புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்யாணமாம் கல்யாணம்! Poll_c10கல்யாணமாம் கல்யாணம்! Poll_m10கல்யாணமாம் கல்யாணம்! Poll_c10 
32 Posts - 48%
heezulia
கல்யாணமாம் கல்யாணம்! Poll_c10கல்யாணமாம் கல்யாணம்! Poll_m10கல்யாணமாம் கல்யாணம்! Poll_c10 
30 Posts - 45%
mohamed nizamudeen
கல்யாணமாம் கல்யாணம்! Poll_c10கல்யாணமாம் கல்யாணம்! Poll_m10கல்யாணமாம் கல்யாணம்! Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
கல்யாணமாம் கல்யாணம்! Poll_c10கல்யாணமாம் கல்யாணம்! Poll_m10கல்யாணமாம் கல்யாணம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்யாணமாம் கல்யாணம்! Poll_c10கல்யாணமாம் கல்யாணம்! Poll_m10கல்யாணமாம் கல்யாணம்! Poll_c10 
32 Posts - 48%
heezulia
கல்யாணமாம் கல்யாணம்! Poll_c10கல்யாணமாம் கல்யாணம்! Poll_m10கல்யாணமாம் கல்யாணம்! Poll_c10 
30 Posts - 45%
mohamed nizamudeen
கல்யாணமாம் கல்யாணம்! Poll_c10கல்யாணமாம் கல்யாணம்! Poll_m10கல்யாணமாம் கல்யாணம்! Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
கல்யாணமாம் கல்யாணம்! Poll_c10கல்யாணமாம் கல்யாணம்! Poll_m10கல்யாணமாம் கல்யாணம்! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்யாணமாம் கல்யாணம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 02, 2009 12:54 am

- ஹரிசந்திர பிரசாத்

""பையன் வீட்ல என்ன பேசிக்கறாங்க...?''

கால்மேல் கால் போட்டு,தோரணையாக கேட்டார், கதிரேசன். காரியதரிசி, பணிவாய் பதில் சொன்னார்...

""நம்ம வீட்ல பெண் எடுக்க கசக்குமா? பையன்லருந்து, அந்த வீட்டு பாட்டி வரைக்கும் எல்லாரும் சந்தோஷத்திலும், ஆச்சரியத்திலும் திக்குமுக்காடிப் போ யிட்டாங்க...''


கதிரேசனின் தடித்த உதடுகளில் பெருமை ஒரு புன்னகைக் கோட்டை இழுத்தது.

""ம்ம்...'' என்று தொண்டையை செருமிக் கொண்டு, ""அது இருக்கட்டும். நிச்சயதார்த்தம், கல்யாணமெல்லாம் எப்ப வைக்கலாம்ன்னு சொன்னாங்களா...''

""அதெல்லாம் உங்க முடிவு. உங்களுக்கு எந்தெந்த தேதியில சவுகரியப்படுதோ, அப்படியே செய்துக்கலாம்ன்னுட்டாங்க.''

தெருவைப் பார்த்த பெரிய திண்ணையில் அமர்ந்து அவர் கேட்டுக் கொண்டிருக்க, நின்று பதில் சொல்லிக் கொண்டிருந்தார் காரியதரிசி...

அந்த நேரம், தெருவில் நீலவண்ணத்தில் புது கார் ஒன்று சோப்பு கட்டிபோல் நழுவி ஓடி மறைந்தது. அவர் புருவத்தை நெறித்து பார்த்தார்.

""பாண்டுரங்கன் மகளும், மருமகனும் போறாங்க...''

""கார் புதுசாயிருக்கு...''

""போன வாரம்தான் வாங்கி கொடுத்திருக்கார்...''

""அவனுக்கு இருக்கிற திமிர், அவன் வாரிசுக்கும் இருக்கு. மூக்கு ஒழுகிகிட்டு திரிஞ்ச பொண்ணுக்கு கார் வந்ததும் கண்ணு தெரியலையோ...''

""விடுங்க...சின்னஞ்சிறுசுங்க. நம்ம விஷயத்துக்கு வருவோம். பையன் வீட்ல என்னஎதிர்பார்க்கறாங்கன்னா... நகை இருபது பவுனுக்கு குறையாமலும், ரொக்கம் அம்பதும், கட்டில், பீரோ, பாத்திர வரிசைகளோடு, ஒரு டூ-வீலரும் கொடுத்தால் நல்லாயிருக்குமாம். கட்டாயம் ஒண்ணுமில்லையாம்...''

மேற்கொண்டு பேசவிடாமல் தடுத்து,""பாண்டுரங்கன் பொண்ணுக்கு எவ்வளவு செய்தான்?'' என்று கேட்டார்.

""அது எதுக்குங்க நமக்கு... அவர் கல்யாணமா பண்ணாரு... திருவிழால்ல நடத்தினாரு...''

""நாமும் அப்படியே செஞ்சிருவோம்...'' என்றார், கதிரேசன்.

தயங்கினார் காரியதரிசி.

""நாம யாருன்னு காட்டணும். பாண்டுரங்கன் இந்த ஊருக்கு பஞ்சம் பிழைக்க வந்தவன்; என்கிட்ட ஆதரவு கேட்டு நின்னவன். அவன், அரசியல்லயும், தொழில்லயும் மேலுக்கு வர காரணமானவனே நான். நேத்து வந்தவன் பொண்ணு கல்யாணத்தை, ஒரு ஊர் திருவிழாவாய் நடத்தினால், நான் பரம்பரை பணக்காரன் - ஏழு ஊர் திருவிழாவாய் நடத்திக் காட்ட வேண்டாமா...'' என்று பேசிய போது, அவர் குரலிலும், பார்வையிலும் ரோஷம் தளும்பியது.

"அவருக்கு பணம் வேற, வேற வழியில ஊத்தா பாயுது. வாரி இறைச்சார்... நமக்கு அப்படியா...' என்று, ஏதோ சொல்ல வந்த காரியதரிசி, கதிரேசனின் பார்வைக்கு வாய் மூடிக் கொண்டார்.

""கேட்டுக்க... பெண்ணுக்கு நூறு பவுன்; மாப்பிள்ளைக்கு பத்து பவுன், உறவுக்காரங்க அத்தனை பேருக்கும் பட்டு வேட்டி, சட்டை; மாப்பிள்ளைக்கு நாலு லட்சம் பெறுமான வீடு; வீட்டுச் சமான்கள்ள, பாதி வெள்ளி, மீதி வெண்கலம்; கட்டில் முதற்கொண்டு சாப்பாட்டு மேசை வரை எல்லாம் தேக்கு.

""முக்கியமா... கல்யாணப் பரிசாய் ஒரு கார் கொடுக்கறோம்...! என்ன செலவானாலும் சரி...'' என்றார்.
சற்று முன் இருந்த மனிதர் இல்லை இவர்; இப்போது எது சொன்னாலும் இவர் ஏற்க மாட்டார் என்று தெரிந்ததும், தலையாட்டி பின் வாங்கினார், காரியதரிசி.

""பாண்டுரங்கன் வீட்டு கல்யாணச் செலவு, கார் உட்பட 15 லட்சம். இந்த வானம் பார்த்த பூமியில... எனக்குத் தெரிஞ்சு நடந்த... ஏன், உங்களுக்கும் கூடத்தான் தெரியும்... பிரமாண்டமான கல்யாணம் அது. நம்மால் அதைவிட சிறப்பா பண்ணிட முடியும். அந்த அளவுக்கு வசதி இருக்கு. ஆனால், ஒரு கல்யாணத்தைதான் அப்படி பண்ண முடியும்...'' சொல்லி நிறுத்தினார், காரியதரிசி. கதிரேசன் மனைவி, தேவானையம்மாள், குழப்பமாக பார்த்தாள்.

""என்ன பார்க்கறீங்க.... பாண்டுரங்கனுக்கு ஒரே பொண்ணு; வேறு வாரிசே இல்லை. இந்த வீட்ல மூணும் பொண்ணுங்க... நான் என்ன சொல்ல வர்றேன்னு அம்மாவுக்கு புரியும்...''

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 02, 2009 12:55 am

""புரியாமலென்ன... ஒரு பொண்ணுக்கு பிரமாண்டமா செய்துட்டா போதுமா... மற்ற ரெண்டு குழந்தைகளுக்கும், அதற்கு இணையாக செய்ய வேணாமா... அப்படி செய்ய முடியாமல் போனால், ஊர் என்ன சொல்லும், இரண்டு பெண்களும்தான் என்ன நினைப்பாங்க...''

""அதுதான் என் கவலையும். அய்யாவுக்கும் இது தெரியும். அதனாலதான் காயத்ரியின் கல்யாண பேச்சு எடுத்தப்போ,

"கணேசா... எனக்கு மூணு பெண்களும் சமம். வயசைத் தவிர வேற எந்த விஷயத்திலும் அவங்களுக்குள் ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது; கல்யாண விஷயத்திலும் அப்படிதான். மூத்த பெண்ணுக்கு என்ன அந்தஸ்துல மாப்பிள்ளை பார்க்கறோமோ... அதே அந்தஸ்திலுள்ள மாப்பிள்ளைகளைதான் மத்த ரெண்டு பேருக்கும் பார்க்கணும்...'ன்னு சொல்லிகிட்டிருந்தாரு...''

""பிடிவாதக்காரராச்சே அவர்...'' என்று அந்த அம்மாள், கவலைப்பட்டாள். காரியதரிசி சொன்னார்,

""அவசரக் கூட்டம் ஒண்ணு நடத்தணும்மா... அய்யா இல்லாத நேரமா பார்த்து நீங்க, நான், காயத்ரி, சாரதா, அகிலான்னு மூணு பெண்களையும் வச்சு பேசுவோம். ஏதாவது யோசனை கிடைக்கும்.''

கதிரேசன், டவுனுக்கு போயிருந்த நேரம், வீட்டுக்குள் கூட்டம் கூடியது. காரியதரிசி, கணக்கு புத்தகத்தைக் கொண்டு வந்து வைத்தார். எல்லாரையும் ஒரு வட்டம் பார்த்தார். பிறகு,""இந்த நோட்டை இதுவரை நீங்கள் பார்த்திருக்க முடியாது; அய்யாவுக்கு அடுத்தபடியாக எனக்குதான் தெரியும்; அம்மாவுக்கு கூட இதுபத்தி முழுசா தெரியாது. இந்த நோட்டு, இந்த குடும்பத்தோட நாலு தலைமுறை ரகசியம்ன்னு கூட சொல்லலாம்.

""இதை அம்பலப்படுத்தறது, அய்யாவுக்கு நான் செய்ற துரோகம்; இருந்தாலும், அவரோட நன்மைக்காக இப்ப அதை நான் செய்ய வேண்டியிருக்கு. உங்கள் மேல உள்ள நம்பிக்கை, அக்கறையால இதை உங்களுக்கு காண்பிக்கறேன். பார்த்துட்டு, மனசோடு வச்சிக்கங்க...'' என்று அந்த கணக்கு நோட்டுகளையும், தஸ்தாவேஜுகளையும் கொடுத்தார். பேரமைதி விழுந்தது.

காயத்ரி கேட்டாள், ""இந்த கணக்கெல்லாம் எதற்கு! குடும்ப ரகசியம், ரகசியமாகவே இருக்கட்டும். எதையும் ஆதாரத்தோடுதான் சொல்லணும்ன்னு இல்லை. நீங்கள் வெறும் காரியதரிசி மட்டுமில்லை; அதற்கும் மேலே. எதுவானாலும் வார்த்தையாலயே சொல்லுங்க, போதும்.'' மற்ற பெண்களும் வழிமொழிந்தனர்.


""ஆமாம்பா. அவங்க சொல்றது சரி. ஏதோ பேசணும்னுட்டு, இதையெல்லாம் ஏன் கொண்டு வந்தே...''

நெகிழ்ந்தார் காரியதரிசி.

""நீங்கள் என் மேல் வச்சிருக்கிற நம்பிக்கைக்கு நன்றிம்மா. நான் இதையெல்லாம் காட்ட நினைச்சதுக்கு காரணம்... வீட்டு வரவு - செலவு, இருப்பு நிலவரமெல்லாம் எல்லாரும் தெரிஞ்சுக்கணும்ன்னுதான். இதுக்கு, இப்ப என்ன அவசியம் வந்ததென்றால்...'' என்று துவங்கி, ""காயத்ரி... உனக்கு அப்பா நடத்த நினைக்கிற விமரிசையான கல்யாணத்தை தடுக்கப் பார்க்கறேன்னு, என்னை தவறா நினைச்சுடாதே. நான் ஒட்டுமொத்த குடும்பத்தின் நலனை நினைச்சு சொல்றேன்.''

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 02, 2009 12:57 am

""தவறாய் நினைக்க ஒண்ணுமில்லை மாமா...! ஒரு வகையில் ரொம்ப நல்ல விஷயமிது. நாங்க பாட்டுக்கு ஆளுக்கொரு கற்பனைல இருந்துடக் கூடாது பாருங்க. வீண் பெருமைக்காக ஆடம்பரக் கல்யாணம் பண்ணிட்டு, பிறகு, இந்த வீடு கஷ்டத்தில் விழுந்துட்டால், வாழப் போகிற இடத்தில் நான் மட்டும் சந்தோஷமா இருக்க முடியாது. தவிர, அப்பா எப்பவும் வசதியில தாழக்கூடாது.


""இப்ப உள்ளது போல கவுரவமாய், யாருக்கும் தலைவணங்காமல், யாரையும் எதிர்பார்க்காமல், கடைசிவரை கம்பீரமாய் வாழணும். அம்மா, அப்பா ஒத்துமையாய் இருக்கணும். எங்கள் கல்யாணச் செலவுகளால இந்த குடும்பம் நொடிந்து போச்சுங்கற அவப்பெயர் வரக்கூடாது,'' என்றாள்; மற்ற பெண்களும் அதே போல கூறினர். மகள்களின் விசால மனதையும், அவர்களின் தெளிவான பேச்சுகளையும் கேட்டு, மனதை அழுத்திக் கொண்டிருந்த பாரம் நீங்கியது போல் நிம்மதியோடும், பாசத்தோடும் தேவானையம்மாள் பார்த்த நேரம்...


கதவு தட்டப்பட்டது. பூனையைக் கண்ட எலிகள் போல், ஆளுக்கொரு பக்கம் சிதறி ஓடினர். கதவு திறக்கப்பட்டு, உள்ளே வந்த கதிரேசன்,""என்ன நினைச்சுகிட்டிருக்கீங்க எல்லாரும். நானும் இந்த குடும்பத்தைச் சேர்ந்தவன்ற நினைப்பில்லாம, நீங்களே மாநாடு நடத்தறீங்க. கதவுல காதுவச்சு கேட்கப் போய், எனக்கும் உண்மை நிலைமைய புரிஞ்சுக்க ஒரு வாய்ப்பு கிடைச்சுது; இல்லைன்னா, கண்ணை மூடிகிட்டு, நிலைக்கு மீறி நடந்திருப்பேன். இதை முதல்லயே என்கிட்ட எடுத்து சொல்றதுக்கென்ன. எங்க செகரட்டரி...'' என்று சப்தம் போடார்.

""இங்க இருக்கணுங்கோ...'' என்று கதவுக்கு பின்னால் இருந்து வந்தார், கணேசன்.

எல்லாரும் கொல்லென்று சிரித்தனர்.

""என்னய்யா இது... கோமாளி மாதிரி. சரி, சரி... மாப்பிள்ளை வீட்ல கேட்டத குறைவில்லாம செய்துடலாம். அடுத்த வாரமே நிச்சயதார்த்தம் வச்சிக்கலாம்ன்னு சொல்லு. மீதி வேலைகளையெல்லாம் நீங்களே சேர்ந்து, எப்படி செய்தால் சரியாயிருக்குமோ, அப்படி செய்ங்க.

""மணமக்களை ஆசிர்வாதம் பண்றதை தவிர, வேற வேலை எனக்கு இருக்கப்படாது... சொல்லிட்டேன்,'' என்று திண்ணைக்கு போனார், கதிரேசன். மாப்பிள்ளை வீடு நோக்கி மகிழ்ச்சியுடன் கிளம்பினார், காரியதரிசி. காயத்ரி, கல்யாணம் சீரும், சிறப்புமாக நடந்தது. உறவு, நட்புக்கு குறைவில்லை. வந்தவர்களுக்கெல்லாம் தன் கையாலேயே வெற்றிலை, பழம் கொடுத்து வழியனுப்பினார், கதிரேசன்.

"நிறைகுடம் தளும்பாது; குறைகுடம் கூத்தாடும்ன்னு சொல்வாங்க. அது சரியாதான் இருக்கு. பரம்பரை பணக்காரங்க என்ன நிதானமா, அடக்கமா கல்யாணத்தை நடத்தறாங்க. புதுப் பணக்காரனும் நடத்தினானே... ஆரவாரமாய், எலக்ஷன் கூட்டம் மாதிரி...' என்று யாரோ சொல்லிக் கொண்டு போவது, அவர் காதுகளில் விழத்தான் செய்தது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக