ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முள்வேளியா முல்லைப்பூவா

Go down

முள்வேளியா முல்லைப்பூவா Empty முள்வேளியா முல்லைப்பூவா

Post by சிவா Fri Sep 04, 2009 6:45 pm

கதவுப்பக்கம் நிழல் தெரிந்தது. பானுமதி எண்ணுவதை நிறுத்தினாள். பக்கவாட்டில் முகம் திருப்பிப் பார்த்தாள். அப்பாதான்.

என்னப்பா? வெளியில கிளம்பியாச்சா? இதோ ஒரு கப் காஃபி கலந்து தரேன் என்று எழ முயற்சித்தபோது உடனே அவரே உள்ளே வந்துவிட்டார்.

காஃபி வேணாம்மா...

ஆச்சர்யமா இருக்குப்பா - என்று புன்னகைத்தாள். எட்டு டோஸ் காஃபி சாப்பிடற ஆளு நீங்க, இன்னும் மூணாவது ஸ்கோரே வர்ல. வேணாங்கறீங்க... என்ன ஆச்சு?...

கடைக்கு போறியா? பணம் எண்ணிகிட்டிருக்க?

ஆமாம்பா. சிவகுரு ஆஸ்ரமத்து குழந்தைகள் ஒரு ஐம்பது பேருக்கு டிரஸ் வாங்கி தரலாம்னுப்பா.

நூறு ரூபா ஆகுமாம் ஒரு பெண் குழந்தைக்கு. அஞ்சாயிரம் ட்ரா பண்ணிட்டு வந்தேன். நீங்களும் வாங்களேன்பா கடைக்கு, உங்களுக்கும் தீபாவளி பர்ச்சேஸ் முடிச்சுடலாமே. அப்பா பதில் சொல்லவில்லை. அவர் பார்வை கனிவுடன் மகளின் முகத்தை பார்த்து. நெற்றியை வருடியது. வகிட்டோரம் பரவத் தொடங்கியிருந்த வெள்ளி நரையை போட்டோதாபமாக பார்த்தது. வருத்தத்துடன் குனிந்தது.

நானே வாங்கிட்டு வந்துடறேன்பா. வொயிட் ஷர்ட்டிங் கிளாத், எட்டு முழ வேஷ்டி, இதானேபா உங்க காஸ்ட்யூம்? ரெஸ்ட் எடுங்க. ராத்திரி சரியா தூங்காம புரண்டுகிட்டிருந்தீங்க.

கோவிலுக்கு போயிட்டு வரேன்மா- என்று அப்பா ஷர்ட்டை மாட்டிக் கொண்டார். ராதா கல்யாணம் இன்னைக்கு. முக்கூர் நரசிம்மாச்யார் உபன்யாசம். அருமையா இருக்கு. ஒண்ணு கேக்கட்டுமாம்மா?

இதேன்னப்பா கேள்வி?

பானு கல்யாணம் எப்பம்மா?

ஒரு கணம் விழித்தாள். பிறகு பளிச்சென்று சிரித்தாள். இந்த முக்கூரையே கேளுங்கப்பா.

ருக்மிணி கல்யாணம், கௌரி கல்யாணம், சீதா கல்யாணம் எல்லாம் செஞ்சு வெக்கறவர் அவர்தான்.

விளையாட்டு பொண்ணா இருக்கியேம்மா பானு- என்றபோது அந்த வயோதிக குரல் தழுதழுத்து போயிருந்தது. பதினெட்டு வயசுல கோபப்பட்ட... அதுல நியாயமிருந்தது. தாயில்லா பொண்ணு இஷ்டபடி இருக்கட்டுன்னு விட்டுட்டேன். வருஷம் போகப்போக மனசு இளகும், மாறும்னு எதிர்ப்பார்த்தேன். பத்து வருஷமாச்சு கான்க்ரீட் மாதிரி கெட்டியா மாறியிருக்கே தவிர....

ரெடியா சிதம்பரம்... வாசலிலிருந்து எதிர்வீட்டு விநாயகத்தின் குரல் கேட்டது.
கௌம்புங்கப்பா. உங்க கம்பெனி வந்தாச்சு.. என்று எழுந்தாள்.

நான் சொன்னது...? நடந்து முடிஞ்ச கதைப்பா... ப்ளீஸ். மூடின கல்லரை, மூடினதாகவே இருக்கட்டும். வீ லெட்ஸ் நாட் ஓப்பன் இட். கௌம்புங்க. முக்கூர் காத்திட்டு இருப்பார்.... அப்பா நடந்தார். நடை தொய்ந்திருந்தது.

கடையில் நல்ல வேளையாக கூட்டம் இல்லை. குழந்தைகளுக்கான உடைகள் எளிதில் கிடைத்துவிட்டன. மொத்தமாக கிழித்து தருவது கடைகாரருக்கும் சுலபமாகவே இருந்தது.

ஸாரிஸ் பாக்கறீங்களாம்மா..? மாடில இருக்கு.

சரி...
மாடியில் கூட்டம் அதிகம்தான். பெண்களும் கணவர்களும், குழந்தைகளும் பரபரப்பாய் புடவைகளை அலசிக் கொண்டிருந்தார்கள்.

எப்படியோ... பத்து நிமிடங்களுக்கு பிறகு இரண்டாம் வரிசைக்கு போனாள்.

என்னம்மா வேணும்? ராஜுல், காஜுல், விபுல் எல்லாம் இருக்கு... உறுத்தாத காட்டன் வேணும் சார்.

டே... ஏழுமலை. அந்த சூர்யா மில்ஸ் பண்டலை எடுடா. ஹை க்ளாஸ் காட்டன்மா. ஆல் லைட் கலர்ஸ்....

சூர்யா....

மின்சாரம் போல் அந்த பெயர் நேரடியாக இதயத்துக்குள் பாய்ந்தது. இதுவரை இருந்த மனநிலை முழுவதும் மாறிவிட்டார் போலிருந்தது. சூர்யா! எவ்வளவு அழகான பெயர். போட்டோயனை போன்றவன்தான் அவனும்! என்ன உயரம்! என்ன கம்பீரம்! எத்தனை தீர்க்கம் கண்களில்! கவியரங்கத்தில் பெண்ணியம் பற்றி கவிதை வாசித்த அவன் வார்த்தைகளிலும் உச்சரிப்பிலும் அரங்கமே விடாமல் கைதட்டி பிரமித்தது. அவள் அசந்து போனாள். ஆணாதிக்க சமுதாயத்தில் எப்படி முகிழ்த்தது இப்படியோர் போட்டோவு என்று திகைத்தாள். சுதந்திரம் வந்ததென்னவோ உண்மைதான்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முள்வேளியா முல்லைப்பூவா Empty Re: முள்வேளியா முல்லைப்பூவா

Post by சிவா Fri Sep 04, 2009 6:45 pm

யாருக்கு? இந்திய ஆண்களுக்கு. நம் பெண்கள் இன்னும் அடிமைதான். என்று குரல் கனிவில் நெகிழ அவன் பேசும்போது அவள் இதயம் உருக்க கரைந்து அவனிடம் ஓடியது. எத்தனை சந்திப்புகள் அந்த நட்பை நெருக்கமாக்கின. எத்தனை உரையாடல்கள் நெருக்கத்தை வளர்த்தன. எத்தனைபோட்டோ கேலரிமாற்றங்கள் நெஞ்சை இளக்கின. மெல்ல நட்பு என்ற கட்டத்தை தாண்டி அடுத்த இடத்திற்கு போகும்போது சுற்றுபுறமே நந்தவனமாகியது. தினம் அவன் குரல் கேட்கும்போதெல்லாம் நெஞ்சுக்குள் குயில் கூவியது. சூர்யா சூர்யா என்றே ரேடியோ பாடியது.

பானு பானு பானு என்று அவனும் சித்தம் முழுக்க அவளாகி போனான். சமுதாய அக்கறை என்பது இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டு சிந்தனை பூராவும் பானுமதியே ஆக்ரமித்தாள். எப்படி பானு இவ்வளவு மென்மையாக இருக்கிறாய், எப்படி பானு இவ்வளவு பொறுமையாக புன்னகைக்கிறாய், எப்படி
பானு இவ்வளவு அடக்கமான அறிவுப்பெட்டகமாக இருக்கிறாய் என்று எல்லாவற்றிலும் வியப்பு காட்டினான். ஒரு நாள் ஒரே ஒரு நாள் பார்க்காவிட்டாலும் தாடி வளர்த்துக் கொண்டான்.

அப்படி இருந்தவன்தான் ஒருநாள் திடீரென்று காணாமல் போனான். தவித்து தடுமாறி போனாள். பத்து நாட்களுக்கு பிறகு ஒரே ஒரு கடிதம் மட்டும் வந்தது. அரசாங்க ஐ.சி.யூ. பிரிவிலிருந்து எழுதியிருந்தான். காதலுக்கு குறுக்கே வந்த தாயார் விஷ மருந்தை குடித்துவிட்டாளாம், மூன்று மணி நேர கெடுவுடன் உயிருக்கு போராடுகிறாளாம், கண்ணாடி கூண்டுக்குள் ஜீவ மரணப் போராட்டம் ஒன்று நடப்பதை பார்த்தபடியேதான் இந்த கடிதத்தை எழுதிக்கொண்டிருக்கிறானாம். அவள் கால்களில் மானசீகமாக விழுந்து மன்னிப்பு கேட்கிறானாம்.

சுறுசுறுவென்று கோபம் வந்தது இப்போதுகூட நினைவிருக்கிறது. சே, என்ன சுயநல ஆண்கள் என்று சீற்றம் வந்தது. ஒரு பயலும் வேண்டாம் எனக்கு என்று எரிச்சல் வந்தது. குணாதிசியம் தலைகீழாக மாறிப்போனது. வீடுபற்றி, அந்த மனிதர்களின் மனஇயக்கம் பற்றி அறிந்து கொள்ளாமல், மண்டிக் கொண்டே போகும் புதர்போல காதலை வளர வைத்த சூர்யா மேல் ஆத்திரம் எகிறியது.

கொஞ்சம் கொஞ்சமாக அது அடங்கியும் விட்டது. உயிரா? காதலா? என்ற ஒரு தாயார்க்காரி கேட்கும்போது எந்த மகன்தான் காதல் என்று சொல்லுவான்? தன் பொருட்டு அவள் உயிரையும் துச்சமாக நினைத்ததை எந்த மகன் சகஜமாக எடுத்துக்கொள்வான். நாளை மறுபடியும் இது நடக்கலாம் என்கிற அச்சம் அவன் ரத்தம் பூராவும் பரவி யோசிக்க வைக்குமே.

ஆனால் ஊரை காலி பண்ணிக்கொண்டு சென்னை வந்து சேர்ந்தபோது ஒன்றே ஒன்றுமட்டும் மனதுக்குள் வட்டமிட்டது. எப்படி அவளால் சூர்யாவை மறக்க முடியாதோ அதேபோல அவனாலும் வேறு ஒரு பெண்ணை ஒரு வினாடி கூட நினைக்க முடியாது.

கிளிப்பச்சை வொயிட் பார்டர்மா... பாருங்க.. உங்க நிறத்துக்கு எடுப்பா இருக்கும்... நினைவுக்கு வந்தாள்.

ஏய்...பானு... ஓ காட்!!! பானு!! நீயா? - குரல் கேட்டு திரும்பினாள். இருதயம் ஒரு கணம் நின்று துடித்தது.

சூர்யா!!! அவன்தான்!! அவனேதான்.

என்ன பானு, என்ன அப்படி பாக்கற? இதே சூர்யாதான்... என்ன வயிறு கொஞ்சம் முன்னாடி வந்துட்டுது... அவ்வளவுதான்! கொஞ்சம் நரை, நிறைய வழுக்கை, லேசா முகச் சுருக்கம்... மத்தபடி அதே சூர்யாதான்!... வாட் எ ப்ளசன்ட் சர்ப்ரைஸ்... - அவன் பேசிக்கொண்டே போனான்.

இன்னும் நம்பமுடியவில்லை. பத்து வருடங்களில் அவனுக்கு பதினைந்து வயது கூடியிருந்தது. குரல் கெட்டித்திருந்தது. பழைய இனிமை மட்டும்...

எப்படி இருக்கே பானு... - என்றான் சாதாரணமாக.

ஃபர்ஸ்ட்கிளாஸ் என்று புன்னகைத்தாள்.

நானும்தான்... - என்று கைநீட்டினான். அந்த ப்ளெயின் ப்ளூ சாரி... தலைல குப்புனு மல்லிகை கடையையே வெச்சிட்டு இருக்காளே... நளினி... மை டியர் வைஃப்... ரொம்ப நல்ல பொண்ணு... உனக்கு தெரியுமா? நெறைய கவிதைகள் எழுதறேன் பானு... கணையாழி, தாமரை, நந்தன்னு கனமான பத்திரிகைகள்ல....

வெரிகுட் என்றாள்

பர்ஸனல் வாழ்க்கை ரொம்ப அமைதியா இருக்கு. குத்துவிளக்கு போல பொண்டாட்டி... இதமான சூழல்தான் கற்பனைக்கு அடிப்படை. என்ன சொல்றே பானு?

ரைட் சூர்யா...

ஆர்க்யூவே பண்ணமாட்டா... என்னோட நிழல்ன்னு சொல்லிக்க பிரியப்படறா... தனக்குன்னு புடவை செலக்ட் பண்ணக்கூட நான்தான் வரணும்ன்னு ஆசைப்படுவா...

நிமிர்ந்தாள். யாரிவன்? அவளுடைய சூர்யா இல்லை அவன். புதியவன். நளினியின் சூர்யா. பழசெல்லாம் மறந்துபோன ஏதோ ஒரு சூர்யா. பானு என்ற பழைய காதலியை சுத்தமாய் மறந்துவிட்டு புது உலகிற்குள் தன்னை நுழைத்துக்கொண்டவன். அதிலேயே முழ்கிப்போனவன். அவளை முழுக்க மறந்தவன்.

நம்ப முடியாத அதிர்ச்சியில் இதயத்திற்குள் மெல்ல வலி நுழைவதை பானுமதி உணர்ந்தாள். எங்கிருந்தோ ஒரு குழந்தை ஓடி வந்தது.

டாடி எனக்கு ஷராரா வேணும். டாடி வா அங்க போகலாம். ரோஸ் கலர்ல...
சூர்யா குழந்தையை அள்ளிக் கொண்டு அவளைக் காட்டியபடியே பேசினான்.
இது யார் தெரியுமா? பானு ஆன்ட்டி... ஹலோ சொல்லு... பானு! இவ என் குழந்தை பேர் பானு..

பானுமதி....பானுமதி பானுமதியை பார்த்து சிரித்தது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum