ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!''

4 posters

Go down

''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' Empty ''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!''

Post by தாமு Sun Apr 10, 2011 6:48 pm

சாடும் நெடுமாறன்
ஈழத் தமிழர்கள் ஒன்றரை லட்சம் பேரை இன வெறி சிங்கள ராணுவம்



படுகொலை செய்ததுபற்றி இதுவரை வாய் திறக்காத சோனியா, கடந்த 5-ம் தேதி சென்னையில் முதல் முறையாக பேசினார்.
''இலங்கைத் தமிழர்களின் நலனில், இந்திய அரசு கடமைப்பட்டு இருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களின் மீட்புக்காகவும் மறுவாழ்வுக்காகவும், பெருமளவு பணம் வழங்கப்பட்டு உள்ளது. தமிழர்களின் அரசியல் தீர்வுக்கான அரசியல் சாசனத் திருத்தம் செய்ய, இலங்கை அரசை வலியுறுத்துவோம். தமிழக மீனவர்​கள் மீது இனி துப்பாக்கிச் சூடு நடத்தப்படாது என்று நமக்கு உறுதி​மொழி வழங்கப்பட்டு இருக்கிறது. இதைத் தொடர்ந்து காப்பதற்கான பணியில் உறுதியாக ஈடுபடுவோம்!'' என்று இந்த தேர்தல் நேரத்தில் சோனியா மனம் உருகினார்!

சோனியாவின் இந்த மாற்றம் உண்மைதானா என, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனை சந்தித்துக் கேட்​டோம்.

''தமிழக மீனவர்கள் இனி சுடப்பட மாட்டார்கள் என்பது, மத்திய அமைச்சர்களும் அதிகாரிகளும் அடிக்கடி சொல்லும் வாக்குறுதிதான். இதுவரை 500-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இதுபோன்ற உறுதிமொழிகளுக்குப் பிறகும் மீனவர் படுகொலைகள் தொடர்வதுதான் யதார்த்தம். இவர்களின் வெற்று வாக்குறுதிகள் மீனவர்களின் உயிர்களைப் பாதுகாக்கவில்லை என்பதுதான் உண்மை.

மத்திய அமைச்சரவையில் பங்கு வகிக்கும் தி.மு.க., கச்சத் தீவு உள்​பட்ட தமிழகத்தின் முக்கிய பிரச்னைகளைப்பற்றி அங்கு குரல் எழுப்பாமல், பொதுக் கூட்டத்தில் முன்வைப்பதன் மர்மம் என்ன? காங்கிரஸ் கட்சியை மட்டும் குற்றவாளியாக நிறுத்த கருணாநிதி முயல்கிறாரா என்று தெரியவில்லை.

ஈழத் தமிழர் பிரச்னையைப் பொறுத்தவரை, சோனியா பேசி இருப்பது ஒப்புக்காகத்தான். இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, டெல்லியில் 3,000 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதற்காக, அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குச் சென்று சோனியா வருத்தம் தெரிவித்தார். பிரதமர் மன்மோகன் சிங்கும் வருத்தம் தெரிவித்தார். ஆனால், 2008-ம் ஆண்டு முதல் நடந்த நான்காம் ஈழப் போரில் ஒன்றரை லட்சம் தமிழ் மக்கள் ஈவிரக்கம் இல்லாமல் சிங்களப் படையால் கொன்று குவிக்கப்பட்டபோது, அதற்கு ராணுவ உதவிகளைச் செய்தது இந்த இந்திய அரசு. போர் நடந்த காலத்திலும், அதன் பிறகும், ஈழத் தமிழர்களைப்பற்றி வாய் திறக்காத சோனியா, தேர்தல் வேளையில் பேசி இருப்பது கடைந்தெடுத்த பித்தலாட்டம்.

சிங்கள ராணுவத்தின் தாக்குதலால் 2.25 லட்சம் ஈழத் தமிழர்களின் வீடுகள் முற்றிலுமாக சேதம் அடைந்தன. வாழ்வாதாரங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. வீடுகளை இழந்த 11 லட்சம் பேர்களை மறுகுடியமர்த்தவும் உரிய நடவடிக்கை இல்லை. அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே, 'தமிழர்களை மறுகுடியமர்த்தம் செய்யும் திட்டம் எதுவும் ராஜபக்ஷேவிடம் இல்லை. அவர் ஒருபோதும் அதைச் செய்யப்போவதும் இல்லை’ என்று உறுதிபடக் கூறியுள்ளார்.

உண்மையில், 1 லட்சம் சிங்கள ராணுவத்தினர் தத்தம் குடும்பத்துடன் வாழ, தமிழர் பகுதிகளில் நிரந்தர வீடுகள் கட்டப்படுகின்றன. ஈழத் தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் குண்டு வீசிக் கொல்லப்பட்ட இடங்களில், உயிரோடு புதைக்கப்பட்ட இடங்களில், ஆயிரக்கணக்கில் சிங்களர்கள் குடியேற்றப்படுகிறார்கள். தமிழர்களின் சடலங்களுக்கும் எலும்புக் கூடுகளுக்கும் மேல் சிங்களக் குடியேற்றங்கள் கட்டப்படுகின்றன. எதிர்காலத்தில் தமிழர்கள் அங்கு வாழ்ந்தார்​கள் என்ற அடையாளத்தைத் துடைத்து எறியும் இனவெறி செயல் திட்டத்தை ராஜபக்ஷே தீவிரமாகச் செய்து வருகிறார்.

இன்னொரு புறம், 'தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடையாது; சிங்களவர் நாடு இலங்கை என்பதை ஏற்றுக்கொள்ளும் தமிழர்களுக்கு மட்டுமே இலங்கையில் இடம். இதை ஏற்க முடியாதவர்கள் நாட்டைவிட்டு வெளியேறலாம்’ எனப் பகிரங்கமாக அறிவித்தவர் ராஜபக்ஷே. ஏற்கெனவே, ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின்படி, இலங்கையின் வடக்கு - கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டன. ஈழத் தமிழர்களுக்குத் தாயகத்தை உண்டாக்கித் தந்ததாகப் பெருமைப்பட்டுக்கொண்டார் ராஜீவ். இலங்கையின் அரசியல் சாசனத்தில் இதற்காக 13-வது திருத்தம் கொண்டுவரப்பட்டு, தமிழர்களுக்கு சில உரிமைகள் வழங்கப்பட்டதாக தம்பட்டம் அடித்தார் ஜெயவர்த்தனே. அந்த 13-வது திருத்தத்தை ராஜபக்ஷே முற்றிலுமாக ரத்து செய்துவிட்டார். அப்போது வாய் திறக்காத சோனியா, இப்போது ஈழத் தமிழருக்காக அரசியல் சாசனத்தைத் திருத்தச் சொல்வதாகப் பேசுவது, அப்பட்டமான ஏமாற்று வேலை.

தீவுத்திடலில் கருணாநிதியும் சோனியாவும் சொல்லி வைத்துக் கொண்டு நடத்திய நாடகத்தை தமிழ்மக்கள் ஏற்கமாட்டார்கள். மரணித்த ஒவ்வொரு தமிழனின் சொந்தங்கள் வீட்டுக்கும் சென்று காலில் விழுந்தாலும் இவர்கள் இருவருக்கும் மன்னிப்பே கிடையாது!'' கணீர் குரலில் கொந்தளிக்கிறார் நெடுமாறன்!

- இரா. தமிழ்க்கனல், படம்: என்.விவேக்
ஜீனியர் விகடன்.



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' Empty Re: ''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!''

Post by ARR Sun Apr 10, 2011 7:11 pm

நெடுமாறனின் இயக்கம் எவ்வாறு நடைமுறைச் செலவுகளைச் சமாளிக்கிறது..?

தமிழ்நாட்டுத் தமிழர்களின் பிரச்னைகளுக்காக என்றாவது போராடியிருக்கிறாரா..?


''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' 0018-2''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' 0001-3''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' 0010-3''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' Empty Re: ''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!''

Post by கலைவேந்தன் Sun Apr 10, 2011 7:23 pm

அவர் இயக்கத்திற்கு பல்வேறு உள்ளூர் மற்றும் அயல் நாட்டுத்தமிழர்கள் உதவி செய்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் இருக்கும் ஒரே பிரச்சினை கலைஞர் குடும்பம் தான். அதைத் தவிர இங்கே சிங்களர்களைப்போல லட்சக்கணக்கான படுகொலைகள் நடத்தவில்லை யாரும். எனவே அவர் போராட் வேண்டிய அவசியம் இல்லை.



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' Empty Re: ''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!''

Post by அசுரன் Sun Apr 10, 2011 11:57 pm

அநியாயத்தை கண்டு மனம் பதைக்காமல் இருப்பது என்றும் நல்லதல்லவே! குரல்கொடுப்பதும் தவறு என்றால் இறந்த அத்துனை ஆன்மாக்களும் அங்கு வீடு கட்டி வாழும் சிங்களவர்களை தூங்கசெய்யாது.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' Empty Re: ''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!''

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum