்திலும் சுவைத்திருக்கிறேன். சமீபத்தில் இணையத்தில் இதன் பிடிஎஃப் இலும் வாசித்துவிட்டேன்..

எத்தனை முறை வாசித்தாலும் சலிப்புத் தட்டாத நகைச்சுவை அணுகுண்டு இது..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக