புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்  I_vote_lcapகுடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்  I_voting_barகுடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்  I_vote_rcap 
21 Posts - 70%
heezulia
குடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்  I_vote_lcapகுடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்  I_voting_barகுடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்  I_vote_rcap 
6 Posts - 20%
mohamed nizamudeen
குடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்  I_vote_lcapகுடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்  I_voting_barகுடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்  I_vote_rcap 
1 Post - 3%
வேல்முருகன் காசி
குடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்  I_vote_lcapகுடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்  I_voting_barகுடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்  I_vote_rcap 
1 Post - 3%
viyasan
குடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்  I_vote_lcapகுடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்  I_voting_barகுடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்  I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்  I_vote_lcapகுடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்  I_voting_barகுடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்  I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
குடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்  I_vote_lcapகுடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்  I_voting_barகுடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்  I_vote_rcap 
203 Posts - 40%
mohamed nizamudeen
குடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்  I_vote_lcapகுடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்  I_voting_barகுடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்  I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
குடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்  I_vote_lcapகுடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்  I_voting_barகுடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்  I_vote_rcap 
21 Posts - 4%
prajai
குடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்  I_vote_lcapகுடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்  I_voting_barகுடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்  I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
குடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்  I_vote_lcapகுடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்  I_voting_barகுடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்  I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
குடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்  I_vote_lcapகுடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்  I_voting_barகுடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்  I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
குடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்  I_vote_lcapகுடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்  I_voting_barகுடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்  I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
குடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்  I_vote_lcapகுடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்  I_voting_barகுடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்  I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
குடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்  I_vote_lcapகுடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்  I_voting_barகுடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்  I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்


   
   
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Tue Apr 12, 2011 2:57 pm


(கே.சஞ்சயன்)

இலங்கையில் போர் முடிவுக்கு வந்து இரண்டு ஆண்டுகளாகப் போகின்ற நிலையில் - போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனிதஉரிமை மீறல்கள் பெரும் நெருக்கடியாக உருவெடுத்துள்ளது.

ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த நிபுணர்கள் குழுவின் அறிக்கை எந்தநேரமும் வெளியாகலாம் என்ற நிலையே தற்போதுள்ளது.

நிபுணர்கள் குழுவின் அறிக்கை வெளியாக முன்னரே, அது இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுக்கும் ஒன்றாகத் தான் இருக்கும் என்று, பலர் கருதுகின்றனர்.

மேற்குலக நாட்டு இராஜதந்திரிகள் இந்த அறிக்கை இலங்கைக்கு கடுமையானதொன்றாக அமையலாம் என்றே கருதுகின்றனர். அத்துடன் அரசாங்கத் தரப்பும் இது சாதகமற்றதாக அமையும் என்றே கருதுகிறது.

சித்திரைப் புத்தாண்டுக் காலத்தில் வெளிவரப் போகும் இந்த அறிக்கை இலங்கை தொடர்பான ஒரு பெரும் புயலைக் கிளப்பி விட்டாலும் ஆச்சரியம் இல்லை.

ஐ.நா நிபுணர்கள் குழுவின் அறிக்கை வெளிவர முன்னரே, அது சர்வதேச விசாரணைக்கு பரிந்துரை செய்யும் வகையில் அமைந்திருக்கும் என்ற ஊகத்தை ஏற்படுத்தியுள்ளது. போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் பற்றிய ஆதாரங்களை அதிகளவில் ஐ.நா நிபுணர்கள் குழு சேகரித்துள்ளதாக கருதப்படுவதால் தான் இந்தக் கருத்து வலுப்பெற்றுள்ளது.

அதேவேளை, இந்த நிபுணர்கள் குழுவின் அறிக்கை வெளியான பின்னர் அது அரசுக்கு சாதகமற்ற முறையில் இருந்தால்- இலங்கை அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி உள்ளது.

கடந்த வருடம் இந்த நிபுணர்கள் குழு அமைக்கப்பட்ட போது அதை நிராகரித்த அரசாங்கம், நிபுணர்கள் குழு இலங்கைக்கு வந்து விசாரணை நடத்தவும் முடியாது, அவர்களுடன் எந்தத் தொடர்பும் வைக்கவும் மாட்டோம் என்றும் கூறியது. பின்னர் , ஏதோ ஒரு மாற்றமாக. வேண்டுமானால் இங்கு வந்து நல்லிணக்க ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்து விட்டுப் போகலாம் என்று கூறியது.

அரசாங்கம் இறுக்கமான பிடிவாதங்களைக் கடைப்பிடித்தாலும் கூட, உள்ளுக்குள் ஒருவித உதறல் அதற்கு இருந்து கொண்டு தான் இருந்தது. அதனால் தான் நியுயோர்க்கிற்கு அரசின் பிரதிநிதிகளை அனுப்பி நிபுணர்கள் குழுவை சந்திக்க வைத்தது.

இந்தச் சந்திப்பு பற்றி தகவல்கள் ஊடகங்களில் வெளியானபோது அதுபற்றிப் பேசாமல் இருந்தது அரசாங்கம். ஆனால் கடந்தவாரம் லண்டனில் செய்தியாளர்களிடம் பேசிய வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், முதல் முறையாக இந்தச் சந்திப்பு நடந்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.இதுவரை மறைத்து வைத்திருந்த உண்மையை அவர் இப்போது தான் போட்டு உடைத்துள்ளார்.

இதிலிருந்து அரசாங்கம் முன்னர் கூறிய இறுக்கமான நிலைப்பாட்டில் தொடர்ந்தும் இருக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.தமது அமைச்சின் அதிகாரிகள் ஐ.நா நிபுணர்கள் குழுவை சந்தித்துப் பேசியதாக கூறியுள்ள அமைச்சர் பீரிஸ், அவர்கள் எதற்காக சந்தித்தார்கள், என்ன பேசினார்கள் என்ற விபரங்களை வெளியிடவில்லை. ஆனால் இந்தச் சந்திப்பானது,இலங்கை அரசாங்கத்தின் பதற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது என்பது மட்டும் உண்மை.

ஐ.நா நிபுணர்கள் குழுவின் அறிக்கை அரசுக்குப் பாதகமான முறையில் வந்துவிடக் கூடாது என்ற அடிப்படையில் தான் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது என்பதை அணுமாணிக்க கூடியதாக உள்ளது.

அதேவேளை, ஜனாதிபதி தொடக்கம் அமைச்சர்கள் வரை எல்லோருமே இந்த நிபுணர்கள் குழு அரச மற்றும் இராணுவ அதிகாரிகளைக் குற்றம் சுமத்தலாம் என்ற கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

இதனால் இந்த அறிக்கையை அரசாங்கம் மிகுந்த அச்சத்தோடு தான் எதிர்பார்த்துள்ளது. ஆனால் அதைப் பெரும்பாலும் வெளிக்காட்டிக் கொள்வதையும் தவிர்க்கிறது.

நிபுணர்கள் குழுவின் அறிக்கை வெளியான பின்னர் அதற்கெதிரான போராட்டங்கள் தீவிரமடையலாம். ஏற்கனவே நிபுணர்கள் குழு அமைக்கப்பட்ட போதும் உண்ணாவிரதம், பேரணி என்று பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதைவிடத் தீவிரமான போராட்டங்கள் நடத்தி அரசுக்கான மக்களின் ஆதரவை வெளிப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

ஆனால், இத்தகைய போராட்டங்களின் மூலம் ஐ.நாவின் நடவடிக்கைகளைத் தடுத்து விட முடியுமா என்பது தான் கேள்வியாக உள்ளது.

இலங்கை அரசாங்கம் எத்தனை எதிர்ப்பை வெளிப்படுத்திய போதும், ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நிபுணர்கள் குழுவை அமைத்து விசாரணை நடத்தும் முடிவைக் கைவிட்டுப் பின்வாங்கவில்லை. அவ்வப்போது அவர் மென்போக்குடன் நடந்து கொண்டாலும் கூட, அவர் தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. அவரது முடிவை மாற்றுவதற்கு அரசாங்கம் எடுத்த முயற்சிகளும் வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில் நிபுணர்கள் குழுவின் அறிக்கை கையளிக்கப்பட்ட பின்னர் அது இலங்கைக்கு எதிரான பாரிய நெருக்கடிகளைத் தோற்றுவிக்கலாம் என்றே கருதப்படுகிறது. அதேவேளை, இந்த அறிக்கை கையளிக்கப்பட்டதும் அதை பான் கீ மூன் வெளிப்படுத்துவாரா, இல்லையா என்ற கேள்வி இப்போது முதன்மை பெற்றுள்ளது.

அவர் அதை வெளிப்படுத்தலாம், அல்லது அறிக்கை ஒன்றின் மூலம் அதன் முக்கிய பரிந்துரைகளை வெளிப்படுத்தலாம் என்கிறது ஒரு தரப்பு. இன்னொரு தரப்பு அந்தப் பரிந்துரைகளை நிபுணர்கள் குழுவைக் கொண்டே செய்தியாளர் சந்திப்பில் வெளிப்படுத்தலாம் என்கிறது. அதேவேளை, இந்த அறிக்கை மீதான நடவடிக்கை ஆரம்பிக்கும் வரை அவர் வெளிப்படுத்த மாட்டார் என்கிறது வேறொரு தரப்பு. இப்படியாக பல்வேறு ஊகங்கள் வெளியிடப்பட்டு வந்தாலும் இறுதி முடிவு என்பது பான் கீ மூனின் கையில் தான் உள்ளது.

ஆனால், அவர் இந்த அறிக்கை மீது எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியாது. அதற்கான அதிகாரங்கள் ஏதும் அவரிடம் இல்லை. ஒன்றில் ஐ.நா. பாதுகாப்புச்சபை ஊடாக எதையாவது செய்ய வேண்டும் அல்லது ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் ஊடாக செய்ய வேண்டும்.

இந்த அறிக்கையை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் ஜுன் மாத அமர்வில் பான் கீ மூன் சமர்ப்பிக்கலாம் என்றும் அதன் பின்னர் பாதுகாப்புச் சபையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படலாம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

இதைச் செய்யாமல் பான் கீ மூன் வேறு எதையும் செய்ய முடியாது. அப்படிச் செய்யாது போனால், இந்த நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். எனவே மேல் நடவடிக்கை என்பது நிச்சயம் இடம்பெறவே செய்யும்.

மனிதஉரிமைகள் பேரவை மற்றும், பாதுகாப்புச்சபை ஆகியவற்றின் கவனத்துக்கு இந்த அறிக்கை போனால், அடுத்து அதன் மீதான நடவடிக்கைகள் எடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.
இதெல்லாம் இலங்கை அரசுக்கு அதிகளவில் நெருக்கடியைக் கொடுக்கும். சர்வதேச விசாரணை ஒன்றுக்கு முகம் கொடுப்பதை அரசாங்கம் ஒருபோதும் விரும்பவும் இல்லை- விரும்பப் போவதும் இல்லை. இந்தநிலையில் அரசுக்கான சர்வதேச அழுத்தங்கள் தீவிரமடைவதற்கான அறிகுறிகளே தென்படுகின்றன.

அண்மையில் மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்ட அறிக்கையும், ஆதாரமாக முன்வைத்த வீடியோ இணைப்பையும் அரசாங்கமும், படைத்தரப்பும் நிராகரித்திருந்தாலும், சர்வதேச விசாரணைகளின் போது இவற்றையெல்லாம் பொய் என்று எடுத்த எடுப்பிலேயே கூறிவிட முடியாது. அதை நிரூபிக்க வேண்டும்.

இலங்கை அரசிடம் இது பொய் என்று நிரூபிப்பதற்கு உள்ள தொழில்நுட்பத்தை விட, மிகவும் உயர்வான தொழில்நுட்பங்கள் சர்வதேச விசாரணையாளர்களிடம் இருக்கலாம்.
இதுபோன்ற பல ஆதாரங்களை நிபுணர்கள் குழு பெற்றிருப்பதாகவே கருதப்படுகிறது. எனவே தான் அரசாங்கம் தமக்குச் சாதகமற்ற அறிக்கையை எதிர்பார்க்கிறது போலுள்ளது.

அடுத்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கடந்த வெள்ளியன்று வெளியிட்ட இலங்கை தொடர்பான மனிதஉரிமை அறிக்கை அரசாங்கத்தை சாடும் வகையில் அமைந்துள்ளது.
40 பக்கங்களில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கை, முற்றிலும் அரசாங்கத்தைக் குற்றம்சாட்டும் வகையிலும், அழுத்தம் கொடுக்கும் வகையிலும் அமைந்த ஒன்று.

முன்னர் இப்படியான அறிக்கைகளில் விடுதலைப் புலிகள் பற்றிய குறிப்புகளும் இடம்பெறும். இப்போது புலிகள் இல்லாதுள்ள நிலையில், அரசதரப்பின் மீதான குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளது மனித உரிமைகள் கண்காணிப்பகம்.

இவை மட்டுமன்றி கடந்தவாரம் கொழும்பு வரவிருந்த அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக்கின் பயணத்தையும் அரசாங்கம் பிற்போட்டுள்ளது. அவர் இலங்கை வருவதற்குத் தெரிவு செய்த காலம் மிகவும் முக்கியமானது.

அவரது கடந்தவாரப் பயணம் பிற்போடப்பட்டாலும் இந்த வாரமோ அடுத்த வாரமோ அவர் கடுமையானதொரு செய்தியுடன் வரப் போவது உறுதி. இவையெல்லாம் இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்கள் இறுகி வருவதற்கான அறிகுறிகளாகவே தென்படுகின்றன.

வரும் நாட்களில் இந்த அழுத்தங்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. இந்த அழுத்தங்களில் இருந்து அரசாங்கம் எப்படித் தப்பித்துக் கொள்ளப் போகிறது என்பது தான் இப்போது அதிகமாகியுள்ள எதிர்பார்ப்பு.

நன்றி: தமிழ்மிரர்



positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Tue Apr 12, 2011 7:41 pm

நல்ல செய்தி வரட்டும்!



குடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்  Pகுடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்  Oகுடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்  Sகுடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்  Iகுடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்  Tகுடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்  Iகுடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்  Vகுடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்  Eகுடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்  Emptyகுடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்  Kகுடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்  Aகுடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்  Rகுடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்  Tகுடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்  Hகுடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்  Iகுடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்  Cகுடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்  K

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக