ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி - Page 2 Empty மது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி

Post by Lakshman Sat Mar 19, 2011 4:06 pm

First topic message reminder :

ராஜ்குமார், ஒரு லாரி டிரைவர். நண்பர்களின் சகவாசத்தால் தொற்றிக் கொண்ட
குடிப்பழக்கம், காலையில் கண் விழித்ததும் மதுவை தேட வைத்தது. மது
அருந்தாவிட்டால், கைகளில் கடும் நடுக்கம். குடிபோதையில் என்ன செய் கிறோம்
என்பதே தெரியாது. விபச்சாரிகளுடனும் சகவாசம் ஏற்பட்டது. விளைவு:
ஆட்கொல்லியான எய்ட்ஸ் நோய் தொற்றிக் கொண்டு விட்டது.
சொந்த குடும்பமே ஒதுக்கி வைத்தாலும், இவரைப் போல வாழ்க்கையை
தொலைத்தவர்கள் அன்பு காட்டினர். குடிப்பழக்கத்தை கைவிட்டு, நேர்மையான
வாழ்க்கைக்கு திரும்பினார். தான் சம்பாதிப்பதில் தன் தேவைகள் போக, மீதித்
தொகையை குடும்பத்துக்கு அனுப்பி வருகிறார்.
*குடும்பம், உறவினர், நண்பர்கள், அலுவலக சகாக்கள் என, அனைவராலும்
வெறுத்து ஒதுக்கப் பட்டவர் நிர்மல். 20 ஆண்டுகாலம் அவரை ஆக்கிர மித்து
இருந்த குடிப்பழக்கம், இப்போது அறவே அவரிடம் இருந்து விலகிவிட்டது. நாள்
முழுவதும் சுறுசுறுப்பாக உழைக்க முடிகிறது. 20 ஆண்டுகளாக முடங்கிக்
கிடந்தவர், அதற்கெல்லாம் சேர்த்து வைத்ததைப் போல, இப்போது கடுமையாக
உழைக்கிறார். வாழ்க்கை தலைகீழாக மாறி விட்டதை உணர்கிறார்.
*அவர் பெயர் கண்ணன். கல்லூரிக் காலத்தில் கைநிறைய பணப்புழக்கம்.
தேவைக்கு அதிகமான பணம், அவருக்கு சேரா நட்பை தேடித் தந்தது. நண்பர்கள்
அறிமுகப்படுத்திய குடிப்பழக்கம், அவரை அடிமையாக்கி விட்டது. திருந்தி
விடுவார் என்று திருமணம் செய்து வைத்தார் தந்தை. மூச்சுக்காற்றில் கூட
மதுவின் நெடி. அவரை நெருங்க விடாத மனைவி, தாய் வீட்டில் தஞ்சமடைந்து
விட்டாள்.
குடிப்பதற்கு பணம் இல்லாத போது, சொந்த வீட்டிலேயே திருடத் துவங்கினார்.
நாள் முழுவதும் போதை ஏற்றிக் கொள்ள பணம் போதவில்லை. அலுவலகத்தில் கையாடல்
செய்து சிக்கிக் கொண் டார். ஒரு மாத சிறைவாசத்தில், ஆல்ஹகாலிக்ஸ் அனானிமஸ்
இயக்கத்தின் அனுசரணை கிடைத் தது. குடிப்பழக்கம் அவரிடம் இருந்து விலகியது.
என்றாவது ஒரு நாள் தன் மனைவி திரும்ப வருவாள் என்று காத்திருக்கிறார்
கண்ணன்.
இவர்கள் வாழ்வில் புது வசந்தம் வீசுவதற்கு காரணம், “ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்’ இயக்கம்.
அமெரிக்காவை சேர்ந்தவர் பில். இவர், ராணுவத்தில் லெப்டினென்ட் ஜெனரலாக
பணியாற்றியவர். குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால், பணி யில் கவனம் செலுத்த
முடியவில்லை; குடும் பத்தையும் கவனிக்க முடியவில்லை. குடிப்பழக் கத்தை
கைவிட பெரும் முயற்சி எடுத்தார்; முடியவில்லை. வில்லியம் சில்க் ஒர்த் என்ற
மனநல மருத்துவரிடம் சென்றார். குடிப்பழக்கத்தை நிறுத்து வதற்கு உதவி
கோரினார். ஆறு ஆண்டுகள் போராடி யும், குடிப்பழக்கத்தை நிறுத்த முடியவில்லை.
ஆனால், எதையும் கருதாமல் டிச., 11,1934ல் திடீரென்று குடிப்பழக்கத்தை
நிறுத்தினார்.
இவரைப் போலவே குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர் டாக்டர் பாப். அறுவை
சிகிச்சை நிபுணர். குடிப்பழக்கம் இருந்தாலும், மருத்துவத் தொழிலில் பெரும்
கில்லாடி. குடிக்காமல், அவரால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாது; கைகள்
நடுங்கும்.
டாக்டர் பாப்பை அறிந்த பில், அவரை சந்திக்க நேரம் கோரினார். 15 நிமிடம்
நேரம் ஒதுக்கித் தந் தார் டாக்டர் பாப். இருவரும் மனம் விட்டு பேசினர். 15
நிமிடம் நேரம் ஒதுக்கிய டாக்டர் பாப், ஆறே கால் மணி நேரம், குடிப்பழக்கம்,
அதனால் ஏற்படும் தீமை, பழக்கத்தை கைவிடும் முயற்சிகள் குறித்து பில்லுடன்
உரையாடினார். குடிப்பழக்கம், அதனால் ஏற்பட்ட பாதிப்புகள், அதில் இருந்து
மீண்டதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டால், இறுதித் தீர்வு கிடைக்கும்
என்று இருவரும் நம்பினர். இந்த சந்திப்பு நிகழ்ந்தது மே 12,1935ல்.
சில நாட்களில் டாக்டர் பாப்பும் குடிப் பழக் கத்தை நிறுத்தினார்.
குடிப்பழக்கம் ஒரு நோய் என்பதை டாக்டர் பாப் உணர்ந்தார். கோபம், சுயபச்
சாதாபம் போன்றவையே குடிப் பழக்கத்துக்கு முக் கிய காரணங்களாக உணர்ந்தார்.
தன் மருத்துவமனையில் குடிநோயாளிகளுக்கு, குடிப்பழக்கத்தை நிறுத்துவதற்காகவே
தனி வார்டு துவக்கினார்; ஆனால், அதில் பெரிய அளவில் பலன் ஏற்படவில்லை.
பில் மற்றும் டாக்டர் பாப் இது குறித்து ஆலோசித்தனர். இருவரும்
சேர்ந்து, ஜூன் 10,1935ல் ஒரு குழுவை ஏற்படுத்தினர். “ஆல்கஹாலிக்ஸ்
அனானிமஸ்’ என்பது அந்த குழுவின் பெயர். இந்த அமைப்பை துவக்கிய போது சில
கட்டுப்பாடுகளை ஏற்படுத்தினர் பாப் மற்றும் பில். அவை:
* அரசின், மது தொடர்பான கொள்கை முடிவுகளில் தொடர்பு இல்லை.
* மதம், ஜாதி, பிரிவுகள், அமைப்புகள், அரசியல் இயங்கங்களுடன் எந்த தொடர்பும் இல்லை.
* கட்டாய உறுப்பினர் சேர்க்கை கிடையாது.
* உறுப்பினர்கள் மட்டுமே நன்கொடை அளிக்கலாம்.
* அதிகபட்ச நன்கொடைக்கு வரம்பு நிர்ணயம். தற்போது, அதிகபட்சமாக 40
ஆயிரம் ரூபாய் மட்டுமே, அதுவும் உறுப்பினர்களிடம் மட்டுமே நன்கொடை பெற்றுக்
கொள்ளப்படுகிறது.
* எதிர்காலத்தில் சச்சரவுகளை தவிர்ப்பதற்கு, இக்குழுவுக்கென சொத்துக்கள் வைத்துக் கொள்ளக் கூடாது.
அமெரிக்காவில் துவக்கப்பட்ட இந்த, “ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்’ அமைப்பு,
உலகம் முழுவதும் பரவியது. 212 நாடுகளில் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.
இந்தியாவில் மட்டும் 840 குழுக்கள் உள்ளன; இவற்றில் 30 ஆயிரம் பேர்
உறுப்பினர்களாக உள்ளனர்.
தினமும், குறிப்பிட்ட இடங்களில் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
இக்கூட்டத்தில், மதுவால், தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட அவமானங்களையும்,
அதில் இருந்து எப்படி மீண்டனர், அதற்குப் பின் ஏற்பட்ட புது வாழ்க்கையின்
வசந்தம் குறித்தும், உறுப்பினர்கள் விவரிக்கின்றனர்.
பெங்களூரு மற்றும் மும்பையில், குடிப் பழக்கத்துக்கு ஆளான பெண்களை மீட்பதற்காக, பிரத்யேக கூட்டங்களும் நடத்தப்படுகின்றன.
“ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்’ அமைப்பில் உறுப்பினர்களாக இருப்போர், குடியின்
கொடுமை குறித்து முழுமையாக அறிந்து, அதில் இருந்து மீண்டு, நல்வாழ்க்கை
நடத்துவோர்கள் தான். இவர்கள், குடிப்பழக்கத்தில் இருந்து மற்றவர்களை
மீட்பதை தங்களின் முக்கிய குறிக் கோளாக கொண்டுள்ளனர்.
குடிப்பழக்கத்தை நிறுத்திய பிறகு, மீண்டும் குடிக்கும் ஆவல் எழும் போது,
இவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். அப்போது, அவர்கள்
தொலைபேசியிலேயே கவுன்சிலிங் அளித்து, குடிக்கும் எண்ணத்தை மாற்றி
விடுகின்றனர். தேவைப்பட்டால், வீட்டிற்கு அல்லது குடிப்பழக்கத்தை
நிறுத்தியவர் இருக்கும் இடத்துக்கு நேரில் சென்று கவுன்சலிங்
அளிக்கின்றனர். இதை ஒரு சேவையாக மட்டுமின்றி, கடமையாக அவர்கள்
கருதுகின்றனர்.

குடிப்பழக்கத்தில் இருந்து மீள விரும்புவோர் அணுக வேண்டிய முகவரி:

ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்
சென்னை ஒருங்கிணைப்புக்குழு
கம்யூனிட்டி சர்வீஸ் சென்டர்,
17, பால்பர் ரோடு, கீழ்பாக்கம்,
சென்னை 600 010.
தபால் பெட்டி எண்: 1065
போன்: 2644 1941
இ-மெயில்: alcoholicsananymouschennaiig@gmail.com

மது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி - Page 2 938222 அன்புடன் லக்ஷ்மன் மது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி - Page 2 938222
Lakshman
Lakshman
பண்பாளர்


பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011

Back to top Go down


மது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி - Page 2 Empty Re: மது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி

Post by Lakshman Mon Mar 21, 2011 11:16 am

சுதா அக்கா, "கலை" முழு பெயர் என்ன?


மது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி - Page 2 168113 அன்புடன் லக்ஷ்மண் மது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி - Page 2 168113
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
Lakshman
Lakshman
பண்பாளர்


பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011

Back to top Go down

மது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி - Page 2 Empty Re: மது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி

Post by உதயசுதா Mon Mar 21, 2011 11:17 am

Lakshman wrote:சுதா அக்கா, "கலை" முழு பெயர் என்ன?
avar muzu peyar kalaiventhan.aanaa avaroda nija peyar vera?sollidavaa kalai.


மது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி - Page 2 Uமது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி - Page 2 Dமது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி - Page 2 Aமது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி - Page 2 Yமது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி - Page 2 Aமது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி - Page 2 Sமது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி - Page 2 Uமது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி - Page 2 Dமது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி - Page 2 Hமது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி - Page 2 Empty Re: மது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி

Post by கலைவேந்தன் Mon Mar 21, 2011 11:18 am

இருக்கட்டுமே.. கொஞ்ச நாளைக்கு கள்ளம் கபடமற்ற இந்த குட்டி நாய்களின் முகம் பார்க்கலாமே என்னும் நல்லெண்ணம் தான்..

எது எப்படியோ எதை எண்ணி கலை என்னும் பெயர் வைத்தேனோ அது நிறைவேறியது இவரது பதிவால்..

பெண்ணாகப்பிறந்திடவே நல் மாதவம் செய்திடல் வேணுமம்மா என்றார்கள் முன்னோர்..

இப்பிறவியில் அதை உணர இயலாமல் போனாலும் அடுத்த பிறவியில் அது வாய்க்க இறைவனை வேண்டுகிறேன்..

நன்றிஙக் சுதா ..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி - Page 2 Empty Re: மது எனும் புதைகுழி, மீண்டு வர இதோ வழி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum