ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குமாரசாமி காமராஜர்

+5
சிவா
mgandhi05
ராஜா
பரஞ்சோதி
Admin
9 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

குமாரசாமி காமராஜர் - Page 2 Empty குமாரசாமி காமராஜர்

Post by Admin Sun Nov 02, 2008 2:13 pm

First topic message reminder :

பிறப்பு: ஜூலை - 15 - 1903
குமாரசாமி காமராஜர் - Page 2 Indira10
இறப்பு அக்டோபர் 2 1975
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down


குமாரசாமி காமராஜர் - Page 2 Empty Re: குமாரசாமி காமராஜர்

Post by Admin Sun Nov 02, 2008 2:19 pm

”ஐயோ! அவ்வளவு பணமா அனுப்பியிருக்காக” என்று அவள் ஆச்சர்யப்பட்டாள்.

”உன்னோட புருஷன் பேரு என்னம்மா?”

”அதெல்லாம் நாங்க சொல்லறது பழக்கமில்லேங்க.”

”பழைய பயித்தியமா இருக்கிறியே! புருஷன் பேரை எல்லாம் அந்தக் காலத்திலேயும் சரி, இந்தக் காலத்திலேயும் சரி யார்மா சொல்லாமே இருக்காங்க? கற்புக்கரசி கண்ணகிகூட அந்தக் காலத்திலே பாண்டிய மன்னன் கேட்டபோது,

”ஏசாச்சிரிப்பின் இசையிடம் பெருங்குடி
மாசாத்து வாணிகன் மகனேயாகி
என்காற் சிலம்பு பகர்தல் வேண்டி
நின்பார் கொலைக்கலம்பட்ட
கோவலன் மனைவி
கண்ணகியென்ப தென் பெயரே” என்று, புருஷன் பேரு மட்டுமல்ல, மாமனார் பேரையும் சேர்த்தே சொல்லியிருக்கார்” என்று சொல்லித் தான் ஒரு படிப்பாளி என்பதைக் காட்டிக் கொண்டு நின்றார் தபால்காரர்.

”அவுங்க பேர்தானே வேணும்? சொல்லுகிறேன். ஒண்ணு ரெண்டு எண்ணுகிறேன். ஆறுக்கு அப்புறம் என்னங்க?”

”ஏழு… ஏன் அதற்கென்ன?”

”முருகன் ஏறி நிற்கிற எடம் எதுங்க?”

”ஓ… அதுவா? மலைதான்.”

” அந்த ஏழோட இதைச் சேர்த்துக்கங்க.”

”அடடே… ஏழுமலை. உன் புருஷன்பேரு ஏழுமலைதான். சரிதான்போ இந்தா இதிலே கையெழுத்துப் போடு.”

இடது கை கட்டைவிரலை நீட்டினால் மருதாயி. தபால்காரர் விரலைப் பிடித்து மை ஒட்டி மணியார்டர் பாரத்தில் அழுத்தி எடுத்துவிட்டு அவள் விரலை விட்டு விட்டார். பின்னர் பணத்தை எண்ணிக் கொடுத்தார்.கூட நின்ற பெண்களிடம் கொடுத்து மருதாயி எண்ணிப் பார்க்கச் சொன்னாள். எல்லாம் நூறு ரூபாய் நோட்டுக்கள். ஐந்துதானே. எண்ணிப் பார்த்துச் சரியா இருக்கிறதென்றாள்.

”சரிம்மா! இந்தா ஒம்புருஷன் போட்டிருக்கும் தபால்” என்று கடித்த்தையும் கொடுத்தார்.

” நான் வர்றேம்மா இன்னும் மூணு ஊர்களுக்கு போகணும்.” என்று சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பலானார் தபால்காரர்.

”கொஞ்சம் இருங்க சாமி” என்று மருதாயி தன் குடிசை வீட்டின் பூட்டைத் திறந்து கொண்டு உள்ளே போனாள். கூலிப் பணம் வாங்கிப் பானையில் போட்டுவைத்திருந்தாள். பத்து ரூபாய் பணம் எடுத்து வந்து தபால்காரனிடம் கொடுத்தார்.

”ரொம்ப நன்றிம்மா” என்று சொல்லிக்கொண்டே தபால்கார்ர் தன் சைக்கிளில் பறந்தார்.

கடுதாசியைப் படிச்சுக்காட்டாமப் போயிட்டாரே என்று மருதாயித் தவித்தாள். இவளைப் போலத்தான் கிரமத்துப் பெண்கள்.

கிராமங்களில் வாழ்ந்திருந்த பெண்பிள்ளைகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். பெண்கல்வி புறக்கணிக்கப்பட்டிருந்த காலம் அது. ” அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?” என்று பெற்றோர்களே வாதிட்டுக் கொண்டுருந்த காலமாக அன்றிருந்தது. கல்வி கற்கக் கட்டணம் செலுத்த வேண்டியிருந்த நிலை நீடித்ததால் பெண்கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டது.

பணம் கட்டிப் படிக்கும் நிலை. பள்ளிக் கூடங்களின் பற்றாக்குறைகள். கல்வி என்பது ஏழை, எளியோர்களுக்கு இல்லை- என்பன எல்லாம் தமிழ்நாட்டில் எப்படி நீக்குவது? கர்ம வீரர் காமராஜர், முதலமைச்சர் காமராஜர் சிந்தித்தார். திட்டங்கள் தீட்டினார்.அமுல் படுத்தினார்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

குமாரசாமி காமராஜர் - Page 2 Empty Re: குமாரசாமி காமராஜர்

Post by Admin Sun Nov 02, 2008 2:19 pm

முதல் வகுப்பில் இருந்து பள்ளி இறுதி வகுப்புவரை எல்லா மாணவர்களுக்கும் கட்டணம் இல்லை என்று அறிவித்தார். கிராமத்துச் சிறுமியர்கள் கல்வி கற்கப் பல மீட்டர்கள் தூரம் நடந்து சென்றுவர வேண்டி இருந்தது. இந்த நிலையைப் போக்கி, கிராமங்கள் தோறும் பள்ளிகள் திறக்க ஏற்பாடுகள் செய்தார்.

”கிராமங்கள்தான் இந்தியாவின் முதுகு எலும்பு” என்றார் மாகத்மாகாந்தி. கிராமங்கள் முன்னேறாமல் இந்தியா முன்னேற்றம் அடையமுடியாது என்று கருதினார் பண்டித நேரு. அவர்களது பாதையில் பயணம் துவங்கிய பணிகள் புரிய, அடி எடுத்து வைத்த காமராஜர் கிராமங்களின் முன்னேற்றத்திற்கு என்னென்ன செய்யமுடியுமோ, அவைகளை எல்லாம் தான் முதலமைச்சராக இருந்த கால கட்டத்தில் செம்மையாகச் செய்தார். செழிப்படையச் வைத்தார்.

காமராஜர் அவரகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த போதே, தமிழகத்தில் உள்ள எல்லாப் பட்டி தொட்டிகளுக்கும், கட்சிப் பணிகளுக்காகச் சென்றிருக்கிறார். அவரது கால்கள் படாத கிராமங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அவர் சுற்றுப் பயணங்கள் செய்திருக்கிறார்.

எந்தக் கிராமத்துக்கு என்னென்ன தேவைப் பள்ளிக் கூடமா? சாலை வசதியா? குடிநீரா? மின்சார வசதியா? எங்கெங்கே எவையெவை தேவை என்பதெல்லாம் கண்டறிந்து வைத்திருந்தார் காமராஜர். கட்சிப் பணிக்காக அவர் எடுத்த கணிப்பு (சர்வே) ஆட்சிப் பணியில் இருக்கும்போது அவருக்குப் பெரிதும் உதவியது. துரித நடவடிக்கைகள் எடுக்க அவரைத் தூண்டியது எனலாம்.

தமழக முதலவரான பின்னர், அவர் சுற்றுப் பயணம் போனார். அப்படிப் போகும்போது அவரது கார் கிராமத்துச் சாலைகள் வழியே போகிறது.

காலை நேரம். கிராமத்துச் சிறுவர் - சிறுமிகள், ஆடு - மாடுகளை ஓட்டிக் கொண்டு மேய்க்கச் சென்று கொண்டுத இருக்கிறார்கள். இதைக் கண்ட காமராஜர், காரை நிறுத்தச் சொன்னார். ஆடு, மாடுகளை ஓட்டிச் சென்று கொண்டிருந்த சிறுவர்களிடம் சென்றார்.

”என்னப்பா… தம்பிகளா! பள்ளிக்கூடம் போகாமல், படிக்காமல், இந்தக் காலைநேரத்தில் ஆடு மாடு மேய்க்க போகிறீர்களே. பள்ளிக்கூடம் போகலையா?” என்றார்.

”எங்க ஊரிலே பள்ளிக்கூடம் இல்லையே” என்றார்கள்.

”பள்ளிக்கூடம் இருந்தால் படிக்கப் போவீங்களா?” என்றார் காமராஜர்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

குமாரசாமி காமராஜர் - Page 2 Empty Re: குமாரசாமி காமராஜர்

Post by Admin Sun Nov 02, 2008 2:20 pm

”பள்ளிக்கூடம் படிக்கப் போனா எங்களுக்கு மத்தியானச் சோறு யார் போடுவாங்க? இப்படி ஆடு மாடு மேச்சாலாவது கூழோ, கஞ்சியோ கிடைக்குது.” என்றார்கள். பின்னர் அந்தச் சிறுவர்கள் ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டு போய்விட்டார்கள்.

காமராஜர் சற்று நேரம் அந்தச் சிறுவர்கள் போவதைப் பார்த்துக்கொண்டே நின்றார். பின்னர் வந்து காரிலே ஏறி தனது பயணத்தை தொடர்ந்தார்.

காரிலே செல்லும்போதே, அவரது சிந்தனை பலமாக இருந்தது. எதைப் பற்றி? கிராமங்கள் தோறும் கல்விக்கூடங்கள் நிறுவப்படவேண்டும் என்பது ஒன்று. அப்படிப் பள்ளிக்கூடம் வைத்தாலும் மதிய உணவுகள் மாணவ - மாணவிகளுக்கு இலவசமாகப் போடவேண்டும். என்பது மற்றொன்று.

செய்தித்தாளில் ”ஒரு பள்ளிச்சிறுமி மதிய வேளையில் மயங்கி விழுந்து விட்டாள். காரணம் பசியே ஆனது.” - என்பதனைப் படித்து இருந்தார் காமராஜர்.

வயிற்றிலே பசியைவைத்துக்கொண்டு, கல்வியிலே எப்படிப் பிள்ளைகளால் கவனம் செலுத்தமுடியும் என்று யோசித்தார் காமராஜர்.

கிராமங்கள் தோறும் ஆரம்பப் பள்ளிகளாக ஓராசிரியர் பள்ளிகள் திறக்கப்பட்டன. இலவச மதிய உணவுகள் பள்ளிப் பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டன. உடுத்தும் உடைகளால் கூட, ஏழை, பணக்காரப் பிள்ளைகள் என்ற வேறுபாடுகள் இருந்தன. இந்த நிலையைப் போக்க எல்லாப் பிள்ளைகளுக்கும் சீர் உடைகள் கட்டாயமாக்கப்பட்டன. இவைகள் எப்படி ஏற்பட்டன.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

குமாரசாமி காமராஜர் - Page 2 Empty Re: குமாரசாமி காமராஜர்

Post by பரஞ்சோதி Sat Jun 20, 2009 5:10 pm

அருமை, அருமையான திரி

மாபெரும் தமிழினத்தலைவரைப் பற்றிய செய்திகள்.

நன்றி இளங்கோ
பரஞ்சோதி
பரஞ்சோதி
பண்பாளர்


பதிவுகள் : 196
இணைந்தது : 13/06/2009

Back to top Go down

குமாரசாமி காமராஜர் - Page 2 Empty Re: குமாரசாமி காமராஜர்

Post by ராஜா Sat Jun 20, 2009 5:13 pm

அருமை அருமை , அரசியல்வாதி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று உதாரணமாக வாழ்ந்து கட்டிய , மதிய உணவு திட்டம் தந்த தமிழின தலைவர் , படிக்காத மேதை பற்றிய பதிவு ,
வாழ்த்துக்கள் பல நண்பர் இளங்கோ
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

குமாரசாமி காமராஜர் - Page 2 Empty Re: குமாரசாமி காமராஜர்

Post by mgandhi05 Wed Aug 12, 2009 11:20 pm

நன்றி இளங்கோ
avatar
mgandhi05
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 31
இணைந்தது : 05/08/2009

Back to top Go down

குமாரசாமி காமராஜர் - Page 2 Empty Re: குமாரசாமி காமராஜர்

Post by சிவா Sun Sep 13, 2009 6:48 pm

காமராசர் காலச்சுவடு

1903 - விருதுநகரில் குமாரசாமி நாடார், சிவகாமி அம்மாள் இணையருக்குச் சூலை 15 ஆம் நாள் மகனாகக் காமராசர் பிறந்தார்.

1908
- திண்ணைப்பள்ளியில் சேர்க்கப்பட்டாh.;

1909
- தந்தை மறைவு.

1914
- பள்ளி செல்வதை நிறுத்தினார்.

1919
- ஏப்ரல் திங்கள் இரவு இலட் சட்டத்தை எதிர்த்துக் காந்தியடிகள் விடுத்த அழைப்பை ஏற்றுக் காங்கிரசின் முழுநேர தொண்டரானார்.

1920 - ஒத்துழையாமை இயக்கத்தில் பங்குகொண்டார்.

1921 - தமிழ்நாடு காங்கிரசு கட்சியின் செயலராகத் திகழ்ந்த பெரியாரை முதன் முதலாக விருதுநகரில் சந்தித்தார்.

1923
- நாகபுரி கொடிப் போராட்டத்தில் பங்குகொண்டார். மதுரையில் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார்.

1925 - கடலூரிலிருந்து தமிழ்நாட்டுக் காங்கிரசு கமிட்டி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1927 - சென்னையில் கர்னல் நீல் சிலையை அகற்றும் போராட்டத்தை நடத்த காந்தியிடம் அனுமதி பெற்றார்.

1930 -
வேதாரணியத்தில் நடைபெற்ற உப்பு சத்தியா கிரகத்தில் கலந்து கொண்டதால் இரண்டு ஆண்டு அலிப+ர் சிறையில் அடைக்கப்பட்டார்.

1933
- சதி வழக்கில் காமராசர் சிறையில் அடைக்கப்பட்டார்.

1936
- காரைக்குடியில் நடைபெற்ற காங்கிரசு கமிட்டித் தேர்தலில் சத்திமூர்த்தி தலைவராகவும், காமராசர் செயலராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

1937
- சட்ட மன்றப் பொதுத்தேர்தலில் விருதுநகர் தொகுதில் வென்றார். விருதுநகர் நகராட்சி மன்றத் தேர்தலில் 7 வது வார்டில் போட்டியிட்டு வென்றார்.

1940
- தமிழ்நாடு காங்கிரசு தலைவர் தேர்தலில் வென்றார்.

1941 - போர்நிதிக்கு எதிர்ப்பாகப் பேசியதால் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருக்கும் போதே 1941 மே 31 ஆம் நாள் விருதுநகர் நகராட்சி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1942 - மார்சு சிறையிலிருந்து விடுதலையானதும், ஒரு நாள் மட்டும் நகராட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு, திவிர கட்சிப் பணிக்காக நகராட்சித் தலைவர் பதவியிலிருந்து நீங்கினார்.

1942-
ஆகச்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டு, அமராவதிச் சிறையில் இரண்டு ஆண்டுகள் கழித்த பிறகு வேலூர்ச் சிறைக்கு மாற்றப்பட்டார்.

1946 - மே 16, தமிழ்நாடு காங்கிரசு கமிட்டித் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார். அதே ஆண்டு சென்னைச் சட்டமன்றத்திற்கும் தேர்ந் தெடுக்கப் பட்டார்.

1947
- ஆகச்டு 15, இந்தியா விடுதலை பெற்றது. அகில இந்திய காங்கிரசு கமிட்டியின் உறுப்பினர் ஆனார்.

1948 - மூன்றாம் முறையாகத் தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியில் தலைவராகத் தேர்ந்தெடுக்கபட்டார்.

1949
- இலங்கைக்குச் சுற்றுபயணம்.

1950
- நான்காவது முறையாகத் தமிழ்நாடு காங்கிரசு தலைவரானார்.

1952
- மீண்டும் தமிழ்நாடு காங்கிரசு தலைவரானார்.

1954
- இரண்டாம் மாதம் மலாய் நாட்டுக்குச் சுற்றுபயணம்.

1954 - ஏப்ரல் 13 ஆம் நாள் சென்னை மாநிலத்தின் முதலமைச்சர் ஆனார். குடியாத்தம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றார்.

1955
- ஆவடி காங்கிரசு மாநாடு வெற்றிகரமாக நடைபெற அரும்பணி ஆற்றினார்.

1956 - பள்ளிகளில் இலவய மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

1957
- பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வென்று இரண்டாவது முறையாக முதல்வரானார்.

1960 - ஏழைப் பிள்ளைகள் அனைவருக்கும் 11 ஆம் வகுப்பு வரை இலவயக் கல்வி அளித்தார்.

1961 - அக்டோபர் 9, சென்னை மாநகராட்சி சார்பில் காமராசர் திரு உருவச் சிலையைப் பிரதமர்நேரு திறந்து வைத்தார்.

1962
- பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாகக் காமராசர் முதல்வரானார்.

1963
- எல்லாருக்கும் இலவயக் கல்வித் திட்டத்தைக் கொண்டுவந்தார். அக்டோபர் 2 ஆம் நாள் காமராசரின் திட்டத்தின்படி முதலமைச்சர் பதவியிலிருந்து நீங்கினார்.

1964 - அகில இந்திய காங்கிரசு தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். நேரு மறைந்த பிறகு இலால்பகதூர் சாச்திரியைப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கக் காமராசர் முன் மொழிந்தார்.

1965
- இந்தியா, பாகிச்தான் போர் ஏற்பட்டபோது பஞ்சாப் போர்முனைப் பகுதிகளுக்குக் காமராசர் சென்று வீரர்களைச் சந்தித்தார்.

1966
- இலால்பகதூர் மறைந்ததால், இந்திரா காந்தி பிரதமராக ஆவதற்குக் காமராசர் ஆவனச் செய்தார். உருசியாவுக்கும் சென்று வந்தார்.

1967 - பொதுத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் காமராசர் தோல்வி அடைந்தார்.

1969 - நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு.

1971
- மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகக் காமராசர் தேர்வு.

1975
- அக்டோபர் 2 ஆம் நாள் காந்தியடிகள் பிறந்த நாளில், திரு கு. காமராசர் நம்மை விட்டுப் பிரிந்தார்.

1976 - பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது


குமாரசாமி காமராஜர் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குமாரசாமி காமராஜர் - Page 2 Empty Re: குமாரசாமி காமராஜர்

Post by தாமு Tue Sep 29, 2009 3:40 pm

நன்றி இளங்கோ, சிவா அண்ணா குமாரசாமி காமராஜர் - Page 2 678642 குமாரசாமி காமராஜர் - Page 2 677196 குமாரசாமி காமராஜர் - Page 2 677196
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

குமாரசாமி காமராஜர் - Page 2 Empty Re: குமாரசாமி காமராஜர்

Post by mmani15646 Tue Mar 09, 2010 1:22 pm

ஒரு கவிதை படித்தேன்
ஏழையாகப் பிறந்து பல பெரிய பதவிகளை வகித்துவிட்டு ஏழையாகவே இறந்தவர் என்று.....

தான் பதவி வகித்த 9 வருடத்தில் தமிழகத்தில் 9 அணைகள் கட்டியுள்ளார். விவசாயம். கல்வி, சிறு தொழில் இவற்றைத் தம் கண் எனக் கருதினார். தம் குடும்ப உறுப்பினர்களை தன் அருகில்கூட நெருங்கவிட்டதில்லை.

நான் காமராஜர் காலத்தில் மாணவப் பருவத்தினன். இப்போது வெளியான காமராஜர் திரைப்படத்தைப் பார்த்த என் மகள கேட்டாள் “ அப்பா இப்படியும் ஒரு முதலமைச்சர் தமிழ் நாட்டில் இருந்தாரா?“ என்று.

1967 க்குப்பின் தமிழகத்தில் முதலமைச்சராகப் பதவியிலிருந்த மற்றும் இருக்கும் பதர்களைப் பார்த்தவளுக்கு ஏற்பட்ட நியாயமானச்சந்தேகம்.


Last edited by mmani15646 on Tue Mar 09, 2010 1:29 pm; edited 1 time in total (Reason for editing : விடுபட்ட சில முக்கிய விடயங்களைச்சேர்க்க)
avatar
mmani15646
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Back to top Go down

குமாரசாமி காமராஜர் - Page 2 Empty Re: குமாரசாமி காமராஜர்

Post by சிவா Tue Mar 09, 2010 1:25 pm

mmani15646 wrote:ஒரு கவிதை படித்தேன்
ஏழையாகப் பிறந்து பல பெரிய பதவிகளை வகித்துவிட்டு ஏழையாகவே இறந்தவர் என்று.....

நான் காமராஜர் காலத்தில் மாணவப் பருவத்தினன். இப்போது வெளியான காமராஜர் திரைப்படத்தைப் பார்த்த என் மகள கேட்டாள் “ அப்பா இப்படியும் ஒரு முதலமைச்சர் தமிழ் நாட்டில் இருந்தாரா?“
1967 க்குப்பின் தமிழகத்தில் முதலமைச்சராகப் பதவியிலிருந்த மற்றம் இருக்கும் பதர்களைப் பார்த்தவளுக்கு ஏற்ப்பட்ட நியாயமானச்சந்தேகம்.

உண்மைதான், இப்பொழுது உள்ள அரசியல்வாதிகளைப் பார்க்கும்பொழுது இந்தத் தலைவர்கள் இப்படியெல்லாம் வாழ்ந்தார்களா என நினைக்கும்பொழுது நெஞ்சம் பூரிக்கிறது!


குமாரசாமி காமராஜர் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குமாரசாமி காமராஜர் - Page 2 Empty Re: குமாரசாமி காமராஜர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum