ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

5 ஆண்டு காலத்தில் பல மடங்கு உயர்ந்துள்ள தி.மு.க. அமைச்சர்களின் சொத்துப் பட்டியல்!

Go down

5 ஆண்டு காலத்தில் பல மடங்கு உயர்ந்துள்ள தி.மு.க. அமைச்சர்களின் சொத்துப் பட்டியல்!  Empty 5 ஆண்டு காலத்தில் பல மடங்கு உயர்ந்துள்ள தி.மு.க. அமைச்சர்களின் சொத்துப் பட்டியல்!

Post by தாமு Mon Apr 11, 2011 6:01 am

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

முன்னாடியே சொல்லிப்புடறேன்..! தயவு செய்து இதைப் படிச்சிட்டு யாரும் வயிற்றெரிச்சல்படாதீங்க.! இந்த மாதிரி ஆளுங்களையெல்லாம் தேர்வு செஞ்சுருக்கோமேன்னு கொஞ்சம் வெட்கப்படுங்க..!

தேர்தல் வந்தால்தான், அரசியல்வாதிகளின் சொத்துப் பட்டியல்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன. 'வேட்பு மனுவோடு சொத்துப் பட்டியலையும் தாக்கல் செய்ய வேண்டும்!’ என்பது தேர்தல் கமிஷனின் விதி. ஆகவே, போன தேர்தலில் கணக்குக் காட்டியவர்கள், இப்போது மீண்டும் சொத்துகளைத் தூசு தட்டி இருக்கிறார்கள்.

கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் இவர்களின் சொத்துக் கணக்கு எந்த அளவுக்குக் குவிந்திருக்கும்? ஆடம்பர பங்களா, சொகுசு கார்கள், வெளிநாட்டுப் பயணங்கள், நிலங்கள், தொழிற்சாலைகள் என்று ஏகமாகக் குவித்து இருப்பார்கள். ஆனால், வேட்பு மனுக் கணக்குகளில் இவை எதுவும் இடம் பெறாது. சொத்துக் கணக்கில் இடம் பெறுவது எல்லாமே கண்துடைப்புத்தான்!

'ஏன், அடுத்த தேர்தல்வரைக்கும் இவர்கள் காத்திருக்க வேண்டும்? ஒவ்வோர் ஆண்டும் சொத்துக் கணக்கைத் தன்னிச்சையாகவே தாக்கல் செய்யலாமே?’ என்று பலரும் கேட்கத்தான் செய்கிறார்கள். ஜெயலலிதா இது குறித்துக் கேள்வி எழுப்பியதும், கருணாநிதி மட்டும் உடனே தனது சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்தார்.

'சபாநாயகர், முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் ஒவ்வோர் ஆண்டும் தங்களது சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் போடப்பட்டு பல ஆண்டுகளாக கும்பகர்ணத் தூக்கத்தில் இருக்கிறது!

அண்ணா மறைவுக்குப் பிறகு முதல்வரான கருணாநிதி, 1969-ல் ஆகஸ்ட் 27-ம் தேதி, 'சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் சொத்துக் கணக்கை வெளி​யிடுதல்’ தொடர்பாக அரசின் தீர்மானத்தை நிறைவேற்றினார்.


5 ஆண்டு காலத்தில் பல மடங்கு உயர்ந்துள்ள தி.மு.க. அமைச்சர்களின் சொத்துப் பட்டியல்!  Ministry

''எம்.எல்.ஏ-க்களாகவும், அமைச்சர்களாகவும் இருக்கும் மக்கள் பிரதிநிதிகள் பொது நலத்துக்காகத்தான் பாடுபட வேண்டும். நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ தாங்கள் நலம் பெறுவதற்காக அந்தப் பதவிகளை வகிக்கவில்லை என்று மக்கள் நம்பிக்கை​ கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு இருக்கிறது!'' என்று சொல்லி அந்த தீர்மானத்தை முன்மொழிந்தார் அன்றைய முதல்வர் கருணாநிதி.

இதன்படி பங்குகள், பங்கிருப்பு, பங்குச் சான்றிதழ்கள், கூட்டு வணிக சொத்து, ஈட்டுறுதி ஆவணங்கள், வங்கி இருப்புகள், மோட்டார் வண்டிகள், பொறுப்புரிமை விவரங்கள், அணிகலன்கள், தங்கம், விலை மதிப்புள்ள கற்கள் என்று ஒவ்வோர் ஆண்டும் எம்.எல்.ஏ-க்கள் தங்கள் சொத்துக் கணக்கை சட்டசபைக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

தீர்மானம் கொண்டு வரப்பட்ட 1967-69-ம் ஆண்டில் 234 எம்.எல்.ஏ-க்களில் 165 பேர் மட்டுமே சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்தனர். அதிலும், தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் 90 பேர்தான். அதன் பிறகு அடுத்தடுத்த ஆண்டுகளில் அது கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகிவிட்டது.

1989, 1996, 2006-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகும், கருணாநிதி முதல்வராக இருந்தும் அவர் போட்ட தீர்மானத்தை அவரே தூக்கி எறிந்துவிட்டார். 'தேர்தலில் நிற்க முடியாமல் போய்விடுமோ?’ என்று அஞ்சியே இப்போது அனைவரும் சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்து இருக்கிறார்களே தவிர, விருப்பத்துடன் அல்ல.

'சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது சொத்துக் கணக்கை வெளியிடுதல்’ தீர்மானத்தைக் கருணாநிதி கொண்டுவந்தபோது சொன்ன வார்த்தைகள் என்ன தெரியுமா?

''அனைவரும் நேர்மையான முறையில் கணக்குகளைக் காட்டுகிறோம் என்று உறுதியை அளிக்கிறோம். அதற்கு ஊனம் ஏற்படாமல் எல்லோரும் நடந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது!'' என்று சொன்னார். உபதேசம் மக்களுக்குத்தானோ?

தற்போது நடைபெறும் சட்டசபைத் தேர்தலின்போது தாக்கல் செய்யப்பட்ட வேட்பாளர்களின் சொத்துப் பட்டியல் அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் இணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தப் பட்டியலில் இருந்து அமைச்சர்களின் சொத்துப் பட்டியல் மட்டும் தனியாகத் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் முதலிடத்தில் முதல்வர் கருணாநிதிதான் இருக்கிறார்(இதுல கூட முன்னணில இல்லைன்னா அவர் என்ன முதலமைச்சர்?). அவருக்கு அடுத்த இடத்தில் அமைச்சர் நேருவும் அவருக்கு அடுத்தடுத்த இடங்களில் பொங்கலூர் பழனிசாமி, பூங்கோதை, உபயதுல்லா, பொன்முடி ஆகியோர் இருக்கிறார்கள்.


5 ஆண்டு காலத்தில் பல மடங்கு உயர்ந்துள்ள தி.மு.க. அமைச்சர்களின் சொத்துப் பட்டியல்!  Mk-2


கடந்த தேர்தலில் 26.52 கோடியாக இருந்த கருணாநிதியின் குடும்பச் சொத்து இந்த தேர்தலில் 44 கோடியாக உயர்ந்திருக்கிறது. ஐந்தாண்டுகளில் தாத்தா முதலமைச்சர் சம்பளத்துடன் கூடுதல் சலுகைகளையும் வாங்கிக் கொண்டு மேலும் சில படங்களுக்கு கதை, வசனம் எழுதியே கி்ட்டத்தட்ட 18 கோடி ரூபாயை தேற்றியிருக்கிறார். ம்ஹூம்.. இது கொஞ்சம் கம்மிதான்.. அமுக்கினது எவ்வளவோ..? யாருக்குத் தெரியும்..?

2006-ம் ஆண்டு 1.50 கோடியாக இருந்த துணை முதல்வர் ஸ்டாலினின் சொத்து தற்போது 2.11 கோடியாக ஆகியிருக்கிறது.

அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன், பொன்முடி, நேரு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், பரிதி இளம்வழுதி, சுப.தங்கவேலன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், சுரேஷ் ராஜன், பெரியகருப்பன், தங்கம் தென்னரசு, உபயதுல்லா, மைதீன்கான், வெள்ளக்கோவில் சாமிநாதன், பூங்கோதை, கீதா ஜீவன், தமிழரசி, கே.பி.பி.சாமி, மதிவாணன், ராமச்சந்திரன் ஆகியோர் கடந்த தேர்தலில் காட்டிய சொத்து மதிப்பைவிட இரண்டு மடங்குக்கு மேல் இந்த தேர்தலில் காட்டி இருக்கிறார்கள்.

அந்தப் பட்டியலை இதில் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்..!


5 ஆண்டு காலத்தில் பல மடங்கு உயர்ந்துள்ள தி.மு.க. அமைச்சர்களின் சொத்துப் பட்டியல்!  Ministers-wealth


அமைச்சர் நேரு கடந்த தேர்தலில் 2.83 கோடி ரூபாய் சொத்துக் கணக்கை காட்டியிருந்தார். இந்த தேர்தலில் இது 17.77 கோடியாக உயந்திருக்கிறது.

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் சொத்து 1.04 கோடியில் இருந்து 6.14 கோடியாக உயர்ந்திருக்கிறது.


20.78 லட்சமாக இருந்த அமைச்சர் சுரேஷ்ராஜனின் சொத்து 3.21 கோடியாக அதிகரித்து இருக்கிறது.

கடந்த தேர்தலில் 62 லட்சம் சொத்து கணக்கை காட்டிய அமைச்சர் பரிதிஇளம்வழுதி, இந்த தேர்தலில் 6.49 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து மதிப்பைக் காட்டி இருக்கிறார்.

அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனின் சொத்து 86 லட்சத்தில் இருந்து 4.85 கோடியாகவும், அமைச்சர் பூங்கோதையின் சொத்து 1.35 கோடியில் இருந்து ஒரேடியாக 15.43 கோடியாகவும் எகிறியுள்ளது.

நானும்தான் இருக்கேன். 5 வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்தனோ அதே மாதிரிதான். இப்பவும் பிச்சைதான்..! ஒருவேளை எனக்குத்தான் பொழைக்கத் தெரியலையோ..?




நன்றி : ஜூனியர்விகடன்-ஏப்ரல்-6, 2011



by உண்மைத்தமிழன்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum