புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தள்ளிப்போகுமா தேர்தல்? Poll_c10தள்ளிப்போகுமா தேர்தல்? Poll_m10தள்ளிப்போகுமா தேர்தல்? Poll_c10 
90 Posts - 77%
heezulia
தள்ளிப்போகுமா தேர்தல்? Poll_c10தள்ளிப்போகுமா தேர்தல்? Poll_m10தள்ளிப்போகுமா தேர்தல்? Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
தள்ளிப்போகுமா தேர்தல்? Poll_c10தள்ளிப்போகுமா தேர்தல்? Poll_m10தள்ளிப்போகுமா தேர்தல்? Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
தள்ளிப்போகுமா தேர்தல்? Poll_c10தள்ளிப்போகுமா தேர்தல்? Poll_m10தள்ளிப்போகுமா தேர்தல்? Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
தள்ளிப்போகுமா தேர்தல்? Poll_c10தள்ளிப்போகுமா தேர்தல்? Poll_m10தள்ளிப்போகுமா தேர்தல்? Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தள்ளிப்போகுமா தேர்தல்? Poll_c10தள்ளிப்போகுமா தேர்தல்? Poll_m10தள்ளிப்போகுமா தேர்தல்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தள்ளிப்போகுமா தேர்தல்? Poll_c10தள்ளிப்போகுமா தேர்தல்? Poll_m10தள்ளிப்போகுமா தேர்தல்? Poll_c10 
255 Posts - 77%
heezulia
தள்ளிப்போகுமா தேர்தல்? Poll_c10தள்ளிப்போகுமா தேர்தல்? Poll_m10தள்ளிப்போகுமா தேர்தல்? Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
தள்ளிப்போகுமா தேர்தல்? Poll_c10தள்ளிப்போகுமா தேர்தல்? Poll_m10தள்ளிப்போகுமா தேர்தல்? Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
தள்ளிப்போகுமா தேர்தல்? Poll_c10தள்ளிப்போகுமா தேர்தல்? Poll_m10தள்ளிப்போகுமா தேர்தல்? Poll_c10 
8 Posts - 2%
prajai
தள்ளிப்போகுமா தேர்தல்? Poll_c10தள்ளிப்போகுமா தேர்தல்? Poll_m10தள்ளிப்போகுமா தேர்தல்? Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
தள்ளிப்போகுமா தேர்தல்? Poll_c10தள்ளிப்போகுமா தேர்தல்? Poll_m10தள்ளிப்போகுமா தேர்தல்? Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
தள்ளிப்போகுமா தேர்தல்? Poll_c10தள்ளிப்போகுமா தேர்தல்? Poll_m10தள்ளிப்போகுமா தேர்தல்? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தள்ளிப்போகுமா தேர்தல்? Poll_c10தள்ளிப்போகுமா தேர்தல்? Poll_m10தள்ளிப்போகுமா தேர்தல்? Poll_c10 
3 Posts - 1%
Barushree
தள்ளிப்போகுமா தேர்தல்? Poll_c10தள்ளிப்போகுமா தேர்தல்? Poll_m10தள்ளிப்போகுமா தேர்தல்? Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தள்ளிப்போகுமா தேர்தல்? Poll_c10தள்ளிப்போகுமா தேர்தல்? Poll_m10தள்ளிப்போகுமா தேர்தல்? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தள்ளிப்போகுமா தேர்தல்?


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 02, 2011 6:11 pm

தள்ளிப்போகுமா தேர்தல்?

கொடுக்கத் துடிக்கும் கட்சிகள்.. தடுக்க நினைக்கும் ஆணையம்!
''எப்போதும்போல இந்தப் பாம்பு சும்மா சீறிட்டு, ஸீன் காட்டிட்டுப்

போயிரும்னு இருந்தோம். ஆனா, இப்ப நடக்குறதைப் பார்த்தா... ஆளைக் கொத்தாம விடாது போலிருக்கே!'' - தேர்தல் ஆணையத்தின் அதிரடி காரணமாக, 'இருப்பை’ எடுக்க முடியாமல், கதிகலங்கிக் கிடக்கும் அரசியல்வாதிகள் இப்படித்தான் புலம்புகிறார்கள்!
திருமங்கலம் இடைத் தேர்தலின்போது ஒவ்வொரு 100 ஓட்டுகளுக்கும் மூன்று பொறுப்பாளர்களை நியமித்து அவர்களுக்கான 'தேவைகளை’க் கவனித்து, அவர்களை வாக்களிக்கவைக்கும் பொறுப்பு அந்த மூவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த கெமிஸ்ட்ரி ஒர்க்-அவுட் ஆனதால், நாடாளுமன்றத் தேர்தலிலும் சில தொகுதிகளில் அதே ஃபார்முலாவைக் கையாண்டார்கள். இந்தத் தேர்தலில் மாநிலத்தின் பெருவாரியான தொகுதிகளில் இந்த சிஸ்டம் அமலாகி இருக்கிறது, ஆனாலும், திட்டமிட்டபடி பட்டுவாடாவைத் தொடங்க முடியாமல் பரிதவிக்கிறார்கள் வேட்பாளர்கள். காரணம், தேர்தல் கமிஷனின் கெடுபிடிகள்.

இந்தத் தேர்தல் தங்களுக்கு வாழ்வா... சாவா பிரச்னை என்பதால், என்ன வந்தாலும் சரி, எப்படியும் ஏப்ரல் 7-ம் தேதியில் இருந்து 11-ம் தேதிக்குள் பட்டுவாடாக்களை முடிக்க வேண்டும் என்று உத்தரவுகள் பறக்கின்றன. இதனால், அடுத்து வரும் நாட்களில் இன்னும் பதற்றமான சூழ்நிலைகளையும் பகீர் புகார்களையும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது தேர்தல் ஆணையம்.
''தேர்தல் ஆணையம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஏன் இவ்வளவு கெடுபிடிகளைக் காட்டுகிறது?'' என்று தென் மாவட்டத்தில் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட 'சர்வேலன்ஸ் டீம்’ (விதிமீறல்கள் கண்காணிப்பு குழு) அதிகாரி ஒருவரிடம் கேட்டோம். ''வீட்டுக்கு 2,000, ஓட்டுக்கு 1,000, ரேஷன் கார்டுக்கு 5,000, என ஏரியாவுக்கு ஏற்ப பணம் கொடுத்து வாக்காளர்களை வளைக்கத் திட்டம் போடுகிறார்கள். இது தெரிந்துதான் வாகன சோதனைகளைத் தீவிரப்படுத்தினோம். இதனால் சுதாரித்துக்கொண்டவர்கள், நாங்கள் எதிர்பார்க்காத வழிகளில் வண்டி வண்டியாகப் பணத்தைக் கொண்டுவந்து ஆங்காங்கே ஸ்டோர் பண்ணிவிட்டார்கள். ரயில் பார்சல்கள் மற்றும் டேங்கர் லாரிகள் மூலமாக பணம் டிரான்ஸ்ஃபர் ஆகியிருக்கலாம் என்று நாங்கள் சந்தேகப்படுகிறோம்.
தொகுதிகளுக்குக் கொண்டுசெல்லப்பட்ட பணம் எதுவும் அரசியல்வாதிகள் பொறுப்பில் இல்லை. அவர்களுக்கு நெருக்கமான மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள், ஷாப்பிங் மால்களில் பிரித்துப் பிரித்துப் பதுக்கிவைக்கப்பட்டு இருப்பதாகத் தகவல்கள். இன்னொன்றைச் சொன்னால்... அதிர்ச்சியடைவீர்கள். தென் மாவட்டத்தின் முக்கிய நகரத்தில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் போலீஸ் அதிகாரிகள் சிலரது கஸ்டடியில்தான் பெரும் தொகை இருக்கிறது. முக்கியமான சில இடங்களுக்கு அவர்களே பணத்தைக் கொண்டுசெல்லவும் உதவி செய்து இருக்கிறார்கள். மாவட்டத் தேர்தல் அதிகாரிகளான தென் மாவட்ட கலெக்டர்கள் சிலர், தங்களுடைய காரிலேயே பணத்தைக் கொண்டுபோய் வேட்பாளர்களிடம் கொடுத்து, அதிகாலை 6 மணிக்குள் பட்டுவாடாக்களை முடிக்கச் சொல்லி ஐடியாவும் கொடுத்து இருக்கிறார்கள். பெண் அமைச்சர் ஒருவர் போட்டியிடும் தொகுதிக்கு கடந்த வாரம் 2 கோடி போயிருக்கிறது. அந்தப் பணத்தை போலீஸ் வண்டியில் கொண்டு போன நாலு போலீஸ்காரங்களுக்கு தலா 20 ஆயிரம் கொடுத்து இருக்கிறார்கள். ஆம்புலன்ஸ்களில் பணம் போனதும் உண்மை. அதைத் தடுக்கத்தான், 108 ஆம்புலன்ஸ் எங்கு சென்றாலும் எங்களுக்கும் தகவல் கொடுக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் இப்போது உத்தரவு போட்டுவிட்டது.
இப்படி வண்டி வண்டியாகக் கொண்டுபோய் பதுக்கிவைத்திருக்கும் பணத்தை, இப்போது அவர்களால் சுதந்திரமாக வெளியில் எடுக்க முடியவில்லை. அந்த அளவுக்குத் தேர்தல் ஆணையம் கழுத்தை நெரிப்பதால், 'தாங்கள் நினைத்ததை சாதித்துவிட மாட்டோமா?’ என்று தவிக்கிறார்கள். அதனால்தான், தேர்தல் ஆணையத்துக்கு எதிராகக் காரசார விமர்சனங்கள் கிளம்புகின்றன. இது தொடர்பான வழக்கில், எந்தெந்த வழிகளில் எப்படி எல்லாம் பணம் போகிறது, எந்தெந்த அதிகாரிகள் இதற்கெல்லாம் உடந்தையாக இருக்கிறார்கள் என்பதுபோன்ற விவரங்களைப் பட்டியல் இட்டிருக்கிறது தேர்தல் ஆணையம். அந்த பதில் மனுவில் தென் மாவட்டங்களில் நடந்த அத்துமீறல்கள் குறித்துத்தான் நிறையத் தகவல்கள் இருக்கின்றன. இவற்றை எல்லாம் பார்த்த பிறகுதான் ஆணையத்தின் நடவடிக்கைகளில் தலையிட முடியாது என்று சொல்லி, வழக்கைத் தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்!'' என்றார் அந்த அதிகாரி.
என்னதான் கிடுக்கிப்பிடி போட்டாலும், அரசியல்வாதிகள் எதையும் சமாளிக்கத் தயாராக இருக்கிறார்கள். சென்னை ஏரியாவில் காலை நாளிதழ்களுடன் சேர்த்து ரூபாய் நோட்டுகளை பின் அடித்து நள்ளிரவில் வீட்டு வாசல்களில் போடும் திட்டத்தையும் பால் பாக்கெட்டுடன் சேர்த்துப் பணத்தையும் சப்ளை செய்யும் திட்டமும் உண்டாம். மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட நகரங்களில் மொத்தம் மொத்தமாக ஓட்டு உள்ள குடும்பங்களில் குடும்பத் தலைவரின் பேங்க் அக்கவுன்ட் நம்பர்களையும், மற்ற இடங்களில் வாக்காளர்களின் முகவரியோடு சேர்த்து மொபைல் போன் எண்களையும் முன்கூட்டியே வாங்கி வைத்திருக்கிறார்கள். பணம் கொடுக்க ஆரம்பித்ததும் அக்கவுன்ட் நம்பரில் தானாகப் பணம் விழும். மொபைல் நம்பர் கொடுத்தவர்களுக்கு, குறிப்பிட்ட தொகைக்கு திடீர் ரீ-சார்ஜ்கள் வரலாம். அல்லது போனில் அழைத்து ''இன்ன இடத்தில் இன்னாரைப் பாருங்கள்; உங்களுக்கான கவர் கிடைக்கும்!'' என்று இன்ப அதிர்ச்சி தரப்படலாம்.கட்சிக்காரர்கள் சிலரை சஃபாரி உடையில் அதிகாரிகள்போல் அனுப்பி பட்டுவாடா செய்யும் ஐடியாவும் இருக்கிறதாம். இன்னும் சில இடங்களில் அயர்ன் வண்டிக்காரர்களிடம் கவர்களைக் கொடுத்துக் கவனிக்கும் திட்டமும் இருக்கிறது. புறநகர்ப் பகுதிகளில் குடிமகன்களைத் திருப்திப்படுத்த, கலர் டோக்கன்களை விநியோகிக்கவும் திட்டமாம். இந்த டோக்கன்களை குறிப்பிட்ட ஒயின் ஷாப்களில் கொடுத்தால் இலவசமாக சரக்கு கிடைக்குமாம்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக மகளிர் சுய உதவி குழுப் பெண்களைத்தான் பணப் பட்டுவாடாவுக்கு மிக அதிக அளவில் பயன்படுத்த இருக்கிறார்கள். குழுத் தலைவிகளிடம் அந்தந்தத் தெருக்களுக்கான கவர்களைக் கொடுத்து, அவர்கள் மூலமாக குழுப் பெண்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டு, அனைத்து வாக்காளர்களுக்கும் கவர்களைக் கொண்டுசேர்க்க நினைக்கிறார்கள். இது தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கும் போயிருப்பதால், மகளிர் குழுக்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றன. இன்னும் சில இடங்களில் குடியிருப்போர் நல சங்கத்திடம் மொத்தம் மொத்தமாகப் பணம் கொடுத்து இருக்கிறார்கள். ஆனால், தேர்தல் கமிஷனின் எச்சரிக்கையை அடுத்து, அவர்களில் சிலர் வாங்கிய பணத்தை திருப்பி ஒப்படைக்கும் முடிவில் இருப்பதால்... அங்கேயும் ஆப்பு!
அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டால்... அந்தந்தப் பகுதிகளில் குட்டிக் குட்டிக் கலவரங்களை ஏற்படுத்தி போலீஸின் கவனத்தைத் திசை திருப்பிவிட்டு பட்டுவாடாக்களை முடிக்க முயற்சிக்கலாம் என்று சொல்லும் நேர்மையான போலீஸ் அதிகாரிகள் சிலர், ''ஏப்ரல் 11-ம் தேதி போலீஸாருக்குத் தேர்தல் பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும். அதற்காக, அன்றைய தினம் சுமார் ஐந்து மணி நேரமாவது அனைத்து போலீஸாரும் அந்தந்தத் தலைமையகங்களில் கூடவேண்டி இருக்கும். அந்த நேரத்தில் கவர்களைக் கொண்டுபோய் சேர்க்கப்போவதாவும் செய்தி இருக்கிறது!'' என்கிறார்கள்.
பணப் பட்டுவாடா விவகாரங்களைத் தடுப்பதற்கு அனைத்து வழிகளிலும் நடவடிக்கை எடுத்து வரும் மாநிலத் தேர்தல் ஆணையம், கலவரத்தை ஏற்படுத்தி பணம் கொடுக்கும் சதி வேலைகள் நடந்தால், தேர்தலையே ஒத்திவைக்கச் சொல்லி சிபாரிசு செய்யவும் தயாராக இருப்பதாகத் தகவல்!

- குள.சண்முகசுந்தரம்

நன்றி ஜூனியர் விகடன்




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தள்ளிப்போகுமா தேர்தல்? 47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக