ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவப்பு குல்லாவின் கதை!

Go down

சிவப்பு குல்லாவின் கதை! Empty சிவப்பு குல்லாவின் கதை!

Post by சிவா Sat Sep 05, 2009 12:02 am

சிவப்பு குல்லாவின் கதை! Smalarnews_84630984068


டீதி
என்ற நாட்டை டார்வின் என்ற அரசன் ஆண்டு வந்தான். ஆணவத்தின் மொத்த உருவானவன். குடிமக்களுக்கு என்று எந்த நன்மையும் செய்யமாட்டான். டீதியை அடுத்த சின்னஞ்சிறு கிராமம் அது. தந்தையற்ற சிறுவன் ஜோன்ஸ். ஆறே வயது நிரம்பியவன். தன் தாய் பிலோமினாவுடன் அந்த கிராமத்தில் வசித்து வந்தான். ஞாயிற்று கிழமைகளில் தவறாமல் தன் அம்மாவுடன் டீதியில் உள்ள மாதா கோவிலுக்குச் செல்வான்.

""அம்மா! நம்ம ஊர்லே மட்டும் ஏம்மா மாதாகோவில் இல்லை. நம்ம ஊர்லேயும் ஒரு மாதா கோவில் கட்டணும்மா,'' என்று அடிக்கடி சொல்வான். அவன் மனம் நிறைந்த ஏக்கம் என்னவெனில் தன் கிராமத்திலும் இதைப் போல் ஒரு பெரிய அழகிய மாதா கோவில் கட்டணும். இந்த மாதா கோவில் சிலையைவிட பெரிய மேரியம்மா சிலை வைக்கணும். அவங்க கையிலே ரொம்ப அழகான வாயிலே விரல் சூப்பிக்கிட்டு இருக்கிற அந்த குட்டி குண்டு பாப்பா சிலை இருக்கணும். நான் வெள்ளை உடுப்பு மாட்டிக்கிட்டு... நிறைய மெழுகுவர்த்தி ஏத்திவெச்சு, ஊரெல்லாம் கூட்டி ஜெபம் பண்ணணும்,'' என்பான். ஒரு ஆறு வயது குழந்தையின் மனதில்தான் என்னவொரு புனிதமான ஏக்கம்!

அன்று கிறிஸ்து மஸ்... இவன் கிராமத்திற்கு வந்த கிறிஸ்துமஸ் தாத்தா எல்லாருக்கும் பரிசுகளை வழங்கிக் கொண்டு இருந்தார். சிறுவன் ஜோன்ஸ் முறை வந்ததும் ஒரு பரிசுப் பெட்டியை கொடுத்தார்.

""ஊஹும். எனக்கு இந்த பரிசு வேணாம் தாத்தா,'' என்றான்.

""அப்படியெல்லாம் சொல்லக் கூடாது தாத்தா கொடுக்கும் பரிசை வாங்கிக் கொள்,'' என்றாள் அம்மா பிலோமினா.


""மகனே! இந்த பரிசு வேணாம்னா வேறு என்னதான் வேண்டும்? கேள் மகனே என்றார் கிறிஸ்துமஸ் தாத்தா.
""எனக்கு உங்கள் தலையில் உள்ள தொப்பி தான் வேண்டும்,'' என்றான்.
""என்ன? இந்த தொப்பியா? அட... இந்த பழைய தொப்பியா, உனக்கு இது எதுக்கு ராஜா?''
""எதுக்குத் தெரியுமா? இந்த தொப்பியை எடுத்துக்கிட்டு வீடு வீடா போவேன். இதுலே அவுங்க போடற காசையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா சேத்துவெச்சு... அப்புறம் தொப்பி நிறைய காசு சேர்ந்ததும்... அதை வெச்சு இந்த ஊர்லே ஒரு மாதா கோவில் கட்டுவேன். அதுலே ஒரு பெரிய மேரியம்மா பொம்மை... அவுக கை அணைப்பிலே அந்த அழகு பாப்பா பொம்மை வைப்பேன், அப்புறம் நா வெள்ளை உடுப்பு மாட்டிக்கிட்டு, இந்த ஊரையே கூட்டி மெழுகுவத்தி ஏத்தி வெச்சு ஜெபம் செய்வேன்.


""அந்த கனவில் தன்னையே மறந்து நீளமாக பேசிக் கொண்டே போக... கூட்டத்தில் ஒரே சிரிப்பு!
அப்படியே அவனை அள்ளி அணைத்து ""நிச்சயமாக உன் ஆசை நிறைவேற கர்த்தர் அருள்புரிவார்!'' என்று சொல்லி தன் தலையிலிருந்த தொப்பியை கழற்றி... அதில் ஒரு நூறு ரூபாய் நோட்டை போட்டு ""இது என் முதல் காணிக்கை,'' என்று சொல்லி அவனிடம் கொடுத்தார்.
அதனுடன் ஏராளமான பரிசுப் பொருட்களையும் அவனுக்கு கொடுத்து அவனை மகிழ்வித்தார். அதன்பின் நேரம் கிடைத்த போதெல்லாம் தன் தொப்பியுடன் ஊரை ஒரு ரண்வுட் அடிப்பான். இவனைப் பற்றி தான் அந்த ஊர் மக்களுக்கு தெரிந்துவிட்டதே. அதனால் தங்களின் சக்திக்கு ஏற்றவாறு அவனின் தொப்பியில் காசு போடுவர். உடனே அதனை தன் குடிசையிலுள்ள சின்ன மண்கலயத்தில் போட்டு மூடி வைப்பான்.


ஓ! அன்று நகரத்திற்குப் போய் பணம் சேர்க்கும் எண்ணத்துடன் புறப்பட்டான் சிறுவன். திடீரென ரோட்டில் ஒரே சலசலப்பு... ""மன்னர் வந்து கொண்டிருந்தார். உம்... சீக்கிரம் அனைவரும் நகர்ந்து ஒரு ஓரமாக நின்று தத்தம் தலையிலுள்ள தொப்பியை கழற்றி விட்டு, சிரம் தாழ்த்தி மன்னருக்கு மரியாதை செய்யுங்கள்...'' என்று கட்டளை இட்டுக் கொண்டே இரண்டு குதிரை வீரர்கள் முன்னேறிக் கொண்டிருந்தனர்.

அவசர அவசரமாக கூட்டத்தினர் தங்கள், தொப்பிகளை கழற்றி கையில் வைத்துக் கொண்டு சிரம் தாழ்த்தி நின்றனர். சிறுவனும் தன் தலையில் இருந்த அந்த சிவப்பு நிற தொப்பியை கழற்றி கையில் வைத்துக் கொண்டு தலை வணங்கி நின்றான். மன்னனின் வெள்ளி கோச் வண்டி அவர்களை கடந்து சென்றுவிட்டதற்கு அறிகுறியாக குதிரைகளின் குளம் பொலியும்... வீரர்களின் வாழ்த்து ஒலியும் விண்ணை முட்டின என்றால் மிகையாகாது. திடீரென மன்னன் மிக ஆங்காரமாக கத்தினான்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவப்பு குல்லாவின் கதை! Empty Re: சிவப்பு குல்லாவின் கதை!

Post by சிவா Sat Sep 05, 2009 12:02 am

""ஏய்! வண்டியை பின்புறமாக செலுத்து,'' என்றான்.
""என்ன விபரீதம்'' என்று உள்ளூற திகைத்துக் கொண்டனர் அருகிலிருந்த மந்திரிகள். பின்னோக்கிச் சென்ற வண்டி சிறுவன் நிற்கும் இடத்திற்கு பக்கத்தில் சென்றதும் தலையில் சிவப்பு குல்லாயுடன் நிற்கும் சிறுவன் ஜோன்ஸைக் கண்டதும் கண்களில் அனல் பறக்க ""டேய்! உனக்கு எவ்வளவு திமிர் இருந்தால் இப்படி தலையில் குல்லாயுடன் நிற்பாய்?'' என்றார்.


நடுநடுங்கிப் போனவன் சட்டென்று தன் தலையில் முளைத்திருந்த குல்லாயை எடுக்க... அக்கணமே அவன் தலையில் மற்றுமொரு சிவப்பு குல்லாய். இதனைக் கண்டு கூட்டம் வெலவெலத்தது... ""இந்த அயோக்கிய சிறுவனை அரண்மனைக்கு இழுத்து வாருங்கள்,'' என்று கர்ஜித்தான்.
மிக முரட்டுத்தனமாக இரண்டு சிப்பாய்கள் சிறுவனை இழுத்துச் சென்று அரண்மனை முன் நிறுத்தினான். அரசபையிலும் வெளியிலும் ஒரே கூட்டம். மிக பீதியுடன் அழுது கொண்டே சபை நடுவே நிற்கப்பட்டிருந்த சிறுவனின் தலையிலிருந்த தொப்பியை எடுக்க அரசன் உத்தரவிட, சிப்பாய் ஒருவன் அதை எடுத்ததும்... இப்போது அந்த சிவப்பு குல்லாய்க்கு பதில் விலையுயர்ந்த ஒரு நீலக் குல்லாயை எடுக்க எடுக்க விதவிதமான நிறங்களில் ஒற்றைவிட ஒன்று மிஞ்சும் அழகிலும், மதிப்பிலும் இது என்ன மாயவித்தை. இது எப்படி சாத்தியம்? அரசருக்கு விசேஷமாக தொப்பி தயாரிக்கும் நிபுணர் அரண்டு போனார்.


""மன்னா! இத்தனை உயர் ரக வேலைப்பாடுகளுடன் கூடிய விலை மதிப்புள்ள தொப்பிகளை மனிதர்களால் செய்யவே முடியாது,'' என்று அடித்து கூறிவிட்டனர்.


""இவன் ஒரு சூனியக்காரன். இவனை உயிரோடு விட்டு வைப்பது நம் நாட்டிற்கே ஆபத்து... இவனை அரண்மனை மேல் மாடத்திற்கு இழுத்து செல்லுங்கள். அங்கிருந்து தூக்கி கோட்டை வாசலைத் தாண்டி அகழியில் வீசி எறியுங்கள். அகழியிலுள்ள முதலைகளுக்கு இந்த சூனியக்காரன் ஆகாரம் ஆகட்டும்,'' என்றான் அந்த கொடுங்கோல் அரசன்.

மேல்மாடத்திற்கு செல்லும் வழியெல்லாம் சிறுவனின் தலையிலிருந்து எடுக்கப்பட்ட தொப்பிகள்! மேல் மாடத்தில் மன்னன் தன் மந்திரிகள் புடைசூழ நிற்க மதிற்சுவர் ஓரமாக, முகத்தில் எவ்வித சலனமும் இன்றி நின்றிருந்தான் சிறுவன். உம். விசிறி எறியுங்கள் இந்த சூனியக்காரனை என்று அரசன் கர்ஜிக்க... கடைசியாக சிறுவன் தலையில் இருந்த தொப்பியை ஒரு வீரன் தட்டிவிட... இரண்டு வீரர்கள் சிறுவனை இருபுறமும் பற்றி சுழற்றி எறிய எத்தனிக்கும் தருணத்தில் அரசனின் கண்கள் அப்படியே நிலைகுத்தி நின்றன.

""நிறுத்துங்கள்!'' என்று அலறினான் அரசன். சிறுவனின் தலையில் இப்போது வீற்றிருப்பது விலை மதிப்பற்ற, கண்களைப் பறிக்கும் வைரங்களும், வைடூரியங்களும், பதிக்கப்பட்ட ஒரு வைரக் கிரீடம்! அதன் ஒளி அங்கே கூடியிருந்த அனைவரின் கண்களையும் கூசச் செய்தது. அந்த கிரீடத்தை தனதாக்கிக் கொண்டு விட வேண்டும் என்ற பேராசையில் தான் அந்த அரசர் ""நிறுத்துங்கள்,'' என்று அலறினான்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவப்பு குல்லாவின் கதை! Empty Re: சிவப்பு குல்லாவின் கதை!

Post by சிவா Sat Sep 05, 2009 12:03 am

""டேய்! பையா! உன் தலையிலிருக்கும் அந்த கிரீடத்தை எனக்கு கொடுத்து விடு இதற்கு பதிலாக உனக்கு என்ன வேண்டும்?''

""எனக்கு ஒண்ணும் வேணாம். இந்த கிரீடத்தை நீயே வெச்சுக்கோ... நா மொதல்லே போட்டிருந்த அந்த சிவப்பு குல்லாயை அந்த கிறிஸ்துமஸ் தாத்தாகிட்டே கொடுத்துடு. அந்த குல்லாயிலே நிறைய பணம் சேத்து எங்க ஊர்லே ஒரு பெரிய மாதா கோவில் கட்டணும்னு நினைச்சேன். நா தான் சாகப்போறேனே. இனிமே யார் கட்டப் போறாங்க. ரோஸி அக்கா வீட்லதான் என் அம்மா வேலை செய்யறாக... அவுகளுக்கு செய்தி சொல்லிடு. முகத்தில் எவ்வித சலனமுமின்றி சிறுவன் மழலையில் மிழற்ற மிழற்ற அப்படியே பதறினான் மன்னன்.

""ஓ! இந்த சின்னக் குல்லாயில் பணம் சேர்த்து நிச்சயமாக இது தேவனால் ஆசீர்வதிக்கப்பட்ட குல்லாய். இல்லையெனில் எப்படி இத்தனை அபூர்வ வகை குல்லாய்கள் இவனின் தலையில் தோன்றிக் கொண்டே இருக்குங்களே? இந்த விலை மதிப்பற்ற தங்கக் கிரீடத்தை நீயே எடுத்துக் கொள்ளுங்கள்.

""என்னை கொல்லாமல் விட்டு விடு. இந்த குல்லாய்க்கு நிறைய பணம் கொடு என்று என்னிடம் பேரம் பேசலாமே? பேசவில்லையே... ஏன்? எதற்காக? யாருக்காக இவன் சிலுவையை சுமக்கிறான்? மன்னனின் நீர்பூத்த கண்களில் சிறுவன் தெரியவில்லை. அந்த விலைமதிப்பற்ற கிரீடத்தை அணிந்து கொண்டு நின்றது மாட்டுத் தொழுவத்தில் உதித்த அந்த தேவகுமாரன்தான்!

தன்னையும் மீறி ""ஜீஸஸ்...'' என்று அலறிய படியே அச்சிறுவனை வாரி அணைத்துக் கொண்டான்! அடுத்த அரை மணி நேரத்தில் தன் மந்திரி பிரதாணிகளுடன் சிறுவனின் கிராமத்தை நோக்கிச் சென்றது அரசனின் வெள்ளிகோச். அதில் அரசனின் மடியில் சிறுவன். ஊரே கூடி அரசனை வரவேற்றது. அந்த குல்லாய் பயலை பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்தது.


அடுத்து வந்த நாட்களில் அந்த கிராமமே புதுப்பிக்கப்பட்டு விட்டது. மிகப் பெரிய மாதாகோவில் எழும்பியது. கிறிஸ்துமஸ் குல்லா தாத்தா தான் வெள்ளை உடுப்பு போட்டுகிட்டு பூசை செய்ய வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தவன்... அவருக்கு இணையாக தானும் வெள்ளை உடுப்பை மாட்டிக் கொண்டு பூசை நேரத்தில் அவருக்கு உதவுவான்.


பின்னர் போப்பாண்டவரின் ஆசியுடன் வாடிகனிலிருந்து வந்த பிஷப் ஆண்ட்ரூ தான் இக்கோவிலின் பொறுப்புகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டார். அவரிடமிருந்து பயிற்சி பெற்ற சிறுவன் பிற்காலத்தில் பாதர் ஆகி இக்கோவிலை நடத்திய காலத்தில் இந்த தேவாலயத்தில் அந்த குட்டிப் பாப்பாவும் அவனின் அம்மாவும் நடத்திய அற்புதங்களுக்கு எல்லையே இல்லை. உலகின் பல பாகங்களிலிருந்து மக்கள் இங்கு வந்து கூட ஆரம்பித்தனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவப்பு குல்லாவின் கதை! Empty Re: சிவப்பு குல்லாவின் கதை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum