ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்

2 posters

Page 11 of 11 Previous  1, 2, 3 ... 9, 10, 11

Go down

ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 11 Empty ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்

Post by சிவா Tue Mar 29, 2011 3:29 am

First topic message reminder :

மொழி பெயர்ப்பாளரின் நன்றியுரை

திரு. கர்மயோகி அவர்களின் SPIRITUALITY & PROSPERITY PART – I என்ற ஆங்கில படைப்பை தமிழாக்கம் செய்து வெளியிடுவதற்கு எனக்கு அனுமதி அளித்ததிற்கு என்னுடைய நன்றியறிதலை முதலில் அவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இம்மொழிப்பெயர்ப்பை புத்தகமாக வெளியிடுவதற்கு வெளியிட முன்வந்த கடலூர் தியான மையத்திற்கும், இம்மொழி பெயர்ப்பை ஆங்கில மூலத்திற்கு ஏற்றபடி திருத்தம் செய்து கொடுத்த திரு. N.அசோகன் அவர்களுக்கும், தமிழாக்கத்தின் தரத்தை மேம்படுத்திக் கொள்ள உதவும் வகையில் தன்னுடைய தமிழாக்கப் பிரதிகளை படிப்பதற்கு எனக்கு வழங்கிய ராணிப்பேட்டை தியான மைய பொறுப்பாளர் திரு. S. லஷ்மிநாராயணன் அவர்களுக்கும் மற்றும் பல வகையில் உதவிய சக அன்னை அன்பர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

என்னால் முடிந்தளவிற்கு இம்மொழி பெயர்ப்பினை எனக்குத் தெரிந்தளவிற்கு செய்துள்ளேன். அதையும் மீறி மூலத்தின் கருத்துச் சிறப்பு சில இடங்களில் சரியாக வெளிப்படவில்லை என்று வாசகர்களுக்கு மனதில் பட்டால் பொறுத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றேன்.

பகவான் ஸ்ரீ அரவிந்தர் மற்றும் ஸ்ரீ அன்னை அவர்களுக்கு இப்படி எழுத்து மூலமாக, இச்சிறு சேவையை செய்ய முடிந்ததிற்கு என் நன்றியறிதலை அவர்கள் பொற்பாதங்களில் சமர்ப்பணம் செய்கின்றேன்.

M. மணிவேல்


ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 11 Empty Re: ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்

Post by சிவா Tue Mar 29, 2011 4:12 am

100. சட்டமும் நீதியும்

கடந்த நூற்றாண்டுகளுக்கு மேலாக நீதிமன்றங்கள் மக்களுக்கு சட்டரீதியான தீர்ப்புகள் வழங்கிக் கொண்டு வருகின்றன. இதற்கு முன்பு மக்கள், ஊரில் உள்ள பெரியவர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட, உள்ளூர் ஆலோசனை மன்றங்கள் மூலமாக தீர்ப்பு பெற்று வந்தார்கள். நீதிமன்றங்கள் ஏற்பட்ட பிறகு, இப்பொழுது சட்டரீதியான தீர்ப்பு பெற்று வருகிறார்கள். சட்டரீதியான தீர்ப்பு சாட்சியங்களின் அடிப்படையாகக் கொண்டது. ஒருவர் உரிமை கொண்டாடுவதில் உண்மை இருக்கிறதோ இல்லையோ, நிரூபிப்பதற்கு சரியான சாட்சியங்கள் இல்லாதபோது நீதிமன்றம் உதவியற்றதாக ஆகிவிடுகிறது. ஆகவே நீதியின் உரிமை குறைக்கப்பட்டு பாதிக்கப்படுகிறது. சட்டம் உதவுவதற்கேற்ப, சட்டத்தின் நீதியாக அமைகிறது.

பரந்த சமூகத்தில் நீதிமுறை வழங்குவதில், ஒருவர் நியாயமாகவும் உரிமையை உடையவராக இருந்த போதிலும், அவருக்கு நீதி மறுக்கப்படுகிறது. அது அப்படி தவிர்க்க முடியாத காரணங்களால், நியாயமானதாக இருந்தாலும், இல்லாவிட்டாலும், நீதி மறுக்கப்படுகிறது. அவர் ஆன்மாவின் நீதியின் முன்னே முழுமையான நீதியைப் பெறமுடியுமா? முடியும். அதற்கு அவர் ஆன்மாவை அழைக்க முன்வர வேண்டும். அல்லது அவருடைய உரிமையின் ஜீவியத்தை அழைக்க வேண்டும்.

அவருடைய வழக்கு பல காரணங்களினால் தோற்றுப் போய் இருக்கலாம். அது சரியான சாட்சியம் இல்லாததாலும், நீதிபதியின் சரியான கவனம் வழக்கில் செலுத்தப்படாததாலும், சமூகம், அரசியல், பணபலம் போன்ற நிர்பந்தங்களாலும் வழக்கு தோற்றுப்போய் இருக்கலாம். அவருடைய காரணங்கள் இங்கே நியாயமானதுதானா? அப்படியானால், அவர் உயர்ந்த சக்தியை அழைக்கத் தயாராக இருக்கிறாரா? எந்த உயர்ந்த நீதிமன்றத்திலும் அவருக்கு நியாயம் மறுக்கப்பட்டிருந்தாலும், ஆன்மாவின் உயர்ந்த சக்தியினால், அவருக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான தீர்ப்புக் கிடைக்கும்.

ஒருவருக்கு தனக்குச் சேர வேண்டிய மூன்றில் ஒரு பங்கு சொத்துக்கு சரியான தஸ்தாவேஜுகள் இல்லாததால், அவரது உரிமையைக் குறிக்கும் ஒரு கிறுக்கப்பட்ட சிறிய காகிதம் கூட இல்லாதபோது, நீதிமன்றத்தில் அவரது வழக்கு தோற்றுப்போனது. நீதிமன்றம், அவர்மேல் அனுதாபம் காட்டினாலும் அவருக்குக் கிடைக்க வேண்டிய உரிமையை மறுத்தனர். அவர் தன் ஆன்மாவை அழைத்த பொழுது அடுத்த 15 நிமிடங்களில் சொத்து தன் கைக்கு வந்ததாக உணர்ந்தார். ஆனால் சட்டபூர்வமாக அதை உறுதி செய்ய 6 மாதங்களாயிற்று. சட்டம் கைவிடலாம், வழக்கறிஞர் திறமை போதியதாக இல்லாமல் இருக்கலாம், வாழ்வும் பாரபட்சமாகவும் இருக்கலாம், இயற்கை கூட அவருக்கு எதிராக இருக்கலாம், ஆனால் உன் பக்கத்தில் உண்மையும் நீதியும் இருக்கும் பட்சத்தில், தெய்வீக அன்னையின் பரிபூர்ண ஆசிகள் உனக்கு நிச்சயமாக உண்டு.


ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 11 Empty Re: ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்

Post by சிவா Tue Mar 29, 2011 4:13 am

ஆன்மாவை அழைப்பது எப்படி?

இந்தியர்கள் காலந்தவறாமையை கடைபிடிக்கும் பொழுது அது அதிக சக்தி வாய்ந்ததாகவும், பலனுள்ளதாகவும் உள்ளது என்று அறிவார்கள். சிலர் தங்களது கம்பெனியில் உயர்ந்த பண்பாக, காலந்தவறாமையை நடைமுறைப்படுத்த முடியாமல், மிகவும் கஷ்டப்படுகிறார்கள். காலந்தவறாமையை எவ்வாறு கடைபிடிப்பது என்று கேட்கிறார்கள். அது அவர்களுக்கு தெரியாது என்று கூறமுடியாது. அதை அவர்கள் செயல்படுத்த இயலாததற்குக் காரணம், கம்பெனியின் சூழ்நிலை காலந்தவறாமைக்கு உகந்ததாக இல்லை என்பதுதான். அதற்கு தீர்வுதான் என்ன? அதைக் கடைப்பிடிப்பதில் பலரும் தவறுவார்கள் என்றாலும், மிகுந்த மனஉறுதியுடன் செயல்பட்டால், காலந்தவறாமை முறையை அமுல்படுத்த முடியும்.

காலந்தவறாமை என்பது முடியாததுதானா? முடியாதது என்றில்லை. நாம் விவரமான போதிய முயற்சி எடுப்பதில்லை என்றுதான் அர்த்தமாகிறது. காலந்தவறாமை என்பது ஒழுங்குமுறைக்கு முந்தைய நிலையாகும். அதற்கும் முந்தைய நிலை அதிக உற்பத்தி நிலை. உற்பத்திக்கு அதிக சக்தி தேவைப்படுகிறது. அது ஆர்வத்தால் எழுவது. அதை ஆரம்பத்திலிருந்தே அதிகரிக்க முயற்சிக்க வேண்டும். கம்பெனியில் உள்ள ஒவ்வொருவரும் கம்பெனியின் முன்னேற்றத்தில் ஆர்வம் உடையவர்களாக இருக்க வேண்டும். அங்கு ஆர்வம் இல்லையென்றால், நான் என்ன செய்ய வேண்டுமென்ற கேள்வி எழுகிறது. தொழிலாளர்களின் ஆர்வம் என்பது, முதலாளியின் ஆர்வம். நீ கம்பெனியின் முன்னேற்றத்திற்காக, ஆர்வமுள்ளவராக இருக்கிறாயா, என்று ஆராய்ந்து பார். அங்கு ஒழுங்குமுறையை நிலைநிறுத்த அதில் படிப்படியாக முன்னேறு. ஒழுங்குமுறையை அடைந்ததும், காலந்தவறாமை இல்லாத போது, அதைக் கடைப்பிடிப்பதில் உன்னுடைய முயற்சியில் வெற்றிகிட்டும்.

ஆன்மாவை அழைப்பதில், பலரும் வெற்றி அடைய முடியும். அவர்களுக்கு, இதை மேலும் எப்படி வலுப்படுத்துவது என்பதுதான் கேள்வி. அதை செயல்படுத்த முடியாதவர்களுக்கு ஒரு வழி உண்டு. ஒருவர் அடிக்கடி கோபப்படும் பொழுது, மற்றவர்கள் அவரை அந்த இடத்தை விட்டு அகன்று, தனிமையில் அமர்ந்து சிந்திக்கும்படி அறிவுறுத்துவார்கள். அப்பொழுது அவருடைய கோபம் பெரும்பாலும் மறைந்து விடுகிறது. கோபம் போனவுடன், சிந்திக்க முடிகிறது. கோப உணர்வுக்கு அடுத்த உயர்ந்த நிலை மனம். ஆன்மா மனத்தைவிட உயர்ந்த நிலை. ஒருவர் ஆன்மாவை அழைக்கும் பொழுது, எண்ணங்கள் குறிக்கிட்டு அதைத் தடுக்கிறது. எண்ணங்கள் குறுக்கிடுவதற்குக் காரணம், மனிதன் எண்ணங்களோடு ஒன்றிப்போய் விடுகிறான். இதை உணர்ந்து கொண்ட ஒருவர், சிந்தனையிலிருந்து எண்ணங்களை விலக்கினால், ஆன்மாவை அழைப்பது சுலபமாகிவிடும். மீண்டும் ஒருவர் அது முடியாது என்று சொல்லக் கூடும்.

இப்படிப்பட்டவர்கள் தினந்தோறும் ஒரு நேரத்தை ஒதுக்கி அன்னையை அழைக்க வேண்டும். அதில் நேரம் போகப் போக எண்ணங்கள் குறைந்து அமைதி எழும். அன்னை, ஆன்மாவைவிட சக்திவாய்ந்தவர். இவ்வாறாக அன்னையை தினந்தோறும் சில நாட்கள் வரை தன்னுள் அழைத்த பிறகு, ஒரு நாள் முழுவதும் 12 மணி நேரம் அழைக்க மாற்ற வேண்டும். பிறகு 12 மணி நேரம் முழு நாள் பிரார்த்தனையை, மூன்று நாட்கள் அழைப்பாக அன்னையை அழைக்கும் பிரார்த்தனையில் ஈடுபட வேண்டும்.

அன்னையையோ, அல்லது ஆன்மாவையோ, அழைக்கும் முயற்சியை மேற்கொண்டபின், மூன்று நாட்கள் பிரார்த்தனைக்குப் பின், அன்னை ஒருவரின் ஜீவனின் மேல்நிலையில் வந்து வெளிப்பட்டதும், உடனே சில மாற்றம் ஏற்பட்டு, சில நிகழ்ச்சிகள் மூலம் செயல்படுவதை அவர் காண்பார்.

அவருடைய அநேக சிறு, சிறு பிரச்சனைகள் உடனே மறைவதைக் காண்பார்.

வீட்டின் சூழல் நிச்சயமான உடன்பாடாக மாறிய நிலையில் இருக்கும்.

தீர்க்க முடியாத பிரச்சனை ஒன்று இருந்தால், அதில் தீர்வு காண்பதற்கு வழி பிறக்கும்.

அன்னையை அழைக்கும் பொழுது தோன்றும் இடையூறுகளும், கஷ்டங்களும் மறைந்து, ஆன்மா அல்லது அன்னை, அதிக அளவில் தன்னுடன் தொடர்ந்து இருப்பதை உணர்வார்.

அவர் ஆன்மாவை அழைப்பதை, தினமும் குறிப்பிட்ட நேரத்தில் காலையிலும், மாலையிலும் அரை மணி நேரம் பிரார்த்தனையாக செய்ய வேண்டும். அது அவரை உயர்ந்த ஜீவிய நிலைக்கு உயர்த்தும். பிறகு அவர் செய்ய வேண்டியது,

உண்மையை மட்டுமே பேச முயற்சிக்க வேண்டும்.

வீட்டை, சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அந்த சுத்தம் அவர் வேறு எங்கேயாவது பார்த்த அதிகமான சுத்தத்தைப் போல் இருக்க வேண்டும்.

கூச்சல் போடாமல் மெதுவாக பேச வேண்டும்.

எல்லா விஷயத்திலும், மற்றவருடைய கருத்தை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை வேண்டும்.

அமைதியாக இருப்பதில், அதிக அளவில் கவனம் செலுத்த வேண்டும்.

எந்த ஒரு வேலையையும் செய்ய ஆரம்பிக்கும் முன், அன்னையை நினைவு கூர வேண்டும்.

பழைய தவறுகளை அறிந்து, அவை எதிர்காலத்தில் நிகழா வண்ணம் நேர்மையுடன் விலக்க வேண்டும்.

தன்னை மற்றவருக்கு வழங்குவதை கடைபிடிக்க வேண்டும்.

ஒருவருடைய ஆன்மாவின் அழைப்பை, ஆன்மா ஏற்றுக்கொண்டது என்று தெரிந்ததும், அதை அவர் வாழ்வில் வளர்த்துக்கொள்ள பழகிக் கொள்ள வேண்டும். அதை முறைப்படுத்த வேண்டும். அப்படிச் செய்வதால் ஆன்மாவை அழைப்பதில், மேலும் முன்னேற்றம் ஏற்படும்.


ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 11 Empty Re: ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்

Post by சிவா Tue Mar 29, 2011 4:14 am

ஆன்மாவை அழைத்தல்

ஆன்மாவை அழைப்பது சக்தி வாய்ந்தது. ஆன்மாவை "அன்னை" என்று அழைப்பதாலேயே அதில் எல்லாமே அடங்கி விடுகிறது. அது அதிக சக்தி வாய்ந்ததாகவும் இருக்கும்.

ஆன்மாவை அழைப்பதில் பல வழிகள் உள்ளன. அதன் சாராம்சம் எல்லாம் ஒன்றே தான்.

நமக்கு மேல்மனமும் ஆழ்மனமும் உள்ளது. நாம் நமது பிரச்சனைகளைப் பற்றி நினைத்துக் கொண்டே இருந்தால், நாம் மேல்மனதில் இருக்கிறோம் என்பதைக் குறிக்கும். மேல்மனதிலிருந்து விலகிப் போக வேண்டுமென்றால், நாம் அந்தப் பிரச்சனையை மறக்க வேண்டும். அல்லது அதைப் பற்றிய தீவிர நினைவு இல்லாமல் இருக்க வேண்டும். இப்பொழுது, பிரச்சனை நம் பர்சனாலிட்டியின் ஆழத்திற்குச் சென்று அங்கு ஒரு இனம்புரியாத கவலையை உண்டு பண்ணுகிறது. பிரச்சனையின் ஆழத்திலிருந்து உன்னால் விலக முடியவில்லையென்றால், அன்னையை அழைக்கவும். அன்னையை தினமும் சில நாட்களுக்கு, மணிக்கு ஒரு முறை அழைத்தால், பிரச்சனைகள் தீர்ந்துவிடும். அதிகபட்சமாக மூன்று நாட்கள் பிரார்த்தனையில், எந்த ஒரு பிரச்சனையும் தீர்க்கப்பட்டுவிடும்.

மனிதனின் முயற்சி தீர்ந்ததும், அன்னை (ஆன்மா) செயல்படுகிறார். ஒருவர் தன்னால் முடிந்த அத்தனை முயற்சிகளையும் எடுத்துத் தீர்க்க வேண்டும். ஆன்மா உடனே செயல்பட ஆரம்பிக்கும். கடைசி முயற்சியையும் எடுத்துத் தீர்க்க வேண்டும்.

நாம் இப்பொழுது செய்வதை விட, திறம்பட செயல்பட்டால், அது அன்னையை அழைப்பதற்குச் சமமாகும். உதாரணமாக, மெதுவாக நடைபெற்றுவரும் வேலையில் அக்கறை காட்டுவது, ஒழுங்குமுறையைப் பின்பற்றாத இடத்தில், வேலையில் ஒழுங்குமுறையைக் கடைப்பிடித்தல், சிந்தனையற்ற வேலையில், சிந்தனையைச் செலுத்தி செயல்படுவது, போன்றவைகளாகும்.

தினமும் மணிக்கு ஒரு முறை அன்னையை நினைவு கூர்வதை சில நாட்களுக்குத் தொடர வேண்டும்.

மணிக்கொருமுறை பிரார்த்தனை செய்வதை, சரியாக மணி அடிக்கும் நேரத்தில், அன்னையை நினைப்பதை ஓரிரண்டு நாட்கள் தவறாமல், கடைப்பிடிக்க வேண்டும்.

வீட்டை அதிக சுத்தமாக வைத்திருத்தல், தாழ்ந்த குரலில் பேசுவது, வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ சண்டை போடுவதைத் தவிர்ப்பது, அன்றாடம் கணக்குகளை சரியாக எழுதுவது போன்றவைகளை கடைப்பிடித்தல் வேண்டும்.

நாம் கையினால் செய்யும் வேலையை எண்ணத்தினால் செய்யலாம் என்பது போல் நம் வாழ்வின் மையத்தை வெளியிலிருந்து உள்ளுறை ஆன்மாவிற்கு மாற்ற வேண்டும்.

எந்த வேலையையும் செய்ய ஆரம்பிக்கும் முன் அன்னையை நினைவு கூர்தல் வேண்டும். சமர்ப்பணம் செய்ய வேண்டும்.

பிரார்த்தனையைத் தொடர வேண்டும்.

முற்றும்

மூலம்:http://www.karmayogi.net


ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 11 Empty Re: ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்

Post by சிவா Sun Oct 21, 2018 2:51 pm

ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 11 103459460


ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 11 Empty Re: ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Oct 21, 2018 4:42 pm

ஆன்மாவை அழைத்தல்
படிக்க படிக்க ஓர் இனம்
புரியாத உணர்வு வெளிப்படுகிறது.
நன்றி சிவா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 11 Empty Re: ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 11 of 11 Previous  1, 2, 3 ... 9, 10, 11

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum