ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:21 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 9:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:13 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 8:38 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:37 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 6:19 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 6:00 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 3:03 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 3:00 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 2:58 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 2:54 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 2:52 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 2:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 12:23 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 11:27 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:36 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 1:06 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 9:47 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 7:18 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 3:12 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:08 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

''இருபது ஆஸ்கராவது வாங்க வேண்டும்!''

Go down

''இருபது ஆஸ்கராவது வாங்க வேண்டும்!''  Empty ''இருபது ஆஸ்கராவது வாங்க வேண்டும்!''

Post by மஞ்சுபாஷிணி Sat Apr 02, 2011 11:40 pm

''இருபது ஆஸ்கராவது வாங்க வேண்டும்!''

''சினிமா பார்க்கிறது ரொம்ப போர் ஆன விஷயமுங்க. முன்னே பின்னே தெரியாத 200 பேரோடு உட்கார்ந்து இரண்டரை மணி நேரம் சினிமா பார்க்கிறதைவிட, அந்த நேரத்தில் உருப்படியா நாலு விஷயம் பண்ணலாமே!'' இப்படி 'அவர்’ சொன்னதும் அதிர்ந்தது திருவண்ணாமலை எஸ்.கே.பி பொறியியல் கல்லூரி கலையரங்கம். அதிர்வேட்டு வசனத் துக்குச் சொந்தக்காரர் யார் என்று தெரிய வேண்டுமா? மேலே படியுங்கள்...

'சங்கமம் 2011’ கைதட்டலும் விசிலும் கலந்துகட்டி களைகட்டிய நிகழ்ச்சி.

முதல் கலக்கலே 'தல - தளபதி’யின் 'சபாஷ் சரியான போட்டி’. 'வஞ்சிக் கோட்டை வாலிபன்’ படத்தில் வைஜெயந்தி மாலாவும் பத்மினியும் 'சாதுர்யம் பேசாதடி’ என்று சலங்கை கட்டி சண்டை கட்டுவார்களே, அதுபோல அஜீத் - விஜய் பாடல்களின் டிஸ்கோ போட்டி. 'தலபோல வருமா?’ என்று அருண், அஜீத் பாடல்களுக்கு நடனம் ஆடினால், 'ஆடுங்கடா என்னைச் சுத்தி’ என்று கழுத்தில் கர்ச்சீப் சுழற்றி, விஜய் டான்ஸ் போட்டார் 'மாணவர்’ விஜய். தல - தளபதி நடனம் சேவல் சண்டையாகச் சீற ஆடுகளம் செம சூடுகளம்!

அடுத்து மாணவி ரம்யா, 'மார்கழித் திங்கள் அல்லவா?’ பாடலுக்கு ரசனையாக ஆட, மயிலிறகு வருடல் சுகத்தில் திளைத்தனர் பார்வையாளர்கள். ரம்யா ஆடி முடித்ததும் அடக்க மாட்டாமல், 'ஒன்ஸ்மோர்’ என்று உற்சாகக் கூக்குரல்கள். மீண்டும் 'மார்கழித் திங்கள்’ மார்கழிப் பனியாக அரங்கம் நனைத்தது. அடுத்து சலங்கையும் காலுமாக சஹானா மேடையில் தோன்ற, 'ஆஹா... இன்னொரு தாம் தீம் தரிகிடவா?’ என்று மாணவர்கள் மத்தியில் சலசலப்பு. ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக, வெஸ்டர்ன் இசை பின்னணியில் ஒலிக்க, பரதம் ஆடத் தொடங்கினார் சஹானா. எதிர்பாராத டிவிஸ்ட்டில்.



அடுத்து மாணவர்களின் தசாவதாரம் ஆரம்பம்! 'கல்லை மட்டும் கண்டால்’ பாடல் தெலுங்கில் ஒலிக்க, கறுப்பு முகம், வெள்ளை பெயின்ட் என கலக்கல் நடனம் ஆடினார்கள் இறுதிஆண்டு மாண வர்கள். 'வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலரவே’ பாடலுக்கு மாணவிகள் ஆட, ஊது பத்தி புகையாக அமைதி யும் இசையும் அரங்கம் நிறைத்தது. இறுதியில் இலங்கை வரைபடத்தைப் பிடித்தபடி சமாதானப் பாடலைத் தொடர, அமைதியின் அடர்த்தி இன்னும் அதிகரித்தது. மீண்டும் மூன்றாவது முறையாக 'மார்கழித் திங்க’ளுக்கு ஆடினார் ரம்யா. ஆனால், இந்த முறை சுடிதார்!

கல்லூரி முதல்வர் செந்தில்குமார் ஆண்டறிக்கை வாசிக்க, சிறப்பு விருந்தினர் இயக்குநர் மிஷ்கினை வரவேற்றுப் பேச எழுந்தார் கல்லூரி சேர்மன் கருணாநிதி. ''சென்ற வாரம்தான் மிஷ்கினைக் கூட்டத்துக்கு அழைத்தேன். ஆனால், எவ்வளவோ வேலைகள் இருந்தும் யோசிக்காமல் ஒப்புக்கொண்டார் மிஷ்கின். நண்பேன்டா!'' என்று கலகலப்பாக கருணாநிதி வரவேற்க, விசிலாலேயே வெற்றிக் குறி காட்டினர் மாணவர்கள்.

இப்போது தெரிந்து இருக்குமே... ஓபனிங்கில் அதிரடி சிக்ஸர் அடித்தது மிஷ்கின்தான் என்று! வழக்கம்போல மிஷ்கினின் பேச்சு காரமும் சூடும் கலந்து கலகலப்பைக் கூட்டியது. ''ஒரு சினிமாவைப் பார்க்கிறதுக்கு முன்னாடி நாலு முறை விசாரித்து விட்டுப் பாருங்க. ஏன்னா நான் உட்பட, தமிழில் யாரும் உண்மையான சினிமா எடுக்கவே ஆரம்பிக்கவில்லை!'' என்ற மிஷ்கின் ''எல்லோரும் 'திங்க் பிக்’னு சொல்வாங்க. என்னைப் பொறுத்தவரை திங்க் யூத். 20 ஆஸ்கராவது வாங்கினால்தான் நான் திருப்தி அடைவேன். நீங்களும் சுலபத்தில் எதிலும் திருப்தி அடையக் கூடாது. இதைப் புரிஞ்சுக்க எனக்கு 15 வருஷம் ஆச்சு. அதிலே எட்டு வருஷம் வீணாவே போச்சு. ஏன்னா, எனக்கு முறையான வழிகாட்டுதல் இல்லை. உங்களுக்கு அந்த வழிகாட்டுதல் கிடைச்சதுக்காக சந்தோஷப்படுங்க!'' என்று, மிஷ்கின் தாராளமாக அளித்த அத்தனையும் தன்னம்பிக்கை டானிக்!

- பா.கந்தகுமார்

நன்றி விகடன்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

''இருபது ஆஸ்கராவது வாங்க வேண்டும்!''  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum