ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவுக்கு விசில் போடுங்க..

+5
அருண்
md.thamim
கலைவேந்தன்
சிவா
மஞ்சுபாஷிணி
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இந்தியாவுக்கு விசில் போடுங்க.. - Page 2 Empty இந்தியாவுக்கு விசில் போடுங்க..

Post by மஞ்சுபாஷிணி Thu Apr 07, 2011 3:06 pm

First topic message reminder :

ட்டு வருடங்களுக்கு முன்பு கோரக்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் கலெக்டராக இருந்த மஹேந்திர சிங் டோனியின் கையில் இப்போது உலகக் கோப்பை!
100 கோடிக்கும் மேலான இந்திய கிரிக்கெட் ரசிகர் களின் கனவை நனவாக்கிய தருணத்தில், டோனியின் முகத்தில் அத்தனை தெளிவு, பிரகாசம். இந்திய அணி உலகக் கோப்பையை வெல்வதற்குக் காரணமாக இருந்த விஷயங்கள் என்ன? இதோ ஆறு அசத்தல் காரணங்கள்...




டோனியின் தலைமை!

இந்தியாவுக்கு விசில் போடுங்க.. - Page 2 P10
''டோனி ஒரு அசட்டுத் துணிச்சல்காரர். வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையில் சர்ச்சைக்கு உரிய முடிவுகளை எடுத்துவிட்டு, அதை வெற்றிகரமாக மாற்றக் கடும் முயற்சி எடுப்பவர்''-பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி யில் அஷ்வினுக்குப் பதிலாக நெஹ்ரா சேர்க்கப்பட்டது குறித்து கபில்தேவ் சொன்னது இது. கபில் சொன்ன மாதிரியே இறுதிப் போட்டியில் அஷ்வினுக்குப் பதில் ஸ்ரீசாந்த்தைச் சேர்த்தது, ஃபார்மில் இருக்கும் யுவராஜை முந்திக்கொண்டு களம் இறங்கியது என ஃபைனலிலும் சர்ச்சைக்குரிய முடிவுகள் எடுத்தார். ஆனால், எடுத்த முடிவுகள் தவறாக முடிந்துவிடக் கூடாது என்று அவர் காட்டிய துணிச்சலும் திறமையான ஆட்டமும் டோனி சிறந்த கேப்டன் என்பதை ஆணித்தரமாக நிரூபித்தது. வெற்றி பெறப்போகிறோம் என்கிற தருணத்தில்கூட, எந்த ரியாக்ஷனையும் காட்டாமல் அமைதியாக இருந்தது அவரது பக்குவத்தைக் காட்டியது. வெற்றி பெற்றதும் சச்சினை முன்னால் செல்லவிட்டு, அமைதியாகப் பின்னால் சென்றது அவரது முதிர்ச்சியைக் காட்டியது!

சச்சின் டெண்டுல்கரின் அனுபவம்!
ச்சின் கலந்துகொண்டு விளையாடிய ஆறாவது உலகக் கோப்பைப் போட்டி இது. ''100-வது சதம், மூன்றா வது முறையாக உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவிக்க வாய்ப்பு'' என்று பல சாதனைகள் ஒவ்வொரு போட்டியின்போதும் சச்சினைத் துரத்திக்கொண்டு இருந்தன. பாகிஸ்தானுக்கு எதிரான மேட்ச்சில் சதம் அடிக்க வாய்ப்பு இருந்தும், தனக்காக விளையா டாமல் அணிக்காக விளையாடினார் சச்சின். ''தனிப்பட்ட சாதனைகளைவிட, இந்தியா வெற்றிபெறுவதுதான் எனக்குச் சந்தோஷம். வெற்றி அணியில் இருக்கத்தான் நான் விரும்புகிறேன்'' என்றார் சச்சின். 18 ஆயிரம் ரன்களைத் திரட்டிய ரன் மெஷினுக்கு எட்டாக் கனியாகவே இருந்தது உலகக் கோப்பை. அதை சச்சினுக்காகவே விளையாடி வாங்கித் தந்திருக்கிறார்கள் இளம் வீரர்கள்!

டீம் ஸ்பிரிட்!
ந்தியா வெற்றி பெற முக்கியக் காரணம்... டீம் ஸ்பிரிட். முகமது அசாருதீன், சௌரவ் கங்குலி, ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, ஜவகல் ஸ்ரீநாத் எனத் திறமையான வீரர்கள், கடந்த 20 ஆண்டுகளாக இந்திய அணியில் இருந்தனர். ஆனால், டீம் ஸ்பிரிட் என்பது இவர்களது காலங்களில் எப்படி இருந்தது என்பதை கிரிக்கெட் ரசிகர்கள் அறிவார்கள். டோனி கேப்டனாகப் பொறுப்பு ஏற்கும்போது, யுவராஜ் சிங் அவருக்கு சீனியர். சச்சின் அணியில் இருக்கிறார். ஆனால், எந்தவிதமான பாரபட்சமும் காட்டாமல், சீனியர் வீரர் களுக்கு மதிப்பு அளித்து, ஜூனியர் வீரர் களையும் அரவணைத்து, அணிக்குள் ஒற்று மையை வளர்த்தார் டோனி. போட்டிகளுக்கு வெளிநாடுகளுக்குச் செல்லும்போது டீம் டூர் போவது, அவ்வப்போது பார்ட்டி வைப்பது என டீம் மெம்பர்களை ஒருங்கிணைத்தார் டோனி. போட்டியின்போது ஒவ்வொரு பந்துக்கும் முனாஃப் பட்டேலுக்கு ஓடோடி வந்து அறிவுரைகள் சொல்லிக்கொண்டே இருந்தார் ஜாகீர்கான். விராட் கோலிக்கு எப்படி ஆட வேண்டும் என்று களத்தில் நின்றே வழிகாட்டிக்கொண்டே இருந்தார் சச்சின். இந்த டீம் ஸ்பிரிட்தான் உலகக் கோப்பையை வென்று கொடுத்தது!

இந்தியாவுக்கு விசில் போடுங்க.. - Page 2 P10a

இளம் வீரர்களின் ஆதிக்கம்!
லகக் கோப்பை தொடங்குவதற்குமுன்பு வரை யுவராஜ் சிங் ஃபார்மிலேயே இல்லை. யுவராஜுக்குப் பதில் யூசுப் பதானையும், சுரேஷ் ரெய்னாவையும் விளையாடவைக்கலாம் என்பதுதான் முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் கருத்தாக இருந்தது. ஆனால், உலகக் கோப்பை ஆரம்பித்ததும் யுவராஜ் சிங்கின் ஆட்டம் உச்சத்தைத் தொட்டது. நான்கு அரை சதம், ஒரு சதம், ஒவ்வொரு ஆட்டத்திலும் குறைந்தது இரண்டு முக்கிய விக்கெட்டுகள் என இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறினார் யுவராஜ் சிங். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்திலும், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும் சுரேஷ் ரெய்னா வெளிப்படுத்திய பொறுப்பான ஆட்டம்தான், இரண்டு கண்டங்களில் இருந்தும் இந்தியா தப்பிக்க உதவியது. தனக்கு விளையாடக் கிடைத்த இரண்டு ஆட்டங்களிலும் திறமையான பௌலிங்கை வெளிப்படுத்தினார் தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஷ்வின். சச்சின், 1989-ம் ஆண்டு கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த வருடத்தில்தான் இந்திய அணியின் இளம் வீரர் விராட் கோலி பிறந்தார். ''21 வருடங்களாக இந்திய கிரிக்கெட்டைத் தூக்கிச் சுமந்துகொண்டு இருக்கிறார் சச்சின். அவரை நாங்கள் இன்று தூக்கிச் சுமப்பது என்பது பெரிய விஷயமா என்ன?''- உலகக் கோப்பையை வென்றவுடன் யோசிக்காமல் பேசிய விராட் கோலி யின் வார்த்தைகளில் தெரிந்தது அவரது கிரிக்கெட் காதல்!

கடுமையான பயிற்சி!
கேரி கிரிஸ்டனின் பலமே, இந்திய வீரர்களை முழுவதுமாகப் புரிந்துகொண்டதுதான். உடல் பயிற்சியைவிட, பேட்டிங் பயிற்சியில்தான் இந்திய வீரர்கள் அதிக நேரம் செலவிட விரும்புகிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டார் கிரிஸ்டன். தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலிய வீரர்கள் பேட்டிங் பயிற்சியோடு ஃபிட்னெஸ் பயிற்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆனால் சேவாக், கம்பீர் உள்ளிட்ட இந்திய வீரர்கள் 'ஃபிட்னெஸ் டிரெயினிங் நேரத்தில் ஒரு பகுதியை நாங்கள் பேட்டிங் பயிற்சிக்குச் செலவிடுகிறோம். அப்போது தான் எங்களால் சிறப்பாக விளையாட முடியும்!’ என்று சொன்னதை ஏற்றுகொண்டார் கிரிஸ்டன். ஒன்று, இரண்டு ரன்களை ஓடி ஓடி எடுப்பதைவிட 4, 6 அடிப்பது சூப்பர்தானே? அதே சமயம், ஃபீல்டிங்கில் சொதப்பிய வீரர்களுக்கு மத்தியில், யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, விராட் கோலிக்குச் சிறப்பான ஃபீல்டிங் பயிற்சி கொடுத்து அவர்களை இன்னும் மெருகேற்றினார் கிரிஸ்டன்!

ஜாகீர் கானின் எழுச்சி!
இந்தியாவுக்கு விசில் போடுங்க.. - Page 2 P11பந்துவீச்சைப் பொறுத்தவரை ஜாகீர்கான் தான் சூப்பர் ஸ்டார். இந்தியாவின் பௌலிங் அட்டாக்கை ஒன் மேன் ஆர்மியாக நின்று தோளில் சுமந்தவர் ஜாகீர்கான். 9 போட்டிகளில் 21 விக்கெட்டுகள் எடுத்து, உலகக் கோப்பைத் தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார். முதல் ஐந்து ஓவர்களில் மூன்று ஓவர்கள் ரன் ஏதும் கொடுக்காமல் பந்து வீசியதோடு, உபுல் தரங்காவின் விக்கெட்டையும் வீழ்த்தி இலங்கையைக் கட்டுப்படுத்தி வெற்றிக்கு வழிவகுத்தார் ஜாகீர்கான்!
1999 உலகக் கோப்பைக்குப் பிறகு, கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் அசைக்க முடியாத அணியாக உலக கிரிக்கெட்டை ஆட்டிப்படைத்தது ஆஸ்திரேலியா. இப்போது ஆஸ்திரேலியாவுக்குப் பதில் இந்தியா அந்த இடத்தைப் பிடித்திருக்கிறது. 'இனி எப்போதுமே இந்தியாதான் நம்பர் ஒன் அணியாக இருக்க வேண்டும்!’ என்பதுதான் இந்திய கிரிக்கெட் ரசிகனின் ஆசை. டோனி தலைமையிலான அசத்தல் அணிக்கு அதைச் சாதிப்பதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது!


நன்றி விகடன்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இந்தியாவுக்கு விசில் போடுங்க.. - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down


இந்தியாவுக்கு விசில் போடுங்க.. - Page 2 Empty Re: இந்தியாவுக்கு விசில் போடுங்க..

Post by Manik Thu Apr 07, 2011 8:53 pm

maniajith007 wrote:
Manik wrote:கூகுள்ள தேடிட்டேன் கிடைக்கலையே நண்பா

பஸ் கண்டெக்டர் பேக்ல தேடுடா விசில் கிடைக்கும்

உன்ன மாதிரில்லாம் எனக்கு யோசிக்கத்தெரியாதுடா....... நீ ஒரு வில்லங்க பார்ட்டி இந்தியாவுக்கு விசில் போடுங்க.. - Page 2 211781



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இந்தியாவுக்கு விசில் போடுங்க.. - Page 2 Empty Re: இந்தியாவுக்கு விசில் போடுங்க..

Post by அன்பு தளபதி Thu Apr 07, 2011 8:54 pm

Manik wrote:
உன்ன மாதிரில்லாம் எனக்கு யோசிக்கத்தெரியாதுடா....... நீ ஒரு வில்லங்க பார்ட்டி இந்தியாவுக்கு விசில் போடுங்க.. - Page 2 211781

சமாதானம் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

இந்தியாவுக்கு விசில் போடுங்க.. - Page 2 Empty Re: இந்தியாவுக்கு விசில் போடுங்க..

Post by மஞ்சுபாஷிணி Thu Apr 07, 2011 9:52 pm

அன்பு நன்றிகள் அனைவருக்கும்....


உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் என்னவா?? விசிலு விசிலு.....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இந்தியாவுக்கு விசில் போடுங்க.. - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இந்தியாவுக்கு விசில் போடுங்க.. - Page 2 Empty Re: இந்தியாவுக்கு விசில் போடுங்க..

Post by anbulakshmi.vijayakumar Thu Apr 07, 2011 9:53 pm

ஜெய் ஹிந்த் !!!வாழ்க பாரதம்...
anbulakshmi.vijayakumar
anbulakshmi.vijayakumar
பண்பாளர்


பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011

Back to top Go down

இந்தியாவுக்கு விசில் போடுங்க.. - Page 2 Empty Re: இந்தியாவுக்கு விசில் போடுங்க..

Post by anbulakshmi.vijayakumar Thu Apr 07, 2011 10:37 pm

விசிலு விசிலு.....விசிலு விசிலு.....விசிலு விசிலு.....விசிலு விசிலு.....விசிலு விசிலு.....
anbulakshmi.vijayakumar
anbulakshmi.vijayakumar
பண்பாளர்


பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011

Back to top Go down

இந்தியாவுக்கு விசில் போடுங்க.. - Page 2 Empty Re: இந்தியாவுக்கு விசில் போடுங்க..

Post by அப்துல் Thu Apr 07, 2011 10:53 pm

சூப்பருங்க
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

இந்தியாவுக்கு விசில் போடுங்க.. - Page 2 Empty Re: இந்தியாவுக்கு விசில் போடுங்க..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum