Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிச்சு உதறுமா பிக்ஸல்?
Page 1 of 1
பிச்சு உதறுமா பிக்ஸல்?
பிச்சு உதறுமா பிக்ஸல்?
ஜெனிவா மோட்டார் ஷோ
>>சார்லஸ்
உலகின் மிக பிரம்மாண்டமான ஆட்டோமொபைல் கண்காட்சியான ஜெனிவா மோட்டார் ஷோ, மார்ச் 3-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெற்றது. உலகின் அத்தனை கார் தயாரிப்பாளர்களும் இந்த ஆட்டோ ஷோவுக்காக சுவிட்சர்லாந்து நாட்டில் குவிந்திருந்தனர். ஃபெராரி, லம்போகினி, ஆஸ்டின் மார்ட்டின், ஃபோக்ஸ்வாகன், டொயோட்டா, போர்டு என உலகின் அத்தனை கார் நிறுவனங்களும் இதில் கலந்துகொண்டன. இந்த ஆட்டோ ஷோவில் இந்திய நிறுவனமான டாடாவும் கலந்துகொண்டு அசத்தியது!
டாடா பிக்ஸல்
இந்தியாவில் நானோ என்றால், உலகத்துக்கு 'பிக்ஸல்’ என்கிறது டாடா. நானோவை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டு இருக்கும் பிக்ஸல், ஐரோப்பிய நாடுகளை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. நானோவில் 600 சிசி இன்ஜின் என்றால், பிக்ஸலில் 1.2 லிட்டர் இன்ஜின். மேல்நோக்கித் திறக்கும் சிஸர் டோர், ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், ஸ்பெஷல் டயர்கள் என பல சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கிறது இந்த பிக்ஸல்!
லம்போகினி அவன்டாடெர்
லம்போகினியின் சூப்பர் ஸ்பெஷல் கார் அவன்டாடெர். அடுத்த தலைமுறை அல்ல,
அடுத்த இரண்டு தலைமுறைகளுக்கு அப்பால் வர வேண்டிய கார் என அவன்டாடெரைப் புகழ்கிறது ஆட்டோமொபைல் உலகம். இது லம்போகினி முர்சியலாகோவை விட எடை குறைவாகவும், பவர் அதிகமாகவும், அதிக மைலேஜ் தரும் வகையிலும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. 6.5 லிட்டர் V12 இன்ஜின் கொண்ட அவன்டாடெடர், 691 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. 0-100 கி.மீ வேகத்தை வெறும் இரண்டே விநாடிகளில் கடக்கும் இதன் கட்டுப்படுத்தப்பட்ட டாப் ஸ்பீடு, மணிக்கு 300 கி.மீ. மே மாதம் முதல் இங்கிலாந்தில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த காரின் விலை, இங்கிலாந்தில் இரண்டு கோடி ரூபாய்!
ஃபோர்டு பி-மேக்ஸ்
ஃபோர்டின் புத்தம் புது கான்செப்ட் கார் பி-மேக்ஸ். மினி சைஸ் எஸ்யூவி என்றுதான் இதை ஃபோர்டு அழைக்கிறது. இந்தியா உள்பட, சின்ன கார்களுக்கு மார்க்கெட் அதிகம் உள்ள நாடுகளில் விற்பனை செய்யப்பட இருக்கும் இந்த பி-மேக்ஸ், 1 லிட்டர் இன்ஜினைக் கொண்டிருக்கிறது. ஐந்து பேர் உட்காரும் இடவசதி கொண்ட இந்த காரில் பல நவீன வசதிகளையும் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது ஃபோர்டு!
நிஸான் எஸ்ஃப்லோ
நிஸானின் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கான்செப்ட் கார். லித்தியம் ஐயான் பேட்டரிகளைக் கொண்ட இரண்டு எலெக்ட்ரிக் மோட்டர்களை இதயமாகக் கொண்டிருக்கிறது எஸ்ஃப்லோ. 'ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 கி.மீ தூரம் பயணிக்க முடியும் என்பதோடு, இது 0-100 கி.மீ வேகத்தை ஐந்து விநாடிகளில் கடந்துவிடும்’ என்கிறது நிஸான்.
ஃபெராரி திதி
ஃபெராரி தனது FF மாடல் காரை ஜெனிவாவில் காட்சிக்கு வைத்திருந்தது. 6.25 லிட்டர், V12 இன்ஜினைக் கொண்ட FF கார், அதிகபட்சமாக 8000 ஆர்பிஎம்-ல் 650 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. '7-ஸ்பீடு டபுள் ஆட்டோ கிளட்ச் கியர் பாக்ஸைக் கொண்ட இது, 0-100 கி.மீ வேகத்தை 3.7 விநாடிகளில் கடந்துவிடும்’ என்கிறது ஃபெராரி. விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த ஃபெராரியை, இந்தியாவுக்குள் கொண்டு வர கிட்டத்தட்ட 6 கோடி ரூபாய் செலவாகும்!
ஹூண்டாய் வெலாஸ்ட்டர்
காரை ஓட்டுபவர் பக்கம் ஒரு கதவு, மற்றொரு பக்கம் இரண்டு கதவுகள் என புத்தம் புது கான்செப்ட்டுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது ஹூண்டாய் வெலாஸ்ட்டர். 1.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் வெலாஸ்ட்டர் ஐரோப்பிய நாடுகளில் விற்பனைக்கு வரும் என தெரிவித்திருக்கிறது ஹூண்டாய். இதன் அதிகபட்ச சக்தி 140 bhp. ஹூண்டாய் வெலாஸ்ட்டரை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான எந்தத் திட்டமும் இப்போதைக்கு இல்லை என்று தெரிவித்திருக்கும் ஹூண்டாய், இந்த காரை அடுத்த ஆண்டு டெல்லியில் நடைபெற இருக்கும் ஆட்டோ ஷோவில் காட்சிக்கு வைக்க இருக்கிறது.
கியா பிக்கான்ட்டோ
இந்தியாவில் ஹூண்டாய் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய சின்ன காரான கியா பிக்கான்டோ, ஜெனிவாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. தோற்றத்தில் மட்டும்தான் இந்த கார் இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் காரைப் போலவே இருக்கும். மற்றபடி இன்ஜின், சிறப்பம்சங்கள் ஆகியவற்றில் இரண்டு கார்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கியா பிக்கான்ட்டோ, 1 லிட்டர் 68 தீலீஜீ இன்ஜினுடன் வெளிவர இருக்கிறது. பிக்கான்ட்டோ மைலேஜில் புதிய சாதனைகளைப் படைக்கும் என்கிறது ஹூண்டாய்.
மிட்சுபிஷியின் சின்ன கார்
இந்தியா உள்பட ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அடுத்த ஆண்டு இறுதியில் மிட்சுபிஷி அறிமுகப்படுத்த இருக்கும் சின்ன காரை ஜெனிவாவில் அறிமுகம் செய்தது. ஐந்து பேர் தாராளமாக உட்கார்ந்து பயணிக்கக்கூடிய இடவசதியுடன் இது வடிவமைக்கப் பட்டுள்ளது. 1 மற்றும் 1.2 லிட்டர் இன்ஜினுடன் அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த கார், அடுத்த ஆண்டு மார்ச் - ஏப்ரல் மாதவாக்கில் தாய்லாந்தில் தயாரிக்கப்பட இருக்கிறது.
மஸராட்டி கிரான்கேப்ரியோ ஸ்போர்ட்
ஃபெராரி, லம்போகினி கார்களுக்குப் போட்டியாக, மஸராட்டி அறிமுகப்படுத்தியிருக்கும் லேட்டஸ்ட் ஸ்போர்ட்ஸ் கார்தான் கிரான்கேப்ரியோ ஸ்போர்ட். 4.7 லிட்டர் V8 இன்ஜின் கொண்ட கிரான்கேப்ரியோ 442 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட இது, 0-100 கி.மீ வேகத்தை மூன்றரை விநாடிகளில் கடக்கும் என்கிறது மஸராட்டி.
நன்றி விகடன்

என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Similar topics
» 41 மெகா பிக்ஸல் கேமராவுடன் வாய் பிளக்க வைக்கும் நோக்கியா ஸ்மார்ட்போன்!
» மச்சு பிச்சு
» உலக அதிசயங்களில் ஒன்று -மச்சு பிச்சு
» பிச்சு மணி சொல்வது தான் என்ன - ப்ரியா
» உலக அதிசயங்கள் 5. மாச்சு பிச்சு குஸ்கோ, பெரு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum