புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய ஆளும் கட்சியின் தலைவி சோனியா காந்தி ஆதிக்கத்திமிர் கொண்டவர்: ஜே.வி.பி காட்டம்  I_vote_lcapஇந்திய ஆளும் கட்சியின் தலைவி சோனியா காந்தி ஆதிக்கத்திமிர் கொண்டவர்: ஜே.வி.பி காட்டம்  I_voting_barஇந்திய ஆளும் கட்சியின் தலைவி சோனியா காந்தி ஆதிக்கத்திமிர் கொண்டவர்: ஜே.வி.பி காட்டம்  I_vote_rcap 
62 Posts - 39%
heezulia

55 Posts - 35%
mohamed nizamudeen

10 Posts - 6%
prajai

6 Posts - 4%
வேல்முருகன் காசி

T.N.Balasubramanian

Raji@123

4 Posts - 3%
mruthun

3 Posts - 2%
Saravananj

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்

191 Posts - 41%

177 Posts - 38%

25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்திய ஆளும் கட்சியின் தலைவி சோனியா காந்தி ஆதிக்கத்திமிர் கொண்டவர்: ஜே.வி.பி காட்டம்  I_vote_lcapஇந்திய ஆளும் கட்சியின் தலைவி சோனியா காந்தி ஆதிக்கத்திமிர் கொண்டவர்: ஜே.வி.பி காட்டம்  I_voting_barஇந்திய ஆளும் கட்சியின் தலைவி சோனியா காந்தி ஆதிக்கத்திமிர் கொண்டவர்: ஜே.வி.பி காட்டம்  I_vote_rcap 
21 Posts - 5%

12 Posts - 3%

9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய ஆளும் கட்சியின் தலைவி சோனியா காந்தி ஆதிக்கத்திமிர் கொண்டவர்: ஜே.வி.பி காட்டம்

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Mon Apr 11, 2011 7:14 pm

[ திங்கட்கிழமை, 11 ஏப்ரல் 2011, 01:34.34 PM GMT ]

இந்திய ஆளும்கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி ஆதிக்கத்திமிர் கொண்டவர் என்று ஜே.வி.பி. காட்டமாக சாடியுள்ளது.
தமிழ் மக்களுக்கு சம அதிகாரம் கிடைக்கும் வகையில் இலங்கையின் அரசியலமைப்பைத் திருத்த வேண்டும் என்று அவர் கூறுவதிலிருந்து அவருடையவும், இந்திய ஆளும்கட்சியினதும் மனோ நிலை மாறவில்லை என்பதையே வெளிக்காட்டுகின்றது என்றும் அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

தமிழ் மக்களுக்கு சம உரிமைகள் மற்றும் சம அந்தஸ்துக் கிடைக்கும் வகையில் இலங்கையின் அரசியலமைப்புத் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று அண்மையில் சென்னையில் இடம்பெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டமொன்றில் சோனியா காந்தி கருத்துத் தெரிவித்திருந்தார்.

அதற்குப் பதிலளிக்கும் விதமாக ஜே.வி.பி.யின் அரசியல் சபை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றின் மூலமாகவே பிரஸ்தாப சாடலை வெளிப்படுத்தியுள்ளது.

அத்துடன் இந்திய அரசியல்வாதிகளின் ஆதிக்க மனப்பான்மையை வன்மையாகக் கண்டிப்பதுடன், அதனை நன்றாகப் புரிந்து கொண்டு, அதற்கெதிராக அணிதிரள முன்வர வேண்டும் என்றும் ஜே.வி.பி நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Apr 11, 2011 7:24 pm

ஜே.வி.பி சொன்னால் சரியாத்தான் இருக்கும் ,,,, என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 11, 2011 9:07 pm

முதற்கண் ஜே வி பி என்பதன் அமைப்பைப்பற்றியும் அதன் செயல்பாடுகளைப் பற்றியும் இலங்கைத் தமிழசகோதரர்கள் தெரிவிப்பார்களா...?

ஜனதா விமுக்தி பெரமுனா என்ற அளவில் மட்டுமே நான் அறிவேன்..

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Tue Apr 12, 2011 2:33 pm

1971 இல் ரோகண விஜேவீர என்பவரால் கொமினிச அரசமைக்க ஆரம்பிக்கப்பட்டது . இவர்கள் இரண்டு முறை ஆயுதக்கிளர்ச்சி செய்து இரண்டும் தோல்வியிலேயே முடிந்தது .ரோகண கைதுசெய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்
.ஜே ஆர் ஜெவர்தன இவர்களது இரண்டாவது கிளர்ச்சியை அடக்குவதற்காக தான் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து இந்திய ராணுவத்தை வரவழைத்து விடுத்லைப்புலிகளுடன் மோதச்செய்து விட்டு ஜேவிபி கிழர்ச்சியை அடக்கினார். 1987 ,88 இல் 70000 மேற்பட்ட சிங்களவர் சிங்கள படையால் கொல்லப்பட்டனர்.இன்னொரு விடயம் ஜே ஆர் சொன்னாராம் ராஜீவுக்கு .தம்பி உம்மட வயசு என்னுடைய அனுபவம்.நாங்கள் அவரை குள்ளனரி என்போம் .இப்போ JVPக்கு எந்த கொள்கையும் இருப்பது போல் தெரியவில்லை .இனத்துவேசம் மட்டும் தான் அவர்களது மூலதனம் ..

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Tue Apr 12, 2011 9:39 pm

கலை அண்ணா உங்களுக்காக
நாற்பது ஆண்டுகளின் முன்னர்: 'ஏப்பிரல் 05 1971' அன்று இரவு..
[ திங்கட்கிழமை, 11 ஏப்ரல் 2011, 05:57 GMT ] [ தி.வண்ணமதி ]

அன்றைய பிரதமர் சிறிமாவோவினை இந்த இளைஞர்கள் தங்களது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர நாட்டிலுள்ள அனைத்துக் காவல்நிலையங்களுக்குள் மக்கள் விடுதலை முன்னணியின் [Janatha Vimukthi Peramuna -JVP] இளைஞர்கள் உடைத்து உள்நுழைவார்கள். 'கொட்டங் அண்டுவ' என அறியப்பட்ட இளைஞர் புரட்சியின்போது சமத்துவம், நீதி மற்றும் நேர்மையினை நிலைநாட்டுவதுதான் இந்த இளைஞர்களது நோக்கமாம்.

இவ்வாறு கொழும்பில் இருந்து வெளியாகும் 'Sunday Times' ஆங்கில வார ஏட்டில் Kumudini Hettiarachchi எழுதியுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை 'புதினப்பலகை'க்காக [www.puthinappalakai.com] மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற 'மக்கள் விடுதலை முன்னணி'யினரின் [Janatha Vimukthi Peramuna -JVP] தோற்றுப்போன கிளர்ச்சியில் சோமவன்ச அமரசிங்க முதன்மையான பங்கினை வகித்தார். குறிப்பிட்ட இந்தத் தினத்தில் நடந்தது என்ன என்ற நினைவுகளை இங்கு மீட்டுகிறார் அவர்.

இருளின் துணையுடன் மூன்று இளைஞர்கள் வாடகைக்கார் ஒன்றில் பொறள்ளைப் பகுதியிலுள்ள அரச மரச் சந்தியினை நோக்கிப் பயணிக்கிறார்கள். இதேநேரம் மேலும் இருவர் பேருந்து நிலையத்தில் காத்திருக்க இவர்களில் ஒருவர் அருகிலிருக்கும் றிரா திரையரங்கினை நோக்கிச் செல்கிறார்.

அங்கு தங்களது கூட்டாளிகள் பலர் திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்ததை அறிந்த இவர் மீண்டும் பேருந்து நிலையத்திற்குத் திரும்பி இது பொருத்தமான தருணமல்ல என மற்றையவரின் காதுக்குள் முணுமுணுக்கிறார்.

வாடகைக்காரில் பயணித்த அந்த மூவரும் பாரமான சூட்கேசுடன் காத்திருக்கிறார்கள்.

தங்களது தலைவரை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். ஆனால் அவர் தகுந்த நேரத்திற்கு வந்து சேரவில்லை. ஒன்றரை மணிநேரங்களாகக் இவர்கள் காத்திருக்க, வாகனங்களின் போக்குவரத்தும் பாதசாரிகளின் போக்குவரத்தும் குறைந்து சென்றது. ஈற்றில் ஊரடங்கு பிரகடனப்படுத்தப்பட்டது.

ஏப்பிரல் 05 1971ம் நாளன்று இரவுதான் அது.

தங்களது தலைவர் வராத நிலையில் சூட்கேசுடன் அங்கு நின்ற இந்த இளைஞர்கள் பொறள்ளை சுற்றுவட்டப் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரியினை நோக்கிச் செல்கிறார்கள். தாங்கள் வீடுபோய்ச் சேருவதற்கான ஒரு வாடகைக்காரை அமர்த்தித்தருமாறு அந்தப் பொலிஸ் அதிகாரியிடம் இந்த இளைஞர்கள் கோருகிறார்கள். ஈற்றில் தங்களது பணி நிறைவுக்குவந்த நிலையில் இந்த இளைஞர்கள் கொட்டகேனவிலுள்ள தங்களது தங்கும் விடுதிக்கு வந்துசேர்கிறார்கள்.

ஆனால் அதிகாலை 2.30 மணியளவில் இவர்கள் தங்கியிருந்த வீட்டிற்குள் நுழைந்த காவல்துறையினரும் படையினரும் இந்த மூன்று இளைஞர்களை மாத்திரமல்லாது அங்கு தங்கியிருந்த அனைவரையும் கைதுசெய்கிறார்கள்.

இந்த இளைஞர்களுக்கு வழங்கப்பட்ட பணிதான் என்ன என்பதை அதிகாரிகள் கண்டறிவதற்கு அதிக நேரம் எடுத்தது.

பொறள்ளைப் பகுதியில் ஒரு வாகனத்தினை இடைமறித்து அதனைப் பறித்தெடுத்து றொஸ்மன் பிளேஸ் பகுதியிலுள்ள அன்றைய பிரதமர் சிறிமாவோ பண்டாநாரயக்கவின் வசிப்பிடத்திற்குச் சென்று அவரைத் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுதான் இவர்களது நோக்கம்.

அன்றைய பிரதமர் சிறிமாவோவினை இந்த இளைஞர்கள் தங்களது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர நாட்டிலுள்ள அனைத்துக் காவல்நிலையங்களுக்குள் மக்கள் விடுதலை முன்னணியின் இளைஞர்கள் உடைத்து உள்நுழைவார்கள். 'கொட்டங் அண்டுவ' என அறியப்பட்ட இளைஞர் புரட்சியின்போது சமத்துவம், நீதி மற்றும் நேர்மையினை நிலைநாட்டுவதுதான் இந்த இளைஞர்களது நோக்கமாம்.

நாட்டின் பல பாகங்களிலுமுள்ள 10,000 இளைஞர்கள் காவல்துறையினர் மற்றும் படையினரின் போக்குவரத்தினை இடைநிறுத்தும் வகையில் வீதிகளில் மரங்களை வெட்டி விழுத்துவதோடு மின்கம்பங்களையும் தொலைபேசிக் கம்பவங்களையும் உடைத்து வீதிகளில் விழுத்துவதே இவர்களது திட்டம்.

பொறளைப் பகுதியில் கையில் சூட்கேசுக்குள் கைக்குண்டுகளுடன் காத்திருந்த இந்த இளையர்களில் ஒருவர் வேறு யாருமல்ல அப்போது தனது 28 வயதிலிருந்த சோமவன்ச அமரசிங்கதான். இவரது கூட்டாளிகள் இருவரும் கைத்துப்பாக்கிளை வைத்திருந்தனர். "றொஸ்மன் பிளேஸ் நோக்கி நான்தான் வாகனத்தினை ஓட்டிச்செல்லுவதற்குத் திட்டமிட்டிருந்தேன்" என்கிறார் சோமவன்ச.

'ஏப்பிரல் கிளர்ச்சி' என அறியப்பட்ட ஜே.வி.பி யின் இந்த ஒருநாள் கிளர்ச்சி அது ஆரம்பிப்பதற்கு முன்னரே ஏப்பிரல் ஐந்தாம் நாள் பிசுபிசுத்துப்போனது.

பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவினை சிறைப்பிடிப்பதற்கென நியமிக்கப்பட்டவர் யாரோ அவர் கிளர்சியாளர்களின் நடவடிக்கை ஆரம்பமாவதற்குச் சில மணி நேரங்களின் முன்னரே காவல்துறையினரால் சிறைப்பிடிக்கப்பட்டார். ஜே.வி.பியின் இரண்டாம் நிலைத் தலைவராக அப்போதிருந்த இருந்த நிமலசிறி ஜெயசிங்கவினது உறவினரான காவல்துறை அலுவலர் ஒருவரே இந்த இரகசியத் தகவலை பொலிசாருக்குத் தெரியப்படுத்தியிருந்தார்.

1987 தொடக்கம் 1989 வரை இடம்பெற்ற கொடூரம் நிறைந்த ஜே.வி.பியின் இரண்டாவது கிளர்சியின் போது ஜே.வி.பியின் தற்போதைய தலைவராக இருக்கும் சோமவன்ச அமரசிங்கதான் அதன் இரண்டாம்நிலைத் தலைவராக இருந்தார். இந்தக் கிளர்ச்சியின் போது உயிர் தப்பிய அமைப்பின் முதன்மை உறுப்பினர் இவர்தான். 1980களில் சிறிலங்காவிலிருந்து வெளியேறியதன் ஊடாக இவர் அதிகாரிகளால் கொலைசெய்யப்படாமல் தப்பித்துக்கொண்டார்.

1971ம் அண்டு ஏற்பட்ட கிளர்ச்சியின் போது பியசிறி பண்டார என்ற பகுதித் தலைவருக்குக் கீழ் செயற்பட்ட ஒரு இளநிலை உறுப்பினராகவே சோமவன்ச அமரசிங்க இருந்திருக்கிறார். கங்கோடவிலவிலுள்ள பல்கலைக்கழகமொன்றிலேயே சோமவன்ச பியசிறி பண்டாரவினை முதன்முதலில் சந்தித்திருக்கிறார்.

'ஜே.வி.பியின் முதலாவது கிளர்ச்சி தோல்வியில் முடிந்த நான்கு ஆண்டுகளின் பின்னர் 1975ம் ஆண்டு வெலிக்கடைச் சிறைச்சாலையில் வைத்து நான் முதன் முதலில் றோகன விஜயவீரவினைச் சந்தித்தேன்' என்கிறார் சோமவன்ச. இது தவிர 1970ம் ஆண்டு கெயிட் பூங்காவில் இடம்பெற்ற பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் றோகன விஜயவீர உரையாற்றியபோது தூரத்திலிருந்து பார்த்ததாக இவர் கூறுகிறார். குறிப்பிட்ட அந்தத் தினத்தன்று கெயிட் பூங்காவிற்குச் செல்லும் வீதிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது.

ஏழு பிள்ளைகளைக் கொண்ட குடும்பமொன்றில் கடைக்குட்டியான சோமவன்ச பயகல பகுதியில் பிறந்தார். களுத்துறை பாலிக்கா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியினையும் களுத்துறை மாகவித்தியலையத்தில் உயர் கல்வியினையும் சோமவன்ச பெற்றிருந்தார். ஆண்டு ஒன்று முதல் வகுப்பில் முதலாவது நிலை மாணவனாக சோமவன்ச தெரிவானது மாத்திரமின்றி கணிதப்பாடத்தில் அதிக ஆற்றல் கொண்டிருந்தார். கல்வியில் சிறந்து விளங்கினாலும் துடுப்பாட்டத்திலும் மற்றும் இசையிலும் சோமவன்ச தனது ஆர்வத்தினைக் காட்டத் தவறவில்லை. பாடசாலைத் துடுப்பாட்ட அணியில் சிறந்த பந்துவீச்சாளராக விளங்கினார்.

எளிமையான தனது வீட்டுக்கு அருகாக இருக்கும் ஆலயத்தில் சோமவன்ச சிறுபராயம் முதல் அதிக ஈடுபாட்டுடன் செயற்பட்டு வந்திருக்கிறார். இங்குதான் அவர் வணக்கத்துக்குரிய கலமுல்ல சுகதகேர என்ற பௌத்த மதகுருவின் செல்வாக்கினைப் பெறுகிறார் சோமவன்ச. சோமவன்ச புத்தபெருமானின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட அதேநேரம் ஆலயத்திலிருந்த பல்வேறுபட்ட புத்தகங்களையும் வாசிக்கத் தொடங்கினார். கலை இலக்கியம், அரசியல் மற்றும் மகாத்மா காந்தி போன்றவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் என பல்வகைப்பட்ட புத்தகங்களை இவர் வாசித்திருந்தார்.

சிறிலங்காவில் சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளுக்குச் சம அஸ்தஸ்து வழங்கப்படவேண்டும் எனக்கோரி குறிப்பிட்ட இந்த ஆலயத்தில் மகா கவி ஆனந்த ராஜகருணா உண்ணாநிலைப் போராட்டத்தினை ஆரம்பித்தபோது அவருக்குத் தாகம் ஏற்படும்போது தண்ணீர் வழங்கிப் பராமரிக்கும் பொறுப்பு 10 வயதான சோமவன்சவிடம்தான் கொடுக்கப்பட்டதாம்.

"ஏனையவர்களின் உரிமையினை வென்றெடுப்பதற்காக தங்களது உயிரையே மாய்ந்துக்கொள்ளத் துணிந்த உத்தம மனிதர்கள் அவர்கள்" என தற்போது அந்த நிகழ்வினைச் சோமவன்ச நினைவு கூருகிறார்.

குறிப்பிட்ட இந்த பெளத்த ஆலயத்தில் பணியாற்றியபோதுதான் இடதுசாரி அரசியல்வாதிகளின் தொடர்பு சோமவன்சவிற்குக் கிடைத்திருக்கிறது. ஐரோப்பியப் பாணியலமைந்த ஜீன்ஸ் மற்றும் சேட்டுக்களை அணிவதற்குப் பதிலாக தேசிய உடைகளை உடுத்திய சோமவன்ச முன்மாதிரியான மாணவனாகத் திகழ்ந்தார். இதுபோல உடையணிந்து வந்தால் பாடசாலையிலிருந்து வெளியேற்றப்படுவாய் என சோமவன்சவிற்கு பாடசாலை அதிபர் எச்சரிக்கும் நிலை தோன்றியது.

இதன் பின்னர் அனுராதபுரத்திற்கு அண்மையில் கல்கமுவ பகுதியிலுள்ள நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பயிற்சிக் கல்லூரியில் சோமவன்ச இணைந்துகொண்டார். குறிப்பிட்ட இந்தக் கல்லூரியில் தனது கல்வியினை நிறைவுசெய்த சோமவன்ச நாட்டின் பல பாகங்களிலுமுள்ள நீர்ப்பாசனத் திணைக்களங்களில் தொழில்நுட்ப அலுவலராக பணியாற்றியிருக்கிறார்.

கொழும்பு யாவத்தை வீதியில் அமைந்திருக்கும் கைறோலிக் ஆராய்ச்சிக் கிளையில் பணியாற்றிவேளையிலேயே றோகன விஜயவீரவின் கருத்துக்களால் சோமவன்ச ஈர்க்கப்பட்டார். அந்தக் காலப்பகுதியில் பணிபுரிந்துவரும் இளைஞர்களை ஜே.வி.பி இலக்குவைத்துச் செயலாற்றவில்லை. மாறாக வேலைவாய்புகள் எதுவுமின்றியிருக்கும் இளைஞர்களையும் பல்கலைக்கழக மாணவர்களையும் இலக்குவைத்தே ஜே.வி.பியினர் தங்களது செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தார்கள்.

"ஜே.வி.பியினருடன் இணைவது என்ற முடிவினை நான் அப்போதுதான் எடுத்திருந்தேன்" என்கிறார் சோமவன்ச. கொழும்பில் தேவி பாலிகா மாகவித்தியாலயத்திற்குப் பின்னர் இருந்த காணி அபிவிருத்தித் திணைக்களத்தின் அலுவலகத்தில் இரவு வேளையில் இடம்பெற்ற ஜே.வி.பியின் அரசியல் கலந்துரையாடல் ஒன்றில் தனது நண்பர் ஒருவரின் துணையுடன் சோமவன்ச பங்கெடுத்திருந்தார். ஐந்து அடிப்படை அம்சங்கள் தொடர்பான விளக்கத்தினை இவர் பெற்றிருந்தார்.

சிறு சிறு குழுக்களாகச் செயற்படுவதன் ஊடாக பெரும் புரட்சியினை ஏற்படுத்தலாம் என விஜயவீரவும் அவரைச் சுற்றியுள்ள குழுவினர் கருதினர். ஆஜென்ரீனாவின் சேகுவேராவினது புரட்சிசார் கொள்கைகளால் இவர்கள் அதிகம் ஈர்க்கப்பட்டிருந்தார்கள்.

பொருளாதாரப் பிரச்சினை [கிராமப்புற வேலையாட்களும் விவசாயிகளும் எதிர்கொள்ளும் பிரச்சினை], சுதந்திரம் [மோசமான காலணித்துவ ஆட்சி முறையின் பின்னான சுதந்திரம் பற்றிய பார்வை], இந்தியாவின் விரிவாக்கம் [தனது அயல் நாடுகளை ஆக்கிரமிக்க விரும்பும் இந்தியாவின் போக்கு], இடதுசாரி இயக்கம் [தோற்றுப்போன இடதுசாரி முன்னணி தந்த பாடத்தின் அடிப்படையில் உள்ளூர் அரசியலில் தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடிய வகையில் செயற்படுவது] மற்றும் புரட்சி நோக்கிய பாதை என்ற ஐந்து அம்சங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.

குறிப்பிட்ட இந்தக் காலப்பகுதியில்தான் சோமவன்ச பொருளாதார ரீதியிலும் தன்னை உயர்த்தியிருக்கிறார். வங்கியில் கடன் எடுத்து புதிய உந்துருளி ஒன்றைக் கொள்வனவு செய்திருந்தார் சோமவன்ச. 300 ரூபாய் என்ற மிகவும் குறைந்த மாதாந்தச் சம்பளத்தில் கடன் எடுத்திருந்த சோமவன்ச 4,000 ரூபாய்க்கு கொண்டா 125 என்ற உந்துருளியினைக் கொள்வனவு செய்திருந்தார். இந்த நாட்களில் இதுபோன்ற உந்துருளிகளை வீதியில் காண்பது அரிது.

இந்த உந்துருளிதான் சோமவன்ச ஜே.வி.பியுடன் இணைந்துகொள்வதற்கு வழிவகுத்தது. ஆனால் இந்த உந்துருளியால்தான் குற்றவியில் விசாரணைப் பிரிவினரின் விசாரணைக்கு சோமவன்ச உட்பட்டார் என்பது வேறு கதை.

"உண்மையில் நான் ஜே.வி.பியுடன் இணைய விரும்புகிறேனா அல்லது ஊடுருவ முனைகிறேனா என அறிவதற்காக எனது உந்துருளியைத் தங்களுக்குத் தருமாறு அப்போதைய ஜே.வி.பி தலைவர்கள் என்னிடம் கோரினார்கள். நானும் அவ்வாறே உந்துருளியை வழங்கினேன்" என்கிறார் சோமவன்ச.

1969 ஆண்டு இடம்பெற்ற இந்தச் சம்பவத்துடன் சோமவன்ச ஜே.வி.பி அமைப்புக்குள் உள்வாங்கப்படுகிறார். "இந்தச் சந்தர்ப்பதிலும் அவர்கள் என்னை முழுமையாக உள்வாங்கவில்லை. மாறாக சந்தேகத்திற்கு என்னை உள்வாங்குவதா விடுவதா என்றதொரு குழப்பமான நிலையிலேயே அவர்கள் இருந்தார்கள்" என்கிறார் சோமவன்ச.

றோகண விஜய வீரவின் தலைமையிலான ஜே.வி.பியின் உள் வட்டத்தில் 13 பேர் அங்கத்தவர்களாக இருந்தார்கள். சனத் எனப்படும் பாடசாலை ஆசிரியரான விஜயசேன விதாரண, கரு எனப்படும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினைச் சேர்ந்த ரி.கருணாரத்தின, லொக்கு அத்துல எனப்படும் நிமலசிறி ஜெயசிங்க, மைக்கிங் எனப்படும் பியதிலக சமரரத்தின ஆகியோர் இந்தப் 13 பேரில் அடங்கும்.

13 மார்ச் 1971 அன்று அம்பாறைக்குப் பயணம் செய்துகொண்டிருந்தபோது சிறப்புக் காவல்துறை அணியனிரால் இரண்டாவது முறையாகவும் கைதுசெய்யப்பட்ட விஜயவீர யாழ்ப்பாணத்திற்குக் கொண்டுவரப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

மார்ச் 16ம் நாளன்று அவசரகால நிலையினைப் பிரகடனப்படுத்திய சிறிலங்கா அரசாங்கம் நாட்டினது பொலிசாருக்கும் காவல்துறையினருக்கும் அதிமிஞ்சிய அதிகாரங்களை வழங்கியது. இதன் அடிப்படையில் மரணவிசாரணைகளை மேற்கொள்ளாமலேயே உடல்களைப் புதைக்கும் அதிகாரம் காவல்துறையினருக்கு வழங்கப்பட்டது என சோமவன்ச கூறுகிறார்.

கைட்றோ பாக்கில் இடம்பெற்ற கூட்டத்தினைத் தொடர்ந்துதான் ஜே.வி.பியின் செற்பாட்டளார்களைக் கைதுசெய்வதற்கான ஆணை நாடு தழுவிய ரீதியில் காவல்துறையினருக்கு வழங்கப்பட்டிருந்தது. இதேவேளை ஏப்பிரல் 02 1971ம் ஆண்டு துண்டுப்பிரசுரங்களை ஏற்றிக்கொண்டு சென்றமையால் சோமவன்சவியின் உந்துருளி பொலிசாரால் கையகப்படுத்தப்பட்டிருந்தது. அதே நாளில் குற்றவியல் விசாரணைப் பிரிவினைச் சேர்ந்தவர்கள் பயகல பகுதியிலுள்ள சோமவன்சவின் வீட்டுக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

விசாரணைப் பிரிவினர் அங்கு சென்றபோது சோமவன்ச வீட்டில் இருக்கவில்லை. இதனைத் தொடர்ந்து சோமவன்சவைப் சி.ஐ.டியினர் தேடுவது தொடர்பாக அயலவர்கள் மருதானையிலிருந்த சோமவன்சவின் சகோதரிக்குத் தகவல்கொடுத்திருக்கிறார். தனக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினையினை சோமவன்ச தனது பகுதித் தலைவரிடம் முறையிட, கொட்டகேனவிலுள்ள ஜே.வி.பியின் தங்கும் வீடொன்றில் சோமவன்ச தங்கவைக்கப்பட்டார்.

ஏப்ரல் ஐந்தாம் நாளன்று தமக்கு வழங்கப்பட்டிருக்கும் பணி எதுவெனத் தெரியாத அந்த மூன்று பேரும் பொறளையிலிருந்து கொட்டகேனவிற்குத் திரும்பியிருந்தனர். காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலையடுத்து ஏப்பிரல் ஆறாம் நாளன்று அதிகாலை கொட்டகேன விடுதியினைச் சுற்றிவளைத்த இராணுவத்தினரும் காவல்துறையினரும் சோமவன்ச உள்ளிட்ட அங்கு தங்கியிருந்த அனைவரையும் கைதுசெய்தனர். பின்னர் இவர்கள் மருதானை காவல்நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டு அங்கு ஒரு நாள் தங்கவைக்கபட்டிருந்ததோடு இந்த இளைஞர்களைப் பொலிசார் மோசமாகத் தாக்கியிருந்தனர்.

கைதுசெய்யப்பட்ட மறுநாள் மருதானைக் காவல்நிலையத்திலிருந்து நான்காம் மாடிக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். இங்குவைத்து சோமவன்ச உள்ளிட்ட இந்த இளைஞர்கள் மோசமான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். 'தக்கலி' என்ற முறையினைக் கைக்கொண்டு சித்திரவதைக்கு உட்படுத்தியதாக சோமவன்ச கூறுகிறார். தக்கலி என்றால் என்ன எனத் தெரியுமா எனச் சிரிப்புடன் கேட்ட சோமவன்ச, நிலத்தில் அல்லது மேசையின் மீது குப்பறக் கிடத்திவிட்ட பின்புறத்தில் கொட்டனால் அடித்துச் சித்திரவதை செய்வதுதான் தக்கலி என்றார் அவர்.

மோசமான சித்திரவதையின் விளைவாக தான் மரணித்துவிடுவேனோ என்றும் தான் எண்ணியதாக சோமவன்ச இன்று கூறுகிறார். ஜே.வி.பியின் ஏனைய உறுப்பினர்களைப் போலவே 14 நாட்களின் பின்னர் நாலாம் மாடியிலிருந்து தன்னையும் வெலிக்கடைச் சிறைச்சாலைக்குக் கொண்டுசென்ற அதிகாரிகள் அங்கு தனியாக அடைத்துவைத்ததாகக் கூறுகிறார். எழுபதுகளில் இறுதியில் இந்த ஜே.வி.பி உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

1984ம் ஆண்டு முதல் ஜே.வி.பியின் மத்தியகுழு உறுப்பினராக மாறிய சோமவன்ச 1989ம் ஆண்டு றோகன விஜயவீர கொல்லப்பட்ட நிலையில் 1990ம் ஆண்டு ஜேவிபியின் தலைவரானார். சோமவன்ச 2001ம் ஆண்டு சிறிலங்காவிற்குத் திரும்பியிருந்தார்.

பின்னாளில் இடம்பெற்றது என்ன என்பது வரலாறு

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Apr 12, 2011 10:34 pm

இந்திய ஆளும் கட்சியின் தலைவி சோனியா காந்தி ஆதிக்கத்திமிர் கொண்டவர்: ஜே.வி.பி காட்டம்  230655 இந்திய ஆளும் கட்சியின் தலைவி சோனியா காந்தி ஆதிக்கத்திமிர் கொண்டவர்: ஜே.வி.பி காட்டம்  230655 இந்திய ஆளும் கட்சியின் தலைவி சோனியா காந்தி ஆதிக்கத்திமிர் கொண்டவர்: ஜே.வி.பி காட்டம்  230655 இந்திய ஆளும் கட்சியின் தலைவி சோனியா காந்தி ஆதிக்கத்திமிர் கொண்டவர்: ஜே.வி.பி காட்டம்  230655

இந்திய ஆளும் கட்சியின் தலைவி சோனியா காந்தி ஆதிக்கத்திமிர் கொண்டவர்: ஜே.வி.பி காட்டம்  Uஇந்திய ஆளும் கட்சியின் தலைவி சோனியா காந்தி ஆதிக்கத்திமிர் கொண்டவர்: ஜே.வி.பி காட்டம்  Dஇந்திய ஆளும் கட்சியின் தலைவி சோனியா காந்தி ஆதிக்கத்திமிர் கொண்டவர்: ஜே.வி.பி காட்டம்  Aஇந்திய ஆளும் கட்சியின் தலைவி சோனியா காந்தி ஆதிக்கத்திமிர் கொண்டவர்: ஜே.வி.பி காட்டம்  Yஇந்திய ஆளும் கட்சியின் தலைவி சோனியா காந்தி ஆதிக்கத்திமிர் கொண்டவர்: ஜே.வி.பி காட்டம்  Aஇந்திய ஆளும் கட்சியின் தலைவி சோனியா காந்தி ஆதிக்கத்திமிர் கொண்டவர்: ஜே.வி.பி காட்டம்  Sஇந்திய ஆளும் கட்சியின் தலைவி சோனியா காந்தி ஆதிக்கத்திமிர் கொண்டவர்: ஜே.வி.பி காட்டம்  Uஇந்திய ஆளும் கட்சியின் தலைவி சோனியா காந்தி ஆதிக்கத்திமிர் கொண்டவர்: ஜே.வி.பி காட்டம்  Dஇந்திய ஆளும் கட்சியின் தலைவி சோனியா காந்தி ஆதிக்கத்திமிர் கொண்டவர்: ஜே.வி.பி காட்டம்  Hஇந்திய ஆளும் கட்சியின் தலைவி சோனியா காந்தி ஆதிக்கத்திமிர் கொண்டவர்: ஜே.வி.பி காட்டம்  A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 12, 2011 10:44 pm

ஜேவிபி பற்றிய சுருக்கமான விவரம் கிடைக்குமென்று எதிர்பார்த்தேன்... விரிவாகவே தந்து இருக்கிறீர்கள்.. அது சரி... அவர்களும் சிங்களர் தானே ...? பின் எதற்கு போரிடுகிறார்கள்...? புரட்சியாளர்கள் என்றால் என்ன தேவை அவர்களுக்கு...?

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Wed Apr 13, 2011 9:10 am

1970 களில் கொமினிச சித்தாந்தம் எல்லோர் மனதிலும் ஒரு கிளுகிளிப்பை ஏற்படுத்தைய காலம்.அன்நேரத்தவர் சொல்வார்கள் பல்கலைக்கழகம் செல்லும் காலத்தில் சிகப்பு புத்தகத்துடன்(கொமினிச உணர்வுடன்) செல்வார்களாம் .வரும்போது ஜனநாயகவாதியாக வருவார்களாம்.என்று.அப்படித்தான் இவர்களும்.ஏன் சோவியத் இருக்கும் வரை விடுதலைப்புலிகளும் கொமினிச சித்தாந்தத்தில் தான் இருந்தவர்கள்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக