புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத் தேர்தல்: யார் வென்றாலும் தோல்வி மக்களுக்கே!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
அதிரூபன்
திராவிட அரசியலின் முற்போக்கு அம்சங்களை வைத்து ஆட்சி அதிகாரத்தை அறுவடை செய்த தி.மு.க., தனது கொள்கை வீழ்ச்சியை எம்.ஜி.ஆரின் வருகையின்போதே உறுதிபடுத்திவிட்டது. பகட்டான திரையுலக நிழல் பாத்திரங்களின் தன்மைகளை முதன்மை அலகுகளாகக் கொண்டு எம்.ஜி.ராமச்சந்திரன் தனக்கான தமிழ் அரசியல் வெளியைக் கட்டியமைத்தார். அதற்கு சற்று முன்பாக ’ஒன்றே குலம் எனவும் ஒருவனே தேவன்’ என திராவிட இயக்கத்தின் மகத்தான இரண்டு கொள்கைகளைக் காவு கொடுத்தார் அண்ணா. அதன் நீட்சியாக கொஞ்ச நஞ்சமிருந்த பூச்சுகளையும் உதிர்த்துவிட்டு திராவிட அரசியலின் அதிகாரப்பூர்வ வீழ்ச்சியை எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்தார். இவை அனைத்தின் தோற்றுவாயிலும், நிகழ்ச்சிப்போக்கிலும் பங்கேற்ற கருணாநிதியோ மாறிவரும் உலகுக்கு ஏற்ப தன் கொள்கைகளை மாற்றியமைத்துக்கொண்டார். 87 வயதில் வாழ்வின் அந்திமக் காலத்தில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டிருக்கும் கருணாநிதியின் தற்போதைய தேர்தல் யுத்திகளுடன் நவீன தலைமுறை அரசியல்வாதிகளே போட்டிபோட முடியவில்லை.
கருணாநிதி கொள்கை அரசியலை கைவிட்டுவிட்டார் என்னும் சொற்றொடரை எழுதும்போதே இதர அரசியல்வாதிகள் கொள்கை அரசியலை கைகொண்டுள்ளனர் என பொருள் வருகிறது. தேர்தல் அரசியலில் ஈடுபட்டிருக்கும் எந்தக் கட்சிக்கும் கொள்கை என எதுவுமில்லை. இதை நடப்பு சூழலில் மிக வெளிப்படையாக அறிவிக்க வந்தவர்தான் விஜயகாந்த். அவர் கட்சி தொடங்கி 5 வருடங்கள் முடிந்துவிட்டது. அப்போதில் இருந்து இப்போது வரை தேசிய முற்போக்குத் திராவிட கட்சியின் கொள்கை என்ன என எத்தனையோ பேர் கேட்டுவிட்டனர். ஆனால் ’’கொள்கை என்னங்க கொள்கை? தி.மு.க.வுக்கு என்ன கொள்கை இருக்கு? அ.தி.மு.க. கொள்கை என்னன்னு உங்களுக்குத் தெரியுமா? மக்கள் பசி, பட்டினி இல்லாம சந்தோஷமா வாழணும். அவ்வளவுதான் கொள்கை” என்பதுதான் விஜயகாந்த்தின் பதில். ஒரு வகையில் இதை மிக நேர்மையான வாக்குமூலமாகவும் கருதலாம். ஆதாய அரசியலும், லாபவெறியை சந்தர்ப்பவாதத்தால் நியாயப்படுத்தும் பச்சோந்தித்தனமும் நிரம்பிக்கிடக்கும் நடப்புச் சூழலில் விஜயகாந்தின் கொள்கைக்கும், இதர கட்சிகளின் கொள்கைக்கும் ஆறு வித்தியாசங்கள் கூட இருக்க வாய்ப்பு இல்லை. அதனால்தான் வர்க்க அரசியல் பேசும் இடதுசாரிகள் தங்களுக்கு அதிமுக கூட்டணியில் ஒரு பிரச்னை என்றவுடன் விஜயகாந்த்தைத் தேடி ஓடுகின்றனர்.
தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க. போன்ற கட்சிகள் மிக மோசமாக ஒவ்வொரு தேர்தலிலும் தங்கள் சந்தர்ப்பவாத முகத்துக்கு ஏற்ப நியாயவாதம் பேசுகின்றனர். பா.ம.க.வின் ராமதாஸ் ஒவ்வொரு தேர்தலுக்கும் கூட்டணி மாறுவது அனைவரும் அறிந்த கதைதான். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இறுதி நேரத்தில் அவர் தி.மு.க. கூட்டணியை விட்டு வெளியேறி கடும் நஷ்டத்தை சம்பாதித்தார். அதன் பிறகு அ.தி.மு.க., தி.மு.க. இரு கூட்டணியிலும் இல்லாமல் கொஞ்ச காலம் அந்தரத்தில் தத்தளித்தார். அப்போது ‘வன்னியர் மக்களே.. உங்கள் நலனுக்காகத்தான் நான் போயஸ் தோட்டத்துக்கும், கோபாலபுரத்துக்கும் மாறி, மாறி நடையாய் நடக்கிறேன். ஆனால் நீங்கள் அதை புரிந்துகொள்ளவில்லையே’ என புலம்பினார். ராமதாஸின் அணிதாவல் வன்னியர் நலனுக்காகத்தான் நடக்கிறது என்பது நமக்கு அதிர்ச்சியானதாக இருப்பது ஆச்சர்யமல்ல, வன்னியர்களுக்கே அது அதிர்ச்சியான ஒன்றுதான்.
இப்போது வைகோ தேர்தல் புறக்கணிப்பு முடிவை எடுத்திருக்கிறார். எதற்காக? ம.தி.மு.க.வின் கொள்கையும், அ.தி.மு.க. கூட்டணியின் கொள்கையும் ஒத்துப்போகவில்லை என்றா? இல்லை, தாங்கள் கேட்ட சீட்டுகளைத் தரவில்லை என ம.தி.மு.க. தேர்தல் புறக்கணிப்பு செய்திருக்கிறது. ஆகவே எந்தத் திசையில் பார்த்தாலும் ’இது கொள்கை கூட்டணி’ என எதையும் சுட்டிக்காட்ட முடியாது. எல்லாமே கொள்கை கூட்டணிதான். ஆனால் தங்களுக்கும் கொள்கை இருக்கிறது எனக் காட்டுவதற்கு எல்லோருமே படாதபாடு படுகின்றனர். எந்தக் காலத்திலும் தலித் மக்களைப் பற்றியோ, இஸ்லாமியர்களைப் பற்றியோ கவலைப்பட்டிராத ஜெயலலிதா, ‘’ஸ்பெக்டரம் ஊழலில் ஆ.ராசா என்ற தலித் பலிகடா ஆக்கப்பட்டிருக்கிறார். சாதிக் பாட்ஷா என்ற இஸ்லாமியர் பலிகொடுக்கப்பட்டிருக்கிறார்” என்று பேசுகிறார். தலித் ஆதரவும், இஸ்லாமிய ஆதரவும் ஜெயலலிதாவின் உதடுகளில் இருந்து கசிந்து வருவதுதான் காலத்தின் கொடுமை.
தேர்தல் கமிஷனும், ஷங்கர் படமும்
முன் எப்போதும் இல்லாத வகையில் தேர்தல் கமிஷன் கடும் நெருக்கடிகளை அமுல்படுத்தி வருகிறது. குறிப்பாக பண பரிவர்த்தனையை முடிந்தவரைக் கட்டுப்படுத்துகிறது. வேட்பாளர்கள் தரப்பில் இருந்து நாள்தோறும் கோடி கோடியாய் பணக் கட்டுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. தேர்தலுக்கே உரிய எந்த பளபளப்பையும் தமிழ்நாட்டில் காண முடியவில்லை. ‘’ஓர் எதிர்கட்சியைப் போன்று நாங்கள் கெஞ்ச வேண்டியிருக்கிறது” என கருணாநிதியே வாய்விட்டு புலம்புகிறார். தேர்தல் கமிஷனின் இந்த அதிரடி நடவடிக்கைகளை மிடிள் கிளாஸ் மனநிலை கைதட்டி வரவேற்கிறது. ஆனால் உண்மை என்னவெனில், இப்படி எல்லாம் டிராமா செய்து மோசடிகளை தடுத்து நிறுத்துவதற்கு தேர்தல் ஒன்றும் ஷங்கர் படம் அல்ல.
அரசியல்வாதிகளிடம் கோடிக் கணக்கில் பணம் கொட்டிக் கிடக்கிறது. தேர்தல் சமயத்தில்தான் அந்தப் பணத்தை கொஞ்சமாவது வெளியே எடுப்பார்கள். பந்தல் காண்ட்ராக்டர் முதல் போஸ்டர் ஒட்டுபவர் வரை பல்லாயிரம் தொழிலாளர்களுக்கு ஏதோ ஒரு வடிவத்தில் அந்த பணம் போய் சேரும். ஆனால் இப்போது வேட்பாளர்களின் செலவை கண்கொத்தி பாம்பாக தேர்தல் ஆணையம் கண்காணித்துக் கட்டுப்படுத்துகிறது. இதனால் புழக்கத்துக்கு வர வேண்டிய பணம் தடுக்கப்படுகிறது. அரசியல்வாதிகள் கொள்ளை அடிக்கும்போது எல்லாம் கண்டுகொள்ளாத அரசு, அந்தப் பணத்தை செலவு செய்யும்போது மட்டும் தடுக்கிறது. உண்மையில் தேர்தல் ஆணையத்தின் இந்த கறார் நடவடிக்கைகள் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு மேற்கொண்டும் லாபமாகத்தான் முடிகிறது.
இதை மறுவளமாகப் பார்த்தால் வேட்பாளர்கள் பணம் கொடுப்பதுதான் பிரச்னையா? அது மட்டும்தான் நீதியற்றதா? அப்படியானால் இலவச டி.வி. தருவதும், இலவசமாக மிக்ஸி தருவோம் என்பதும் லஞ்சம் இல்லையா? ‘நாங்கள் பதவிக்கு வந்தால் அரசாங்க பணத்திலேயே இந்த லஞ்சத்தைத் தருவோம்’ என்பதுதானே இதன் பொருள்? இதைத் தடுக்க தேர்தல் ஆணையம் என்ன செய்திருக்கிறது? எதுவும் செய்ய முடியாது. ஏனெனில் அது ‘மக்கள் நலத் திட்டங்கள்’ என்ற பெயரில் சட்டப் பூர்வமாக நடக்கும் ஊழல்.
யார் கைப்புள்ள?
நடிகர் வடிவேலுவின் தி.மு.க.வுக்கு ஆதரவான தேர்தல் பிரசாரம் தமிழ்நாட்டு மக்களிடம் நன்றாகவே எடுபட்டிருக்கிறது. இதற்கு வடிவேலு மட்டுமே காரணம் அல்ல. பிரசாரத்தின்போது விஜயகாந்த் தினசரி நடத்தும் காமெடி காட்சிகள் வடிவேலுவின் பிரசாரத்தை மேலும் மக்களிடம் கொண்டு சேர்க்கிறது. ‘’அ.தி.மு.க.வின் கொள்கைப் பிரசாரச் செயலாளர் உள்ளே இருக்கிறார்” என்பதும், சத்தமிடும் தொண்டர்களைப் பார்த்து ‘’ரொம்ப சத்தம் போட்டீங்கன்னா நான் பாட்டுக்கும் போயிடுவேன்” என்பதும், ‘’சத்தம் போடாதீங்க. அப்புறம் நான் குழம்பிடுவேன்” என்பதுமாக விஜயகாந்த்தின் பேச்சு, அவர் மீது இருந்த கேப்டன் இமேஜை காலாவதியாக்கி விட்டது. தினமும் கேப்டன் டி.வி.யைப் பார்ப்பதே தமிழக மக்களுக்கு நல்ல பொழுதுபோக்காக இருக்கிறது.
”கொள்கை என்ன பெரிய கொள்கை” என தனது கட்சியைப் பற்றி வெளிப்படையாக குறிப்பிடும் விஜயகாந்த், குறைந்தப்பட்சம் தனக்கு முன்னால் நிற்கும் பல்லாயிரக்கணக்கான மக்களையேனும் மதிக்க வேண்டும். ஆனால் அவரோ கண்மண் தெரியாமல் குடித்துவிட்டு வந்து பேசுகிறார். வார்த்தைகளைக் கூட அவரால் தெளிவாக உச்சரிக்க முடியவில்லை. ‘’தண்ணியில் மிதக்கிற கப்பலை ஸ்டெடியா ஓட்டுறவன்தான்யா கேப்டன். எந்நேரமும் தண்ணியில மிதக்குறவன் கேப்டன் கிடையாது” என்று வடிவேலு பேசுவது பொய் இல்லை என்பதை விஜயகாந்த் தனது செய்கைகளாலேயே நிரூபிக்கிறார்.
இதன் மறுபுறம் பார்த்தால் விஜயகாந்த்தின் மீதான தனது சொந்த பகைக்கு பழிதீர்க்கும் விதமாக வடிவேலு தேர்தல் பிரசாரம் செய்கிறார். அழகிரி மூலமாக தைரியமும், நம்பிக்கையும் கொடுக்கப்பட்டு வடிவேலு பிரசாரத்துக்கு அழைத்து வரப்பட்டாலும், மறுபடியும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் வடிவேலுவுக்கு நிச்சயம் பெரிய சிக்கல் ஒன்று காத்திருக்கிறது. அதேநேரம் மக்கள் வடிவேலுவை ரசிப்பது அவரது அரசியல் கலப்படமற்ற காமெடிக்காகத்தான். விவேக் கூட தன் காமெடிகளில் சமூக கருத்துக்களைத் திணிப்பார். ஆனால், வடிவேலு எந்தவித அரசியலும் இல்லாமல்தான் காமெடி செய்வார். இந்த நிலையில் தனது சொந்த பகையை மனதில் வைத்து வடிவேலு மேற்கொண்டிருக்கும் இந்த புதிய அரசியல் அவதாரம் அவரது சினிமா வாழ்க்கையில் நிச்சயம் பெரிய பின்னடைவை உண்டாக்கும். தன்னை எதிர்க்கும் மதுரைக்காரரான விஜயகாந்த்தை காலிசெய்ய…அதே மதுரையைச் சேர்ந்த வடிவேலுவையே களமிறக்கிவிட்டிருக்கும் தி.மு.க.வின் தந்திர அரசியல் ஒரு பக்கம் இருக்க... இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான வேறொரு அம்சமும் இருக்கிறது.
தி.மு.க. என்பது பேசிப் பேசியே வளர்ந்த திராவிடக் கட்சி. அதன் தலைவர்கள் அத்தனைபேரும் கம்பீரமான பேச்சுக்கு புகழ்பெற்றவர்கள். ஆனால் இப்போது அந்த தி.மு.க., ஒரு நகைச்சுவை நடிகரின் பேச்சை நம்பியிருக்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. உண்மையான கட்சிக்காரர்கள் தி.மு.க.வின் இந்த வீழ்ச்சிக் குறித்து நிஜமாகவே வெட்கித் தலைகுனிகின்றனர். வடிவேலுவைப் பயன்படுத்தி விஜயகாந்த்தை கைப்புள்ள ஆக்க நினைக்கிறார் கருணாநிதி. கடைசியில் வடிவேலு, விஜயகாந்த், கருணாநிதி மூவரில் யார் கைப்புள்ள ஆகப் போகிறார்கள் என்பது தேர்தலின் முடிவில்தான் தெரியவரும். விஜயகாந்த்துக்கு எதிராக வடிவேலு களமிறங்கியிருப்பது ஒரு பக்கம் என்றால், வடிவேலுக்கு எதிராக நடிகர் சிங்கமுத்து தேர்தல் பிரசாரம் செய்வது இதில் மற்றொரு அசிங்கம். தத்தமது சொந்த பகைகளை தீர்த்துக்கொள்ள தேர்தலை ஒரு பகடைக் காயாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர். ஆனாலும் இதற்குப் பெயர் ஜனநாயகம்தான்.
யாருக்கு மெஜாரிட்டி?
தமிழ்நாட்டு ஊடகங்களில் தி.மு.க.வுக்கு எதிரான மனநிலை மக்களிடம் பெருமளவில் இருப்பதுபோன்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது. கருத்துக்கணிப்பு முடிவுகள் அவ்வாறுதான் வெளியிடப்படுகின்றன. ஆனால் கள யதார்த்தம் அவ்வாறு இல்லை. கிராமப் புறங்களில் தி.மு.க.வின் ஒரு ரூபாய் அரிசி, இலவச கலர் டி.வி., கேஸ் அடுப்பு போன்ற திட்டங்கள் எடுபட்டிருக்கின்றன. ஒவ்வொரு குடும்பமும் கடந்த 5 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் குறைந்தப்பட்சம் 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பலன்களை நேரடியாக அனுபவித்துள்ளன. மற்றபடி ஸ்பெக்டரம் ஊழல் போன்றவை எல்லாம் அடிமட்ட அளவில் சென்றுசேரவில்லை. ஸ்பெக்ட்ரம் ஒரு காரணியாக இருந்து தி.மு.க.வுக்கான வாக்குகளை சிதறடிக்கும் என்ற வாதம் உண்மை அல்ல. படித்தவர்கள் அதிகம் இருக்கும் நகர்ப்புறங்களில் ஸ்பெக்ட்ரம் என்பது நிச்சயம் ஒரு காரணிதான். அதனால்தான் கருணாநிதியும், ஸ்டாலினும் தத்தமது தொகுதிகளை மாற்றிக்கொண்டுவிட்டனர்.
ஊழலுக்கு எதிராகவெல்லாம் மக்கள் மனநிலை இல்லை. ஏனெனில் மக்களின் மனநிலையே இங்கு திட்டமிட்டு ஊழல்மயப்படுத்தப்பட்டிருக்கிறது. இலவச திட்டங்கள் மட்டுமல்ல… சிறுக, சிறுக ஓட்டரசியல்வாதிகள் செய்த ஊழல்களால் அது இயல்பான ஒன்றாக மாற்றப்பட்டிருக்கிறது. ‘எவன்தான் ஊழல் செய்யல. அவன் 5 வருஷம் திண்ணான். இவன் 5 வருஷம் திண்ணட்டுமே’ என நினைக்கிறது பொதுப்புத்தி.
இவை அனைத்தையும் தாண்டிய கள நிலைமைகளின் அடிப்படையில் தற்போதைய அரசியல் சூழல் தொடர்ந்தால்… அ.தி.மு.க. கூட்டணி இழுபறி நிலைமையில் ஆட்சியைப் பிடிக்கக் கூடும். தோல்விதான் என்றாலும் தி.மு.க. கூட்டணி மிக மோசமாக தோற்காது. இழுபறி நிலைமை வரும்போது விஜயகாந்த்தும், காங்கிரஸ் கட்சியும் ஒரு பெரும் பேரத்தை நிகழ்த்தும் சக்திகளாக மாறுவார்கள்.

- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
kannan3536 wrote:அன்பின் எட்வின் ,எனக்கு பழைய தமிழர்களது வரலாறு மீது ஒரு ஆர்வம் உள்ளது .எந்தப்பக்கமும் சாராமல் நேர்மையாக எழுதுங்கள்
நான் எப்போதும் உழைக்கும் மக்களின் ,ஒடுக்கப் பட்ட ஜனத் திரளின் எழுத்து ஊழியன் கண்ணன். அவர்களைச் சார்ந்துதான் இயங்க முடிகிறது. எந்த வரலாறும் அவர்களுடையதே
”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”
இரா.எட்வின்
- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
kannan3536 wrote:நன்றி எழுதுங்கள் .வாழ்த்துக்கள்
பகுதி பகுதியாகவேனும் செய்ய முயற்சிக்கிறேன் கண்ணன்
”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”
இரா.எட்வின்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2