ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சலசல எழஎழ (கவிதை)

5 posters

Go down

சலசல எழஎழ (கவிதை) Empty சலசல எழஎழ (கவிதை)

Post by kirikasan Sat Mar 19, 2011 8:30 pm

சலசல வென்று சலங்கை குலுங்க
கலகல வென்று குலுங்கி நகைத்து
தளதள வென்றுடல் தாங்கிய கன்னி
மழைபொழி நீரிடை மகிழ்ந்து குதித்தாள்

விழவிழ நீர்த்துளி வியன்தரு உடலில்
பளபள வென்றுமே பருவம் மினுங்க
மளமள வென்றிடை மனதினில் ஏக்கம்
விளைவிளை என்று விளைந்திட அவனோ

எழஎழ நெஞ்சினில் இச்சையும்பெருகி
குளுகுளுவென்றுமே குலவிடத் தேகம்
அழகெழு மயிலென ஆடிடும் அவளை
தொழுதெனும் வேண்டத் தோன்றிட அவனோ

சளசள வென்றுமே நீரிடைபாதம்
வழவழ வென்றுமெ வழுக நடந்து
பழமெழு நிறமும் பனியென விழியும்
விளையிள வதனத் திருமகள்பார்த்தே

துளிதுளி யாகவே அச்சமும் விலக
களிகளி என்றுமே காத்திடும் மனது
பிழிபிழி என்றுமே பிழிந்துள்ளம் உந்த
கிளைகிளை தோறும் தாவிடும் மந்தி

கொளும் உணர்வோடு கொடியிடைமகளை
சிலைகலை ஓவியச் சித்திரப் பாவை
குலைகுலை வகையாய் கனிகளின் கூட்டம்
பலபல கொண்டவள் பக்கம ணைந்து

விலையிலை உனதே விந்தைகொள் அழகு
அலைமகள்எழிலும் அஞ்சிய நடையும்
வலைகளை வீசும் விழிகளும் கண்டேன்
நிலைகுலைவாகி நெஞ்சமி ழந்தேன்

அலையுலைந்தாடும் ஓடமும்போல
வலைவிழுந் துளலும் விழிகயல்போலே
பலதுயர் தந்தாய் பாவையே நீக்க
இலதொரு வழிதான் இணைவது ஒன்றே

நலமெனக்கூறி நனி இதழ்தேனே
சலசலப்பின்றி சம்மதம்தாராய்
பொலபொல வென்றே கொட்டிடபணமும்
அளவில எந்தன் அகமுண்டுவாராய்

சொலுமவன் இதனைச்சொல்வதும் இன்றி
பிழைபிழையாகவே சிந்தனை முடிவாய்
வலதொரு கையால் வஞ்சியை அணைக்க
விளைந்திட அவளோ விலகியே சற்று

கடுகடு உரமும் காதலும் கண்ணில்
விடுவிடு என்றே வேகமும் கொண்டோன்
திடுதிடு வென்றுமே தேர்திடமுன்னே
நடுதொரு நிலையை நினைவது இலையோ

தொடுதொடு என்றெனைத் தொட்டுமே தாலி
குடுகுடு என்றுமே கொட்டிட மேளம்
சுடுசுடு தீயதும் எரிந்திட முன்னே
விடுவிடு என்றுமே விரைந்தவர் கட்டி

இடுமென தன்பை ஏற்றவர் அந்தோ
சிடுசிடு என்றுமே சினந்திட எம்மை
கொடுகொலை வாளுடன் நெருங்குவர் காண்க
விடுவர்உன் னுயிரெனில் வருகபின் என்றாள்


Last edited by kirikasan on Sun Mar 20, 2011 7:01 pm; edited 1 time in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

சலசல எழஎழ (கவிதை) Empty Re: சலசல எழஎழ (கவிதை)

Post by கலைவேந்தன் Sat Mar 19, 2011 8:36 pm

இரட்டைக் கிளவிகளை வைத்து வைரமுத்து ஒரு பாடல் எழுதி இருப்பார்.. அது போல எழுத இயலுமா என்று என்னை நானே பலமுறை கேட்டுக்கொண்டதுண்டு.. ஆனால் ஏனோ முயற்சிக்க வில்லை..

இந்த பாடலைக் கண்ணூற்று பெருமகிழ்வு அடைந்தேன்.. இது கிரிகாசன் அண்ணாவால் தான் இயலும் என்பதை நான் உணர்ந்து இருக்கிறேன்..

என்ன சொல்ல பாராட்ட..? சிலு சிலுவென்ற தமிழ்த் தென்றல் வீசிட மளமளவென்று வரிகள் விழுந்திட விரு விரு என்னும் சுவை குன்றாமல் சுறுசுறு என்னும் அழகிய பாடல் வாசித்து மகிழ்ந்தேன்..

மனமார்ந்த பாராட்டுகக் கிரிகாசன் அண்ணா..! நன்றி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சலசல எழஎழ (கவிதை) Empty Re: சலசல எழஎழ (கவிதை)

Post by kirikasan Sat Mar 19, 2011 8:42 pm

அன்பு கலையண்ணா

தங்களுக்கு எப்படி நன்றி தெரிவிப்பதென்றே தெரியவில்லை
மனம் கனிந்து பாராட்டும் உங்கள் இதயத்துக்கு நான் என்றும் அடிமை (அன்பில்)

அன்புடன் கிரிகாசன்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

சலசல எழஎழ (கவிதை) Empty Re: சலசல எழஎழ (கவிதை)

Post by அன்பு தளபதி Sat Mar 19, 2011 8:54 pm

கிளவியை கொண்டு பாடிய கன்னி கவிதை இது உங்களுக்கு கன்னி முயற்ச்சியும் அல்ல அருமை தொடருங்கள்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

சலசல எழஎழ (கவிதை) Empty Re: சலசல எழஎழ (கவிதை)

Post by kirikasan Sun Mar 20, 2011 7:03 pm

maniajith007 wrote:கிளவியை கொண்டு பாடிய கன்னி கவிதை இது உங்களுக்கு கன்னி முயற்ச்சியும் அல்ல அருமை தொடருங்கள்

நன்றி!, மணிஅஜித் ! தங்கள் உள்ளம் தந்த வாழ்த்துக்கு நன்றிகள்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

சலசல எழஎழ (கவிதை) Empty Re: சலசல எழஎழ (கவிதை)

Post by மஞ்சுபாஷிணி Sun Mar 20, 2011 9:03 pm

மிக அருமையான வரிகளை இங்கே தொகுத்து அமைத்து கவிதையாய் தந்தமைக்கு அன்பு பாராட்டுக்கள் ஐயா....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சலசல எழஎழ (கவிதை) 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சலசல எழஎழ (கவிதை) Empty Re: சலசல எழஎழ (கவிதை)

Post by T.N.Balasubramanian Mon Mar 21, 2011 7:20 am

"பலே பலே"
சலசல எழஎழ (கவிதை) 677196 சலசல எழஎழ (கவிதை) 677196

ரமணீயன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சலசல எழஎழ (கவிதை) Empty Re: சலசல எழஎழ (கவிதை)

Post by kirikasan Mon Mar 21, 2011 10:34 pm

T.N.Balasubramanian wrote:"பலே பலே"
சலசல எழஎழ (கவிதை) 677196 சலசல எழஎழ (கவிதை) 677196

ரமணீயன்

நன்றி ஐயா,
தங்கள் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் இந்த விளையும் புல்(நெல்?)காட்டினில் பெய்யும் மழை எனக் கூடிய விளைசலுக்கு உரம்தரும். நன்றி ஐயா!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

சலசல எழஎழ (கவிதை) Empty Re: சலசல எழஎழ (கவிதை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum