புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தத்துவ முத்துக்கள்! - Page 2 Poll_c10தத்துவ முத்துக்கள்! - Page 2 Poll_m10தத்துவ முத்துக்கள்! - Page 2 Poll_c10 
46 Posts - 61%
heezulia
தத்துவ முத்துக்கள்! - Page 2 Poll_c10தத்துவ முத்துக்கள்! - Page 2 Poll_m10தத்துவ முத்துக்கள்! - Page 2 Poll_c10 
15 Posts - 20%
dhilipdsp
தத்துவ முத்துக்கள்! - Page 2 Poll_c10தத்துவ முத்துக்கள்! - Page 2 Poll_m10தத்துவ முத்துக்கள்! - Page 2 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
தத்துவ முத்துக்கள்! - Page 2 Poll_c10தத்துவ முத்துக்கள்! - Page 2 Poll_m10தத்துவ முத்துக்கள்! - Page 2 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
தத்துவ முத்துக்கள்! - Page 2 Poll_c10தத்துவ முத்துக்கள்! - Page 2 Poll_m10தத்துவ முத்துக்கள்! - Page 2 Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
தத்துவ முத்துக்கள்! - Page 2 Poll_c10தத்துவ முத்துக்கள்! - Page 2 Poll_m10தத்துவ முத்துக்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தத்துவ முத்துக்கள்! - Page 2 Poll_c10தத்துவ முத்துக்கள்! - Page 2 Poll_m10தத்துவ முத்துக்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தத்துவ முத்துக்கள்! - Page 2 Poll_c10தத்துவ முத்துக்கள்! - Page 2 Poll_m10தத்துவ முத்துக்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
தத்துவ முத்துக்கள்! - Page 2 Poll_c10தத்துவ முத்துக்கள்! - Page 2 Poll_m10தத்துவ முத்துக்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தத்துவ முத்துக்கள்! - Page 2 Poll_c10தத்துவ முத்துக்கள்! - Page 2 Poll_m10தத்துவ முத்துக்கள்! - Page 2 Poll_c10 
41 Posts - 60%
heezulia
தத்துவ முத்துக்கள்! - Page 2 Poll_c10தத்துவ முத்துக்கள்! - Page 2 Poll_m10தத்துவ முத்துக்கள்! - Page 2 Poll_c10 
13 Posts - 19%
mohamed nizamudeen
தத்துவ முத்துக்கள்! - Page 2 Poll_c10தத்துவ முத்துக்கள்! - Page 2 Poll_m10தத்துவ முத்துக்கள்! - Page 2 Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
தத்துவ முத்துக்கள்! - Page 2 Poll_c10தத்துவ முத்துக்கள்! - Page 2 Poll_m10தத்துவ முத்துக்கள்! - Page 2 Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
தத்துவ முத்துக்கள்! - Page 2 Poll_c10தத்துவ முத்துக்கள்! - Page 2 Poll_m10தத்துவ முத்துக்கள்! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
தத்துவ முத்துக்கள்! - Page 2 Poll_c10தத்துவ முத்துக்கள்! - Page 2 Poll_m10தத்துவ முத்துக்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தத்துவ முத்துக்கள்! - Page 2 Poll_c10தத்துவ முத்துக்கள்! - Page 2 Poll_m10தத்துவ முத்துக்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
தத்துவ முத்துக்கள்! - Page 2 Poll_c10தத்துவ முத்துக்கள்! - Page 2 Poll_m10தத்துவ முத்துக்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தத்துவ முத்துக்கள்! - Page 2 Poll_c10தத்துவ முத்துக்கள்! - Page 2 Poll_m10தத்துவ முத்துக்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தத்துவ முத்துக்கள்!


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 8:03 pm

First topic message reminder :

உயிரோடுள்ள மனிதனுக்குக் கட்டப்படும் கல்லறையே சோம்பல். - ஜெரேமி டெய்லர்.

துயரம் தலையை நரைக்கச் செய்யும். அதே சமயம் இதயத்தை வலிமையாக்கும்.- ஜார்ஜ் பெய்ஷி.

அரிய சாதனைகள் செய்யப்படுவது வலிமையினால் அல்ல; விடாமுயற்சியினால்தான். - ஓவிட்.

அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின் தொடரும். - சாலமன்.

தோல்வி குற்றம் காது. உயர்வற்ற லட்சியமே ஒரு குற்றமாகும். - ஜேம்ஸ்ரசல்

உங்களிடம் யாரவது உழைப்பை எதிர்பார்த்து ஒரு நிமிஷம் என்றால் என்ன என்பதை அறியாமல் சரி சொல்லாதீர்கள்.-அலெக் மெக்கன்ஸி.

உன் நேரத்தைப் பாதுகாத்து கொள். அவை தீட்டப்படாத வைரங்கள்.-ரால்ஃப் வல்டோ எமர்சன்.

வெற்றிபெறும் நேரத்தைவிட நாம் மகிழ்ச்சியுடனும், நம்பிக்கையுடனும் வாழும் நேரமே நாம் பெறும் பெரிய வெற்றி.

ஆயிரம் நண்பர்கள் இருப்பார்கள் .சமயத்திற்கு ஒருவரும் அகப்படமாட்டார்கள். ஒரே ஒரு எதிரி இருப்பான்.எங்கேயும் எப்போதும் அவன் எதிர்ப்பட்டுக் கொண்டே இருப்பான்.

தேக்கம் என்பது மரணம், நீரோட்டம் என்பது வாழ்வு.

.அறிவு என்பது கொல்லன் பட்டறை ஈட்டியைப்போல், அவ்வப்போது தீட்டப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

அச்சம் என்பது அடைகாக்கப்படும் அழுக்காகும்.

ஆசிரியர் கதவைத் திறக்கிறார், நீ உன் வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கிறாய்.

நீங்கள் சூரியனின் ஒளியில் பிரவேசிக்கும்போது, அதன் நிழல் உங்களை பிரதிபலிக்கின்றது.

நீங்கள் உண்மையைச் செலுத்தும்போது அதுவே திரும்பக் கிடைக்கிறது.

கடினமான செயல்களைக் சிறியதாகவும், புகழ்பெற்ற செயல்களை எளிமையாகவும் கையாழப் பழகவேண்டும். இதுவே உண்மையான வெற்றிக்கு அறிகுறி.

நாம் வாழ்வில் ஒரு வழியைத்தேடி கொண்டிருக்கும்போதே இன்னொரு வழி எளிதாக அமைகிறது

எந்த முயற்சியில் நீங்கள் தீவிரமாக ஈடுபடுகிறீர்களோ, ஒரு கட்டத்தில் அதை நீங்கள் அடைகிறீர்கள்.

மற்றவர்கள் உங்களுக்குத் தடைக்கல்லாய் இருக்கும்போதுதான், உங்களுக்கு நிரந்தரப் பாதை வெளிச்சமிடப்படுகிறது.

பழக்க வழக்ககங்களே ஒருவனை நல்லவனாகவும், தீயவனாகவும் மாற்றுகின்றன.

மழைத்துளி சொன்னது, முத்துக்கான வித்து எப்பொழுதும் விழலாம். விழித்திரு, மனிதா விழித்திரு.

உண்மை ஒரு நாள் வெண்றே தீரும்.

தன்னுடைய தவறு எது என்பதைக் கண்டுபிடிப்பவன், அறிவுடன் வாழ முதல் படிக்கட்டில் கால் வைத்துவிட்டவன் ஆகிறான்.

உலகின் மிகவும் தெய்வீகமானது, சக மனிதரிடம் நீங்கள் காட்டும் அன்பும், பரிவும்தான்.

செல்வம் குடியிருக்கும் வீட்டில் மனித பண்பு சீரழிகிறது.

அழகே உண்மை, உண்மையே அழகு.

அறிஞர்கள் புகழ்ச்சிக்கும், இகழ்ச்சிக்கும் இசைந்து கொடுப்பதில்லை.



தத்துவ முத்துக்கள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Mar 29, 2011 8:22 pm

நாம் பெரும்பாலான மனிதரை வெறுப்பதற்கு முக்கியமான காரணம் அவர்களிடம் இருக்கும் கெட்ட குணங்கள் அல்ல. நம்மிடம் உள்ள கெட்ட குணங்கள்தான்.

இது ரொம்ப பிடித்த தத்துவமாக எனக்கு தோன்றுகிறது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 8:25 pm

முரளிராஜா wrote:நாம் பெரும்பாலான மனிதரை வெறுப்பதற்கு முக்கியமான காரணம் அவர்களிடம் இருக்கும் கெட்ட குணங்கள் அல்ல. நம்மிடம் உள்ள கெட்ட குணங்கள்தான்.

இது ரொம்ப பிடித்த தத்துவமாக எனக்கு தோன்றுகிறது

உண்மைதானே முரளி! இதை அனைவரும் உணர்ந்தால் நடப்பது அனைத்தும் நன்றாகவே நடக்கும்!



தத்துவ முத்துக்கள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Mar 29, 2011 8:33 pm

முத்துக்கள் ஒன்றொன்றும் மின்னுகிறது எல்லோருக்கும் பயன் தரும் பகிர்வை தந்தமைக்கு அன்பு நன்றிகள் சிவா.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தத்துவ முத்துக்கள்! - Page 2 47
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 8:34 pm

எவன், எந்தெந்த அளவு பாத்திரத்தை என்னென்ன முறையில் வைத்திருக்கிறானோ... அந்தந்த அளவு அவனுக்கு கடவுளின் கருணை கிடைக்கிறது.

உயர்வு, தாழ்வுக்கு இடமற்றதுதான் உலகம். அவ்விரண்டும் மனிதனாகக் கற்பித்துக் கொண்டவை.

சாவுக்குப் பயப்படாத ஒருவன், எதையும் சாதிக்கும் சக்தி பெற்றவனாகி விடுகிறான்.

வைராக்கியம் எங்கே தவறுகிறதோ, அப்போது துறவறம் தவறிப் போகும்.

கல்லூரிகளும் சர்வ கலாசாலைகளும் பட்டதாரிகளைத் தான் உண்டாக்கும். புத்திசாலிகளை உண்டாக்கா!

ஒதுங்கிவாழ்வதே சந்நியாசம். ஊருடன் வாழ்வதே இல்லறம்.

மனிதனுடைய ஆசை மேலோங்கி விட்டால் ஆண்டவனையே ஏமாற்ற முனைந்து விடுகிறான்.

தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கமின்றி நடந்து கொள்கிறவன், பொது வாழ்வில் ஒழுக்கமுடன் நடப்பான் என்பது வடிகட்டிய புரட்டு.

தனியாக இருக்கும்போது சிந்தனையிலும் கூட்டத்தில் இருக்கும்போது வார்த்தையிலும் கவனமாக இருக்க வேண்டும்.

நாம் எவ்வளவு அறியாமையில் இருந்தோம் என்பதை நமக்கு அளந்து கொடுக்கிற கருவிதான் அறிவு.

எல்லார் இடத்திலும் தெய்வம்உண்டு. ஆனால் எல்லாரும் தெய்வத்திடம் இல்லை.

தேசபக்தனுக்கு தேசமே குறி. அரசியல்வாதிக்கு தேர்தலே குறி.

அதிகாரத்தில் இருப்பவனுக்கு அடக்க உணர்ச்சியும், அரசியல்வாதிக்கு நாவடக்கமும், தேசபக்தனுக்கு சேவா நோக்கமும் தவிர்க்க முடியாத தேவைகள்.
லட்சியத்தில் சுத்தம் இருக்கிறபோது எவ்வளவு பெரிய சக்தி எதிர்த்தாலும் அதை எதிர்க்க வேண்டியதுதான்.

மக்கள் புரட்சி செய்தால், அது எப்போதும் நியாயமாகத்தான் இருக்கும்.

உறுதி... உறுதி... இது இல்லாவிட்டால் நீங்கள் நல்லவராக இருப்பதுகூட கடினம்.

உங்கள் எண்ணங்கள் எப்படியோ அப்படிதான் வாழ்க்கையும் அமையும். எனவே சிறந்ததையே எண்ணுங்கள்.

அதிர்ஷ்டம் வந்தாலும் வராவிட்டாலும் துரதிர்ஷ்டத்தைத் தாங்கிக்கொள்ளக்கூடிய துணிச்சலால் எதையும் சாதித்துவிடலாம்!

குஞ்சுகளுக்கு சிறகுகள் முளைத்த பிறகும் கூண்டைவிட்டுத் தாண்டக்கூடாது என்றால், அது ஆகக்கூடிய காரியமில்லை.

தன்னால் ஏற்படுகிற தவறுகளை ஒப்புக்கொள்ள ஒருவர் என்றுமே பின்வாங்கக் கூடாது!

நாளை என்பது மிகமிகத் தாமதமாகும். இன்று முதலே வாழ்க்கையைச் சிறப்பாக நடத்திக்காட்டுங்கள்.

எந்த வேலையைச் செய்யத் தனக்குத் தகுதி உள்ளது என்பதை ஒவ்வொரும் முதலில் கண்டுபிடித்தாக வேண்டும்.

காலத்தின் மதிப்பு தெரிந்திருப்பவர்களுக்குத்தான் வாழ்க்கையின் மதிப்பும் தெரிந்திருக்கும்.

தகுதி இல்லாதவர்களே பிறரை அவதூறு செய்து பொழுது போக்குகின்றனர்



தத்துவ முத்துக்கள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 8:36 pm

அதிகாரத்தில் இருப்பவனுக்கு அடக்க உணர்ச்சியும், அரசியல்வாதிக்கு நாவடக்கமும், தேசபக்தனுக்கு சேவா நோக்கமும் தவிர்க்க முடியாத தேவைகள்.

லட்சியத்தில் சுத்தம் இருக்கிறபோது எவ்வளவு பெரிய சக்தி எதிர்த்தாலும் அதை எதிர்க்க வேண்டியதுதான்

வாழ்க்கையின் முற்பகுதியில் வெற்றியடைய தேவையானவை சுறுசுறுப்பும் ஊக்கமும்தான்.

வாழ்க்கையின் பிற்பகுதியில் வெற்றியடையதேவையானவை பொறுமையும் தன்னம்பிக்கையும் தான்.

பிறர் இன்னல் அடைவதைக் கண்டு நீ சிரிக்காதே. அதில் மகிழ்ச்சியும் அடையாதே. ஏனென்றால் அவனுக்கு நல்ல நிலையை ஏற்படுத்தி இறைவன் உன்னை சோதனைகளில் மூழ்க வைப்பான்.

நீ மற்றவர்களைத் திட்டினால் இறைவனின் சாபம் உன் மீது உண்டாகும்.

பணியாளர் எப்போது தனது பணியை கடமையுணர்ந்து பொறுப்புடன் இறைவனைப் பயந்து தொழுகின்றாரோ அவருடைய ஒவ்வொரு செயலுக்கும் இறைவன் இரண்டு கூலி கொடுக்கின்றான். ஒன்று இவ்வுலகத்திலும் மற்றொன்று மறுமையிலும் கிடைக்கும்.

ஒருவரிடம் பணி செய்து ஓடிப்போன பணியாளர் தனது முதலாளியிடம் திரும்ப வரும் வரை அவருடைய தொழுகையை இறைவன் ஏற்றுக் கொள்ள மாட்டான்.

பணியாளர்கள் மீது முதலாளிகள் இரக்கம் கொள்ள வேண்டும்.

இறைவன் ஒருவனை அழித்துவிட வேண்டும் என்று எண்ணினால் மோசடிகளின் வாசல்களை அவனுக்குத் திறந்து விடுகின்றான். ஒருவன் மோசடி செய்து சம்பாதித்து மகிழ்ச்சியுடன் இருக்கும்போது, அவனை இறைவன் திடீரென்று வேதனையைக் கொண்டு பிடிப்பான்.

எந்தத் தலைவன் பொதுமக்களுக்கு சேவை செய்யாமல் மோசடி செய்கிறானோ அவன் சுவர்க்கம் நுழைய மாட்டான்.

உமது நெருங்கிய நண்பரிடம் பொய்யை உண்மை என்று கூறி நம்ப வைப்பது மாபெரும் மோசடியாகும்

நான் எனது என்ற இரண்டையும் மதம் அரசியல் பொருளாதாரம் முதலியவற்றிலிருந்து ஒழித்துவிட்டல். தெய்வலோகத்தையும்,பூலோகத்துக்குக் கொண்டுவந்து விடுவோம்.



தத்துவ முத்துக்கள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 8:39 pm

ஒருவன் உண்மையே பேசவேண்டும் . மனதிற்க்கு இன்பம் அளிப்பதையே பேச வேண்டும்.ஆனால்,மனத்திற்குப் பிடிக்காத உண்மையைப் பேசக்கூடாது.

உண்மையான அன்பை வாய்ச்சொல் வெளிப்படுத்தாது.சேவைதான் வெளிப்படுத்தும்

உன் சொந்த முயர்ச்சியால் சம்பாதிக்கும் செல்வம் சிறிதளவாயினும் அதைக்கொன்டு மனத்திருப்தி பெறு.

நான் பயப்படாதவன் போல் என்னை எண்ணிக்கொண்ட காரணத்தால்.படிப்படியாக என்னிடத்திலிருந்து பயம் ஒழிந்து விட்டது

உடல்,வாய்,மனம்,பணம் என்னும் நான்கு வகைகளிலும் பாவம் செய்கிறோம். பாவத்திற்க்குப் பிராயச்சித்தமாக அந்த நான்காலுமே புண்ணியம் செய்ய வேண்டும். உடலால் பரோபகாரம்,வாயால் பகவத் நாமாவைச்சொல்வது, மனத்தால் தியானம்,பணத்தால் தர்ம்ம் முதலியவை செய்ய வேண்டும்.

கவலை, நாளைய தினத்தின் துக்கத்தைக் குறைக்கப் போவதில்லை. அது இன்றைய தினத்தின் சந்தோஷத்தை அழித்து விடுகிறது.

உண்மையைத் தவிர வேறு எந்தக் கடவுளுக்கும் நான் சேவை செய்வதில்லை,எனக்குக் கடவுள் என்றாலும்ஒன்றுதான். உண்மை என்றாலும் ஒன்றுதான்.
-மகாத்மா காந்தி.

மனிதன் எதை நினைக்கிறானோ அதே ஆகிறான். அவனது நினைப்புகளின் தொகுதியே அவனுடைய ஒழுக்கம் ஆகும்.
-ஜேம்ஸ் ஆலன்

மற்றவர்கள் உனக்கு என்ன செய்யக்கூடாதென்று நினைக்கிறாயோ,அதை நீயும் மற்றவர்களுக்குச் செய்யாதே. குற்றங்களில் பெரிய குற்றம், தன் குற்றங்களை திருத்த முயலாத்துதான்.
-கன்ஃபூஷியாஸ்

இந்த உலகில் மனிதனுக்குத் தேவை எல்லாம் மிக்க் கொச்சம் தான். அதுவும் கொஞ்ச காலத்துக்குத்தான்.
-கோல்ட்ஸ்மித்

ஒரு மனிதனுடைய வாழ்வு இன்பமாகவோ, துன்பமாகவோ இருப்பதற்கு அவனே காரணம் அன்றி பிறர் இல்லை.
-மகாவீர்ர்

நண்பர்களிடம் மட்டுமின்றி,பகைவனிடமும் நேசம் கொள். நீநடக்கும் வழியில் முள்ளைப் போடுபவன் முன் நீ பூவை வை.
-இயேசு

நாம் பணக்கார்ர்களாக இருக்கக் கடமைப்பட்டிருக்கவில்லை. ஆனால், ஒழுக்கமுள்ளவர்களாக இருக்கக் கடமைப் பட்டிருக்கிறோம்.
-பொர்னாட்ஷா

அதிகமான சிரிப்பு, அறிவு சூன்யத்தையே காட்டும்.
-கோல்ட்ஸ்மித்

நல்ல நண்பருக்கு அடுத்தபடி இடம் வகிப்பவை நல்ல நூல்களே.
-கோல்ட்டன்



தத்துவ முத்துக்கள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 8:42 pm

நிகழ்காலத்தை நாம் இழப்பதால் எல்லாக் காலத்தையும் இழக்கிறோம். -இங்கிலாந்து

உலகத்தாருக்கு நீ அளிப்பது உன் நன்னடத்தை. உலகத்தாரிடமிருந்து நீ பெறுவது புகழ்

உள்ளத்தின் அந்தரங்க சுத்தமான ஆசை எப்பொழுதும் நிறைவேறிக் கொண்டுதான் வருகிறது. என் சொந்த அனுபவத்திலேயே இதைக் கண்டுருக்கிறேன்

கெடுதி செய்து தான் ஒரு காரியத்தில் வெற்றி பெற வேண்டுமென்றால் அந்த காரியத்தையே விட்டு விடுவது நல்லது.

வாழ்கையின் முதல் பகுதியில் வெற்றி பெறத் தேவை என்ன தெரியுமா? சுறு சுறுப்பும்,ஊக்கமும் தான். இறுதியில் வெற்றி பெறப் பொறுமையும்,தன்னடக்கமும் தேவை

நற்செயல்களில் ஈடுபடுபவனுக்கு உலகம் முழுவதும் சுகம் நிரம்பியுள்ளது. கடல் விரும்பாவிட்டாலும், நதிகளெல்லாம் கடலில் வந்து சேருகின்றன. அதுபோல அறவழியில் நடப்பவரிடம் சுகமும்,செல்வமும் அழைக்காமலே வந்தடைகின்றன

கடவுளிடம் ‘இது வேண்டும்’ என்று குறிப்பிடாமல்,பொதுவாகப் பிராத்திப்பதே முறை. நமக்கு நன்மை எது என்பதை கடவுள் நன்கு அறிவார்.

நாம் எல்லோரும் எல்லாக் காரியங்களையும் செய்துவிட முடியாது

மனம், வாக்கு, உடல் ஆகிய மூன்றும் ஒரே மாதிரி உள்ளவர்கள் மகாத்மாக்கள் . இந்த மூன்றிலும் வேறுபாடு உள்ளவர்கள் துராத்மாக்கள் ஆகும்.

படித்தவன் மூடனுக்கும், கண் தெரிந்தவன் குருடனுக்கும், ஆரோக்கியமானவன் நோயாளிக்கும், பணக்காரன் ஏழைக்கும் உபகாரம் செய்ய வேண்டும். இதுவே எங்கும் நிறைந்துள்ள இறைவனுக்கு செய்யும் பூஜையாகும்.
-கிருஷ்ணப்ரேமி

கீழே விழாதிருப்பது நமக்குப் பெரிய பெருமையல்ல.ஆனால்,விழுந்த போதெல்லாம் எழுந்திருப்பதே பெருமைக்கு உரியது ஆகும்.
-கன்ஃபூஷியஸ்

செருக்கு தேவர்களை அசுர்ர்களாக மாற்றுவது.அடக்கம் மனிதர்களை தேவர்களாக்கிவது.
-அகஸ்டுன்

இரண்டு கருத்து மோதல்களுக்கும் இடையை, மனசாட்சிக்கு வளைந்து கொடுப்பவன் தான் உலகின் முன் நீதிமானாக உயர்ந்து நிற்க முடியும்.
-வேத வாக்கு

இறைவனை அடைய ஒரே ஒரு பாதை தான் உண்டு. அதுதான் ‘பனிவு’ மற்ற பாதைகள் வேறு இடங்களுக்குக் கொண்டு போய்விடும்.
-பாய்லியோ



தத்துவ முத்துக்கள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 8:44 pm

உண்மையை மதித்தால் அது உடனே வாளக மாறிவிடும்.
-ஹென்ரி ஜார்ஜ்


நீ பேசும்படி நேர்தால் உண்மையே பேசு. ஏனெனில், இரு பொருள்படப் பேசுதல் போய் சொல்வதற்கு உரிய பாதி வழியாகும்,பொய்யோ நகரப் பாதை தான்.
-பென்


ஒழுக்கமுள்ள மனிதன், பெருந்தன்மையும்,மரியாதையும் உள்ள சொற்களைப் பேசுவான்.மறந்தும் கடுஞ்சொல் கூறமாட்டான்.
-ஜேம்ஸ் ஆலன்.


நோய் இல்லை என்று மனதில் உறுதி செய், மனம் போல உடல் அமையும்.
-மகாகவி பாரதியார்.


நல்ல காரியங்களை நாமாகத் தேடிச் செய்ய வேண்டுமே தவிர, நல்ல காரியங்கள் தாமாக வந்து சேருவதில்லை.
-கார்ஃபீல்டு.


உலகத்தில் நடக்கும் செய்திகளின் எண்ணிக்கை அனைத்தும் ஒரு பத்திரிக்கையில் வெளியிடும் அளவாக இருப்பதுதான் மிகப்பெரிய ஆச்சரியம்! ஜெர்ரி சைன்ஃபீல்ட்


நீ வெற்றி பெறுகிறாயா இல்லையா என்பது முக்கியமல்ல. நான் வெற்றி பெறுகிறேனா இல்லையா என்பதுதான் முக்கியம்! டாரின் வைன்பர்க்.


வாழ்க்கை மிகவும் சந்தோஷமானது. இறப்பு மிகவும் அமைதியானது. இடையே இருக்கும் மாற்றமே மிகவும் துன்பமானது.


எல்லா வெற்றிகரமான பெண்ணுக்கும் பின்னால் ஒரு ஆண் இருக்கிறான். ஆச்சர்யப்பட்டுக் கொண்டு!


சந்தோஷத்தை விலைகொடுத்து வாங்க முடியாது என்று சொன்னவனுக்கு எங்கே வாங்குவது என்றுதான் தெரியவில்லை சந்தோஷத்தை!


பெரும்பாலான மக்கள் உயிருடன் இருப்பதற்கு ஒரே காரணம் அவர்களைச் சுடுவது சட்டத்துக்கு புறம்பானது என்பதாலேயே.


உன் எதிரிகளை மன்னித்து விடு. ஆனால் அவர்களின் பெயர்களை மறக்காதிரு!


உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கும் மக்களின் எண்ணிக்கை நேராக உன்னுடைய காரியத்தின் முட்டாள் தனத்தைப் பொறுத்தது.


கஷ்டத்தில் இருக்கும் ஒருவனுக்கு உதவி செய்தால், அவன் உங்களை நினைத்துக் கொள்வான், அவன் மீண்டும் கஷ்டத்தில் இருக்கும்போது! யாரோ.


சோம்பேறி : சோம்பேறி இரண்டு முட்களும் இல்லாத கடிகாரம். அது நின்றாலும் ஓடினாலும் பயனில்லை. --கூப்பர்



தத்துவ முத்துக்கள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 8:45 pm

யார் எல்லா இடங்களிலும் நல்லதும் கெட்டதும் வரும்போது பாதிக்கப்படாமலும் அவற்றை வரவேற்காமலும் இருக்கிறாரோ அவரே நிலையான அறிவுடையவர் ஆவார். -பகவத்கீதை

மெதுவாகப் பேசுங்கள். அது உங்களின் ரகசியங்களைப் பாது காக்கும். நல்ல எண்ணங்களோடு இருங்கள். அது உங்கள் நடத்தையைப் பாதுகாக்கும்.

உங்கள் வாக்குறுதியைக் காப்பாற்ற விரும்பினால் நீங்கள் எந்த ஒரு வாக்குறுதியையும் கொடுக்காதீர்கள்.

ஜீவாத்மாக்கள்கொன்டுள்ளவருத்தத்தைப்போக்குவதும்,எளிய வருக்கு வேன்டிய உண்ணும் உனவைக் கொடுப்பதும் மோட்சத்திற்கு செல்லும் வழியாகும்.
-சீவக சிந்தாமனி

பழிச் சொல்லையும் புகழ் மொழியையும் சம்மான முரையில் ஏற்றுக்கொள்பவனே தியாகியாக இருக்கமுடியும்
மகாத்மா காந்தி

நான் ஒரு பசுவைப் பார்க்கும்போது மனிதன் உன்னக்குடிய ஒரு மிருகமாக நான் கருதுவதில்லை. பசு இரக்கமே உருவான ஒரு காவியமாக எனக்குத் தோன்றுகிறது உலகம் முழுவதுமே எதிர.த்தாலும் கூட நான் பசுவை வழிபடுவதை ஆதரித்தே வாதாடுவேண்
-மகாத்மா காந்தி

ஓரு நாட்டின் கட்டுபாடு பெருமை இவையெல்லாம் அது எவ்வளவு கோடீஸ்வர்ர்களைக் கொண்டிருக்கிறது என்பதில் இல்லை.அந்த நாட்டு மக்கள் பசியின்றி வாழ்கிறார்களா என்பதில் தான் இருக்கிறது.
-மகாத்மா காந்தி

பாவம் செய்யும் எண்ணம் மனத்தில் எழுந்ததுமே அதை இந்த நிமிடமே விலக்கி விடுங்கள். மனத்தில் ஒரு முறை பாவம் புகுந்துவிட்டால்,அது அங்கிருது எளிதில் வெளியேறாது.
-பாகவத ரகசியம்

பொன்மான் உலகில் எங்கேயாவது இருப்பதாக கேட்டதுண்டா? இதை அறிந்தும் சீதை அதற்க்கு ஆசைப்பட்டாள். கெட்ட காலம் நெருங்கிவிட்டால், எப்படி பட்டவருக்கும் புத்தி மழுங்கிவிடும்.
-காளிதாசர்

இளமையில் வந்த வறுமையும், முதுமையில் வந்த செல்வமும்,துன்பத்தை விளைவிப்பனவாகும்.
-ஒளவையார்

விளையாட்டிற்காக்க் கூட கோபித்துக்கொள்ளாதீர்கள்.விளையாட்டிற்க்காக யாராவது விஷம் சாப்பிடுவார்களா?
மகாத்மா காந்தி

தீமை செய்தால்,தீமை செய்வதுதான் உலக வழக்கம்.ஆனால், தீமை செய்தால்,நன்மை செய்வது உத்தமர் வழக்கம்.
-குருநானக்

எந்தக் கடினமான காரியத்தையும் செய்து முடிக்க சுலபமான வழி ஒன்று இருக்கும். அதைக் கண்டுபிடிப்பதுதான் கெட்டிக் காரத்தனம்.



தத்துவ முத்துக்கள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 8:46 pm

குருவிடம் சோகமாய் வந்தான் ஒருவன்.

‘‘குருவே, வாழ்க்கையில் நிறைய கஷ்டம். என்ன செய்வதென்று தெரியவில்லை’’ என்றான்.

‘‘அப்படியா, என்ன ஆயிற்று?’’ வினவினார் குரு.

‘‘நான் செய்து வந்த வியாபாரத்தில் திடீரென்று நஷ்டம் வந்துவிட்டது. இனிமேல் என்னால் நிமிர முடியாது. இத்தோடு என் வாழ்க்கை முடிந்துவிட்டது.’’

அவனை அமைதியாய் பார்த்த குரு, ‘‘வா, என்னுடன்’’ என்று, அருகிலிருந்த குழந்தைகள் காப்பகத்துக்கு அழைத்துச் சென்றார்.

அங்கே நிறைய குழந்தைகள். சில தவழ்ந்து கொண்டிருந்தன. சில நடக்க முயற்சித்துக் கொண்டிருந்தன. சில ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தன. கீழே விழுவதும் பிறகு எழுந்து நடப்பதுமாக உற்சாகமாய் இருந்தன.

‘‘இந்தக் குழந்தைகளைப் பார். என்ன தெரிகிறது?’’ என்று கேட்டார் குரு.

‘‘எதுவும் புரியவில்லையே குரு.’’

‘‘இந்தக் குழந்தைகளிடம் ஒரு பாடம் இருக்கிறது. விழுகின்ற எந்தக் குழந்தையும் ‘என்னால் முடியாது’ என்று விழுந்தே கிடக்கவில்லை. உடனே எழுந்திரிக்க முயற்சி செய்கின்றன. எழுந்து ஓடுகின்றன. வாழ்க்கையும் அப்படித்தான்’’ என்றார் குரு.



தத்துவ முத்துக்கள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக