புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_m10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10 
19 Posts - 46%
mohamed nizamudeen
தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_m10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10 
5 Posts - 12%
heezulia
தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_m10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10 
5 Posts - 12%
வேல்முருகன் காசி
தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_m10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_m10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10 
3 Posts - 7%
Raji@123
தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_m10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10 
2 Posts - 5%
ஆனந்திபழனியப்பன்
தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_m10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_m10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10 
1 Post - 2%
prajai
தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_m10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_m10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10 
142 Posts - 40%
ayyasamy ram
தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_m10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_m10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_m10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_m10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_m10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10 
7 Posts - 2%
prajai
தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_m10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10 
7 Posts - 2%
Guna.D
தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_m10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_m10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_m10தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவைகள் பிறக்க ஆனந்தம் அழியும்!

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sat 9 Apr 2011 - 0:19

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா?’ என்று பாடினான் பாரதி. இப்படிப் பாடிய பாரதி செல்வச் செழிப்பில் வாழ்ந்தவனல்ல. வாழ்க்கையில் சிக்கல்களையும், பிரச்சினைகளையும் பாராதவன் அல்ல.

சொல்லப் போனால் அவன் வாழ்க்கையே பிரச்சினைகளின் தொகுப்பு என்று சொல்லும்படி இருந்தது. ஆனாலும் பாரதி அழுது புலம்பி ஒரு வரி பாடியதில்லை.

மாறாக எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று வியந்து மகிழ்கிறானே எப்படி? அவன் கண்ட ஆனந்தம், அவன் கண்ட இன்பம் எங்கிருந்தது? எப்படி வந்தது?.

வீதியில் நின்று சற்று நேரம் வருவோர் போவோரைக் கவனியுங்கள், எத்தனை முகங்களில் ஆனந்தம் தெரிகிறது? விரையும் மனிதர்கள் முகத்தில் கரைக்க முடியாத கவலைகளும், சிந்தனைகளும் அல்லவா தெரிகிறது? இதில் பணக்காரன், ஏழை என்ற வித்தியாசம் ஏதும் தெரிவதில்லையே.

இருப்பவன், இல்லாதவன் என்ற இரண்டு வகை மனிதர்களும் ஆனந்தத்தைத் தேடி அலைவது போலல்லவா இருக்கிறது? எங்கே அந்த ஆனந்தம் கிடைக்கும்?

பதிலைத் தேடும் முன் முல்லா நஸ்ருதீன் கதை ஒன்றைப் பார்ப்போம். முல்லா நஸ்ருதீன் வெளிச்சமான இடத்தில் ஏதோ தேடிக் கொண்டு இருந்தார். அதைக் கண்ட அவர் நண்பர் ஒருவர் ‘என்ன தேடுகிaர்கள்?’ என்று கேட்டு உதவ முன்வந்தார்.

‘ஒரு தங்க நாணயம் கை தவறி விழுந்து விட்டது’ என்றார் முல்லா.

நண்பரும் சிறிது நேரம் முல்லாவுடன் சேர்ந்து தேடினார். தங்க நாணயம் கிடைக்கவில்லை. நண்பர் முல்லாவை ‘சரியாக நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். இங்கே தான் நாணயத்தை நழுவ விட்டீர்களா?’ என்று கேட்டார்.

முல்லா சற்று தொலைவில் உள்ள இருட்டான இடத்தைக் காண்பித்து விட்டு ‘அங்கு தான் விழுந்தது?’ என்று சொன்னார்.

நண்பருக்கு கோபம் வந்துவிட்டது. ‘அட முட்டாளே... அங்கே தொலைத்துவிட்டு இங்கே வந்து தேடினால் அது எப்படிக் கிடைக்கும்?’ என்று முல்லாவைத் திட்டினார்.

பதிலுக்கு முல்லாவும் நண்பரைக் கோபித்துக் கொண்டார். ‘நீ தான் முட்டாள். இருட்டான இடத்தில் தேடினால் எதாவது கிடைக்குமா? எதையும் வெளிச்சத்தில் தேடினால் தானே கிடைக்கும்? அதனால் தான் வெளிச்சத்தில் தேடுகிறேன்’.

சிறிது நேரம் முல்லாவுடன் சேர்ந்து நாணயத்தைத் தேடியதை நினைத்து அந்த நண்பர் தலையில் அடித்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

முல்லாவின் முட்டாள்தனம் நமக்கு சிரிப்பை வரவழைக்கலாம். ஆனால் ஆனந்தத்தைத் தேடும் நம் கதையும் அப்படித்தானல்லவா இருக்கிறது. மனதில் தொலைத்த ஆனந்தத்தை அதைத் தவிர மற்ற இடங்களில் தேடி என்ன பயன்? உலகத்தையே சுற்றி வந்து தேடினாலும் அந்த ஆனந்தம் நமக்கு கிடைக்குமா?

எது கிடைத்தால் நீ ஆனந்தமாய் இருப்பாய் என்று உங்கள் மனதைக் கேளுங்கள். இது கிடைத்தால் ஆனந்தமாய் இருப்பேன் என்று மனம் சொல்லும். அதை எப்பாடுபட்டாவது கொடுத்துப் பாருங்கள். மனம் இனியெல்லாம் சுகமே என்று ஆனந்தமாய் இருக்கிறதா என்று சோதித்துப் பாருங்கள்.

மனம் ஓரிரு நாட்கள் மகிழ்ச்சியாய் இருக்கலாம். மூன்றாவது நாள் மனம் தானாக ஆனந்தத்தை இழக்கும். காரணம் மனதிற்கு புதுத் தேவை ஒன்று பிறந்திருக்கும். அது மட்டும் கிடைத்து விட்டால் ஆனந்தமாய் இருக்க முடியும் என்று மனம் சொல்லும்.

அது வேண்டும், இது வேண்டும் என்று இந்த மனக் குரங்கு பாடாய் படுத்த ஒவ்வொரு தேவையாகப் பூர்த்தி செய்யக் கிளம்பும் மனிதன் தொடுவானத்தைத் தொட்டு விட முடியும் என்கிற நினைப்பில் ஓடும் வேலையைத் தான் செய்கிறான். எத்தனை வேகத்தில் ஓடினாலும் தொடுவானம் தொலை விலேயே நிற்பது போல ஆனந்தம் அடைய முடியாத இலக்காகவே இருக்கிறது.

மில்டன் என்ற ஆங்கில மகாகவி பாடுவான். ‘மனம் இருந்த இடத்தில் இருந்து கொண்டே சொர்க்கத்தை நரகமாகவும், நரகத்தை சொர்க்கமாகவும் மாற்றும் வல்லமை பெற்றது’ மனதிற்கு அந்த இரசாயன வித்தை தெரியும். ஆனந்தம் அடையவும் தெரியும். அழுது புலம்பவும் தெரியும். ஒரே விதமான சூழ்நிலையிலும் இந்த இரண்டில் எதையும் தேர்ந்தெடுக்கும் இரசாயன வித்தை தெரியும்.

அந்த இரசாயன வித்தை அறிந்ததால் தானே பாரதியால் வறுமையிலும், ஆங்கிலேயரின் அடக்குமுறைத் தாக்குதலிலும், சிறையிலும், பல பக்கங்களில் இருந்தும் வந்த பிரச்சினைகளிலும் கூட எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று பாட முடிந்தது.

பின் ஏன் இந்த மனம் ஆனந்தமாய் இருக்க மறுக்கிறது? காரணம் அந்த மனதை சரியான படி வழிநடத்த நாம் மறந்து விடுவது தான். தவறான செய்திகளை மனதிற்குத் தந்து, தவறான நம்பிக்கைகளை மனதில் ஏற்படுத்தி மனம் சோகப்படும் போது அது நியாயம் தான் என்று நாம் நியாயப்படுத்தி மனதை தவறாகவே பழக்கப்படுத்தியிருக்கிறோம்.

ஊரைச் சுற்றினால் தான் ஆனந்தம். மதுவில் மூழ்கினால் தான் ஆனந்தம், பொருட்களை வாங்கிக் குவித்தால் தான் ஆனந்தம், அடுத்தவன் பொறாமைப்படும் படி வாழ்ந்தால் தான் ஆனந்தம், உன்னை மிஞ்ச ஆளில்லை என்று பலர் புகழ்ந்தால் தான் ஆனந்தம் என்றெல்லாம் தவறான கருத்துகளை மனதில் பதிய வைத்து விட்டால் பின் மனிதன் ஆனந்தமடைவது சாத்தியம் இல்லை.

பொய்யை, அத்திவாரமாகக் கொண்டு எதை அடைந்தாலும் அது நிலைத்து நிற்காது. மேலே சொன்ன தவறான, பொய்யான அனுமானங்களைக் கொண்டு அடையும் மகிழ்ச்சிகளும் அதனாலேயே வந்த வேகத்தில் காணாமல் போகிறது.

பிரச்சினையே இல்லாத வாழ்க்கை ஆனந்தமல்ல. பிரச்சினையைத் தீர்க்க முடிவது தான் ஆனந்தம். தடங்கலே இல்லாத வாழ்க்கை ஆனந்தமல்ல. தடங்கலைத் தாண்டி முன்னேறுவது தான் ஆனந்தம். எதிலும் ஒரு நன்மையைப் பார்ப்பதும், எதிலும் ஒரு பாடத்தைப் படிப்பதும் ஆனந்தம் தரும்.

ஒரு விஷயத்தை எப்படியும் பார்க்கலாம். ரோஜாவில் முள் என்றும் பார்க்கலாம். முள்ளில் ரோஜா என்றும் பார்க்கலாம். பாதிக் குடுவை காலியாக இருக்கிறது என்றும் சொல்லலாம். பாதிக் குடுவை நிறைந்திருக்கிறது என்றும் சொல்லலாம். இந்த இரண்டு விதங்களில் எப்படிப் பார்த்தாலும், எப்படிச் சொன்னாலும் அது உண்மையே. என்றாலும் நல்ல தன்மையை கோடிட்டுக் காணும் கலையை உங்கள் மனதிற்குக் கற்றுத் தந்தால் என்றும் எதிலும் ஆனந்தமே.

நன்றி:சங்கவி அக்கா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக