புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலைஞரின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்திய ஆனந்த விகடன்- தி மு க அதிர்ச்சி
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
கட்சித் தலைவராக கருணாநிதியைத் தேர்ந்தெடுத்தது லட்சக்கணக்கான தொண்டர்கள்!ஆட்சி முதல்வராக கருணாநிதியை அமரவைத்து அழகு பார்த்தது கோடிக்கணக்கான மக்கள்! ஆனால், உண்மையில் கட்சியையும் ஆட்சியையும் கைக்குள் வைத்து, பவர் பாலிடிக்ஸைப் பக்குவமாகச் செய்துவருபவர்கள் யார் யார் தெரியுமா?
'திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றும் சங்கர மடம் அல்ல. எனக்குப் பின்னால் என் மகன். அவருக்குப் பின்னால் அவரது மகன் என்று பட்டத்துக்கு வருவதற்கு! இந்தக் கட்சியில் பொதுக்குழு, செயற்குழு இருக்கிறது. அதுதான் அனைத்தையும் தீர்மானிக்கும்’ என்பது கருணாநிதி அடிக்கடி சொல்லும் வார்த்தைகள். ஆனால், கட்சியின் பொதுக்குழு, செயற்குழுவை மிஞ்சியதாக இருக்கிறது இந்த ஹோம் கேபினெட்!
கருணாநிதியின் தலைமையில் தி.மு.க. வந்த பிறகு நடந்த இரண்டு முக்கியமான பிரிவுகளும் அவரது மகன்களுக்காகவே நடந்தன என்பதுதான் அரசியல் வரலாறு அறிந்தவர்கள் கருத்து. இன்று லட்சக்கணக்கான தொண்டர்களைக்கொண்ட கட்சியின் தலைமை அலுவலகத்துக்குள் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் புகுந்து, மணிக்கணக்கில் இரண்டு முறை விசாரணை நடத்தி முடித்ததற்கும் இதே குடும்பமே காரணமானது. 'ஒரு தாயின் வயிற்றில் பிறக்க முடியாத காரணத்தால் தனித் தனி தாயின் வயிற்றில் பிறந்த அண்ணன் தம்பிகள் நாம்’ என்றார் அண்ணா. ஆனால், இன்று ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் மட்டும்தான் கழகம் என்று ஆகிவிட்டது!
42 ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருக்கிறார் கருணாநிதி. 'தலைமை நாற்காலியைப் பெரியாருக்காகக் காலியாக வைத்திருக்கிறேன். பொதுச் செயலாளர் பதவி மட்டும்தான் இனி தி.மு.க-வில் இருக்கும்’ என்ற அண்ணாவின் முழக்கம்தான், அவரைக் கடற்கரை ஓரத்தில் புதைக்கும்போது ஓரமாகத் தூக்கிப் போடப்பட்ட முதல் கொள்கை.
அடுத்த தலைவர் நாவலர் நெடுஞ்செழியனா, கலைஞர் கருணாநிதியா என்ற சண்டை வந்தபோது, தலைவராக கருணாநிதியும் ,பொதுச் செயலாளராக நெடுஞ்செழியனும் உட்கார வைக்கப்பட்டார்கள். அதில் இருந்து 10-வது முறையாக பொதுக்குழு மூலமாகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார் கருணாநிதி.
1980-ல் கட்சிக்குள் மெதுவாகத் தனது மகன் ஸ்டாலினை கருணாநிதி அழைத்து வந்தார். இளைஞர் அணிச் செயலாளர் என்ற பொறுப்பு தரப்பட்டது. பொதுவாகவே, கட்சியில் துணை அமைப்புகள் சும்மா ஒப்புக்குத்தான் இருக்கும். ஆனால், ஸ்டாலின் வந்த பிறகு இளைஞர் அணி, தலைமைக் கழகத்துக்கு இணையான அணியாக மாற்றப்பட்டது. அறிவாலயம் கருணாநிதிக்கு என்றால்... அன்பகம் ஸ்டாலினுக்கு.
இளைஞர் அணியில் மாவட்ட அமைப்பாளர்கள்... கட்சியின் மாவட்டச் செயலாளர்களாகவே வலம் வந்தார்கள். அதன் பிறகு அமைச்சரவையில் ஸ்டாலின் ஆட்களுக்குப் பிரதிநிதித்துவம் தரப்பட்டது. வேட்பாளர் தேர்வில் கோட்டா வந்தது. ஸ்டாலின் துணைப் பொதுச் செயலாளர் ஆனார். அதன் பிறகு பொருளாளர் பதவி கிடைத்தது. அடுத்து அமைச்சர், துணை முதலமைச்சராகவும் ஆனார். இன்று, ஆட்சியும் கட்சியும் இவரது கண் அசைவில் தான் நடக்கின்றன.
கருணாநிதியின் மருமகனாகவும் மனசாட்சியாகவும் இருந்த முரசொலி மாறனின் மறைவுக்குப் பிறகு, அவரது இரண்டாவது மகன் தயாநிதியை மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் நிறுத்தினார்கள். உடனேயே கேபினெட் அமைச்சராக்கப்பட்டார். டெல்லி அரசியல் இவரது கட்டுப்பாட்டுக்கு வந்தது. இவரது அண்ணன் கலாநிதி மாறன் நடத்தி வந்த நாளிதழில் ஒரு கருத்துக்கணிப்பு வெளியானதைத் தொடர்ந்து குடும்பத்துக்குள் குழப்பம். நேரடி அரசியலில் இறங்காமல் அதே சமயம், தென் மாவட்டத்து அரசியலைத் தனது ஆளுகைக்குள் வைத்திருந்த மு.க.அழகிரியின் செல்வாக்கை அந்தக் கருத்துக் கணிப்பு குறைத்து மதிப்பிட்டு இருந்தது. கலாநிதி, தயாநிதி ஆகியோருக்கும் அழகிரிக்குமான மோதலில், கருணாநிதி மகன் பக்கம்தான் நின்றார்.
தயாநிதி, கட்சியைவிட்டு நீக்கப்பட்டார். இனி, டெல்லியைக் கவனிக்க யார் என்ற கேள்வி எழுந்தபோது, கருணாநிதி தனது மகள் கனிமொழியை மாநிலங்களவை உறுப்பினராக ஆக்கினார். அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் அழகிரியும் நிற்க... குடும்பக் கோபங்கள் தணிந்து தயாநிதியும் மறுபடி நுழைய... ஒரே குடும்பத்தில் இருந்து ஐந்து பேர் ( கருணாநிதி ஸ்டாலின் அழகிரி தயாநிதி கனிமொழி )கட்சியின் முக்கியப் பதவிகளைப் பிடித்தார்கள்.
இன்றைய நிலையில் தி.மு.க-வின் ஐம்பெரும் தலைவர்கள் இவர்கள்தான்!
குடும்பத் தலைவர் ஒருவர் அரசியலில் இருந்தால், அவரை நம்பி மற்றவர்கள் அமைதியாக இருப்பார்கள். ஆனால், இங்கே எல்லோருமே தலை எடுத்து வலம் வருகிறார்கள்.
ராஜாத்தி அம்மாளைப் பார்க்க அவரது சி.ஐ.டி. காலனி வீட்டிலோ அல்லது அவர் ஆழ்வார்பேட்டைப் பகுதியில் நடத்தி வரும் ராயல் ஃபர்னிச்சர் கடையிலோ எப்போதும் கூட்டம் இருக்கும். அவரது கோட்டாவில் அமைச்சராக வந்தவர் பூங்கோதை.
ஊழல் வழக்கில் சிக்கிய ஒருவரைக் காப்பாற்ற பூங்கோதை முயற்சித்ததாகத் தகவல் கசிந்து, அவரது பதவியையே பறித்தார் கருணாநிதி. அப்படிப்பட்ட பூங்கோதை மறுபடியும் கேபினெட்டுக்குள் நுழைத்ததும்... அழகிரி குறித்து நீரா ராடியாவிடம் தரக்குறைவாக கமென்ட் அடித்த பூங்கோதைக்கே ஆலங்குளம் தொகுதியில் மீண்டும் போட்டியிட அனுமதி வாங்கித் தந்ததும், ராஜாத்தியின் ராஜ்யத்தை ஊருக்குச் சொல்லும்.
கனிமொழிக்குத் தரப்படும் முக்கியத்துவம் கருணாநிதியின் இன்னொரு மகளான செல்வியைச் சினம்கொள்ளவைத்தது. அவரே அப்பாவுக்காகப் பிரசாரம் செய்வதும், தொகுதி மக்களிடம் குறை கேட்கப் போவதுமாக எப்போதாவது செய்கிறார்.
கருணாநிதியின் கடைசி மகனான தமிழரசு, சேப்பாக்கம் தொகுதியைக் கவனித்துக்கொள்கிறார். மதுரையில் அழகிரிக்கு இணையான மரியாதை அவரது மனைவி காந்திக்குத் தரப்படுகிறது. தனித் தனி கட் அவுட்டுகளில் காந்தி சிரிக்கிறார். அவரது மகள் கயல்விழி, தி.மு.க-வின் பிரசாரக் குழுச் செயலாளர். அவரது கணவர், வெங்கடேஷ் தென் மாவட்ட மந்திரிகளைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். செல்வி மகள் எழிலரசியின் கணவர் டாக்டர் ஜோதிமணி, இப்போது வளர்ந்து வரும் முக்கிய மான அதிகார மையம்!
இந்த ஐந்து ஆண்டு காலத்தில் சினிமாக்காரர்கள் சின்னாபின்னமானதைப் போல வேறு யாரும் ஆகவில்லை! திரைத் துறையில் இருந்துதான் கருணாநிதி அரசியலுக்கு வந்தார் என்பதும், அவரது மேகலா பிக்சர்ஸ் கதைகளும் பழைய விஷயங்கள். கடந்த 20 ஆண்டுகளாக இந்தத் துறையில் சன் டி.வி. கால் பதித்து புதிய படங்களை வாங்கினார்கள். 'அவர்களுக்கு விற்பனை செய்யப்படாத படங்களை ரேட்டிங் குறைத்துக் காண்பிக்கிறார்கள் என்ற புகார்கள் எழுந்தன. குடும்பத்துக்குள் குழப்பம் ஏற்பட்ட சமயத்தில் கருணாநிதியே 'கலைஞர் டி.வி.’ என்ற தனிக் கடையைத் தொடங்கினார். படங்கள் வாங்குவதில் சன் - கலைஞர் தொலைக்காட்சிகளுக்குள் போட்டி கிளம்பியது. இதில் பல தயாரிப்பாளர்கள் மூளை குழம்பிப் போனார்கள்.
அடுத்து படத் தயாரிப்புகளில் வாரிசுகள் குதித்தார்கள். ரெட் ஜெயன்ட் மூவீஸ் ஆரம்பித்தார் ஸ்டாலினின் மகன் உதயநிதி. க்ளவுட் நைன் தொடங்கினார் அழகிரியின் மகன் துரை தயாநிதி. பெரிய நடிகர்களை இவர்கள் குத்தகைக்கு எடுக்க ஆரம்பித்தார்கள். கால்ஷீட் கொடுக்காத நடிகர்களை மிரட்டுவது வரை நிலவரம் கலவரம் ஆனது. தியேட்டர்களை மொத்தமாகக் குத்தகைக்கு எடுப்பதும்... தங்கள் படத்தை ரிலீஸ் பண்ண, மற்ற படங்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துவதுமான சோகக் கதைகளை எந்தத் தயாரிப்பாளர்களாலும் சொல்ல முடியவில்லை.
பாராட்டு விழாக்களுக்கு நடிகர்களை வரவழைக்க மிரட்டுவதை மேடை ஏறி அஜீத் சொன்னார். விஜய் கஷ்டம் ஊர் அறிந்தது. காலம் காலமாக தி.மு.க-காரராக அறிமுகமான அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன், ஜெயலலிதா வைப் போய்ப் பார்த்தார். பல தயாரிப்பாளர்கள் ரகசியமாகப் போய் ஜெயலலிதாவை சந்தித்துத் திரும்பினார்கள்.
தமிழரசுவின் மகன் அருள்நிதி, 'வம்சம்’ படத்தில் நடித்து ஹீரோ ஆனார். கருணாநிதியின் அக்கா மகன் அமிர்தம் கலைஞர் டி.வி -யைக் கவனித்து வருகிறார். அவருக்கு உதவியாக அவரது மகன், குணாநிதியும் இருக்கிறார்.
கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவின் மகன் மு.க.முத்து. அவரது மகன் அறிவுநிதி, சினிமா வில் பாடுகிறார். சென்னையில் திடீரென அவரது கட்-அவுட்கள் முளைக்கும். அதை கருணாநிதி குடும்ப உறுப்பினரே கிழித்துவிட்டார். 'நான் கலைஞரின் மூத்த பேரன். அந்த அந்தஸ்தை வேறு யாரும் பறிக்க முடியாது’ என்று இவர் சொல்லி வருவது, சினிமா எடுக்க வேண்டிய கிளைக் கதைகளில் ஒன்று!
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வரை தயாளுவை எந்த மீடியாக்களும் சீண்டியது இல்லை. முக்கியமான கூட்டங்களுக்கு மட்டும் வருகை தரும் அவர், இரண்டு ஆண்டுகளாக எதிலும் கலந்துகொள்ளவில்லை.
உடல்நிலையைக் காரணம் காட்டி அமைதியானார். கலைஞர் டி.வி-க்கான பங்குகளில் 60 சதவிகிதம் அவருக்கு உண்டு என்பதுகூட சிறு தகவலாகத்தான் இருந்தது. ஆனால், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்புடைய ஷாகித் பால்வாவிடம் கலைஞர் டி.வி. 214 கோடிகளை வாங்கியது என்பதை சி.பி.ஐ. தனது அறிக்கையில் சொன்னதுமே, தயாளு அகில இந்தியா முழுவதும் அறியப்பட்டார். 'இத்தனை வருஷம் சும்மா இருந்த என்னை இப்படி மாட்டிவிட்டுட்டீங்களே’ என்று கருணாநிதியிடம் வருத்தப்படத்தான் முடிந்தது தயாளுவால். நிச்சயம் அவரிடம் விசாரித்துதான் ஆக வேண்டும் என்று சி.பி.ஐ. அடம்பிடிக்க.... தயாளு சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு அழைத்து வரப் பட்டார். இதோடு சி.பி.ஐ. விடுகிறதா என்பது தெரிய வில்லை. முழு க்ளைமாக்ஸை மார்ச் 31 அன்று பார்க்கலாம்!
இவருக்கு நேர் மாறானவர் ராஜாத்தி! எப்போதும் சர்ச்சைகள் இவரை வளைய வரும். சர்க்காரியா கமிஷன் விசாரணையிலேயே அவர் பெயர் வந்தது. இப்போது ஸ்பெக்ட்ரம் தரகர் நீரா ராடியாவுடன் ராஜாத்தியும் அவரது ஆடிட்டர் ரத்னமும் பேசியதும், வோல்டாஸ் கட்டடத்தைக் கை மாற்றித் தரும் விவகாரத்தில் ராஜாத்தியின் உதவியாளர் சரவணன் சம்பந்தப்பட்டதும்... முற்றுப்புள்ளி வைக்கப்படாத பெரிய ரகசியங்கள். ராடியா கைதானால் இவர்களுக்கும் சிக்கல் வரலாம்!
கருணாநிதிக்கு ஏற்பட்ட முதல் அவமானம் - அவரது மகன் முத்து, ஜெயலலிதாவைச் சந்தித்தது. வறுமையில் தான் வாடுவதாகச் சொல்லி 5 லட்சம் பணத்தைப் பெற்றுக்கொண்டார்!
மதுரை கவுன்சிலர் லீலாவதி கொலையில் சிலர் கைது செய்யப்பட்டதும், அவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதும் நடந்தது. தண்டனைக் கைதிகளான அவர்கள் முன்கூட்டியே விடுதலை ஆனது வரை சர்ச்சை தொடர்ந்தது!
தென் மாவட்டத்தில் தன்னுடைய பேச்சைக் கேட்காமல் அழகிரி தன்னிச்சையாகச் செயல்பட்டதாகச் சொல்லி, அவரைக் கட்சியைவிட்டே 2000-ம் ஆண்டில் நீக்கினார் கருணாநிதி. ஆட்சி மாறி கருணாநிதி கைது செய்யப்பட்ட பிறகுதான் மீண்டும் அழகிரி குடும்பத்துக்குள் சேர்த்துக்கொள்ளப்பட்டார்!
தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் அழகிரி சேர்க்கப்பட்டு, கைது செய்யப்பட்டார். அந்த வழக்கு விசாரணையின் இறுதியில் அழகிரி விடுதலை செய்யப்பட்டார். இன்று வரை தென் மாவட்டங்களில் மறக்க முடியாத குற்றச்சாட்டு இது!
ஸ்டாலினுக்கு மிக நெருக்கமாக இருந்த அண்ணா நகர் ரமேஷின் தற்கொலை இன்று வரை மர்மம் உடைபடாத ரகசியம். அந்தத் தற்கொலைக்குப் பரிகாரமும் செய்யப்படவில்லை. பச்சைக் குழந்தைகள் மூவரும் மனைவியுமாக ரமேஷ§டன் இறந்த ஐந்து மரணங்களுக்கான குற்றவாளிகளை ஆட்சியில் இருந்த ஐந்து ஆண்டுகளில் இவர்கள் கண்டுபிடிக்கவும் இல்லை. தண்டிக்கவும் இல்லை!
மதுரை தினகரன் நாளிதழில் வெளியான கருத்துக் கணிப்பைத் தொடர்ந்து அந்த அலுவலகம் எரிக்கப்பட்டது. வினோத்குமார், கோபிநாத், முத்துராமலிங்கம் ஆகிய மூவரது மரணங்கள் தொடர்பான வழக்கு அப்பீலில் இன்று வரைக்கும் இருக்கிறது!
மத்திய அமைச்சர் பதவியை அழகிரி, தயாநிதி மாறன், கனிமொழி ஆகிய மூவருக்கும் வாங்குவதற்காக கருணாநிதி டெல்லிக்குச் சென்று காத்திருந்ததும்... அதைவைத்து ஆங்கில, இந்தி மீடியாக்கள் கமென்ட் அடித்ததும் நடந்தது. அதுவரை மரியாதைக்குரிய மனிதராக டெல்லி மீடியாக்களில் சொல்லப்பட்ட கருணாநிதி, முதன்முதலாக ஏளனம் செய்யப்பட்டார்!
சென்னையில் உள்ள பிரபல ஓட்டல்களில் ஏதாவது பேரனை வைத்து ஏதாவது ஒரு புகார் எழுந்து அடங்குவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. போலீஸாரும் ஹோட்டல் அதிபர்களும் கை பிசைந்து நிற்கிறார்கள்!
கனிமொழியும் ஸ்பெக்ட்ரம் தரகர் நீரா ராடியாவும் பேசிய தொலைபேசி உரையாடல்கள் இன்று வரை இரண்டு தரப்பாலும் மறுக்கப்படவில்லை!
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், கலைஞர் டி.வி-யும் கருணாநிதியின் மனைவி தயாளு, மகள் கனிமொழி ஆகியோரும் சிக்கி இருக்கிறார்கள். இந்தச் சிக்கலில் இருந்து அவர்கள் எப்போது விடுபடுவார்கள் என்பது சி.பி.ஐ-க்கே தெரியாது!
அடுத்து புதிய வாரிசுகள் மெள்ள உள்ளே நுழைகிறார்கள். செல்வியின் மகள் எழிலரசி வீணை கற்றுக்கொண்டது பாராட்டத்தக்க அம்சம். அதற்காக, கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அவரது கச்சேரி கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டது.
ஸ்டாலின் மருமகள் கிருத்திகா, ஒரு பத்திரிகையாளராக வலம் வருகிறார். அவரது குறும்படங்கள் பெரிதாகக் காட்டப்படுகின்றன. ஸ்டாலின் மகள் செந்தாமரை, சென்னை வேளச்சேரி பகுதியில் சன் ஷைன் என்ற பெயரில் பள்ளியைத் தொடங்கி, கல்வித் துறைக்குள் நுழைந்திருக்கிறார். அவரது கணவர், சபரீசன் பெயர் அவ்வப்போது சர்ச்சை களில் அடிபடும்.
தமிழரசுவின் மகள் பூங்குழலியும் அவரது கணவரும் அடுத்து வளர்ந்து வருகிறார்கள். கடைசியாக கனிமொழியின் மகன் ஆதித்யன் பற்றிச் சொல்லியாக வேண்டும்.
சில மந்திரிகள் அவருடன் கிரிக்கெட் விளையாடி காக்கா பிடிக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!
நன்றி : விகடன் மற்றும் தமிழ் செய்திகள் இணையம்.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- யாதுமானவள்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
சபாஷ் ஆனந்தவிகடன்! Well Analysed Article.
தமிழகத்தின் அகம் உறைந்தநோய் இந்தக் குடும்ப அரசியல். மாற்றுவழி இல்லையே தமிழன் என்செய்வான்?
தமிழகத்தின் அகம் உறைந்தநோய் இந்தக் குடும்ப அரசியல். மாற்றுவழி இல்லையே தமிழன் என்செய்வான்?
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யாதுமானவள்
அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
திருந்தாத மக்கள் இருக்கும் வரை இவர்கள் குடும்பம் தழைத்துக்கொண்டு தான் இருக்கும்.
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
இதை படித்தாவது மக்கள் ஏற்க்கனவே செய்த தவறை
வரும் தேர்தலில் செய்யாமல் இருந்தால் நம் யாவருக்கும் நலம்
வரும் தேர்தலில் செய்யாமல் இருந்தால் நம் யாவருக்கும் நலம்
- robinhoodபண்பாளர்
- பதிவுகள் : 214
இணைந்தது : 08/02/2011
மன்னர் ஆட்சியை போலல்லவா இருக்கு .... ஜனநாயகத்தில் இப்படி கூட நடக்கும் என்று எடுத்துரைத்த ஆனந்த விகடனுக்கு நன்றி ...... மக்கள் எல்லோரும் சேர்ந்து ..இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டுவோம்...
நல்ல விமர்சனம்
குடும்ப ஆட்சி ஒருபோதும் சிறந்ததாக காட்டப்படுவதில்லை
மக்கள் முனைந்தால் இவற்றை மாற்றியமைக்கலாம்
பிரபலமானவர்களுக்கு உருவாகுன்ற வழமையான விமர்சனங்கள்தான் இங்கும்
இந்தியாவில் மாத்திரமல்ல இந்த நிலை இலங்கையில் மூட அவ்வாறே நடந்தேறிக்கொண்டிருக்கிறது
மக்கள் விழிக்கும் காலம் வரை இது தொடரும்
எழும்பும்வரை தட்டி எழுப்பிக்கொண்டிருப்போம்
நல்ல பகிர்வு அண்ணா எதிர்கட்சிகளைப்பற்றியும் தேடிப்பகிருங்கள் பார்வையிடக்காத்திருக்கிறோம்

நேசமுடன் ஹாசிம்
ஹாசிம்...
எல்லோர் மனதிலும் எழும் உஙக்ள் வினாவுக்கு இன்று பதிலளிக்கிறேன்..
எனது நாற்பத்தெட்டாண்டு அகவைகளில் நான் அதிகம் பார்த்தது கலைஞருடைய ஆட்சியைத்தான்.
1967 முதல் 1977 வரையிலும் பிறகு எம்ஜிஆருக்குப்பிறகும் ஆக இருபதாண்டு கால கலைஞர் ஆட்சியை நான் கவனித்துவிட்டேன்.
அரசியலில் அநாகரிகம் என்பதைப் புகுத்திய்வர் கருணாநிதி என்பது முதல் ஊழலை திறம்படச் செய்தவர் என்பது வரையும் மட்டும்ல்ல ரவுடிக்கும்பலை வளர்த்து அநாகரிக அரசியலுக்கு வித்திட்டவரும் கருணாநிதி தான்.
இவை மட்டுமலல்.. தமிழினககாவலன் என்று சொல்லிக்கொண்டு பதவி போய்விடும் என்ற ஒரே காரணத்துக்காக எண்ணற்ற ஈழத்தமிழர்களின் அழிவை நிறுத்த அதிகாரமும் அறிவும் இருந்தும் வாளாவிருந்து எண்ணற்ற தமிழர்களின் மரணத்திற்கு தூண்டுகோலாய் இருந்ததும் கருணாநிதி மட்டும் தான்.
1972 ஆம் ஆண்டு எனது பத்தாண்டு அகவையில் அரிசியை ஆந்திராவுக்கு இரவோடிரவாக கடத்தி கொள்ளை லஞ்சம் அடித்துவிட்டு தமிழகத்தில் கருணாநிதி எற்படுத்திய செயற்கைப் பஞ்சத்தினால் அரிசி கிடைக்காமல் ஓராண்டு காலம் கப்பக்கிழங்கையும் ரவையும் புழுத்துப்போன கோதுமையையும் உண்டு வாழ்ந்த நேரடி அனுபவஸ்தன் நான்..
இப்போது சொல்லுங்கள்...
இத்தகு ஒரு தலைவன் இன்னும் ஆளவேண்டும். இத்தகு குடும்பம் மீண்டும் ஆள வேண்டும் என்று உங்கள் மனதார நினைப்பீர்களா...?
அனைவரும் குறிப்பிடும்படி ஜெயலலிதாவிடமும் எண்ணற்ற குறைகள் உண்டு... ஆயினும் இப்போதைக்கு மாற்று வேறு யார் என்று சொல்லுங்கள்..
உங்களது பல பதிவுகளில் நான் நடுநிலைமை இன்றி கலைஞரை மட்டும் தாக்குவதாக எண்ணி வருந்தி இருந்தமை கண்டேன்..
நீங்களே புரிந்துகொள்வீர்கள் என்று எண்ணியெ அமைதியாய் இருந்தேன்..
இப்போது சொல்லுஙக்ள் நான் செய்வது நியாயமில்லையா..?
ஒரு கடமையுள்ள குடிமகன் எதைச்செய்யவேண்டும் என்று எண்ணுகிறோமோ அதைத்தான் நான் செய்வதாக எண்ணி இருக்கிறேன்..
கூறுஙக்ள் ... தவறிருப்பின் திருத்திக் கொள்கிறேன்..

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4