புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலைஞரின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்திய ஆனந்த விகடன்- தி மு க அதிர்ச்சி  - Page 2 I_vote_lcapகலைஞரின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்திய ஆனந்த விகடன்- தி மு க அதிர்ச்சி  - Page 2 I_voting_barகலைஞரின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்திய ஆனந்த விகடன்- தி மு க அதிர்ச்சி  - Page 2 I_vote_rcap 
21 Posts - 70%
heezulia

6 Posts - 20%
mohamed nizamudeen

1 Post - 3%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
கலைஞரின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்திய ஆனந்த விகடன்- தி மு க அதிர்ச்சி  - Page 2 I_vote_lcapகலைஞரின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்திய ஆனந்த விகடன்- தி மு க அதிர்ச்சி  - Page 2 I_voting_barகலைஞரின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்திய ஆனந்த விகடன்- தி மு க அதிர்ச்சி  - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian
கலைஞரின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்திய ஆனந்த விகடன்- தி மு க அதிர்ச்சி  - Page 2 I_vote_lcapகலைஞரின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்திய ஆனந்த விகடன்- தி மு க அதிர்ச்சி  - Page 2 I_voting_barகலைஞரின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்திய ஆனந்த விகடன்- தி மு க அதிர்ச்சி  - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைஞரின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்திய ஆனந்த விகடன்- தி மு க அதிர்ச்சி

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Apr 09, 2011 3:46 pm

First topic message reminder :

கலைஞரின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்திய ஆனந்த விகடன்- தி மு க அதிர்ச்சி  - Page 2 P19a

கட்சித் தலைவராக கருணாநிதியைத் தேர்ந்தெடுத்தது லட்சக்கணக்கான தொண்டர்கள்!ஆட்சி முதல்வராக கருணாநிதியை அமரவைத்து அழகு பார்த்தது கோடிக்கணக்கான மக்கள்! ஆனால், உண்மையில் கட்சியையும் ஆட்சியையும் கைக்குள் வைத்து, பவர் பாலிடிக்ஸைப் பக்குவமாகச் செய்துவருபவர்கள் யார் யார் தெரியுமா?

'திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றும் சங்கர மடம் அல்ல. எனக்குப் பின்னால் என் மகன். அவருக்குப் பின்னால் அவரது மகன் என்று பட்டத்துக்கு வருவதற்கு! இந்தக் கட்சியில் பொதுக்குழு, செயற்குழு இருக்கிறது. அதுதான் அனைத்தையும் தீர்மானிக்கும்’ என்பது கருணாநிதி அடிக்கடி சொல்லும் வார்த்தைகள். ஆனால், கட்சியின் பொதுக்குழு, செயற்குழுவை மிஞ்சியதாக இருக்கிறது இந்த ஹோம் கேபினெட்!

கருணாநிதியின் தலைமையில் தி.மு.க. வந்த பிறகு நடந்த இரண்டு முக்கியமான பிரிவுகளும் அவரது மகன்களுக்காகவே நடந்தன என்பதுதான் அரசியல் வரலாறு அறிந்தவர்கள் கருத்து. இன்று லட்சக்கணக்கான தொண்டர்களைக்கொண்ட கட்சியின் தலைமை அலுவலகத்துக்குள் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் புகுந்து, மணிக்கணக்கில் இரண்டு முறை விசாரணை நடத்தி முடித்ததற்கும் இதே குடும்பமே காரணமானது. 'ஒரு தாயின் வயிற்றில் பிறக்க முடியாத காரணத்தால் தனித் தனி தாயின் வயிற்றில் பிறந்த அண்ணன் தம்பிகள் நாம்’ என்றார் அண்ணா. ஆனால், இன்று ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் மட்டும்தான் கழகம் என்று ஆகிவிட்டது!

42 ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருக்கிறார் கருணாநிதி. 'தலைமை நாற்காலியைப் பெரியாருக்காகக் காலியாக வைத்திருக்கிறேன். பொதுச் செயலாளர் பதவி மட்டும்தான் இனி தி.மு.க-வில் இருக்கும்’ என்ற அண்ணாவின் முழக்கம்தான், அவரைக் கடற்கரை ஓரத்தில் புதைக்கும்போது ஓரமாகத் தூக்கிப் போடப்பட்ட முதல் கொள்கை.

அடுத்த தலைவர் நாவலர் நெடுஞ்செழியனா, கலைஞர் கருணாநிதியா என்ற சண்டை வந்தபோது, தலைவராக கருணாநிதியும் ,பொதுச் செயலாளராக நெடுஞ்செழியனும் உட்கார வைக்கப்பட்டார்கள். அதில் இருந்து 10-வது முறையாக பொதுக்குழு மூலமாகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார் கருணாநிதி.

1980-ல் கட்சிக்குள் மெதுவாகத் தனது மகன் ஸ்டாலினை கருணாநிதி அழைத்து வந்தார். இளைஞர் அணிச் செயலாளர் என்ற பொறுப்பு தரப்பட்டது. பொதுவாகவே, கட்சியில் துணை அமைப்புகள் சும்மா ஒப்புக்குத்தான் இருக்கும். ஆனால், ஸ்டாலின் வந்த பிறகு இளைஞர் அணி, தலைமைக் கழகத்துக்கு இணையான அணியாக மாற்றப்பட்டது. அறிவாலயம் கருணாநிதிக்கு என்றால்... அன்பகம் ஸ்டாலினுக்கு.

இளைஞர் அணியில் மாவட்ட அமைப்பாளர்கள்... கட்சியின் மாவட்டச் செயலாளர்களாகவே வலம் வந்தார்கள். அதன் பிறகு அமைச்சரவையில் ஸ்டாலின் ஆட்களுக்குப் பிரதிநிதித்துவம் தரப்பட்டது. வேட்பாளர் தேர்வில் கோட்டா வந்தது. ஸ்டாலின் துணைப் பொதுச் செயலாளர் ஆனார். அதன் பிறகு பொருளாளர் பதவி கிடைத்தது. அடுத்து அமைச்சர், துணை முதலமைச்சராகவும் ஆனார். இன்று, ஆட்சியும் கட்சியும் இவரது கண் அசைவில் தான் நடக்கின்றன.

கருணாநிதியின் மருமகனாகவும் மனசாட்சியாகவும் இருந்த முரசொலி மாறனின் மறைவுக்குப் பிறகு, அவரது இரண்டாவது மகன் தயாநிதியை மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் நிறுத்தினார்கள். உடனேயே கேபினெட் அமைச்சராக்கப்பட்டார். டெல்லி அரசியல் இவரது கட்டுப்பாட்டுக்கு வந்தது. இவரது அண்ணன் கலாநிதி மாறன் நடத்தி வந்த நாளிதழில் ஒரு கருத்துக்கணிப்பு வெளியானதைத் தொடர்ந்து குடும்பத்துக்குள் குழப்பம். நேரடி அரசியலில் இறங்காமல் அதே சமயம், தென் மாவட்டத்து அரசியலைத் தனது ஆளுகைக்குள் வைத்திருந்த மு.க.அழகிரியின் செல்வாக்கை அந்தக் கருத்துக் கணிப்பு குறைத்து மதிப்பிட்டு இருந்தது. கலாநிதி, தயாநிதி ஆகியோருக்கும் அழகிரிக்குமான மோதலில், கருணாநிதி மகன் பக்கம்தான் நின்றார்.

தயாநிதி, கட்சியைவிட்டு நீக்கப்பட்டார். இனி, டெல்லியைக் கவனிக்க யார் என்ற கேள்வி எழுந்தபோது, கருணாநிதி தனது மகள் கனிமொழியை மாநிலங்களவை உறுப்பினராக ஆக்கினார். அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் அழகிரியும் நிற்க... குடும்பக் கோபங்கள் தணிந்து தயாநிதியும் மறுபடி நுழைய... ஒரே குடும்பத்தில் இருந்து ஐந்து பேர் ( கருணாநிதி ஸ்டாலின் அழகிரி தயாநிதி கனிமொழி )கட்சியின் முக்கியப் பதவிகளைப் பிடித்தார்கள்.

இன்றைய நிலையில் தி.மு.க-வின் ஐம்பெரும் தலைவர்கள் இவர்கள்தான்!

குடும்பத் தலைவர் ஒருவர் அரசியலில் இருந்தால், அவரை நம்பி மற்றவர்கள் அமைதியாக இருப்பார்கள். ஆனால், இங்கே எல்லோருமே தலை எடுத்து வலம் வருகிறார்கள்.

ராஜாத்தி அம்மாளைப் பார்க்க அவரது சி.ஐ.டி. காலனி வீட்டிலோ அல்லது அவர் ஆழ்வார்பேட்டைப் பகுதியில் நடத்தி வரும் ராயல் ஃபர்னிச்சர் கடையிலோ எப்போதும் கூட்டம் இருக்கும். அவரது கோட்டாவில் அமைச்சராக வந்தவர் பூங்கோதை.

ஊழல் வழக்கில் சிக்கிய ஒருவரைக் காப்பாற்ற பூங்கோதை முயற்சித்ததாகத் தகவல் கசிந்து, அவரது பதவியையே பறித்தார் கருணாநிதி. அப்படிப்பட்ட பூங்கோதை மறுபடியும் கேபினெட்டுக்குள் நுழைத்ததும்... அழகிரி குறித்து நீரா ராடியாவிடம் தரக்குறைவாக கமென்ட் அடித்த பூங்கோதைக்கே ஆலங்குளம் தொகுதியில் மீண்டும் போட்டியிட அனுமதி வாங்கித் தந்ததும், ராஜாத்தியின் ராஜ்யத்தை ஊருக்குச் சொல்லும்.

கலைஞரின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்திய ஆனந்த விகடன்- தி மு க அதிர்ச்சி  - Page 2 P20a

கனிமொழிக்குத் தரப்படும் முக்கியத்துவம் கருணாநிதியின் இன்னொரு மகளான செல்வியைச் சினம்கொள்ளவைத்தது. அவரே அப்பாவுக்காகப் பிரசாரம் செய்வதும், தொகுதி மக்களிடம் குறை கேட்கப் போவதுமாக எப்போதாவது செய்கிறார்.

கருணாநிதியின் கடைசி மகனான தமிழரசு, சேப்பாக்கம் தொகுதியைக் கவனித்துக்கொள்கிறார். மதுரையில் அழகிரிக்கு இணையான மரியாதை அவரது மனைவி காந்திக்குத் தரப்படுகிறது. தனித் தனி கட் அவுட்டுகளில் காந்தி சிரிக்கிறார். அவரது மகள் கயல்விழி, தி.மு.க-வின் பிரசாரக் குழுச் செயலாளர். அவரது கணவர், வெங்கடேஷ் தென் மாவட்ட மந்திரிகளைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். செல்வி மகள் எழிலரசியின் கணவர் டாக்டர் ஜோதிமணி, இப்போது வளர்ந்து வரும் முக்கிய மான அதிகார மையம்!

இந்த ஐந்து ஆண்டு காலத்தில் சினிமாக்காரர்கள் சின்னாபின்னமானதைப் போல வேறு யாரும் ஆகவில்லை! திரைத் துறையில் இருந்துதான் கருணாநிதி அரசியலுக்கு வந்தார் என்பதும், அவரது மேகலா பிக்சர்ஸ் கதைகளும் பழைய விஷயங்கள். கடந்த 20 ஆண்டுகளாக இந்தத் துறையில் சன் டி.வி. கால் பதித்து புதிய படங்களை வாங்கினார்கள். 'அவர்களுக்கு விற்பனை செய்யப்படாத படங்களை ரேட்டிங் குறைத்துக் காண்பிக்கிறார்கள் என்ற புகார்கள் எழுந்தன. குடும்பத்துக்குள் குழப்பம் ஏற்பட்ட சமயத்தில் கருணாநிதியே 'கலைஞர் டி.வி.’ என்ற தனிக் கடையைத் தொடங்கினார். படங்கள் வாங்குவதில் சன் - கலைஞர் தொலைக்காட்சிகளுக்குள் போட்டி கிளம்பியது. இதில் பல தயாரிப்பாளர்கள் மூளை குழம்பிப் போனார்கள்.

கலைஞரின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்திய ஆனந்த விகடன்- தி மு க அதிர்ச்சி  - Page 2 P22a

அடுத்து படத் தயாரிப்புகளில் வாரிசுகள் குதித்தார்கள். ரெட் ஜெயன்ட் மூவீஸ் ஆரம்பித்தார் ஸ்டாலினின் மகன் உதயநிதி. க்ளவுட் நைன் தொடங்கினார் அழகிரியின் மகன் துரை தயாநிதி. பெரிய நடிகர்களை இவர்கள் குத்தகைக்கு எடுக்க ஆரம்பித்தார்கள். கால்ஷீட் கொடுக்காத நடிகர்களை மிரட்டுவது வரை நிலவரம் கலவரம் ஆனது. தியேட்டர்களை மொத்தமாகக் குத்தகைக்கு எடுப்பதும்... தங்கள் படத்தை ரிலீஸ் பண்ண, மற்ற படங்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துவதுமான சோகக் கதைகளை எந்தத் தயாரிப்பாளர்களாலும் சொல்ல முடியவில்லை.

பாராட்டு விழாக்களுக்கு நடிகர்களை வரவழைக்க மிரட்டுவதை மேடை ஏறி அஜீத் சொன்னார். விஜய் கஷ்டம் ஊர் அறிந்தது. காலம் காலமாக தி.மு.க-காரராக அறிமுகமான அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன், ஜெயலலிதா வைப் போய்ப் பார்த்தார். பல தயாரிப்பாளர்கள் ரகசியமாகப் போய் ஜெயலலிதாவை சந்தித்துத் திரும்பினார்கள்.

தமிழரசுவின் மகன் அருள்நிதி, 'வம்சம்’ படத்தில் நடித்து ஹீரோ ஆனார். கருணாநிதியின் அக்கா மகன் அமிர்தம் கலைஞர் டி.வி -யைக் கவனித்து வருகிறார். அவருக்கு உதவியாக அவரது மகன், குணாநிதியும் இருக்கிறார்.
கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவின் மகன் மு.க.முத்து. அவரது மகன் அறிவுநிதி, சினிமா வில் பாடுகிறார். சென்னையில் திடீரென அவரது கட்-அவுட்கள் முளைக்கும். அதை கருணாநிதி குடும்ப உறுப்பினரே கிழித்துவிட்டார். 'நான் கலைஞரின் மூத்த பேரன். அந்த அந்தஸ்தை வேறு யாரும் பறிக்க முடியாது’ என்று இவர் சொல்லி வருவது, சினிமா எடுக்க வேண்டிய கிளைக் கதைகளில் ஒன்று!

கலைஞரின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்திய ஆனந்த விகடன்- தி மு க அதிர்ச்சி  - Page 2 P23a

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வரை தயாளுவை எந்த மீடியாக்களும் சீண்டியது இல்லை. முக்கியமான கூட்டங்களுக்கு மட்டும் வருகை தரும் அவர், இரண்டு ஆண்டுகளாக எதிலும் கலந்துகொள்ளவில்லை.

உடல்நிலையைக் காரணம் காட்டி அமைதியானார். கலைஞர் டி.வி-க்கான பங்குகளில் 60 சதவிகிதம் அவருக்கு உண்டு என்பதுகூட சிறு தகவலாகத்தான் இருந்தது. ஆனால், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்புடைய ஷாகித் பால்வாவிடம் கலைஞர் டி.வி. 214 கோடிகளை வாங்கியது என்பதை சி.பி.ஐ. தனது அறிக்கையில் சொன்னதுமே, தயாளு அகில இந்தியா முழுவதும் அறியப்பட்டார். 'இத்தனை வருஷம் சும்மா இருந்த என்னை இப்படி மாட்டிவிட்டுட்டீங்களே’ என்று கருணாநிதியிடம் வருத்தப்படத்தான் முடிந்தது தயாளுவால். நிச்சயம் அவரிடம் விசாரித்துதான் ஆக வேண்டும் என்று சி.பி.ஐ. அடம்பிடிக்க.... தயாளு சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு அழைத்து வரப் பட்டார். இதோடு சி.பி.ஐ. விடுகிறதா என்பது தெரிய வில்லை. முழு க்ளைமாக்ஸை மார்ச் 31 அன்று பார்க்கலாம்!

இவருக்கு நேர் மாறானவர் ராஜாத்தி! எப்போதும் சர்ச்சைகள் இவரை வளைய வரும். சர்க்காரியா கமிஷன் விசாரணையிலேயே அவர் பெயர் வந்தது. இப்போது ஸ்பெக்ட்ரம் தரகர் நீரா ராடியாவுடன் ராஜாத்தியும் அவரது ஆடிட்டர் ரத்னமும் பேசியதும், வோல்டாஸ் கட்டடத்தைக் கை மாற்றித் தரும் விவகாரத்தில் ராஜாத்தியின் உதவியாளர் சரவணன் சம்பந்தப்பட்டதும்... முற்றுப்புள்ளி வைக்கப்படாத பெரிய ரகசியங்கள். ராடியா கைதானால் இவர்களுக்கும் சிக்கல் வரலாம்!

கருணாநிதிக்கு ஏற்பட்ட முதல் அவமானம் - அவரது மகன் முத்து, ஜெயலலிதாவைச் சந்தித்தது. வறுமையில் தான் வாடுவதாகச் சொல்லி 5 லட்சம் பணத்தைப் பெற்றுக்கொண்டார்!

மதுரை கவுன்சிலர் லீலாவதி கொலையில் சிலர் கைது செய்யப்பட்டதும், அவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதும் நடந்தது. தண்டனைக் கைதிகளான அவர்கள் முன்கூட்டியே விடுதலை ஆனது வரை சர்ச்சை தொடர்ந்தது!

தென் மாவட்டத்தில் தன்னுடைய பேச்சைக் கேட்காமல் அழகிரி தன்னிச்சையாகச் செயல்பட்டதாகச் சொல்லி, அவரைக் கட்சியைவிட்டே 2000-ம் ஆண்டில் நீக்கினார் கருணாநிதி. ஆட்சி மாறி கருணாநிதி கைது செய்யப்பட்ட பிறகுதான் மீண்டும் அழகிரி குடும்பத்துக்குள் சேர்த்துக்கொள்ளப்பட்டார்!

தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் அழகிரி சேர்க்கப்பட்டு, கைது செய்யப்பட்டார். அந்த வழக்கு விசாரணையின் இறுதியில் அழகிரி விடுதலை செய்யப்பட்டார். இன்று வரை தென் மாவட்டங்களில் மறக்க முடியாத குற்றச்சாட்டு இது!

ஸ்டாலினுக்கு மிக நெருக்கமாக இருந்த அண்ணா நகர் ரமேஷின் தற்கொலை இன்று வரை மர்மம் உடைபடாத ரகசியம். அந்தத் தற்கொலைக்குப் பரிகாரமும் செய்யப்படவில்லை. பச்சைக் குழந்தைகள் மூவரும் மனைவியுமாக ரமேஷ§டன் இறந்த ஐந்து மரணங்களுக்கான குற்றவாளிகளை ஆட்சியில் இருந்த ஐந்து ஆண்டுகளில் இவர்கள் கண்டுபிடிக்கவும் இல்லை. தண்டிக்கவும் இல்லை!

மதுரை தினகரன் நாளிதழில் வெளியான கருத்துக் கணிப்பைத் தொடர்ந்து அந்த அலுவலகம் எரிக்கப்பட்டது. வினோத்குமார், கோபிநாத், முத்துராமலிங்கம் ஆகிய மூவரது மரணங்கள் தொடர்பான வழக்கு அப்பீலில் இன்று வரைக்கும் இருக்கிறது!

மத்திய அமைச்சர் பதவியை அழகிரி, தயாநிதி மாறன், கனிமொழி ஆகிய மூவருக்கும் வாங்குவதற்காக கருணாநிதி டெல்லிக்குச் சென்று காத்திருந்ததும்... அதைவைத்து ஆங்கில, இந்தி மீடியாக்கள் கமென்ட் அடித்ததும் நடந்தது. அதுவரை மரியாதைக்குரிய மனிதராக டெல்லி மீடியாக்களில் சொல்லப்பட்ட கருணாநிதி, முதன்முதலாக ஏளனம் செய்யப்பட்டார்!

சென்னையில் உள்ள பிரபல ஓட்டல்களில் ஏதாவது பேரனை வைத்து ஏதாவது ஒரு புகார் எழுந்து அடங்குவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. போலீஸாரும் ஹோட்டல் அதிபர்களும் கை பிசைந்து நிற்கிறார்கள்!

கனிமொழியும் ஸ்பெக்ட்ரம் தரகர் நீரா ராடியாவும் பேசிய தொலைபேசி உரையாடல்கள் இன்று வரை இரண்டு தரப்பாலும் மறுக்கப்படவில்லை!

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், கலைஞர் டி.வி-யும் கருணாநிதியின் மனைவி தயாளு, மகள் கனிமொழி ஆகியோரும் சிக்கி இருக்கிறார்கள். இந்தச் சிக்கலில் இருந்து அவர்கள் எப்போது விடுபடுவார்கள் என்பது சி.பி.ஐ-க்கே தெரியாது!

அடுத்து புதிய வாரிசுகள் மெள்ள உள்ளே நுழைகிறார்கள். செல்வியின் மகள் எழிலரசி வீணை கற்றுக்கொண்டது பாராட்டத்தக்க அம்சம். அதற்காக, கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அவரது கச்சேரி கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டது.

ஸ்டாலின் மருமகள் கிருத்திகா, ஒரு பத்திரிகையாளராக வலம் வருகிறார். அவரது குறும்படங்கள் பெரிதாகக் காட்டப்படுகின்றன. ஸ்டாலின் மகள் செந்தாமரை, சென்னை வேளச்சேரி பகுதியில் சன் ஷைன் என்ற பெயரில் பள்ளியைத் தொடங்கி, கல்வித் துறைக்குள் நுழைந்திருக்கிறார். அவரது கணவர், சபரீசன் பெயர் அவ்வப்போது சர்ச்சை களில் அடிபடும்.

தமிழரசுவின் மகள் பூங்குழலியும் அவரது கணவரும் அடுத்து வளர்ந்து வருகிறார்கள். கடைசியாக கனிமொழியின் மகன் ஆதித்யன் பற்றிச் சொல்லியாக வேண்டும்.

கலைஞரின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்திய ஆனந்த விகடன்- தி மு க அதிர்ச்சி  - Page 2 P26

சில மந்திரிகள் அவருடன் கிரிக்கெட் விளையாடி காக்கா பிடிக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!

நன்றி : விகடன் மற்றும் தமிழ் செய்திகள் இணையம்.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

ராஜ ராஜ சோழன்
ராஜ ராஜ சோழன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 07/04/2011

Postராஜ ராஜ சோழன் Sat Apr 09, 2011 5:34 pm

கலை அண்ணே சொல்வதில் ,குறை எதுவும் இல்லை ...

சூப்பருங்க

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Sat Apr 09, 2011 5:51 pm

என்னுடைய கருத்தாக நான் கூறுவது:

தி.மு.க = அ.தி.மு.க. இதில் எந்த கருத்து வேற்றுமையும் இல்லை.

இன்றைய காலகட்டத்திற்கு,

வேறு வழியே இல்லாத காரணத்தினால், ஜெயலலிதா ஆட்சி வந்தால் ஓரளவிற்கு முதலை வாயில் அகப்பட்ட தமிழகம் பிழைக்கும்.

ஜெயலலிதா ஒன்றும் சாதாரண ஆளில்லை. சர்வாதிகார ஆட்சிதான் இருக்கும், ஆணவப் போக்குதான் இருக்கும். இவரும் ஊழல் செய்யாமல் இருக்கப்போவதில்லை. கலைஞர் ஆட்சியில் நடந்த ஊழலுக்கு நிகராக இவரும் செய்யத்தான் போகிறார்.

ஆனால் கலைஞர் ஆட்சி மீண்டும் வந்தால் நம்மை வெல்வதற்கோ நம்மை எதிர்த்து ஒரு வார்த்தை சொல்வதற்கோ தமிழ்நாட்டில் யாருமே இல்லை என்ற என்ற முடிவுடன் இந்தக் குடும்பத்தின் அராஜகம், அட்டூழியம், ஊழல் எல்லாம் மும்மடங்கு அதிகமாகும்.

அதனால், தி.மு.க ஆட்சி மீண்டும் வருவது கூடாது என்பது எனது தனிப்பட்ட அபிப்ராயம்.

அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Apr 09, 2011 6:02 pm

யாதுமானவள் wrote:என்னுடைய கருத்தாக நான் கூறுவது:

தி.மு.க = அ.தி.மு.க. இதில் எந்த கருத்து வேற்றுமையும் இல்லை.

இன்றைய காலகட்டத்திற்கு,

வேறு வழியே இல்லாத காரணத்தினால், ஜெயலலிதா ஆட்சி வந்தால் ஓரளவிற்கு முதலை வாயில் அகப்பட்ட தமிழகம் பிழைக்கும்.

ஜெயலலிதா ஒன்றும் சாதாரண ஆளில்லை. சர்வாதிகார ஆட்சிதான் இருக்கும், ஆணவப் போக்குதான் இருக்கும். இவரும் ஊழல் செய்யாமல் இருக்கப்போவதில்லை. கலைஞர் ஆட்சியில் நடந்த ஊழலுக்கு நிகராக இவரும் செய்யத்தான் போகிறார்.

ஆனால் கலைஞர் ஆட்சி மீண்டும் வந்தால் நம்மை வெல்வதற்கோ நம்மை எதிர்த்து ஒரு வார்த்தை சொல்வதற்கோ தமிழ்நாட்டில் யாருமே இல்லை என்ற என்ற முடிவுடன் இந்தக் குடும்பத்தின் அராஜகம், அட்டூழியம், ஊழல் எல்லாம் மும்மடங்கு அதிகமாகும்.

அதனால், தி.மு.க ஆட்சி மீண்டும் வருவது கூடாது என்பது எனது தனிப்பட்ட அபிப்ராயம்.

முழுக்க முழுக்க என் கருத்தும் இது தான் தாயுமானவள்... இதைத்தான் இங்கே உரக்கக் கத்திக்கொண்டு இருக்கிறேன்..! சூப்பருங்க சியர்ஸ்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 09, 2011 6:06 pm

இதில் அந்தரங்கமோ, ரகசியமோ எதுவுமே இல்லை. இது ஊர் அறிந்த விஷயம் தானே! தலைப்பை மாத்துங்கப்பா.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Apr 09, 2011 6:16 pm

சரியான நேரத்தில் உண்மையை வெளிச்ர்திற்கு கொண்டுவந்த விகடனுக்கு நன்றிகள் உரித்தாகட்டும்!
போற போக்க பார்த்தால் தமிழ் நாட்டை கருணாநிதி குடும்பம் தான் ஆட்சி செய்யும் போலிருக்கு படிப்பறிவு கொண்டவர்கள் இதை பார்த்தால் யாரும் ஓட்டு போட மாட்டர்கள் ஆனால் பாமர மக்களுக்கு இதை கொண்டு போய் சேர்த்தால் நன்றாக இருக்கும் அவர்கள் உணர்ந்தால் தமிழ் நாட்டின் எதிர்காலம் மாறிவிடும்
கருணாநிதி குடும்ப அரசியலுக்கு ஒரு முற்று புள்ளி வைத்து விடலாம்! தக்க சமயத்தில் பதிவிட்டமைக்கு நன்றி கலை அண்ணா.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 09, 2011 6:20 pm

கூல். கூல்...
குருவி கட்டிய கூண்டுக்குள்ளே குண்டு வைக்கலாமா?
நாமெல்லாம் சண்டை இட்டு பிரிந்து கிடந்த/கிடக்கின்ற காரணத்தினால் தான் வெள்ளையர்களும், கொள்ளையர்களும் நம்மை ஆள்கின்றனர்.

DMK ,ADMK போன்ற மாமூலான கட்ச்சிகளை பிடிக்காதவர்கள்
இதுபோன்ற (கீழே உள்ள லின்க்கை சொடுக்கவும்)
http://www.makkalsakthi.net/
மாற்று அரசியலை ஆதரிக்கலாமே!

இப்படிக்கு..அட்வைஸ் ஆறுமுகம்! :வணக்கம்:

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Sat Apr 09, 2011 6:24 pm

thamil makkal thiruntha vendum!!

- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 09, 2011 6:24 pm

சோகம்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கலைஞரின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்திய ஆனந்த விகடன்- தி மு க அதிர்ச்சி  - Page 2 47
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sat Apr 09, 2011 6:39 pm

யார் ஆட்சிக்கு வந்தாலும் உங்களுக்கு எந்த நன்மையும் வரப் போவதுஇல்லை. பிறகு ஏன் இந்த சண்டை?என்னை பொறுத்தவரை கலைஞ்சர் ஆட்சி மட்டுமே நல்லாட்சியை தர முடியும் இந்த தமிழ்நாட்டில் .ஜெயலலிதா வந்தால் தமிழ் நாட்டு அரசு ஊழியர்கலை பலி வாங்கவே அவருக்கு நேரம் சரியாஹா இருக்கும்.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 09, 2011 6:43 pm

thendral25 wrote:யார் ஆட்சிக்கு வந்தாலும் உங்களுக்கு எந்த நன்மையும் வரப் போவதுஇல்லை. பிறகு ஏன் இந்த சண்டை?என்னை பொறுத்தவரை கலைஞ்சர் ஆட்சி மட்டுமே நல்லாட்சியை தர முடியும் இந்த தமிழ்நாட்டில் .ஜெயலலிதா வந்தால் தமிழ் நாட்டு அரசு ஊழியர்கலை பலி வாங்கவே அவருக்கு நேரம் சரியாஹா இருக்கும்.

ஏன். இருக்குற கொஞ்ச நஞ்சம் தமிழ் நாட்டையும் கொள்ளை அடிக்கவா?
கலைஞருக்கு சப்போர்ர்ட் பண்ணுனீங்க...ஈகரைல ஒரு ரெத்த ஆறே ஓடும் சொல்லிட்டேன். எதிர்ப்பு

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக