Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரத்தன் டாடா : கண்டுபிடிக்க முடியவில்லை!
4 posters
Page 1 of 1
ரத்தன் டாடா : கண்டுபிடிக்க முடியவில்லை!
டாடா குழுமத்தின் தலைமைப் பதவிக்கு ரத்தன் டாடாவுக்கு பதிலாக வேறொருவரைக் கண்டுபிடிக்க தங்களால் முடியவில்லை என இதற்காக அமைக்கப்பட்ட கமிட்டி அறிவித்துள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தகக் குழுமமான டாடா சன்ஸின் வெற்றிகரமான தலைவராக உள்ளார் ரத்தன் டாடா.
71 பில்லியன் டாலர் வர்த்தக சாம்ராஜ்யமாக இன்று டாடா வளர்ந்திருப்பதற்கு ரத்தன் டாடாதான் முக்கிய காரணம். இன்னும் இரு ஆண்டுகளில் தனது தலைமைப் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ள ரத்தன் டாடா முடிவு செய்துள்ளார். தனது 75 வயதில் ஓய்வு பெற விரும்புவதாக அவர் அறிவித்திருந்தார். எனவே தனது இடத்துக்கு பொருத்தமான நபரைக் கண்டுபிடிக்க ஒரு நிபுணர் குழுவை அமைத்தார் டாடா.
5 உறுப்பினர்கள் அடங்கிய இந்தக் குழு கடந்த எட்டு மாதங்களாக பல்வேறு நபர்களிடம் நேர்காணல் நடத்திப் பார்த்தது. ஆனால் அவர்களால் டாடாவுக்கு மாற்றாக யாரையும் தேர்வு செய்ய முடியவில்லை.
இதுகுறித்து பேட்டியளித்துள்ள குழுவின் உறுப்பினரும் டாடா சன்ஸின் இயக்குநருமான ஆர் கே கிருஷ்ணகுமார், "டாடாவின் இடத்தில் வேறொருவரை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. அவருக்கு நிகரான ஒரு தலைவரை எங்களால் கண்டுபிடிக்கவும் இயலவில்லை.
ரத்தன் டாடா பிறவியிலேயே ஒரு தலைவருக்குரிய அத்தனை அம்சங்களுடனும் பிறந்தவர். சிறந்த ஆராய்ச்சியாளர். இதனை அவர் எந்த விஷயத்தைச் செய்யும் போதும் கவனித்தால் புரியும். சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்தியாவில் அவரது பங்களிப்பு மகத்தானது. நிறுவனத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பொருத்தமான நபர்களை தேர்வு செய்ய முயன்று வருகிறோம். ஆனால் மிக சவாலான காரியம் இது. எந்த அளவு வெற்றி கிட்டும் என்று தெரியவில்லை. ஆனால் எப்படியும் இந்த விஷயத்தில் ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டியுள்ளது," என்று கூறியுள்ளார்.
உலகின் குறைந்த விலைக் காரான டாடா நானோவை உருவாக்கி மார்க்கெட்டில் அறிமுகப்படுத்திய பெருமை ரத்தன் டாடாவுக்கே உண்டு. டச்சு ஸ்டீல் நிறுவனமான கோரஸை வாங்கி டாடா ஸ்டீலுடன் இணைத்த பெருமையும் டாடாவுக்கே. அதேபோல இவரது காலத்தில்தான் பிரிட்டனின் பெருமைக்குரிய ஜாகுவர் மற்றும் லேண்ட் ரோவர் நிறுவனத்தை டாடா மோட்டார்ஸ் வாங்கியது.
ஆனால் டாடாவின் இத்தனை பெருமையும் ஒரு விஷயத்தில் சற்றே அடிவாங்கிவிட்டது என்பதும் உண்மையே. அது நீரா ராடியாவால் வந்த வம்பு. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஓதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் விஷயத்தில் பாராளுமன்ற பொதுக்கணக்குக் குழு முன் அவர் சமீபத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தது நினைவிருக்கலாம்.
நன்றி
TMT

Last edited by கார்த்திநடராஜன் on Thu Apr 21, 2011 10:49 am; edited 1 time in total
யாதும் ஊரே யாவரும் கேளிர்
கார்த்திநடராஜன்- இளையநிலா
- பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011
Re: ரத்தன் டாடா : கண்டுபிடிக்க முடியவில்லை!
டாடா பிறந்ததுமே இத்தனை திறமையும் சேர்ந்தே பிறந்ததா என்ன..? அனுபவம் தானே அவரை உயர்த்தியது... அதைப்போல அவர் இடத்தில் அவருக்கு அடுத்த படியாக பொறுப்பில் இருப்பவரை நியமித்தால் அவராலும் நிர்வகிக்க முடியும் தானே...?
அதைவிடுத்து இந்த கமிட்டி சொல்வதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான்...
நமக்கென்ன... இது அவர் குடும்ப விஷயம்..
கலைஞர் தனக்குப்பிறகு தமிழ்நாட்டை கொள்ளை அடிக்க ஒரு வாரிசை நியமித்தது போல ஒரு வாரிசை தனக்குப்பிறகு உருவாக்காத டாடா எப்படி சிறந்த நிர்வாகி ஆவார்...?

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: ரத்தன் டாடா : கண்டுபிடிக்க முடியவில்லை!
நண்பர் கலை அவர்களே,ஒரு சந்தேகம்?ஜெயலலிதாவின் வாரிசு யாரு ?
அப்துல்- தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
Re: ரத்தன் டாடா : கண்டுபிடிக்க முடியவில்லை!
!!!!!!டாட்டா !!!!!!
சற்று பின் நோக்கி பார்ப்போம்.
உருவாக்கியது ஜாம் ஜெட்ஜி நுச்னிவர் டாட்டா .
டாட்டா நிறுவனத்தின் தாரக மந்திரம் திறமை. அது இருந்தால் நீங்களும் டாட்டா அளவுக்கு உயரலாம்.
டாட்டா பணக்கார குடும்பத்தில் பிறந்தாலும் சிக்கனம் மற்றும் உழைத்து அதில் கிடைக்கும் பணத்தில் மட்டுமே செலவு செய்வார்.
வெளிநாட்டில் கல்வி கற்றுக்கொண்டு அங்கேயே ஹோடேலில் வேலை செய்து இருக்கிறார்.சுருக்கமாக தட்டு கூட கழுவி இருக்கிறார்.
ஒரு வேலையை கையில் எடுத்தால் வெற்றி அடையும் வரை ஓய மாட்டார்.
அதனால் தான் பல சீனியர்கள் இருந்தும் தலைமை பொறுப்புக்கு வர முடிந்தது.
அவர் காலத்தில் தான் கார் மார்க்கெட் புத்துணர்வு ஏற்பட்டது.
டாட்டா நானோ பட்ட கஷ்டங்கள் நாம் எல்லோரும் அறிவோம்.நாமாக இருந்தால் என்ன செய்து இருப்போம். யோசித்து பாருங்கள் "விடா முயற்சி விஸ்வருப வெற்றி"இவரை பொறுத்தவரை சாலப் பொருந்தும்.
இவர் இடத்தை நிரப்புவது கஷ்டமே.
வாரிசு பிரச்னை இங்கு இல்லை. ஏன் எனில் இவர் கட்டை பிரம்மச்சாரி.

positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Similar topics
» தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்
» டாடா நிறுவன தலைவர் பதவியிலிருந்து ரதன் டாடா விலகுகிறார்
» பிசினஸ் கிங் ரத்தன் டாடா திருமணம் செய்யாதது ஏன்?
» உலகில் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் சோனியா, ரத்தன் டாடா
» ரத்தன் டாடா, ரஹ்மான், அமிதாப், சுனில் மிட்டல், டெண்டுல்கருக்கு ஆசிய விருது!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|