புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 18:52

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முத்துப்பட்டன் கதை Poll_c10முத்துப்பட்டன் கதை Poll_m10முத்துப்பட்டன் கதை Poll_c10 
156 Posts - 79%
heezulia
முத்துப்பட்டன் கதை Poll_c10முத்துப்பட்டன் கதை Poll_m10முத்துப்பட்டன் கதை Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
முத்துப்பட்டன் கதை Poll_c10முத்துப்பட்டன் கதை Poll_m10முத்துப்பட்டன் கதை Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
முத்துப்பட்டன் கதை Poll_c10முத்துப்பட்டன் கதை Poll_m10முத்துப்பட்டன் கதை Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
முத்துப்பட்டன் கதை Poll_c10முத்துப்பட்டன் கதை Poll_m10முத்துப்பட்டன் கதை Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
முத்துப்பட்டன் கதை Poll_c10முத்துப்பட்டன் கதை Poll_m10முத்துப்பட்டன் கதை Poll_c10 
3 Posts - 2%
Pampu
முத்துப்பட்டன் கதை Poll_c10முத்துப்பட்டன் கதை Poll_m10முத்துப்பட்டன் கதை Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
முத்துப்பட்டன் கதை Poll_c10முத்துப்பட்டன் கதை Poll_m10முத்துப்பட்டன் கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முத்துப்பட்டன் கதை Poll_c10முத்துப்பட்டன் கதை Poll_m10முத்துப்பட்டன் கதை Poll_c10 
321 Posts - 78%
heezulia
முத்துப்பட்டன் கதை Poll_c10முத்துப்பட்டன் கதை Poll_m10முத்துப்பட்டன் கதை Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
முத்துப்பட்டன் கதை Poll_c10முத்துப்பட்டன் கதை Poll_m10முத்துப்பட்டன் கதை Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
முத்துப்பட்டன் கதை Poll_c10முத்துப்பட்டன் கதை Poll_m10முத்துப்பட்டன் கதை Poll_c10 
8 Posts - 2%
prajai
முத்துப்பட்டன் கதை Poll_c10முத்துப்பட்டன் கதை Poll_m10முத்துப்பட்டன் கதை Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
முத்துப்பட்டன் கதை Poll_c10முத்துப்பட்டன் கதை Poll_m10முத்துப்பட்டன் கதை Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
முத்துப்பட்டன் கதை Poll_c10முத்துப்பட்டன் கதை Poll_m10முத்துப்பட்டன் கதை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
முத்துப்பட்டன் கதை Poll_c10முத்துப்பட்டன் கதை Poll_m10முத்துப்பட்டன் கதை Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
முத்துப்பட்டன் கதை Poll_c10முத்துப்பட்டன் கதை Poll_m10முத்துப்பட்டன் கதை Poll_c10 
3 Posts - 1%
Barushree
முத்துப்பட்டன் கதை Poll_c10முத்துப்பட்டன் கதை Poll_m10முத்துப்பட்டன் கதை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முத்துப்பட்டன் கதை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 21 Aug 2010 - 15:18

சாதி பரந்த மனித உணர்ச்சியை ஒடுக்குகிறது. அதன் கொடுமை உச்சத்திலிருந்த காலத்தில் அதற்குப் பலியானவர்கள் அநேகர். இவர்களில் தாழ்ந்த குலத்தில் பிறந்தவர்களே சாதியின் சொல்லொணாக் கொடுமைகளை அனுபவித்திருக்கிறார்கள்.

மானிட உணர்வு மாண்புடையது. அது சாதிக்குள் ஒடுங்கிக்கிடக்க மறுத்தபோது, பல வீரச்செயல்கள் விளைந்துள்ளன. காதல், உயர்ந்த மானிட உணர்வு. அது சாதிக் கட்டுக் கோப்பை மீறி முளைவிட்டுத்துளிர்த்து பெரிய விருட்சமான கதைகள் சிலவற்றை நாம் நாட்டுக்கதைப் பாடல்களில் கேட்கிறோம்.

இக்காதல் பாசத்தினுள் அகப்பட்டவர்களில் பலர் அதற்கெனவே சாதியை எதிர்த்து நின்று உயிர் விட்டனர். சிலர் வெற்றி பெற்று பிற்காலத்தில் காதலுக்காகவும் தங்கள் காதலியர் குடும்பங்களுக்காகவும் போராடி தியாக சீலர்களெனப் புகழ் பெற்று உயிர் நீத்தனர்.

மானிட உணர்வையும், மனித உறவுகளையும் நிலைநாட்ட, தீமையையும், பொய்மையையும், குறுகிய வெறிகளையும் எதிர்த்து வெற்றி பெற்ற வீரன் ஒருவனது சரித்திரமே முத்துப்பட்டன் கதையாகும். இக்கதை நெல்லை மாவட்டத்தில் இன்றும் வில்லுப்பாட்டாகப் பாடப்பட்டு வருகிறது.

இக்கதையை வில்லுப்பாட்டுச் சொல்லிச் செல்லும் போக்கை மாற்றாமலே நானும் எழுதி விடுகிறேன்.

பல வளம் வாய்ந்த ஆரிய நாட்டில் அந்தணர் குடும்பமொன்றில் ஏழு சகோதரர்களுக்குப்பின் முத்துப்பட்டன் பிறந்தான். இளமையிலேயே சகல வித்தைகளிலும் வல்லவனானான். அவன் சத்தியத்தில் பற்றுடையவனாயிருந்ததால் அண்ணன் மாரோடு ஒத்துப்போகவும் தாய் தந்தையரோடு வாழவும் முடியவில்லை.

“சத்தியவான் முத்துப்பட்டன் தமையன் மாரோடே சண்டை செய்து மாதா பிதா வெறுத்து வஸ்துவகை தானிழந்து, பிறந்த ஊர்தனைக் கடந்து பிறஊர்தனைப் போய்ச் சேர்ந்தான்.”

ஊரை விட்டு வெளியேறிய முத்துப்பட்டன் கொட்டாரக் கரைக்குச் சென்றான். ராமராஜன் என்ற சிற்றரசனிடம் சேவகத்தில் அமர்ந்தான். சில வருஷங்கள் சென்றன. அவனுடைய சகோதரர்கள் அவனைத் தேடி எங்கெல்லாமோ அலைந்து விட்டுக் கடைசியில் கொட்டாரக் கரை வந்து சேர்ந்தார்கள். அங்கே மரத்தடியில் களைத்துப் போய் உட்கார்ந்திருந்தார்கள். தற்செயலாக அங்கு வந்த முத்துப்பட்டனைக் கண்டார்கள். அவனைக் கண்டதும் அவன் சீராக வாழ்கிறான் என்பதைத் தெரிந்து கொண்டார்கள். அவனை அழைத்துச் செல்ல விரும்பினார்கள்.

“தாயும் தகப்பனாரும் தவித்தல்லோ தேடுகிறார்.
சேஷய்யர் பெண்ணையல்லோ சிறப்பூட்டக் கேட்டிருக்கு
திரவியங்கள் உண்டுமானால் சீமைக்குப் போய்விடலாம்.”

என்று அவனிடம் சொன்னார்கள்.

முத்துப்பட்டன் அரசனிடம் விடைபெற்று அண்ணன் மாரோடு புறப்பட்டான். ஆரியன் கோவில், குளத்துப்புளி, சவரிமலை, ஆகிய ஊர்களைக் கடந்து பொதிகை மலை வழியே நடந்தார்கள். சொரிமுத்துப் பாதை வழியாகத் தளவாய்க் கொட்டகைக்கு வந்தார்கள். அங்கே சுமையிறக்கி வைத்துவிட்டு மாலை அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டார்கள். இரவு கழிந்த பின் மறுபடியும் புறப்பட்டார்கள். சில நாழிகைகளுக்குப் பின் முத்துப்பட்டனுக்குத் தாக முண்டாயிற்று. அரசடித் துறையில் நீர் குடிக்க இறங்கினான். பூசையில் மூழ்கியிருக்கும் போது அவனுக்குப் பின்னாலிருந்து இனிய நாட்டுப் பாட்டின் ஒலி காற்றில் ஏறி வந்து, அவன் செவி வழியாக உள்ளத்தில் நுழைந்தது. திரும்பிப் பார்த்தான்

அவன் கண்டதென்ன?

“பட்டனும் பூசை செய்யப், பாவையர் ரெண்டுபேர்கள்
பெட்டியில் சோறும் கொண்டு பூச்சிநாய்தனைப் பிடித்து
பட்டணந்தனை விட்டு பசுக்கிடைக் கேகும் நேரம்
மட்டிலா தாகமுண்டாய் வந்தனர் தண்ணீர் தன்னில்”

“குனிந்தவர் தண்ணீர் கோரிக் குடித்துமே தாகம் தீர்ந்து
பணிந்துமே கிடைக்குப் போக பாவையர் பாடுமோசை
இனந் தெரியாமல் கேட்டு ஏங்கியே முத்துப்பட்டன்
வனந்தனில் சுத்தி ஓடி மறித்திட்டான் பெண்கள் தன்னை”

அவர்களை மறித்து அவர்களிடம் தன்னை மணந்து கொள்ளும் படி முத்துப்பட்டன் கேட்கிறான். அவர்கள் மறுத்துப் பேசுகிறார்கள்.

பட்டன் : பெண்ணே உன்னைப் பெற்ற தாய்தகப்பன் ஆரு சொல்லு பேதமை கொள்ளாது சற்றே என்முன்னாக நில்லு,

பெண்கள் : பின்னே வழிவிட்டு ஓடணுமானாலும் கல்லு,
வேறே பரியாசஞ் சொன்னால் பறிப்போமே பல்லு,
சாம்ப சிவ நாதர் போலிருக்கிறீர் சுவாமி
சக்கிலிச்சி நாங்கள் தீண்டப் பொறுக்குமோ பூமி.

பட்டன் : ஆண்டவன் செயலினாலுங்களைப் பெற்றாளே மாமி,
அல்லாமல் வேறில்லை தாகந் தணிந்திட நேமி.

இவன் பேசிக் கொண்டிருக்கும்போதே அவர்கள் ஓடிக் காட்டுக்குள் மறைகிறார்கள். பட்டன் அவர்களைத் தேடி அலைந்தும் காணாமல் மயங்கி விழுந்து விடுகிறான்.

ஓடிப்போன பெண்கள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த தங்கள் தகப்பன், வாலப்பகடையிடம் போய் நடந்த விஷயத்தைச் சொன்னார்கள். அவன் வெகுண்டெழுந்து மாடறுக்கும் கத்தியைக் கையிலெடுத்துக்கொண்டு அரசடித்துறைக்கு வந்தான். அங்கே பட்டன் புழுதியில் மயங்கிக் கிடப்பதைக் கண்டான். அவனே யறியாமல் பட்டன்மீது இரக்கமுண்டாயிற்று. கையைத் தட்டிச் சப்த முண்டாக்கினான். பட்டன் எழவில்லை. சிறு கல்லொன்றை எடுத்து அவன் மீது எறிந்தான். பட்டன் கண் விழித்தான். “நீ யாரென்று” கேட்டான். வாலப்பகடை, தன் மக்களிருவரை ஒரு பார்ப்பான் மோசம் செய்ய முயன்றதாகவும் அவனைக் கண்ட துண்டமாக வெட்டி யெறியவே தேடிக் கொண்டிருப்பதாகவும் சொன்னான்.

“அந்த மொழி சொன்னவுடன் சக்கிலியன் என்றறிந்து
அப்போது முத்துப்பட்டன் முறை செப்புவான்
தாயுடன் கூடப் பிறந்த அம்மானே
சமர்த்திகளுக்காசைப்பட்டு ஓடிவந்தேனே.”

என்று பட்டன் துணிந்து சொன்னான். மேலும்
“நாலு பேரறிய மணஞ் சூட்டிவைப்பாய் நாளை.”

என்று முடிவாகக் கூறினான். அதைக் கேட்ட வாலப்பகடை வாயடைத்துப் போனான் ; கால் பதறிற்று ; நா உளறிற்று ; திக்கித் திணறிப் பேசினான். அவன் கோபமெல்லாம் ஆறிவிட்டது.

“நாயல்லவோ எங்கள் குலம் ஓ நயினாரே,
நாற்றமுள்ள விடக் கெடுப்போம் ஓ நயினாரே,

செத்த மாடறுக்க வேணும் ஓ நயினாரே
சேரிக் கெல்லாம் பங்கிட வேணும் ஓ நயினாரே,”

ஆட்டுத் தோலும் மாட்டுத் தோலும் அழுக வைப்போமே,
அதை யெடுத்து உமக்கு நன்றாய் அடியறுப்போமே,
அடியறுப்போம், சுவடு தைப்போம், வாரறுப்போமே
அதை எடுத்துக் கடைக்குக் கடை கொண்டு விற்போமே
சாராயம், கள் குடிப்போம் வெறிபிடித்தபேர்
சாதியிலே சக்கிலியன் நான் நயினாரே.

என்று வாலப்பகடை கூறினான். அதைக் கேட்டபட்டன் உறுதியோடு சொல்லுகிறான்.

“கோபம் வேண்டாம் மாமனாரே சொல்லக்கேளும் நீர்
கோடி கோடி தர்மமுண்டு உமது மக்களை
சாதி முறையாகத் தாலி கட்டி வைத்தக்கால்
தாய் தகப்பன் நீரல்லவோ இன்று முதலுக்கு
சாதி சனம் போல் நின்று வாரேன் குடிலுக்கு.”

என்று முத்துப்பட்டன் பதில் சொன்னான்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 21 Aug 2010 - 15:19

அதைக் கேட்ட வாலப்பகடைக்கு முற்றிலும் ஐயம் நீங்கவில்லை. ஆகையால் அவன் ஒரு நிபந்தனை விதிக்கிறான். குடுமியையும், பூணுலையும் களைந்து விட்டு, நாற்பது நாட்கள் சக்கிலியத் தொழில் செய்து செருப்பு விற்று வந்தால் தனது மக்களை அவனுக்கு மணம் செய்து வைப்பதாகக் கூறுகிறான். பட்டன் சம்மதியாமல் ஓடிவிடுவான் என்பதை அவன் எண்ணம். ஆனால் பட்டன் சம்மதிக்கிறான். அண்ணன்மாரிடம் சொல்லிவிட்டு அன்றே திரும்புவதாகக் கூறிச் செல்லுகிறான்.

பட்டன் தனது சகோதரர்களிடம் உண்மையைச் சொல்லுகிறான். அவர்கள் அவனுக்குப் புத்தி சொல்லுகிறார்கள். செத்த மாட்டைத் தின்னும் “புலையன் வீட்டுப் பெண்ணை பிராம்மணன் மணம் செய்து கொள்ளலாமா?” என்று கேட்கிறார்கள். “மேல். சாதிக்காரர், பசு உயிரோடிருக்கும் வரை பாலை உறிஞ்சிவிட்டு செத்தமாட்டைத்தான் புலையருக்கு மிஞ்ச விடுகிறார்கள்” என்று எதிர்த்துத் தாக்குகிறான் பட்டன். “புழு பூச்சிகளையும், நண்டையும் தின்னும் சக்கிலியன் வீட்டுப் பெண்ணைப் பார்ப்பான் மணக்கலாமா?” என்று அவர்கள் கேட்கிறார்கள். வயலில் விளையும் பயிரின் பயனை யெல்லாம் மேல் சாதிக்காரர்கள் அள்ளிச் சென்று விடுவதால் வயலில் மிஞ்சும், புழு பூச்சியும், நண்டும்தான் புலையருக்கு மிஞ்சுகின்றன,” என்று பட்டன் குத்திக் காட்டுகிறான். விவாதிப்பதில் பயனில்லை யென்று கண்ட சகோதரர்கள் அவனை ஒரு கல்லறைக்குள் தள்ளி அடைத்து விடுகிறார்கள்.

அவர்கள் போன பின்பு, முத்துப்பட்டன் தந்திரமாகக் கல்லறையிலிருந்து தப்பி வந்தான். வரும் வழியில் குடுமியை அறுத்தெறிந்தான். பூணூலைக் களைந்தான். தோல் வாங்கிச் செருப்புத் தைத்துத் தோளில் மாட்டிக்கொண்டு சேரிக்கு வந்து சேர்ந்தான். மாட்டுக்கிடையை விட்டு ஊர் திரும்பிய வாலப்பகடை குடிசை வாசலில் இருந்த செருப்பைக் கண்டு திகைத்தான். பட்டனைக்கண்டதும் திகைப்பு மகிழ்ச்சியாக மாறிற்று. உடனே திருமணம் நிச்சயித்தான். உறவு முறையாரை அழைத்தான். இந்த அதிசயமான திருமண வைபவத்தைப் பாடகன் வாய் மொழியாகவே கேட்போம்.

“இனசாதிக்காரர் வள்ளுவனும், வந்து ஏற்ற முகூர்த்தமிட்டு,
இட்டாரே அத்திமரம் நாட்டி, ஆவரம்பூக் கொண்டு பந்தலிட்டு
மணவறையிட்டுப் பகடைகள்கூடி, வாய்த்த நல்ல பெண்களுக்கு
வளையுடன், பாசியும், காதில் பொன்னோலையும் மஞ்சள்
பருக்கை பூசி
நெற்றியில் பொட்டு மையிட்டு மூக்குத்தி நத்தும் பொருந்தவிட்டு
வேடிக்கையாக இருபெண்கள் தன்னையும் நேசமாய்க் கூட்டிவந்து
வந்த பட்டனும் பெண்களையும் அந்த மணவறை தன்னில்வைத்து
மங்கிலியம் நிறைநாழியும் வைத்துக் கணபதி கொண்டுவைத்து
சந்திரன் சூரியன் தேவர்கள் சாட்சியாக முத்துப்பட்டன்
தாலியைப் பூட்டினான் பொம்மக்கா, திம்மக் காதம் கழுத்தில்
கழுத்தில் மாலையிட, பகடைகள் கலந்து குலவையிட
காப்புக் கையோடந்த மாப்பிள்ளைக்குப் பெண்கள் சாப்பாடு
கொண்டுவைக்க, உறமுறையாகும் சடங்கு கழிந்தவுடனே விருந்தளிக்க
உற்ற நல்லபகடை யெல்லாம் மொத்தமாய்த் தாரைவார்த்தார்
தாரை வார்த்தவுடன் சக்கிலியப் பெண்கள் சகலரும்கூடி
சாதி முறைப்படி கும்மியடிக்கிற சத்தத்தைக் கேளுங்கள்.”


அன்றிரவு பட்டன், திம்மக்கா மடியில் தலையும், பொம்மக்கா மடியில் காலும் வைத்துச் சற்றே கண்ணயர்ந்தான். பொல்லாத சொப்பனங்கள் கண்டான். கையில் கட்டிய காப்பு நாணை கரையான் அரித்ததாகவும், கோழிக் குஞ்சை வெருகுப்பூனை பிடித்து ஓடவும் கனவு கண்டான். கதவு தட்டிய ஓசை கேட்டுக் கண் திறந்தான். பகடைச் சிறுவனொருவன் வீட்டினுள் நுழைந்து வாலப்பகடையின் மாடுகளை, ஊத்துமலை வன்னியரும், உக்கிரங்கோட்டை வன்னியரும் களவு கொண்டு போனதாகவும் மறித்தவர்களை விரட்டி விட்டதாகவும் சொன்னான்.

சட்டென எழுந்து பட்டன், வல்லயத்தையும் தடியையும் எடுத்துக் கொண்டு, நாயையும் அவிழ்த்து விட்டுப் புறப்பட்டான்.

அவனது மனைவியர் காலையில் செல்லலாம் என்றும் துணையோடு போகலாம் என்றும் தடுத்தனர். தன்னால் ஏற்பட்ட வெறுப்பினால் தான் வன்னியர், யார் தூண்டுதலாலோ, இவ்வாறு பழி வாங்கத் துணிந்தனர் என்று பட்டன் நினைத்தான். ஆகவே யாரையும் துணைக்கு அழைத்துச் செல்ல அவன் விரும்பவில்லை. மறுநாட் காலைவரை பொறுத்திருக்கவும் விரும்பவில்லை. தனியே சென்றான், நாய் மட்டும் தொடர்ந்தது.

சிறிது நேரத்தில் அவன் களவு போன மாட்டு மந்தையைக் கண்டான். அதை வளைத்துச் செல்லும் வன்னியரை எதிர்த்துப் போரிட்டான். பத்துப் பேர் இறந்தனர். ஒருவன் எங்கேயோ ஓடிவிட்டான். இப்போர் காட்சியைப் பாடகர் பின்வருமாறு வருணிக்கிறார்.

“வாள் கொண்டு வெட்டி மடிந்தார் சிலபேர்,
வல்லயத்தில் குத்தி மாண்டார் சிலபேர்,
ஊளையிட்டுக் கொண்டு உருண்டார் சிலபேர்,
முட்டு மடிந்து கிடப்பார் சிலபேர்,
பட்டபின் வெட்டாதே என்பார் சிலபேர்.”

போர் முடிந்தது என்று எண்ணிய முத்துப்பட்டன் உடலில் வழிந்த உதிரத்தைக் கழுவ ஆற்றங்கரைக்கு வந்தான். நாயும் வந்தது, முகம் கைகழுவ பட்டன் குனிந்ததும் முதுகில் ஒரு குத்து விழுந்தது. திரும்பிக் குத்தினவனை முத்துப்பட்டன் குத்தினான். முத்துப்பட்டன் ஓடைக்கரையில் செத்து விழுந்தான். முதுகில் குத்தியவனும் சற்றுத் தொலைவில் விழுந்து இறந்தான். அவனைப் பாடகர், “சப்பாணி, நொண்டி, ஒளிந்திருந்தவன்” என்று இழிவாகக் கூறுகிறார்.

நாய் வீட்டுக்கு ஓடிற்று. குடிசை வாசலிலே கணவன் வருகையை எதிர்நோக்கிக் காத்திருந்த மனைவியர் நாயைக் கண்டு பதைத்தனர். அது அவர்களை அழைத்துக்கொண்டு காட்டினுள் ஓடிற்று. ஓடைக்கரையில் கணவனது உடலைக் கண்டனர். அதன் மேல் விழுந்து ஓலமிட்டு அழுதனர்.

“முகத்தோடே முகம் வைத்து முத்தமிட்டுக் கொண்டழுதார்
நாலு கழியலியே, நாலா நீர் கூடலையே.
ஏழுகழியலியே ஏழா நீர் கூடலையே,
தாலி கொண்டு வந்த தட்டானும் போகலையே.
கொட்டிப் பறையனுக்குக் கொத்துக் கொடுக்கலையே,
கோண மணவறையில் குந்த வைத்த தோஷமுண்டு
வட்டமணவறையில் வந்திருந்த தோஷமுண்டு

பொருந்தி இருந்தோமோ, பிள்ளைகளைப் பெற்றோமோ.
பணியாரம் சுட்டசட்டி பாதிமணம் போகலையே.
பந்தல் பிரிக்கலையே வந்தஜனம் போகலையே,
எம்கணவா, எம்கணவா, இந்த விதி வருவானேன்?
சண்டாள வன்னியர்கள் சதித்தாரே கணவரைத்தான்”

பின்பு அவர்கள் பட்டனது உடலை மலையோரத்தில் இலைகளால் மூடிவைத்துவிட்டுக் கணவனோடு, தீப்பாய உத்தரவு கேட்க சிங்கம் பட்டி அரண்மனைக்கு வந்தார்கள். சிங்கம்பட்டி மன்னன் நடந்த தென்ன வென்று கேட்டான். அவர்கள்,

“................ மன்னா துணைவனும் உயர் குலத்தான்,
வல்லமையாகவே தான் மணஞ் செய்தார் எங்களைத்தான்
கள்ளரோடு யுத்தஞ்செய்து எம்கணவரும் மாண்டுவிட்டார்
வள்ளலின் பாதஞ்சேர வரம்தர வேணும்.”

என்று சொன்னார்கள், மன்னன் தன் அரண்மனையில் கவலையில்லாமல் தன்
மனைவி மாரோடு வாழ அழைத்தான் அவர்கள்.
“மங்கிலியப் பெண்கள் எம்மை நகைப்பாரே,
வாலைப்பகடை நம்மை இதற்கோ வருந்திப் பெற்றான்?
சங்கடத்தைப் பார்ப்பதற்கோ, சண்டாளிகள் போய்வாரோம்.”

என்று சொல்லித் திரும்பினார்கள். மன்னன் மனமிளகி அவர்களை அழைத்துத் தீப்பாய அனுமதியளித்தான். சந்தனக் கட்டை யடுக்கி பூம்பந்தல் போட்டுக் கொடுத்தான். பட்டன் உடலில் பரவும் போது அவனது இருமனைவியரும் தீக்குளித்து உயிர் விட்டார்கள்.

ஆகாயத்திலுள்ள தேவர்கள் எல்லோரும் முத்துப்பட்டன், பொம்மக்காள், திம்மக்காள் ஆகிய மூவரையும் வாழ்த்தினார்கள்.

இதுவே பல்வேறு வடிவங்களில் வழங்கும் முத்துப்பட்டன் வில்லுப்பாட்டின் கதை. இக்கதை அச்சுப்புத்தக வடிவமாக வெளியிடப்பட்டுள்ளது. இக்கதைப்பாடல் நெல்லையில் வழங்கும் வில்லுப்பாட்டு ஏடுகள் சிலவற்றை ஒப்பு நோக்கி எழுதப்பட்டது.

வானமாமலை, எம்.ஏ.,எல்.டி.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat 21 Aug 2010 - 15:36

முத்துப்பட்டன் கதை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி




[You must be registered and logged in to see this image.]
karpahapriyan
karpahapriyan
பண்பாளர்

பதிவுகள் : 151
இணைந்தது : 15/09/2010
http://http;//manikpriya.blogspot.com

Postkarpahapriyan Sat 2 Oct 2010 - 11:29

இனிமை



கற்பகப்ரியன்

[You must be registered and logged in to see this link.]
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat 30 Apr 2011 - 17:51

சமரசம் உலவிட முத்துப் பட்டன் போன்றோர் ஆற்றிய பங்கு அளவிடற்க்கறியது



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

[You must be registered and logged in to see this link.]
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri 18 Nov 2011 - 15:27

மிகவும் அருமையான பதிப்பு...நன்றி மகிழ்ச்சி

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Fri 18 Nov 2011 - 15:35

நன்றி நன்றி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri 18 Nov 2011 - 16:20

அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக