புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாநிலத்தில் சுயமாக கொள்ளை;மத்தியில் கூட்டுக்கொள்ளை- விஜயகாந்த் Poll_c10மாநிலத்தில் சுயமாக கொள்ளை;மத்தியில் கூட்டுக்கொள்ளை- விஜயகாந்த் Poll_m10மாநிலத்தில் சுயமாக கொள்ளை;மத்தியில் கூட்டுக்கொள்ளை- விஜயகாந்த் Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாநிலத்தில் சுயமாக கொள்ளை;மத்தியில் கூட்டுக்கொள்ளை- விஜயகாந்த் Poll_c10மாநிலத்தில் சுயமாக கொள்ளை;மத்தியில் கூட்டுக்கொள்ளை- விஜயகாந்த் Poll_m10மாநிலத்தில் சுயமாக கொள்ளை;மத்தியில் கூட்டுக்கொள்ளை- விஜயகாந்த் Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
மாநிலத்தில் சுயமாக கொள்ளை;மத்தியில் கூட்டுக்கொள்ளை- விஜயகாந்த் Poll_c10மாநிலத்தில் சுயமாக கொள்ளை;மத்தியில் கூட்டுக்கொள்ளை- விஜயகாந்த் Poll_m10மாநிலத்தில் சுயமாக கொள்ளை;மத்தியில் கூட்டுக்கொள்ளை- விஜயகாந்த் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாநிலத்தில் சுயமாக கொள்ளை;மத்தியில் கூட்டுக்கொள்ளை- விஜயகாந்த்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Apr 03, 2011 5:36 am

ஆட்சியைப் பிடிக்கப்போவதாகத்தான் கூறிவந்தீர்கள். ஆனால், தற்போது கூட்டணி சேர்ந்துள்ளீர்கள்.
கடந்த 1962ல் சீனாவுடன் போர் சூழல் இருந்தது. எதிர்ரெதிர் துருவங்களாக இருந்தாலும், மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசை அண்ணா ஆதரித்தார். இதுகுறித்து கேட்டபோது, "வீடு என்று இருந்தால் தான் ஓடு மாற்ற முடியும். நாடு என்று ஒன்று இருந்தால் தான் கட்சியை மாற்ற முடியும். இப்போது நாட்டுக்கே ஆபத்து வந்திருக்கிறது. முதலில் அதைத் தீர்க்க வேண்டும்' என்றார்.அதைத் தான் இப்போது நான் செய்துகொண்டிருக்கிறேன். கலைஞரின் வீடா, தமிழ்நாடா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. கலைஞரின் குடும்பம், இந்த நாட்டைக் கொள்ளையடித்துக்கொண்டிருக்கிறது. எங்கும் கொள்ளை; எதிலும் கொள்ளை என்பதாகத் தான் இன்றைய நிலைமை இருக்கிறது. முதலில் இந்த தீய சக்தியை அழிக்க வேண்டும்.மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று சொல்வர். தெய்வம் எப்போதும் இறங்கி வந்து பேசாது. மக்கள் மூலமாகத் தான் பேசும். இந்த ஆட்சி ஒழிய வேண்டும் என்பது தான் மக்களின் கருத்தாக இருக்கிறது. அதற்கான முயற்சியில் தான் நான் இறங்கியிருக்கிறேன். இதற்கு முன்பு, இந்த ஆட்சியை ராமதாஸ் திட்டிக் கொண்டிருந்தார். இப்போது, ஒவ்வொரு குடும்பமும் பயனடைந்துள்ளது என்கிறார். இதிலிருந்தே தெரியவில்லையா? இது கொள்கைக் கூட்டணியில்லை; கொள்ளைக் கூட்டணி என்று. இந்தக் கூட்டணியை விரட்டுவதற்காகத் தான், நான் கூட்டணி சேர்ந்திருக்கிறேன்.
திராவிடக் கட்சிகளுக்கான மாற்றாக உங்களை மக்கள் கருதிவந்த நிலையில், ஒரு தரப்புக்கு ஆதரவாக நீங்கள் முடிவெடுத்த பிறகும், நடுநிலையாளர்களின் ஓட்டு உங்களுக்கு கிடைக்குமா?
கிடைக்கும். மக்கள் என் மீது அளப்பரிய நம்பிக்கை வைத்துள்ளனர். நான் ஒன்றும் ஆட்சியில் பங்கு வேண்டும், துணை முதல்வர் பதவி வேண்டும் என்று கேட்கவில்லையே. செம்மொழி மாநாடு நடத்தி, தன் குடும்பத்தைத் தான் அமர வைத்தார். தஞ்சைப் பெரிய கோவில் ஆயிரமாவது ஆண்டு விழா நடத்தி, நடனம் தான் பார்த்தார். இவரை அகற்ற கூட்டணி சேர்ந்திருப்பதால், என் நம்பகத்தன்மை அதிகரித்து, ஓட்டு கூடுமே தவிர குறையவே குறையாது.
அ.தி.மு.க., ஆட்சி அமைத்தால், அவர்கள் தவறு செய்யாதபடி கண்காணிப் பீர்களா?
இன்னும் ஆட்சியே அமைந்துவிடாதபோது, கண்காணிப்பது பற்றியெல்லாம் யோசிக்க வேண்டியதில்லை. மக்களின் விருப்பத்திற்கிணங்க, தி.மு.க., ஆட்சியை அகற்றுவோம். இப்போதைக்கு அது ஒன்று தான் எங்கள் குறி.
அ.தி.மு.க.,வுடனான உங்கள் கூட்டணி எப்படி இருக்கும்?
போகப் போகத் தெரியும். ஒரு தயாரிப்பாளர் என்னை வைத்து படம் எடுக்கிறார். இரண்டு பேருக்கும் எப்படி ஒத்துப்போகிறது என்பதைப் பொறுத்து, என்னை வைத்து 10 படம் கூட பண்ணுவார். அதைப் போலத் தான் இதுவும். பழகிய பிறகே தெரியும்.
கூட்டணி சேர்ந்திருக்காவிட்டால், தே.மு.தி.க., என்ற கட்சியைத் தொடர்ந்து நடத்துவது பிரச்னையாகி இருக்குமா?
பிரச்னைக்கு அஞ்சுபவன் நான் இல்லை. வாழ்க்கை என்றாலே பிரச்னைகள் இருக்கத் தான் செய்யும். அதை எதிர்கொண்டு சமாளிக்கும் நெஞ்சுரம் எங்களுக்கு இருக்கிறது. என் திருமண மண்டபத்தை இடித்தனர், நாட்டில் எங்கும் நடக்காத அநியாயமாக, கட்சி அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அதுக்கெல்லாம் கலங்கினேனா?
கூட்டணி என்றான பிறகு, உங்கள் கட்சியின் வளர்ச்சி சுருங்கிவிடாதா?
சுருங்காது. நாங்கள் பிரிந்து கிடந்தால் மீண்டும் கலைஞர் வந்துவிடுவார். பிரித்தாளும் சூழ்ச்சி தான் அவருடைய, "பாலிசி.' அதனால் தான் நாங்கள் ஒன்று சேர்ந்திருக்கிறோம்.
உங்களுக்கும் அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கும் தனிப்பட்ட தாக்குதல் இருந்தது.
அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; நிரந்தர எதிரியும் இல்லை என்பது எல்லாருக்கும் தெரிந்தது தானே. மக்கள் சொன்னதால் தான், நான் இந்த கூட்டணி முடிவுக்கே வந்தேன். தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக மட்டும் தான் இவர் கட்சி நடத்துகிறார். "காங்கிரசுடனும், பணக்காரர்களுடனும் கூட்டணி வைக்கக் கூடாது' என அண்ணாதுரை சொல்லியிருந்தார். அதை மீறி, 60க்கு 63ஐக் கொடுத்து இவர்கள் கூட்டணி சேரவேண்டிய அவசியமென்ன? இவர் மட்டும் மானத்தை விட்டு சேருவாராம். நாங்கள் சேர்ந்தால் மட்டும் தப்பா?
அ.தி.மு.க., கூட்டணியிலும் பெரிய இணக்கம் இருப்பது போல் தெரியவில்லையே. இடதுசாரிகளுடன் இழுபறி நிலவியது... ம.தி.மு.க., நிலை...
மற்ற கட்சிகளின் விவகாரங்களுக்குள் நான் போக விரும்பவில்லை. எனக்கு முன்னால் இருந்தே அவர்கள் கூட்டணியில் இருக்கின்றனர். அவர்களிடம் கேட்டால் தான் இதுபற்றிய விவரம் தெரியும்.
கூட்டணிக்குள் கடைசியாக நுழைந்த நீங்கள், முதல் ஆளாக ஒதுக்கீடு வாங்கி வந்துவிட்டீர்கள். இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகள் இணக்கமாக பணிபுரியுமா?
பணிபுரிபவர்; பணிபுரிய வேண்டும். நாங்கள் எதையும் எதிர்பார்த்து செயல்படவில்லை. அதேசமயம், கூட்டணி தர்மத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம். முழுமையாக கடைபிடிப்போம். அதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
நீங்களும், ஜெயலலிதாவும் ஒரே மேடையில் பிரசாரம் செய்வீர்களா?
எல்லா தலைவர்களும் ஒரே மேடையில் தான் பிரசாரம் செய்ய வேண்டும் என்று என்ன இருக்கிறது? மிகக் குறைந்த நாட்களே இருக்கும்போது, ஆளுக்கு ஒரு திசையாக பிரசாரம் செய்தால், நிறைய மக்களைச் சென்றடையே முடியுமே. இந்த ஆட்சியாளர்களை இப்படியே விட்டால், எகிப்து மாதிரி, லிபியா மாதிரி மக்கள் புரட்சி தான் வெடிக்கும்.
குறைந்தபட்ச பொது செயல் திட்டம் ஏதேனும் இருக்குமா?
அதற்கு முன்பு முடிவு செய்ய வேண்டிய விஷயங்களே நிறைய இருக்கின்றன. இப்போதே அதுகுறித்து முடிவு செய்வதற்கில்லை. எங்கள் தரப்பிலிருந்து, கூட்டணி தர்மத்தை மீற மாட்டோம்.
அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்துவிட்டால், உங்களிடமிருந்து ஏதேனும் திட்டத்தை எதிர்பார்க்கலாமா?
நிச்சயமாக. எந்தவொரு அமைப்புமே ஒரு வழிகாட்டுதலோடு, தொலைநோக்கோடு தானே செயல்பட முடியும். அதைப் பற்றி இப்போதே முடிவு செய்வதற்கு ஒன்றும் இல்லை. வெற்றி தான் எங்கள் ஒரே குறிக்கோள். இந்த ஆட்சியை அகற்றுவோம். எங்கள் கூட்டணியை ஜெயிக்க வைப்போம். மற்றதெல்லாம் பிறகு தான். ஊர் கூடி தேர் இழுப்போம். பிரச்னைகளை அதன் பிறகு பேசித் தீர்த்துக் கொள்ளலாம்.
உங்களுடைய பிரசார வியூகம் தான் என்ன?
நிறைய இருக்கிறது. இவர்களின் ஆட்சியில் பிரச்னைக்கா பஞ்சம்? இவர்களது ஊழல் லட்சக்கணக்கான கோடியை எட்டிவிட்டதால், 100, 200 கோடி ஊழல்களை எல்லாம், பத்திரிகைகளே செய்தியாக்குவதில்லை. சென்னையின் புறநகர்ப் பகுதியில் நிலம் வழங்கிய வகையில் 200 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்துள்ளது. அதை யாரும் பெரிதாக்கவில்லை. ஒரு லட்சம் கோடியைக் கேட்ட பிறகு, 200 கோடியெல்லாம் மக்களுக்கே சாதாரணமாகிவிட்டது போல.
மாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி என்றனர். ஆனால், இவர்கள் செய்ததெல்லாம், மாநிலத்தில் சுயமா கொள்ளையடிக்கணும்; மத்தியில கூட்டா கொள்ளையடிக்கணும்கிறது தான்.
பல நல்ல திட்டங்களைச் செய்திருப்பதாகத் தானே தி.மு.க., அரசு சொல்கிறது?
அப்படி செய்திருந்தால் ஏன் காங்கிரசையும், ராமதாசையும் கெஞ்சுகிறீர்கள்; 63 சீட்டுக்காக அடித்துக்கொள்கிறீர்கள்; 121 சீட்டாக குறைத்துக்கொள்கிறீர்கள்? அனைத்து தொகுதிகளிலும் அவர்களே போட்டியிட வேண்டியது தானே! அப்புறம் ஏன், எனக்கு சவால் விட்ட அழகிரி என்னை, "நண்பர் நண்பர்' என்று சொல்லிக் கொண்டிருந்தார். நானும் அவரும் ஒன்றாக கோலி விளையாடினோமா? கிட்டிப்புல் விளையாடினோமா?இவ்வளவு இலவசங்களைத் தருகின்றனரே, எங்காவது விலைவாசி குறைந்திருக்கிறதா? அப்புறம், அதைத் தந்து என்ன புண்ணியம்? கொடுக்கின்ற இலவசங்களும், இவர்கள் வீட்டு சொத்தா, என்ன? எங்கள் வரிப்பணத்தைத் தானே கொடுக்கிறார்? இவர்கள் கட்டித் தந்த இலவச வீடுகள், எப்போது இடிந்து விழுமோ எனத் தெரியாத நிலையில் தான் இருக்கின்றன. அரிசி எதற்காக கொடுத்தனர்? கடத்துவதற்காக. "டிவி' கட்சிக்காரங்களுக்கு கொடுத்தார். ஏழைகளுக்கு கொடுத்த 400 ஏக்கர் இலவச நிலத்தை விற்றுவிட்டதாக, "டிவி'யில் வந்த செய்தி, ஒன்றரை மணி நேரத்தில் நிறுத்தப்பட்டது. இவர்களுடைய வேலையே மிரட்டல் தானே.
நீங்கள் சொல்வது எல்லாமே தி.மு.க., எதிர்ப்பாக இருக்கிறது. அப்படியானால், உங்களுக்கும் காங்கிரசுக்கும்...
ஒண்ணுமே இல்லை. என்ன இருக்கிறது? தாமஸ் நியமனம் பற்றி ஒன்றும் தெரியாது எனச் சொல்லும் பிரதமர் தான் இருக்கிறார். அவருக்கு என்ன தண்டனை கொடுப்பது? இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டதை இவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. தங்கள் இடத்தைத் தக்கவைக்க வேண்டும் என்பதில் தான் கவனம் செலுத்தினர்.
தேர்தலில் பணபலம் எப்படி இருக்கும் என நினைக்கிறீர்கள்?
அதிகமாகத் தான் இருக்கும். ஆனால், இவர்கள் என்ன தான் செய்தாலும் சரி, மக்கள் புரட்சியைத் தடுக்க முடியாது. எகிப்திலும், லிபியாவிலும் ராணுவத்தைக் கொண்டு வந்து நிறுத்தினார்களே? மக்கள் பின்வாங்கினார்களா? பணபலத்தை மக்கள் பலம் தூக்கி எறிந்துவிடும். கரும்புத் தோட்டத்துக்கு யானையைக் காவல் வைத்தது மாதிரி, தமிழகத்தில் கலைஞரை உட்கார வைத்திருக்கிறோம். அவர் அழிக்கத் தான் செய்வார். அவரிடமிருந்து எங்களால் இந்த நாட்டைக் காப்பாற்ற முடியும்.
நீங்கள் 41க்கு 41ஐயும் வென்றுவிட்டால், என்ன செய்வதாக உத்தேசம்?
பொறுத்திருந்து பாருங்கள்.

விஜயகாந்த்நிறுவனர், தேசிய முற்போக்கு திராவிட கழகம்
இயற்பெயர் :விஜயராஜ்
வயது :59
திரை ஆர்வம் :எம்.ஜி.ஆர்., ரசிகர்
முதல் படம் :இனிக்கும் இளமை
மனைவி :பிரேமலதா
குழந்தைகள் :இரண்டு மகன்கள்திருமணத்தை
நடத்தியோர் :கருணாநிதி, மூப்பனார்
நிறுவனர் :தேசிய முற்போக்கு திராவிட கழகம்
துவக்கியது :2005
தேர்தல் அனுபவம்:2006ல் விருத்தாசலத்தில்போட்டியிட்டு வெற்றி.

தினமலர்.

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக