புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
''ஜெயலலிதா திருந்தவில்லை இனியும் திருந்த மாட்டார்!'வைகோ Poll_c10''ஜெயலலிதா திருந்தவில்லை இனியும் திருந்த மாட்டார்!'வைகோ Poll_m10''ஜெயலலிதா திருந்தவில்லை இனியும் திருந்த மாட்டார்!'வைகோ Poll_c10 
61 Posts - 80%
heezulia
''ஜெயலலிதா திருந்தவில்லை இனியும் திருந்த மாட்டார்!'வைகோ Poll_c10''ஜெயலலிதா திருந்தவில்லை இனியும் திருந்த மாட்டார்!'வைகோ Poll_m10''ஜெயலலிதா திருந்தவில்லை இனியும் திருந்த மாட்டார்!'வைகோ Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
''ஜெயலலிதா திருந்தவில்லை இனியும் திருந்த மாட்டார்!'வைகோ Poll_c10''ஜெயலலிதா திருந்தவில்லை இனியும் திருந்த மாட்டார்!'வைகோ Poll_m10''ஜெயலலிதா திருந்தவில்லை இனியும் திருந்த மாட்டார்!'வைகோ Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
''ஜெயலலிதா திருந்தவில்லை இனியும் திருந்த மாட்டார்!'வைகோ Poll_c10''ஜெயலலிதா திருந்தவில்லை இனியும் திருந்த மாட்டார்!'வைகோ Poll_m10''ஜெயலலிதா திருந்தவில்லை இனியும் திருந்த மாட்டார்!'வைகோ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
''ஜெயலலிதா திருந்தவில்லை இனியும் திருந்த மாட்டார்!'வைகோ Poll_c10''ஜெயலலிதா திருந்தவில்லை இனியும் திருந்த மாட்டார்!'வைகோ Poll_m10''ஜெயலலிதா திருந்தவில்லை இனியும் திருந்த மாட்டார்!'வைகோ Poll_c10 
397 Posts - 79%
heezulia
''ஜெயலலிதா திருந்தவில்லை இனியும் திருந்த மாட்டார்!'வைகோ Poll_c10''ஜெயலலிதா திருந்தவில்லை இனியும் திருந்த மாட்டார்!'வைகோ Poll_m10''ஜெயலலிதா திருந்தவில்லை இனியும் திருந்த மாட்டார்!'வைகோ Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
''ஜெயலலிதா திருந்தவில்லை இனியும் திருந்த மாட்டார்!'வைகோ Poll_c10''ஜெயலலிதா திருந்தவில்லை இனியும் திருந்த மாட்டார்!'வைகோ Poll_m10''ஜெயலலிதா திருந்தவில்லை இனியும் திருந்த மாட்டார்!'வைகோ Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
''ஜெயலலிதா திருந்தவில்லை இனியும் திருந்த மாட்டார்!'வைகோ Poll_c10''ஜெயலலிதா திருந்தவில்லை இனியும் திருந்த மாட்டார்!'வைகோ Poll_m10''ஜெயலலிதா திருந்தவில்லை இனியும் திருந்த மாட்டார்!'வைகோ Poll_c10 
8 Posts - 2%
E KUMARAN
''ஜெயலலிதா திருந்தவில்லை இனியும் திருந்த மாட்டார்!'வைகோ Poll_c10''ஜெயலலிதா திருந்தவில்லை இனியும் திருந்த மாட்டார்!'வைகோ Poll_m10''ஜெயலலிதா திருந்தவில்லை இனியும் திருந்த மாட்டார்!'வைகோ Poll_c10 
8 Posts - 2%
prajai
''ஜெயலலிதா திருந்தவில்லை இனியும் திருந்த மாட்டார்!'வைகோ Poll_c10''ஜெயலலிதா திருந்தவில்லை இனியும் திருந்த மாட்டார்!'வைகோ Poll_m10''ஜெயலலிதா திருந்தவில்லை இனியும் திருந்த மாட்டார்!'வைகோ Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
''ஜெயலலிதா திருந்தவில்லை இனியும் திருந்த மாட்டார்!'வைகோ Poll_c10''ஜெயலலிதா திருந்தவில்லை இனியும் திருந்த மாட்டார்!'வைகோ Poll_m10''ஜெயலலிதா திருந்தவில்லை இனியும் திருந்த மாட்டார்!'வைகோ Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
''ஜெயலலிதா திருந்தவில்லை இனியும் திருந்த மாட்டார்!'வைகோ Poll_c10''ஜெயலலிதா திருந்தவில்லை இனியும் திருந்த மாட்டார்!'வைகோ Poll_m10''ஜெயலலிதா திருந்தவில்லை இனியும் திருந்த மாட்டார்!'வைகோ Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
''ஜெயலலிதா திருந்தவில்லை இனியும் திருந்த மாட்டார்!'வைகோ Poll_c10''ஜெயலலிதா திருந்தவில்லை இனியும் திருந்த மாட்டார்!'வைகோ Poll_m10''ஜெயலலிதா திருந்தவில்லை இனியும் திருந்த மாட்டார்!'வைகோ Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
''ஜெயலலிதா திருந்தவில்லை இனியும் திருந்த மாட்டார்!'வைகோ Poll_c10''ஜெயலலிதா திருந்தவில்லை இனியும் திருந்த மாட்டார்!'வைகோ Poll_m10''ஜெயலலிதா திருந்தவில்லை இனியும் திருந்த மாட்டார்!'வைகோ Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

''ஜெயலலிதா திருந்தவில்லை இனியும் திருந்த மாட்டார்!'வைகோ


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Mar 26, 2011 11:52 am


வைகோ என்ற விதை நெல்லை வீணடித்துவிட்டார் ஜெ! தனது பசியைக்கூடப் பொறுத்துக்கொண்டு, எதிரிகளுக்கு விருந்து வைக்கும் யதார்த்த நிலைக்கு கருணாநிதி இறங்கி வந்திருந்தார். ஆனால், விசுவாசத்தைக் கொஞ்சம் கூடுதலாகவே காட்டிய வைகோவின் வயிற்றில் அடிக்கும் அளவுக்கு ஜெயலலிதா துள்ளிக் குதிக்கிறார். அ.தி.மு.க. அணி கலகலத்துவிட்டது தெளிவு. கருணாநிதிக்கு எதிரான வாக்குகளை ஜெயலலிதாவுக்குச் சாதகமானதாக மாற்றும் சாமர்த்தியத்துடன் வலம் வந்த வைகோவின் துணை இல்லாமல் தேர்தலைச் சந்திக்க வருகிறார் ஜெயலலிதா. தி.மு.க-வில் இருந்த காலம் முதல் இன்று வரை அனைத்துத் தேர்தல்களிலும் பம்பரமாகச் சுழன்று வந்த வைகோ, இந்தத் தேர்தலில்... வெறும் பார்வையாளர்!

''நீங்கள் விரும்பும் அளவிலான தொகுதிகளை ஜெயலலிதா தர மாட்டார் என்று தெரிந்தது. ஆனால், கூட்டணியைவிட்டு விலகும் அளவுக்கு நிலைமை மாறும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லையே?''

''மறுமலர்ச்சி தி.மு.க. தங்கள் அணியில் இருக்கக் கூடாது என்று தொடக்கத்திலேயே ஜெயலலிதா முடிவெடுத்துவிட்டார். தொகுதிப் பங்கீடு குறித்து நாங்கள் அமைத்த குழு, நான்கு முறை அ.தி.மு.க-வுடன் பேச்சு நடத்தியது. கடந்த முறை எங்களுக்குத் தரப்பட்ட 35 இடங்களை முதலில் கேட்டோம். இரண்டாவது சுற்று பேச்சில் 30 தொகுதிகளாவது வேண்டும் என்றோம். நான்காவது சுற்றுப் பேச்சுவார்த்தையில்தான் எங்களுக்கு 6 இடங்கள்தான் தர முடியும் என்று சொன்னார்கள்.



பல்வேறு கட்சிகள் வருவதால் 23 தொகுதிகளாவது ஒதுக்கச் சொன்னோம். 7 தொகுதிகள் தருவதாகச் சொன்னார்கள். அதன் பிறகு, 8 தருவதாகச் சொன்னார்கள். பிறகு அவர்களே, 8 தர முடியாது, 7 தான் முடியும் என்றார்கள். பிறகு, 8 தர முடியும் என்றார்கள். அதன் பிறகு 9 இடங்கள் தருவதாகச் சொல்லி, கையெழுத்து போட வரச் சொன்னார்கள்.

ஜெயலலிதா சொல்லி அனுப்பிய எண்ணிக்கைகள் அவரது மன ஊசலாட்டத்தைக் காட்டுவதாக மட்டும் இல்லை. எதைச் சொன்னால் நான் ஏற்க மாட்டேனோ, அதைச் சொல்லி என்னைக் கோபப்படுத்த நினைத்தார். நானாகவே வெளியேறிவிடுவேன் என்று திட்டமிட்டார்.

'நீ இன்னுமா இருக்கிறாய்?’ என்று ஜெயலலிதா கேட்பதுபோல இருந்தது. எங்களுக்கும் அவருக்குமான பிரச்னைக்கு எண்ணிக்கை காரணம் அல்ல... எண்ணமே காரணம்!''

''ஜெயலலிதாவுக்கு உங்கள் மீது கோபம் வர என்ன காரணம்?''
''2006-ம் ஆண்டு அ.தி.மு.க-வுடன் கூட்டணிவைக்கும் முடிவைக் கனத்த இதயத்துடன் நான் எடுத்தேன். பொடாவில் என்னை 19 மாதங்கள் சிறைவைத்த ஜெயலலிதாவுடன் அணி சேரத் தயங்கினேன். ஆனால், குறைவான இடங்களை கலைஞர் ஒதுக்கினார். எனவே, அ.தி.மு.க. கூட்டணிதான் சரியானது என்று கட்சி முன்னணியினர் முடிவெடுத்தார்கள். அதற்கு, நான் கட்டுப்பட்டேன். அப்போது நான், 'அரங்கேற்றம்’ படத்தின் கதாநாயகி, தனது தம்பியைப் படிக்கவைக்கக் கெட்டுப்போவதைப்போல, கட்சி நலனுக்காக இதற்கு உடன்படுகிறேன்!’ என்றேன். அ.தி.மு.க. கூட்டணிக்கு என்னைக் கட்டாயப்படுத்தி அழைத்துப் போனவர்கள் இன்று தி.மு.க-வில் போய்ச் சேர்ந்துவிட்டார்கள்!

அந்த சட்டமன்றத் தேர்தலில், அடுத்து வந்த உள்ளாட்சித் தேர்தலில், சட்டமன்ற நடவடிக்கைகளில், இடைத் தேர்தல்களில் எல்லாம் அ.தி.மு.க-வுடன் எந்த முரண்பாடும் இல்லை. நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் கேட்காத நெல்லை, தஞ்சாவூரை ஜெயலலிதா ஒதுக்கினார். போராடித்தான் நான்கு தொகுதிகள் வாங்கினேன். அதிலும் நாங்கள் கேட்காத நீலகிரி, தஞ்சையைத் தந்தார். கொடுத்ததை வாங்கிக்கொள்ளவில்லை என்ற கோபத்தில், தீவுத் திடல் கூட்ட மேடையில் என்னிடம் ஜெயலலிதா பேசவில்லை. அன்று அவரது வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நான் போனேன். வாசலில் முறையான வரவேற்பு இல்லை. ஆனால், மற்ற தலைவர்களை வாசலில் வந்து வரவேற்று அழைத்துச் சென்று இருப்பதை ஜெயா டி.வி-யில் பார்த்தபோது, 'இந்த சோற்றைத் தின்றிருக்க வேண்டாம்!’ என்று நினைத்தேன். அது தனிப்பட்ட வைகோவுக்கு இழைக்கப்பட்ட அவமானம். தாங்கிக்கொண்டேன். ஆனால், இன்று, 6, 7, 8, 9... என்பது ம.தி.மு.க-வுக்கு ஏற்பட்ட அவமானம். என்னைவிட இயக்கம்தான் பெரிது.

சிறையில் இருப்பது மட்டும் தியாகம் அல்ல. நிந்தனைக்கும் பழிக்கும் ஆளாகும் நிலையை எடுப்பதும் தியாகம்தான். அதன் பிறகும் அவமானம்தான் பரிசு என்றால், ஏன் அதைத் தாங்கிக்கொள்ள வேண்டும்?''

''குறைவாக இருந்தாலும், வெற்றி பெறும் தொகுதிகளை வாங்கி, அதில் மட்டும் நின்றுஇருக்கலாமே?''

''21 இடங்கள்... அதுவும் நாங்கள் கேட்ட இடங்கள் கொடுத்தாலும் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடுவது தவறு என்பதைக் கடந்த 10 நாட்களின் சம்பவங்கள் எனக்கு உணர்த்திவிட்டன!

48 ஆண்டுகள் பொது வாழ்க்கை உடையவன் நான். திராவிட இயக்கத்தின் வழித்தோன்றல் நான். இந்த அனுபவத்தில் சொல்கிறேன், 'ஜெயலலிதா இன்னும் திருந்தவில்லை... திருந்தவும் மாட்டார்’ என்பதை இந்த 10 நாட்கள் உணர்த்திவிட்டன. ஜெயலலிதாவின் அணுகுமுறையில், காலம் தந்த படிப்பினைகளால் மாற்றம் ஏற்பட்டு இருக்கும் என்று நம்பியது முற்றிலுமாகப் பொய்த்துவிட்டது. அவருடைய போக்கிலும் அணுகுமுறையிலும் எத்தகைய மாற்றமும் ஏற்படவில்லை. அகந்தையும், ஆணவமும், தன்னிச்சையான அணுகுமுறையும், இன்னமும் போகவில்லை. அவருடன் இணைந்து கூட்டணியில் தொடர்வதும் வாக்காளர்களைச் சந்திப்பதும் எந்த வகையிலும் சரியானது அல்ல.



ம.தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக ஆக வேண்டும் என்பதற்காக, திருந்தாத ஜெயலலிதாவுக்கு நான் வாக்கு கேட்டுச் செல்வது, 'வைகோ நல்லவன்’ என்று நம்பும் தமிழ் மக்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகம். என்னுடைய மனசாட்சிக்குச் செய்யும் துரோகம்.

தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பே, இவ்வளவு ஆணவம் தலை தூக்குமானால், இப்படிப்பட்டவர் கையில் ஆட்சி போனால் என்ன ஆகும்? முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்த ஜெயலலிதா செய்யும் தவறுகளைக் கண்டிக்க, பிரசாரம் செய்ய எனக்கு யோக்கியதை உண்டா? 'உன்னைச் சேர்ந்தவர்களை எம்.எல்.ஏ ஆக்க, ஜெயலலிதாவை நல்லவர் என்று சொல்லி, எங்களை முட்டாள் ஆக்கினீர்களா?’ என்று பொதுமக்கள் கேட்க மாட்டார்களா?

என்னைப் பொறுத்தவரையில், மக்களின் நம்பகத்தன்மையை மட்டும்தான் சொத்தாக நினைக்கிறேன்!''

''மூன்றாவது அணியாவது அமைக்க முயற்சித்து இருக்கலாமே?''
''தமிழகத்தைப் பொறுத்தவரை மூன்றாவது அணி சாத்தியம் இல்லை. பண பலம்கொண்ட இரண்டு அணிகளை எதிர்த்தால், மூன்றாவது அணி... மூன்றாவது இடத்தில்தான் வரும்!''

''தனியாக நிற்பது..?''
''ஒரு தரப்பை வீழ்த்த, இன்னொரு தரப்பிடம் பணம் வாங்கினேன் என்ற பழிச் சொல் மட்டும்தான் அதனால் கிடைக்கும்!''

''தேர்தல் அரசியலில் நம்பிக்கைகொண்ட ஒரு கட்சி தேர்தலைப் புறக்கணிப்பது சரியானது அல்லவே?''
''நாங்கள் இந்தத் தேர்தலை மட்டும்தான் புறக் கணித்து இருக்கிறோம். இனி, தேர்தலில் நிற்கவே மாட்டோம் என்று சொல்லவில்லையே! ஒரு குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டபோது, மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தேர்தலில் பங்கேற்கவில்லை. சூழ்நிலைகளைச் சரிப்படுத்தி, கட்சியைப் பலப்படுத்திவிட்டு தேர்தலைச் சந்தித்தது. சீனாவில் மாசேதுங், தனது செம்படையைத் திடீரென்று கலைத்தார். எல்லோரும் இதைக் கடுமையாகக் கண்டித்தார் கள். ஆனால், ஓர் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் அதை உருவாக்கி வென்று காட்டினார்.ஒரு பக்கம்... தன்னுடைய சுயநலத்தால் தி.மு.க-வைக் கபளீகரம் செய்து தமிழினத்தைக் காட்டிக்கொடுத்த கருணாநிதி, இன்னொரு பக்கம் ஆணவப் போக்குகொண்ட ஜெயலலிதா - இந்த இருவர் மீதும் கோபம்கொண்ட பொதுமக்கள்தான் நாட்டில் அதிகம். அந்த வெற்றிடத்தை நாங்கள் நிரப்புவோம். எனக்கு அனுப்பப்படும் கடிதங்கள் அனைத்தும், 'தன்மானத்தை இழந்துவிடாதீர்கள்... சுயமரியாதையை இழந்துவிடாதீர்கள்!’ என்றே சொல்கின்றன. இழக்கவில்லை என்பதைத் தேர்தல் புறக்கணிப்பு மூலம் நிரூபித்து இருக் கிறேன்!''

''பதவிகள், பொறுப்புகளுக்காக கட்சிக்குள் வருபவர்கள் ஏமாந்து போவார்கள். கட்சி மாறிவிடுவார்களே?''

''எல்லா சூழ்ச்சிகளையும் தாண்டித்தான் ம.தி.மு.க. இயங்கிக்கொண்டு இருக்கிறது. லட்சங்களைக் காட்டி பொதுக் குழு உறுப்பினர்களைப் பிரித்து, 'நாங்கள்தான் உண்மையான ம.தி.மு.க’ என்று ஒரு கும்பல் சதித் திட்டம் தீட்டியபோதே, எங்கள் உறுப்பினர் எவரும் போகவில்லை. லட்சியத்தைப்பற்றி நான் பேசுவதால் மட்டுமே அவர்கள் இருக்கிறார்கள்!''

''யாருக்கு வாக்களிப்பது என்பதைச் சொல்வீர்கள்தானே?''
''ம.தி.மு.க. தொண்டனின் மனசாட்சியே அதை முடிவு செய்யும்!''

''இத்தனை ஆண்டு காலப் பொது வாழ்வில் இந்த இரண்டு வாரங்களில் நீங்கள் பெற்ற படிப்பினை என்ன?''

''சிகாகோவில் உள்ள மே நாள் நினைவு அரங்கில், 'மௌனம் சில வேளைகளில் சப்தத்தைவிட வன்மையானது’ என்று எழுதப்பட்டுள்ளது. ஒரு பேச்சாளனான நான், இது சத்தியமானது என்பதை உணர்ந்துகொண்டேன். இந்த இரண்டு வாரமும் நான் மௌனமாக இருந்தேன். ஆனால், ஆயிரம் கூட்டங்கள் பேசினால் கிடைக்கும் பெருமையையும், நற்பெயரையும் இந்த மௌனம் எனக்கு வாங்கித் தந்திருக்கிறது. கடந்த முறை அ.தி.மு.க-வுடன் கூட்டணிவைத்ததால், பழிக்கு ஆளானேன். அந்தப் பழி துடைக்கப்பட்டுவிட்டது. காலம் எனக்குச் செய்திருக்கும் அருட்கொடை இது!''

'' 'என்றும் நான் உங்கள் அன்புச் சகோதரிதான்!’ என்று ஜெயலலிதா ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறாரே?''

''ம.தி.மு.க-வுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகளுக்கும் சேர்த்து வேட்பாளர் பட்டியலை அறிவித்ததும் அதே அன்புச் சகோதரிதானே! ம.தி.மு.க நடத்தப்பட்ட விதம் குறித்து, பொதுமக்கள் மத்தியில் கோபமும் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் எனக்கு ஏற்பட்ட அனுதாபத்தையும் பார்த்துப் பயந்துபோன ஜெயலலிதா, இப்படி ஒரு கடிதத்தை அனுப்பி நீலிக் கண்ணீர் வடிக்கிறார்!''

''இந்தத் தேர்தல் களத்தில் நீங்கள் இல்லை...வருத்தமாக இல்லையா?''
''தேர்தலுக்குப் பிறகு நிச்சயம் இருப்போம்!''
நன்றி : விகடன்





"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Mar 26, 2011 12:28 pm

கண்டிப்பாக மீண்டும் வருவேண்டும்! எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்!
நன்றி நண்பா கட்டுரையை பகிர்தமைக்கு.

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Sat Mar 26, 2011 8:43 pm

''ஜெயலலிதா திருந்தவில்லை இனியும் திருந்த மாட்டார்!'வைகோ 95051

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sat Mar 26, 2011 10:10 pm

அது இப்பதான் உங்களுக்கு தெரிந்ததா வைகோ அண்ணா?

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 27, 2011 11:28 am

கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் கூட செய்ய முடியலை வைகோ..! சோகம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Mar 27, 2011 11:37 am

அட போங்கப்பா பேச்சாலயே வீணா போற ஆளுக சில பேரு இருப்பாங்க.வை.கோ. சார் நீங்க எந்த வகைன்னு நீங்களே முடிவு பண்ணிக்கொங்க



''ஜெயலலிதா திருந்தவில்லை இனியும் திருந்த மாட்டார்!'வைகோ U''ஜெயலலிதா திருந்தவில்லை இனியும் திருந்த மாட்டார்!'வைகோ D''ஜெயலலிதா திருந்தவில்லை இனியும் திருந்த மாட்டார்!'வைகோ A''ஜெயலலிதா திருந்தவில்லை இனியும் திருந்த மாட்டார்!'வைகோ Y''ஜெயலலிதா திருந்தவில்லை இனியும் திருந்த மாட்டார்!'வைகோ A''ஜெயலலிதா திருந்தவில்லை இனியும் திருந்த மாட்டார்!'வைகோ S''ஜெயலலிதா திருந்தவில்லை இனியும் திருந்த மாட்டார்!'வைகோ U''ஜெயலலிதா திருந்தவில்லை இனியும் திருந்த மாட்டார்!'வைகோ D''ஜெயலலிதா திருந்தவில்லை இனியும் திருந்த மாட்டார்!'வைகோ H''ஜெயலலிதா திருந்தவில்லை இனியும் திருந்த மாட்டார்!'வைகோ A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக