ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

போலீசைத் தற்காப்பது என் கடமை: ஹிஷாமுடின்

Go down

போலீசைத் தற்காப்பது என் கடமை: ஹிஷாமுடின்  Empty போலீசைத் தற்காப்பது என் கடமை: ஹிஷாமுடின்

Post by சிவா Thu Mar 24, 2011 7:35 am

உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் போலீசுக்காக பரிந்து பேசியிருப்பதுடன் பிகேஆர் நடப்பில் தலைவர் சம்பந்தப்பட்ட செக்ஸ் வீடியோவில் போலீசுக்கும் தொடர்புண்டு என்று கூறும் மாற்றரசுக் கட்சியினர் அதை நிரூபிக்கத் தயாரா என்றும் சவால் விடுத்துள்ளார்.

செக்ஸ் வீடியோ காண்பிக்கப்பட்டதை வைத்து, 1998-இல் அன்வாரின் முதலாவது குதப்புணர்ச்சி வழக்குக்கு முந்திய சம்பவங்கள் மீண்டும் அரங்கேறுவதாகக் கூறப்படுவதை ஹிஷாமுடின் மறுத்தார்.

“இப்போது நான் சும்மாயிருக்கப் போவதில்லை. இவ்விவகாரத்தை அவர்கள் அரசியலாக்குவதற்கு விட மாட்டேன். போலீசின் நேர்மையைத் தற்காக்கும் கடமை எனக்குண்டு”,என்று இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டமொன்றில் அவர் கூறினார்.

“எனக்கும் போலீசுக்கும் களங்கத்தை உண்டுபண்ண விதம் விதமாகக் கதை கட்டப்படுகிறது. டிஎன்ஏ ஒரு சதித்திட்டமாம்.சைபுல் ஒரு சதித்திட்டமாம். (செக்ஸ்) வீடியோ ஒரு சதித்திட்டமாம்….என்னையும் போலீசையும் குற்றம் சொல்வோருக்கு சவால் விடுக்கிறேன்; அதை நிரூபிக்க முடியுமா?”

நேற்று அன்வாரின் வழக்குரைஞர் சங்கரா நாயர், செக்ஸ் வீடியோ காண்பிக்கப்பட்டதில் “போலீசும் உடந்தை”யாக இருந்திருக்கலாம் என்று தம் கட்சிக்காரர் ஊகிப்பதில் தவறில்லை என்றார்.

நேற்று அன்வார் செய்த போலீஸ் புகாரை அடிப்படையாக வைத்து அவர் கைது செய்யப்பட்டுக் குற்றம் சாட்டப்படலாம் என்றும் 1998-இல் முதலாவது குதப்புணர்ச்சி வழக்கில் அதுதான் நடந்தது என்றும் கூறினார்.

திங்கள்கிழமை கார்கோசா ஸ்ரீநெகாராவில், செய்தியாளர்களுக்கு செக்ஸ் வீடியோ திரையிடப்பட்டது போலீசுக்குத் தெரியாதிருக்காது என்றும் சங்கரா தெரிவித்தார்.

உள்துறை அமைச்சும் போலீசும் அவருக்கு எதிராக சதி செய்வதாக பலமுறை குற்றம் சுமத்தியுள்ள அன்வார்மீது சிவில் வழக்கு தொடுக்கும் சாத்தியங்களை தம் வழக்குரைஞர்கள் ஆராய்ந்து வருவதாக ஹிஷாமுடின் கூறினார்.

“எனக்காக அல்ல, போலீசின் நேர்மையையும் நல்ல பெயரையும் காக்க வேண்டும் என்பதற்காக அவர்மீது வழக்கு தொடுப்பது பற்றி ஆராய்வேன். இந்த (செக்ஸ் வீடியோ) விவகாரத்தின் உண்மையைக் கண்டறியும் விருப்பம் எங்களுக்கும் உண்டு.”

அதன் தொடர்பில் அரச விசாரணை ஆணையம் (ஆர்சிஐ) அமைக்கப்பட வேண்டும் என்று கூறப்படுவதையும் ஹிஷாமுடின் ஏற்கவில்லை.

“ஆர்சிஐ அமைப்பது என் அதிகாரத்துக்கு உட்பட்டதல்ல. நான் அதைப் பற்றி முடிவு செய்ய இயலாது. அப்படியே ஆர்சிஐ அமைக்கப்பட்டாலும் போலீசார் அவர்களின் கடமையைச் செய்ய அது தடையாக இருக்காது”, என்றாரவர்.

யார் வேண்டுமானாலும் ஆர்சிஐ அமைக்க வேண்டும் என்று முன்மொழியலாம் என்று கூறிய அமைச்சர் போலீசாரைப் பொறுத்தவரை இவ்விவகாரம் மீது விசாரணையைத் தொடங்கி விட்டார்கள் என்றார்.

ஆனால், அந்த விசாரணை எந்த அளவில் உள்ளது என்பது பற்றித் தமக்குத் தெரியாது என்பதை ஹிஷாமுடின் திரும்பத் திரும்ப வலியுறுத்தினார்.போலீசார் “தொழில்நெறிமுறைக்கேற்ப நடந்து” கொள்வார்கள் என்றவர் உறுதி கூறினார்.

“போலீஸ் விசாரணை பற்றி அவர்களைத்தான் கேட்க வேண்டும். அவர்கள் நியாயமாகத்தான் நடந்துகொள்ள வேண்டும். ..நேற்றுத்தான் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.போலீசை விசாரிக்க விடுங்கள்.

“ஐஜிபி (இஸ்மாயில் ஒமார்)-யும் போலீசும் அதைச் சரியாக செய்து முடிப்பார்கள் என்று என்னால் உறுதிகூற முடியும்.பொதுமக்கள் ஆர்வம் காட்டும் ஒரு முக்கிய விவகாரம் என்பதால் உண்மைகள் சரியாக இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தொழில்நெறிமுறைக்கேற்ப உண்மை கண்டறியப்பட வேண்டும் என்றும் ஐஜிபியிடம் கூறியுள்ளேன்”, என்றார்.

போலீசார் டத்தோ டியின் ஒத்துழைப்பை நாடுவார்களா என்று வினவப்பட்டதற்கு அது விசாரணையின் போக்கைப் பொருத்திருக்கும் என்று ஹிஷாமுடின் கூறினார்.

“போலீஸ்தான் அது குறித்து முடிவு செய்ய வேண்டும். போலீஸ் புகாரில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதுகூட எனக்குத் தெரியாது.அதெல்லாம் எனக்குத் தெரிய வந்தால் பின்னர் அதையும் ஒரு சதித்திட்டம் என்று கூறுவார்கள்”, என்று நக்கலாகக் கூறினார்.

மலேசியாகினி


போலீசைத் தற்காப்பது என் கடமை: ஹிஷாமுடின்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum