ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 12:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:19 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:51 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:28 am

» கேலிகளை கேலி செய்த அர்னால்டு
by ayyasamy ram Today at 7:18 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:00 pm

» கருத்துப்படம் 17/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 9:59 pm

» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by T.N.Balasubramanian Yesterday at 9:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by T.N.Balasubramanian Yesterday at 9:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:18 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:56 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:41 pm

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Yesterday at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Yesterday at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Yesterday at 2:01 am

» தலைவலி குறைய...
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:00 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Tue Jul 16, 2024 4:13 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Tue Jul 16, 2024 3:42 pm

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:02 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாக்குறுதி நேரம்

Go down

வாக்குறுதி நேரம் Empty வாக்குறுதி நேரம்

Post by Lakshman Tue Mar 29, 2011 9:59 am

வாக்குறுதி நேரம் 1772578765 தேர்தல் காலமென்றாலே அரசியல்
கட்சிகளுக்குப் பிரச்சனைதான். அள்ளிஇறைப்பதற்குப் பணம் தேவைப்படும்
என்பதைவிடவும், மக்களிடம் கொடுப்பதற்கு வாக்குறுதிகள் தேவை என்பதே
அவர்களுக்கு இப்போதுள்ள முக்கியமான பிரச்சனை. கடந்த சட்டமன்ற தேர்தலில்
தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றதற்கு தி.மு.க.வின் தேர்தல்
அறிக்கைதான் காரணமென்று சொல்லப்பட்டது. ‘இந்தத் தேர்தல் வெற்றியின் ஹீரோ
தேர்தல் அறிக்கைதான்’ என்று அதைப் பல தலைவர்களும் வர்ணித்தார்கள்.
கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகளின் பலத்தைவிடவும், தி.மு.க.வின்
தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த இலவச வண்ணத் தொலைக்காட்சித் திட்டம்,
கூட்டுறவு கடன் தள்ளுபடி, ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய் போன்ற
வாக்குறுதிகள்தான் அதற்கு மக்களின் ஆதரவை பெற்றுத் தந்தது என்பதே பலருடைய
கணிப்பாகும்.


தேர்தல் காலத்தில் வழங்கப்படும்
வாக்குறுதிகள் தேர்தல் முடிந்ததும் காற்றில் பறந்துவிடும் என்பதே பொதுவாக
மக்களின் எண்ணமாக இருந்து வந்தது. அந்த வாக்குறுதிகளை அரசியல்கட்சிகளும்
சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை, மக்களும் அதை பெரிதாக நம்புவதில்லை
என்பதுதான் கடந்த கால யதார்த்தம். ஆனால் 2006 சட்டமன்றத் தேர்தலில்
தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளும், அதனால் கிடைத்த வெற்றியும் இந்த
அணுகுமுறையை இப்போது மாற்றிவிட்டன. மக்களைக் கவரும் வாக்குறுதிகளைத்
தந்தால் அவர்களது ஆதரவைப் பெறமுடியும் என்று இப்போது அரசியல் கட்சிகள் எண்ண
ஆரம்பித்துவிட்டன.

தேர்தல் அறிக்கைகளைத் தயாரிப்பதற்கு பெரிய
கட்சிகளில் ‘திங்க் டேங்க்’ என சொல்லப்படும் அறிவுஜீவிகளின் குழு
இருக்கும். இப்போது இதற்காக கார்பரேட் கம்பெனிகள்கூட முளைத்துவிட்டன. ஆனால்
அத்தகைய ‘ஆடம்பரங்கள்’ சிறிய கட்சிகளுக்கு இருப்பதில்லை. கூட்டணி அரசியலே
யதார்த்தம் என ஆகிவிட்ட இன்றைய சூழலில் கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள்
தமக்கென்று தனித்தனியே தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டாலும்கூட கூட்டணிக்கு
தலைமைத் தாங்குகிற கட்சியின் தேர்தல் அறிக்கையே முக்கியமாகக்
கவனிக்கப்படும். இப்போது பெரிய கட்சிகள் ஒரு பக்கம் கூட்டணிப்
பேச்சுவார்த்தையை நடத்திக்கொண்டு, மறுபக்கம் தேர்தல் அறிக்கைகளைத்
தயாரிக்கின்ற வேலையில் மும்முரமாக இருக்கின்றன. அவற்றில் என்னென்ன
வாக்குறுதிகள் இடம்பெறப்போகின்றன என்பதை மக்களும் ஆர்வத்தோடு
எதிர்பார்த்திருக்கிறார்கள்.

அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை
அளிக்கும்போது மக்களின் விருப்பம், தேவை ஆகியவற்றைக் கேட்டறிந்து அதை
முடிவு செய்வதில்லை. எதெல்லாம் கவர்ச்சியாக இருக்குமோ அதைத்தான்
வாக்குறுதியாக அளிக்கிறார்கள். இதனால் மக்களுடைய ஜீவாதாரமான பிரச்சனைகள்
போதிய அளவு கவனம் பெறாமல் போய்விடுகின்றன. மக்கள் தமது பிரச்சனைகளை
எடுத்துச்சொல்வதற்குப் போதுமான வாய்ப்பும் இருப்பதில்லை. இவ்வாறு
புறக்கணிக்கப்படுகின்ற பிரச்சனைகளில் முக்கியமானதாக விளங்குவது பெண்களின்
பிரச்சனையாகும்.

நமது வாக்காளர்களில் ஏறத்தாழ பாதி அளவினராக
இருக்கும் பெண்களுடைய பிரச்சனைகளை அரசியல் கட்சிகள் முக்கியத்துவம் தந்து
அணுகுவதில்லை. சட்டமன்ற, பாராளுமன்றத்தில் மகளிருக்கு இடஒதுக்கீடு
வழங்குகிறோம் என எத்தனையோ ஆண்டுகளாக அரசியல் கட்சிகள் கூறிவந்தபோதிலும்
அதற்கான மசோதாவை நிறைவேற்றாமல் இழுத்தடித்து வருவது இதற்கொரு உதாரணம்.
இடஒதுக்கீடு வழங்கப்பட்டால் பெண்கள் தம்முடைய பிரச்சனைகளை பாராளுமன்றத்தில்
எடுத்துரைத்து அவற்றுக்கான தீர்வுகளைக் காண முடியும். ஆனால் இதற்கான
வாய்ப்பை அரசியல் கட்சிகள் கொடுக்க மறுத்துவருகின்றன.

மகளிர்
இடஒதுக்கீடு பிரச்சனையைவிடவும் முக்கியமான இன்னொரு விஷயம் இப்போது
தெரியவந்திருக்கிறது. குழந்தைத் திருமணம் என்பது உலகிலேயே அதிகமாக
இந்தியாவில்தான் நடக்கிறது என்ற உண்மையை ‘லான்ஸெட்’ என்ற மருத்துவ இதழ்
இப்போது வெளிப்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் நடைபெறும் திருமணங்களில்
ஏறத்தாழ நாற்பத்தைந்து சதவீத திருமணங்கள் பெண்ணுக்கு சட்டரீதியாக
அனுமதிக்கப்பட்ட பதினெட்டு வயது ஆவதற்கு முன்பே நடந்து விடுகிறது என அந்த
பத்திரிகையில் வெளியான ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்று கூறுகிறது. ‘நேஷனல்
ஃபேமிலி ஹெல்த் சர்வே’ மூலம் பெறப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில்
மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த உண்மை தெரியவந்திருக்கிறது.

இந்தியாவில்
பீகார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஆந்திரா, உத்திர பிரதேசம் ஆகிய
மாநிலங்களில் சிறுவயதிலேயே பெண்களுக்குத் திருமணம் செய்து வைப்பது
சகஜமானதாக இருக்கிறது. கேரளா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் நிலைமை
சற்றே பரவாயில்லை என்றபோதிலும், இவையும்கூட விதிவிலக்குகள் அல்ல.
தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், இன்னும் பல பகுதிகளில் குழந்தைத் திருமணம்
நடைமுறையில் இருந்து வருகிறது. கிராமப்புறங்களில் இப்போதும் கோலோச்சுகிற
அறியாமையே இதற்கு முக்கியமான காரணமாகும். விழுப்புரம் மாவட்டத்தில்
சிறுமிகளுக்கு பொட்டுக்கட்டி விடுவது, தவளையோடு கல்யாணம் செய்துவைப்பது
போன்ற மூடப்பழக்கங்கள் நடைமுறையில் இருப்பதை பத்திரிகைச் செய்திகள்
உறுதிப்படுத்துகின்றன. பெண்களின் கல்வி நிலை மோசமாக இருக்கும் பகுதிகளில்
குழந்தைத் திருமணம் அதிகமாக இருக்கிறது என்பதைப் பல்வேறு ஆய்வுகளும்
நிரூபித்திருக்கின்றன.

தற்போது நடைமுறையில் உள்ள, பெண்ணுக்கு
திருமணம் செய்வதற்கேற்ற சட்டபூர்வமான வயது பதினெட்டு என்பது 1978ஆம்
ஆண்டில் அறிவிக்கப்பட்டதாகும். குழந்தை திருமணம் பற்றி முதலில் அக்கறை
காட்டியவர்கள் நம்மை ஆட்சி செய்த வெள்ளைக்காரர்கள்தான். அவர்கள்தான்
1929ஆம் ஆண்டில் குழந்தைத் திருமணங்களை தடை செய்வதற்கான சட்டத்தை
முதன்முதலாகக் கொண்டுவந்தார்கள். அப்போது பெண்ணுக்கு சட்டபூர்வமாக
அங்கீகரிக்கப்பட்ட திருமண வயது பதினான்கு, அது 1940ஆம் ஆண்டில் பதினைந்து
என உயர்த்தப்பட்டது.

சிறுவயதில் திருமணம் செய்து வைப்பதால்
பெண்களுக்கு பல்வேறு விதமான சுகாதாரக்கேடுகள் வருவது மட்டுமல்லாமல்,
அவர்களது உரிமைகளும் பறிக்கப்படுகின்றன. முறையாக கல்வி கற்பதற்கும்,
உளவியல் ரீதியான வளர்ச்சிக்கும் அது தடையாக இருக்கிறது. சிறுவயதில்
திருமணமாகிச் செல்லும் பெண்கள் உடனடியாகவே கர்ப்பம் தரிப்பதால்
அவர்களுக்குக் கடுமையான பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. அவர்களது உடல்
பக்குவப்படாத நிலையில் தாம்பத்தியத்தில் ஈடுபடுவதால் உடல் ரீதியில்
மட்டுமின்றி, உளவியல் ரீதியாகவும் அவர்கள் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்
என்பதை மருத்துவ ஆய்வுகள் எடுத்துக்கூறுகின்றன. 2001ஆம் ஆண்டு எடுத்த
மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இந்தியாவில் சுமார் மூன்று லட்சம் பெண்கள்
பதினைந்து வயதுக்குள்ளாகவே குழந்தை பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
இந்தியாவிலுள்ள பெண் எய்ட்ஸ் நோயாளிகளில் பெரும்பாலானோர் பதினெட்டு
வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.

குழந்தைத்
திருமணத்தை தடுப்பதற்கு சட்டம் இருந்தபோதிலும், பதினெட்டு வயதுக்குக்கீழ்
உள்ள பெண்ணோடு செய்யப்படும் திருமணத்தை ரத்து செய்வதற்கு தற்போது வழியேதும்
இல்லை. அவ்வாறு ரத்து செய்தால் அது அந்தப் பெண்ணுக்கு மேலும் பாதுகாப்பற்ற
நிலையை ஏற்படுத்திவிடும் என்பதால் நீதிமன்றங்கள் அத்தகைய திருமணங்களை
சட்டபூர்வமாக அங்கீகரித்தே வருகின்றன. குழந்தைத் திருமணத்திற்கு உதவியாக
இருப்பவர்களைத் தண்டிப்பதற்கு தற்போது சட்டத்தில் இடமிருந்தாலும், அது
நடைமுறையில் சாத்தியமற்றதாகவே இருக்கிறது.

இந்திய சட்ட ஆணையம் கடந்த
ஆண்டு குழந்தை திருமணத் தடைச் சட்டத்தில் செய்யப்படவேண்டிய திருத்தங்கள்
சிலவற்றை அரசுக்கு பரிந்துரைத்தது. பதினாறு வயதுக்கு கீழ் உள்ள பெண்ணோடு
செய்யப்படும் திருமணத்தை சட்டபூர்வமாக ரத்து செய்ய வேண்டும்; இந்திய
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 375ஐ திருத்தம் செய்து சட்டரீதியாக உடலுறவுக்கு
சம்மதம் தெரிவிக்கக்கூடிய வயது பதினாறு என ஆக்கவேண்டும்; அனைத்து விதமான
மதங்களிலும் திருமணங்களைக் கட்டாயமாக பதிவு செய்வதற்கு ஆணையிட வேண்டும்;
இந்து திருமணச் சட்டத்தின் ஷரத்துகளும் குழந்தை திருமணத் தடைச் சட்டத்தின்
பிரிவுகளும் முரண்படாதபடி உரிய திருத்தங்கள் செய்யப்படவேண்டும் முதலான
யோசனைகள் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன. ஆனால் அவற்றை மத்திய அரசு
கவனித்ததாகத் தெரியவில்லை. அரசியல் கட்சிகளும் அதற்காக குரலெழுப்பவில்லை.

பாராளுமன்றத்
தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் இந்த நேரத்திலாவது அரசியல் கட்சிகள்
இதுபற்றி அக்கறை காட்ட வேண்டும். தாங்கள் ஆட்சிக்கு வந்தால் குழந்தைத்
திருமணங்களை முற்றாகத் தடைசெய்வோம். இதுகுறித்து மருத்துவ நிபுணர்களும்,
சட்ட ஆணையமும் வழங்கியுள்ள ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டு அவற்றுக்கு சட்ட வடிவம்
கொடுப்போம் என தமது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கின்ற கட்சிக்கு
பெண்களின் ஆதரவு கிடைக்கும் என்பது நிச்சயம். வாக்குகளைப் பெறவாவது இந்த
வாக்குறுதியை அரசியல் கட்சிகள் அளிக்குமா?


நன்றி : எழுத்தாளர் ரவிக்குமார்


வாக்குறுதி நேரம் 168113 அன்புடன் லக்ஷ்மண் வாக்குறுதி நேரம் 168113
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
Lakshman
Lakshman
பண்பாளர்


பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» மின்வெட்டு நேரம் அதிகாரபூர்வ அறிவிப்பு: சென்னையில் 2 மணி நேரம்; மற்ற பகுதியில் 4 மணி நேரம் மின் தடை
» நிலா காயுது நேரம் நல்ல நேரம் நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்
» எனது இமெயில் நேரம் அதாவது மெயில் வந்த நேரம் பிழையாக காட்டுகிறது.அதனை எப்படி மாற்றுவது?
» உலகின் மிக நீண்ட நேரம் ஓடக்கூடிய திரைப்படம் (150 மணி நேரம்)
» ராமர் கோவில் கட்டுவோம் : காங்கிரசும் வாக்குறுதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum