புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடைசிக் கட்ட தில்லாலங்கடி-கரன்சி மழை Poll_c10கடைசிக் கட்ட தில்லாலங்கடி-கரன்சி மழை Poll_m10கடைசிக் கட்ட தில்லாலங்கடி-கரன்சி மழை Poll_c10 
70 Posts - 53%
heezulia
கடைசிக் கட்ட தில்லாலங்கடி-கரன்சி மழை Poll_c10கடைசிக் கட்ட தில்லாலங்கடி-கரன்சி மழை Poll_m10கடைசிக் கட்ட தில்லாலங்கடி-கரன்சி மழை Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
கடைசிக் கட்ட தில்லாலங்கடி-கரன்சி மழை Poll_c10கடைசிக் கட்ட தில்லாலங்கடி-கரன்சி மழை Poll_m10கடைசிக் கட்ட தில்லாலங்கடி-கரன்சி மழை Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
கடைசிக் கட்ட தில்லாலங்கடி-கரன்சி மழை Poll_c10கடைசிக் கட்ட தில்லாலங்கடி-கரன்சி மழை Poll_m10கடைசிக் கட்ட தில்லாலங்கடி-கரன்சி மழை Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கடைசிக் கட்ட தில்லாலங்கடி-கரன்சி மழை Poll_c10கடைசிக் கட்ட தில்லாலங்கடி-கரன்சி மழை Poll_m10கடைசிக் கட்ட தில்லாலங்கடி-கரன்சி மழை Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கடைசிக் கட்ட தில்லாலங்கடி-கரன்சி மழை Poll_c10கடைசிக் கட்ட தில்லாலங்கடி-கரன்சி மழை Poll_m10கடைசிக் கட்ட தில்லாலங்கடி-கரன்சி மழை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கடைசிக் கட்ட தில்லாலங்கடி-கரன்சி மழை Poll_c10கடைசிக் கட்ட தில்லாலங்கடி-கரன்சி மழை Poll_m10கடைசிக் கட்ட தில்லாலங்கடி-கரன்சி மழை Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கடைசிக் கட்ட தில்லாலங்கடி-கரன்சி மழை Poll_c10கடைசிக் கட்ட தில்லாலங்கடி-கரன்சி மழை Poll_m10கடைசிக் கட்ட தில்லாலங்கடி-கரன்சி மழை Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கடைசிக் கட்ட தில்லாலங்கடி-கரன்சி மழை Poll_c10கடைசிக் கட்ட தில்லாலங்கடி-கரன்சி மழை Poll_m10கடைசிக் கட்ட தில்லாலங்கடி-கரன்சி மழை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கடைசிக் கட்ட தில்லாலங்கடி-கரன்சி மழை Poll_c10கடைசிக் கட்ட தில்லாலங்கடி-கரன்சி மழை Poll_m10கடைசிக் கட்ட தில்லாலங்கடி-கரன்சி மழை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடைசிக் கட்ட தில்லாலங்கடி-கரன்சி மழை


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Apr 13, 2011 10:28 am

'பணம் பத்தும் செய்யும்!’ என்பார்கள். இந்தத் தேர்தலில், தேர்தல்


கமிஷன் கெடுபிடிகளையும் தாண்டி வேட்பாளர்களின் வெற்றி - தோல்விகளை நிர்ணயம் செய்யும் சக்தியாக மாறி ருக்கிறது பணம்!

தமிழகம் முழுக்க நமது நிருபர்கள் புகுந்து புறப்பட்ட போது பல தகவல்கள் கிடைத்தன. தேர்தல் கமிஷனின் பார்வைக்கும் ஒரு பட்டியல் போய் இருக்கிறது. பணத்தினால் வெற்றி முடிவு செய்யப்படும் தொகுதிகளின் நிலவரம் இங்கே...

1. மதுரை மேற்கு: மாவட்டத்திலேயே மிக அதிகமாகப் பணம் விளையாடும் தொகுதி. கவர்களைக் கொடுப்பதற்காக தொகுதிக்காரர் ஒருவரையும், பக்கத்துத் தொகுதிக்காரர் ஒருவரையும் சேர்த்து அனுப்புகிறார்கள். இரவில் பட்டுவாடா முடிந்ததும் காலையில் சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு போன் செய்து, 'கவர் வந்துச்சா?’ என்று கேட்டு உறுதி செய்கிறார்கள். யாராவது கவர் வாங்க மறுத்தாலும், 'ஓட்டு போடுறதும் போடாததும் உங்க விருப்பம்ணே. நாங்க எங்க வேலையைச் சரியா செய்யணும்ல. சும்மா வெச்சுக்கோங்கண்ணே...’ என்று பாசமாய் பேசி பணக் கவரைத் திணித்துவிட்டே போகிறார்கள்!

2. மதுரை மத்தி: மேற்கு தொகுதியைப்போலவே இங்கும் பட்டுவாடா டீம் பக்கா. அபார்ட்மென்ட்கள், வசதியான குடியிருப்புகளைக் கவனிப்பதற்காக வக்கீல்கள் தலைமையில் 'கவர் டீம்’ போட்டு இருக்கிறார்கள். மற்ற இடங்களில் பெரியம்மாக்கள், பாட்டிகள் மூலம் சப்ளை நடக்கிறது. வாங்க மறுக்கும் வீடுகளிலும் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகிறது!

3. மதுரை வடக்கு: இந்தத் தொகுதியில் இடத்துக்கு ஏற்ப ஓட்டுக்கு 100 முதல் 1,000 வரை அனல் பறக்கிறது. நிலைமை இழுபறியாகலாம் என்று வந்த தகவலைத் தொடர்ந்து, இங்கு பணம் இப்போது தாறுமாறாய்ப் பாய்கிறது!

4. மேலூர்: இங்கே நிலைமை உல்டா. வேட்பாளர் வேகமாக முன்னேறுகிறார் என்றதுமே, ஓட்டுக்குக் கொடுத்த பணத்தை கட்சி நிர்வாகிகள் பலரும் பதுக்கிவிட்டார்கள். கடைசி நேரம் என்பதால், இப்போது கட்சிப் பாகுபாடு இல்லாமல் 200 முதல் 500 வரை சப்ளை ஆகிறது!

5. திருப்பத்தூர்: எல்லா தரப்பும் பணம் கொடுக்கிறது. ஓட்டுக்கு 500 வீதம் ஊர் முக்கியஸ்தர்கள் மூலமாகப் பணம் போய்ச் சேர்ந்துவிட்டது. இது தவிர, கிராமப்புறங்களில் கோயில் கட்டுவது உள்ளிட்ட காரியங்களுக்காகக் கணிசமான தொகையும் இறங்கி உள்ளது.

6. மானாமதுரை: ஓட்டுக்கு 200 என்ற கணக்கில் 80 ஆயிரம் பேருக்கு கவர்கள் போய்விட்டதாகப் பேச்சு. இதில் இடையில் சில ஆட்கள் சுருட்டியதும் நடந்து இருக்​கிறது.

7. சங்ககிரி: சுற்றி உள்ள கிராமங்களில் 500 வரை கைகளில் திணிக்கப்பட்டு இருக்கிறது. கட்சி நிர்வாகிகளும் பசையோடு நடமாடுகிறார்கள்.

8. மேட்டூர்: ஓட்டுக்கு 500 என்று பட்டுவாடாவைத் தொடங்கிவிட்டனர்.



9. வேலூர்: எப்போதும்போல இல்லாமல் இந்த முறை வைட்டமின் 'ப’-வுடன் பலரும் திரிகிறார்கள். வேண்டியவர்கள் மூலம் நபருக்கு 300 வீதம் வழங்கப்படுகிறது. பணத்தைக் கொடுத்து விட்டு ஒருவர் எந்த சின்னத்துக்கு வாக்களிக்கணும் என்று சொல்ல உடன் வந்தவர்கள் அந்த ஆளை அடித்து திருத்தி இருக்கிறார்கள்.

10. காட்பாடி: கடுமையான போட்டி காரணமாக திடுமெனப் பணம் இறைக்கத் தொடங்கிவிட்டார்கள். நபருக்கு 300 முதல் 700 வரை போணி ஆகிறதாம். அடுத்த தரப்பிலும் இறங்கிவிட்டார்கள். 300 முதல் 500 வரை பட்டுவாடா ஆகிறதாம்!

11. கீழ்வைத்தியணான் குப்பம்: 300 தாராளமாகக் கையில் விளையாடுகிறது!

12. சோளிங்கர்: கட்சி வேட்பாளரை விட சுயேச்சை ஒருவர்தான் பணத்தை வாரி இறைத்து வருகிறார்.

13. திருச்சி மேற்கு: பவர் கட்டாகும் சமயத்தில் படபடவெனப் பண விநியோகம் நடக்கிறதாம். சில நேரத்தில், 'இந்த இடத்தில் பணம் கொடுக்கிறார்கள்... அந்த இடத்தில் பணம் கொடுக்கிறார்கள்’ என்று அதிகாரிகளுக்குத் தகவல் பறக்கிறது. அதிகாரிகள் அங்கு சோதனைக்கு செல்லும் நேரத்தில், வேறு ஒரு இடத்தில் கமுக்கமாக விநியோகம் நடக்கிறதாம். கொடுக்கப்படும் பணம் 500!



14. ஸ்ரீரங்கம் : 'பணம் கொடுத்தாலும், பணம் பெற்றாலும் கைது செய்யப்படுவார்கள்’ என்ற தேர்தல் கமிஷனின் விதி இங்குதான் அமலானது. பணம் கொடுத்தவர்களில் பிரதானமானவர் தி.மு.க. வேட்பாளர் ஆனந்தின் மாமனார் ஆண்டிமணி. இவர் கைதுக்குப் பிறகு, தீப்பெட்டியில் உள்ள குச்சிகளை எடுத்துவிட்டு, அதில் 500 வைத்துக் கொடுக்கிறார்களாம். இன்னும் சில இடங்களில் பால் பாயின்ட் பேனாவில் பணத்தை சுருட்டிவைத்துத் தருகிறார்களாம்!

15. லால்குடி: அதிகாலையில் நியூஸ் பேப்பரைப்போல சரசரவென வேஷ்டி, சேலைகள் சப்ளை ஆகின்றன. அந்தத் துணியைப் பிரித்துப் பார்த்ததும், கூடுதல் உற்சாகம் அடைகிறார்கள். காரணம் செல்லோ டேப் வைத்து துணிக்குள் ஒட்டிருக்கும் 500 நோட்டு!

16. நாகப்பட்டினம்: பண விநியோகப் பொறுப்பு தெருவில் ஒருவருக்கு என்று பிரித்துக் கொடுக்கப்பட்டு உள்ளது. சில நோட்டுகளை மட்டுமே பாக்கெட்டில் வைத்திருப்பார். தெருவில் இருப்பவர்கள் வெளியே கிளம்பினால், அவரிடம் பேச்சுக் கொடுத்தபடியே பாக்கெட்டுக்குப் பணத்தை மாற்றிவிடுவார்!

17. பாப்பிரெட்டிப்பட்டி: 200 முதல் 500 வரை பரவலாக பட்டுவாடா நடக்கிறது!

18. தளி: பலமான கூட்டணி என்றாலும் நூலிழையில் சறுக்கிவிடக் கூடாது என்று பயம். அதனால், கையில் எடுத்திருக்கும் ஆயுதம், பணம்!

19. திருவாரூர்: 500 விநியோகம் அமோகமாய் நடக்கிறது. கட்சியின் அடிமட்டக் கிளை செயலாளர்கள் வரை பணம் கொடுக்கப்பட்டுவிட்டது. தேர்தல் ஆணையம் கெடுபிடி செய்தாலும், காவல் துறை கண்டுகொள்ளவே இல்லை!

20. நன்னிலம்: ஆளும் கட்சிக்காரர்களுக்கு 500. எதிர்க் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு 1000 அள்ளித் தருகின்றனர். அதனால், ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள்கூட, தங்களை எதிர்க் கட்சி என்றே சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள்!

21. கும்பகோணம்: இங்கே முதல் கட்ட விநியோகமே 1,000 என்று தொடங்கிவிட்டார்கள். 'ப’ தவிர வேறு எதுவும் கை கொடுக்காது என்பதில் தெளிவாக இருப்பதால், குடும்பம் ஒன்றுக்கு 5,000 கடைசிக் கட்டத்தில் கொடுக்கிறார்கள்!

22. பேராவூரணி: கிளை ஒன்றுக்கு 10,000 மட்டுமே கொடுக்கப்படது. இதை எப்படி வாக்காளர்களுக்குக் கொண்டுபோய் சேர்ப்பது என விழிக்கிறார்கள்!

23. அரவக்குறிச்சி: தொகுதி முழுக்க பணம் விளையாடுகிறது. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கிறது.

24. விழுப்புரம்: 500 தொடங்கி 1,000 வரை அள்ளிவிடப்படுகிறது!



25. திருவண்ணாமலை: முதல் ரவுண்டிலேயே 500 கொடுத்து குளிப்பாட்டிவிட்டனர். இரண்டாவது சுற்று ஆரம்பம்!

26. அந்தியூர் : கூடுதல் வாக்குகள் வைத்திருக்கும் ரேஷன் கார்டுகளைத் தேர்ந்தெடுத்து, வீட்டுக்கு ஒரு கூப்பன் கொடுக்கப்பட்டு உள்ளது. அந்த கூப்பனைக் கொடுத்து ஒரு டி.வி.எஸ். சூப்பர் எக்ஸ்.எல். வண்டி வாங்கிக்கொள்ளலாமாம். 'இதுக்குப் பிறகும் ஓட்டை மாத்தியா போடப் போறாங்க..?!’ என்பது நினைப்பு!

27. மடத்துக்குளம்: 500 தொடங்கி 1,000 வரை கொடுப்பதுடன, சில பல வீடுகளுக்கு மிக்ஸியும்.

28. கன்னியாகுமரி: படு வேகத்தில் பணப்பட்டுவாடா முடிக்கப்பட்டது. தினமும் இரவு நேரத்தில் அரை மணி நேரம் மின்சாரத்தை நிறுத்தி, அந்தந்தப் பகுதி முக்கியஸ்தர்களிடம் பணத்தை ஒப்படைத்துவிட்டார்கள். மறுநாள் காலையில் செவ்வனே சேரவேண்டிய இடங்களுக்கு சென்று சேர்கிறது!

29. ஆத்தூர் : தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னரே தொகுதிக்குள் இருக்கும் நம்பிக்கையானவர்கள் வீடுகளில் பணத்தைப் பதுக்கிவிட்டனர். வீடு வீடாக 500 முதல் 3,000 வரை கொடுத்து முடித்துவிட்டனர். கரை வேட்டி கட்டாத நபர் நிதானமாக வீடு வீடாகப் போய்ப் பட்டுவாடா செய்கிறார்!

30. தூத்துக்குடி: பணத்தை வெளியில் எடுத்துச் செல்ல முடியவில்லை என்பதால், டோக்கன் முறையைக் கையாளுகிறார்கள்.

31. திருச்செந்தூர்: தொகுதியில் கட்சி நிர்வாகிகள் மூலம் சில்லரை சில்லரையாக ஆனால், சரியாக பணம் வாக்காளர்களை சென்றடைகிறது!

32. ஸ்ரீவைகுண்டம்: 'பணம் கொடுக்கிறாங்க’ என்று திடீர் திடீரென வதந்திகள் பரவி மக்கள் ஆளாய் பறக்கிறார்கள்.

33. ஓட்டப்பிடாரம்: பணம் இறைப்பார்கள் என்று மக்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்க, ஆங்காங்கே கோயில் பிரசாதம்போல குறைந்த அளவாக மட்டும் பட்டுவாடா நடக்​கிறது!

34. அருப்புக்கோட்டை: தேர்தல் அறிவிப்பதற்கு சில மாதம் முன்பே, பிள்ளையார் சுழி போடப்பட்டது. அடுத்த கட்டமாக, டோக்கன் மூலம் 500 விநியோகம் நடைபெற்றது. வீட்டுக்கு ஒரு கூப்பன் வழங்குகிறார்கள். அந்த கூப்பனுக்கு 3,000 மதிப்புள்ள அன்பளிப்பு வழங்கப்படும் என்று உத்தரவாதம் வழங்கப்படுகிறது!

35. திருச்சுழி: ஓட்டுக்கு 500 என்று கட்சி வித்தியாசம் பார்க்காமல் தொகுதி முழுவதும் செலவழிக்கிறார்கள். யாரா இருந்தாலும்... காசு!

36. விருதுநகர்: கூட்டணி பலத்தை நம்பாமல், ஓட்டுக்கு 200 முதல் 500 வரை கொடுத்து மக்களை அமுக்குகிறார்கள்!

37. பெரம்பலூர் : வாக்காளர்களின் செல்போனுக்கு டாப்- அப் பண்ணிக் கொடுப்பது, இலவசமாக சிலிண்டர் சப்ளை செய்வது என பெண்களைக் கவர்கிறார்கள்!

38. ஜெயங்கொண்டம்: வார்டு பொறுப்பாளர்கள் மூலமாக இரவோடு இரவாக ஓட்டுக்கு 200 வீதம் அள்ளி வீசி அனைவரையும் கவர் செய்துவிட்டார்கள்!

39. போடி: சிட்டிங் எம்.எல்.ஏ லட்சுமணனின் அண்ணி பரிமளாவைப் பணம் கொடுத்ததாக போலீஸார் கைது செய்த பின்னரும் பட்டுவாடா நடக்கத்தான் செய்கிறது. அந்தப் பக்கம், ஓட்டுக்கு 1,000 என விநியோகம் நடக்கத் தொடங்க, அசந்து நிற்கிறார்கள் மக்கள்!

40. ராதாகிருஷ்ணன் நகர்: சுய உதவிக் குழுக்களுக்கு ஆளும் கட்சிப் பணம் விநியோகம் செய்வதாக செய்திகள் கிளம்ப... பறக்கும் படை காரை வளைத்துப் பிடித்தது. காரில் இருந்த 50,000 பணமும், எந்தெந்த சுய உதவிக் குழுக்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்பட்டது என்கிற விவரம் எழுதப்பட்ட காகிதக் கட்டும் கைப்பற்றப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து நடக்கிறது பண விநியோகம்!

41. கொளத்தூர்: கடந்த ஒரு வாரமாகவே வார்டு வாரியாக இரவு 9 மணிக்கு மேல் கரன்ட் கட் ஆகிப் பண விநியோகம் வெள்ளமாகப் பாய்ந்தது. ''நம்ம ஏரியாவுக்கு எப்ப கரன்ட் கட் பண்ணுவீங்க?'' என்று கேட்கும் அளவுக்கு மக்களைத் தயார்ப்படுத்தி இருந்தனர். ஏரியாவில் பேப்பர் போடும் ஆட்களை எல்லாம் ஒரு இடத்தில் அழைத்து மீட்டிங் போட்டு இருக்கிறார்கள். பேப்பரில் பணம் விழவும் வாய்ப்பு இருக்கிறது!

42. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி: முஸ்லிம்கள் ஓட்டுகள் அதிகம் என்பதால், அவர்களைக் குறிவைத்து பணம் விநியோகம் நடக்க ஆரம்பித்தது. கவுன்சிலர் தலைமையிலான குழுதான் பணத்தை விநியோகம் செய்கிறது!

43. மயிலாப்பூர் : எப்படியும் வெல்ல வேண்டும் என்று... பண விநியோகம் ஏரியாவில் பாய்கிறது. காங்கிரஸின் போட்டி வேட்பாளர் மட்டும் இதைக் கண்டு பிடித்துச் சொல்கிறார்!

44. விருகம்பாக்கம்.: குடிசை வாழ் மக்களில் யாராவது 2,000 ரூபாய்க்குள் தாலி, தோடு, மூக்குத்தி, வளையல் என்று எதையாவது மார்வாடிக் கடையில் அடகு வைத்திருந்தால், வீடுகளுக்கு வந்து அந்த ரசீதை கேட்டு வாங்கிப் போகிறார்கள். மார்வாடிக் கடையில் பணத்தை செட்டில் செய்துவிட்டு, 'இன்னார் வருவார்... அவரிடம் நகையை கொடுத்துவிடவும்' என்று சொல்லிப்போகிறார்கள்!

45. திருவள்ளூர்: கூரியர் கம்பெனி மூலம் தபால் வரும் பாணியில் பணம் பட்டுவாடா நடக்கிறது. சென்னையில் இருந்து மின்சார ரயிலில் பணம் திருவள்ளூர் ரயில் நிலையத்துக்கு பார்சல் வருகிறது. அதை எடுத்துச் செல்லும் பைக் ஆசாமிகள், கூரியர் தபால் பைகளை அள்ளிக்கொண்டு பறக்கிறார்கள். 1,000 வீதம் வீடுகளுக்கு கவர் விநியோகம் நடக்கிறது!

46. அம்பத்தூர்: நள்ளிரவில் வீட்டுக் கதவு தட்டப்படுகிறது. கதவைத் திறந்தால், குறிப்பிட்ட மத ஸ்தலத்துக்கு பெண்களை அழைக்கிறார்கள். ஆண்கள் போகலாம். ஆனால், வாசலில் நிற்க வேண்டும். பெண்களிடம் கவர்கள் தரப்படுகின்றன. தலைக்கு 1,000 வீதம் வீட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கைக்குத் தகுந்த மாதிரி பணம் கவரில் இருக்கிறது. பெண்கள் இல்லாத வீடுகளில், ஆண்களின் வங்கிக் கணக்குக்குப் பணம் மாறுகிறது!

47. திருவொற்றியூர்': டோல்கேட் அருகே மீனவக் குப்பத்து மக்களிடம் பைக்கில் வந்த இளைஞர் ஒருவர் பணம் விநியோகம் செய்ய... தகவல் போய் தேர்தல் கமிஷனின் பறக்கும் படை வந்தது. உடனே அந்த இளைஞர் 21,000 மட்டும் தெருவோரம் வீசிவிட்டு, பைக்கில் தப்பினார். ஹவாலா ஸ்டைலிலும் பணம் கை மாறுகிறது. சிறு துண்டு பேப்பரில் அம்புக் குறி வரையப்பட்டு இருக்கும். அந்த பேப்பரை குறிப்பிட்ட வீட்டில் போய்க் கொடுத்தால், 1,000 தருகிறார்கள்!

48. கும்மிடிப்பூண்டி : வினோதமான முறையில் இங்கு பணப் பட்டுவாடா நடக்கிறது. கார்கோ ஜீன்ஸில் இடுப்பில் இருந்து கால் வரை உள்ள பகுதிகளில் நிறைய பாக்கெட்டுகள் இருக்கும். அந்த பாக்கெட்டுகள் முழுவதும் கரன்ஸிகள். எங்கே பணம் தேவை என்று செல்போன் அடிக்கிறார்களோ, உடனே அந்த படை ஸ்பாட்டில் ஆஜராக... பணம் கைமாறுகிறது.

49. ஆலந்தூர்: இங்கே 500 நோட்டுகளை அமர்க்களமாக விநியோகம் செய்கிறார்கள். கையும் களவுமாக சிலர் பிடிபட்டு இருந்தாலும், பணப்பட்​டுவாடா தொடர்கிறது.

50. மதுரவாயல்: ஒரு ஓட்டுக்கு 200, இரண்டு ஓட்டுக்கு 500 மூன்று ஓட்டுக்கு 1,000 நான்கு ஓட்டுகளுக்கு மேல் போனால் 2,000 என கொடுக்கிறார்கள். சினிமா தியேட்டர் போன்ற பொது இடங்களில் விநியோகம் அமோக​மாக நடக்கிறது.

vikatan



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Apr 13, 2011 11:20 am

நூதனக் கொடுக்கல் (பணம்) வாங்கல் (ஓட்டு)....
வாக்காளர்களின் மனம் பண்பட்டாலன்றி இந்நிலையை மாற்ற முடியாது... கடைசிக் கட்ட தில்லாலங்கடி-கரன்சி மழை 440806



கடைசிக் கட்ட தில்லாலங்கடி-கரன்சி மழை Aகடைசிக் கட்ட தில்லாலங்கடி-கரன்சி மழை Aகடைசிக் கட்ட தில்லாலங்கடி-கரன்சி மழை Tகடைசிக் கட்ட தில்லாலங்கடி-கரன்சி மழை Hகடைசிக் கட்ட தில்லாலங்கடி-கரன்சி மழை Iகடைசிக் கட்ட தில்லாலங்கடி-கரன்சி மழை Rகடைசிக் கட்ட தில்லாலங்கடி-கரன்சி மழை Aகடைசிக் கட்ட தில்லாலங்கடி-கரன்சி மழை Empty
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Apr 13, 2011 12:21 pm

மக்கள் மாறும் வரை அவர்களும் மாறாமட்டர்கள்! என்ன கொடுமை சார் இது

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Apr 13, 2011 2:47 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Apr 13, 2011 3:07 pm

எங்கள் தொகுதி (பூம்புகார்) அ.தி.மு. க வரும் என்று சொல்கிறார்கள்.
எனினும் திமுக வினர் ஓட்டுக்கு 100 ,200 வரை கொடுத்துள்ளார்கள் மாம்பழம் சின்னத்திற்கு!
எங்கள் பக்கத்து தெரிவில் பணம் ஜரூராக விநியோகம் செய்துள்ளார்கள்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Wed Apr 13, 2011 3:16 pm

ரபிக் உங்களுக்கு சோளிங்கர் பற்றி எப்படி தெரியும்?



யாதும் ஊரே யாவரும் கேளிர்
mkag.khan
mkag.khan
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 06/12/2009
http://www.aranthaiweb.blogspot.com

Postmkag.khan Wed Apr 13, 2011 7:23 pm

ஒரு லட்சத்து எழுபத்தாரயிரம் கோடி நம்பர் சீரிஸ் ல எழுத டைம் ஆகும்



-தோழமையுடன்
அறந்தை
கான் அப்துல் கபார் கான்
http://www.aranthaiweb.blogspot.com/
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 14, 2011 8:03 am

கார்த்திநடராஜன் wrote:ரபிக் உங்களுக்கு சோளிங்கர் பற்றி எப்படி தெரியும்?

சோளிங்கரில் இருந்து ரஃபீக்குக்கு சாட்டிலைட் தொடர்பு உண்டு நண்பரே..

ரஃபீக் யாரு தெரியுமா...? உலகத்தில் இருக்கும் எல்லா செய்திகளும் அவரிடம் வந்து தான் வெளி உலகத்துக்கே வெளியாகும்..




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
Guest
Guest

PostGuest Thu Apr 14, 2011 10:13 am

சிரி எங்கள் ஊரில் 200 ...நான் வாங்கள... ////

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக