புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செய்க தவம்!! செய்க தவம் !!  Poll_c10செய்க தவம்!! செய்க தவம் !!  Poll_m10செய்க தவம்!! செய்க தவம் !!  Poll_c10 
90 Posts - 71%
heezulia
செய்க தவம்!! செய்க தவம் !!  Poll_c10செய்க தவம்!! செய்க தவம் !!  Poll_m10செய்க தவம்!! செய்க தவம் !!  Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
செய்க தவம்!! செய்க தவம் !!  Poll_c10செய்க தவம்!! செய்க தவம் !!  Poll_m10செய்க தவம்!! செய்க தவம் !!  Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
செய்க தவம்!! செய்க தவம் !!  Poll_c10செய்க தவம்!! செய்க தவம் !!  Poll_m10செய்க தவம்!! செய்க தவம் !!  Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
செய்க தவம்!! செய்க தவம் !!  Poll_c10செய்க தவம்!! செய்க தவம் !!  Poll_m10செய்க தவம்!! செய்க தவம் !!  Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
செய்க தவம்!! செய்க தவம் !!  Poll_c10செய்க தவம்!! செய்க தவம் !!  Poll_m10செய்க தவம்!! செய்க தவம் !!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செய்க தவம்!! செய்க தவம் !!  Poll_c10செய்க தவம்!! செய்க தவம் !!  Poll_m10செய்க தவம்!! செய்க தவம் !!  Poll_c10 
255 Posts - 75%
heezulia
செய்க தவம்!! செய்க தவம் !!  Poll_c10செய்க தவம்!! செய்க தவம் !!  Poll_m10செய்க தவம்!! செய்க தவம் !!  Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
செய்க தவம்!! செய்க தவம் !!  Poll_c10செய்க தவம்!! செய்க தவம் !!  Poll_m10செய்க தவம்!! செய்க தவம் !!  Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
செய்க தவம்!! செய்க தவம் !!  Poll_c10செய்க தவம்!! செய்க தவம் !!  Poll_m10செய்க தவம்!! செய்க தவம் !!  Poll_c10 
8 Posts - 2%
prajai
செய்க தவம்!! செய்க தவம் !!  Poll_c10செய்க தவம்!! செய்க தவம் !!  Poll_m10செய்க தவம்!! செய்க தவம் !!  Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
செய்க தவம்!! செய்க தவம் !!  Poll_c10செய்க தவம்!! செய்க தவம் !!  Poll_m10செய்க தவம்!! செய்க தவம் !!  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
செய்க தவம்!! செய்க தவம் !!  Poll_c10செய்க தவம்!! செய்க தவம் !!  Poll_m10செய்க தவம்!! செய்க தவம் !!  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
செய்க தவம்!! செய்க தவம் !!  Poll_c10செய்க தவம்!! செய்க தவம் !!  Poll_m10செய்க தவம்!! செய்க தவம் !!  Poll_c10 
3 Posts - 1%
Barushree
செய்க தவம்!! செய்க தவம் !!  Poll_c10செய்க தவம்!! செய்க தவம் !!  Poll_m10செய்க தவம்!! செய்க தவம் !!  Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
செய்க தவம்!! செய்க தவம் !!  Poll_c10செய்க தவம்!! செய்க தவம் !!  Poll_m10செய்க தவம்!! செய்க தவம் !!  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செய்க தவம்!! செய்க தவம் !!

Page 1 of 2 1, 2  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 04, 2011 8:52 pm

செய்க தவம் செய்க தவம் நெஞ்சே
தவம் செய்தால் எய்த விரும்பியதை எய்தலாம்

என்று கூறும் பாரதியார் இயற்கையான சூழலைத் தேடிச் சென்று தனிமையில் மோன நிலையில் அமர்ந்து, அவை கொடுத்த ரம்மியத்தில் சுந்தரக் கவிதைகள் வடித்தார். அதனால் கவியுலகின் மகாகவியாக மக்கள் மனங்களில் மங்காது நிலைபெற்றார்.
கவியரசர் கண்ணதாசன் தன் கவிதைகளுக்கு அடியெடுத்து கொடுத்தவைகள் கோப்பையின் மதுவும் கோல மயில்களும் என்று வாக்குறுதியே தருகிறார். இயற்கைக் கவிஞர் கவிப்பேரரசு வைரமுத்துவோ மொட்டைமாடி தனிமையும் தட்டை நிலவும் பட்டை தீட்டாத வைரக்கற்களாய் மின்னும் நட்சத்திர கூட்டங்களும் என்று இவையே தன் கவிதைகளுக்குக் கருத்து மழை பொழிந்த கொடை வள்ளல்கள் என்கிறார். இவர்கள் கலைப்பக்கத்தின் கருணாமூர்த்திகள்.

பிரஞ்சுக் கவிஞர் ஷெல்லியும்,
தீர்க்கமாம் தியானம் சோர்விலாக் கலைத்தேர்ச்சி
வரையறு நாள்மேலும் வாழ்கின்ற நற்பேறு “

என்றுரைத்து தியானம் கலைகளை வளரச்செய்வதுடன் வாழ்நாளைக் கூட்டும் என்கிறார்.

விழித்துக் கொண்டே கனவு காணச்சொன்ன அறிவியல்
கொடையாளி கலாம் அவர்களோ தன் அக்கினிச்சிறகு பயண காலத்தில் தான் எந்த கூட்டத்தில் இயங்க வேண்டிய சூழல் அமைந்தாலும் அக்கினியை எப்படி இயக்குவது? எப்படி பழுதைச் செப்பனிடுவது?
என்று தன் மனம் தனித்தே சிந்தித்துக் கொண்டு இருக்கும் என்கிறார்.

இவையெல்லாம் எதைக் காட்டுகின்றன? ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு சூழல் மன நிறைவைத் தந்துள்ளது. அந்த நிறைவு மன அமைதியைத் தந்துள்ளது. அந்த அமைதி அவர்களை ஆக்கபூர்வமாகச் சிந்திக்க வைத்துள்ளது. சிந்தனையின் தீவிரம் உள்ள உறுதியாக உருமாற்றம் பெற்றுள்ளது. அந்த உறுதியே வெற்றியை அள்ளித் தந்திருக்கிறது. எல்லாவற்றுக்கும் வழி கூறும் நம் பாட்டன் மறையும்,

“எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்
திண்ணிய ராகப் பெறின்

என்றுரைத்து உறுதியான நெஞ்சம் எதையும் வென்றே தீரும் என்கிறது.

கலாம் கூறுவது போல தனித்து இயங்குவது என்பது என்ன? இந்த வினாவுக்கு விடை மன ஒருமைப்பாடு என்பர். எங்கு இருந்தாலும் எந்த கூட்டத்தில்ஒலியில் அல்லது ஓசையில் இருந்தாலும் தன் மனத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தலே
மன் ஒருமைப்பாடு என்பதாம். மனத்தை தன் வசம் வைத்திருக்க ஒருவன் தன் மனத்தைப் பற்றி முழுமையாக முதலில் தான் அறிந்து இருக்க வேண்டும். அப்படி அறிந்து கொள்ளாதவன் தன் மனத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பது கடினம்.

நான் சீக்கிரத்துல முடிவெடுக்க மாட்டென். முடிவெடுத்துட்டேன் அப்பறம் நான் சொல்றதை நானே கேட்கமாட்டென் என்று சினிமாவில் உலவி வரும் வசனத்தில்
இருக்கும் உண்மையை எண்ணி வியக்கத்தான் வேண்டும். அப்படி மனத்தைத் தன் வசப்படுத்தத் தெரியாதவர்களுக்கு கை கொடுப்பது தியானம், தவம், யோகம் என்றெல்லாம் பல பெயர்களைத் தாங்கி இருக்கும் சும்மா இருத்தல்.

சும்மா இரு! சும்மா இரு! என்று பெரியவர்கள் அடிக்கடி சொல்வார்கள். நகைச்சுவை நடிகர் வடிவேலு கூறுவது போல சும்மா இருப்பது அப்படி ஒன்றும் சுலபமான செயல்
அல்ல. ஒரு நாள் சும்மா இருந்தால் தெரியும். அது எத்துனை கடினமான செயல் என்று. ஆனால் அதனைப் பயின்று விட்டால் சாதனைத் தேரேறி ஊர்வலம் வரலாம். இதனை உணர்த்தும் பழம்பாடல் இது.

கந்துக மதக்கரியை அடக்கலாம்
கரடி வெம்புலியையும் கட்டலாம்
ஒரு சிங்க முதுகின் மேற் கொள்ளலாம்
கட்செவி எடுத்தாட்டலாம்
வெந்தழ்லின் ரதம் வைத்து ஐந்து உலகத்தையும்
வேதித்து அவிற்றுண்ணலாம்
வேறொருவர் காணாமல் உலகத்துலவலாம்
விண்ணவரை ஏவல் கொள்ளலாம்
சந்ததமும் இளமையோ டிருக்கலாம்
மற்றொரு சரீரத்திலும் புகுதலாம்
சலமேல் நடக்கலாம் கனல் மேலிருக்கலாம்
தன்னிகரில் சித்தி பெறலாம்
சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது

சும்மா இரு என்று ஆன்றோர் கூறக்காரணம் நம் மனதில் சிங்கம், புலி, கரடி, யானை,
நரி போன்ற மிருகங்கள் உலவிக்கொண்டிருக்கின்றன. ஆம். நம் மனமாகிய காட்டில் காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூன்று சிங்கங்கள் உள்ளன, மனம், புத்தி, சித்தி, அகங்கார்ரம் நான்கு நரிகள் உள்ளன. பல்வேறு ஆசைகளில் நம்மைக் கொண்டு சேர்த்து அலைபாய வைக்கும் ஐம்பொறிகளாகிய பெரும் யானைகள் உள்ளன. இவை ஆணவம் மலம் என்ற குற்றங்களில் நம்மைக் கொண்டு சேர்க்கும். எனவே அந்த விலங்குகளை அடக்க முதலில் மன அடக்கம் தேவை என்பதனை, திருமூலர் அழகாகக் காட்டிச்சென்றுள்ளார். பாடல் இதோ,

திகைக்கின்ற சிந்துயுள் சிங்கங்கள் மூன்று
நகைக்கின்ற நெஞ்சுக்குள் நரிக்குட்டி நாலு
வகைக்கின்ற நெஞ்சினுள் ஆனைகள் ஐந்து
பகைக்கின்ற நெஞ்சுக்குள் பால் இரண்டு ஆமே

ஆழ்மனப்பதிவுகளே எண்ண ஓட்டங்கள் தொடரச் செய்கிகின்றன. இந்த எண்ண ஓட்டங்களின் பின்னே மனிதன் ஓடிக்கொண்டிருக்கிறான். மனம் கை கால்களைப் போல ஒரு உறுப்புதான். அதை எப்போது வேண்டுமோ அப்போதுதான் பயன்படுத்த வேண்டும். எப்போதும் நாம் கை கால்களை ஆட்டிக்கொண்டே இருக்க முடியாது. அது போல மனத்தையும் தேவையானபோது பயன்படுத்தி பிற நேரங்களில் சும்மா இருக்கச் செய்ய வேண்டும் என்பார் ஓஷோ.

ஓஷோவின் தியான முறை முற்றிலும் புதுமையானது என்பர். இதை active meditation
எனக் கூறுவார். முதல் நிலையாக எந்த மன உணர்வுகளையும் அடக்கி வைக்காமல் செயற்கையாக வெளிப்படுத்தி விடுவது. இரண்டாம் நிலை உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்திய பின் ஆசைகளை அனுபவித்து அடங்கிய ஆள்மனதை அமைதியாகக் கவனிப்பது. இதில் அடக்கப்பட்ட மன உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் கிட்டுகிறது. குறுகிய காலத்தில் உடல், மன அமைதி தானாவே உருவாது மட்டுமல்லாமல் தியான நிலையைக் குறுகிய காலத்தில் அனுபவிப்பதற்கும் வழிகாட்டுகின்றது என்று மேலை நாட்டு ஆய்வுலகம் கூறுகிறது. செயற்கை என்பதை மட்டும் எடுத்து விட்டுப் பார்த்தால் இதைத்தானே அன்றே கூறியுள்ளார் நம் திருமூலர்.

அஞ்சும் அடக்கு அடக்கு என்பர் அறிவிலார்
அஞ்சும் அடக்கில் அமரரும் அங்கு இல்லை
அஞ்சும் அடக்கில் அசேதனமால் என்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே

மீறி அடக்கம் அடக்கம் என்று ஐம்புலன் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் அடக்க முற்பட்டால் கட்டுப்பாடுகளை மீறி அணையை உடைத்துக் கொண்டு சீறிப்பாயும் வெள்ளமாய் மனம் தறிகெட்டு ஓடும் நிலை வந்துவிடும். இதனை திருமூலர்,

முழக்கி எழுவன மும்மத வேழம்
அடக்க அறிவு என்னும் கோட்டையை வைத்தேன்
பிழைத்தன ஓடிப் பெருங்கேடு மண்டிக்
கொழுத்தன வேழம் குலைக்கின்ற வாறே

என்று கூறுகிறார். அதாவது தன் ஐந்து புலன்களும் ஆரவாரத்துடன் அனுபவிக்கத் துடித்தன. அந்தப் பெருமத யானைகளை அறிவு என்னும் அங்குசத்தால் அடக்கினேன். அவை நன்கு விளைந்துஇருந்த கரும்புத் தோட்டத்தை அழித்துச் சென்ற மத யானைகளைப் போல நன்கு ஏற்கனவே என்னிடம் செழித்திருந்த என் தெளிவான அறிவையும் சிதைத்துச் சென்று விட்டன என்று பொருள்.

அதே நேரம் ஜென் த்ததுவத்தையும் நாம் காண வேண்டியுள்ளது. ஜென் குருவிடம் ஒருவன் வந்து, ‘எப்படி தியானத்தில் ஈடுபடுவது?’ என்று கேட்டான்.என்னைப் பார்த்துக் கொண்டிரு. தியானம் உனக்குக் கைவரும் என்றார் ஜென். அவனும் குருவின் நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிருந்தான். காலையில் குரு எழுந்தார். குளித்தார். பகல் முழுவதும் தோட்ட வேலையில் ஈடுபட்டார். உணவு வேளையில் உண்டார். ஆனால் வழிபாடு, பிரார்த்தனை, தனியாக அமர்தல், தியானித்தல் என்று எதையும் அவர் செய்யவில்லை.

இதில் மனம் சலித்த சீடன், ‘எப்போது நான் தியானம் கற்றுக்கொள்வது?’ என்றான். நான் குழி வெட்டியதும் தியானம்தான். தோட்டம் போட்டதும் தியானம்தான். உணவு உண்டதும் தியானம்தான். எனது வாழ்வே தியானம்தான். எனது வாழ்வில், தியானம் என்ற ஒன்று தனியாக இல்லைஎன்று சிரித்தபடி சொன்னார் ஜென் குரு.

இந்த திருமூலர் உள்ளிட்ட இரு குருமார்களின் வாக்கிலிருந்து ஒன்று புரிய வருகிறது. நம் மனதின் முதலாளி நாமாக இருக்க வேண்டும். மனம் ஒரு பணியாள்தான். வேலைக்காரனைக் கண்காணிக்கும்போது வேலைக்காரன் தன் வேலைகளைச் செவ்வனே
செய்து முடிப்பான். அதுதான் தியானம் இதனையே செய்யும் தொழிலே தெய்வம் என்று கூறியுள்ளனர் நம் முன்னோர்.

நம் சித்தர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனதைக்கட்டி மகா புரட்சியெல்லாம் செய்தனர். அதனால்தான்,

“நிலத்தில் குளித்து நீள்விசும்பேறிச்
சலத்தில் திரியும் ஓர் சாரணன்

என்று சித்தர்கள் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். ஆனால் அவையெல்லாம் துறவிகளுக்கு மட்டும் தொடர்புடையது, ஆன்மிகத்தேடலுக்கு மட்டுமே உரியது, சமாதி நிலையை அடைய உதவுவது முதலிய சாயங்கள் பூசப்பட்டு ஆன்மிகவாதிகள் கையில் சிக்கிக்கொண்டு பொது மக்கள் வரை எட்டாமல் போனது நம் போதாத காலமே.
மேலை நாடுகளோ மனித மன ஆற்றலை மேம்படுத்தும் சும்மா இருக்கும் செயலான தியானம் என்பதை முழுக்க முழுக்க பொருளீட்டும் வணிகமாக்கி பொது மக்களிடம் கொண்டு சென்றுள்ளது.

ஆனால் இதில் என்ன விந்தை என்றால் கீழை நாட்டு மக்களான நம்மவர்களின் எந்த கண்டுபிடிப்பும் எந்த தத்துவமும் எந்த அறிவுரையும் வணிக நோக்குள்ள மேலை நாட்டவர்கள் கூறினால் மட்டுமே அதனை நம்பும் துர்ப்பாக்கிய நிலை நம்மவர்களிடம்
அதிகரித்துக்கொண்டே போகிறது என்பது வருந்த வைக்கிறது. அதே சமயம் நாம் கண்களை மூடிக்கொண்டு சொன்ன விஷயங்களை எல்லாம் மேலை நாட்டினர் ஆய்வுக்கு உட்படுத்திச் சொல்லும் போது இரு தரப்பினரையும் பார்த்து நாம் மூக்கின்மேல் விரல் வைக்கத்தான் வேண்டியுள்ளது.

எண்ணங்களின் தொடர் ஓட்டத்தைத் தடைபடுத்தி சும்மா இருக்கும்போது மனம் உறக்கத்தின் போது உண்டாகும் ஆல்பாநிலையை அடைகிறது. அதனால் மனிதர்கள் மிகுந்த மன அமைதி அடைந்தவர்களாகக் காணப்படுகிறார்கள் என்று ஹார்டுவேர்டு மருத்துவப் பல்கலைக் கழகப் பேராசிரியர் பென்ஷன் கூறுகிறார். இதனையே,

செயலற் றிருப்பார் செகத்தோடுங் கூடார்
செயலற் றிருப்பார்க்கே செய்தியுண் டாமே

என்று நம் திருமூலர் அன்றே கூறினார்.

மனதின் நிலையை நித்திரை நிலை, கனவு நிலை, விழித்திருக்கும் நிலை என்று மூன்று நிலைகளாகப் பிரிக்கின்றது மேலைநாட்டு ஆய்வுலகம். ஆனால் நம் சித்தர்களின் தத்துவம் அல்லது ஆன்மிக அருளாளர்களின் மெய்ஞானம் விழிப்பு நிலை, துயில்
நிலை, கனவு நிலை, பொதி எருது நிலை என்ற நான்காகப் பிரிக்கிறது. இந்த நான்காவது பொதி எருது நிலையை துரியம் என்றும் துரியமாகிய நான்காம் நிலைக்கும் மேம்பட்ட துரியாதீதம் என்ற ஐந்தாம் நிலையும் உள்ளதாகக் கூறுவார். இதனைச் சுட்டும் வள்ளலார் பாடல் பின்வருவது.

துரியத்திற் கப்பாலுந் தோன்றும் பொது

தியான முறை:
ஒரு பொருளை அல்லது ஒளியை தொடர்ந்து கவனித்துக்கொண்டிருப்பது ஒரு முறை.
ஒரு சொல்லை தொடர்ந்து மீண்டும் மீண்டும் கூறும் தியான முறை (Transcendental
Meditations (TM). இந்த சொல்லை மந்தரம் எனவும் இந்த தியான முறையை மந்திர உச்சாடன தியானம் என்றும் கூறுவர்.

உரம்தரு மந்திரம்ஓம் என்று எழுத்தே

என்று திருமூலர் கூறுவது சான்று.

மற்றொன்று தமது மூச்சைக் மூக்கின் நுனியில் வைத்து தமது வயிற்றுப்பகுதி எழுந்து இறங்குவதைக் கவனிப்பர். இதனை விப்பாசனா (vipassana) என்பர்.

முன்னர் கூறப்பட்ட செய்யும் தொழிலே தெய்வம் என்ற சென் (Zen) தத்துவமும் நல்ல தியான முறையாக ஜப்பான் போன்ற பல முன்னேறிய மேலை நாட்டினரால் கைகொள்ளப்பட்டு வருகிறது. ஜிட்டு கிர்ஸ்ணமூர்த்தியின் தியானம் தொடர்பான கருத்துக்களும் ஆழமனத் தியானப் பயிற்சி செய்பவர்களிடையில் பிரபலமானவை.

மேற்குறிப்பிட்ட பல்வேறு வகையான கிழக்குலகின் தியான முறைகளை (உதராணமாக யோகா மற்றும் மூச்சுப் பயிற்சி) ஒன்றினைத்து நிறைவான மனம் (Mindfuless Based Stress Reduction-MBSR) என்ற தியான முறை பேராசிரியர் காபாட் சின் (Kabat- Zinn) என்பவரால் உருவாக்கப்பட்டு மேற்கில் அறிமுகப்படுத்தப்பட்டு பல்வேறு வகையான உள்ள, உடல் நோய்களைக் குணப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டுவருகின்றது.

தியானம் செய்பவர்கள் எண்ணற்றோரை ஆய்வுக்கு உட்படுத்திய மேல்நாட்டு ஆய்வாளர்கள் ஆய்வுகளின் அடிப்படையில் தியானம் செய்பவர்களது மூளையில் குறைவான எண்ணங்களே இருக்கின்றன. மற்றவர்களைப் போல எண்ணங்களின் அலைமோதல் அதிக அளவில் இல்லை. அதுவும் தியானம் செய்யும் நிலையில் நினைவுகள் எண்ணங்கள் சிந்தனைகள் ஆகியவற்றைப் பற்றி அறியக்கூடிய மூளையின் முன்பகுதியில் மிகக் குறைந்த அளவிளான செய்ற்பாடுகளே இவர்களிடம் காணலாகின்றன என்கின்றனர். அதனால் இவர்கள் மகிழ்ச்சியானவர்களாக இருக்கின்றனர் என்றும் கூறுகின்றனர். எது எப்படியோ நமக்குத் தேவை ஆரோக்கியமான மனநிலை உள்ள மக்கள் சக்தியே.
[/siz

ஆதிரா..

நன்றி குமுதம் ஹெல்த் ஸ்பெஷல்.

செய்க தவம்!! செய்க தவம் !!  Aசெய்க தவம்!! செய்க தவம் !!  Aசெய்க தவம்!! செய்க தவம் !!  Tசெய்க தவம்!! செய்க தவம் !!  Hசெய்க தவம்!! செய்க தவம் !!  Iசெய்க தவம்!! செய்க தவம் !!  Rசெய்க தவம்!! செய்க தவம் !!  Aசெய்க தவம்!! செய்க தவம் !!  Empty
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Apr 04, 2011 9:00 pm

மிக அழகான கட்டுரை மிக மிக அழகு மனோசக்தியை பற்றிய புதிய தொடராக தொடருங்களேன்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 04, 2011 9:07 pm

maniajith007 wrote:மிக அழகான கட்டுரை மிக மிக அழகு மனோசக்தியை பற்றிய புதிய தொடராக தொடருங்களேன்
மிக்க நன்றி அஜித். தொடர்வேன்.. செய்க தவம்!! செய்க தவம் !!  154550

செய்க தவம்!! செய்க தவம் !!  Aசெய்க தவம்!! செய்க தவம் !!  Aசெய்க தவம்!! செய்க தவம் !!  Tசெய்க தவம்!! செய்க தவம் !!  Hசெய்க தவம்!! செய்க தவம் !!  Iசெய்க தவம்!! செய்க தவம் !!  Rசெய்க தவம்!! செய்க தவம் !!  Aசெய்க தவம்!! செய்க தவம் !!  Empty
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Apr 04, 2011 9:10 pm

அசால்டா வந்து அசாத்திய கருத்தொன்றை ஈசியா சொல்லிட்டு எங்கப்பா போய்ட்டீங்க பானு???

மனதை வசப்படுத்துவது ஒரு கலை என்றால்.....

நம் மனம் நம்வசமிருப்பது மிக பெரிய விஷயம்.....

ஐயோ அந்த ஆளு கோவக்காரன்யா நீ பாட்டுக்கு ஒன்னு சொல்லி ஒன்னு ஆகிடப்போகுதுன்னு மிரட்டும் அளவுக்கு கோபம் தலைக்கேறி நம்மையே அழிக்க முற்படும்போது தியானம் ஒரு சரியான வழி கோபத்தில் இருந்து தப்பிக்க என்பதை அழகான விளக்கங்களுடன் பாடல்களுடன் அடேங்கப்பா எவ்ளோ விஷயங்களை சொல்லிட்டீங்க…

படிக்க படிக்க ஆச்சர்ய கேள்விகள் எழுவதை தவிர்க்கவே முடியவில்லை…. அதெப்படி அதெப்படி அப்படின்னு மனதுள் எழுந்த கேள்விக்கு அடுத்தடுத்து இந்தா மஞ்சு இதான் பதில் சும்மா இருப்பது கூட தியானத்தின் செயல்பாடே என்பதை அறியும்போது ஆச்சர்யமாக இருக்கிறது……

இப்ப இருக்கும் இந்த காலக்கட்டத்தில் எத்தனையோ உறவுகளுக்குள் ஈகோ வந்து இருவரையும் பிரித்து பிரச்சனைகளை பெரிதாக்கி கோர்ட் வாசற்படி தட்டவைக்கிறது……

அப்படி ஆளாளுக்கு கோபமும் பொறாமையும் ஈகோவும் ஒதுக்கி வைக்க முடியாதவர்கள் தியானத்தை கைக்கொண்டால் கண்டிப்பாக அமைதியும் மனதில் மென்மையும் கண்களில் கருணையும் மிளிர்வதை தவிர்க்கவே முடியாதுன்னு ஆணித்தரமாக சொல்லவைத்த அருமையான கட்டுரை இது….

அம்மா சொன்னதை நினைத்து பார்க்கிறேன்….. மம்மி ஆபிசுல ஒரே டென்ஷன் மேனேஜர் திட்டும்போது எதிர்த்து பேசலைன்னாலும் மனம் கொந்தளிக்கிறது….. உடன் அம்மா சொல்லும் வார்த்தை தினமும் பத்து நிமிடம் தியானம் செய்….

தியானம் செய் தியானம் செய் என்று சொல்கிறார்களே மனதில் இருக்கு வெறுப்புணர்வோ கோபமோ இதனால் குறையுமா பழி வாங்கும் உணர்ச்சிகள் மாறுமா என்றால்???

கண்டிப்பாக நூறு சதவீதம் இதன் ரிசல்ட் பாசிட்டிவ் தான்…. நான் அனுபவித்து பார்த்ததை இங்கே உதாரணமாக சொல்லவைத்த கட்டுரை சிறப்பாக தந்திருக்கீங்க பானு……

ஒவ்வொரு மனிதனின் உள்ளும் ஒரு மிருக உணர்வு ஒளிந்திருக்கும்…

எப்ப சமயம் கிடைக்கும் யாரை அடிக்கலாம்னு குரூர பார்வையோடு அலைந்துக்கொண்டிருக்கும்….
.
தியானம் செய்வதால் இந்த மிருக உணர்வு கோபம் வெறுப்பு எல்லாமே கட்டுக்குள் கொண்டு வரும் என்பதை நுணுக்கமான ஆராய்ந்து எழுதிய மிக அருமையான கட்டுரைக்கு என் அன்பு வாழ்த்துக்கள் பானு…

எப்பவும் மனிதன் சக்ஸஸ்ஃபுல் ஆக இந்த அமைதியான வழிமுறை தான் பெஸ்ட் என்று சொல்லவைத்த என் அன்பு பானுவுக்கு என் அன்பு பாராட்டுக்கள்….
.
சாதனைகள் தொடர்ந்துக்கொண்டே இருக்கட்டும் பானு…..
சூப்பருங்க அருமையிருக்கு

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

செய்க தவம்!! செய்க தவம் !!  47
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 04, 2011 9:23 pm

மஞ்சுபாஷிணி wrote:அசால்டா வந்து அசாத்திய கருத்தொன்றை ஈசியா சொல்லிட்டு எங்கப்பா போய்ட்டீங்க பானு???

செய்க தவம்!! செய்க தவம் !!  224747944 செய்க தவம்!! செய்க தவம் !!  2825183110

அட மக்கா... ஒரு கட்டுரையைத் தூக்கி அசால்ட்டா பின்னூட்டமாக இட்டிருக்கிறே செல்லம். ஏதோ ஏதோ கிறுக்க நான்.. அதைப் படிச்சு பாராட்ட நீங்க. இதுவும் நல்லாத்தான் இருக்கு. அம்மா உங்களுக்கு நல்ல நல்ல அறிவுரைகளையெல்லாம் வழங்குகிறார்கள். எனக்கு மகிழ்ச்சியாக் இருக்கிறது. அம்மாவுக்கு என் அன்பையும் வணக்கத்தையும் கூறுங்கள் மஞ்சு. எனக்கு மெடிட்டேஷன் செய்தால் மனது அமைதியாக இருக்கும். பிடிக்கும்.

இதைப்பற்றி இன்னும் எழுத ஆசை.. வாய்க்க வேண்டும். அன்பான கருத்துரைக்கு மிக மிக நன்றி மஞ்சு. செய்க தவம்!! செய்க தவம் !!  154550

செய்க தவம்!! செய்க தவம் !!  Aசெய்க தவம்!! செய்க தவம் !!  Aசெய்க தவம்!! செய்க தவம் !!  Tசெய்க தவம்!! செய்க தவம் !!  Hசெய்க தவம்!! செய்க தவம் !!  Iசெய்க தவம்!! செய்க தவம் !!  Rசெய்க தவம்!! செய்க தவம் !!  Aசெய்க தவம்!! செய்க தவம் !!  Empty
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Apr 04, 2011 9:28 pm

சும்மாவா.... பானுவிடம் நிறைய நல்ல விஷயங்களை பார்த்துக்கிட்டே வரேன்ல? அதை உடனே பாராட்டாம என்னால இருக்கமுடியாதே.... உண்மையை தான் அனுபவித்ததை அழகாய் இங்கே பகிரும் உத்தம குணம் படைத்த பானுவுக்கு முத்தம்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

செய்க தவம்!! செய்க தவம் !!  47
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Apr 04, 2011 9:31 pm

Aathira wrote:
அட மக்கா... ஒரு கட்டுரையைத் தூக்கி அசால்ட்டா பின்னூட்டமாக இட்டிருக்கிறே செல்லம். ஏதோ ஏதோ கிறுக்க நான்.. அதைப் படிச்சு பாராட்ட நீங்க. இதுவும் நல்லாத்தான் இருக்கு. அம்மா உங்களுக்கு நல்ல நல்ல அறிவுரைகளையெல்லாம் வழங்குகிறார்கள். எனக்கு மகிழ்ச்சியாக் இருக்கிறது. அம்மாவுக்கு என் அன்பையும் வணக்கத்தையும் கூறுங்கள் மஞ்சு. எனக்கு மெடிட்டேஷன் செய்தால் மனது அமைதியாக இருக்கும். பிடிக்கும்.

இதைப்பற்றி இன்னும் எழுத ஆசை.. வாய்க்க வேண்டும். அன்பான கருத்துரைக்கு மிக மிக நன்றி மஞ்சு. செய்க தவம்!! செய்க தவம் !!  154550

உங்கள் கட்டுரைக்கு இது ரொம்ப சின்ன பின்னூட்டம் தான்.
இதை எப்படித்தான் type பண்ணுறீங்களோ.....

படிக்கத் தான் நேரம் ஆகுது.... ஆனால் நல்ல பதிவுகள்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

செய்க தவம்!! செய்க தவம் !!  Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Apr 04, 2011 9:46 pm

மூர்த்தி சிறிதென்றாலும் கீர்த்தி பெரியது குயிலன்.... பானுவின் வரிகளின் ரசிகை நான்..... சின்னதானாலும் பெரியதானாலும் முழுக்க படித்துவிடுவேன்..... அன்பு மலர்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

செய்க தவம்!! செய்க தவம் !!  47
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 04, 2011 9:51 pm

SN.KUYILAN wrote:
Aathira wrote:
அட மக்கா... ஒரு கட்டுரையைத் தூக்கி அசால்ட்டா பின்னூட்டமாக இட்டிருக்கிறே செல்லம். ஏதோ ஏதோ கிறுக்க நான்.. அதைப் படிச்சு பாராட்ட நீங்க. இதுவும் நல்லாத்தான் இருக்கு. அம்மா உங்களுக்கு நல்ல நல்ல அறிவுரைகளையெல்லாம் வழங்குகிறார்கள். எனக்கு மகிழ்ச்சியாக் இருக்கிறது. அம்மாவுக்கு என் அன்பையும் வணக்கத்தையும் கூறுங்கள் மஞ்சு. எனக்கு மெடிட்டேஷன் செய்தால் மனது அமைதியாக இருக்கும். பிடிக்கும்.

இதைப்பற்றி இன்னும் எழுத ஆசை.. வாய்க்க வேண்டும். அன்பான கருத்துரைக்கு மிக மிக நன்றி மஞ்சு. செய்க தவம்!! செய்க தவம் !!  154550

உங்கள் கட்டுரைக்கு இது ரொம்ப சின்ன பின்னூட்டம் தான்.
இதை எப்படித்தான் type பண்ணுறீங்களோ.....

படிக்கத் தான் நேரம் ஆகுது.... ஆனால் நல்ல பதிவுகள்.
செய்க தவம்!! செய்க தவம் !!  677196 செய்க தவம்!! செய்க தவம் !!  677196 செய்க தவம்!! செய்க தவம் !!  677196

அன்புள்ள குயிலன்,

இதுவும் ஈகரை உறவுகளின் அன்பின் வெளிப்பாடு. உங்க அன்புக்கு என் மனமார்ந்த நன்றி குயிலன் செய்க தவம்!! செய்க தவம் !!  599303 . இனி கொஞ்சம் சின்னதாக எழுத முயற்சிக்கிறேன். உங்க வசதிக்காக.. சரியா? செய்க தவம்!! செய்க தவம் !!  102564 எனக்கும் முதுகு வலி குறையுமே.. செய்க தவம்!! செய்க தவம் !!  755837

செய்க தவம்!! செய்க தவம் !!  Aசெய்க தவம்!! செய்க தவம் !!  Aசெய்க தவம்!! செய்க தவம் !!  Tசெய்க தவம்!! செய்க தவம் !!  Hசெய்க தவம்!! செய்க தவம் !!  Iசெய்க தவம்!! செய்க தவம் !!  Rசெய்க தவம்!! செய்க தவம் !!  Aசெய்க தவம்!! செய்க தவம் !!  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 04, 2011 9:54 pm

மஞ்சுபாஷிணி wrote:மூர்த்தி சிறிதென்றாலும் கீர்த்தி பெரியது குயிலன்.... பானுவின் வரிகளின் ரசிகை நான்..... சின்னதானாலும் பெரியதானாலும் முழுக்க படித்துவிடுவேன்..... செய்க தவம்!! செய்க தவம் !!  154550
அன்புக்குத் தலைவணங்குகிறேன் மஞ்சு.. செய்க தவம்!! செய்க தவம் !!  678642 செய்க தவம்!! செய்க தவம் !!  154550 நினகே ஒந்து முத்து கொடுத்தேனே செய்க தவம்!! செய்க தவம் !!  942

செய்க தவம்!! செய்க தவம் !!  Aசெய்க தவம்!! செய்க தவம் !!  Aசெய்க தவம்!! செய்க தவம் !!  Tசெய்க தவம்!! செய்க தவம் !!  Hசெய்க தவம்!! செய்க தவம் !!  Iசெய்க தவம்!! செய்க தவம் !!  Rசெய்க தவம்!! செய்க தவம் !!  Aசெய்க தவம்!! செய்க தவம் !!  Empty
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக