ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குமுதம் கட்டுரை

+2
nandhtiha
ரூபன்
6 posters

Go down

குமுதம் கட்டுரை Empty குமுதம் கட்டுரை

Post by ரூபன் Fri Sep 04, 2009 2:28 pm



இந்த வார குமுதம் ஜோதிடம் புத்தகத்தில், சிறப்புக் கட்டுரை ஒன்று வந்திருக்கிறது.
பொதுவாக இது போன்ற கட்டுரைகளை பொது ஊடகங்களில் காண்பது அரிது. ஹிந்து
விரோத சக்திகளின் கையில் சிக்கியுள்ள ஊடகங்கள் தொடர்ந்து பொது மக்களை ஒரு
வித மூளைச் சலவைக்கு ஆளாக்கி வருகின்றன. ஹிந்துக்களுக்குள் பிளவுகள்
ஏற்படுத்துவது, ஹிந்துக்களுக்கு எதிரான கொடுமைகளை இருட்டடிப்பு செய்வது,
உண்மையை திரிப்பது என்று பலவித வரலாற்று தவறுகளை ஊடகங்கள் செய்து
வருகின்றன. வெறும் வியாபார நோக்கம் மட்டும் அல்லது, தேச விரோதமாகவே
ஊடகங்கள் செயல்பட்டும் இதனை கண்டுகொள்ளவோ, கண்டிக்கவோ சற்றும் எண்ணம்
இல்லாத அரசாங்கம் வேறு. இந்நிலையில் இது போன்ற ஒரு கட்டுரை குமுதத்தில்
வெளியாகி இருப்பது வரவேற்க தகுந்தது.




இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் சுமார் ஆயிரத்து முப்பது ஆண்டுகளுக்கு
முன், இந்துக்களின் பூமியாக இருந்த ஆப்கனிஸ்தான் இன்று இந்துக்களின் சுவடே
இன்றி ஆகி விட்டிருப்பதை கட்டுரை ஆசிரியர் குறிப்பிடுகிறார். அகண்ட
பாரதமாக இருந்த இந்த தேசம், துண்டாடப்பட்டு அடையாளம் இழந்து நிற்கிறது.
இந்துக்களின், வேத, தர்ம சாத்திர, புராண, இதிகாச மொழியான
சமஸ்க்ருதத்துக்கு புகழ் பெற்ற இலக்கண நூலை எழுதிய பாணினி இன்றைய
ஆப்கனிஸ்தானில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் என்பது எத்தனை
பேருக்கு தெரியும்? சங்கரரும், ராமானுஜரும் தமது முக்கிய ஆன்மீக உரைகளை
எழுத துவங்கியது நமது காஷ்மீரத்தில் தான் என்பது எத்தனை பேர் அறிவர்?
காஷ்மீர ராஜ வம்ச வரலாற்றை பற்றி கல்ஹணர் எழுதிய ராஜ தரங்கிணி என்கிற நூலை
இன்றைக்கு காஷ்மீரில் அறிந்தவர்கள் ஓரிருவராவது மிச்சம் இருப்பார்களா
என்பது சந்தேகம்தான்.
ஜனநாயகத்தின் வரவால், நாம் நமது பாரம்பரியத்தை இழந்து
விட்டிருக்கிறோம். நமது நாட்டுக்கே உரிய கலாச்சாரங்கள் அழியும் நிலை
அடைந்து, அரபி கலாச்சாரத்துக்கும், மேற்கத்திய கலாச்சாரத்துக்கும் மக்கள்
ஏற்றுமதி ஆகிக் கொண்டு இருக்கிறார்கள். நமது குழந்தைகள் படிக்கும் பாட
திட்டத்தில், சங்கரர், ராமானுஜர் எல்லாம் எங்கே இடம் பெறுகிறார்கள்? இது
திட்டமிட்ட இருட்டடிப்புதானே…!
குமுதம் கட்டுரை 1100533603-1-300x271குமுதம் கட்டுரை 1100533604-1-150x150இங்கே
நீங்கள் காண்பவை ஒரு பாகிஸ்தானிய பத்திரிகையில் (Daily Mirror)
வெளியாகியுள்ள இந்தியாவின் வரைபடங்கள். எதிர்வரும் ஆண்டுகளில்
பாகிஸ்தானின் துணையுடன் செயல்படும் இஸ்லாமிய தீவிரவாதிகளின்
பயங்கரவாதத்தால் இந்தியா எப்படி உருமாறும் என்கிற இந்த படங்கள் வெறும்
கற்பனை மட்டும் அல்ல - அவை நிஜத்தில் நடக்க சாத்தியக் கூறுகள் நிறையவே
உள்ளன. சுயநலமான அரசியல் வாதிகள், அவர்களின் நேர்மையில்லாத அரசாங்கம்
என்கிற இந்த சூழ்நிலை அந்நிய சக்திகளுக்கு நிறையவே ஊக்கம் கொடுத்து
வருகின்றன.
இதைத்தான் அந்த கட்டுரை, “சுதந்திரம் கிடைத்தபின்பு, தங்களுக்குப்
பிடித்தமானவர்களுக்கு மந்திரி பதவிகளை அள்ளிக்கொடுப்பது; தகுதி
இல்லாவிடினும், தங்கள் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரை முக்கியப் பதவிகளில்
அமர்த்துவது, அரசியல் சட்டத்தை அவ்வப்போது தங்கள் இஷ்டம்போல் மாற்றுவது,
ஒரு சிலரைத் திருப்திபடுத்துவதற்காகத் தேசத்தின் நலனைப் புறக்கணிப்பது,
தங்கள் கோழைத்தனத்தை மறைப்பதற்காக அவ்வப்போது சாதுர்யமாக அறிக்கைகள்
விடுவது, நாட்டு நலனின் முக்கியக் காவலர்களான பத்திரிகைகளைத் தங்கள்
பிடியில் வைத்துக்கொள்வது என்று காலம் காலமாக நம் அரசியல் கட்சிகள் -
அதிலும் முக்கியமாக காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வந்ததன் விளைவைத்தான்
இன்று இந்திய மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.” என்று மிகச்சரியாக
குறிப்பிடுகிறது.
இது போன்ற ஒரு சூழல் நமக்கு புராணங்களே எடுத்துக் காட்டுகின்றன.
ஒவ்வொரு முறையும் ஒரு அரக்கன், மக்களை கொடுமைப் படுத்தி அடக்குவதும்,
அதற்காக கடவுள் ஒரு அவதாரமெடுத்து வந்து தர்மத்தை நிலைநாட்டுவதும் நமது
நூல்களில் காணப்படும் ஒன்றுதான். கண்ணனே, யுகந்தோறும் தீமை
மலியும்போதெல்லாம் தர்மத்தை நிலைநாட்ட மறுபடி அவதரிப்பேன் என்று வாக்கு
கொடுத்திருக்கிறான். இந்த தேசத்தைக் தீய சக்திகளிடமிருந்து காக்க கண்ணனின்
அவதாரமாக ஒரு தேச பக்தன் கிடைக்க மாட்டானா என்று அந்த குமுதம் கட்டுரை
எழுப்புகிற கேள்வி மிக முக்கியமானது.
ஊடகங்களும், கல்வி முறையும், அரசியல் கடந்த பல ஆண்டுகளாக எழுப்பியுள்ள
இந்த மேக மூட்டத்தை மீறி இந்துக்கள் உண்மையை கண்டுகொள்ள வேண்டிய தருணம்
இது.
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

குமுதம் கட்டுரை Empty Re: குமுதம் கட்டுரை

Post by ரூபன் Fri Sep 04, 2009 2:31 pm

" காக்க கண்ணனின்
அவதாரமாக ஒரு தேச பக்தன் கிடைக்க மாட்டானா"

கிடைத்த தலைவனுக்கே எல்லோரும் சேர்ந்து சதிசெய்துவிட்டு தேசபக்தன்
கிடைக்கமாட்டானா என்றால் இதைநினைத்து நான் எங்கே போய முட்டிக்கிறது

என்ன கொடுமை சார் இது
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

குமுதம் கட்டுரை Empty Re: குமுதம் கட்டுரை

Post by nandhtiha Fri Sep 04, 2009 6:48 pm

பேரன்பு மிக்கீர்
வணக்கம்

இந்த தேசத்தைத் தீய சக்திகளிடமிருந்து காக்க
கண்ணனின் அவதாரமாக ஒரு தேச பக்தன் கிடைக்க மாட்டானா ?


நல்ல கேள்வி தான். நல்ல தேச பக்தனுக்காக கொழுக்கட்டை படைப்பதாலோ அல்லது கோவில்
சுவற்றில் முட்டிக் கொள்வதாலோ கிடைத்து விட மாட்டான். மக்கள் தன் நாட்டுக்காகவும்
தன் மக்களுக்காகவும் சர்வ பரித்யாகம் செய்யும்போது தான் அம்மாதிரியான தேச
பக்தன்கிடைப்பான்.


இராமாயணத்தில் ஸ்ரீ ராமன் கூறிய வார்த்தைகளை மறந்ததனால் வந்த வினை. ஜனனி ஜன்ம பூமிஸ்ச ஸ்வர்காதபி
கரீயஸீ. இதனைத் தானே பாரதியும் பெற்ற தாயும்பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்ததே என்றார்.


பகவத் கீதையும் "யத்ர யோகேஸ்வர க்ருஷ்ண: யத்ர பார்த்தோ தனுர்தா: தத்ர ஸ்ரீ விஜய:

இறைவனுடன் வில்லேந்திய அர்ஜுனன் நிற்கும் போது தான் வெற்றி கிடைக்கும்.

அஹிம்சை என்பது கோழைகளின் ஆயுதமாகிப் போனது. காந்தியே ஒரு முறை சொன்னார் (HINDUS ARE
COWARDS AND MOHAMMEDANS ARE BULLIES) இதற்குக் காரணம் யார்? மாவீரர்களை வழிதவறிய
தேசபக்தர்கள் என்று கூறியவர் யார்?


யுத்தம் இருவகைப் படும். ஒன்று ஆக்கிரமிப்பு யுத்தம். இனப் படுகொலையை ஆதரிக்கும். மற்றது
தற்காப்பு யுத்தம். அது அற நெறி சார்ந்து நிற்கும். மறந்தும் கூட மாதரை மான பங்கம்
செய்யாது. நிராயுத பாணிகளைத் தாக்காது. தற்காப்பு யுத்தம் செய்தவர்களைக் கூட
இன்றும் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கும் காந்திய மனப் போக்கு எவ்வாறு ஒரு தேச பக்தனைப் பெற்றுத் தரும்?


என்னை அறிமுகப் படுத்திக் கொள்ள நான் இங்கு வரவில்லை, எனக்கு மனச் சாந்தி அளிக்கக் கூடிய வகையில் ஏதாவது கிடைக்குமா என்று தான் ஈகரைக்குள் வந்தேன். நேற்று ஈகரையில் வெளி வந்த அவதூறுகளை அள்ளி வீசும் சீர் குலைவுச் சக்திகள் என்ற கட்டுரையைப் படித்ததும் எழுந்த உணர்ச்சி வேகத்தில் எழுதப் பட்ட ஒரு கவிதையின் ஓரிரு வரிகளை மட்டும் தருகிறேன்.

பிறந்த நாட்டையும் பெற்ற நற்றாயையும்
பிறர்கொளப் பார்த்திருப்பான்
இறந்தாலென்ன இருந்தாலென்ன
எடடா கொடுவாளை

இதென்னடா பயங்கரவாதம் என்று சிலர் சிந்திக்கலாம்.

ஒரே ஒரு திரெளபதியை மான பங்கப் படுத்த முயன்ற கெளரவர்கள், பீஷ்மர் உள்ளிட்ட பெரியோர்கள், துரோணர் முதலிய ஆசான்கள் அனைவரையும் அழித்தொழிக்க முற்பட்ட கண்ணனின் செயலும் பயங்கர வாதம் தான். எத்துணை ஈழத்துத் தாய்மார்கள் நிர்வாணப் படுத்தப் பட்டார்கள்? செத்துப் போன அவர்கள் உடல்களை விட்டு வைத்தார்களா அப்பாவிகள்?

இதற்கெல்லாம் ஒரு குரல் கொடுக்க முடியாதவர்கள் கோயில் சுற்றியென்ன அல்லது கோவிலைக் கட்டி என்ன?

ஈகரை அன்பர்களைக் கீழே கொடுத்துள்ள சுட்டியை அழுத்திப் பார்க்க வேண்டுகிறேன்

http://pal-baghel-samaj.com/community-pal.html

இந்தக் கட்டுரையில் கடைசியாகக் கொடுக்கப் பட்டுள்ள விடயத்தைக் கவனித்துப் படிக்கக்
கோருகிறேன். அது வருமாறு:


13.
Tukoji Rao Shivajirao Holkar III



HH Maharajadhiraj Holkar Raj
Rajeshwar Sawai Shri Sir TUKOJI RAO III HOLKAR 1903/1926 (abdicated), born 26th
November 1890, G.C.I.E. [cr.1918], the ruler enjoys a 21 local gun salute,
married 1stly, HH Maharani Shrimant Akhand Soubhagyavati Chandrawati Bai
(Senior Maharani), married 2ndly June 1913, HH Maharani Shrimant Akhand
Soubhagyavati Indira Bai (Junior Maharani), married 3rdly, 12th March 1928 at
Barwaha, Her Highness Maharani Shrimant Akhand Soubhagyavati Sharmishtha Devi
Bai Sahiba (n
ée Nancy Anna Miller), born 9th September
1907 in Seattle, died 1995, and had issue, 1 son and 5 daughters. He died 21st
May 1978 in Paris, France.


15.
Usha Devi, Maharaj Sahiba Holkar


Her full title is H.H.Maharanidhiraja Rani Rajeshwar Sawai Shrimant Akhand Soubhagyavati Usha Devi
Maharaj Sahiba Holkar XV Bahadur. She had been declared Heir-Apparent, in
preference to her only brother, Prince Richard Holkars, whose mother was
American, by special gazette of the Government of India, 1950. Like all the
other royals she was deprived of her rank, titles and honours by the government
in 1971. Married to the industrialist Shrimant Sardar Satish Chandra Malhotra
and mother of 2 sons and 2 or 3 daughters.


இதன் முழு விவரத்தையும் கொடுக்கிறேன்.

1950ல் இந்தோர் மஹாராஜா சர் துக்கோஜி ராவ்III ஹோல்கர் ஒரு அமெரிக்கப் பெண்ணை (நான்சி
அன்னா மில்லர்) மணந்து கொண்டார். அவருக்கு ஒரு பிள்ளை பிறந்தது. அவருக்கு
ரிச்சர்ட் என்று நாமகரணம் சூட்டப் பட்டது. பிறகு சிவாஜி ராவ் ஹோல்கர்II என்ற இந்து
நாமகரணமும் செய்யப் பட்டது. மஹாராஜாவுக்கு தன் மகனைத் தன் வாரிசாக அறிவிக்க
விரும்பினார், நேரு சர்தார் படேல் முதலியவர்கள் அமெரிக்க மனைவிக்குப் பிறந்த
பிள்ளைக்கு இளவரசுப் பட்டம் சூட்ட அனுமதிக்க முடியாது என்று கூறி விட்டனர்.
(அதிகாரம் இல்லாத இளவரசுப் பட்டம்) பிறகு அவருடைய ஒன்று விட்ட சகோதரியான இந்த
ராணிக்குத் தான் வாரிசுப் பட்டம் கொடுக்கப்பட்டு அது மஹாராஷ்ரா கெஜட்டில்
அறிவிக்கப் பட்டது. இதை அறிந்து தானோ என்னவோ மேன்மை தங்கிய அப்துல் கலாம் அவர்கள்
இத்தாலிப் பெண் பிரதமராக வருவதை அனுமதிக்க வில்லை. சோர்ந்த முகத்துடன் தியாகிப்
பட்டம் பெற்றுத் திரும்பி விட்டார், இதை என்றாவது மீடியாக்கள் வெளிக் கொணர்ந்தனவா?


இந்த நாட்டின் தலையெழுத்தை எழுத இத்தாலியிலிருந்தா ஒருபெண் வரவேண்டும்?

அந்தப் பெண்ணின் காலடியிலா தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ளத் தவமிருக்க வேண்டும்

இரண்டாவது வட்ட மேஜை மாநாடு நடக்கும் முன் நேதாஜி போஸ் அவர்கள் காந்தியைச் சந்தித்து
மாநாட்டின் நோக்கம் என்ன என்று கேட்டார், ஒத்துழையாமை இயக்கத்தை முன் வைத்துப்
போராட்டம் நடத்தினால் அவர்களே சுதந்திரத்தைக்கொடுத்து விட்டுப் போய் விடுவார்கள்
என்றார்.
உள்ளெழுந்த ஆத்திரத்தை அடக்கிக் கொண்ட நேதாஜி ஒருவன் கொடுத்து மற்றொருவன் பெறுவது
சுதந்திரமல்ல அது பிச்சை. அதிகாரத்துடன் எடுத்துக் கொள்வது தான் சுதந்திரம்
என்றார். அவ்வாறு பெறாவிடில் பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காக்க மாட்ட்டார்கள்
என்றார்.


அந்தப் பயம் தான் காங்கிரஸைக் கலைத்து விடுங்கள் என்று பேச காந்தியைத் தூண்டியது. நேதாஜி
தலைமையில் போரிட்ட வீரர்களில் பலர் தியாகிகள் ஓய்வூதியத்தையும் பெற மறுத்த கதை
எத்தனை பேருக்குத் தெரியும்?



தியாகத்தினால் மட்டுமே தேச பக்தர்கள் கிடைப்பார்கள். யாகத்தினாலோ அல்லது யோகத்தினாலோ அல்ல.

கொதிக்கும் உள்ளத்துடன் எழுதி விட்டேன் மன்னிக்கவும்

அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

குமுதம் கட்டுரை Empty Re: குமுதம் கட்டுரை

Post by ராஜா Fri Sep 04, 2009 7:13 pm

எங்கள் உணர்வுகளை , அப்படியே வார்த்தைகளாக வடிக்கிறீர்கள் அக்கா.

மிக்க நன்றி நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

குமுதம் கட்டுரை Empty Re: குமுதம் கட்டுரை

Post by Raja2009 Fri Sep 04, 2009 7:54 pm

இந்தோர் ராஜாவைப் பற்றிய விவரம் மிக முக்கியமானது. நன்றி.

பாரதியின் வார்த்தைகள் தான் ஞாபகம் வருகிறது.

உப்பென்றும் சீனியென்றும் உள்நாட்டு சேலையென்றும் செப்பித் திரிவாரடி கிளியே..செய்வதறியாரடி..!!

அன்னிய துணிகளை பகிஷ்கரிக்க சொன்னது அன்றைய காங்கிரஸ்
அன்னிய நாட்டு பெண்ணை அன்னையெனவும், தலைவராகவும் ஏற்று கொண்டது இன்றைய இந்திரா காங்கிரஸ்

இவர்களிடம் தேசபக்தனை தேடுவது இல்லாத கருப்பு பூனையை இருட்டில் தேடுவதற்கு ஒப்பாகும்.

ராஜா
avatar
Raja2009
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 43
இணைந்தது : 25/07/2009

Back to top Go down

குமுதம் கட்டுரை Empty Re: குமுதம் கட்டுரை

Post by சிவா Fri Sep 04, 2009 7:55 pm

Raja2009 wrote:இந்தோர் ராஜாவைப் பற்றிய விவரம் மிக முக்கியமானது. நன்றி.

பாரதியின் வார்த்தைகள் தான் ஞாபகம் வருகிறது.

உப்பென்றும் சீனியென்றும் உள்நாட்டு சேலையென்றும் செப்பித் திரிவாரடி கிளியே..செய்வதறியாரடி..!!

அன்னிய துணிகளை பகிஷ்கரிக்க சொன்னது அன்றைய காங்கிரஸ்
அன்னிய நாட்டு பெண்ணை அன்னையெனவும், தலைவராகவும் ஏற்று கொண்டது இன்றைய இந்திரா காங்கிரஸ்

இவர்களிடம் தேசபக்தனை தேடுவது இல்லாத கருப்பு பூனையை இருட்டில் தேடுவதற்கு ஒப்பாகும்.

ராஜா

மகிழ்ச்சி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குமுதம் கட்டுரை Empty Re: குமுதம் கட்டுரை

Post by நிலாசகி Fri Sep 04, 2009 8:04 pm

"ஒருவன் கொடுத்து மற்றொருவன் பெறுவது
சுதந்திரமல்ல அது பிச்சை. அதிகாரத்துடன் எடுத்துக் கொள்வது தான் சுதந்திரம்
என்றார். அவ்வாறு பெறாவிடில் பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காக்க மாட்ட்டார்கள்
என்றார்."-அதுதான் நடந்து கொண்டிருக்கிறதே......
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

குமுதம் கட்டுரை Empty Re: குமுதம் கட்டுரை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum