ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat 7 Sep 2024 - 16:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

இண்டர்லோக்: ஒப்பனை மாற்றங்களை ஏற்க முடியாது

Go down

இண்டர்லோக்: ஒப்பனை மாற்றங்களை ஏற்க முடியாது Empty இண்டர்லோக்: ஒப்பனை மாற்றங்களை ஏற்க முடியாது

Post by சிவசங்கர் Thu 31 Mar 2011 - 18:24

புற்று நோய் போல இண்டர்லோக் விவகாரம் திரும்பத் திரும்ப எழுந்து கொண்டே இருக்கிறது.

மலேசிய இந்தியர்களைப் புண்படுத்துவதாக கருதப்படும் சொற்களை அந்த நாவலிலிருந்து அகற்றுவதற்கு வாக்குறுதி அளித்ததின் வழி அந்தப் பிரச்னையை தீர்த்து விட்டு பள்ளைக்கூடங்களில் அதனைப் பாட நூலாக தொடர்ந்து வைத்திருப்பதில் வெற்றி கண்டு விட்டதாக கடந்த வாரம் துணைப் பிரதமர் முஹடின் யாசின் எண்ணியிருந்தார்.

சில ஒப்பனை மாற்றங்களைச் செய்து பிஎன்னுக்குள் இருக்கும் – மஇகா போன்ற-அந்த நாவல் ஐந்தாம் படிவ மாணவர்களுக்கான இலக்கிய நூலாக அதனை வைத்திருப்பதைக் குறைகூறுகின்ற தரப்புக்களை அடக்கி விட முடியும் என அவர் நம்பினார்.

மலேசிய சீனர்களையும் காயப்படுத்துகின்ற அம்சங்கள் அந்த நூலில் இருப்பதால் அது மீட்டுக் கொள்ளப்பட வேண்டும் என கடந்த வாரம் பல அரசு சாரா சீன அமைப்புக்களும் ஒன்றிணைந்து கோரிக்கை விடுத்துள்ளன.

தங்களை அவமானப்படுத்துகின்ற அம்சங்கள் அந்த புத்தகத்தில் இருப்பதாக திடீரென விழித்தெழுந்துள்ள அந்த அமைப்புக்கள் விரிவான கண்ணோட்டத்தில் அதனைப் பார்க்கின்றன.

மலேசிய வரலாற்றைத் திருப்பி எழுதவும் மலாய்க்காரர் அல்லாதாரின் பங்கு சொற்பமானது என்ற மாயை உருவாக்கவும் கல்வி அமைச்சில் உள்ள சில சக்திகள் மேற்கொண்டுள்ள முயற்சியே அது என அவை கருதுகின்றன.

கல்வி அமைச்சின் அனுமதியுடன் எழுதப்பட்ட வரலாற்றுப் புத்தகங்கள், தேவையில்லாமல் இஸ்லாமியச் சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. மலேசிய உருவாக்கத்தில் மற்ற அங்கங்களின் பங்கிற்கு அது முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

வரலாறு திருத்தப்படுவது என்பது வரலாற்றைப் போன்றே பழமையானது. துணைப் பிரதமர் பொறுப்பேற்றுள்ள கல்வி அமைச்சிலிருந்து மேற்கொள்ளப்படும் அந்த முயற்சி, மலேசியாவில் புதிய அரசியல் ஒழுங்கு முறை உருவாவதை சீர்குலைக்கும் நோக்கத்தைக் கொண்டது என ஆய்வாளர்கள் விளக்கமளிக்கின்றனர்.

இண்டர்லாக் எதிர்ப்பாளர்கள்

தொடக்கத்தில் மலேசிய இந்தியர்கள் மட்டும் உருவாக்கிய இண்டர்லோக் எதிர்ப்பு அணியில் இப்போது மலேசிய சீனர்களும் இணைந்து கொண்டுள்ளனர்.

பல்வேறு இனங்களுக்கு இடையில் வாக்காளர்களைக் கவரப் போராடும் அரசியல் கட்சிகளுடைய கவனத்தையும் அந்த விவகாரம் இயல்பாகவே ஈர்த்துள்ளது.

அந்த நாவல் தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்து கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் பாஸ் உதவித் தலைவரும் குபாங் கெரியான் எம்பியுமான சலாஹுடின் அயூப் கண்டனம் தெரிவித்துள்ளதில் எந்த வியப்பும் இல்லை. இளம் மலேசியர்கள் வாசிப்பதற்கு அந்த நூல் தேர்வு எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டது என்றும் அவர் வினவினார்.

மக்களுடைய இனம் அல்லது நம்பிக்கைகளை சிறுமைப்படுத்துவதை இஸ்லாம் ஏற்கவில்லை என கடந்த வாரத் தொடக்கத்தில் பக்காத்தான் தலைமைத்துவ மன்றக் கூட்டத்தில் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறினார்.

இண்டர்லோக் ஆதரவாளர்கள் இப்போது தாங்கள் பல முனைகளிலிருந்து தாக்கப்படுவதை உணரத் தொடங்கியுள்ளனர். அந்தத் தாக்குதல் மலேசிய இந்தியத் தரப்பிடமிருந்து மட்டும் வந்தால் அதனை எளிதாக அடக்கியிருக்கலாம். ஆனால் எஸ் சாமிவேலு மஇகா தலைவராக இருந்தபோது அந்த நூலின் எதிர்ப்பாளர்களில் ஒருவராக இருந்தால் ஆட்சேபத்தை எளிதாக சமாளித்திருக்க முடியாது.

ஆனால் புதிய தலைவர் ஜி பழனிவேலின் கீழ் மஇகா பலவீனமாகத் தோற்றமளிக்கிறது. இண்டர்லோக் மீது தாக்குதல் தொடுக்க அதன் பலவகையான எதிர்ப்பாளர்கள் ஒன்று திரளுகின்றனர். அந்த வேளையில் சிறிதளவு மாற்றம் மட்டுமே செய்யப்பட்ட அந்த நாவல் பதிப்பை அந்தக் கட்சி ஆட்சேபிக்காமல் இருக்கிறது. அந்த நிலைமை தொடக்கத்தில் அந்த நாவலுக்கு கட்சி காட்டியதாக கருதப்படும் ஆட்சேபத்துக்கு மாறாக உள்ளது.

இப்போது அந்த நாவலைக் குறை கூறுகின்றவர்கள் ஒரினத்தை மட்டும் சார்ந்திருக்கவில்லை. இன்னொரு இனமும் சேர்ந்து கொண்டுள்ளது. அதனால் மலேசிய அரசியலுக்குத் தான் பொருத்தமாக இருக்கிறோமா இல்லையா என்பதை மஇகா மீண்டும் பரிசீலினை செய்ய வேண்டும்.

ஒன்று திரளுவதற்கான காரணமாக அதனை மாற்றுவது

பினாங்கில் இந்த வார இறுதியில் பக்காத்தானைச் சேர்ந்த மலேசிய இந்தியத் தலைவர்கள் கூடுகின்றனர்.

அவர்கள் இண்டர்லாக் விஷயத்தை தீவிரமாக எடுத்துக் கொள்வது திண்ணம். மக்களுடைய இனத்தை அல்லது நம்பிக்கைகளை சிறுமைப்படுத்துவது இஸ்லாத்திற்குப் புறம்பானது என்ற நிலையை பாஸ் அறிவித்திருப்பதும் அவர்களுக்கு ஊக்கமூட்டும் விஷயமாகும்.

அந்த நாவல் மலேசிய இந்தியர்களுக்கு மட்டுமின்றி மற்ற இன வம்சாவளி மக்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்துகிறது என டிஎபி ஈப்போ பாராட் எம்பி எம் குலசேகரன் அந்தக் கூட்டத்தில் வலியுறுத்துவார் எனக் கருதப்படுகிறது. அதனால் அந்தப் பிரச்னையை மக்கள் ஒன்று திரளுவதற்கான காரணமாக அதனை எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தக் கூடும்.

“அந்த நாவல் தொடர்ந்து வைத்திருக்கப்படுவது, 2007ம் ஆண்டு ஜுலை மாதம் ஷா அலாமில் இந்துக் கோவில் ஒன்று இடிக்கப்பட்டதற்கு ஒப்பாகும்,” என குலசேகரன் இவ்வாரத் தொடக்கத்தில் மலேசியாகினியிடம் கூறியிருந்தார்,.

அந்த கோவில் இடிக்கப்பட்ட சம்பவம் வீடியோவில் எடுக்கப்பட்டது. அது மலேசிய இந்துக்களிடையே அதன் பிரதிகள் பரவலாக விநியோகம் செய்யப்பட்டன. 2008 மார்ச் பொதுத் தேர்தலில் பிஎன்னுக்கான ஆதரவை இந்திய சமூகம் மீட்டுக் கொண்டதற்கு அந்த சம்பவம் வழி வகுத்தது என்று இப்போது பாராட்டப்படுகிறது.

வாசிக்கும் பழக்கம் மலேசியர்களிடையே குறைவாக இருப்பதைக் கருத்தில் கொண்டால் புண்படுத்தும் இலக்கிய நூல் ஒன்று, வழிபாட்டு இல்லம் ஒன்றை புல்டோசர்கள் இடிக்கும் வீடியோவைப் போன்று தூண்டி விடும் ஆற்றலைக் கொண்டதில்லை.

என்றாலும் இண்டர்லாக் மீது தொடரும் சர்ச்சை பெரிதாகி பிஎன்னுக்கு எதிரான உணர்வுகளை தூண்டி விடும் தீப்பொறியாகவும் இருக்கலாம். 'மலேசியா இன்று'
சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அரசுத்துறையில் கவனக்குறைவை ஏற்க முடியாது..! அமைச்சர் ஜெயக்குமார் உறுதி
» தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை மறுப்பு
» ஒசாமா - இஸ்லாமிய பயங்கரவாதம் என்பதை ஏற்க முடியாது
» தலிபானுடனான ஐஎஸ்ஐ உறவை ஏற்க முடியாது: அமெரிக்கா கருத்து
» ஆல்பாஸ் அறிவிப்பை ஏற்க முடியாது- ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum