ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது செய்யக் கல்வி?

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

எது செய்யக் கல்வி? Empty எது செய்யக் கல்வி?

Post by இரா.எட்வின் Thu Apr 07, 2011 8:54 pm




"பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வந்தவுடன் தேர்ச்சி
பெற்றவன் இனிப்பு வாங்கவும் தேர்ச்சி பெறாதவன் விஷம் வாங்கவும்
ஓடுகிறானே. குறைந்த பட்சம், இது சரிதானா என்கிற பரிசீலனையையேனும்
தொடங்குவதற்கு நமக்கு இன்னும் எத்தனை யுகங்கள் ஆகும்?" என்கிற மாதிரி,
போகிற போக்கில் சின்னதாய் கொஞ்சம் கொளுத்திப் போட்டுவிட்டுப் போனார்
ஆசிரியர் சங்கம் ஒன்றின் மண்டல மாநாட்டினைத் துவக்கி வைத்துப் பேசிய பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குனர் திரு.கார்மேகம் அவர்கள். எந்தப் பக்கம் தலை வைத்துப் படுத்தாலும் தூங்க விடாமல் ஒரு வாரத்திற்கு என்னைக் குடைந்துகொண்டே இருந்தது அவரது ஒற்றைவரிச் சின்னக்
கேள்வி.

ஒன்றிரண்டு பாடங்களில் தேர்ச்சி பெற இயலாத ஒரு குழந்தையைத் தற்கொலைக்குத் தள்ளுமானால் அந்தக் கல்வித் திட்டத்தை அல்லது தேர்வுமுறையை நாம் பரிசீலிக்க வேண்டாமா?

தேர்ச்சி பெறுவதும் நல்ல மதிப் பெண்கள் பெறுவதும்தான் கல்வியின் நோக்கம் என்றாகிப் போனால் மனனம் செய்யும் எந்திரங்களாக மாறிப் போகமாட்டார்களா மாணவர்கள்?. எந்தச் சமாளிப்புமின்றி உண்மையை உள்ளது மாதிரி அப்படியே ஒத்துக் கொள்வதெனில் ஏற்கனவே பெரும்பகுதி மாணவர்கள் அப்படித்தானே மாறிப் போயிருக்கிறார்கள். மனனம் செய்வதுதான் மாணவனின் கற்றலுக்கான உழைப்பு என்பதாக ஏறத்தாழ நடைமுறையில் கொள்ளப்பட்டுவிட்டது. அதிக நேரம் மனனம் செய்பவன் அதிகம் உழைக்கிறான் என்றாகிறது.

தவறுதான் என்றாலும் ஒரு வாதத்திற்காக மனனம் செய்வதை உழைப்பு என்றே வைத்துக் கொள்வோம். அதிகம் உழைப்பவனுக்கு அதிக ஊதியம் என்கிற நியதியில் அதிகம் மனனம் செய்பவன் அதிக மதிப்பெண் பெறுகிறானா? என்றால் அதுவும் இல்லை. மொத்தம் எழுநூறு பக்கங்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். ரவி என்றொரு மாணவன் முன்னூறு பக்கங்களும் கோபு என்பவன் நூறு பக்கங்களும் மட்டுமே படித்திருப்பதாகக் கொள்வோம். தேர்வு வருகிறது . நூறு மதிப்பெண்களுக்கு தேர்வு எழுத வேண்டுமெனில் வினாத்தாளில் நூற்றி முப்பதிலிருந்து நூற்றி நாற்பது மதிப்பெண்களுக்கான கேள்விகள் இருக்கும். இப்போது வினாத் தாளில் ரவி படித்திருந்த முன்னூறு பக்கங்களிலிருந்து முப்பது மதிப்பெண்களுக்கும் மீதமுள்ள நானூறு பக்கங்களிலிருந்து நூறு மதிப்பெண்களுக்கும் வினாக்கள் கேட்கப் பட்டிருந்ததாக வைத்துக் கொள்வோம். அதில் கோபு படித்திருந்த நூறு பக்கங்களிலிருந்து மட்டும் நாற்பத்தி ஐந்து மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப் பட்டிருந்தாகவும் வைத்துக் கொள்வோம்.

தான் படித்திருந்த முன்னூறு பக்கங்களையும் வரிக்கு வரி உருப் போட்டு, ஒரு நானூறு ஐநூறு முறை எழுதிப் பார்த்து மிகுகுந்த தாயாரிப்போடு இருந்தாலும் ரவியால் அந்தத் தேர்வில் முப்பது மதிப்பெண்களுக்கும் மேல் எடுக்க இயலாது. இதுவும் அவன் எழுதிய கேள்விகள் அனைத்திற்கும் முழு மதிப்பெண்களும் கிடைத்தால்தான். அப்படி இல்லையெனில் முப்பதுக்கும் குறைவான மதிப்பெண்களே அவனால் பெற முடியும். எப்படிப் பார்த்தாலும் முன்னூறு பக்கங்களைப் முழுமையாய் படித்துள்ள ரவி அந்தத் தேர்வில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு சுத்தமாய் இல்லை.

மாறாக வெறும் நூறு பக்கங்களை மட்டுமே படித்திருந்த கோபு, தான் படித்திருந்த பக்கங்களிலிருந்து கேட்டிருந்த கேள்விகளுக்கு சரியான விடைகளை எழுதினால் நாற்பதிலிருந்து நாற்பத்தி ஐந்து மதிப் பெண்களைப்பெற்றுத் தேர்சி பெற்றுவிட முடியும்.

எனில் ஒரு பங்கு உழைப்பை மட்டுமே வெளிப் படுத்திய கோபு தேர்ச்சி பெறுகிறான். அவனைப் போல் மூன்று பங்கு உழைப்பை வெளிப் படுத்திய ரவி தேர்ச்சிப் பெறத் தவறுகிறான். எனில் இந்தத் தேர்வு முறை குறித்தும் , கல்வித் திட்டம் குறித்தும் நாம் கவலையோடு பரிசீலிக்க வேண்டுமா இல்லையா?

இதை இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்பது இன்னும் அதிகமான பயனைத் தரும் என்று படுகிறது. அந்த வினாத்தாளில் ரவி படித்திருந்த முன்னூறு பக்கங்களிலிருந்து முப்பது மதிப்பெண்களுக்கும், கோபு படித்திருந்த நூறு பக்கங்களிலிருந்து நாற்பத்தி ஐந்து மதிப்பெண்களுக்கும் கேள்விகள் கேட்கப்பட்டிருப்பதாக ஏற்கனவே கொண்டோம். ஆக நூற்றி நாற்பது மதிபெண்களுக்கு வினாக்கள் கேட்கப் பட்டிருந்த அந்த வினாத்தாளில் ரவியும் கோபுவும் படித்திருந்த நானூறு பக்கங்களிலிருந்து எழுபத்தி ஐந்து மதிப்பெங்களுக்கான வந்துள்ளதாகக் கொண்டால் மிச்சம் அறுபத்தியிந்து மதிப் பெண்கள் உள்ளன. அவர்கள் இருவரும் படித்தது போக மீதமுள்ள முன்னூறு பக்கங்களில் ஒரு நூற்றி ஐம்பது பக்கங்களிலிருந்து எந்த வினாவும் கேட்கப் படவில்லை என்று வைத்துக் கொள்வோம். எனில் மீதமுள்ள அறுபத்தி ஐந்து மதிப் பெண்களும் எஞ்சிய அந்த நூற்றி ஐம்பது பக்கங்களிளிருந்துதானே கேட்கப் பட்டிருக்க வேண்டும். இப்போது செந்தில் என்றொரு மாணவன் அந்த நூற்றி ஐம்பது பக்கங்களை மட்டும் மிகத் தரவாக உருப்போட்டு வைத்திருப்பதாகக் கொள்வோம். இப்போது இவன் அறுபதிலிருந்து அறுபத்தி ஐந்து மதிப் பெண்கள் வரை வாங்கிவிட வாய்ப்புண்டுதானே? அறுபத்தி ஐந்து மதிப்பெண்களுக்கும் வினாக்கள் கேட்கப் பட்டிருப்பதாக வைத்துக் கொள்வோம்.

இன்னும் கொஞ்சம் உள்ளே போவோம். ரவியும் கோபியும் வாசிக்காமல் விட்ட மிச்சமுள்ள முன்னூறு பக்கங்களை மட்டும் செந்தில் படித்திருப்பதாக வைத்துக் கொள்வோம்.

இப்போது முன்னூறு பக்கங்களை படித்திருக்கக் கூடிய ரவி தேர்ச்சி பெறாமலும், அதில் பாதி அளவு மட்டுமே படித்திருந்த செந்தில் அறுபது முதல் அறுபத்தி ஐந்து மதிப்பெண்களோடும் நூறு பக்கங்கள் மட்டுமே படித்திருந்த
கோபு நாற்பது முதல் நாற்பத்தி ஐந்து மதிப்பெண்களோடும் தேர்ச்சி பெறுவதற்கும் வாய்ப்பிருக்கிறதே. இது சரிதானா? சரிதான் என்பவர்களை நிராயுதபாணிகளாக கடாபி படைகளுக்கும் அமெரிக்கப் படைகளுக்கும் இடையில் தள்ளி விடலாம். பாவம் புண்ணியம் என உண்மையிலே எவையேனும் இருக்குமென்றால் இதை செய்வதற்காக பத்துப் பேரின் புண்ணியம் நம் கணக்கில் சேர்ந்துவிடும். இது கண்டு நெஞ்சு கொதிப்பவர்களோடு மட்டுமே நான் கொஞ்சம் பேச ஆசைப் படுகிறேன்.

முதலில் கல்வியின் நோக்கம் என்ன?. இதையே இன்னும் கொஞ்சம் புரிகிற மாதிரி " ஒரு மாணவனுக்கு ஏன் கல்வியை கற்றுத் தருகிறோம்?, அல்லது ஒரு மாணவன் ஏன்கல்வி கற்கிறான்? " என்றும் கேட்கலாம்.

மாணவனை சிந்திக்க வைப்பதே கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று ஐன்ஸ்டின் கூறியதாகப் படித்திருக்கிறேன். சமூகத்தின் மீது அக்கறை கொண்ட அனைவரது கருத்தாகவும் அதனைக் கொள்ளலாம்.

இன்றையக் கல்வி மாணவனை சிந்திக்கத் தூண்டுகிறதா?. இல்லவே இல்லை என்று நம் உசிரைவிடவும் பெரிதாக நேசிப்பவர்கள் தலை மீதே கை வைத்து சத்தியம் செய்யலாம்.

இப்போது இன்னொரு கேள்வி இயல்பாகவே வருகிறது."சிந்திக்க வைப்பது" என்றால் எந்தத் தளத்தில் அவனை சிந்திக்க வைப்பது? "நன்கு படி, நிறைய
மதிப்பெண்கள் வாங்கு , நல்ல வேலைக்குப் போ, இயலுமெனில் வெளிநாடுகளுக்குப் போ, நிறைய சம்பாரி, வளமையோடும் ,மகிழ்ச்சியோடும், நிம்மதியோடும் உன் குடும்பத்தோடு பொழுது கழி. வேறு எது குறித்தும் கவலை கொள்ளாதே. பக்கத்து வீட்டில் கொலை விழுந்தாலும் , பக்கத்து நாட்டில் குவியல் குவியலாய் பிணம் விழுந்தாலும் இதில் எதன் மீதும் கவனம் சிதறி விடாமல், உனது வேலை சம்பாரிப்பது , குடும்பத்துக்காக வாழ்வது என்கிற அளவில் நிறுத்து இது போக நேரம் இருக்குமெனில் பணக்காரர்களுக்கென்றே சில க்ளப்புகள் இருக்கின்றன, சேர்ந்து பொழுது கழி ," என்று 'தன் வீடு, தன் பெண்டு சோறு வீடு' என்கிற அளவில் அவனது சிந்தனையையும்
ஆளுமையையும் சுருங்கவைப்பதா?

இப்படியாக இருப்பதால்தான் மாணவன் சுயம் சார்ந்த கனவுகளோடு வளர்கிறான். அந்தக் கனவு உடைகிற பொழுது அந்தச் சின்ன தோல்வியிலிருந்து மீண்டெழ முயலாமல் தற்கொலை செய்து கொள்கிறான். தான் தன் குடும்பம் என்று கடுகை விடச் சின்னதாய் சுருங்கிப் போகச் செய்யும் இந்தக் கல்வி முறை மீது நமக்கு போதுமான அளவுக்கு எப்போது கோபம் பிறக்கும்?.

அறிவை விரிவு செய்து , அகண்டமாக்கி, இந்தப் பரந்த மானுடப் பரப்பை அவனைப் பார்க்க சொல்லிக் கொடுத்து, இந்த மானுடத் திரள்முழுக்க அவனது சொந்தம் என்றும் கொஞ்சம் விசாலமாய் அவனைக் கல்வி வளர்த்தெடுத்திருந்தால் தேர்வு முடிவுகள் வெளி வரும் நாளில் இத்தனை குழந்தைகள் தற்கொலை செய்துகொள்வார்களா?

கல்வித் திட்டம் குறித்து கூட இன்னொரு கட்டுரையில் விரிவாக பேசலாம். இப்போது வருடா வருடம் இத்தனைப் பிள்ளைகளை காவு வாங்கும் இந்தக் கொலைகார தேர்வு முறையை என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

இதில் கவனிக்க இன்னொன்றும் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் தேர்வில் தேர்ச்சி பெறாத பத்தாம் வகுப்பு மற்றும், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு முடிவு வந்த அன்று தற்கொலை செய்து கொள்வதை செய்தித் தாள்களில் பார்க்கிறோம். ஆனால் , கல்லூரி மாணவர்களோ, மருத்துவக் கல்லூரி மாணவர்களோ, அல்லது பொறியியல் கல்லூரி மாணவர்களோ தேர்ச்சி பெறாமைக்காக இப்படித் தற்கொலை செய்து கொள்வதில்லை. எனில் பத்தாம் வகுப்பை விட இவை எல்லாம் முக்கியமில்லாதவையா? அல்லது இவை எல்லாவற்றையும் விட பத்தாம் வகுப்பு இவ்வளவு முக்கியமானதா?

இதற்கான காரணம் பரிசீலனைக்கு உரியது. கல்லூரி மாணவனோ, பொறியியல் கல்லூரி மாணவனோ , அல்லது மருத்துவக் கல்லூரி மாணவனோ அவனது தேர்வில் தேர்ச்சி பெறுகிறானா இல்லையா என்பது அவனது பக்கத்து வீட்டுக் காரனுக்குக் கூடத் தெரியாது. பல நேரங்களில் அவனது பெற்றோருக்கே தெரியாமல் போவதற்கும் வாய்ப்பு உண்டு. ஆனால் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள்: நாட்டுக்கேத் தெரியும். இதைச் சற்று மாற்றினால்கூட தற்கொலைகளில் பெரும்பகுதியைக் குறைத்துவிட முடியும்.

எப்படி?

1 ) பத்தாம் வகுப்பு வரை பொதுத் தேர்வுகளே வேண்டாம்.
2 ) பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளில் இப்போது உள்ள முறையை மாற்றி "செமஸ்டர் முறை" யை அறிமுகப் படுத்தலாம்.

எங்கே , ஆரோக்கியமான விவாதத்தைத் தொடங்கலாமா?
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்


பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

எது செய்யக் கல்வி? Empty Re: எது செய்யக் கல்வி?

Post by அன்பு தளபதி Thu Apr 07, 2011 8:55 pm

தேர்வு என்பதை விடுங்கள் நமது கல்வி திட்டம் ஆரோக்யமானதாக உள்ளதா அதை சொல்லுங்கள் யாரவது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

எது செய்யக் கல்வி? Empty Re: எது செய்யக் கல்வி?

Post by anbulakshmi.vijayakumar Thu Apr 07, 2011 9:49 pm

நல்லதொரு செய்தி நன்றி !!!!
anbulakshmi.vijayakumar
anbulakshmi.vijayakumar
பண்பாளர்


பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011

Back to top Go down

எது செய்யக் கல்வி? Empty Re: எது செய்யக் கல்வி?

Post by இரா.எட்வின் Thu Apr 07, 2011 9:59 pm

anbulakshmi.vijayakumar wrote:நல்லதொரு செய்தி நன்றி !!!!

மிக்க நன்றி தோழர் அன்பு
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்


பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

எது செய்யக் கல்வி? Empty Re: எது செய்யக் கல்வி?

Post by இரா.எட்வின் Thu Apr 07, 2011 10:57 pm

maniajith007 wrote:தேர்வு என்பதை விடுங்கள் நமது கல்வி திட்டம் ஆரோக்யமானதாக உள்ளதா அதை சொல்லுங்கள் யாரவது


நன்றி மணி. கல்வித் திட்டம் காலாவதி ஆகி நாளாச்சு. என்ன செய்யலாம் என்பதை ஏதாவது ஒரு புள்ளியிலிருந்து யாராவது சிலர் அக்கறையோடு தொடங்க வேண்டும்
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்


பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

எது செய்யக் கல்வி? Empty Re: எது செய்யக் கல்வி?

Post by இரா.எட்வின் Fri Apr 08, 2011 6:29 pm

அன்பின் தோழர்களே,
வணக்கம். நான் இன்னும் இந்தக் கட்டுரையை இறுதி செய்யவில்லை. நண்பர்களிடம் இருந்து இன்னும் அதிகத் தகவல்களும் தரவுகளும் கிடைக்கும் பட்சத்தில் செழுமை செய்வேன். அனைவரும் அக்கறையோடு பங்கேற்க வேண்டிய தளமிது. உதவுங்கள்.
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்


பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

எது செய்யக் கல்வி? Empty Re: எது செய்யக் கல்வி?

Post by anbulakshmi.vijayakumar Fri Apr 08, 2011 7:29 pm

நல்லதொரு செய்தி நன்றி !!!!
anbulakshmi.vijayakumar
anbulakshmi.vijayakumar
பண்பாளர்


பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011

Back to top Go down

எது செய்யக் கல்வி? Empty Re: எது செய்யக் கல்வி?

Post by இரா.எட்வின் Fri Apr 08, 2011 11:10 pm

anbulakshmi.vijayakumar wrote:நல்லதொரு செய்தி நன்றி !!!!
நன்றி தோழர்
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்


பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

எது செய்யக் கல்வி? Empty Re: எது செய்யக் கல்வி?

Post by அப்துல் Sun Apr 10, 2011 5:37 pm

அருமையான தகவல்
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

எது செய்யக் கல்வி? Empty Re: எது செய்யக் கல்வி?

Post by இரா.எட்வின் Sun Apr 10, 2011 10:02 pm

thendral25 wrote:அருமையான தகவல்
நன்றி தென்றல்
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்


பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

எது செய்யக் கல்வி? Empty Re: எது செய்யக் கல்வி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum