ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காவிரிக் கரையில்... ஆதிரங்கன்!

2 posters

Go down

காவிரிக் கரையில்... ஆதிரங்கன்!  Empty காவிரிக் கரையில்... ஆதிரங்கன்!

Post by மஞ்சுபாஷிணி Sat Apr 02, 2011 9:08 pm

காவிரிக் கரையில்... ஆதிரங்கன்!

கங்கை நதிக்கரையில் மூன்று நாட்கள் மற்றும் யமுனை நதிக்கரையில் ஐந்து நாட்கள் தங்கியிருந்தால் கிடைக்கிற பலனைவிட, காவிரி நதியில் ஒரேயரு முழுக்குப் போட்டால், பலமடங்கு பலன் கிடைக்கும்; நம் பாவங்கள் யாவும் பறந்தோடிவிடும் என்கிறது சாஸ்திரம்! அதுமட்டுமா? காவிரி நீரில் பட்டு வருகிற காற்றானது, நம் உடலில் பட்டாலே மோட்சம் உறுதி எனப் போற்றுகிறது. 'நம்மால் ஆற்றில் இறங்கமுடியாதே... அட, பக்கத்தில்கூடப் போவது கஷ்டமாயிற்றே!’ என்று தள்ளி நின்று காவிரியைப் பார்ப்பவரா, நீங்கள்?! கவலை வேண்டாம்... அதுவே புண்ணியம் தரும் என்கின்றனர் சான்றோர்கள்.

கர்நாடக மாநிலத்தில், காவிரி பாய்ந்தோடுகிற அந்தத் தலத்தை கௌதம க்ஷேத்திரம், ஸ்ரீரங்கப்பட்டினம் எனப் பெருமிதத்துடன் சொல்கின்றனர் வைஷ்ணவப் பெருமக்கள். இங்கே, ஆதிசேஷன்மீது பள்ளிகொண்டபடி சேவை சாதிக்கிறார் ஸ்ரீரங்கநாத பெருமாள்.

கந்தர்வ மன்னர்களான சித்திரசேனன், திச்திரரதன் என்போர், இந்திரனின் மனைவியான சசிதேவியின்மீது தவறான ஆசை கொண்டனர். இதையறிந்த இந்திரன் கோபம் கொண்டு அவர்களைச் சபித்து, ராட்சசர்கள் ஆக்கினான். அதையடுத்து, அவர்கள் ஸ்ரீரங்கப்பட்டினம் வந்து, துலா மாதத்தின் பௌர்ணமி தினத்தில், காவிரியில் நீராடி, அரங்கனைத் தரிசித்தனர். அவ்வளவுதான்... அவர்கள் பாவங்கள் நீங்கி, சுய உருவம் பெற்று, தேவலோகம் சேர்ந்தனர்.

ஸ்ரீரங்கப்பட்டினத்தில் ஸ்ரீஆதிரங்கநாதர், ஷிவண சமுத்திரத்தில் மத்திய ரங்கநாதர், திருச்சி ஸ்ரீரங்கத்தில் அந்திய ரங்கநாதர் ஆகியோர் குடிகொண்டிருக்கும் கோயில் களுக்கு இரண்டு சிறப்புகள், ஒற்றுமைகள்... மூன்று தலங்களும் காவிரியை ஒட்டியே அமைந்துள்ளன. அடுத்து... மூன்று தலங்களின் மூர்த்தங்களும் சுயம்புவாகத் தோன்றியவை!

திருமாலை எண்ணித் தவமிருந்தாள் காவிரிதேவி. அவளது தவத்தில் மகிழ்ந்த பெருமாள், 'கங்கையைவிட காவிரி நதி, புனிதத் தன்மை கொண்டதாகட்டும்; இந்தத் தலம் (ஸ்ரீரங்கப்பட்டினம்) புண்ணிய க்ஷேத்திரமாகட்டும்’ என வரம் தந்தருளினார். பிறகு, காவிரிதேவி கேட்டுக் கொண்டபடி, அந்தத் தலத்திலேயே இருந்து பக்தர்களுக்கு அருள்மழை பொழியச் சம்மதித்தார், அரங்கன். அதன்படி, ஆதிசேஷனில் சயனித்த திருக்கோலத்தில் அங்கே சுயம்புவாகத் தோன்றினாராம், பெருமாள். அதைக் கண்ட ஸ்ரீலட்சுமி, காவிரிதேவியுடன் இறைவனை வழி பட்டு, அங்கேயே குடிகொண்டாள் என்கிறது ஸ்தல புராணம்.

ஒருகாலத்தில், கடும் பஞ்சம் ஏற்பட... நித்தியப்படி அனுஷ்டானங்களைச் செய்யக்கூடத் தண்ணீரின்றி அவதிப்பட்டனர் முனிவர் பெருமக்கள். அப்போது கோதாவரி நதிக்கரையில் ஆஸ்ரமம் அமைத்து வசித்து வந்த கௌதமர், முனிவர்களை வரவேற்று, விருந்தளித்தார். அவரைக் கண்டு பொறாமைப்பட்ட முனிவர்கள் ஒன்று சேர்ந்து, அவரை அங்கிருந்து விரட்டிவிட்டு, அங்கேயே தங்கிவிடத் தீர்மானித்தனர். மாயப்பசு ஒன்றை உருவாக்கி, கௌதம முனிவரின் வயல்வெளியில் மேயவிட்டனர். அதைக் கண்ட கௌதம முனிவர், பசுவை விரட்டும்படி சீடர்களுக்கு உத்தரவிட்டனர். அதையடுத்து அந்தப் பசு, கௌதமரை நோக்கி ஓடி வந்தது; அவர் காலடிக்கு வந்த தும், அப்படியே உயிரை விட்டது. அங்கேயிருந்த முனிவர் கூட்டம், 'கௌதமர் பசுவைக் கொன்றுவிட்டார்’ எனக் கூச்சலிட்டனர். பிறகு, இவை அனைத்தும் முனிவர் களின் செயல் என அறிந்த கௌதமர், கடும் கோபம் கொண்டார்; அவர்களைச் சபித்தார்.

அதன் பின்னர், யாத்திரை புறப்பட்ட கௌதமர், ஸ்ரீரங்கத்தை அடைந்தார்; பெருமாளைத் தியானித்தார். அவருக்கு திருக்காட்சி தந்த திருமால், 'விபீஷண ஆழ்வார் எனக்கு பணிவிடை செய்த புண்ணிய க்ஷேத்திரத்துக்குச் செல்வாயாக!’ என அருளினார். அதன்படி, தனது சீடர் பெருமக்களுடன் ஸ்ரீரங்கப்பட்டினத்துக்கு வந்தவர், அங்கே காவிரி நதிக்கரையில் கடும் தவம் புரிந்தார்; யாகங்கள் மேற்கொண்டார். அவருக்குக் காட்சி தந்த பெருமாள், 'இனி இந்த இடம் கௌதம க்ஷேத்திரம் என்று பெயர் பெறும்; ஆலயம் பிரம்மானந்த விமானம் கொண்ட திருச்சந்நிதியுடன் திகழும்’ என ஆசீர்வதித்தார். பிறகு, நாரதரிடம் பாஞ்சராத்ர வழிமுறைகளை அறிந்துகொண்டு, எம்பெருமாளை வழிபட்டார், கௌதமர். அப்படி அவர் வழிபட்ட புண்ணிய நாள், 'ஸ்ரீரங்க ஜயந்தி’ என விமரிசை யாக இன்றைக்கும் கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீரங்கநாதர் கோயிலின் உட்பகுதி, கி.பி.817-ல், தாசி குலப் பெண்மணியான ஹம்பி என்பவளாலும், நவரங்க மண்டபம் மற்றும் ஸ்ரீநிவாச பெருமாள் சந்நிதி மகாத்துவாரத்தின் இடப் பாகமாக ஓர் ஆலயம் (கி.பி.894-ல்) ஸ்ரீரங்கப்பட்டினத்தை ஆட்சி செய்த கங்கை வம்சத்தில் வந்த திருமாலையா என்பவராலும் கட்டப்பட்டதாம். கி.பி.1117-ல், திருச்சி ஸ்ரீரங்கத் திலிருந்து, அதாவது சோழ தேசத்தில் இருந்து அங்கே வந்தார் ஸ்ரீராமானுஜர். அப்போது ஆட்சியில் இருந்த, ஹொய்சாள பட்டிதேவன் என்பவன், சமணத்தைச் சேர்ந்தவனாக இருந்தான். அவனைத் தனது பக்தியாலும் சாதுர்யத்தாலும் வென்று, வைஷ்ணவனாக்கி, விஷ்ணுவர்த்தன நாராயணன் எனும் திருநாமமும் சூட்டினார், ராமானுஜர். அதில் மகிழ்ந்து நெகிழ்ந்த மன்னன், எட்டு கிராமங்களையும் ஏராளமான செல்வங் களையும் தானமாக வழங்கினான். அவற்றைக் கொண்டு, சிறப்பானதொரு கைங்கர்யத்தைச் செய்து, ஆலயத்தை நிர்வகிப்பதற்கு உரிய நபர்களையும் நியமித்தார், ராமானுஜர்.

ஸ்ரீநிவாச பெருமாள், ஸ்ரீஆஞ்சநேயர், கருடாழ்வார், ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள் முதலானோருக்கு சந்நிதிகள் இங்கு உள்ளன. மகாவிஷ்ணுவின் 24 திருக்கோலங்கள், அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் திகழ்கின்றன.

'பூவுலகில், இந்தத் தலத்துக்கு நிகரான க்ஷேத்திரம் எதுவுமில்லை’ என பிரம்மதேவர், நாரத மாமுனிக்கு அருளியதாகச் சொல்கிறது புராணம். அப்பேர்ப்பட்ட ஆலயத்தையும் அங்கே குடிகொண்டிருக்கிற ரங்கநாதரையும் நீங்களும் தரிசிக்க வேண்டாமா?!


நன்றி விகடன்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காவிரிக் கரையில்... ஆதிரங்கன்!  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

காவிரிக் கரையில்... ஆதிரங்கன்!  Empty Re: காவிரிக் கரையில்... ஆதிரங்கன்!

Post by அமுத வர்ஷிணி Sat Apr 02, 2011 9:16 pm

அருமையான தகவல்.
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down

காவிரிக் கரையில்... ஆதிரங்கன்!  Empty Re: காவிரிக் கரையில்... ஆதிரங்கன்!

Post by மஞ்சுபாஷிணி Sat Apr 02, 2011 9:17 pm

நன்றி


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காவிரிக் கரையில்... ஆதிரங்கன்!  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

காவிரிக் கரையில்... ஆதிரங்கன்!  Empty Re: காவிரிக் கரையில்... ஆதிரங்கன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum