ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹஸாரேவின் ஊழல் போர்... எங்கே போனார்கள் தமிழ் சினிமாக்காரர்கள்?

2 posters

Go down

ஹஸாரேவின் ஊழல் போர்... எங்கே போனார்கள் தமிழ் சினிமாக்காரர்கள்?  Empty ஹஸாரேவின் ஊழல் போர்... எங்கே போனார்கள் தமிழ் சினிமாக்காரர்கள்?

Post by கண்ணன்3536 Sun Apr 10, 2011 10:06 am


கடந்த 5 நாட்களாக இந்தியாவே ஒரு புதிய புரட்சிக்காக ஆயத்தமானது, அன்னா ஹஸாரே என்ற 73 வயது காந்தியவாதியின் தலைமையில். ஆனால் இது ஆட்சி மாற்றத்துக்கான புரட்சி அல்ல. ஊழலுக்கு எதிரான புரட்சி.

'India against corruption' என்ற முழக்கம் மாநிலம், மொழிகள், இனங்கள் போன்ற அனைத்து தடைகளையும் தாண்டி இந்தியா முழுக்க எதிரொலித்தது. அனைத்துத் துறை சார்ந்தவர்களும் அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவுக் குரல் கொடுக்கத் தவறவில்லை.

குறிப்பாக இளைஞர்கள் அத்தனை துடிப்புடனும் ஆர்வத்துடனும் அந்த முதியவருடன் தோளொடு தோள் நிற்க ஓடி வந்தனர்.

பாலிவுட் எனப்படும் மும்பை திரையுலகமே ஹஸாரேவுக்கு ஆதரவாக ஓடிவந்தது. அமிதாப், ஆமீர்கான், ஷாரூக்கான், அனுபம்கெர், விவேக் ஓபராய், ப்ரியங்கா சோப்ரா, தீபிகா, தெலுங்கு நடிகர் மோகன்பாபு.... இப்படி ஏராளமானோர் அவருக்கு ஆதரவு கொடுத்து ஊழலை ஒழிக்க வேண்டும் என்று முழக்கமிட்டார்கள்.

ஆனால் தென்னிந்தியாவின் முக்கிய கவன ஈர்ப்பாகத் திகழும் தமிழ்த் திரையுலகம் மட்டும் கப் சிப்பென்று இருந்தது இந்த 5 நாட்களும். சூப்பர் ஸ்டார் தொடங்கி சுள்ளான் ஸ்டார்கள் வரை யாரும் இதுகுறித்துப் பேசவே இல்லை.

குறிப்பாக சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள், தங்கள் தலைவர் தேர்தலுக்கு வாய்ஸ் தராவிட்டாலும், ஹஸாரேவுக்கு ஆதரவாக குரல் கொடுப்பார் என்று எதிர்ப்பார்த்தனர். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

எனக்கு அரசியல் வேண்டாம், சாதி வேண்டாம், சாமியும் வேண்டாம், குடிமகனாக நின்று அரசியலை சுத்தப்படுத்த முடியும் என்று மேடை தோறும் பேசி வரும் கமல்ஹாஸனும் கூட அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

சரி, அப்படிக் குரல் கொடுத்தால் அரசியலாகிவிடுமோ என இவர்கள்தான் யோசித்துக் கொண்டிருந்தார்கள்... ஊழலுக்கு எதிரான கட்சி என்று பெரிதாக விளம்பரப் படுத்திக் கொள்ளும் விஜயகாந்த் என்ன செய்து கொண்டிருந்தார்? நாளொரு வேண்டாத பரபரப்புகளை பிரச்சாரத்தில் கிளப்பிக் கொண்டிருந்தாரே தவிர, ஹஸாரேவுக்கு மறந்தும் கூட குரல் கொடுக்க முன்வரவில்லை.

சரி... புதிதாக கட்சி தொடங்குவேன், ஆட்சியைப் பிடிப்பேன் எனக் கூறிவரும் இளம் நடிகரான விஜய், அரசியலில் குதிக்க நாள் பார்த்துக் கொண்டிருக்கும் அஜீத், காற்றில் பஞ்ச் டயலாக் அடிக்கும் அசகாய சூரர்கள் தனுஷ், சிம்பு, ஓங்கிடிச்சா ஒன்றரை டன் எடை என்று சினிமாவில் வீரம் பேசும் சூர்யா, நான்கு படங்களில் நடித்து முடிப்பதற்குள் 100 பேரை அடிக்கும் ஆக்ஷன் ஹீரோவாகிவிட்ட கார்த்தி... சீஸனுக்கு சீஸன் நிறம் மாறும் சத்யராஜ்.... ம்ஹூம்.. ஒருவரும் ஊழலுக்கு எதிராக ஒரு சின்ன அசைவைக் கூட காட்டவில்லை.

'இதானா இந்த அட்டைக் கத்திகளின் நேர்மையும் வீரமும்' என நக்கலாய்ச் சிரிக்கிறது, ஊழலை வாழ்க்கையின் அங்கமாக ஏற்றுக் கொண்ட தமிழகம்! இது மக்கள் குரல்

27 வயது இளைஞனுக்கு ஏற்பட வேண்டிய கோபம், 72 வயது காந்தியவாதிக்கு ஏற்பட்டிருக்கிறது. லஞ்ச ஊழலில் ஈடுபடுவோரைத் தண்டிக்க வகை செய்ய லோக்பால் திருத்த மசோதாவை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியிருக்கிறார் சமூக சேவகரும் காந்தியவாதியுமான அண்ணா ஹஸாரே.

உண்ணாவிரதம் என்றால் வீட்டிலேயே டிபன் முடித்துவிட்டு பந்தலுக்கு வந்து காலை 6 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிக்கு முடிந்துபோகிற உண்ணாவிரதம் அல்ல இது. காந்திய உண்ணாவிரதம். தனது அறப்போராட்டத்தைத் தொடங்கு முன்பாக, எனிமா உள்ளிட்ட முன்னேற்பாடுகளை முடித்துக்கொண்டு முறையாகத் தொடங்கப்பட்ட உண்ணாவிரதம்.

அவரது கோரிக்கை மிக எளிமையானது. லோக்பால் சட்டத்தின் திருத்த வடிவை உண்டாக்க ஒரு கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும்; அதில் மக்களின் பிரதிநிதிகள் சரிபாதி பேர் இருக்க வேண்டும் என்பதுதான். அதாவது சட்டத்தை ஓட்டைகள் இல்லாதபடி கடுமையானதாக உருவாக்கினால் மட்டுமே, இதனால் மக்கள் பயன்பெறுவார்கள் என்பது அண்ணா ஹஸாரே முன்வைக்கும் நியாயமான வாதம்.

அமைச்சர்கள் மட்டுமே ஒன்றுகூடி அதிகாரிகளின் துணையோடு உருவாக்கும் சட்டம், அவர்கள் தவறு செய்தால் தண்டனை பெறாமல் தப்பிப்பதற்கான வழிமுறைகளையும் வசதியாக ஏற்படுத்திக் கொண்டு விடுகிறது. இவர்கள் மட்டுமே ஒன்றுகூடி, அமைச்சர்களையும் அதிகாரிகளையும் நீதிபதிகளையும் தண்டிக்க வகை செய்யும் லோக்பால் சட்டத்தை அதில் ஓட்டைகள் இல்லாமல் உருவாக்க மாட்டார்கள், உருவாக்கப் போவதில்லை. அதனால்தான் இந்தக் கோரிக்கை.

இந்தியா விடுதலை பெற்று 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஊழலுக்காகத் தண்டனை பெற்ற அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், நீதிபதிகள் ஒருசிலர் மட்டுமே. அத்தனை அமைச்சர்களும் அடிப்படையில் ஏழ்மையிலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள். ஆனால், இன்று அவர்கள் பல கோடி ரூபாய் சொத்துக்கு அதிபர்கள். எப்படி இத்தனை சொத்துக் குவிந்தது என்று கேட்க ஆளில்லை. அதைத் தடுக்க முறையான சட்டமும் இல்லை.

நீதிபதிகள் தங்கள் சொத்து விவரத்தைத் தர வேண்டியதில்லை என்று சொல்லும் நியாயம் இந்தியாவில் மட்டுமே சாத்தியம். அரசு ஊழியர்கள் சொத்து வாங்கினால் அதுகுறித்த விவரத்தை அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று விதிகள் இருந்தும், மதிக்கப்படாத ஒரு சட்டமாகவே அது இருந்து வருகிறது. ஊழலில் ஈடுபடுபவர்களைத் தட்டிக் கேட்கவும் வழியில்லை, தண்டிக்கவும் முடியவில்லை என்றால் மக்களாட்சி என்பதற்கு என்னதான் அர்த்தம்?

சட்டத்துக்குப் புறம்பான காரியங்களை மட்டுமே லஞ்சம் கொடுத்துச் செய்யலாம் என்ற நிலைமை மாறி, சட்டப்படி ஒரு குடிமகனுக்கு உரிமையுள்ள வருமானச் சான்றிதழ் பெறவும் லஞ்சம், சாதிச் சான்றிதழ் பெறவும் லஞ்சம், அரசு தரும் இலவச டி.வி.க்கும் லஞ்சம், குடும்ப அட்டை பெற லஞ்சம், குடும்ப அட்டையை வேறு முகவரிக்கு மாற்றினால் அதற்கும் லஞ்சம் என்கிற நிலைமை. ஒரு ஏழையின் குமுறலை, சராசரி இந்தியக் குடிமகன் அன்றாடம் படும் அவஸ்தையை யார் அறிவார்? அரசியல்வாதிகளுக்கும், அதிகாரவர்க்கத்தினருக்கும் இந்த வலி தெரிய நியாயமில்லை. ஆனால் அண்ணா ஹஸாரே போன்றோருக்குத் தெரிகிறது.

உண்ணாவிரதம் மூன்று நாள்களை எட்டிய பிறகு, குறிப்பாக அனைத்துத் தரப்பிலிருந்தும் ஆதரவு பெருகும்போதுதான் மத்திய அரசுக்கு இதன் தீவிரம் புரிகிறது. மத்திய அமைச்சர் கபில் சிபல் வந்து பேச்சு நடத்துகிறார். கூட்டுக்குழுவில் பங்கு பெறலாம். ஆனால், அந்த விவரம் அரசாணையில் இடம்பெறாது; அரசியல் சட்டநிர்ணயத்தின்படி சில சிக்கல் இருப்பதால்தான் இந்த ஏற்பாடு என்கிறார்.

இது ஏதோ நல்ல யோசனை என்பதாகத் தோன்றக்கூடும். ஆனால், இது பசிக்காக அழுகிற குழந்தைக்குப் பஞ்சு மிட்டாயைக் காட்டி கவனத்தைத் திருப்பும் உத்திதான். இதற்கு உடன்பட்டால் என்ன ஆகும்? இக்கூட்டுக் குழுவில் இடம்பெறும் மக்கள் பிரதிநிதிகள் தங்கள் கருத்துகளை வலியுறுத்துவார்கள். அமைச்சர்கள் தலையாட்டுவார்கள். ஆனால், இறுதி வடிவத்தில் அந்த கருத்துகள் நீர்த்துப்போய், சட்டத்தின் ஓட்டைகள் மீண்டும் கண்திறக்கும். அந்த நேரத்தில் அதைத் தடுத்து நிறுத்தும் அதிகாரம் பெறாதவர்களாக, வெறும் பார்வையாளர்களாக மட்டுமே இந்த மக்கள் பிரதிநிதிகள் இருக்கக்கூடும். ஆகவேதான், இதைச் சட்டப்படியாக, மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்பையும் அரசாணையில் வெளியிட வேண்டும் என்கின்றனர் அண்ணா ஹஸாரே தரப்பினர்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலையும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழலையும், கார்கில் வீரர்கள் பெயரில் வீடுகட்டும் ஊழலையும் பெரிதாகப் பேசும் எதிர்க்கட்சியினர், இப்படி ஒரு சட்டத்தை முதலிலேயே சரியானபடி நடைமுறைப்படுத்திட வலியுறுத்தியிருந்தால், இந்தச் சட்டம் முறையாக அமலாக்கம் செய்யப்பட்டிருந்தால், இத்தனை ஊழலும் நடந்திருக்குமா?

அண்ணா ஹஸாரே என்ற தனிமனிதரின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு நாடு தழுவிய அளவில் ஆதரவு பெருகுகிறது. தில்லி ஜந்தர் மந்தரில் தொடங்கிய அவரது உண்ணாவிரதத்தின் தாக்கம் பெருநகரங்களைத் தாக்கி, இப்போது இந்தியாவின் நகர்ப்புறங்களைக் கடந்து கிராமப்புறங்களைத் தாக்க ஆரம்பித்திருக்கிறது.

சராசரி இந்தியக் குடிமகனின் மனக்குமுறலை அண்ணா ஹஸாரே பிரதிபலிக்கிறார்.அண்ணா ஹஸாரேயின் உண்ணாவிரதம் முடிவுக்கு வர வேண்டுமானால் பிரதமரின் மௌனம் கலைய வேண்டும். அரசின் பிடிவாதம் தளர வேண்டும்.

மக்கள் குரலே மகேசன் குரல். அண்ணா ஹஸாரேயின் குரல் மக்கள் குரல்!

நன்றி: தினமணி தலையங்கம்
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

ஹஸாரேவின் ஊழல் போர்... எங்கே போனார்கள் தமிழ் சினிமாக்காரர்கள்?  Empty Re: ஹஸாரேவின் ஊழல் போர்... எங்கே போனார்கள் தமிழ் சினிமாக்காரர்கள்?

Post by ஆளுங்க Sun Apr 10, 2011 10:47 am

1947 ஆம் ஆண்டிற்கு பிறகு, மீண்டும் ஒரு அகிம்சை போர் நாட்டிற்குத் தேவைப்பட்டு இருக்கிறது!!!

போர் உண்மையிலேயே வெற்றி பெற்றதா என்பதை மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடருக்குப் பிறகே தெரியும்!!


ஹஸாரேவின் ஊழல் போர்... எங்கே போனார்கள் தமிழ் சினிமாக்காரர்கள்?  Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum