ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கே போகிறது தமிழகம்?

Go down

எங்கே போகிறது தமிழகம்? Empty எங்கே போகிறது தமிழகம்?

Post by Lakshman Tue 29 Mar 2011 - 11:22

எங்கே போகிறது தமிழகம்?




நமது நாட்டின் அரசியல்வாதிகள் இரு
வகைப்படுவர். தமது அரசியல் வளர்ச்சிக்காகப் பாடுபடுவோர் மற்றும் நாட்டின்
வளர்ச்சிக்காக அரசியலில் ஈடுபடுவோர். இதில் பெரும்பாலானோர் அரசியலில்
வளர்வதற்காகச் செயற்படுகின்றனர். வெகு சிலரே வளர்ச்சிக்கான அரசியலில்
ஈடுபடுகின்றனர் என்றார் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டா
போட்டியாக வெளிவந்துள்ள தேர்தல் அறிக்கைகளைப் பார்க்கும் போது நாட்டின்
வளர்ச்சிக்காகப் பாடுபடும் அரசியல்வாதிகளின் சொற்ப எண்ணிக்கையும் குறைந்து
வருகிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

வறுமையை ஒழிப்போம், ஊழலை ஒழிப்போம்,
நல்லாட்சி தருவோம், அனைவருக்கும் வேலை வாய்ப்பு, இலவசக் கல்வி, மருத்துவ
சிகிச்சை அளிப்போம், அடிப்படைக் கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவோம் என்பது
போன்ற தேர்தல் வாக்குறுதிகள் அளிப்பது "அவுட் ஆப் பஷ' னாகி விட்டது.

இதையெல்லாம் இதுவரை எந்த அரசும்
நிறைவேற்றியதும் இல்லை. இனி செய்யப்போவதும் இல்லை என்று வாக்காளர்கள்
உணர்ந்து கொண்டதாலோ என்னவோ தங்களது வாக்குகளை இலவசங்களுக்கு அளிக்கத்
தயாராகி வருகின்றனர்.

இந்தியாவை வல்லரசாக்கும் வகையில்
அரசியல்வாதிகள் அனைவரும் வளர்ச்சிக்கான அரசியலில் ஈடுபட வேண்டும். அதுதான்
இந்நாட்டுக்கு இப்போதைய தேவை என்று அறிவுறுத்திய அப்துல் கலாமை அளித்த
தமிழ்நாட்டின் அரசியல் நிலைமை தலைகீழாக உள்ளது.

பசுமைப்புரட்சியை உருவாக்கி உணவு, தானிய
உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைய வித்திட்ட சி.சுப்பிரமணியம், கல்விக்
கண் திறந்த காமராஜ், எதிர்கால இந்தியாவின் மீது குழந்தைகள் மனதில்
நம்பிக்கையை விதைத்த அப்துல் கலாம் போன்றோரை நாட்டுக்கு வழங்கிய
தமிழகத்தின் எதிர்கால நம்பிக்கை இன்று இலவசங்கள் எனும் இருளால்
சூழப்பட்டுள்ளது.

இலவச அரிசியை வாங்கி இலவச வெட்கிரைண்டரில்
அரைத்து, இலவச காஸ் அடுப்பில் இட்லியாக்கி, இலவச மிக்ஸியில் சட்னி
அரைத்து, இலவச கொன்கிறீட் வீட்டில் உட்கார்ந்து, இலவச மின் விசிறியை
சுழலவிட்டபடி சப்பிட்டு, இலவச டி.வி.யில் படம் பார்த்து மகிழ்ந்தால் வாழ்வு
சுகமாகத்தானே இருக்கும். அப்படி உட்கார்ந்து சாப்பிட்டால் வரும் பல்வேறு
இலவச நோய்களுக்கு சிகிச்சை அளிக்க இருக்கவே இருக்கிறது இலவச காப்பீட்டுத்
திட்டம். வயதாகி ஓய்ந்து போனால் ஊர் சென்றுவர இலவச பஸ் வசதியும் மாதாமாதம்
இலவசமாகப் பணமும் தருவார்கள். மக்களைப் பெறப்போகும் கர்ப்பிணிகளுக்கு
அரசாங்கமே ஆயிரக்கணக்கான ரூபாய்களை அள்ளித் தரப்போகிறது. அதுவும் பெண்
குழந்தையாயின் அவள் வளர்ந்த பின் திருமணம் செய்யத் தங்கத் தாலியும் பணமும்
கிடைக்கப் போகிறது. நல்ல வேளை மாப்பிள்ளையும் தேடிக் கொடுக்கப்படும் என்று
கூறவில்லை.

எனவே குடும்பத்துக்காகவோ
எதிர்காலத்துக்காவோ நாட்டுக்காகவோ எதற்காக உழைக்க வேண்டும்? அதனால் இந்த
நாடும் மக்களும் எப்படிப் போனால் என்ன? என்ற நிலைமைக்கு மக்கள் வந்து
விட்டார்கள் போலிருக்கிறது. அல்லது அந்த நிலையை இருபெரும் கட்சிகளும்
உருவாக்கிவிட்டன என்றுதான் கூற வேண்டும்.

தமிழனுக்கு தன்மானம் முக்கியம்.
சுயமரியாதையோடு இருக்க வேண்டும் என்ற முழக்கமெல்லாம் இன்று எங்கே போனதெனத்
தெரியவில்லை. ஒட்டுமொத்த தமிழர்களின் சுயமரியாதைக்கும் விடப்பட்ட சவாலாக
இருக்கின்றன இந்தத் தேர்தல் அறிக்கைகள்.

வாக்காளர்கள் எதை எதிர்பார்க்கிறார்களோ
அதைத்தான் அரசியல்வாதிகள் கொடுக்க முன்வருகிறார்கள். உழைத்துக் களைத்துச்
சாப்பிட்டால்தான் உடலில் ஒட்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். ஒரு பொருளைச்
சும்மா கொடுத்தால் கூட வாங்கத் தயக்கம் காட்டுபவர்கள் எம் தமிழர்கள். ஆனால்
இன்று நிலைமை தலைகீழ். இலவசம் கிடைக்கவில்லை என வீதியில் போராடுகிறான்
தமிழன்.

இந்தியாவின் ஒரு சில மாநிலங்களில் இலவச
டி.வி.தருகிறோம், இலவச அரிசி தருகிறோம் என்று தமிழகத்தைப் பின்பற்றி
அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் எடுபடாமல் போனாலும் கூட
தமிழ்நாட்டில் மட்டும் கைமேல் பலன் தருவது எதைக் காட்டுகிறது?
இலவசங்களுக்குத் தமது வாழ்வையும் எதிர்காலத் தலைமுறையினரின் வாழ்வையும்
விற்பதற்குத் தமிழர்கள் தலைப்பட்டு விட்டனர் என்பதையே காட்டுகிறது.

தர்மம் போடுங்க சாமீ என்று யாரேனும்
யாசிக்கும் போது கூட மேலும் கீழும் ஒரு முறை பார்த்துவிட்டு கையும் காலும்
நன்றாகத் தானே இருக்கிறது. உழைத்துச் சாப்பிட்டால் என்ன கேடு என்று
எண்ணாதவர்கள் நம்மில் எத்தனை பேர்?

50 பைசாவைத் தூக்கிப் போடும் ஒரு சில
விநாடிகளுக்குள் எத்தனை சிந்தனைகள் நம்முள் ஓடுகின்றன. இந்த நாடு ஏன்
முன்னேறவில்லை என்றோ அல்லது ஏழை, பணக்காரன் இடைவெளி அதிகரித்துவிட்டது
என்றோ நினைக்காதவர்கள் யாரேனும் உண்டா?

குறைந்தபட்சம் பிச்சை போடும் நேரத்திலாவது
வறுமை என்று ஒழியும் எல்லோருக்கும் எல்லாமும் எப்போது கிடைக்கும் என்று
நினைக்காத கல் நெஞ்சக்காரர்கள் நம் நாட்டில் குறைவுதானே? எல்லோரும்
எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்ற சிந்தனையை
அரசியல்வாதிகள் தவறாகப் புரிந்து கொண்டார்கள் போலிருக்கிறது. அதனால்தான்
இலவசங்களால் நிறைகிறது தமிழனின் வயிறு. அதைப் பார்த்து குலுங்கி குலுங்கிச்
சிரிக்கிறது இதர இந்தியர்களின் வயிறு.

தொகுதிக்கே எங்கள் எம்.எல்.ஏ.வருவதில்லை
என்று குற்றஞ்சாட்டும் மக்களையோ அல்லது தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை
என்று கூறி ஓட்டுக் கேட்க வரும் கட்சியினைரைப் பார்த்துப் பொங்கி எழும்
வாக்காளர்களையோ காண முடிவதில்லை. அப்படியே பொங்கினாலும் நீங்கள் ஒன்றும்
சும்மா ஓட்டுப்போடவில்லையே சில ஆயிரங்கள் வாங்கிக் கொண்டும் இலவசங்களைப்
பெறவும்தானே வாக்களித்தீர்கள் என்று ஏளனமாய் கேட்கப்படும் அவல நிலையில்
இருக்கிறார்கள் தமிழக வாக்காளர்கள்.

இரு அணியில் ஓரணியைத் தேர்ந்தெடுத்தாக வேண்டிய கட்டாயத்தால் ஒரு மாநிலமே சத்திரமாகப் போகிறது. அதுவே சரித்திரமாகவும் போகிறது.



நன்றி : தினமணி


எங்கே போகிறது தமிழகம்? 168113 அன்புடன் லக்ஷ்மண் எங்கே போகிறது தமிழகம்? 168113
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
Lakshman
Lakshman
பண்பாளர்


பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum