ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரிமினல்களைத் தேர்ந்தெடுப்போம்!

+2
ரபீக்
கண்ணன்3536
6 posters

Go down

கிரிமினல்களைத் தேர்ந்தெடுப்போம்!  Empty கிரிமினல்களைத் தேர்ந்தெடுப்போம்!

Post by கண்ணன்3536 Tue Mar 22, 2011 1:09 pm


– துர்வாசர்

தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. தேர்தலுக்குத் தேர்தல் மட்டுமே முளைக்கும் லெட்டர் பேட் கட்சிகள் கூட எங்களுக்குத் தொகுதிகளை ஒதுக்குங்கள் என்று பெரிய கட்சிகளை நெருக்க ஆரம்பித்து விட்டன. அரசியல்வாதிகள், வட்ட, மாவட்டங்கள், தொண்டர்கள் என்று யாரைப் பார்த்தாலும் விருப்ப மனு, விருப்பமில்லாத மனு என்று ஸீட்களைக் கேட்டு மனுக்களைத் தாக்கல் செய்து கொண்டு திரிகிறார்கள்.

நான் வன்னியர் வாக்குகளைப் பெற்று விடுவேன், நான் நாடார் வாக்குகளைப் பெற்று விடுவேன், நான் நாயுடு வாக்குகளைப் பெற்று விடுவேன் என்று கட்சித் தலைமையிடம் கூறி ஸீட் கேட்கிறார்கள். ஸுமோ, ஸ்கார்ப்பியோ என்று படிகள் வைத்த கார்களில், கொடிகள் பறக்க, வெள்ளையும் சள்ளையுமாக வந்து இறங்குகிறார்கள் கட்சிக்காரர்கள். கழுத்துகளிலும், விரல்களிலும் போட்டிருக்கிற செயின்களும், மோதிரங்களுமே பல லட்சங்கள் தேறும். இவர்கள்தான் இன்றைய அரசியல்வாதிகள், மக்களின் பிரதிநிதிகளாகி சட்டசபைக்குச் செல்லப் போகிறவர்கள்.

காமராஜும், கக்கனும், ஆர். வெங்கட்ராமனும், பக்தவத்சலமும், சி.சுப்பிரமணியமும் தாங்கள் சுதந்திரப் போராட்டத்திற்காகச் சிறை சென்றதைச் சொல்லி, அன்று ஜனங்களிடம் ஓட்டுக் கேட்டார்கள். காமராஜின் கருப்பு நிறத்தையும், பக்தவத்சலத்தின் முகத்தையும் கேலி செய்துதான் அன்று தி.மு.க. ஓட்டுக் கேட்டது.

காமராஜும், பக்தவத்சலமும்தான் ஜெயிலுக்குப் போனார்களா? இந்தக் கால அரசியல்வாதிகள், வட்ட மாவட்டங்களுக்கும் கூட சிறைக்குச் சென்ற அனுபவம் ஏராளமாகவே இருக்கிறது. ஜெயிலுக்குப் போனவன் எல்லாம் தியாகி என்றால், ‘நானும் ஜெயிலுக்குப் போயிருக்கிறேன், நானும் தியாகிதான்’ என்று தேர்வடம் மாதிரி செயின்களைப் போட்டுக் கொண்டு அலைகிற இக்கால அரசியல்வாதிகளும் சொல்கிறார்கள். அவர்கள் சிறை சென்றது தேச விடுதலைக்காக – இவர்கள் ஜெயிலுக்குப் போனது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் போன்ற நயம் கிரிமினல் குற்றங்களுக்காக.

கக்கனையும், பக்தவத்சலத்தையும் மாதிரி அரசியல்வாதிகளைக் கொண்டு வா என்றால் எங்கே போவது? இருக்கிற அரசியல்வாதிகள் இந்த தேர்வடச் செயின், தோசைக் கல் மோதிர அரசியல்வாதிகள்தான். அவர்களை மாதிரி இவர்களும் ஜெயிலுக்கெல்லாம் போனவர்கள்தான். இவர்களைத் தேர்ந்தெடுத்து சட்ட சபைக்கு அனுப்பி வைக்க வேண்டியதுதானே? இருக்கிறதைக் கொண்டுதானே முழம் போட முடியும்? இல்லாத தகுதிகளுக்கு எங்கே போவது?

ஒரு வேட்பாளர் இரண்டே இரண்டு கொலைகளைத்தான் செய்திருக்கிறார். இன்னொருவர் ஆள் கடத்தலில் பழம் தின்று கொட்டை போட்டவர், வேறொருத்தர் பணம் பறிப்பதிலும், கட்டப் பஞ்சாயத்திலும் பேர் வாங்கியவர். இந்தத் தகுதிகள் எல்லாம் போதாதா சட்டசபைக்குப் போக? இதை விட வேறென்ன தகுதிகள் வேண்டிக் கிடக்கிறதாம்?

புனிதமானவன்தான் உள்ளே நுழையலாம் என்பதற்கு சட்டசபை என்ன கோவிலா? கோவில் கர்ப்பக் கிரஹமா? இந்தக் காலத்தில் கோவில் கர்ப்ப கிரஹத்திலேயே சகல லீலைகளும், ஆபாசங்களும் நடக்கின்றன. காஞ்சிபுரம் கோவில் அர்ச்சகர் கர்ப்பகிரஹத்தையே தனது காம சேஷ்டைகளை அரங்கேற்றும் இடமாக்கிக் கொள்ளவில்லையா? காலம் கிடக்கிற கிடப்பில் மகாத்மா காந்தியா தேர்தலில் வந்து போட்டியிடுவார்? அலைகிறான்கள் அசட்டு அம்மாஞ்சிகள்.

வேட்பாளராக நிற்கிறவர் ஓட்டுக்குப் பணத்தை வாரி விடுவார். நன்றாகத் தேர்தலுக்குச் செலவு செய்வார். 30, 40 அடியாட்களை வைத்திருக்கிறார். இரண்டு கொலையிலும், ஏழெட்டு ஆள் கடத்தலிலும் ஈடுபட்டவர். கணிசமான கிரிமினல் வழக்குகள் மனுஷன் பேரில் உள்ளன. இதைவிட ஓட்டுக் கேட்கவும், வேட்பாளனாக நிற்கவும் ஒருத்தருக்கு வேறென்ன தகுதிகள் வேண்டும்?

சட்டசபைக்கு அலஹாபாத் கும்ப மேளாவில் குளிக்கிற சாதுக்களையும், சாமியார்களையுமா தேர்ந்தெடுக்க முடியும்? பி.ராமமூர்த்தி, கருத்திருமன் போன்ற சிறந்த வாதத் திறமையும், ஒழுக்கமும் கொண்டவர்களையா இன்று வேட்பாளர்களாக நிறுத்த முடியும்?

சென்ற சட்டசபையிலேயே 77 சட்டமன்ற உறுப்பினர்களின் மீது கிரிமினல் வழக்குகள் இருந்தன. அவர்களில் 25 உறுப்பினர்கள் மீது கடுமையான கிரிமினல் வழக்குகள் இருந்தன. இந்த 77 பேரில் தி.மு.க. உறுப்பினர்கள் – 39 பேர், அ.தி.மு.க.வில் – 8, பா.ம.க. – 15, காங்கிரஸ் – 9, ம.தி.மு.க. – 2, சி.பி.ஐ. – 2 என்று கிரிமினல்களின் பட்டியல் நீளுகிறது. கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், மிரட்டிப் பணம் பறித்தல் போன்ற அதிஉன்னதமான கிரிமினல் குற்றங்கள் இவர்கள் பேரில் இருந்தன.

ஏதோ இந்த முறையும் இந்த மாதிரி திறமையான குற்றவாளிகளைச் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுப்பதை விட்டுவிட்டு காந்தி, காமராஜ், கக்கன் என்று சதா பிதற்றிக் கொண்டிருப்பதால் தம்பிடிக் காசுக்குப் பலனுண்டா?

நன்றி: துக்ளக்
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

கிரிமினல்களைத் தேர்ந்தெடுப்போம்!  Empty Re: கிரிமினல்களைத் தேர்ந்தெடுப்போம்!

Post by ரபீக் Tue Mar 22, 2011 1:11 pm

சோ - எதை செய்தாலும் குறை சொல்லக்கூடிய தகுதி படைத்த ஒரே மனிதர் இவர்தான்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கிரிமினல்களைத் தேர்ந்தெடுப்போம்!  Empty Re: கிரிமினல்களைத் தேர்ந்தெடுப்போம்!

Post by மஞ்சுபாஷிணி Tue Mar 22, 2011 1:14 pm

செய்தி பகிர்வுக்கு அன்பு நன்றிகள் கண்ணன்.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கிரிமினல்களைத் தேர்ந்தெடுப்போம்!  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கிரிமினல்களைத் தேர்ந்தெடுப்போம்!  Empty Re: கிரிமினல்களைத் தேர்ந்தெடுப்போம்!

Post by கலைவேந்தன் Tue Mar 22, 2011 6:50 pm

சரிதான்... இருக்கும் பொறுக்கிகளில் கொஞ்சம் நல்ல பொறுக்கிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டியது தான் நம் தலை எழுத்து..



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கிரிமினல்களைத் தேர்ந்தெடுப்போம்!  Empty Re: கிரிமினல்களைத் தேர்ந்தெடுப்போம்!

Post by balakarthik Tue Mar 22, 2011 7:02 pm

மு.க‌. அழ‌கிரி அண்ணே.. நீங்க‌ வெறும் முக‌வா இல்ல‌ நாக்க‌முக‌வா?ஹி ஹி #ட‌வுட்டு அது சரி க‌லைஞ‌ரின் மொத்த‌ குடும்ப‌த்திற்கும் வாக்குரிமை ம‌றுத்தாலொழிய‌ திமுக‌வை தோற்க‌டிக்க‌ முடியாது எத்த‌னைபேருடாசாமீ


ஈகரை தமிழ் களஞ்சியம் கிரிமினல்களைத் தேர்ந்தெடுப்போம்!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கிரிமினல்களைத் தேர்ந்தெடுப்போம்!  Empty Re: கிரிமினல்களைத் தேர்ந்தெடுப்போம்!

Post by பிரகாசம் Tue Mar 22, 2011 7:57 pm

balakarthik wrote:மு.க‌. அழ‌கிரி அண்ணே.. நீங்க‌ வெறும் முக‌வா இல்ல‌ நாக்க‌முக‌வா?ஹி ஹி #ட‌வுட்டு அது சரி க‌லைஞ‌ரின் மொத்த‌ குடும்ப‌த்திற்கும் வாக்குரிமை ம‌றுத்தாலொழிய‌ திமுக‌வை தோற்க‌டிக்க‌ முடியாது எத்த‌னைபேருடாசாமீ
கிரிமினல்களைத் தேர்ந்தெடுப்போம்!  56667 கிரிமினல்களைத் தேர்ந்தெடுப்போம்!  56667 கிரிமினல்களைத் தேர்ந்தெடுப்போம்!  56667


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
கிரிமினல்களைத் தேர்ந்தெடுப்போம்!  812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

கிரிமினல்களைத் தேர்ந்தெடுப்போம்!  Empty Re: கிரிமினல்களைத் தேர்ந்தெடுப்போம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum