புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 4 I_vote_lcapஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 4 I_voting_barஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 4 I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 4 I_vote_lcapஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 4 I_voting_barஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 4 I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 4 I_vote_lcapஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 4 I_voting_barஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 4 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 4 I_vote_lcapஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 4 I_voting_barஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 4 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 4 I_vote_lcapஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 4 I_voting_barஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 4 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 4 I_vote_lcapஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 4 I_voting_barஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 4 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 4 I_vote_lcapஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 4 I_voting_barஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 4 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 4 I_vote_lcapஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 4 I_voting_barஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 4 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 4 I_vote_lcapஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 4 I_voting_barஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 4 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 4 I_vote_lcapஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 4 I_voting_barஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 4 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்


   
   

Page 4 of 11 Previous  1, 2, 3, 4, 5 ... 9, 10, 11  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 3:29 am

First topic message reminder :

மொழி பெயர்ப்பாளரின் நன்றியுரை

திரு. கர்மயோகி அவர்களின் SPIRITUALITY & PROSPERITY PART – I என்ற ஆங்கில படைப்பை தமிழாக்கம் செய்து வெளியிடுவதற்கு எனக்கு அனுமதி அளித்ததிற்கு என்னுடைய நன்றியறிதலை முதலில் அவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இம்மொழிப்பெயர்ப்பை புத்தகமாக வெளியிடுவதற்கு வெளியிட முன்வந்த கடலூர் தியான மையத்திற்கும், இம்மொழி பெயர்ப்பை ஆங்கில மூலத்திற்கு ஏற்றபடி திருத்தம் செய்து கொடுத்த திரு. N.அசோகன் அவர்களுக்கும், தமிழாக்கத்தின் தரத்தை மேம்படுத்திக் கொள்ள உதவும் வகையில் தன்னுடைய தமிழாக்கப் பிரதிகளை படிப்பதற்கு எனக்கு வழங்கிய ராணிப்பேட்டை தியான மைய பொறுப்பாளர் திரு. S. லஷ்மிநாராயணன் அவர்களுக்கும் மற்றும் பல வகையில் உதவிய சக அன்னை அன்பர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

என்னால் முடிந்தளவிற்கு இம்மொழி பெயர்ப்பினை எனக்குத் தெரிந்தளவிற்கு செய்துள்ளேன். அதையும் மீறி மூலத்தின் கருத்துச் சிறப்பு சில இடங்களில் சரியாக வெளிப்படவில்லை என்று வாசகர்களுக்கு மனதில் பட்டால் பொறுத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றேன்.

பகவான் ஸ்ரீ அரவிந்தர் மற்றும் ஸ்ரீ அன்னை அவர்களுக்கு இப்படி எழுத்து மூலமாக, இச்சிறு சேவையை செய்ய முடிந்ததிற்கு என் நன்றியறிதலை அவர்கள் பொற்பாதங்களில் சமர்ப்பணம் செய்கின்றேன்.

M. மணிவேல்




ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 3:42 am

30. முடியாதது முடியும்

பாகம் - V

அதிர்ஷ்டம் ஒருவரை தேடுவதும் அல்லது துர்அதிர்ஷ்டம் ஒருவரை தாக்காமல் விலகுவதும் ஒவ்வொருவருடைய வாழ்விலும் நடைபெறும் நிகழ்ச்சிகளாகும்.

தனது 35வது வயது வரை அரிசியும், மோரும் தவிர மற்ற எதையும் ஜீரணிக்க இயலாதவர் ஒருவர் எம்.ஏ. (இலக்கியம்) படிப்பில் சேர்ந்தபோது எதையும் ஜீரணிக்க முடிந்ததைக் கண்டார். ஆனால் அதை அவர் உணரவில்லை.

தொடர்ந்து சில மாதங்கள் இடைவெளியில் வலிப்பு நோயினால் அவதிப்பட்ட ஒருவருக்கு புதிய நண்பரின் அறிமுகம் ஏற்பட்டபின் அந்த நோயின் கடுமை கொஞ்சங் கொஞ்சமாக குறைந்து அதிலிருந்து முற்றிலும் விடுபட்டார். ஆனால் அவரும் அதை கவனிக்கத் தவறிவிட்டார்.

சிறு தொகை கூட கடன் பெறமுடியாத நிலையில் இருந்தவர்களுக்கு பொது திட்டத்தினால், வீடு தேடி வந்து ஆயிரக்கணக்கான ரூபாய் கடனாக வழங்கப்பட்டது. பத்திரிக்கையாளர் இதைப்பற்றி தெரிந்து கொள்ள முயற்சி செய்த பொழுது, அந்த முன்னேற்றத்தின் விபரங்களை மட்டும் அவர்கள் தெரிவித்ததைக் கேட்டறிந்தார். ஆனால் அது எவ்வாறு நிகழ்ந்தது என்று தெரியாது என்று கூறினார்கள். அதைப் பற்றி குறிப்பாகக் கேட்டபோதும், இது தங்கள் நினைவில் இல்லை என்று தெரிவித்தார்கள்.

ஆன்மா எப்படி முடியாததை முடித்துத் தருகிறது என்பதை தெரிந்து கொண்டு அதைத் தன் வாழ்வில் நிரந்தரமாக்கிக் கொள்ள விரும்புகின்றவர் தன் கடந்த கால வாழ்வை ஆராய்ச்சி செய்து இப்படிப்பட்ட நிகழ்வுகளை கண்டுபிடிப்பது நல்ல துவக்க முயற்சியாகும். அப்படிப்பட்ட முயற்சி ஆன்மீக நன்றியறிதலாகும்.

வாழ்வில் செயல்படும் ஆன்மா எப்படி நமக்கு தகுதிக்கு மீறிய பேற்றை கொண்டு வந்தது. எப்படி தவிர்க்க முடியாத துரதிர்ஷ்டத்திலிருந்து நம்மைக் காப்பாற்றியது ஆகியவற்றை உணர்வது ஆன்மீக நன்றியறிதலாகும். நன்றியறிதல் ஆன்மாவின் குணமாகும். இக்குணம் நமக்கு ஆன்மீக ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பல வாய்ப்புக்களை உண்டு பண்ணி தரக்கூடியது.

நமக்கு நன்றியறிதல் உள்ளதற்கு சிறந்த அடையாளம் ஆழத்திலிருந்து சந்தோஷம் வருவதுதான். பாமர மனிதன் அரசாங்கத்திடமிருந்தும் சமூகத்திலிருந்தும் பெறும் பலன்களை அறியாதவனாக இருப்பது போல் நாமும் ஆன்மா நமக்கு கேட்காமலே கொடுக்கும் எல்லா பலன்களுக்கும் நாமும் நன்றியுள்ளவர்களாக இருப்பதில்லை.



ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 3:43 am

31. ஆன்மா கெட்ட சகுனத்தையும், நல்ல சகுனமாக மாற்றும்

ஆன்ம விழிப்புள்ளவர்கள், நடப்பவைகள் எல்லாம் அவர்களுக்கு நல்லவைகளாகத் தோன்றுவதால் சகுனங்களை புறக்கணிக்கிறார்கள். எப்பொழுதும் அவர்கள் நல்ல சகுனங்களையே காண்கிறார்கள். சகுனத்தை முக்கியமாகக் கருதி, அதன் மீது நம்பிக்கைக் கொண்டுள்ளவர்கள் பலருண்டு. நம் பரம்பரையில் அவர்களைக் காண்பதுண்டு. வாழ்க்கையை ஒரு ஜீவனாக பாவித்து அது நம்மோடு ஒரு சிம்பல் மொழியில் பேசக்கூடியது என்பதை உணர்பவருக்கு அவர் காண்பது மற்றும் கேட்பது எல்லாம் அவருக்கு சகுனங்களாக அமையும்.

நீ வீட்டை விட்டு கிளம்பும்போது தெருவில் யாராவது ஒருவர் மற்றவரிடம் பேசும்போது "இன்று உனக்கு அதிர்ஷ்டம்” என்ற சொல் காதில் விழும் பொழுது அது உனக்கு நல்ல சகுனமாகும். ஒருவர் கெட்ட சகுனத்தைக் கண்டால் அவர் என்ன செய்வார்? சகுனத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் கெட்ட சகுனத்தைக் கண்டால் வீட்டை விட்டு புறப்பட மாட்டார்கள். ஆன்மாவில் நம்பிக்கையுள்ளவர்கள் ஒரு நிமிடம் தாமதித்து ஆன்மாவை அழைத்துவிட்டு புறப்பட்டுச் செல்வார். அப்பொழுது சூழ்நிலை மாறி உடனே நல்ல சகுனம் தோன்றும். மேல் நிலைக்கு வரும் ஆன்மா கெட்ட சகுனத்தை நல்ல சகுனமாக மாற்றும் சக்தியுடையது.

முக்கியமான வேலை நிமித்தமாக ஒருவர் ஓரிடத்திற்கு போகும் போது பஸ்சை பிடிக்க வேகமாக ஓடினார். அதற்குள் பஸ் கிளம்பி விட்டதைக் கண்டார். அவர் அடுத்த பஸ்சில் போக முடியும் என்றாலும் இந்த பஸ்சை தவறவிட்டதை அவர் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. பஸ், பேருந்து நிலையத்தின் வெளிப்புற நுழைவு வாயிலை அடைந்தது. அவர் உடனே தனக்குள் சென்று தன்னுடைய ஆன்மீக ஆதாரத்தை தேடினார். மனதில் ஒரு தெளிவு தென்பட்டது. உடனே சூழ்நிலை மாறியது. பஸ்சும் நுழைவாயிலில் நிறுத்தப்பட்டது. கண்டக்டர் இந்த பிரயாணியை அழைத்து, பஸ்சில் பிரயாணிகளின் எண்ணிக்கையில் தவறு நிகழ்ந்துவிட்டதாகவும், இன்னும் சில இடங்கள் காலியாக உள்ளனவென்றும் பஸ்சில் ஏறும்படி கூறினார். இதே போன்று மற்றொரு பயணிக்கும் பஸ்சை தவறவிட்ட அனுபவம் ஏற்பட்டு, அவர் போகும் ஊருக்கு டாக்சி கிடைத்து, பஸ் டிக்கெட் எவ்வளவோ அதே கட்டணத்திற்கு பயணம் செய்யும் வாய்ப்புப் பெற்றார். இது எதை குறிப்பிடுகிறது என்றால் உள்ளே இருக்கும் ஆன்மா செயல்படத் தொடங்கியவுடன் புறச்சூழ்நிலையில் மாற்றம் நிகழ்கிறது.

பலனின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட முடியாது. இதில் முக்கியம் என்னவென்றால் உள் வேலையின் முயற்சியினால் சகுனத்தின் தன்மையை மாற்றமுடியும். ஆன்மாவை நெருங்க முடிந்தவருக்கு அது அவரை வேறு நிலைக்கு கொண்டு செல்லும்.



ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 3:44 am

32. வாழ்வின் எதிரொலி - I

திருடர்கள் வங்கியில் பாதுகாப்பு அறையில் பணப் பெட்டியை உடைக்க முயன்றால் அங்கிருக்கும் அபாய அறிவிப்பு மணி ஒலிக்கும். அது பாங்க் பணத்தை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ள ஏற்படுத்திக் கொண்ட இயந்திர சாதனம். அதனால் வங்கியில் கொள்ளை தவிர்க்கப்படும். முரடன் ஒருவன் ஒரு பயந்த சக ஊழியரை துன்புறுத்தினால் மற்றவர்கள் அவனைக் காப்பாற்ற உதவிக்கு ஓடி வருகிறார்கள். அது சமூகத்தின் நல்லெண்ணத்தையும் நாகரீகத்தையும் எதிரொலிக்கின்றது. திரௌபதிக்கு மானபங்கக் கொடுமை இழைக்கப்பட்டபோது ஆன்மாவை அழைத்த உடன் கிருஷ்ண பரமாத்மா உதவிக்கு ஓடி வந்து காப்பாற்றுகிறார். இது இறைவனின் மறுமொழியாகும்.

ஒரு அமெரிக்க வர்த்தகர் இந்திய உரத் தொழிற்சாலைக்கு 70 கோடி பணம் ஒரு வங்கியில் கடனாகப் பெற்றுத்தர உறுதி அளித்தபின், பாங்க் ஆப் அமெரிக்காவின் அதிகாரிகளை (Bank of America) போய்ப் பார்த்தார். அந்த நாட்களில் அது புது மாதிரியான யோசனையாக இருந்தாலும் தன்னால் எத்தனை வங்கிகளை அணுக முடியுமோ அத்தனை வங்கிகளை அணுகுவதற்குத் தீர்மானித்தார். பாங்க் ஆப் அமெரிக்காவோ தாங்கள் இரண்டு நாட்களுக்கு முன்புதான் தென்கிழக்கு ஆசியாவிற்கான உரப்பிரிவை ஏற்படுத்தி விட்டதாக தெரிவித்துவிட்டார்கள்.

சில வருஷங்களாக சந்திக்காத நண்பரை ஒரு முக்கியமான காரியம் நிமித்தமாக, பார்க்க விரும்பி வீட்டை விட்டுக் கிளம்பிய போது அந்த நண்பர் நமக்கு ஆச்சரியம் தரும் வகையில் நமது வீட்டிற்குள் நுழைவதைக் காண்கிறோம். வாழ்வில் அது போன்ற அநேக அதிசயத்தக்க நிகழ்ச்சிகள் நடைபெறுவதுண்டு. இலக்கியத்திலும் இது போன்ற நிகழ்ச்சிகள் மிகுந்து காணப்படுகின்றன. ஒரு நாட்டின் சரித்திரத்திலும் இது போன்றவைகள் காணப்படுகின்றன. இத்தகைய நிகழ்ச்சியை நாம் நினைக்க முடியாத நிலையில் நமக்கு தேவைப்படும் உதவி கிடைப்பதை வாழ்வின் எதிரொலி என்று கூறுகிறேன். "இறைவனுக்கு நன்றி” நீ வந்துவிட்டாய் என்று நாம் ஆச்சரியத்தால் மகிழ்ச்சியில் கூறுகிறோம். நமக்கு அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது என்று நினைக்கிறோம். நாம் நினைப்பது சரி.

ஆனால் இது வாழ்வின் தான்தோன்றித்தனமில்லை. அப்படிப்பட்ட நிகழ்வுகளுக்குப் பின்னால் ஒரு சட்டம் உண்டு. அம்மாதிரியான அரை டஜன் நிகழ்ச்சிகளின் விவரங்களை விரிவாக பார்க்கும் போது அவைகள் அதற்குரிய சட்டத்தைப் பின்பற்றுவது தெரியும். இந்த சட்டம் தெரிந்த ஒருவர் இந்த நிகழ்ச்சிகள் எவ்வாறு வருகின்றன என்று பகுத்துணர்வார்.

ஒருவர் சமூக வாழ்வுக்கு அடிமையாகாமல் ஆன்மாவை அழைக்கும் திறனுக்கு உயர்ந்தால், அவர் சமூக சராசரி வாழ்வைக் காட்டிலும் உயர்ந்து, வாழ்வின் மறுமொழியை பெறமுடியும். வாழ்வின் எதிரொலி என்பது தெரிந்த ஒரு விஷயந்தான். வாழ்வின் எதிரொலியை ஏற்படுத்தும் திறமை எல்லோருக்கும் தெரிந்ததில்லை. இருந்தாலும் வாழ்வில் அசாதாரணமாக இம்மாதிரி சம்பவங்கள் நடைபெறுகின்றன. மிகப்பெரிய தைரியசாலிகள் "நான் என்றுமே கைவிடப்பட்டதில்லை” என்று கூறுவார்கள். எல்லாம் நன்மையில் முடியும் என்று நம்புகின்றவர்கள், தங்களுடைய கூடிவராத திட்டங்கள் கூடிவரும்பொழுது "இப்படி கூடி வருமென்று எனக்கு தெரியும்” என்று சொல்வார்கள். ஆன்மாவை நம்புகின்றவர்களுக்கு எதுவும் கூடிவரும்.



ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 3:44 am

33. வாழ்வின் எதிரொலி - II

புவிஈர்ப்பு சக்தியில் உலகில் உள்ள மூலப்பொருள்கள் சமநிலைப்படுத்தப்படுவது போல், சம்பவங்கள், மனிதர்கள், அசைவுகள், அனைத்தும் மனிதர்களின் உணர்ச்சிப் பெருக்கால் சமநிலையில் உள்ளன. நம்நாட்டில் இந்த உண்மை அதிக அளவில் உணரப்பட்ட போதிலும், மக்கள் வாழ்க்கைக்கு ஒரு நீதிநெறி கற்பித்து தங்களுக்கு நியாயம் கிடைக்கும் பொழுது நீதியை காண்கிறார்கள். இது உண்மையென்றாலும் இதில் ஓரளவுக்குத்தான் உண்மையுள்ளது. ஏனெனில் வாழ்க்கை ஒழுக்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லை. நேர்மையற்ற மனிதன், வாழ்வில் வெற்றி பெறுவதை நாம் அடிக்கடி பார்க்கிறோம். இந்த சந்தர்ப்பங்களில் அப்படிப்பட்டவருடைய வெற்றிக்கு, பணபலம் அல்லது சமூக செல்வாக்குதான் காரணம் என்று நாம் கூறுகிறோம். இது உண்மையென்றாலும், இதிலும் ஓரளவுக்குத்தான் உண்மையுள்ளது. இதில் முழு உண்மை என்னவென்றால், வாழ்வில் உள்ள உணர்ச்சிகளின் சமநிலையாகும். தத்துவார்த்தமாகக் கூட பார்க்க வேண்டுமானால், இது வாழ்வில் உள்ள சக்தியின் சமநிலையாகும். இதை நம் உணர்ச்சிகளால் புரிந்து கொள்வது சுலபம்.

எட்டு டன்கள் எடையுள்ள ஒரு இயந்திரத்தை ஒரு சிறிய துறைமுகத்தில் கப்பலிலிருந்து இறக்கி வைக்க வேண்டியிருந்தது. அந்தத் துறைமுகத்தில் அதிகபட்சமாக 4 டன்கள் இறக்கி வைக்கக்கூடிய கிரேன்கள்தான் இருந்தன. அவர்கள் இயந்திரத்தை இறக்குவதற்கு, 4 டன் திறனுள்ள இரண்டு கிரேன்களை ஈடுபடுத்தினார்கள். கிரேன்கள் வேலை செய்ய ஆரம்பித்தன. ஆனால் கிரேன்கள் பாரத்தை தூக்கி பாதி உயரம் உயர்த்தியதும் வேலை செய்யவில்லை. இயந்திரத்தின் உரிமையாளர்கள் கப்பல் துறைமுக மேடையில் நின்றவாறே, தங்கள் கண்முன்னாலேயே அவர்களது பொருள் கடலில் மூழ்குவதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் எல்லோரும் தாங்கள் வழிபடும் இறைவனை தங்கள் ஜீவனின் ஆழத்திலிருந்து அழைக்க ஆரம்பித்தார்கள். அந்த கிரேன்கள் முறிந்து விட்டது போன்ற சத்தத்தை எழுப்பி மீண்டும் வேலையை செய்ய ஆரம்பித்து, இயந்திரத்தை மேடையில் பத்திரமாக இறக்கிவிட்டன. அவர்கள் இந்த சம்பவத்தைப் பற்றி நூற்றுக்கணக்கானவர்களிடம், பல வருடங்களாக கூறி வந்தார்கள். இந்த அதிசயிக்கத்தக்க சம்பவத்தைப் பார்த்த கப்பல் தலைவன், இது எப்படி நடந்தது என்று ஆச்சரியத்துடன் கேட்டான். அதற்கு அவர்கள் தங்கள் பிரார்த்தனை பலித்தது என்று கூறினார்கள்.

அவர்கள் அதிக விலையுயர்ந்த இயந்திரத்தை இறக்குவதில் வழக்கமில்லாத முறையைக் கையாண்டது விவேகமற்ற செயலாகும். உள் மனதில் எழுந்த தீவிரமான உணர்ச்சிகள், விவேகமற்ற செயலை முறியடித்துவிட்டன. உணர்ச்சிகளின் சமநிலை, அல்லது சக்தி திரும்பக் கிடைக்கப்பெற்றவுடன், வாழ்வின் எதிரொலி சட்டத்தின்படி, வாழ்வு காரியத்தைப் பூர்த்தி செய்து கொள்கிறது. இவ்வாறு வாழ்க்கையில் அநேக வழிகளில் வாழ்வின் எதிரொலி நடைபெறுகிறது.

.



ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 3:45 am


34. வாழ்வின் எதிரொலி - III


ஜேன் ஆஸ்டின் எழுதிய Pride and Prejudice (கர்வமும் தவறான அபிப்பிராயமும்) நாவலில், டார்சி என்ற கதாநாயகன் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த கர்வமிக்க செல்வந்தன். கதாநாயகி எலிசபத் சுமாரான செல்வந்தரின் மகள். தனக்கென வரதட்சணை கொடுக்க இயலாதவள். ஒரு நடன நிகழ்ச்சியில் எலிசபத்தைப் பற்றி, அவள் அழகற்றவள் என்றும் ஆனாலும் சுமாரானவள் என்றும் அவள் காதில் விழும்படி டார்சி கூறினான். இதைக் கேட்டதும் அவள் மனம் புண்பட்டு, மிகவும் பாதிப்புக்கு உள்ளானாள். விரைவிலேயே டார்சிக்கு அவள் மீது அளவு கடந்த ஆசை எழுந்ததை உணர்ந்தான். மற்றொரு நடன நிகழ்ச்சியில், டார்சி அவனை தன்னுடன் நடனம் ஆட அழைத்த போது எலிசபத் மறுத்து விட்டாள். மூன்றாவது முறையாக ஒரு சந்தர்ப்பத்தில் டார்சி எலிசபத்தை தன்னுடன் நடனம் ஆட அழைத்தபோது, தன்னையறியாமலே நிதானம் இல்லாத நிலையில் ஏற்றுக்கொள்கிறாள். நடனம் முழுவதிலும் அவனை வேண்டுமென்றே கோபமூட்டி வம்புக்கு இழுக்கிறாள். டார்சி, அவளுடைய தமக்கை ஜேனின் திருமணத்தை தந்திரமாக தடுத்ததை அறிந்த எலிசபத் அவனை வெறுக்கிறாள்.

டார்சி எலிசபத்தை அவனது அத்தை வீட்டில் சந்தித்த பொழுது தன்னை மணக்கும்படி கோரிக்கை விடுத்தான். அக்கோரிக்கையை அவள் மனம் புண்படும்படியான விதத்தில் பேசி வைத்தான். அவள் அவனை கடுமையாகத் திட்டிவிட்டு, அவன் கொடுமையான குற்றத்தைப் புரிந்தவன் என்று அவன்மீது குற்றம் சுமத்தினாள். ஆனால் டார்சி, தான் நடந்து கொண்டது சரி என்று தன்னை நியாயப்படுத்தி, விளக்கமான ஒரு கடிதம் எழுதினான். அதன்பிறகு நீண்ட மனப்போராட்டத்திற்குப் பின், எலிசபத் தன் மனம் புண்பட்டிருந்த நிலையிலும் தன்னுடைய தமக்கைக்கு அவன் தீங்கு இழைக்கவில்லை என்று அறிந்து, டார்சி மீது தவறு இல்லையென்று உணர்ந்து கொண்டாள்.

சில மாதங்கள் கழித்து டார்சியின் எஸ்டேட் இருக்கும் பெம்பர்லிக்கு எலிசபத்தின் அத்தை சுற்றுலா பயணமாக அழைத்துப் போனாள். எலிசபத் டார்சியை பார்ப்பதற்கு அச்சங்கொண்டவளாக இருந்த போதிலும், அவன் அங்கு இல்லை என்று தெரிந்து பெம்பர்லிக்குப் போக சம்மதித்தாள். அவள் அந்த அழகிய மாளிகையில் இருந்தபொழுது, தனக்கு கர்வியாக தெரிந்த டார்சி உண்மையிலேயே இதமாக பழகக்கூடியவன் என்று தெரிந்து கொண்டாள். தான் விரும்பியிருந்திருந்தால் அந்த அரண்மனைக்கு தலைவியாக இருந்திருக்கலாம் என்று நினைத்தாள்.

டார்சியின் உயர்ந்த பண்புகளைப் பற்றி மற்றவர்கள் வாயிலாகக் கேட்டபொழுது அவளுக்கு அவன் மீது இருந்த வெறுப்பு மாறிவிட்டது. எலிசபத் அந்த மாளிகையை விட்டு புறப்பட்டு வெளியே சென்ற பொழுது பயணத்தை ஒருநாள் முன்னதாகவே முடித்துக் கொண்டு திரும்பி வந்து கொண்டிருந்த டார்சியை, நேருக்கு நேர் சந்திக்கும்படி நேர்ந்தது. அதுவே அவர்களது திருமணத்திற்கு திருப்புமுனையாக அமைந்துவிட்டது. பெம்பர்லியில் எலிசபத்துக்கு, உணர்ச்சிகளில் ஏற்பட்ட மனமாற்றம் முழுமையானது. அந்த மனமாற்றமே நிலைமையை சமநிலைக்குக் கொண்டுவந்து, இரண்டுநாள் கழித்து வரவேண்டிய டார்சியை ஒருநாள் முன்னதாகவே வரவழைத்தது. இது வாழ்வின் எதிரொலியின் முறையாகும்.



ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 3:45 am

35. வாழ்வின் எதிரொலி - IV

ஒரு அமெரிக்கன் பல்கலைக்கழகத்தில் பயிலும் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகளில், ஒரு அழகிய பணக்கார பொறியியல் மாணவன், அங்குள்ள பல அழகிய பெண்களின் மனதைக் கவர்ந்தவனாக இருந்தான். ஆனால் அவன் மனமோ, வசீகரிக்கத்தக்க, தன் அழகில் மற்றவர்களை விஞ்சுகிற ஒரு பெண்ணின் மீது லயித்திருந்தது. அந்த பெண்ணை அடைய, விருப்பங்கொண்டிருந்த அனேக மாணவர்களில் இவனும் ஒருவனாக இருந்தான். அவளை காதலிப்பவர்கள் அவரவர்களின் அந்தஸ்தில் உயர்ந்த நிலையில் இருந்தவர்களாக இருந்ததால் அவள் ஒரு முடிவிற்கு வருவது சுலபமாக இல்லை. இந்த மாணவன் அவளிடம் தன்னுடைய காதலைப்பற்றி துணிவுடன் பலமுறை தன் ஆவலை வெளிப்படுத்தினான். அவளுக்கு யார் மீதும் விருப்பு வெறுப்பு இல்லையென்றாலும், இந்த விஷயத்தில் முடிவு எடுப்பதில் மிகவும் கஷ்டப்பட்டாள்.

இந்த நிலையற்ற குழப்பமான நிலை அவனுக்கு வேதனையாக இருந்தது. ஒரு நாள் அவன், வகுப்பில் அந்த பெண்ணிடம் சொல்லிக் கொள்ளாமல் நேரே வீட்டிற்கு வந்தான். அவன் உற்சாகமின்றி சோர்ந்து போய்விட்டிருந்தான். யார் அவளை தனக்கு உரியவளாக ஆக்குவார்கள்? உலகில் எந்த சக்தி, அல்லது இறைவனோ அந்த பெண் தன்மீது விருப்பங்கொள்ள செய்ய வல்லமை படைத்தது? என்று, பலவாறாக சிந்தித்தவனாக இருந்த போது, திடீரென்று அவன் மனதில் இறைவன்மீது நம்பிக்கை எழுந்து பக்தியுடன் தீவிர தியானத்தில் ஆழ்ந்தான். மனிதனின் விதியை நிர்ணயிப்பது உண்மையில் இறைவன் என்றால் அந்த அழகியை தன்னுடன் இணைய வைப்பதற்கு கண்டிப்பாக அந்த சக்தி தனக்கு உதவ வேண்டுமல்லவா என்று பலவாறாக எண்ணினான்.

அவன் பிரார்த்தனையை முடித்தவுடனே, தொலைபேசியின் மணி ஒலித்தது. அவள் அவனுடைய காதலை ஏற்றுக் கொண்டு மணப்பதற்கு சம்மதம் என்று செய்தி வந்தது. விரைவில் அவர்களுடைய திருமணம் நடந்தேறியது.

உணர்ச்சிகள் சமநிலைக்கு திரும்பி வரும்போது வாழ்க்கை அற்புதமான நன்மை பயக்கக்கூடிய செயல் மூலம் தன் பதிலை வழங்குகிறது.
ஏன் அந்த செயல் நன்மையுடையதாக இருக்க வேண்டும்?
அது ஏன் செயற்கரிய செயலாக இருக்க வேண்டும்?
அது எப்படி உடனே நிகழ்கிறது?

இப்படிப்பட்ட கேள்விகளுக்கு வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளின் உதாரணங்கள் மூலம் பதில் காணமுடியும். வாழ்வு அதன் சட்டப்படி எதிர்மறையான பலனைக்கூட கொண்டுவரக்கூடியது. வாழ்வின் எதிரொலியை கொண்டு வரும் சக்தியை பெற ஆர்வமுள்ளவர்களுக்கு வாழ்க்கையின் நெகட்டிவ் நியதிகள் உதவாமலிருக்கலாம். ஆனால் நடுநிலையில் செயல்படும் ஆராய்ச்சியாளருக்கு அதுவும் உதவும்.



ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 3:45 am

36. கலிபோர்னியாவில் ரிஷிய சிருங்கர்

பாப் மெக்ஃபார்லேன் (Bob-Macfarlane) என்பவர் நியுயார்க்கைச் சேர்ந்தவர். அவர் புதுவைக்கு வரும் பொழுதெல்லாம் நல்ல மழை பெய்ததால் ரிஷ்யசிருங்கர் என்ற பெயரை ஈட்டிக் கொண்டார். ஒரு வகையில் அது அவருக்கு எரிச்சல் ஊட்டியது. இப்பொழுது அவர் கலிபோர்னியாவில் வசிக்கிறார். அங்கு மழை அக்டோபர் முதல் பிப்ரவரி வரையில் தொடர்ந்து மழை பெய்யும்.

இந்த ஆண்டு (2003) அக்டோபர், நவம்பர் மாதங்களில் மழையில்லாமல் வறண்டு விட்டது. மழைக்காக பிரார்த்தனை செய்யும் பொழுதெல்லாம் அது பொய்த்ததில்லை என்பது பாப்பின் (Bob) அனுபவம். ஒருமுறை கலிபோர்னியாவில் செய்த பிரார்த்தனையால் பாண்டிச்சேரியில் கடும் கோடை காலத்தில் மழை பெய்தது.

இப்பொழுது வருணபகவான் அவரது பிரார்த்தனைக்கு செவிசாய்க்கவில்லை என்பதைக் கண்டார். அடுத்து என்ன செய்வது? அவர் போகுமிடமெல்லாம் மழைக்காக செய்யும் பிரார்த்தனை தவறுவது இல்லை என்பதால், அவர் அதற்காக எந்தவித கட்டுப்பாட்டையும் மேற்கொள்ளும் அவசியம் ஏற்படவில்லை. இப்பொழுது அத்தகைய தருணம் வந்துவிட்டது. தண்ணீருக்கு தனிக்கவனம் செலுத்துவது, வானுலகிலிருந்து மழையை அன்புடன் அழைப்பதாகும் என்பதை உணர்ந்தார்.

தண்ணீர் அபரிமிதமாக கிடைக்கும் போதும் அதை மிகச் சிக்கனமாக உபயோகிக்க ஆரம்பித்தார்.
அவர் தண்ணீரையும் மற்றும் அதைத் தான் உபயோகித்ததையும் பற்றி, பழைய சம்பவங்களை ஆர்வமாக நினைவு கூர்ந்தார்.
தண்ணீர், மழை இவற்றின் ஆன்மாவுடன் ஆத்மார்த்தமாக தொடர்பு கொண்டார்.

வானுலகம் இவரது அழைப்பை ஏற்றது. பத்து அங்குல மழையை பொழிந்து தள்ளியது. ஒரு நாளுக்குப் பின் மேலும் ஐந்து அங்குல மழை பெய்தது. அவர் அந்த மலைத் தொடர்களில் ஒரு பக்கத்தில் வசித்து வருகிறார். மலைத் தொடர்களின் அடுத்த பக்கத்திலும் சூறாவளிக்காற்று வீசி 24 அங்குல மழை பெய்தது.

மற்ற எதுவும் வெற்றி பெறாத போது தண்ணீருக்கு கவனிப்பு கொடுப்பது வெற்றி கொடுக்கும்.
கவனிப்பு என்பது அன்பின் பிஸிக்கல் வெளிப்பாடாகும். அன்பு ஆன்மாவின் குணம்.
தண்ணீர் போன்ற ஜடப் பொருள்கள் கூட கவனிப்பிற்கு பதில் தரும். ஏனெனில் கவனிப்பு அதற்குள்ளிருக்கும் ஆன்மாவை எழுப்புகிறது.
ஆன்மா ஆன்மாவை நாடும் பொழுது தெய்வீக பலன்கள் எழுகின்றன.



ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 3:46 am

37. முன்கோபம் அல்லது எரிச்சல் ஆன்மீக செல்வவளத்தை தடுக்கும்

1950ல் ஒரு ஆன்மீக பிரம்மச்சாரி ஒழுக்கநெறி தவறாத சமயநெறிவாழ்வில் வாழ்ந்து வந்தார். அவர் பூமிக்கடியில் நீர் ஆதார ஊற்று கண்டறியும் தொழிலை ஏற்று வாழ்க்கையை நடத்திக் கொண்டு வந்தார். அவருக்கு ஒருவேளை எளிய உணவும் இரண்டு செட் துணிமணிகளும் கிடைக்குமளவிற்கு அத்தொழில் அவருக்கு வருமானம் வழங்கியது. அவர் பலராலும் மரியாதைக்குரியவராக கௌரவிக்கப்பட்டார். தன்னுடைய வாழ்வின் நெறிமுறைகளுக்கு புறம்பாக இல்லாமல் அவர் வசதியான வாழ்வை நாடினார். ஆன்மீக சுபிட்சம் அல்லது சுபிட்சமான ஆன்மீகம் அவர் மனதைக் கவர்ந்தது. அவர் இந்த வாழ்வில் உள்ள பல்வேறு கொள்கை, அபிப்பிராயங்களை நன்கு ஆராய்ந்து பார்த்தார். அவை முறையே, சேவை, ஞான விளக்கம், தியானம், பிரார்த்தனை, தீட்சை பெறுதல், மனத்தளவில் தூய்மை பெறுதல், சமர்ப்பணம், சரணாகதி, ஜீவியத்தை உயர்த்த முற்படுதல், தூய்மையான நல்லெண்ணம், இவைகளில் தீட்சை பெறுதல் என்ற கொள்கை அவரது பரம்பரைக்கு ஏற்றதாயிருந்ததால் அதைத் தேர்ந்தெடுத்தார். அது அவருக்கு அவ்வாறே ஏற்பாடாயிற்று.

பரம்பரைக் கொள்கையில் அநேக விதமான வழிமுறைகள் உண்டு என்பதை அவர் அறிவார். இங்கே அத்தகைய வழிமுறைகள் இல்லை என்றும், மலர்கள் மட்டும் சமர்ப்பிக்கப்படுவது உண்டு என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கு அவர், தான் காணிக்கை செலுத்தப்போவதில்லை என்றும் தனக்கு பொருள் லாபம் வேண்டாம் என்றும் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். மலர்களை சமர்ப்பிப்பதை மட்டும் விரும்பினார். மலர் காணிக்கை செலுத்தி ஆத்ம விளக்கம் பெற்றார். அவர் புதிய ஆன்மீகப் பிறவி எடுத்தது போன்று உணர்ந்தார். அவருடைய பிரம்மச்சரிய தேஜஸ் மேலும் கூடி சுடரொளியாய் பிரகாசம் அடைந்தது. ஆன்மீக சுபிட்சத்தின் பலனாக, அவருக்கு அரசாங்கத்திலிருந்து மாநில வாட்டர் டிவைனர் (State Water Diviner) பதவி உத்திரவு கிடைத்தது. அவருடைய கடந்த கால முப்பது வருட தொழிலில் கிடைத்த வேலையின் அளவிற்கு பனிரெண்டு மாதங்களிலேயே அந்த அளவில் தொழில் கிடைத்தது. அவர் ஆன்மாவின் பலனை வேலையின் பெருக்கமாக அனுபவித்தார். ஆனால் அவருக்குக் கிடைத்த வருவாய் விரைவில் சிறுகச் சிறுக சுருங்க ஆரம்பித்தது. இது ஏன் இப்படி வந்தது என்று அவர் கேள்வியை எழுப்பியபோது, அது அவர் வேண்டுமென்றே விரும்பி ஏற்றுக் கொண்டதன் விளைவாகும் என்று தெரிவிக்கப்பட்டது. அதாவது அவர் ஏற்கனவே தனக்கு பணம் வேண்டாமென்று, மலர் காணிக்கை மட்டும் செலுத்த விழைந்ததற்கு இணங்க, பண வருவாய் குறைந்தது. இதை உணர்ந்த அவர் தன்னுடைய பிடிவாதத்தின் விளைவு இவ்வளவு பெரியதாக வருவதைக் கண்டு அடங்கிப்போனார். தான் ஆணவமாக தர மறுத்த காணிக்கையை தர முன்வந்தார். உடனே தடைபட்டு போயிருந்த எல்லா வருவாயும், தேக்க நிலையிலிருந்த நிலைமை மாறி விரைவாக பணவரவு வரத்தொடங்கியது.



ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 3:46 am

38. மலர்களின் ஆன்மீகச் சக்தி

நம்முடைய இறைவழிபாட்டில் மலர்கள் முக்கிய இடம் பெறுகின்றன. அவைகள் மென்மையாகவும் சூட்சுமமாகவும் இருப்பதால் ஆன்மீகச் சக்தியை பெற்றுக் கொள்ளும் தன்மையுடையதாக உள்ளன. தெய்வீக அன்னை சுமார் 800 மலர்களுக்கு ஆன்மீக பெயர்கள் சூட்டி அவற்றின் தன்மையை விரிவாக விவரித்துள்ளார்கள்.

மலர்கள் நம் மனதை ஒருமுகப்படுத்தும் திறனை அதிகரிக்கவல்லது. அப்படி மனதை எளிதில் ஒருமுகப்படுத்த இயலாதவர்கள் மலர்களின் உதவியை நாடலாம். ஒருவர் தன் மாமனாரின் உதவியுடன் தொடங்கிய ஆறு தொழில்களும் நஷ்டமடைந்தன. இவர் நாகலிங்கப்பூ செல்வவளம் தரும் என்று கேள்விப்பட்டார். இந்த மலர் சிவனுக்கு உகந்தவை என்பதால் நாகலிங்கப்பூ பொதுவாக சிவன் கோயில்களில் காணப்படுகிறது. இந்த திவாலான மனிதர் நாகலிங்கப்பூவை இறைவனுக்கு சார்த்தி வழிபட்ட பிறகு ஒரு வேலை கிடைத்தது. மறுநாளே இவரது சம்பளம் இரண்டு மடங்காக உயர்ந்தது. அவர் இந்த மலரை அதிகமாக சேகரித்து இறைவனுக்கு சமர்ப்பித்ததால் இரண்டு வருடங்களில் அவரது வருமானம் அவரது ஊதியத்தைப் போல் 16 மடங்காக உயர்ந்தது. சிவந்த நாகலிங்கப்பூ தன்னலமான சுபிட்சம் தரும் பூ என்றும், வெள்ளை நாகலிங்கப்பூ தன்னலமற்ற சுபிட்சம் தரும் பூ என்றும் அழைக்கப்படுகிறது. மல்லிகை தூய்மையையும், ரோஸ் சரணாகதியையும், பருத்தி ரோஜா தெய்வ அருளையும், காகிதப்பூ பாதுகாப்பையும் தரவல்லது.

ஆன்மாவை அழைப்பவர்களுள் பாதுகாப்பு மலர் பிரபலமடைந்துள்ளது. மக்கள் வெளியூர்களுக்குச் செல்லும்போது விபத்துக்குள்ளாகாமல் இருக்க இந்த மலரை எடுத்துக் கொண்டு போகிறார்கள். இப்படிப்பட்ட மலர்களின் தன்மையைப் பற்றி பல நிகழ்ச்சிகள் உள்ளன. ஒரு பெண்மணி நாகலிங்கப்பூவைப் பற்றி தெரிந்து, தன் குறைந்த வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள அந்த மலரை வைத்து வழிபட்டுவந்தார். ஆனால் அதனால் எந்தவிதமான பலனும் கிடைக்கவில்லை என்று மிகவும் விரக்தி அடைந்தார். அதற்குக் காரணம் வீட்டின் அசுத்தம் சுபிட்சத்தைக் கொண்டு வருவதைத் தடுத்தது. வீட்டை சுத்தம் செய்ய முயன்றவுடனே, அவருடைய வருமானம் திடீரென்று அதிகரிக்கத் தொடங்கியது. ஒரு வருடத்தில் வீடு வாங்கும் அளவிற்கு வருமானம் உயர்ந்து வீடு வாங்கினார். ஒரு குறிப்பிட்ட மலர் கிடைக்கவில்லையென்றால், அந்த மலரை மானசீகமாக நினைத்து, சமர்ப்பித்து வழிபட்டு வந்தால், அதே பலனை அடைய முடியும். மனச்சோர்வு என்பது எல்லோருக்கும் பொதுவானது. சாமந்திப்பூ உடலுக்கு சக்தியைக் கொடுக்கவல்லது. இந்த மலரை கையில் எடுத்து வைத்துக் கொண்டு பிரார்த்தனை செய்தால் சக்தி தன் உள்ளே இறங்குவதை உணரலாம்.



ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 3:47 am

39. தீயசக்திகள்

பொறாமை குணம் தன்னுடைய எதிரிகளின் பேரில் சூன்யம் வைக்கத்தூண்டும். பாதிக்கப்பட்டவர் வேறு மந்திரவாதியை அணுகி பரிகாரம் தேடுவார். ஆன்மாவை அழைப்பவர்களுக்கு இத்தகைய பாதிப்பு ஏற்படாது. வக்கிர குணம் படைத்தவர்களின் இழி செயலால், மத நடவடிக்கை நடைபெறும் இடம் துர்நடத்தையுள்ள இடமாக மாறிவிடுகிறது. மதவழிபாட்டில் வெளிப்படும் சக்தி, அதிக தீய சக்திகளை உண்டாக்கும். மேலை நாடுகளில் இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் மருத்துவ சிகிச்சையை நாடுகிறார்கள். சிலர் இந்த முறைக்கு இசைகிறார்கள், மற்றும் பலர் அவ்வாறு விரும்புவது இல்லை.

ஒரு பி.எச்.டி. (Ph.D.) பட்டம் பெற்றவர் இத்தகைய ஒரு சிறிய உபத்திரவத்திற்கு ஆளானார். இரவில் தூக்கத்திலிருந்து எழுந்து உட்கார்ந்து குரைக்க ஆரம்பித்தார். மறுநாள் காலை அவர் மனைவி இதைப்பற்றி கூறியதை அவரால் நம்ப முடியவில்லை. ஏழ்மை மிகுந்த கிராமத்திலிருந்து வந்த இவர், உயர் கல்வி பெற்றவராக இருந்த போதும், அசுத்தமான கெட்ட பழக்கங்களை விட்டுவிட முடியவில்லை. அவரது துணிமணிகள் அழுக்கடைந்ததாகவும், வீடு நன்றாகக் கழுவி கூட்டிப் பெருக்கப்படாமலும், படுக்கை விரிப்புகள் துவைக்காமல் அழுக்குடனும், அந்த வீடு அசுத்தம் நிறைந்ததாக இருந்தது. அவருடைய மனைவி அவரை இந்த விசித்திரமான குணத்திலிருந்து மீட்க விரும்பினாள். அது அவருக்குத் தெரியாது. அவர் ஆன்மாவை அழைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் பலன் இல்லை. அவருக்கு இதில் நம்பிக்கையிருந்ததால் தொடர்ந்து முயற்சித்தார். ஆனால் பலன் ஒன்றும் கிடைக்கவில்லை. அவர் ஒருவரிடம் சரியான அறிவுரையைக் கேட்டறிந்தபின், சுத்தத்தைப் பற்றிய முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டார். அவர்கள் வீட்டில் தரையைக் கழுவி சுத்தம் செய்ய ஆரம்பித்தார்கள். கூரையில் ஒட்டடை அடித்து சுத்தப்படுத்தினார்கள். படுக்கை விரிப்புகளை துவைத்தார்கள். தலையணை உறைகளை மாற்றினார்கள். அவர் படுக்கப் போகுமுன் அகர்பத்தி ஏற்றப்பட்டது. இரவில் படுக்கப் போகுமுன் குளிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். அவர் தீய சக்திகள் விலகும்வரை இந்தப் பழக்கத்தை தொடர்ந்து மேற்கொள்ள தீர்மானித்தார். வீடு சுத்தம் அடைந்த முதல் நாளன்றே தீயசக்தி விலகிற்று.

மந்திரவாதிகள் தீய சக்திகளை விரட்டுபவர்கள். சில நேரங்களில் பாதிக்கப்பட்டவரின் ஆன்மா மிகவும் சக்தி வாய்ந்ததாக செயல்பட்டு, தீயசக்தியை செயலிழக்கச் செய்கிறது. பாதிக்கப்பட்டவர் தீய சக்திகளில் நம்பிக்கையில்லாதவராக இருந்தால், மந்திரவாதியின் மந்திரசக்தி அவரைக் கட்டுப்படுத்தாது. ஆன்மாவை அழைத்தால் எப்பொழுதும் தவறுவது இல்லை. வழக்கமாக ஆன்மாவை அழைக்கும் போது முதல் தருணத்திலேயே தீய சக்தி, பாதிக்கப்பட்டவரை விட்டு விலகிப் போய் விடுகிறது.



ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 4 of 11 Previous  1, 2, 3, 4, 5 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக