புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Poll_c10 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Poll_m10 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Poll_c10 
75 Posts - 54%
heezulia
 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Poll_c10 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Poll_m10 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Poll_c10 
46 Posts - 33%
mohamed nizamudeen
 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Poll_c10 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Poll_m10 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Poll_c10 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Poll_m10 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Poll_c10 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Poll_m10 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Poll_c10 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Poll_m10 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Poll_c10 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Poll_m10 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Poll_c10 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Poll_m10 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Poll_c10 
1 Post - 1%
Guna.D
 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Poll_c10 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Poll_m10 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Poll_c10 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Poll_m10 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Poll_c10 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Poll_m10 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Poll_c10 
70 Posts - 53%
heezulia
 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Poll_c10 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Poll_m10 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Poll_c10 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Poll_m10 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Poll_c10 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Poll_m10 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Poll_c10 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Poll_m10 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Poll_c10 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Poll_m10 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Poll_c10 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Poll_m10 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Poll_c10 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Poll_m10 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Poll_c10 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Poll_m10 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Poll_c10 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Poll_m10 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ?


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Apr 11, 2011 9:57 pm

கருணாநிதி எத்தனை பெரிய தீய சக்தி என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் கருணாநிதியை விட மிகப் பெரிய தீயசக்தி ஒன்று இருக்கிறது. அது எதுவென்றால், கேடி சகோதரர்கள் என்று அழைக்கப் படும் கலாநிதி மற்றும் தயாநிதி சகோதரர்கள். இவர்கள் எப்படி கருணாநிதியை விட மிகப் பெரிய தீய சக்தியாக ஆக முடியும் என்றால் காரணம் இருக்கிறது.

 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Dayanidhi_Kalanidhi_Maran_Loyola_Alumni_Association_2010_stills_03
தன்னால் வளர்ந்து சாம்ராஜ்யத்தை கட்டியவர்கள், தன் சொந்த மகனை ரவுடி என்று தொலைக்காட்சியில் செய்தி போட்டதை மறக்கக் கூடிய அளவுக்கு கருணாநிதி என்ன பெருந்தன்மை படைத்தவரா ?

நிச்சயமாக இல்லை. கேடி சகோதரர்களைப் பார்த்து கருணாநிதி பயந்தார் என்பதுதான் உண்மை. கேடி சகோதரர்களோடு பிணக்கு ஏற்பட்டவுடன், தயாநிதி மாறனை மந்திரி பதவியை விட்டு ராஜினாமா செய்ய உத்தரவிட, கட்சியின் செயற்குழுவை கூட்டி முடிவெடுத்த கருணாநிதி, குடும்பம் ஒன்று சேர்கையில் வசதியாக செயற்குழுவை கூட்ட மறந்து விட்டார். “இதயம் இனித்தது, கண்கள் பனித்தன” என்று ஒற்றை வார்த்தையில் முடித்து விட்டார். ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று எழுந்த கேள்விக்கு, “அது முடிந்து போன விவகாரம்“ என்று முற்றுப் புள்ளி வைத்தார்


[img][/img] கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? 5

கருணாநிதி, இந்தத் தேர்தல் முடிந்தவுடன் தளர்ந்து போய் விடுவார். அவருக்கு பாராட்டு விழா நடத்தி, காக்காய் பிடிக்கும் ஜால்ராக் கூட்டங்கள் அவரை விட்டு விலகிப் போய் விடும். கருணாநிதியின் கண்ணுக்கு கண்ணாக, உயிருக்கு உயிராக இருந்து ஜாபர் சேட், ஏற்கனவே அதிகாரம் இழந்து நிற்கிறார். ஆகையால், தேர்தலுக்குப் பின், கருணாநிதி தமிழக மக்களுக்கு பெரிய ஆபத்தாக இருக்கப் போவதில்லை. ஆனால், கேடி சகோதரர்கள் ?

திமுக தொண்டர்களின் உழைப்பால் பிடித்த ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி, பகாசுர வளர்ச்சி கண்டவர்கள்.



யார் இந்த கலாநிதி மாறன். சென்னை டான்பாஸ்கோ பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்து விட்டு, லயோலா கல்லூரியில் பட்டப் படிப்புக்கு பிறகு, அமேரிக்காவில் எம்பிஏ படித்தவர். எம்பிஏ படித்து விட்டு, இந்தியா திரும்புகிறார். சில காலம், குங்குமம் இதழில் பணியாற்றுகிறார்.

 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Endhiran-movie-audio-launch-stills_26_084719123
டுடே நிறுவனம், அப்போது வீடியோ மேகசின் என்ற புதிய உத்தியை கண்டு பிடித்து, ந்யூஸ் ட்ராக் என்ற வீடியோ பத்திரிக்கையை தொடங்கியது.

இதைப் பார்த்து, தமிழிலும் இது போல் தொடங்க வேண்டுமென திட்டமிட்டார் தயாநிதி மாறன். அதன் படி, முதன் முதலில் 1990ல் தொடங்கப் பட்டதுதான் “பூமாலை“. இந்த பூமாலை மாதமிருமுறை வரும் வீடியோ கேசட். இதில் தற்போது, இந்த வார உலகம் என்று தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் வருகிறதல்லவா ? அதைப் போலவே, தொடங்கப் பட்டது.

ஆனால், இந்த பூமாலைக்குப் பின்னால், கருணாநிதியின் பின்புலம் செயல்பட்டது. இந்தியா டுடேவின் ந்யூஸ் ட்ராக் போல, சந்தாதாரர்கள் இல்லாததால், தமிழகத்தில் உள்ள அத்தனை வீடியோ கடைகளும், மிரட்டப் பட்டன. மாதந்தோறும், பூமாலை கேசட்டுகள் ஒவ்வொரு கடையும் 10 வாங்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தப் பட்டன. தவறும் கடைகள் மீது, நீலப் படம் வைத்திருந்த வழக்கு பாய்ந்தது. (அப்போவும் போலீஸ் இப்படித்தான்). இதை வைத்து மிரட்டி, மிரட்டி பூமாலை வீடியோ கேசட்டை ஓட்டினார்கள்.

அதன் பிறகு தாராளமய பொருளாதாரக் கொள்கை வந்த பிறகு, சன்டிவி தொடங்கப் படுகிறது. 1993ம் ஆண்டு சன் டிவி தொடங்கப் படுகிறது. இந்த சன் டிவி தொடங்கப் பட்டதற்கு பின்னணியில் ஒரு சுவையான கதை இருக்கிறது. இப்போது போல, அப்போதெல்லாம், ட்ரான்ஸ்பாண்டர்கள் குறைந்த விலையில் கிடைக்காது. இப்போது ஒரு கோடி ரூபாய் முதலீட்டில் ஒரு டிவி சேனல் தொடங்கி விடலாம். அத்தனை மலிவாகி விட்டது. உடனே, ஆண்டிமுத்து ராசா நினைத்திருந்தால், ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி சேனல்களை தொடங்கியிருக்கலாமே என்று யோசிக்காதீர்கள். 1993ல் சென்னையில் ப்ரூனே சுல்தானின் உறவினர் ஒருவர் இருந்தார். அவருக்கு சொந்தமான ட்ரான்ஸ்பாண்டர் ஒன்று இருந்தது. அவரோடு நட்பு ஏற்படுத்தி, அந்த ட்ரான்ஸ்பாண்டரை இலவசமாக பெறுகிறார் கலாநிதி மாறன். இப்படித் தான் சன்டிவி தொடங்கப் பட்டது.

சன்டிவி தொடங்கிய உடனேயே பிரபலமாக ஆனதன் காரணம், அப்போது வேறு டிவி சேனல்கள் இல்லை என்றாலும் கூட, தரமான நிகழ்ச்சிகளை வழங்கியது ஒரு முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது. எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும், சேனலின் நம்பகத்தன்மையை போக்கும் வகையில் எந்த நிகழ்ச்சியையும் ஒளிபரப்ப மாட்டேன் என்பதில், கலாநிதி பிடிவாதமாக இருந்தார். மற்ற சேனல்களில் வருவது போல், சன் டிவியில், டெலி ஷாப்பிங்கோ, சுவிசேஷக் கூட்டங்களோ, போலி மருத்துவர்களின் நேரடி நிகழ்ச்சியோ இடம் பெறாது. ஏனெனில், இது போன்ற நிகழ்ச்சிகள் ஒரு முறை வந்தால் கூட, சேனலின் நம்பகத்தன்மை போய் விடும் என்று கலாநிதி நம்பினார்.

இது 1993 முதல் 1996 வரை தான். 1991 முதல் 1996 வரியிலான ஜெயலலிதாவின் ஆட்சி, அராஜகம் மற்றும் ஊழலின் மொத்த உருவமாக இருந்ததால், மாற்று ஊடகத்தில் வரும் செய்திகளுக்கு மக்கள் ஏங்கினார்கள். இந்த ஏக்கத்தைப் பயன்படுத்தி, அன்றைய எதிர்க்கட்சி வேலையை சன்டிவி குழுமத்தினர் நன்றாகவே செய்தனர். தூர்தர்ஷன் செய்திகளுக்கு வேறு மாற்றே இல்லை என்பதால், மக்களும், இதை ரசிக்கவே செய்தார்கள்.

இப்போது ஜெயா டிவியில் இருக்கும், ரபி பெர்னார்ட் அப்போது சன்டிவியில் இருந்தார். ஜெயலலிதா அரசாங்கத்தில், பத்திரிக்கையாளர்களுக்கு செய்திகளுக்கு குறையே இல்லை. தினம் தினமும் செய்திகள் புதிது புதிதாக வந்து கொண்டே இருக்கும். அப்போது ஜெயலலிதாவின் அதிமுகவிலிருந்து, தினந்தோறும் ஒருவர் விலகி, ஜெயலலிதாவின் ஊழல்களைப் பற்றியும், சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கத்தைப் பற்றியும் செய்திகளை வெளியிட்டுக் கொண்டே இருப்பார்கள். இவ்வாறு விலகி வந்தவர்களை வைத்து ரபி பெர்னார்ட் நடத்திய நேருக்கு நேர் நிகழ்ச்சி அப்போது அவ்வளவு பிரபலம்.



 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? 4293346778_21fb94341d_o

1995 செப்டம்பர் 7 அன்று ஜெயலலிதாவின் விருப்பத்திற்குறிய வளர்ப்பு மகனாக இருந்த சுதாகரனின் திருமணம் வெகு விமர்சையாக இருந்தது. அப்போது சன் டிவி வழங்கிய செய்திகள், மக்கள் மனதில் அப்படி ஒரு இடம் பிடித்தது. வளர்ப்பு மகன் திருமணத்திற்காக ட்ரான்ஸ்பார்மர்களிடமிருந்து மின்சாரம் திருடியது, அதிகாரிகளை மிரட்டியது, போன்ற அத்தனை விஷயங்களையும் படம் பிடித்துக் காட்டியது. இன்றைய தலைமுறையினர் முன்னூறு சேனல்களோடு பிறந்ததால், அந்தச் செய்திகள் அப்படி சிறப்பாகத் தோன்றாவிட்டாலும், அப்போது தூர்தர்ஷன் செய்திகளைப் பார்த்துப் பார்த்து சலித்துப் போயிருந்த கண்களுக்கு, சன் டிவியின் செய்திகள் புத்துணர்வை தந்தது. வளர்ப்பு மகள் திருமணத்தின் போது, அந்த மணமகன் வரவேற்பு ஊர்வலத்தில், பட்டாடையுடன், ஜெயலலிதாவும், சசிகலாவும், உடல் முழுக்க நகை ஜொலிக்க நடந்து வந்ததையும், ஏடிஎம் மிஷின்களுக்கு பணம் எடுத்து வரும் வண்டியில் பாதுகாப்புக்காக வரும் துப்பாக்கி ஏந்திய காவலர் போல, அவர்களுக்குப் பாதுகாப்பாக, துப்பாக்கியோடு, அப்போது நடந்து வந்த வால்டர் தேவாரமும் நடந்து வந்த கண்கொள்ளா காட்சியை மலர் மருத்துவமனை மாடியிலிருந்து சன்டிவியின் கேமரா மேன் கண்ணன் என்பவர், படமெடுத்தார்.

இப்போது எல்லைப் பாதுகாப்புப் படை டிஜிபியாக உள்ள விஜயகுமார், அப்போது ஜெயலலிதாவின் பாதுகாப்புக்காகவே எஸ்எஸ்ஜி என்ற படையை உருவாக்கினார். அந்தப் படையைச் சேர்ந்தவர்கள், மலர் மருத்துவமனையின் மாடியிலிருந்து படமெடுத்த கண்ணனை ஜெயலலிதாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்ததாக கைது செய்தனர். இந்த கைது சன்டிவியின் பரபரப்பை பெருமளவில் அதிகரித்தது. இந்தக் கைதை பெரிய செய்தியாக்கிய சன் டிவி, இது தொடர்பாக ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா, அப்போதைய உள்துறை அமைச்சர் எஸ்.பி.சவாண், ஆகியோருக்கு புகார் அனுப்பியது.

1996. இதற்குப் பிறகுதான், மாறன் சகோதரர்களின் அசல் முகம் தெரியத் தொடங்கியது. கருணாநிதி ஆட்சியைப் பிடித்தவுடன், சன் டிவி எடுக்கும், நெடுந்தொடர்களுக்கு திரைப்பட நடிக நடிகையரை மிரட்டுவதில் இருந்து, சன் டிவிக்கு விளம்பரம் தருமாறு, தனியார் நிறுவனங்களை மிரட்டுவதில் தொடங்கி கேடி சகோதரர்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது. திமுக ஆட்சி என்பதால் தனியார் நிறுவனங்களும், திரைத் துறையினரும், வாய் மூடி மவுனிகளாக இருந்தனர்.

அறிவாலயத்தில் தனது அலுவலகத்தை வைத்திருந்த சன் டிவி, மெல்ல மெல்ல, அறிவாலயத்தையே தன் வசம் கொண்டு வந்தது. அறிவாலயத்தில் ஒரு அலுவலகம் வைத்திருந்த, வேலூர் எம்எல்ஏ காந்தியை, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி காலி செய்ய வைத்தார் கலாநிதி மாறன்
 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Rajini_and_Kalanidhi_Maran_endhiran_2அழகிரி, அதிரடி அரசியல் செய்து தனது பெயரை கெடுத்துக் கொண்டார் என்றால், கேடி சகோதரர்கள், அழகிரி செய்வதைப் போல பத்து பங்கு செய்தாலும் வெளியில் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள். கேடி சகோதரர்களைப் போல திமுக ஆட்சியின் அதிகாரத்தை பயன்படுத்தியவர்கள், கருணாநிதி குடும்பத்தில் ஒருவருமே இல்லை.

அப்போதெல்லாம், இப்போது போல கேபிள் யுத்தம் பெரிதாக இல்லை. சேனல்களும் குறைவாக இருந்ததால், கேபிள் தொழில் அவ்வளவு போட்டி நிறைந்ததாக இல்லை. ஆனால், ஒரு ஆக்டோபஸ் போல கேபிள் தொழிலை கேடி சகோதரர்கள் வளைக்கத் தொடங்கினர். எஸ்.சி.வி என்ற கேபிள் விநியோக நிறுவனத்தை தொடங்கியவர்கள் முதலில் சென்னை நகரில் மட்டும் கேபிள் விநியோகத்தை நடத்தி வந்தனர். எஸ்சிவிக்கு போட்டியாக சென்னையில் இருந்தது மும்பையைச் சேர்ந்த ஹாத்வே நிறுவனம். ஹாத்வே நிறுவனத்தின் முக்கிய சந்தாதாரர்கள் மிகப் பெரிய பணக்காரர்கள். வசதி படைத்தவர்கள் இருக்கும் குடியிருப்புப் பகுதிகளில் ஹாத்வே நிறுவனம் கொடிகட்டிப் பறந்தது. 96-2001ல் ஹாத்வேயை விட்டு வைத்த கேடி சகோதரர்கள், 2006ல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், கேபிள் தொலைக் காட்சியில் தங்கள் ஏகபோகத்தை நிலைநாட்டினர்.

2006ல் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலேயே தமிழகம் முழுக்க கேபிள் தொழிலை தங்கள் கட்டுப் பாட்டில் கொண்டு வந்தவர்கள் தான் கேடி சகோதரர்கள். 2006ல் திமுக ஆட்சிக்கு வந்ததும், பலத்தை பிரயோகித்து, ஹாத்வே நிறுவனத்தை சென்னை நகரத்தை விட்டே துரத்தினர். தமிழகம் முழுக்கவும், கேபிள் தொழில், கேடி சகோதரர்களின் கட்டுப் பாட்டில் வந்தது. 2004ல் தயாநிதி மாறன், தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக ஆனதும், கேபிள் தொழில் இவர்கள் கட்டுப் பாட்டில் கொண்டு வருவதற்கு பெரும் உதவியாக அமைந்தது மட்டுமல்ல, பல்வேறு சேனல்களில் செய்தி வெளியிடாமல் இருக்க பெரும் நெருக்கடி கொடுக்க உதவியது. விஜய் டிவியில் முன்பு, ஒரு ஐந்தாண்டுகளுக்கு முன்பு என்டிடிவி நிறுவனத்தோடு சேர்ந்து தயாரித்த செய்திகள் ஒளிபரப்பாகி வந்தன. அந்தச் செய்திகள், நடுநிலைமையாக, மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதால், தனது அதிகாரத்தை பயன்படுத்தி, விஜய் டிவிக்கு செய்திகள் ஒளிபரப்பும் அனுமதியை பறித்தார் தயாநிதி மாறன். அப்போது பறிக்கப் பட்ட செய்திக்கான அனுமதி, விஜய் டிவிக்கு மீண்டும் வழங்கப் படவேயில்லை.

இது மட்டுமல்லாமல், அப்போது ஓரளவு நடுநிலையோடு செய்திகளை வெளியிட்டு வந்த, ராஜ் டிவி நிறுவனம், விசா என்ற தனது தெலுங்கு தொலைக்காட்சிக்காக ஆன்லைன் ப்ராட்காஸ்டிங் எனப்படும், ஓபி வேனை வைத்து, செய்தி ஒளிபரப்பியதாக குற்றஞ்சாட்டி, இரண்டு வருடங்களுக்கு விசா தொலைக்காட்சியை செய்தி ஒளிபரப்ப விடாமல் தடுத்து விட்டனர். இதற்கு முழு முதற்காரணம், தயாநிதி மாறனே… எப்படிப் பட்ட அதிகார துஷ்பிரயோகம் பாருங்கள்.

தயாநிதி மாறன் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சரானதே ஒரு சுவையான கதை. அவரின் தந்தை முரசொலி மாறன் வர்த்தகத் துறை அமைச்சராக இருந்து, உலக வர்த்தக மைய மாநாட்டில் ஏழை நாடுகள் தொடர்பான நீண்ட உரையை ஆற்றி, இந்தியாவை பெருமைப் படுத்தினார். சென்டிமென்ட்டலாகவாவது, அந்தத் துறையை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். ஆனால் இவர்கள் தான் கேடி சகோதரர்களாயிற்றே… தொலைத் தொடர்புத் துறைதான் வேண்டும் என்று, அத்துறையை கைப்பற்றினர். அந்தப் பொறுப்பை ஏற்பதற்கு சில நாட்களுக்கு முன், சன் டிவியின் தலைமை நிர்வாகியாக இருநதார் தயாநிதி மாறன்.

தயாநிதி மாறன் தரப்பில் சொல்லப் படும் ஒரு முக்கிய தியரி, டிவி சேனல்கள் தொடர்பாக தகவல் ஒளிபரப்புத் துறைதான் அனுமதி வழங்க வேண்டும், என்பது. ஆனால், தகவல் ஒளிபரப்புத் துறை ஒரு போஸ்ட் ஆபீஸ்தான். ஒரு தொலைக்காட்சி தனது ஒளிபரப்பை நடத்துவதற்கு ஸ்பெக்ட்ரம் தான் அடிப்படை. அந்த ஸ்பெக்ட்ரத்தை வழங்குவதற்கு அனுமதி வழங்க வேண்டியது தொலைத் தொடர்புத் துறை. இதை வைத்துத் தான், சன் டிவிக்கு போட்டியாக, உள்ள சேனல்களை வளர விடாமல் செய்தனர்.

ஒரு உதாரணத்தைக் கூற வேண்டுமானால், ஜெயா தொலைக்காட்சி, 24 மணி நேர செய்தி சேனல் தொடங்குவதற்காக விண்ணப்பித்தது. இதற்காக ஜெயா தொலைக்காட்சி புதிய ஸ்பெக்ட்ரம் கேட்கவில்லை. ஏற்கனவே ஜெயா தொலைக்காட்சிக்காக ஒதுக்கிய ஸ்பெக்ட்ரத்தை மேலும் வலுவாக பயன்படுத்தவே அனுமதி கேட்டது. மே 2004ல் சமர்ப்பிக்கப் பட்ட ஜெயா டிவியின் விண்ணப்பம், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தயாநிதி மாறனால் கிடப்பில் போடப்பட்டது.

ஜெயா டிவி நிர்வாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. நீதிமன்றத்தில் ஜெயா டிவி போலவே, கைரளி டிவியும் செய்தித் தொலைக் காட்சி தொடர்வதற்காக கொடுத்த விண்ணப்பம், ஒரு சில நாட்களில் பரிசீலனை செய்யப் பட்டு ஒதுக்கப் பட்ட விவசாரமும் நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டப் பட்டது.

தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த போது நடந்த மற்றொரு முக்கிய நிகழ்வு டாடா ஸ்கை தொடர்பானது. டாடா நேரடியாக வீட்டுக்கே தொலைக்காட்சி சேவையை வழங்கும் டாடா ஸ்கை என்ற ஒளிபரப்பை துவக்க உத்தேசித்தது. இதற்கான அனுமதியை வழங்க வேண்டியது தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம். டாடா ஸ்கை தொடங்க அனுமதி வழங்குவதை தொடர்ந்து தாமதித்தார் தயாநிதி மாறன்


 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Tata

தயாநிதி மந்திரியாக இருந்த சமயத்தில், தொலைத் தொடர்புத் துறை புதிய சட்டம் ஒன்றை கொண்டு வந்தது. அது என்னவென்றால், தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, செல்பேசியிலேயே நேரடியாக தொலைக்காட்சியை பார்க்கும் வாய்ப்பு உருவானதால், செல்பேசிக்கு பயன்படும் ஸ்பெக்ட்ரத்தையும், தொலைக்காட்சிகள் ஒளிபரப்பப் படும் அலைவரிசையையும் இணைக்கும் வகையில் (Convergence) வழி வகை செய்யும் ஒரு சட்டம் உருவாகிறது.

இது போன்ற சட்டம், உருவாக்கும் அமைச்சகத்தின் அமைச்சர் தம்பி தயாநிதி மாறன். அந்த அமைச்சகம் உருவாக்கும் சட்டத்தின் விளைவுகள் என்ன என்பதை உணர்ந்து அதற்குத் தகுந்தாற்போல புதிய பிசினசை தொடங்குவது அண்ணன் கலாநிதி மாறன். எப்படி இருக்கிறது ?

நீண்டதொலைவு அழைப்புகளுக்கான கட்டணம் 100 கோடி ரூபாயாக இருந்த போது, அந்த கட்டணத்தை 2.5 கோடியாக குறைத்தவர் தயாநிதி. இது எந்த நேரத்தில் என்றால், தொலைத் தொடர்பு நிறுவனங்கள் நீண்ட தூர அழைப்பு வசதியை வழங்குவதற்கு போட்டி போடத் தொடங்கிய நேரத்தில் இவ்வாறு கட்டணங்களை குறைத்தார். வெளிநாடுகளுக்கு அழைக்கும் கட்டணங்களையும் குறைத்தார். இந்த தொழில் தொடங்குவதற்காக இருந்த பல்வேறு கட்டுப்பாடுகளையும் நீக்கினார். அதோடு, ஒரே கம்பிவட இணைப்பு மூலமாக, இணைய இணைப்பு, தொலைபேசியில் பேசும் வசதி உள்ளிட்ட வசதிகளை வழங்கவும் வழிவகை செய்தார்.

இந்த வசதிகளை உருவாக்கிய நோக்கமே, எஸ்சிவி மூலமாக, இதே வசதியை சன் நெட்வொர்க் வழங்க வேண்டும் என்பதற்காவே….. தம்பி வழங்குகிறார்… அண்ணன் பயன்படுத்திக் கொள்கிறார். இதற்காக நாம் வாக்களித்து இவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்புகிறோம்.

84 எப்எம் லைசென்ஸ் பெறுவதற்கு விண்ணப்பித்த கேடி சகோதரர்கள் 67 லைசென்சுகளை பெற்றார்கள். இப்போது உள்ள சட்டத்தின் கீழ் 46 லைசென்சுளைத் தான் வைத்துக் கொள்ள முடியும் என்பதால், மீதம் உள்ள லைசென்சுகளை விற்று விடுவார்கள்.

தம்பி தருகிறார், அண்ணன் பெறுகிறார். டாடா, அம்பானி, பிர்லா, பஜாஜ், போன்ற அத்தனை பெரிய நிறுவனங்களும், அரசாங்க விதிகளை வளைத்து, லஞ்சம் கொடுத்துதான் தொழில் செய்கின்றன என்றாலும், இது போல இவர்களே அரசாங்கமாகவும், இவர்களே தொழில் அதிபர்களாகவும், இவர்களே லைசென்சுகளை கொடுத்தும், இவர்களே, அதைப் பெற்றுக் கொள்வதும், இந்தியாவிலேயே முதல் முறை என்றால் அது மிகையாகாது.

இந்த கேடி சகோதரர்கள், இந்து பத்திரிக்கையின் பங்கை வாங்குவதற்கு முயற்சி எடுத்தார்கள் என்ற செய்தி உங்களில் பல பேருக்கு அதிர்ச்சியாக இருக்கும். கேடி சகோதரர்கள் சன் டிவி பங்குச் சந்தையில் நுழைந்த காலத்தில், அதன் மூலம் வந்த பெரிய வருவாயை வைத்து, இந்து பத்திரிக்கையில் பங்கை வாங்க முயற்சித்து, அது நிறைவேறாமல் போனது.

சன் டிவி உள்ளிட்டு, கேடி சகோதரர்கள் மொத்தம் 20 சேனல்களை பல்வேறு தென்னிந்திய மொழிகளில் நடத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டைப் போல, ஏகபோகம் அங்கே இல்லாவிட்டாலும், தமிழகத்தில் உள்ள, தெலுங்கு, மலையாளம், கன்னடம் பேசும் மக்களின் ஒட்டு மொத்த கவனத்தையும் ஈர்த்து அதன் மூலம் பெரிய வருவாயை ஈட்ட கடுமையாக முயற்சித்து வருகிறார்கள்.

கேடி சகோதரர்களின் வெற்றிக்கு ஒரு முக்கியமான காரணம், வியாபார தந்திரம். ஒரு விஷயத்தை வியாபார ரீதியாக வெற்றி பெற வைக்க நூதனமான பல்வேறு தந்திரங்களை கையாளுவதில் கேடி சகோதரர்கள் சமர்த்தர்கள். தினகரன் நாளிதழை வாங்கியதும், வடிவமைப்பை மாற்றி வண்ணத்தில் கொண்டு வந்ததோடு, அதை வியாபார ரீதியாக வெற்றி பெற வைக்க மிகச் சிறந்த தந்திரத்தை கையாண்டார்கள். தினத்தந்தி 3 ரூபாய்க்கும், தினமணி 3 ரூபாய்க்கும், தினமலர் 3 ரூபாய்க்கும் விற்றுக் கொண்டிருந்த காலத்தில், தினகரனை 1 ரூபாய்க்கு வழங்கினார்கள். 1 ரூபாய் என்றதும், வியாபாரம் கொடிகட்டிப் பறந்தது. குறுகிய காலத்திலேயே சர்குலேஷன் பல மடங்கு உயர்ந்ததும், பத்திரிக்கை விலையை 2 ரூபாய் ஆக்கி விட்டு இன்று தமிழகத்தின் 2வதாக அதிகம் விற்பனையாகும் நாளிதழாக ஆக்கியிருக்கிறார்கள்.

இதே போல கேடி சகோதரர்கள் தொடங்கிய மாலை நாளிதழ் தமிழ் முரசு. சென்னையில் மாலையில் பரபரப்பாக பல வருடங்களாக கொடிகட்டிப் பறந்த மாலை நாளிதழ்கள் மாலை முரசு மற்றும் மாலை மலர். தமிழ் முரசு வெளியீடு தொடங்கியதும், தினந்தோறும், தமிழ் முரசோடு இலவசமாக ஏதாவது ஒரு பொருளை வழங்கினார்கள். அவ்வாறு இலவசமாக வழங்கப் படும் பொருள்களுக்கு இவர்கள் காசு செலவழிக்கப் போவது இல்லை. சம்பந்தப் பட்ட பொருள்களை தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் விளம்பரத்திற்காக இலவசமாக வழங்கும் பொருட்களை இவர்கள் தமிழ் முரசோடு வழங்கி, தங்கள் விற்பனையை அதிகரித்துக் கொண்டார்கள். இது தவிரவும், குங்குமம், வண்ணத்திரை, முத்தாரம் என்று வார இதழ்களையும் நடத்தி வருகிறார்கள் கேடி சகோதரர்கள்.

இதற்கு அடுத்து கேடி சகோதரர்கள் இறங்கிய தொழில் திரைப்படத் தயாரிப்பு. இவர்கள் திரைப்படத் தயாரிப்பில் இறங்கிய பிறகு, சன் டிவி தங்கள் வியாபாரத்துக்கான எத்தனை பெரிய அயோக்கத்தனத்தில் வேண்டுமானாலும் இறங்கும் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.

 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Endhiran-movie-audio-launch-stills_36_085223123சன் பிக்சர்ஸ் சார்பில் எடுக்கப் பட்ட முதல் படம் ‘காதலில் விழுந்தேன்’. அந்தப் படத்தில் ஒரு டப்பாங்குத்து பாடலை தவிர்த்து வேறு எதுவுமே இல்லை. மிகச் சுமாரான வசூலைப் பார்த்த அந்தப் படத்தை சன்டிவி டாப் டென் திரைப்படங்களில் முதலிடத்தை பிடித்ததாக தொடர்ந்து பல வாரங்களுக்கு ஒளிபரப்பியது, சன் டிவியின் மோசமான ஊடக தர்மத்தை வெளிப்படுத்தியது.

எந்திரன் என்ற ரஜினிகாந்த் நடித்த படத்துக்காக பெரிய பரபரப்பை ஏற்படுத்தி, இந்தியாவுல் ஏதோ யுகப்புரட்சி நடந்து விட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார்கள் கேடி சகோதரர்கள். இந்தத் திரைப்படம் எதிர்ப்பார்த்ததைப் போல ஓடவில்லை, விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தியது என்று ஒரு செய்தி போட்டதற்காக டெக்கான் க்ரானிக்கிள் மற்றும் தினமணி செய்தித் தாள்களை மிரட்டும் விதமாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியவர்கள் இந்த கேடி சகோதரர்கள் என்பதை மறந்து விடக் கூடாது. அப்போது சவுக்கும் இதைப் பற்றி கண்டித்து எழுதியது.

அடுத்ததாக கேடி சகோதரர்கள் இறங்கிய தொழில் விமான சேவை. ஸ்பைஸ் ஜெட் விமான சேவை நிறுவனத்தில் பெரும்பான்மை பங்குகளை வாங்கி இன்று அந்த நிறுவனத்தை தங்களுக்குச் சொந்தமானதாக ஆக்கிக் கொண்டுள்ளனர் கேடி சகோதரர்கள். சமீபத்தில் ஜெயா டிவியில் வெளி வந்த செய்தி கேடி சகோதரர்களின் அயோக்கியத்தனத்துக்கு ஒரு சான்று.


 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Mr_Kalanithi_Maran
திமுக சார்பாக, வாக்காளர்களுக்கு கொடுக்கப் படுவதற்காக பல்வேறு மூட்டைகள் ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் சரக்குகளாக தூத்துக்குடியில் வந்திறங்கி சோதனையில் அந்தப் பார்சல்கள் கைப்பற்றப் பட்ட செய்தி, அவ்வளவாக வெளியில் தெரியாமல் போனது.

கேடி சகோதரர்களின் விஷமத்தனத்துக்கு ஒரு நல்ல சான்று, அரசு கேபிள் கார்ப்பரேஷன். தினகரன் ஊழியர்கள் படுகொலைக்குப் பிறகு, குடும்பம் பிரிந்ததும், அரசுப் பணம் சும்மாதானே இருக்கிறது என்று கருணாநிதி அரசு கேபிள் கார்ப்பரேஷனை தொடங்கினார். லஞ்சம் வாங்கி சம்பாதிக்கத் தெரியாத உருப்படாத ஐஏஎஸ் அதிகாரியான உமாசங்கர், அந்த கார்ப்பரேஷனின் தலைவராக நியமிக்கப் பட்டு, மிக மிக சிறப்பான பணியை செய்தார். கோவை மாவட்டத்தில் முதல் முறையாக ஒளி இழை வடங்களை நிறுவி, கேபிள் மூலமாகவே, இணைய இணைப்பு, கேபிள் தொலைக்காட்சி போன்ற பல்வேறு சேவைகளை வழங்க முயற்சி எடுத்தார்.

 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Uma-shankar-ias
அப்போது, கேடி சகோதரர்கள் அழகிரியோடு கடுமையான யுத்தத்தில் இருந்தார்கள். அரசே அவர்களுக்கு எதிராக இருந்தது. ஆனால், கேடி சகோதரர்கள் சற்றும் சளைக்காமல் ரவுடித்தனத்தில் ஈடுபட்டு, கம்பி வட இணைப்புகளை இரவோடு இரவாக அறுத்தெரிந்தார்கள். கம்பி வட இணைப்பு ஒரு முறை அறுக்கப் பட்டால், மீண்டும் மொத்தமாக புதிதாக நிறுவப்பட வேண்டும். பல முறை இவ்வாறு அறுக்கப் பட்டு புதிதாக நிறுவப்பட்டும், மீண்டும் மீண்டும் அதை அறுக்கும் வேலைகளில் கேடி சகோதரர்கள் ஈடுபட்டதை பொறுக்க முடியாமல் தான் உமாசங்கர், கம்பி வட இணைப்புகளை அறுப்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அனுமதி வேண்டும் என்ற அப்போதைய தலைமைச் செயலாளர் ஸ்ரீபதிக்கு கடிதம் எழுதினார். ஸ்ரீபதி, பெருமாள் கோயில் வாசலில் பிச்சை எடுப்பவனுக்கு இருக்கும் சுயமரியாதை கூட இல்லாத ஒரு நபர். அவரா நடவடிக்கை எடுப்பார் ?

அதிகாரம் இல்லாத போதே இவ்வாறு ரவுடித்தனத்தில் ஈடுபடுகிறார்கள் என்றால், கேடி சகோதரர்களின் துணிச்சலை புரிந்து கொள்ளுங்கள். இது தவிரவும், கேடி சகோதரர்களுக்கு திமுக கட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற கனவு உண்டு. பிரிவு காலத்தின் போது, ‘மாறன் பேரவை’ என்ற பேரவையை தொடங்கி கட்சிக்குள் பிளவு ஏற்படுத்த முயற்சித்தவர்கள் தான் இவர்கள் என்பதை மறந்து விடக் கூடாது.

குடும்பம் பிரிவதற்கு முன்பு கூட, கட்சியை கைப்பற்றும் முயற்சியில் கேடி சகோதரகள் ஈடுபட்டே வந்தார்கள். கருணாநிதியோடு உரையாடிய ஒரு சமயத்தில், கலாநிதி மாறன், திமுக நிர்வாகிகள் அனைவருக்கும் ஒரு பொலிரோ ஜீப் வாங்கித் தர உத்தேசித்துள்ளதாக கருணாநிதியிடம் கூறிய போது தான், கருணாநிதி உஷாரானார். பிரிவு காலத்தின் போது, கேடி சகோதரர்கள் சார்பாக, தன்னிடம் பேச்சு வார்த்தை நடத்த வந்த வைரமுத்துவிடம், கருணாநிதி முரசொலி மாறன் தன் கண்ணின் மணிபோன்றவர் என்றும், ஒரு நாளும், தன்னுடைய நாற்காலிக்கு ஆசைப்பட்டவர் கிடையாது என்றும் சொல்லியிருக்கிறார்.

கேடி சகோதரர்கள் சந்தித்த முதல் நெருக்கடி, கலைஞர் டிவியின் தொடக்கம். கலைஞர் டிவி தொடங்கப் பட்ட போது, அங்கே பணியாற்றிக் கொண்டிருந்த 250க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப கலைஞர்கள், கலைஞர்கள் என ஒரே நாளில் கலைஞர் டிவிக்கு மாறினார்கள். இதற்கான முக்கிய காரணம் என்னவென்றால், இத்தனை கோடிகள் சம்பாதித்தாலும், ஊழியர்களுக்கு கப்பித் தனமாக குறைந்த சம்பளமே சன் டிவியில் வழங்கப் படும் என்பது. கலைஞர் டிவியில் கூடுதல் சம்பளம் கிடைக்கிறது என்றவுடன், பெரும்பாலான கலைஞர்கள் கிளம்பி விட்டார்கள்.

கேடி சகோதரர்களின் அராஜகம் ஒரு பக்கம் என்றால், அவர்களிடம் வேலை பார்க்கும் நபரும் அராஜகத்தில் ஈடுபடுவது என்பதுதான் வேதனையிலும் வேதனை. சரக்கடித்து விட்டு, பெண் விவகாரத்தில் ஏற்பட்ட ஒரு சாதாரண சண்டையை, ஆட்களை கூட்டிக் கொண்டு போய், ஒரு ஓட்டலை அடித்து நொறுக்கும் அளவுக்கு துணிச்சல் கொண்டவர்தான் ஹன்ஸ்ராஜ் சக்சேனா என்ற கேடி சகோதரர்களின் நம்பிக்கைக்குரிய கைத்தடி.

 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Ayyanaar_2

 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Jak-3

 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Jak-6
இந்தத் துணிச்சல் வந்ததற்கு காரணம், கருணாநிதி முதல்வர் என்பதைத் தவிர வேறு என்ன ? அவர்களின் துணிச்சல் பொய்யானது இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில், சென்னை மாநகர கமிஷனர் கண்ணாயிரம், இந்த விஷயத்தில் இது வரை ஒருவரைக் கூட கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத் தகுந்தது.

கேடி சகோதரர்களின் அதிகாரமும், அயோக்கியத்தனங்களும் தமிழகத்தில் பாயாத இடமே இல்லை எனலாம். அடுத்ததாக கேடி சகோதரர்கள் ரிலையன்ஸ் ப்ரேஷ் போன்ற ரீட்டெயில் வாணிபத்திலும் இறங்கத் திட்டமிட்டுள்ளனர் என்பதுதான் லேட்டஸ்ட் தகவல்.

டுமாரோ நெவர் டைஸ் என்று ஒரு ஜேம்ஸ் பாண்ட் படம் வரும். அந்தப் படத்தில் வரும் வில்லனுக்கு தொழிலே மீடியா அத்தனையையும் தன் கட்டுப் பாட்டில் வைத்திருப்பது. அது எதற்காக என்றால், நாளை இந்த உலகம் என்ன படிக்க வேண்டும், எது செய்தியாக வேண்டும் என்பதை நான்தான் தீர்மானிப்பேன் என்று கூறுவார். ஏறக்குறைய அந்த வில்லன் போன்றவர்கள் தான் இந்த கேடி சகோதரர்கள்.

சமீபத்திய உதாரணம், அன்னா ஹசாரேவின் பட்டினிப் போராட்டம். அன்னா ஹசாரே பட்டினிப் போராட்டத்தை தொடங்கியதிலிருந்து, தேசிய காட்சி ஊடகங்களும், அச்சு ஊடகங்களும் இந்த செய்திக்கு கொடுத்த முக்கியத்துவத்தையும், அதையொட்டி, நாட்டில் உள்ள படித்த வர்க்கம் அனைத்தும் கிளர்ந்தெழுந்ததும் நம் அனைவரும் அறிந்த ஒரு விஷயம்.


 கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? Dayanidhi-3
ஆனால் சன் டிவி, இது போன்ற ஒரு சம்பவமே நடக்காதது போல, வடிவேலுவின் பேச்சை ஒளிபரப்பிக் கொண்டிருந்தது என்றால், எத்தனை பெரிய அயோக்கியத்தனம் என்பதை நினைத்துப் பாருங்கள். நாடே பற்றிக் கொண்டு எறியும், ஒரு செய்தியை, அந்தச் செய்தி தேர்தலை பாதிக்கும் என்பதால், வெளியிடாமல் இருப்பது எத்தனை பெரிய துரோகம் ? அயோக்கியத்தனம் ?

கேடி சகோதரர்களின் மிகப் பெரிய பலமே, எஸ்சிவி தான். இந்த எஸ்சிவியின் கொட்டத்தை அடக்கினால், இவர்களின் ஏகபோகம் தானாக முடிவுக்கு வரும். இன்று சென்னையில் என்டிடிவி இந்து, பாலிமர், போன்ற பல்வேறு தொலைக்காட்சிகள் ஒழுங்காக தெரியாமல் இருக்கிறது என்றால், அதற்கு ஒரே காரணம், கேடி சகோதரர்கள் தான். வருடத்துக்கு இவர்களுக்கு ஐந்து கோடி கட்டினால் மட்டுமே, சம்பந்தப் பட்ட சேனல்கள் ப்ரைம் பாண்டில் வைக்கப் படும். இல்லயென்றால், சுத்தமாக தெரியாத வண்ணம் பார்த்துக் கொள்வார்கள்.

நான்கு வருடங்களாக அமைதியாக இருந்து விட்டு, இன்று திடீரென கருணாநிதி குடும்பத்தை உறித்து தொங்க விட்டுக் கொண்டிருக்கும் விகடன் குழுமத்திலும், கணிசமான பங்குகளை கேடி சகோதரர்கள் வாங்கியிருக்கிறார்கள் என்பது பரவலாக பத்திரிக்கையாளர்கள் மத்தியில் உலவும் செய்தி. திமுக குடும்பத்தைப் பற்றி இத்தனை செய்திகள் வெளியிட்டாலும், விகடன் குழுமம், கேடி சகோதரர்களைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல், கவனமாக மவுனம் சாதிப்பது, இந்தத் தகவலை உறுதிப் படுத்துகிறது.

கருணாநிதி ஆட்சி வீழ்த்தப் பட வேண்டியதன் அவசியம், கருணாநிதி மற்றும் அவர் குடும்பத்தினரின் அட்டூழியங்கள் மட்டுமல்ல….. கேடி சகோதரர்கள் என்ற ஆக்டோபஸ், தமிழகத்தை கபளீகரம் செய்யாமல் இருப்பதற்காகவுமே…..

நன்றி சவுக்கு


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Apr 12, 2011 5:25 am

100 % பெரிய தீயசக்தி  கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ? 502589




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Tue Apr 12, 2011 5:27 am

தெரிந்த மனிதர்கள் தெரியாத பல சுவாரசியமான கதைகள். (உண்மைகள்
நன்றி மணி...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக