ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ. 5.11 கோடி என்னுடையதுதான்

+6
கலைவேந்தன்
Manik
யாதுமானவள்
அக்னிபுத்திரன்
மஞ்சுபாஷிணி
eegaraiviswa
10 posters

Go down

ரூ. 5.11 கோடி என்னுடையதுதான் Empty ஆர்.டி.ஓ., சங்கீதாவுக்கு குவிகிறது பாராட்டு

Post by eegaraiviswa Thu Apr 07, 2011 2:11 pm

திருச்சியில், அமைச்சர் நேரு போட்டியிடும் மேற்கு தொகுதியில், அதிரடியாக செயல்பட்டு, பணப் பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் வினியோகத்தை கட்டுப்படுத்தியதோடு, நேற்று முன்தினம், தனியாளாக சென்று, ஆம்னி பஸ்சில் பதுக்கி வைத்திருந்த, 5.11 கோடி ரூபாயை பறிமுதல் செய்த ஆர்.டி.ஓ., சங்கீதாவுக்கு, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.
திருச்சி ஆம்னி பஸ்சில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 5 கோடியே 11 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்ததன் மூலம், "தேர்தல் நேரத்தில் முறைகேடாக பதுக்கிவைக்கப்பட்டிருந்த அதிகளவு பணத்தை பறிமுதல் செய்தவர்' என்ற பெருமைக்கு, திருச்சி ஆர்.டி.ஓ., சங்கீதா சொந்தக்காரர் ஆகிவிட்டார். நேற்று முன்தினம், அமைச்சருக்கு நெருக்கமானவருக்கு சொந்தமான ஆம்னி பஸ்சில் பணம் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அந்த இடத்துக்கு டிரைவருடன் தனியாக சென்று, ஆம்னி பஸ்சில் பதுக்கி வைத்திருந்த, 5 கோடியே 11 லட்சத்து 27 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தார். இதையறிந்த தமிழக தேர்தல் கமிஷனே, அதிர்ச்சி அடைந்தது. தமிழகத்தில், ஏன் இந்தியாவில் கூட இவ்வளவு பெரிய தொகையை தேர்தல் நேரத்தில், யாரும் பறிமுதல் செய்ததில்லை. அப்படியிருக்க ஆர்.டி.ஓ., சங்கீதா, ஆம்னி பஸ்சில், 5.11 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்த விஷயம், நாடு முழுவதும் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது.

இப்படி ஒரு சாதனைக்கு சொந்தக்காரரான திருச்சி ஆர்.டி.ஓ., சங்கீதாவின் (33) சொந்த ஊர், சேலம் மாவட்டம், மேட்டூர். இவரது தந்தை சண்முகம், கால்நடைத் துறையில், துணை இயக்குனராக இருந்து ஓய்வு பெற்றவர். தாயார் ஜமுனா. இவருடைய தம்பி சுரேஷ், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்து விட்டு, சென்னையில் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். கடந்த 2000மாவது ஆண்டு சென்னையிலுள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்.எம்.எஸ்., படித்த சங்கீதா, சென்னையில் ஏழு ஆண்டு டாக்டராக பணியாற்றியுள்ளார். இந்த காலகட்டத்தில், 2004ம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த முரளி என்ற சிவில் கான்ட்ராக்டரை திருமணம் செய்து கொண்டார். அதன்பின், தன் சிறுவயது லட்சியமான கலெக்டர் ஆகவேண்டும் என்பதற்காக, சிவில் சர்வீஸ் தேர்வில் பங்கேற்றுள்ளார். ஆனால், வெற்றி கிடைக்கவில்லை. மீண்டும் 2009ம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி., தேர்வெழுதி ஆர்.டி.ஓ.,வாக தேர்வானார். கடந்த 2009 டிசம்பரில் திருவாரூரில் பயிற்சி ஆர்.டி.ஓ.,வாக பணியில் சேர்ந்த சங்கீதா, அங்கிருந்து மாற்றலாகி, ஆறு மாதங்களுக்கு முன்தான் திருச்சி ஆர்.டி.ஓ.,வாக பதவியேற்றார்.

தேசிய அளவில் புகழ்பெறும் அளவு, சாதனை படைத்துள்ள ஆர்.டி.ஓ., சங்கீதா, நமது நிருபரிடம் கூறியதாவது: திருவாரூர் கலெக்டராக இருந்த சந்திரசேகரன் சாரை, என்னுடைய குரு என்றே கூறலாம். அவர்தான் என்னுடைய சிறப்பான பணிக்கு வழிகாட்டி. அவருடைய ஆலோசனைகள், என்னுடைய பணியை நான் சிறப்பாக செய்ய உதவியாக உள்ளது. 5.11 கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தது என்னுடைய பணிகளில் ஒன்று. என்னுடைய வேலையை செய்ததற்காக இவ்வளவு பாராட்டுகள் தேவையில்லை என நினைக்கிறேன். பணத்தை பறிமுதல் செய்தபோது, முதலில் அதை எப்படியாவது அரசிடம் ஒப்படைத்து விடவேண்டும் என்ற நோக்கத்தில் தான் செயல்பட்டேன். அப்போது தனியாளாக இருக்கிறோம் என்ற பயஉணர்ச்சி எல்லாம் இல்லை. நான் எப்போதும், எந்த ஒரு விஷயத்தையும் அலட்சியப்படுத்துவதில்லை. ஆகையால் தான் நள்ளிரவில் வந்த அழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஆம்னி பஸ்சை சோதனையிட்டேன்.

"மக்களுக்காக பணி செய்யவேண்டும்' என்ற சிறுவயது முதலே நினைத்துக் கொண்டிருப்பேன். அப்படிப்பட்ட பணியில் உள்ளதால் மகிழ்ச்சியுடன் வேலை செய்து வருகிறேன். டாக்டர் தொழிலைவிட இதில் நேரடியாக மக்களுக்கு உதவ முடியும். நேர்மையான வழியில் பணியை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான், பணியாற்றி வருகிறேன். 5.11 கோடி பணம் பறிமுதல் செய்ததை விட, ஆழ்வார்தோப்பு பகுதியில் கவுன்சிலர் வீட்டில் சோதனையிடும்போது சுற்றி, 100க்கும் மேற்பட்டோர் கூடியிருந்ததையே, "த்ரில்லிங்'கான விஷயமாக கருதுகிறேன். மீண்டும் ஐ.ஏ.எஸ்., படிக்கும் எண்ணமில்லை. ஏனென்றால், தமிழகத்தை விட்டு வெளியே செல்ல விரும்பவில்லை. இந்த பணியே எனக்கு மிகுந்த மனநிறைவை அளிக்கிறது. இவ்வாறு சங்கீதா கூறினார்.

தமிழகத்தில் முதன்முறையாக பெரிய அளவிலான தொகை, 5.11 கோடி பணத்தை பறிமுதல் செய்த ஆர்.டி.ஓ., சங்கீதாவுக்கு, நேற்று முன்தினம் இரவு, வீடியோ கான்பரன்ஸ் மூலம், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். ஆர்.டி.ஓ., சங்கீதாவின் துணிச்சல் மிக்க பணியை பாராட்டி மத்திய அரசோ, இந்திய தேர்தல் கமிஷனோ விருது வழங்குகிறதோ இல்லையோ, அமைச்சர் நேரு போட்டியிடும், திருச்சி மேற்கு தொகுதியில், தேர்தல் கமிஷனின் விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்தி, சிறப்பாக பணியாற்றி வரும் சங்கீதாவுக்கு, திருச்சி மாநகர மக்கள், "தைரியலட்சுமி' என்ற விருதை வழங்கிவிட்டனர்.
eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

ரூ. 5.11 கோடி என்னுடையதுதான் Empty Re: ரூ. 5.11 கோடி என்னுடையதுதான்

Post by மஞ்சுபாஷிணி Thu Apr 07, 2011 2:16 pm

ரூ. 5.11 கோடி என்னுடையதுதான் 224747944 இப்படி தான் இருக்கவேண்டும் பெண்கள்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ரூ. 5.11 கோடி என்னுடையதுதான் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ரூ. 5.11 கோடி என்னுடையதுதான் Empty Re: ரூ. 5.11 கோடி என்னுடையதுதான்

Post by அக்னிபுத்திரன் Thu Apr 07, 2011 2:34 pm

மிகவும் துணிச்சலான பெண் தான் இவர்..... இதற்குப்பின் எத்தனை சோதனைகள் வரப்போகிறதோ ரூ. 5.11 கோடி என்னுடையதுதான் 440806
அக்னிபுத்திரன்
அக்னிபுத்திரன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 49
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

ரூ. 5.11 கோடி என்னுடையதுதான் Empty ரூ. 5.11 கோடி என்னுடையதுதான்

Post by யாதுமானவள் Thu Apr 07, 2011 2:56 pm

ஆம்னி பஸ்ஸில் பிடிபட்ட ரூ. .5.11 கோடி மட்டுமல்ல, இன்னும் என்னிடம் ரூ. 20 கோடி பணம் உள்ளது. ஆனால் எதற்குமே கணக்கு கிடையாது என்று திருச்சி டிராவல்ஸ் அதிபர் அதிரடியாக கூறியுள்ளார்.

திருச்சியில் நேற்று முன்தினம் தனியார் ஆம்னி பஸ் ஒன்றின் மேற்கூரையில் 5 பேக்குகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.5 கோடியே 11 லட்சத்து 27 ஆயிரம் பணத்தை திருச்சி மேற்கு சட்டசபை தேர்தல் நடத்தும் அதிகாரி டாக்டர் சங்கீதா அதிரடியாக பறிமுதல் செய்தார்.

இந்தப் பணம் அமைச்சர் கே.என். நேரு அனுப்பிய பணம் என்று சர்ச்சை கிளம்பியுள்ளது. ஆனால் இதை நேரு மறுத்துள்ளார்.

இந்த நிலையில் இந்தப் பணத்தை பலத்த பாதுகாப்புடன், தேர்தல் அதிகாரிகள், ஸ்டேட் வங்கியில் டெபாசிட் செய்துள்ளனர். இந்தப் பணப் பறிமுதல் தொடர்பாக 6 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடந்து வரும் தேர்தல் சோதனைகளில் ஒரே நேரத்தில் பிடிபட்ட மிகப் பெரிய தொகை இது என்பதாலும், அமைச்சர் நேருவின் தொகுதிக்குட்பட்ட பகுதியில் சிக்கியுள்ளதாலும் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக டிராவல்ஸ் உரிமையாளர் உதயக்குமரன், அவரது மகன் அருண் பாலாஜி, நிறுவன மேலாளர் பாலு ஆகியோரிடம் வருமான வரித்துறையினரும்,தேர்தல் அதிகாரிகளும் விசாரணை நடத்தினர்.

அப்போது பணம் குறித்து துருவித் துருவி விசாரிக்கப்பட்டது. அதற்கு உதயக்குமரன் அதிரடியாக விளக்கம் அளித்துள்ளார்.

அந்த பணம் என்னோடதுதான். அதேபோல என்கிட்ட இன்னும் 20 கோடி இருக்கு. ஆனா எல்லா பணத்துக்கும் என்கிட்ட கணக்கு கிடையாது. நான் 8வது வரைக்கும்தான் படிச்சிருக்கிறேன். அதனால் கணக்கு வச்சிக்கிறது கிடையாது.

இதுவரை இன்கம்டாக்ஸ் கட்டாம இருந்தேன். எல்லோரும் சொன்னாங்க. நீ ஒரு நாள் மாட்டப்போறேன்னு. அது போல இப்ப நான் நல்லா வசமா மாட்டிக்கிட்டேன்.

ரியல் எஸ்டேட்டுக்கு டோக்கன் அட்வான்ஸ் கொடுக்கத்தான் இந்த 5 கோடியை எடுத்துக்கிட்டு மெட்ராஸ் போனேன். தேர்ல் நேரமா இருக்குறதுனாலதான் என்னோட பஸ்சுலேயே டாப்ல கட்டிப்போட்டு எடுத்துக்கிட்டு போனேன் என்று பலே பதிலை அளித்துள்ளார் உதயக்குமரன்.

இதற்கிடையே, சம்பவத்தன்று அதிகாரி சங்கீதா ரெய்டுக்குப் போனபோது பஸ் இருந்த பகுதியிலிருந்து காரில் நான்கு பேர் தப்பிச் சென்றுள்ளனர். அவர்கள் யார் என்பது குறித்து தற்போது தீவிர விசாரணை நடந்து வருகிறது.


-Thatstamil


அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

ரூ. 5.11 கோடி என்னுடையதுதான் Empty Re: ரூ. 5.11 கோடி என்னுடையதுதான்

Post by Manik Thu Apr 07, 2011 3:00 pm

யாரையும் மாட்டிக்கொடுக்காமல் இருக்கு நூதன பதில் வைத்துள்ளனர்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ரூ. 5.11 கோடி என்னுடையதுதான் Empty Re: ரூ. 5.11 கோடி என்னுடையதுதான்

Post by கலைவேந்தன் Thu Apr 07, 2011 3:53 pm

இவரைப் பாராட்டறோம் சரி...

நேருவை என்ன செய்யப்போகிறோம்...? என்ன கொடுமை சார் இது



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ரூ. 5.11 கோடி என்னுடையதுதான் Empty Re: ரூ. 5.11 கோடி என்னுடையதுதான்

Post by ரபீக் Thu Apr 07, 2011 3:57 pm

கலை wrote:இவரைப் பாராட்டறோம் சரி...

நேருவை என்ன செய்யப்போகிறோம்...? என்ன கொடுமை சார் இது

என்ன கொடுமை சார் இது அவர் மருபடியும் மந்திரி ஆகிடுவாரு!!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ரூ. 5.11 கோடி என்னுடையதுதான் Empty Re: ரூ. 5.11 கோடி என்னுடையதுதான்

Post by Pugalenthi Thu Apr 07, 2011 5:20 pm

well done Mrs.Sangeetha
Hats off
Pugalenthi
Pugalenthi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 17
இணைந்தது : 09/03/2011

Back to top Go down

ரூ. 5.11 கோடி என்னுடையதுதான் Empty Re: ரூ. 5.11 கோடி என்னுடையதுதான்

Post by ராஜ ராஜ சோழன் Thu Apr 07, 2011 6:33 pm

இலவசம் வசம் நம் மக்கள் பணித்து கிடக்கும் வரை மட்டும் தன இவன் அமைச்சர் ஆக முடியும் என்ன கொடுமை சார் இது
ராஜ ராஜ சோழன்
ராஜ ராஜ சோழன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 10
இணைந்தது : 07/04/2011

Back to top Go down

ரூ. 5.11 கோடி என்னுடையதுதான் Empty Re: ரூ. 5.11 கோடி என்னுடையதுதான்

Post by anbulakshmi.vijayakumar Thu Apr 07, 2011 9:52 pm

சரியான விஷயம் தான் ஆனால் எப்படி சாத்தியமாகும் ?....
anbulakshmi.vijayakumar
anbulakshmi.vijayakumar
பண்பாளர்


பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011

Back to top Go down

ரூ. 5.11 கோடி என்னுடையதுதான் Empty Re: ரூ. 5.11 கோடி என்னுடையதுதான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» காங்கிரஸ் கட்சியின் வருமானம் "கிடுகிடு' உயர்வு : 2002ல் ரூ.62 கோடி; 2010ல் ரூ.496 கோடி
» தேர்தல் ஊழலின் பிறப்பிடமாகி விட்டது: ரூ.2 கோடி செலவு செய்து ரூ.10 கோடி சம்பாதிக்கின்றனர்
» காட்டியது ரூ.1 கோடி.. காட்டாமல் மறைத்தது ரூ.58 கோடி! – வசமாக சிக்கிய காமராஜ்!
» உலகத் தமிழ் செம்மொழி மாநாடு: செலவு 305 கோடி; மீதம் 10 கோடி
» 2,500 கோடி மட்டும் கட்டுவதா? வோடபோன் கோரிக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி: ஏர்டெல் 10,000 கோடி செலுத்தியது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum