ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பப்ளிக்குட்டி... ஐஸ் கட்டி !

Go down

பப்ளிக்குட்டி... ஐஸ் கட்டி !  Empty பப்ளிக்குட்டி... ஐஸ் கட்டி !

Post by மஞ்சுபாஷிணி Sat Apr 02, 2011 8:11 pm

பப்ளிக்குட்டி... ஐஸ் கட்டி !

டாக்டர்களின் கோடைக்கால குளுகுளு டிப்ஸ்

''கடந்த ஆண்டில் 7 வயது சிறுவன் ஒருவனை என்னிடம் அழைத்து வந்தார்கள். கால்களில் இருந்த பித்தவெடிப்பால் நிற்கக்கூட முடியாமல் அந்த சிறுவன் தள்ளாடினான். ஒருகட்டத்தில் தலைவலியும் தாக்க... கண்கள் செருகிய நிலையில் சோர்ந்து விழுந்துவிட்டான்.

அவனுக்கு அப்படி என்ன பிரச்னை?

எல்லாம் கோடை வெப்பத்தின் கொடூர தாக்குதல்தான்''

- டாக்டர் ரமா சந்திரமோகன் சொல்வதைக் கேட்கும்போதே, நமக்கு படபடப்பு எகிறுகிறது... 'வெயிலுக்கு இத்தனை உக்கிரமா?' என்று!

''பின்னே, கோடை வெயில் என்றால் சும்மாவா?'' என்று சொல்லிவிட்டு தொடர்ந்த டாக்டர்,

''கோடையின் தாக்கம் அவனை அந்த அளவுக்கு துவளச் செய்து, உடம்பிலிருந்து வியர்வை அதிகமாக வெளியேறியதால், நீர்ச்சத்து குறைந்து போய்விட்டது. உடனடியாக எக்ஸ்ட்ரா ஃப்ளூயட் கொடுத்தோம்.

உடம்பு கூலானதும் சட்டென நார்மலுக்கு வந்தான் அந்தச் சிறுவன். அரை மணி நேரம் தாமதமாக வந்திருந்தாலும், அவனுடைய நிலை கவலைக் கிடமாகி இருக்கும். காலையில் கிரிக்கெட் ஆடப்போன அந்த சிறுவன், சரிவரத் தண்ணீர் குடிக்காததும்... வெயிலில் அலைந்ததால் உடம்பில் நீர்ச்சத்து குறைந்ததும்தான் மயக்க நிலைக்கு அவனைத் தள்ளி இருக்கிறது.

இப்படிச் சிறுவர்கள் இஷ்டம் போல வெயிலில் அலைவதைக் கண்டுகொள்ளாத பெற்றோர், பிரச்னை என்றதும் பதறிக் கொண்டு ஓடிவருவது வாடிக்கை யாக இருக்கிறது. தன் பிள்ளை எல்லாவற்றிலும் முதலாவதாக வரவேண்டும் என்று சம்மர் கோச் சிங் கிளாஸ்களில் சேர்த்து விட்டு, தங்களின் விருப்பத்தை எல்லாம் பிள்ளைகளிடம் திணிக்கின்றனர். அவர்களது உடல்நிலை, ஆசை, கனவுகளைத் தெரிந்துகொள்வதில்லை. டான்ஸ், யோகா, உடற்பயிற்சி, ஸ்போர்ட்ஸ் என உடம்பை வருத்தி வெயிலில் அலைந்துவிட்டு வரும் குழந்தைகளுக்கு, சத்தான ஆகாரத்துடன், அதிக நீர்ச்சத்து நிறைந்த காய்கறி, பழங்களைத் தரவேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. சில குழந்தைகள் சாப்பிடவே பிடிக்காமல், எங்கே தண்ணீர் கிடைத்தாலும் குடித்துவிடுகின்றனர். நீரைக் காய்ச்சி குடிக்காதபோது அதன் மூலமாகவே நிறைய நோய்கள் தாக்கும் வாய்ப்பு இருக்கிறது!'' எனச் சொல்லும் டாக்டர் ரமா சந்திரமோகன், குழந்தைகளுக்கான இதர பாதிப்புகளையும் பராமரிப்புகளையும் பட்டியல் போட்டார்...

பிறந்த குழந்தைகளுக்கு உடம்பு அதிகம் சூடாகிவிடும். உடனடியாக உடல் உஷ்ணத்தைக் குறைக்க, துணியைத் தண்ணீரில் நனைத்துப் பிழிந்து உடம்பைத் துடைத்து நல்ல காற்றோட்டத்தில் படுக்க வைக்கலாம். சூடு மிகவும் அதிகமானால் ஃபிட்ஸ் வரவும் வாய்ப்பு இருக்கிறது. அதனால், உடனே டாக்டரிடம் காண்பிக்க வேண்டும்.

வியர்வை வெளியேறுவதால், உடம்பில் உப்புச்சத்து அதிகமாக இழக்க நேரிடும். இதனால் சன் ஸ்ட்ரோக் வரும். பித்தவெடிப்பு, வியர்க்குரு அதிகமாகும். இதற்காக பயன்படுத்தப்படும் பவுடர்கள், அரிப்பைக் குறைக்குமே தவிர, நிரந்தரத் தீர்வைத் தராது. வியர்வையால் தோல் துவாரங்களில் அடைப்பு ஏற்பட்டு, உடம்பில் அழுக்கு சேரும். சின்ன குழந்தைகளைத் தினமும் குளிப்பாட்ட வேண்டும். பள்ளி செல்லும் குழந்தைகளைப் பச்சை தண்ணீரில் இரண்டு முறை குளிப்பாட்ட வேண்டும். நல்ல காட்டன் துணியில் துடைக்க வேண்டும்.

மசாலா, காரம், பொரித்த உணவுகளைத் தள்ளி வைத்து விடுங்கள். இவையெல்லாம் உடல் உஷ்ணத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும்.

இந்த வெயில் குழந்தைகளை மட்டுமல்ல... வயிற்றில் குழந்தை சுமக்கும் பெண்களையும் படாத பாடு படுத்திவிடும் என்பது நாமறிந்ததுதானே! அவர்களுக்கான ஆலோசனை களை பேசுகிறார் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீகலா பிரசாத்...

''சமீபத்தில் ஆறு மாத கர்ப்பிணிப் பெண்ணை என்னிடம் அழைத்துக்கொண்டு வந்தார்கள். கணவர், மாமியார், மாமனார் என திரண்டு வந்திருந்த உறவினர்கள், 'எங்க மருமகளுக்கு இதுதான் தலைப்பிரசவம். துணிமணி எடுக்கப் போனப்ப, வாந்தி எடுத்து மயங்கி விழுந்திட்டா’ என்றனர் பதற்றத்துடன். 'ஏம்மா, வெயில்ல கர்ப்பிணியைக் கூட்டிட்டுப் போலாமா?’ என்று நான் கேட்டதும், 'காரிலும் கடையிலும் ஏ.சி இருக்கிறது. இதுல எங்கே இருந்து வெயில் தொந்தரவு?’ எனக் கேட்டார்கள் அவர்கள்.

பொதுவாக கடைகளில், ஏ.சி இருந்தாலும் அது நெரிசல் அதிகமாக இருக்கும்போது உடம்பை உஷ்ணப்படுத்தவே செய்யும். போதிய வெண்டிலேஷனும் இருக்காது. சுற்றுச்சூழல், வியர்வை கசகசப்பு, அலைச்சல் இவைதான் அந்தப் பெண் மயங்கி விழுந்ததற்குக் காரணம். ரத்த அழுத்தம், அதிக நீர் இழப்பு, வாமிட் இருந்ததால்

நல்ல எனர்ஜியை தரக்கூடிய சிகிச்சையை (Highly fluid treatment)மேற்கொள்ள வேண்டிஇருந்தது!'' எனச் சொல்லும் டாக்டர் ஸ்ரீகலா பிரசாத், கர்ப்பிணிகளை வெயிலில் இருந்து காப்பதற்கான டிப்ஸ்களை சொல்கிறார்.

கர்ப்பிணிப் பெண்கள் வெளியே போகவேண்டிய அவசியம் இருந்தால், கையில் குடை, மஃப்ளர், தண்ணீர் பாட்டில், உப்பு கலந்த மோர் எடுத்துச் செல்ல வேண்டும். இளநீர், ஜூஸ் குடிக்கலாம்.

தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். இதனால் யூரினரி இன்ஃபெக்ஷன் ஏற்படாமல் இருக்கும்.

தலைக்குக் குளித்தவுடன் நன்றாகத் துவட்டவேண்டும்.

உள் பாவாடை, ஜட்டி, எலாஸ்டிக் வைத்த பிரா இவற்றை இறுக்கமாக அணிவதால், அந்த இடத்தில் வியர்வை உறிஞ்சப் படாமல்... ஃபங்கஸ், இன்பெக்ஷன் ஏற்படும். தரமான காட்டன் மட்டுமே தேர்ந்தெடுங்கள். சாதாரண சோப்பு போட்டே குளிக்கலாம். தினமும் இரண்டு வேளை குளித்தாலே தோல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வராமல் இருக்கும்.

-நன்றி விகடன்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பப்ளிக்குட்டி... ஐஸ் கட்டி !  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பப்ளிக்குட்டி... ஐஸ் கட்டி !  Empty Re: பப்ளிக்குட்டி... ஐஸ் கட்டி !

Post by மஞ்சுபாஷிணி Sat Apr 02, 2011 8:11 pm

வெயிலால் முதியோருக்கு ஏற்படும் பாதிப்புகள், தீர்வுகள் குறித்து பேசுகிறார் முதியோர் மருத்துவ நிபுணர் டாக்டர் வி.எஸ். நடராஜன்...

''கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் சென்றுவிட, அந்த 75 வயது முதியவர், காலையில் சாப்பிட்டதுடன், மதியம் சாப்பிடாமல் இருந்திருக்கிறார். இரவு சாப்பிடப் பிடிக்காமல், தூக்கமின்றி தவித்திருக்கிறார். தந்தையின் நிலையைப் பார்த்து தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைத்திருக்கிறார் மகள். காலையில் அந்த முதியவரால் எழுந்திருக்கக்கூட முடியாமல் போயிருக்கிறது. நடையில் தள்ளாட்டமும், பேச்சில் தடுமாற்றமுமாக இருந்தவரை என்னிடம் அழைத்து வந்தனர்.

பி.பி., சுகர் எல்லாமே நார்மல். அவர்கள் வசிப்பது மாடி போர்ஷன். அதற்கு மேல் மொட்டை மாடி என்பதால், வீட்டுக்குள் நேரடியாக வெயில் உஷ்ணம் அவரைத் தாக்கியிருக்கிறது. தண்ணீரும் குடிக்காமல், சாப்பிடாமல் சோர்ந்துபோய் இருந்தவருக்கு, தூக்க மாத்திரை கொடுத்ததால் இன்னும் நிலைமை மோசமாகிவிட்டது. கொஞ்சம் தாமதமாக வந்திருந்தால்கூட, கோமா நிலைக்கு போயிருப்பார்!'' எனச் சொன்னவர் அத்தகைய பாதிப்புகளைத் தவிர்ப்பதற்காக தந்த குறிப்புகள்-

வயதான சிலருக்கு பசி, ருசி, தாக உணர்ச்சிகூட குறைந்துவிடும். இதனால் தண்ணீரே குடிக்காமல் இருந்துவிடுவார்கள். தண்ணீர் அருந்தினால் யூரின் போகும் என்பதால், 'பாத்ரூம் வராதவரைக்கும் நிம்மதி’ என்று இருந்துவிடுவார்கள். இதனால் யூரினரி பிராப்ளம், நீர் இழப்பு என அதிக பாதிப்பை ஏற்படுத்திவிடும். தாகம் எடுத்தால்தான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றில்லாமல், கண்டிப்பாக காலை முதல் இரவு வரை 2 பாட்டில் தண்ணீர் அருந்துங்கள்.

சிலர் பேசிக் கொண்டிருக்கும்போதே திடீரென்று மனக்குழப்பத்துக்கு ஆளாகி, பேச்சு எங்கோ திசை திரும்பிவிடும். தண்ணீர், எலுமிச்சை ஜூஸ், உப்பு கலந்த மோர் 2 டம்ளர் கொடுத்தாலே அது நார்மலாகிவிடும்.

கையில் எப்போதும் ஒரு எலுமிச்சம்பழத்தை வைத்திருங்கள். தர்பூசணி, ஆரஞ்சு ஜூஸ், கிர்ணி, இளநீர் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

திரவ உணவை உட்கொள்வது நல்லது. ஏ.சி இருந் தால் வியர்க்காமல் இருக்கும். மேலும் காலை 10 முதல் மாலை 5 வரை வெளியில் போவதைத் தவிர்ப்பது நல்லது.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பப்ளிக்குட்டி... ஐஸ் கட்டி !  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum