ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டென்மார்க் அறவியலாளர்-நீல்ஸ்போர் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள்-அக்டோபர் 7
by ayyasamy ram Today at 8:10 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

Top posting users this week
ayyasamy ram
உண்மையான நண்பர்கள் Poll_c10உண்மையான நண்பர்கள் Poll_m10உண்மையான நண்பர்கள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்மையான நண்பர்கள்

Go down

உண்மையான நண்பர்கள் Empty உண்மையான நண்பர்கள்

Post by Admin Tue Nov 04, 2008 12:09 pm

பெரிய காடு உண்டு. அந்தக் காட்டிலிருந்த ஒரு மரத்தின் கிளையில் ஆணும் பெண்ணுமான இரண்டு குருவிகள் கூடுகட்டிக் குடும்பம் நடத்தி வாழ்ந்து வந்தன.

பெண் குருவி, கூட்டில் பல முட்டைகளை இட்டு வைத்திருந்தது.

ஒருநாள் பகல்நேரத்தில் அந்தப் பக்கமாக ஒரு பெரிய யானை வந்தது.

நிழலுக்காக மரத்தடியில் நின்ற யானை விளையாட்டாகத் தனது துதிக்கையை உயரே தூக்கி துதிக்கைக்க எட்டக்கூடிய மரக்கிளைகளையெல்லாம் ஒடித்துக் கீழே போட்டுக் கொண்டிருந்தது.

அவ்வாறு ஒடிந்து விழுந்த கிளைகளில் குருவி கூடு கட்டியிருந்த கிளையும் ஒன்று.

கிளை கிழே விழுந்த காரணத்தால் குருவிக் கூட்டில் இருந்த முட்டைகள் அனைத்தும் கீழே விழுந்து நாசமாகி விட்டன.

நல்ல வேளையாக குருவிகள் இரண்டும் தப்பித்துக் கொண்டன.

தான் இட்ட முட்டைகள் அனைத்தும உடைந்து பாழாகி விட்டதைக் கண்டு பெண் குருவி வேதனை தாள மாட்டாது கதறி அழுதது.

பெண் குருவியின் பரிதாப ஓலத்தைக் கேட்டு, அதன் தோழியான மரங்கொத்திக் குருவி ஒன்று விரைந்து வந்து அதற்கு ஆறுதல் கூறலாயிற்று.

தோழி, நடந்துபோன துயர நிகழ்ச்சியை எண்ணியெண்ணி அழுவதனால் என்ன பிரயோசனம்?

அறிவுள்ளவர்கள் இறந்துபோன அன்புக்கு உரியவர்களைப் பற்றியும், காணாமல் போன தங்கள் அரிய பொருட்கள் பற்றியும் கலக்கமடைந்து வருந்த மாட்டார்கள்.

இறந்துபோன நமது அன்பிற்கு உரியவர்களை நினைத்து நாம் வருந்தினால் மேல் உலகில் இருக்கும் அவர்கள் ஆத்மா யானையை எவ்விதமாவது பழி வாங்க முயற்சிப்பதுதான் நல்லது.

இவ்வாறு மரங்கொத்தி பறவை கூறியதைக் கேட்டதும் பெண் குருவி, தோழி நீ சொல்வதும் உண்மைதான். இழந்த முட்டைகளைப் பற்றி அனாவசியமாக எதற்காகச் சிந்திக்க வேண்டும் ? அதற்குப் பதிலாக என் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்ட யானையின் உயிரை வாங்கிப் பழி தீர்க்க வேண்டும். அதற்கு ஏதாவது வழியிருக்கிறதா என்று தான் யோசிக்க வேண்டும் என்று கூறிற்று.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

உண்மையான நண்பர்கள் Empty Re: உண்மையான நண்பர்கள்

Post by Admin Tue Nov 04, 2008 12:10 pm

தோழி, உண்மைதான். யானையைக் கொல்லுவதற்கு ஏதாவது ஒரு உபாயம் கண்டு பிடித்துத்தான் ஆக வேண்டும். இந்த மாதிரி விஷயங்களில் ஒத்துழைப்பு தருபவர்கள்தான் உண்மையான நண்பர்களாக இருக்க முடியும்.

துன்பம் நேரும்போது உதவி செய்பவன் தான் உண்மையான நண்பன். செல்வம் இருக்கும்போது தெருவில் செல்வோர் எல்லாம் நம்மிடம் நட்புக் கொள்ள வருவார்கள். அவ்வாறு வரும் நண்பர்களினால் ஒரு பயனும் இல்லை.

பசியினால் பரிதவித்துக் கொண்டிருக்கும்போது வயிறார உணவு கொடுத்து உபசரிப்பவனை தந்தையாகவும், கடவுளாகவும் கூடக் கருதலாம். கணவன் வறுமையினாலும், நோயினாலும் வாழும் சமயத்தில் முகம் சுழிக்காமல் மனப்பூர்வமாக கணவனைப் பேணிக் காப்பவள் - கணவன் மனங் கோணாமல் நடப்பவள் தான் கற்புடைய பத்தினிப் பெண்ணாகும்.

ஆகவே நீ மனத் துயரினால் வருந்தும் இந்தச் சமயத்தில் உனக்கு உதவும் வாய்ப்பு கிடைத்ததை பெரும் பாக்கியமாகவே கருதுகின்றேன்.

யானை ஒரு பெரிய விலங்கு, நீயோ நானோ மட்டுமே முயற்சிப்பதனால் அதனைக் கொன்றுவிட முடியாது. உண்மையான நண்பர்கள் பலரது உதவியினையும் கோரிப் பெற வேண்டும்.

எனக்கு மிகவும் நெருக்கமான நண்பனாக ஓர் ஈ உள்ளது நல்ல கல்வியறிவும், உலக அனுபவமும் உள்ள அந்த ஈயிடம் உன்னை அழைத்துச் செல்லுகின்றேன். அதனுடைய ஆலோசனையும் உதவியும் நமக்குப் பேருதவியாக இருக்கும் எனக் கூறிய மரங்கொத்திப் பறவை குருவியை அழைத்துக் கொண்டு தன்னுடைய நண்பனான ஈயிடம் சென்றது.

மரங்கொத்திப் பறவை ஈயிடம் குருவிக்கு ஏற்பட்டிருக்கும் மனத் துயரத்தைப் பற்றி எடுத்துக் கூறி யானையைக் கொன்றால் தான் பெண் குருவியின் மனம் நிம்மதியடையும் என்றும் மொழிந்தது.

உங்கள் பேச்சையெல்லாம் கேட்டதும் உண்மையாகவே என் மனம் பெரிதும் துயர் உறுகின்றது. எனக்கு மிகவும் உயிர்த் தோழனான ஒரு தவளை இருக்கின்றது. அதனிடம் உங்களை அழைத்துச் செல்லுகிறேன். என்னைவிட நல்ல அறிவாற்றல் நிறைந்தது அது எனக் கூறி ஈ அனைவரையும் தவளையிடம் அழைத்துச் சென்றது.

தவளை தமது இல்லம் நாடிவந்த அனைவரையும் வரவேற்று அவர்கள் வந்த காரணத்தைக் கேட்டுத் தெரிந்து கொண்டது.

உலகத்தில் சிலர் தான் தங்களுக்கு பலமும், பணமும் செல்வாக்கும் இருக்கின்றது என்பதற்காக எளிய ஜீவன்களை பல வகையிலும் தொல்லை கொடுத்து வதைத்து துன்புறத்துகின்றனர். நம்மைப் போன்ற எளிய - பலவீனமான உயிர்களுக்கும் ஒரு வகையில் வல்லமை உண்டு என்பதை நாம் நிரூபித்துக் காண்பித்து அந்த யானையைக் கொல்ல வேண்டும். யானையைக் கொல்வது நம்மால் சாதிக்கக்கூடிய காரியமே.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

உண்மையான நண்பர்கள் Empty Re: உண்மையான நண்பர்கள்

Post by Admin Tue Nov 04, 2008 12:10 pm

நான் சொல்லும் யோசனையைக் காது கொடுத்துக் கேட்டு ஒவ்வொருவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

அன்புடைய ஈயே நீ அந்த யானை இருக்குமிடம் சென்று அதன் காதில் இனிமையாக ரீங்காரம் செய் அந்த இன்னிசையில் மயங்கி யானை தன் கண்களை மூடிக் கொண்டு மெய் மறந்திருக்கும்.

மரங்கொத்தியே அந்தச் சமயத்தில் நீ சென்று வேகமாக யானையின் கண்களின் உறுதியான தோலை நன்றாகக் கொத்தி, அதனைப் பார்வையிழக்கச் செய்து விட வேண்டும்.

பிறகு நான் ஒரு பெரிய பள்ளத்தின் அருகேயிருந்து கத்துகிறேன்.

கண்களைக் கொத்திய மரங்கொத்தி தான் அங்கிருக்கிறது என்று எண்ணி யானை கோபத்துடன் ஓடிவரும். வந்த வேகத்தில் பள்ளத்தில் விழுந்து விடும்.

அவ்வளவுதான், அதன் கதை முடிந்து விடும். அந்த யானை பள்ளத்தினுள் பல நாட்கள் பட்டினியாகக் கிடந்து இறந்து விடும்.

இவ்வாறு தவளை திட்டத்தை விவரித்துக் கூறியது.

தவளை கூறிய யோசனைப்படி எல்லோரும் கூட்டாக இருந்து செயற்பட்டு அந்த யானையைக் கொன்று பழி தீர்த்துக் கொண்டார்கள்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

உண்மையான நண்பர்கள் Empty Re: உண்மையான நண்பர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum