புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆங்கிலம் பேசுவது எப்படி?  Poll_c10ஆங்கிலம் பேசுவது எப்படி?  Poll_m10ஆங்கிலம் பேசுவது எப்படி?  Poll_c10 
157 Posts - 79%
heezulia
ஆங்கிலம் பேசுவது எப்படி?  Poll_c10ஆங்கிலம் பேசுவது எப்படி?  Poll_m10ஆங்கிலம் பேசுவது எப்படி?  Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
ஆங்கிலம் பேசுவது எப்படி?  Poll_c10ஆங்கிலம் பேசுவது எப்படி?  Poll_m10ஆங்கிலம் பேசுவது எப்படி?  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஆங்கிலம் பேசுவது எப்படி?  Poll_c10ஆங்கிலம் பேசுவது எப்படி?  Poll_m10ஆங்கிலம் பேசுவது எப்படி?  Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
ஆங்கிலம் பேசுவது எப்படி?  Poll_c10ஆங்கிலம் பேசுவது எப்படி?  Poll_m10ஆங்கிலம் பேசுவது எப்படி?  Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
ஆங்கிலம் பேசுவது எப்படி?  Poll_c10ஆங்கிலம் பேசுவது எப்படி?  Poll_m10ஆங்கிலம் பேசுவது எப்படி?  Poll_c10 
3 Posts - 2%
prajai
ஆங்கிலம் பேசுவது எப்படி?  Poll_c10ஆங்கிலம் பேசுவது எப்படி?  Poll_m10ஆங்கிலம் பேசுவது எப்படி?  Poll_c10 
1 Post - 1%
Pampu
ஆங்கிலம் பேசுவது எப்படி?  Poll_c10ஆங்கிலம் பேசுவது எப்படி?  Poll_m10ஆங்கிலம் பேசுவது எப்படி?  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆங்கிலம் பேசுவது எப்படி?  Poll_c10ஆங்கிலம் பேசுவது எப்படி?  Poll_m10ஆங்கிலம் பேசுவது எப்படி?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆங்கிலம் பேசுவது எப்படி?  Poll_c10ஆங்கிலம் பேசுவது எப்படி?  Poll_m10ஆங்கிலம் பேசுவது எப்படி?  Poll_c10 
322 Posts - 78%
heezulia
ஆங்கிலம் பேசுவது எப்படி?  Poll_c10ஆங்கிலம் பேசுவது எப்படி?  Poll_m10ஆங்கிலம் பேசுவது எப்படி?  Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
ஆங்கிலம் பேசுவது எப்படி?  Poll_c10ஆங்கிலம் பேசுவது எப்படி?  Poll_m10ஆங்கிலம் பேசுவது எப்படி?  Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஆங்கிலம் பேசுவது எப்படி?  Poll_c10ஆங்கிலம் பேசுவது எப்படி?  Poll_m10ஆங்கிலம் பேசுவது எப்படி?  Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆங்கிலம் பேசுவது எப்படி?  Poll_c10ஆங்கிலம் பேசுவது எப்படி?  Poll_m10ஆங்கிலம் பேசுவது எப்படி?  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ஆங்கிலம் பேசுவது எப்படி?  Poll_c10ஆங்கிலம் பேசுவது எப்படி?  Poll_m10ஆங்கிலம் பேசுவது எப்படி?  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ஆங்கிலம் பேசுவது எப்படி?  Poll_c10ஆங்கிலம் பேசுவது எப்படி?  Poll_m10ஆங்கிலம் பேசுவது எப்படி?  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆங்கிலம் பேசுவது எப்படி?  Poll_c10ஆங்கிலம் பேசுவது எப்படி?  Poll_m10ஆங்கிலம் பேசுவது எப்படி?  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஆங்கிலம் பேசுவது எப்படி?  Poll_c10ஆங்கிலம் பேசுவது எப்படி?  Poll_m10ஆங்கிலம் பேசுவது எப்படி?  Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஆங்கிலம் பேசுவது எப்படி?  Poll_c10ஆங்கிலம் பேசுவது எப்படி?  Poll_m10ஆங்கிலம் பேசுவது எப்படி?  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆங்கிலம் பேசுவது எப்படி?


   
   

Page 1 of 2 1, 2  Next

sivakumar.gurusamy
sivakumar.gurusamy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 37
இணைந்தது : 21/02/2011
http://pups-vayaluragaram0123.blogspot.com

Postsivakumar.gurusamy Fri Mar 18, 2011 7:42 pm

http://aangilam.blogspot.com/ஆங்கிலம் பேசுவது எப்படி? - http://aangilam.blogspot.com/ ஆங்கிலம் பேசுவது எப்படி?  128872





இன்றைய கணனியுலகில் எல்லாமே எளிதாகிவிட்டன. நாம் எங்காவது செல்லவேண்டுமானால், முன்பின் தெரியாத இடமென்றாலும் எவரின் தயவும் இன்றி நாமாகவே கூகிள் ஏர்த், கூகிள் மெப் போன்றவற்றின் உதவியுடன் சென்றுவிடக்கூடிய வசதிகள் வந்துவிட்டன. வளர்ந்த நாடுகளில் வீதிகள், கட்டடங்கள் மட்டுமன்றி, பொது மலசலக்கூடம், ஒற்றையடிப் பாதைகள் போன்றவற்றைக் கூட எளிதாக கண்டறிந்துக்கொள்ள கூடிய வகையில் வரைப்பட நூல்கள் மக்கள் பயன்பாட்டில் பரவலாகக் கிடைக்கின்றன. இருப்பினும் என்னத்தான் வசதிகள் வந்தப்போதும் எல்லோருக்கும் எதாவது ஓர் சூழ்நிலையில், எவராவது ஒருவரிடம் பாதை கேட்டு அறிந்துக்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்படவே செய்கிறது. மற்றவரிடம் நாம் பாதை கேட்பதும், மற்றவர் எம்மிடம் பாதைக்கேட்டு நாம் ஒருவருக்கு வழிக்காட்டி உதவுவதும் அடிக்கடி ஏற்படும் சாதாரண விடயங்களே ஆகும்.

எனவே இன்றையப் பாடத்தில், ஆங்கிலத்தில் எவ்வாறு வழி கேட்பது என்று பார்ப்போமா?

ஆங்கிலத்தில் பேசிப் பழகும் போது; மரியாதைமிக்கதும் தாழ்மையானதுமான பேச்சு வழக்கிலேயே பேசிப்பழகுதல் பயன்மிக்கதாகும். நாம் ஏற்கெனவே வழங்கிய
Polite and More Polite பாடத்தில் அவற்றை விளக்கமாக கற்றிருப்பீர்கள். புதிதாக இத்தளத்திற்கு வருகை தந்துள்ளோர் ஒருமுறை பார்த்துக்கொள்ளவும்.

Do you know the way to...?
Can you tell me the way to...?
Can you tell me the easy way to...?
Can you tell me the best way to...?

இவற்றையே மிகவும் தாழ்மையாக அல்லது மரியாதைமிக்க வகையில் (More Polite) கேட்பதனால் "Could", "Would", போன்ற சொற்களை முன்னொட்டாகப் பயன்படுத்தலாம்.

Could you tell me the way to...please?
Could you tell me the easy way to...please?
Could you tell me the best way to...
please?
Would you tell me
the way to...please?
Could you please tell me
the way to...?
Would you mind telling me...
please?

சிலர் தாம் செல்லவேண்டிய இடத்திற்கான வழியை இவ்வாறு கேட்பதைப் பார்த்திருக்கலாம்.

Where the nearest HSBC bank is?
What the best way to get there?
What the easy way is?
What is the quickest way to Discovery bay?
How can I get there?
How to get Stanley beach?
How to find nearest Welcome Shop?
What the easy way to post office?

மேலுள்ளவாறு வழி கேட்பது பிழையானதல்ல என்றாலும், அவை மரியாதையான தாழ்மையான பேச்சு வழக்கைக் கொண்டதல்ல. எனவே அவற்றை எவ்வாறு "Polite Form" சொற்களாக பயன்படுத்தலாம் என்பதனை கீழே பாருங்கள்.

Could you tell me where the nearest HSBC bank is?
Could you tell me what the best way to get there?
Could you tell me what the easy way is?
Could you tell me what is the quickest way to Discovery bay?
Could you tell me how can I get there?
Could you tell me how to get Stanley beach?
Could you tell me how to find nearest Welcome Shop?
Could you tell me what the easy way to post office please?
Would you mind telling me what the easy way to post office please?

யாராவது ஒருவர் உங்களிடம் ஓரிடத்திற்கான வழிகேட்டால், அதற்கு பதிலளித்தல் அநேகமாக "நேராக சென்று, வலப்பக்கம் திரும்பி, இடப்பக்கம் திரும்பி, முதலாம்/இரண்டாம்/மூன்றாம் சந்தியில் திரும்பி, எதிரே உங்கள் வலப்பக்கத்தில், உங்கள் இடப்பக்கத்தில்" போன்ற சொற்களே பயன்படும்.

அதனையே ஆங்கிலத்தில் இவ்வாறு கூறலாம்.

எடுத்துக்காட்டாக:
Excuse me, could you tell me the way to HSBC bank please?
Certainly, go straight along this road, take the first/second/third turning on the right,
HSBC bank is on your left/right/front.

ஒரு இடத்திற்கான வழி கேட்டு, அதற்கு ஒருவர் பதிலளித்தால், கட்டாயம் மறக்காமல் நன்றி கூறுங்கள். சிலவேளை நீங்கள் ஒருவருக்கு வழிக்காட்டி அதற்கு ஒரு நபர் நன்றி கூறினால், நன்றிக்கும் பதிலளிக்கும் வழக்கு ஆங்கிலப் பேச்சு வழக்கில் இருப்பதனை மறந்துவிடாதீர்கள். கீழே கவனிக்கவும்.

Excuse me, could you tell me the way to...please?
Go straight along this road/take the first turning on the right/...is on your left.
Thanks, you've been very helpful.
Don't mention it. Good luck.

ஒருவரின் கவனத்தை திசைத் திருப்பி உதவி/வழி கேட்பதானால் "Excuse me", "Sorry to interrupt" போன்ற சொற்றொடர்களை முன்னொட்டாக பயன்படுத்த மறவாதீர்கள்.

Excuse me, could you tell me the way to...please?
Sorry to interrupt, could you tell me the way to...please?
I'm sorry to interrupt you, could you tell me the way to...please?

இப்பாடத்துடன் தொடர்புடைய "Giving Direction" அடுத்தப்பாடத்தில் பார்ப்போம்.

கவனிக்கவும்:
இப்பாடம் ஆங்கில பேச்சுப் பயிற்சி பகுதியிலே வழங்கப்படுகின்றது. ஆங்கில இலக்கணம் தொடர்புடையை பாடங்களை
இங்கு பார்க்கவும்.

Download As PDF



ஆங்கிலம் பேசுவது எப்படி? - 1






கால ஓட்டமும் உலக ஓட்டமும் ஓடிக்கொண்டே இருக்கின்றன. காலவோட்டத்திற்கு ஏற்ப எமது வாழ்க்கை ஓட்டமும் ஓடிக்கொண்டே இருக்கின்றது. காலத்தை கணக்கிட்டு எமது கடமைகளை உரிய நேரத்தில் செய்ய கடிகாரம் எனும் நேரம் காண்பிப்பான் எப்போதும் எமக்கு தேவையாகவே இருக்கின்றது. நேரக் கணிப்பான் இல்லாவிட்டால் எதனையும் உரிய நேரத்தில் செய்ய தவறிவிடுவோம்.

நிழலை அளந்து நேரம் அறிந்து வந்த எம்மூதாதையர் காலப் பழக்கம், 19ம் நூற்றாண்டுகளில் கடிகாரம், கைக்கடிகாரம் போன்ற இலத்திரனியல் கண்டுப்பிடிப்புகளால் மெல்ல மறையத்தொடங்கியது. கைக்கடிகாரமும், கடிகாரமும் கூட 20ம் நூற்றாண்டுகளில் மறையத் தொடங்கி அழைப்பேசியிலேயே நேரம் பார்த்துக்கொள்ளும் வசதி வந்துவிட்டது. ஆம்! உலக அறிவியல் எத்தனை வேகமாக வளர்ந்து வருகிறது! அறிவியல் உலகம் எல்லாவற்றையுமே அவசரமாக்கி விட்டுள்ளது. பேருந்துக்கு அவசரம், தொடருந்துக்கு அவசரம், பணியகத்திற்கு செல்ல அவசரம், நேர்முகத் தேர்வுக்கு நேரம் பிந்திவிடுமோ என்றும் அவசரம், நேரம் சற்றுப் பிந்திவிட்டால் அதனாலான இழப்புகளும் அதிகம். எனவே எப்போதும் நேரம் பார்த்துப்பார்த்து பணி செய்யப் பழகிவிட்டோம். சில வேளை இந்த நேரம் காண்பிப்பான் நம்மிடம் இல்லை என்றால் என்ன செய்வது? யாராவது முன் பின் தெரியாத ஒருவரிடம் என்றாலும் நேரத்தை கேட்டறிந்துக் கொள்ள வேண்டிய அவசியம் எல்லோருக்குமே ஏற்படக்கூடியது தான்.

சரி! அப்படியானால் ஆங்கிலத்தில் எப்படி நேரம் கேட்டறிவது எனப் பார்ப்போமா?

What is the time now?
இப்பொழுது நேரம் என்ன?

Do you know what time it is?
உனக்குத் தெரியுமா எத்தனை மணி (என்று)?

Can you tell me the time?
உன்னால் எனக்கு நேரத்தைச் சொல்ல முடியுமா?

What time is it?
இப்போது என்ன நேரம்?

இப்படி எல்லாம் கேட்கலாம். ஆனால் ஆங்கிலத்தில் இப்படி கேட்டால் உங்களை நாகரிகம் அற்றவர் என்று கருதிவிடுவர். நாகரிகமற்ற விதமான பேச்சை விரும்பாத பலரும் உள்ளனர். எனவே ஆங்கிலத்தில் கேள்வி கேட்பதற்கும், பதிலளிப்பதற்கும் நாகரீகமானதும் தாழ்மையானதும் பேச்சு வழக்கு உள்ளது. அதனை "Polite Language" என்பர். நாமும் அதனைத்தான் கற்க வேண்டும். நாம் எமது பேச்சு வழக்கில் மற்றோர் எம்மை பண்பாளர்களாக மதிக்கும் நிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும். எனவே ஆங்கிலத்தில் தாழ்மையாகவும் மரியாதையாகவும் நேரம் கேட்டறியும் சொற்றொடர்கள் எவ்வாறு பயன்படுகின்றன என்பதை கீழே பார்ப்போம்.

Excuse me, what is the time now, please?
மன்னிக்கவும், தயவுசெய்து இப்பொழுது நேரம் என்ன?

ஆங்கிலத்தில் எப்பொழுதும் ஒருவரின் கவனத்தை ஈர்ப்பதற்கு "Excuse me" (மன்னிக்கவும்) எனும் சொல்லை முன்னொட்டாக சொல்லி பேச்சைத் தொடர்வது ஆங்கிலத்தில் மரியாதையான ஒரு அனுகுமுறையாகும். அத்துடன் "please" (தயவுசெய்து) எனும் சொல்லையும் இணைத்து உங்கள் வேண்டுக்கோளை விடுங்கள். அது உங்கள் பேச்சை கேட்பவர், நீங்கள் நாகரீகமாகப் பேசத்தெரிந்தவர், பண்பானவர் என்பதை எடுத்துக்காட்டும்.

மேலும் நேரத்தை கேட்டறிவதற்கான (Polite Language) சொற்றொடர்கள் சில:

Excuse me, what is the time
please?
Excuse me, what time is it?
Excuse me, have you got the time, please?
Sorry, do you have the time,
please?

Can you tell me the time
please?
Can you please tell me what is the time?
Excuse me, could you tell me the time, please?
Excuse me, could you tell me what time it is?
Excuse me, do you have the time?

பதிலளித்தல்:

1:00: It's one o' clock.
இப்பொழுது ஒரு மணி.

3:00: It is three o'clock.
இப்பொழுது மூன்று மணி.

10:00: It is ten o'clock.
இப்பொழுது பத்து மணி.

It's ___ o' clock.(two/there/four/five/six/seven/eight/nine/ten/eleven/twelve) பொருத்தமான நேர இலக்கத்தைப் பொருத்திப் பதிலளியுங்கள். மேலும் பதிலளிக்கும் சில சொற்றொடர்களை கீழே பாருங்கள்.

8:00: It's eight o'clock.
இப்பொழுது எட்டு மணி.

8:05: It's five past eight.
இப்பொழுது 8 மணி 5 நிமிடம்.

8:10: It's ten past eight.
இப்பொழுது 8 மணி 10 நிமிடம்.

8:15: It's quarter past eight.
இப்பொழுது எட்டே கால்.

8:20: It's twenty past eight.
இப்பொழுது எட்டு இருபது.

8:30: It's half past eight.
இப்பொழுது எட்டரை.

8:40: It's twenty to nine.
இப்பொழுது ஒன்பதுக்கு இருபது. (இருபது நிமிடங்கள் உள்ளன)

8:45: It's quarter to nine.
இப்பொழுது ஒன்பதுக்கு கால். (கால் மணித்தியாளம் உள்ளது)

8:50: It's ten to nine.
இப்பொழுது ஒன்பதுக்கு 10. (நிமிடங்கள் உள்ளன)

8:55: It's five to nine.
இப்பொழுது ஒன்பதுக்கு ஐந்து. (நிமிடங்கள் உள்ளன)

9:00: It's nine o'clock.
இப்பொழுது ஒன்பது மணி.

8:35: It's twenty five to nine.
இப்பொழுது ஒன்பதுக்கு இருபத்தைந்து. (நிமிடங்கள் உள்ளன.

It's midnight.
இப்பொழுது நல்லிரவு. (இரவு 12.00 மணி)

It's noon.
இப்பொழுது நடுப்பகல் (பகல் 12.00 மணி)

It's lunch time.
இப்பொழுது பகல்சாப்பாட்டு நேரம்.

It's dinner time.
இப்பொழுது இரவு சாப்பாட்டு நேரம்.

It's time to go to bed. (Good night)
இப்பொழுது படுக்கைக்கு (நித்திரைக்கு) போகும் நேரம்.

ஆங்கிலத்தில் ஒருவரிடம் நேரத்தை கேட்டு, அதற்கு அவர் பதிலளித்தால், பதிலுக்கும் பதிலளிக்கும் வழக்கு ஆங்கிலத்தில் உள்ளது. சிலவேளை உங்களிடம் யாரேனும் ஒருவர் நேரம் கேட்டு, நீங்கள் நேரத்தைக் கூற, அவர் அதற்கு நன்றி கூறினால், நன்றிக்கும் மறுமொழிக் கூற மறவாதீர்கள். கீழுள்ள சொற்றொடர்களை கவனத்தில் கொள்ளவும்.

எடுத்துக்காட்டாக:

Excuse me. what is the time please?
It's five o' clock.
Thank you.
You're welcome.

Excuse me. Have you got the time?
Yes, it's 5.00.
Thank you.
You're welcome.

Excuse me. Can you tell me the time, please?
Yes, of course. It's seven o'clock.
Thanks.
No problem.

கவனிக்கவும்:

நேரம் குறித்த மேலும் சில சொல்லாடல்கள். (இவற்றை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.)

To be on time
குறித்த நேரத்திற்கு. (வந்திடவும்/இருக்கவும்) நேரம் பிந்திவிட வேண்டாம் என்பதனை வலியுறுத்திக் கூறுவதற்கான சுருக்கச் சொற்றொடர்.

We'll leave at 10:10 am sharp.
நாங்கள் வெளிக்கிடுவோம் சரியாக (கூர்மையாக) காலை 10.10 க்கு.

மேலுள்ள வாக்கியத்தில் "sharp" எனும் சொல்லும் இணைந்து பயன்பட்டுள்ளதைக் கவனியுங்கள். "Sharp" என்றால் தமிழில் "கூர்மை" என்று பொருளாகும். அதாவது 10:10 am Sharp" என்பது, சரியாக (கூர்மையாக) பத்து மணி, பத்து நிமிடத்திற்கு என்பதாகும். அதன் உட்பொருள் 10.09 க்கும் அல்ல, 10.11 க்கும் அல்ல. மிகவும் கூர்மையாக 10.10 என்பதாகும். (கத்தியின் கூர்மைப் போன்று என்பதை நினைவில் கொள்க.)

குறிப்பு:
அன்பு உலகத்தமிழ் உறவுகளே! ஆங்கிலம் தொடர்பான எண்ணற்றக் கேள்விகள் தினமும் மின்னஞ்சலில் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. எல்லாவற்றுக்கும் உடனுக்குடன் பதிலளிப்பதற்கான நேரம் பிரச்சினையாக உள்ளது. அவற்றில் பல கேள்விகளுக்கு பதில் தளத்திலேயே உள்ளன. ஏனையவை எதிர்வரும் பாடங்களில் வழங்குவேன். கேள்வி கேட்போர் அக்கேள்வி தொடர்பான பாடங்களில் கீழ் மட்டுமே கேளுங்கள். பாடத்துடன் தொடர்பில்லாத கேள்விகளை மின்னஞ்சல் வழியில் கேளுங்கள். கேள்விகளை கேட்கும் முன் உங்கள் கேள்விக்கான பதில் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள பாடங்களில் இருக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். அநேகமான கேள்விகளுக்கு பதிலும் தொடர்புடைய பாடங்களும் தளத்திலேயே உள்ளன. அவற்றை எளிதாக தேடி பெறுவதற்கு, ஒரு தேடு தளமும் உள்ளது. அதில் ஆங்கிலத்தில் அல்லது தமிழில் தட்டச்சிட்டு எளிதாக தேடிப்பெறும் வசதியுள்ளது. இருப்பினும் கேள்வி கேட்போரின் கேள்விகளில் அதிகமானவை "ஆங்கிலம் எவ்வாறு பேசுவது?" என்பது தொடர்பாகவே உள்ளன. அதனாலேயே இந்த "ஆங்கிலம் பேசுவது எப்படி?" எனும் புதியப் பகுதியை தொடங்கியுள்ளேன். இப்பகுதி எந்தளவுக்கு ஏற்புடையது என்பதைப் பொருத்து தொடருந்து வரும்.


Download As PDF
ஆங்கிலம் துணுக்குகள்.






கடந்த பாடத்தில் நாம் Dating எனும் சொல்லுக்கான தமிழ் விளக்கம் பார்த்தோம். சாதாரணப் பயன்பாட்டில் என்றால் "திகதியிடல்" என்றும் காதல் மற்றும் உறவு நிலைகளின் போது "பொருத்தம் பார்த்தல்" மற்றும் "பொருத்தம் வழுப்படுத்தல்" போன்ற பொருள்களை தருவதாகவும் அறிந்தோம். இன்று பார்க்கப்போகும் சொல் "Keep" என்பதாகும்.

இந்த "Keep" எனும் ஆங்கிலச் சொல், பெயர் சொல்லாகவும் வினைச் சொல்லாகவும் பயன்படும்.

எடுத்துக்காட்டாக:

Keep this chair here.
வை இந்த கதிரையை இங்கே
(இந்த கதிரையை இங்கே வை.)

I keep a mobile phone on the table.
நான் வைக்கிறேன் ஒரு அழைப்பேசியை மேசையின் மேல்.
(நான் ஒரு அழைப்பேசியை மேசையின் மேல் வைக்கிறேன்.)

I keep money in my purse.
நான் வைக்கிறேன் பணம் எனது பையினுள்.
(நான் எனது பையினுள் பணம் வைக்கிறேன்.)

I keep my credit cards here.
நான் வைக்கிறேன் எனது கடனட்டைகளை இங்கே.

I keep the octopus card on the reading machine.

How do you keep your weight under control?
எப்படி நீ உனது நிறையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்கிறாய்?

If you like, keep it.
நீ விரும்பினால் வைத்துக்கொள் இதை.

You can keep it if you want.
உனக்கு வைத்துக்கொள்ள முடியும் உனக்கு வேண்டுமானால்.

மேலுள்ள வாக்கியங்களைப் பார்த்தீர்களா? அவற்றில் "Keep" எனும் சொல் "வை, வைக்கிறேன், வைத்துக்கொள், வைத்துக்கொள்ள, வைத்துக்கொள்கிறாய்" போன்றவாறே பயன்படுகின்றன. அதேவேளை இந்த "Keep" எனும் சொல் "தொடர்ந்து" எனும் வகையிலும் பயன்படும் இடங்கள் உள்ளன என்பதை கவனத்தில் கொள்ளவும்.

எடுத்துக்காட்டாக:

Keep coming.
தொடர்ந்து வா/வாருங்கள்.

How long will you keep going to school?
எவ்வளவு காலத்திற்கு தொடர்ந்து போவாய் பாடசாலைக்கு?

Sarmilan is going to keep going to school.
சர்மிலன் தொடர்ந்து போகப் போகின்றான் பாடசாலைக்கு.

இப்பொழுது விளங்குகிறதா? அதாவது "keep" எனும் சொல்லை அடுத்து வரும் வினைச்சொல் "ing" சொல்லமைப்பாக இருந்தால், "தொடர்ந்து" என பொருள்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.

சரி! மீண்டும் அடுத்தப்பாடத்தில் சந்திப்போம்.

உங்களுக்கு தொடர்ந்து ஆங்கிலம் படிக்க வேண்டுமா?
Do you want to keep studying English? அப்படியானால் தொடர்ந்து இத்தளத்திற்கு வாருங்கள்.





ஆங்கிலம் பேசுவது எப்படி?  12615-16
S.G.சிவக்குமார். B.A., B.Ed.
திருவள்ளூர்.
தமிழ்நாடு.
ஆங்கிலம் பேசுவது எப்படி?  Flag2http://pups-vayaluragaram0123.blogspot.comஆங்கிலம் பேசுவது எப்படி?  Flag2
இது எங்கள் பள்ளி "வலை தள முகவரி" .
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Fri Mar 18, 2011 8:08 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Mar 18, 2011 10:12 pm

அருமையான பயனுள்ள பகிர்வு அன்பு நன்றிகள் சிவகுமார்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆங்கிலம் பேசுவது எப்படி?  47
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Mar 18, 2011 10:25 pm

நன்றிகள்.நண்பரே..இன்னும் தொடர்ந்து தாருங்கள்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஆங்கிலம் பேசுவது எப்படி?  Friendshipcomment54ஆங்கிலம் பேசுவது எப்படி?  00fq051jst
md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Sat Mar 19, 2011 12:29 am

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:நன்றிகள்.நண்பரே..இன்னும் தொடர்ந்து தாருங்கள்... ஆங்கிலம் பேசுவது எப்படி?  154550 ஆங்கிலம் பேசுவது எப்படி?  154550 ஆங்கிலம் பேசுவது எப்படி?  154550
ஆங்கிலம் பேசுவது எப்படி?  359383

rajesh999333
rajesh999333
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 29/06/2012

Postrajesh999333 Sat Jul 07, 2012 11:11 am

how do you do?

avatar
Msaravinthan
பண்பாளர்

பதிவுகள் : 100
இணைந்தது : 10/03/2012

PostMsaravinthan Sat Oct 26, 2013 1:49 pm

அருமை ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் உண்டு தங்களால் அதற்கு விளக்கம் தர முடியுமா?
Could And Would போன்ற சொற்கள் எங்கு பயன்படுத்தவேண்டும்

அதற்கு என்ன கருத்து என்று சற்று விளக்கமாக கூறமுடியுமா??



நண்பர்களே இணையத்தில் வெலை செய்யும் WEBADDRES.தெரிந்தால் உதவுங்கள் 🐰
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Sat Oct 26, 2013 3:40 pm

ஆங்கிலம் பேசுவது எப்படி?  103459460 ஆங்கிலம் பேசுவது எப்படி?  103459460 



அன்புடன் அமிர்தா

ஆங்கிலம் பேசுவது எப்படி?  Aஆங்கிலம் பேசுவது எப்படி?  Mஆங்கிலம் பேசுவது எப்படி?  Iஆங்கிலம் பேசுவது எப்படி?  Rஆங்கிலம் பேசுவது எப்படி?  Tஆங்கிலம் பேசுவது எப்படி?  Hஆங்கிலம் பேசுவது எப்படி?  A
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sat Oct 26, 2013 3:46 pm

நன்று .ஆனால் இந்தத் திரியில் வேறு தளங்களுக்கான நிறையச் சுட்டிகள் இருக்கின்றன அதனை ஈகரை அனுமதிப்பதில்லை (இதே சுட்டியை நானும் ஒருமுறை தந்திருக்கிறேன் என்பது வேறுவிடையம் )



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 26, 2013 4:45 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:நன்று .ஆனால் இந்தத் திரியில் வேறு தளங்களுக்கான நிறையச் சுட்டிகள் இருக்கின்றன அதனை ஈகரை அனுமதிப்பதில்லை (இதே சுட்டியை நானும் ஒருமுறை தந்திருக்கிறேன்  என்பது வேறுவிடையம் )
 பயனுள்ள தளங்களுக்கான சுட்டியைப் பகிர்வதில் தவறில்லை என்பது என் கருத்து!

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக