புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுதந்திரதேசம் கனவில் + சக்தி சஞ்சலம் தீர் +ஏக்கம் (3 கவிதைகள்) Poll_c10சுதந்திரதேசம் கனவில் + சக்தி சஞ்சலம் தீர் +ஏக்கம் (3 கவிதைகள்) Poll_m10சுதந்திரதேசம் கனவில் + சக்தி சஞ்சலம் தீர் +ஏக்கம் (3 கவிதைகள்) Poll_c10 
100 Posts - 48%
heezulia

54 Posts - 26%
Dr.S.Soundarapandian

30 Posts - 14%
mohamed nizamudeen

9 Posts - 4%
T.N.Balasubramanian

7 Posts - 3%
prajai

3 Posts - 1%
JGNANASEHAR

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

Geethmuru

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுதந்திரதேசம் கனவில் + சக்தி சஞ்சலம் தீர் +ஏக்கம் (3 கவிதைகள்) Poll_c10சுதந்திரதேசம் கனவில் + சக்தி சஞ்சலம் தீர் +ஏக்கம் (3 கவிதைகள்) Poll_m10சுதந்திரதேசம் கனவில் + சக்தி சஞ்சலம் தீர் +ஏக்கம் (3 கவிதைகள்) Poll_c10 
227 Posts - 51%

137 Posts - 31%

30 Posts - 7%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுதந்திரதேசம் கனவில் + சக்தி சஞ்சலம் தீர் +ஏக்கம் (3 கவிதைகள்)

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Apr 01, 2011 1:48 pm

நள்ளிரவுநேரம் நான் தூங்கும்வேளை
நல்லதோர் கனவொன்று கண்டேன்
துள்ளிவரும் ஓடை நீரலைகளோடு
தூயதொரு தேசமும் கண்டேன்
வெள்ளியொடு வானில் விளையாடுமேகம்
வெண்ணிலவைக் கண்மறைத்துஓட
அள்ளி மலர்வாசம் அணைகின்ற தென்றல்
அதனோடு சுகம் கண்டு நின்றேன்

தெள்ளமுது உண்ணத் தேனிலவைக் கண்டு
தாவென்று கைநீட்டும் பிள்ளை
வெள்ளிமதி நீரில் வீழ்ந்ததென ஓடை
விரல் காட்டி அமுதூட்டும் அன்னை
கொள்ளிஎன ஒளிரும் குறுகுறுத்த விழிகள்
கொண்டசில நங்கையரும் கண்டேன்
எள்ளளவும் அச்சம் இல்லாத பெண்கள்
இள நகைத்துத் தமிழ்பேசக் கேட்டேன்

மல்லிகையின் வாசம் மனங்கிறங்கும் நேரம்
மனைகூடி மாதர் துணையோடு
அல்லிமலர் பொய்கை அதனோரம் நின்று
ஆடவரும் கூடிமகிழ்வாகி
துல்லிய வெண்ணொளியில் தூயமனங்காணும்
துயரற்ற வாழ்விருக்கக் கண்டேன்
நல்லிதயங் கொண்டு நல்லவர்கள் வாழ
நாடு மலர்ந்தான விதம் கண்டேன்

வல்லபடை யில்லை வாகனங்களில்லை
வார்த்தைகளில் செந்தமிழேயன்றி
கொல்லுமொழி இல்லை கூக்குரல்கள் இல்லை
குறைஉயிரின் மரணஒலி இல்லை
சொல்லரிய துன்பம் தருகின்ற ஓசை
சுற்றியேஇடி வீழும் சத்தம்
மெல்ல உயிர் கொல்லும் மனங்கொண்டபீதி
மற்றுமிவை சற்றேனு மில்லை

சந்தணமும் பூவும் சேர்ந்த நறுவாசம்
சுந்தரமென் காற்றோடு வீச
முந்திவிழுந் தெங்கோ முடிகோதும் பெண்கள்
மூட்டியநல் அகில்வாசம் மோந்தேன்
சந்திகளில் ஆண்கள் சலசலத்துஓடி
சதிரோடு வலிகொண்டுமோதி
எந்த உடல்வலிது என்று கைநீட்டி
இளமையின் களிப்பாடக் கண்டேன்

பந்தங்களில் தீயும் பக்கமெங்கும் ஒளிரப்
பலகோடி வண்டுகளைப் போல
அந்திதனில் கூடும் அங்காடிமக்கள்
அவர்பேசும் ரீங்காரம் கேட்டேன்
செந்தமிழில்பாடிச் சிறுமியொரு நடனம்
செய்கின்ற எழில்வந்து மேவ
ஐந்தாறு பேதை அவளோடுசேர்ந்து
ஆடலிடும் மயில்நடமும் கண்டேன்

(அவள் பாடி ஆடுகிறாள்)

வெற்றிவந்து சேர்ந்த தெங்கள் வீரநாட்டிலே -விடி
வெள்ளியும் எழுந்த தெங்கள் ஈழவானிலே
சுற்றிநின்ற சிங்க ளங்கள் சோர்ந்து போனதே -மீண்டும்
சூரியன் கிழக் கெழுந்து சோதியானதே
பற்றிநின்ற பகையும்போ யெம் பாவம்தீர்ந்ததே -நானும்
பாடிஆட வென்று நல்ல வாழ்வு வந்ததே
குற்றமற்ற மாந்தர் கொன்ற காலம் போனதே -ஈழ
கொள்கைவென்று வாழ்வு மீண்டும் கூடிவந்ததே

வற்றிபோன வாழ்வி லேவ சந்தம்வீசுதே -நாமும்
வைத்தஇலட் சியங்கள் கொள்சு தந்திரத்தையே
பற்றினோம்ப டைகள் வென்று பாகம் கொண்டோமே -எங்கள்
பாசஅன்னை ஈழம்கொண்ட பாடு யாவுமே
அற்று மீண்டும் அன்பு கொள்ளும் தேசமானதே -இன்ப
அலையும்மேவி மகிழ்விலாடும் அழகுநாளிதே
விற்றுவிட்ட தானஎங்கள் வேதனைகளே -அந்த
வீணர்சிங்க ளத்தர் வாங்கி வைத்தார் பாவமே!

(திடுக்குறவைத்தது ஒரு சத்தம்)

தட்டிக் குலுக்கிடச் சட்டென ஓசையும்
வெட்டி முழக்கிடக் கேட்டேன்
பட்டென நாலு மனிதர் துரத்திட
பக்கம் வளைந்துமே ஓடி
வட்ட மடித்தொரு வாலிபன் ஓடிட
வந்து பிடித்தனர் சுற்றி
தொட்டு நிறுத்திய வீரர் அவனிடம்
சொல்லுநீ யாரெனக் கேட்டார்

வல்லமை கொண்ட அவ் வாலிபனோதன்
வாய்தனில் புன்னகை கொண்டு
சொல்லிக் கொடுத்தவன் என்றெனைச் சொல்லுவர்
சுற்றிய நீரறிவீரே
கொல்ல வெனத்தனும் கொண்டு செல்வீரெனில்
கொஞ்சமும் அச்ச மறியேன்
கல்லெனும் நெஞ்சமும் கொண்டவனாம்இதோ
கைகள் விலங்கிடு மென்றான்

சுற்றிய வீரரோ செந்தமிழீழச்
சுதந்திர நாட்டினைக் காவல்
நிற்பவர் என்றுமே கண்டே னதன்பின்னே
நேர்வதில் ஆவலும் கொண்டேன்
சற்றுத் திரும்பிய வீரர் இவனையும்
சந்தை நடுவினில் வைத்து
குற்ற மிழைத்தனன் மக்காள் ஈழமது
கொள்கையில் தண்டியு மென்றார்

சட்டெனவே சிலர் கூடியவனையும்
சேலை யணிந்திடச் செய்து
கட்டி நின்றதொரு குட்டிக் கழுதையில்
கயவன் ஏறிடவைத்து
விட்டனர் சுற்றியும் வாஎனக்கூறியே
வேடிக்கை செய்ததன் பின்பு
கொட்டிநகைத்துப்பின் கூட்டம் கலைந்திட
விட்டனர் போகவே வீடு

தென்ற லினித்தெழ தேன்மழை பெய்த்திட
தீரமெழுந் துடலெங்கும்
இன்ப மெழுந்திட என்நினைவெங்குமே
எத்தனை மங்கலபோதை
அன்பெனும் ஈழஅரசு மலர்ந்தது
அற்புதமே இனிவாழ்வில்
துன்பமதன் பெரும் எல்லையடைந்தனன்
தோன்றியவேதனை போமாம்

செந்தமிழீழமே எங்கணுமே
இனி சாவுகள் ஓலங்களில்லை
சுந்தரி பாவையர் கொண்ட விரோதங்கள்
கூக்குரலு மினிஇல்லை
பைந்தமிழ் வீரரெம் மைந்தர்கள் மேனியும்
செங்குருதி நதியோடும்
அந்த நிலைதனும் போனது ஆகா..!
ஆளுமை கொண்டீழம் கண்டோம்

விந்தை மனோநிலை ரம்மியமானது
மேகம்மறை யிருள்நீங்கி
வெந்து சிறைகளில் வேதனை கண்டவர்
வீடுதிரும்பின ராமே
முந்தி எழுந்திடும் புன்னகைமேவும்
முகங்க ளெதிரினில் கண்டேன் வந்தனமும் எழ வாழியநீயென
சுந்தரகீதம் இசைத்தேன்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Apr 02, 2011 12:05 pm

உலவும்காற்றும் உயிரும்கொண்ட உறவைத் தந்தவளே
நிலவும் உள்ளத் துயரைப் போக்கி நிம்மதி தாராயோ
பலதும் மனதில் கொடியாய் தோன்றிப் படரச்செய்பவளே
பாசம் படரும் மனதில் என்றும் பசுமை தாராயோ

வளமும் வாழ்வும் மனிதன்கொண்டே வளரச்செய்பவளே
வந்தேன் உன்னை வணங்கிக் கேட்டேன் வசந்தம் தாராயோ
களமும் கனவும் கையில் இன்று காணோம் எனமறைய
காற்றும்கூடப் பகையென்றாகிக் கண்ணீர் சொரியுதடி

தினமும் எண்ணம் கருகித் துன்பம் தெரியும் வாழ்வென்றே
தேனில் விழுந்த தீயோர் நஞ்சாய் தேகம் குலையுதடி
மனமும்கோணி மகிழ்வும்நாணி மாற்றம் வேண்டியொரு
மழையைத் தேடும் கழனிப் பயிராய் மறுகிக்கிடப்பேனோ

உலகின்சக்தி உயிரின் சக்தி ஒளியின் சக்தியெனும்
உள்ளத்திண்மை உள்ளேதருவாய் உள்ளம் இரங்காயோ
பலதும்பாடிக் கவியென்றாக்கும் பண்பைத் தந்தவளே
பாரில் இன்னும் பலநூறெண்ணும் பலமும் தாராயோ

நோயும் பிணியும் நிற்காதெந்தன் நினைவில் மகிழ்வோங்கி
நீயும் சக்தி நிறைவைத் தந்து நெஞ்சில் கவியோங்கிப்
பாயும்நதியாய் பொங்கும் வெள்ளப் பாங்காய் பலநூறு
பாவும் புனையக் காதில்வந்து பாடிச்செல்லாயோ!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Apr 02, 2011 12:40 pm

இரண்டு கவிதைகளும் மேம்போக்கில் வாசித்தேன்... ஆழமாக வாசித்து ரசிகக் வேண்டும்.. ரசித்துப் பின் எனது கருத்தைப் பதிவேன்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 02, 2011 2:03 pm

கனவெனும் கனவு....

முதல்வரியிலிருந்து படித்துக்கொண்டே போனபோது நானும் அந்த சந்தோஷத்தை உணர்ந்தேன் கனவென்று தெரிந்தே.....

ஏனெனில் கனவில் காண விழையும் சுதந்திரமும் எங்கள் ஈழம் மலர்ந்தால் இதோ இப்படி தான் இருக்கும் என்று அந்த சந்தோஷ உணர்வுக்கு அப்படியே கொண்டுச்சென்றது வரிகள்.....

சுதந்திர ஈழ மண்ணை நாங்களும் சுவாசித்தோம் உங்கள் வரிகளின் வாயிலாக..... பெண்கள் சிரித்து சந்தோஷமாக காண்கிறோம்..... பராக்கிரம வீரர்களை காண்கிறோம் பெற்றோம் சுதந்திரம் என்று நிம்மதி மூச்சு விட்டு கொண்டாடும் மக்களின் முகத்தில் நிரந்தர புன்னகையும் கண்டோம்....

ஐயா கனவு ஒரு நாள் நினைவு ஆகும் என்பதையும் வரிகளில் சத்தியம் உரைத்தீர்.......

அன்பு வாழ்த்துக்கள் ஐயா......அசத்தல் வரிகளுக்கு சூப்பருங்க

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சுதந்திரதேசம் கனவில் + சக்தி சஞ்சலம் தீர் +ஏக்கம் (3 கவிதைகள்) 47
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Apr 02, 2011 3:24 pm

மஞ்சுபாஷிணி wrote:கனவெனும் கனவு....

முதல்வரியிலிருந்து படித்துக்கொண்டே போனபோது நானும் அந்த சந்தோஷத்தை உணர்ந்தேன் கனவென்று தெரிந்தே.....

ஏனெனில் கனவில் காண விழையும் சுதந்திரமும் எங்கள் ஈழம் மலர்ந்தால் இதோ இப்படி தான் இருக்கும் என்று அந்த சந்தோஷ உணர்வுக்கு அப்படியே கொண்டுச்சென்றது வரிகள்.....

சுதந்திர ஈழ மண்ணை நாங்களும் சுவாசித்தோம் உங்கள் வரிகளின் வாயிலாக..... பெண்கள் சிரித்து சந்தோஷமாக காண்கிறோம்..... பராக்கிரம வீரர்களை காண்கிறோம் பெற்றோம் சுதந்திரம் என்று நிம்மதி மூச்சு விட்டு கொண்டாடும் மக்களின் முகத்தில் நிரந்தர புன்னகையும் கண்டோம்....

ஐயா கனவு ஒரு நாள் நினைவு ஆகும் என்பதையும் வரிகளில் சத்தியம் உரைத்தீர்.......

அன்பு வாழ்த்துக்கள் ஐயா......அசத்தல் வரிகளுக்கு சூப்பருங்க

நான் கவிகள் எழுதிமுடித்ததும் மனம் நிறைவு பெறுவதில்லை. இந்தநிமிடம்வரை! இதுபோன்ற கருத்துக்களோ நெஞ்சை நிறைவுசெய்கிறது. ஆனால் எழுதும் தாகத்தை தூண்டி விடுகிறது. அளவற்ற நன்றிகள்!

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 02, 2011 3:26 pm

உங்கள் கவிதை வரிகள் பெற நாங்கள் தான் பாக்கியம் பெற்றிருக்கவேண்டும் ஐயா.... அசாத்திய வரிகள் அப்படியே நெஞ்சில் ஆணி அறையச்செய்து பசுமையாக நிலைக்கவும் செய்கிறது உங்கள் கவிதைகள் சொன்ன கருத்துக்கள் ஏராளம் ஐயா.... தொடர்ந்து உங்கள் பங்களிப்பை வேண்டுகிறோம் என்றும்....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சுதந்திரதேசம் கனவில் + சக்தி சஞ்சலம் தீர் +ஏக்கம் (3 கவிதைகள்) 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 02, 2011 3:30 pm

kirikasan wrote:உலவும்காற்றும் உயிரும்கொண்ட உறவைத் தந்தவளே
நிலவும் உள்ளத் துயரைப் போக்கி நிம்மதி தாராயோ
பலதும் மனதில் கொடியாய் தோன்றிப் படரச்செய்பவளே
பாசம் படரும் மனதில் என்றும் பசுமை தாராயோ

வளமும் வாழ்வும் மனிதன்கொண்டே வளரச்செய்பவளே
வந்தேன் உன்னை வணங்கிக் கேட்டேன் வசந்தம் தாராயோ
களமும் கனவும் கையில் இன்று காணோம் எனமறைய
காற்றும்கூடப் பகையென்றாகிக் கண்ணீர் சொரியுதடி

தினமும் எண்ணம் கருகித் துன்பம் தெரியும் வாழ்வென்றே
தேனில் விழுந்த தீயோர் நஞ்சாய் தேகம் குலையுதடி
மனமும்கோணி மகிழ்வும்நாணி மாற்றம் வேண்டியொரு
மழையைத் தேடும் கழனிப் பயிராய் மறுகிக்கிடப்பேனோ

உலகின்சக்தி உயிரின் சக்தி ஒளியின் சக்தியெனும்
உள்ளத்திண்மை உள்ளேதருவாய் உள்ளம் இரங்காயோ
பலதும்பாடிக் கவியென்றாக்கும் பண்பைத் தந்தவளே
பாரில் இன்னும் பலநூறெண்ணும் பலமும் தாராயோ

நோயும் பிணியும் நிற்காதெந்தன் நினைவில் மகிழ்வோங்கி
நீயும் சக்தி நிறைவைத் தந்து நெஞ்சில் கவியோங்கிப்
பாயும்நதியாய் பொங்கும் வெள்ளப் பாங்காய் பலநூறு
பாவும் புனையக் காதில்வந்து பாடிச்செல்லாயோ!

பூமித்தாயின் வேதனைகள் தீரும் நாள் என்றோ?
ஈழ மக்களின் நிம்மதி மூச்சை கண்டு பெருமிதம் கொள்ளும் நொடி என்றோ?
சக்தி பெருகி பலம் நல்கி தீய சக்திதனை ஒடுக்கி நல்வாழ்வு தாராயோ

என்று வரம் வேண்டி கேட்கும் அன்பு வரிகளில் எத்தனை இனிமையும் உள்ளதோ அத்தனை இனிமையான வரிகளிலும் நம்பிக்கை தரும் வாக்காகவும் அமைந்தது சிறப்பு இக்கவிதை ஐயா.......

அருமையான வரிகளால் எங்கள் மனம் நிறைக்கும் அற்புதக்கவிதைக்கு என் அன்பு வாழ்த்துக்கள் ஐயா....
நீண்ட ஆயுள் தரட்டும் இறைவன் உங்களுக்கு இதுபோன்று அற்புத கவிதைகள் சமைப்பதற்கு..... சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சுதந்திரதேசம் கனவில் + சக்தி சஞ்சலம் தீர் +ஏக்கம் (3 கவிதைகள்) 47
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Apr 02, 2011 4:21 pm

இது ஏற்கனவே ஏமாற்றம் என்ற தலைப்பின் வெளியானதை சற்று திருத்தி புதிய வரிகள் சேர்த்து தருகிறேன். அதனால் புதிய இழையில் இடவில்லை

கவிதை 3
ஏக்கம்

நான்பிறந்தேன் இந்தநாட்டினிலே சிறு
வீட்டினிலே அன்புக் கூட்டினிலே
நீயிருந்தாய் அந்த வானத்திலே வெகு
தூரத்திலே முகிலோரத்திலே
ஏன் நடந்தேன் அந்திநேரத்திலே நதி
யோரத்திலே மனப்பாரத்திலே
நீ நடந்தாய் ஒளி தான் பொழிந்தே அந்த
நீலத்திரை விரிமேகத்திலே

வானத்திலே நினைக் காண்கையிலே வரும்
மோகத்திலே நினைவானதிலே
கானத்திலே இழைராகமெனத் தினம்
காணும் இளையவள் போனதெங்கே?
மீனதிலே விழியானதென துள்ளி
மூடும் இமைகளைத் தானுடையாள்
தேனதிலே குளித்தேகும் மொழிகளைத்
தூவும் அவளினைக் காணவில்லை

சோலை மலர்களும் தூங்கியதே தென்றல்
ஏங்கியதே மணம் வாங்கியதே
மாலைவெயில் மஞ்சள் போயிடவே
மலர்மீதினிலே வண்டு தூங்கியதே
பாலையிலே உள்ள நீரெனவே இவள்
பார்வையிலே ஒளியாகியதேன்
மேலையிலே ஒளி ஆதவனும் மேனி
மாழுவதாய் எண்ணம் போனதுமேன்?

காரிருளே சுற்றிக்காணலிலே அவள்
காதலிலேமனத் தேடலிலே
நீரிலினிலே உள்ளதானலையே எனும்
நேரழகில் மனமானதுவே
தேரினிலே வரும் தேவியென அவள்
தீயெனக் காதலைத் தூண்டியவள்
ஏரெனவே இரு மார்பெழுதும் இள
ஏந்திழையோ என்னை ஏய்த்ததுமேன்

தேனெனவே வெள்ளிபாலெனவே அலை
தோன்றியதே மின்னியாடியதே
மானெனவே துள்ளி ஓடியதே ஒரு
மங்கையென்றே நதி பொங்கிடவே
தண்ணிலவே உனை எண்ணியதோ ஒரு
அல்லிமலர்ந் துள்ளம் ஏங்கியதே
எண்ணமதி லுனைத் தான்நினைத்தே பெரும்
ஏக்கமதில் நீரிலாடியதே.

இன்பம்தருங்குளிர் வீசியதே
உடல் கூசியதே மெல்ல ஆடியதே
சின்னதென இசை தென்றலிலே வந்து
தேனெனவே செவி பாய்ந்ததுவே
அன்பை இழந்தவன் நெஞ்சினிலே வந்து
பொங்கியதே இன்பம் உன்னொளியால்
நன்றிசொல உனைத்தேடிநின்றேன் அந்தோ
நாடி வந்த முகில் மூடியதேன்?

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 02, 2011 5:20 pm

அழகு அழகு அத்தனை வரிகளும் அழகு

ஞானத்திலே பர மோனத்திலே
உயர் மானத்திலே அன்னதானத்திலே
கானத்திலே பாருக்குள்ளே நல்ல நாடு

என்ற வரிகள் உடனே நினைவுக்கு வருகிறது உங்கள் வரிகளை படிக்கும்போது அழகும் எதுகை மோனையும் சேர்த்து கவி வரிகளை தருவது இனிப்பில் தோய்த்த இனிப்பையே தருவது போல் இருக்கிறது ஐயா....

அன்பு வாழ்த்துக்கள் அழகிய வரிகளுக்கு.....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சுதந்திரதேசம் கனவில் + சக்தி சஞ்சலம் தீர் +ஏக்கம் (3 கவிதைகள்) 47
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக