ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழே... அமுதே...

+12
தமிழ்ப்ரியன் விஜி
கா.ந.கல்யாணசுந்தரம்
அருண்
கலைவேந்தன்
உதயசுதா
அசுரன்
ப்ரியா
மாணிக்கம் நடேசன்
மஞ்சுபாஷிணி
முரளிராஜா
சிவா
dsudhanandan
16 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

தமிழே... அமுதே... - Page 2 Empty தமிழே... அமுதே...

Post by dsudhanandan Fri Mar 18, 2011 4:47 pm

First topic message reminder :

1. இலை

தமிழ்ல ஒவ்வொன்றையும் அதனோட தன்மைக்கு ஏத்தமாதிரி பெரியவங்க தனிச்சுக் காமிக்கும்படியா சொற்களை செய்து வெச்சு இருக்காங்க. அதை நாம சரியாப் பயன்படுத்தணும்ங்க.... இன்னைக்கு இலையைபத்தி யோசிக்க வேண்டி வந்தது.... (தேர்தல் நேரம்ங்கிரதாலே இரட்டை இலையை நினைச்சேன் அப்படின்னு நீங்களா கற்பனை பண்ணக் கூடாது) இலைக்கே எத்தன சொல் பாத்தீங்களா...

ஆமாங்க, நீட்ட வாக்குல முளை விடுறது எல்லாத்தையுஞ் சொல்லுறது தாள் வெங்காயத்தாள், இராகித்தாள், வரகுத்தாள், சாமைத்தாள் அப்படின்னு.

அகத்தி, பசலை, முருங்கை போன்ற தாவரங்கள்ல, உணவுக்கு நேரிடையாப் பாவிக்கக் கூடியது கீரை.

சின்ன அளவுல நீட்ட நீட்டமா வர்றது எல்லாம் புல்; அறுகம்புல், கோரைப்புல் இதெல்லாம். அதுவே தரையில படர்ந்து போச்சுன்னா, அதுக்குப் பேரு பூண்டு. நெருஞ்சிப்பூ(ண்)டு.... புல், பூண்டு அப்படீன்னு சொல்ரோம்மில்லையா?

பரந்து, விரிஞ்சு இருந்தா அது மடல், சப்பாத்திக்கள்ளி மடல்!

கரும்பு, நாணல் இதுல வர்றதைச் சொல்லுறது தோகை.

அதே போல, குறுகலா நீட்ட நீட்டமா வர்றது ஓலை, தென்னை ஓலை, கமுகு ஓலை இப்படி!

உசிலை, சாணிப்பூட்டான், இந்த மாதிரி பத்தையில பச்சைப் பசேல்னு இருக்குறதெல்லாம் தழை.

சரி, சரி... அப்ப எதைத்தான் இலைன்னு சொல்லுறதுன்னு என்கிறீங்களா? செடியானாலும் சரி, கொடியானாலும் சரி, சிறு, குறு, பெரு மரமானாலும் சரி, தன்னிச்சையா எடுப்பா விரியுறது இலை, வேப்பிலை, அரச இலை, மாவிலை, .... இப்படி!

இவன் என்ன இன்னைக்கு இலைய இங்கே பதியாறேன் அப்படின்னு யோசிக்கிறீங்களா? வேற ஒண்ணும் இல்ல தலைவா... இன்னைக்கு மதியம் கீரை கொழம்பு சாப்பிட்டேனா... அதான்...

என்ன என்னை அடிக்க வரமாட்டீங்களே... சரி இப்போதைக்கு [You must be registered and logged in to see this image.] மீண்டும் வருவேன்!!!


Last edited by dsudhanandan on Thu Aug 25, 2011 11:52 pm; edited 2 times in total


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down


தமிழே... அமுதே... - Page 2 Empty Re: தமிழே... அமுதே...

Post by மாணிக்கம் நடேசன் Sat Mar 19, 2011 11:13 am

அதனால்தான் அதை, தமிழே அமுதே அழகிய மொழியே எனதுயிரே
என்கிறோம்.
வாழ்க தமிழ்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

தமிழே... அமுதே... - Page 2 Empty Re: தமிழே... அமுதே...

Post by dsudhanandan Sat Mar 19, 2011 7:00 pm

4. தமிழில் கணிதம் -- தொடர்ச்சி

படைகளின் அளவு

1 பந்தி = 1 இரதம் (தேர்) : 1 யானை , 3 குதிரை, 5 காலாள்
3 பந்தி = 1 சேனாமுகம்
3 சேனாமுகம் = 1 குல்மம்
3 குல்மம் = 1 கணகம்
3 கணகம் = 1 வாகினி
3 வாகினி = 1 புலுதம்
3 புலுதம் = 1 சமுத்திரம்
3 சமுத்திரம் = 1 சமாக்கியம்
10 சமாக்கியம் = 1 அக்குரோணி

1 அக்குரோணி = 21870 இரதம், 21870 யானை, 65610 குதிரை, 109350 காலாள்

மஹாபாரதத்தில் (பாண்டவர்கள், கெளரவர்கள்) மொத்த சைனியமும் சேர்த்து 18 அக்குரோணி.


8 அக்குரோணி = ஏகம்
8 ஏகம் = கோடி
8 கோடி = சங்கம்
8 சங்கம் = விந்தம்
8 விந்தம் = குமுதம்
8 குமுதம் = பதுமம்
8 பதுமம் = நாடு
8 நாடு = சமுத்திரம்
8 சமுத்திரம் = வௌ்ளம்

இராமனோடு சென்ற வானர சேனையின் அளவு எழுபது வெள்ளம்.


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

தமிழே... அமுதே... - Page 2 Empty Re: தமிழே... அமுதே...

Post by dsudhanandan Mon Mar 21, 2011 4:21 pm

5. தமிழில் கணிதம் -- தொடர்ச்சி

யுகங்கள்

1 கற்பம் = 1000 சதுர் யுகம்
1 மனுவந்தரம் = 71 சதுர் யுகம்
1000 சதுர் யுகம் = 4 யுகங்கள்
4 யுகங்கள் = 43,20,000 ஆண்டுகள்

கலியுகம் = 1 x 43,20,000 ஆண்டுகள்
துவாபர யுகம் = 2 x 43,20,000 ஆண்டுகள்
திரேதா யுகம் = 3 x 43,20,000 ஆண்டுகள்
கிருத யுகம் = 4 x 43,20,000 ஆண்டுகள்




கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

தமிழே... அமுதே... - Page 2 Empty Re: தமிழே... அமுதே...

Post by சிவா Mon Mar 21, 2011 4:22 pm

தமிழின் சிறப்புக்களை அறியத் தருவது மிகவும் பயனுள்ளதாக உள்ளது சுதானந்தன்! நன்றி!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழே... அமுதே... - Page 2 Empty Re: தமிழே... அமுதே...

Post by ப்ரியா Mon Mar 21, 2011 8:06 pm

சிவா wrote:தமிழின் சிறப்புக்களை அறியத் தருவது மிகவும் பயனுள்ளதாக உள்ளது சுதானந்தன்! நன்றி!

அதுதான் தமிழுக்கு உண்டான சிறப்பு .இல்லையா அண்ணா அருமையிருக்கு


"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]

என்றும் அன்புடன் ப்ரியா[You must be registered and logged in to see this image.]
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

தமிழே... அமுதே... - Page 2 Empty Re: தமிழே... அமுதே...

Post by dsudhanandan Tue Mar 22, 2011 10:59 am

6. பானை (மண் கலங்கள்)


"அடி வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா?
உன்ன வெய்யிலுக்கு காட்டாம வளர்த்தாங்களா?"

என ஆடுகளம் திரைப்படத்தில் டாப்ஸீயைப் பார்த்து தனுஷ் பாடும் போது; டாப்ஸீயைப் போட்டு வெளுக்கும் அளவுக்கு அவ்வளவு பெரிய பானை இருக்குமா? என யோசிக்க தோன்றுகிறது நம்முடைய முதுமக்கள் தாழியெல்லாம் நினைவுக்கு வருகிறது.

பானைகளை பற்றி ஆராய்ச்சி செய்த தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக் கழகப் பேராசிரியர் ப. அருளி, நம் தமிழகத்துள் (வழங்கப்பெற்ற - வழங்கப்பெறும்) பானை வகைகளிலில் சிலவற்றை குறிப்பிடுகிறார்.

1. அஃகப் பானை - தவசம் (தானியம்) சேர்த்து வைக்கப் பயன்பெறும் பானை (குதிர், குறுக்கை) அஃகம்- தவசம்
2. அஃகுப் பானை - வாயகன்றும் அடிப்புறம் சுருங்கியும் தோன்றும் பானை.
3. அகட்டுப் பானை - நடுவிடம் பருத்த பானை
4. அடிசிற் பானை - சோறு ஆக்குவதற்குப் பயன்பெறும் பானை.
5. அடுக்குப் பானை - நிமிர்வு முறையில் அல்லது கவிழ்வு முறையிலாக ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பெறும் பானை வரிசை. திருமணச் சடங்கு மேடையில் அடுக்கப்பெறும் ஏழுபானை வரிசை.
6. அரசாணிப்பானை - திருமணச் சடங்கு மேடையில் நாட்டப் பெறும் அரசாணிக் காலுக்குப் பக்கத்தில் வைக்கப் பெறும் மங்கலப் பானை.
7. உசும்பிய பானை - உயரம் மிகுந்த பானை.
8. உறிப் பானை - உறியில் வைத்தற்கு ஏற்ற பானை
9. எஃகுப் பானை - இரும்பு உருக்கி எடுக்கவுதவும் பானை
10. எழுத்துப் பானை - எழுத்துகள் வரையப் பெற்ற பானை
11. எழுப்புப் பானை - உயரம் வாய்ந்த பானை
12. ஒறுவாயப் பானை - விளிம்பு சிதைந்த பானை
13. ஓதப் பானை - ஈரப் பானை
14. ஓர்மப் பானை - திண்ணிய பானை, தட்டினால் நன்கு ஒலியெழும்பும் பானை
15. ஓரிப் பானை - தனிப் பானை, ஒல்லியான பானை
16. ஓவியப் பானை - ஓவியம் வரையப் பெற்ற பானை, வண்ணம் தீட்டப்பட்ட பானை
17. கஞ்சிப் பானை - கஞ்சியை வடித்தற்குப் பயன்பெறும் அகன்ற வாயுடைய பானை
18. கட்டப் பானை - அடிப்பகுதி வனையப்படாத பானை
19. கட்டுப் பானை - மிதவை அமைத்தற்கென அம்மிதவையின் ஓரத்தில் கட்டப்பெறும் பானை
20. கதிர்ப் பானை - புதிய நெற்கதிர்களையும், நெல்மணிகளையும் வைத்தற்குப் பயன்பெறும் பானை
21. கரகப் பானை - கரவப்பானை - நீர்க்கரகம்
22. கரிப் பானை - கரி பிடித்த பானை
23. கருப்புப் பானை - முழுவதுமாகக் கருநிறம் வாய்ந்த பானை
24. கருப்பு - சிவப்பு பானை - உள்ளே கருநிறமும் வெளியே செந்நிறமும் வாய்ந்த பானை
25. கலசப் பானை - கலயம், கலசம், கலம், நீர்க்கலம்
26. கழுநீர்ப் பானை - அரிசி முதலிய கூலங்களைக் கழுவிய நீரை ஊற்றி வைத்தற்குப் பயன்பெறும் பானை (கொச்சை வழக்கில் கழுனிப் பானை எனப் பெறுகின்றது)
27. காடிப் பானை - கழுநீர்ப் பானை
28. காதுப் பானை - விளிம்பில் பிடியமைத்து உருவாக்கப் பெறும் பானை
29. குண்டுப் பானை - உருண்ட வடிவத்தில் தோன்றும் பானை
30. குறைப் பானை - அடிப்பகுதியில்லாத பானை, அடியிலி (கொச்சை வழக்கில் குறுப்பானை என்னப் பெறுகின்றது)
31. கூடைப் பானை - கூடை வடிவில் உருவாக்கப் பெறும் பானை
32. கூர்முனை பானை - அடிப்புறம் கூர்முனை அமையும் படியாக உருவாக்கப் பெற்ற பானை
33. கூர்ப் பானை - கூர் முனைப் பானை
34. கூழ்ப் பானை - கூழ் காய்ச்சுதற்கெனப் பயன்படுத்தப் பெறும் பானை
35. கோளப் பானை - உருண்டு திரண்ட பானை
36. சருவப் பானை - மேற்புறம் அகற்சியாகவும், கீழ்ப்புறம் சரிவாகவும் சுருங்கியும் ஆக உருவாக்கப் பெற்ற பானை.
37. சவப் பானை - சவம் இடுதற்கேற்ப உருவாக்கப் பெற்ற பெரிய பானை, ஈமத்தாழி
38. சவலைப் பானை - நன்கு வேகாத பானை, மெல்லிய பானை
39. சன்னப் பானை - மெல்லிய பானை, கனமில்லாத பானை
40. சாம்பல் பானை - கையால் செய்யப் பெற்ற பானை
41. சொண்டுப் பானை - கனத்த விளிம்புடைய பானை
42. சோற்றுப் பானை - சோறு ஆக்குவதற்குப் பயன்பெறும் பானை
43. சில்லுப் பானை - மிகச் சிறிய பானை
44. சின்ன பானை - சிறிய பானை
45. தவலைப் பானை - சிறிய வகைப் பானை
46. திடமப் பானை - பெரிய பானை (திடுமுப் பானை)
47. திம்மப் பானை - பெரும்பானை (திம்மம் - பருமம்)
48. துந்திப் பானை - தொந்தியுறுப்புப் போன்று அடிப்பாகம் மிகவுருண்டு திரண்ட தோற்றம் அமைந்த பானை
49. தொண்ணைப் பானை - குழிவார்ந்த பானை
50. தோரணப் பானை - கழுத்துப் பாகத்தைச் சுற்றிலும் தோரணவடிவில் உருவெட்டப் பெற்ற பானை
51. தோள் பானை - தோளில் (சுவற்பகுதியில்) தொங்கவிட்டுப் பயன்படுத்துதற் கேற்றவாறு உருவமைந்த பானை
52. நாற்கால் பானை - நான்கு கால் தாங்கிகளை உடன் கொண்டிருக்குமாறு அமைக்கப் பெற்ற பானை
53. பச்சைப் பானை - சுடப்பெறாத பானை
54. படரப் பானை - அகற்ற பெரிய பானை
55. பிணப் பானை - சவப்பானை, ஈமத்தாழி
56. பொள்ளற் பானை - துளையுள்ள பானை (பொள்ளல் பானை)
57. பொங்கல் பானை - பொங்கல் விழாவிற்குரிய பானை
58. மங்கலக் கூலப் பானை - திருமண விழா மன்றலில் தவசம் நிறைத்து வைக்கப் பெறும் பானை
59. மடைக் கலப் பானை - திருமண வீட்டில் சமையலுக்குப் பயன்படுத்துவதற்கு உருவாக்கப் பெற்ற பானை
60. மிண்டப் பானை - பெரிய பானை
61. மிறைப் பானை - வளைந்து உயர்ந்த பானை
62. முகந்தெழு பானை - ஏற்றப் பானை
63. முடலைப் பானை - உருண்டை யுருவப் பானை
64. முரகுப் பானை - பெரிய பானை - திரண்டு உருண்ட பானை
65. மொங்கம் பானை - பெரும் பானை (மொங்கான் பானை)
66. மொட்டைப் பானை - கழுத்தில்லாத பானை
67. வடிநீர்ப் பானை - நீரை வடிகட்டித் தருதற்கேற்ப அமைக்கப் பெற்ற நீர்க்கலம்
68. வழைப் பானை - வழ வழப்பார்ந்த புதுப்பானை
69. வெள்ளாவிப் பானை - துணி அவித்தற்குப் பயன் பெறும் பானை



Last edited by dsudhanandan on Tue Mar 22, 2011 1:56 pm; edited 1 time in total


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

தமிழே... அமுதே... - Page 2 Empty Re: தமிழே... அமுதே...

Post by அசுரன் Tue Mar 22, 2011 11:03 am

அம்மாடியோவ் இம்பூட்டு பானை வகைகளா? தமிழ் அழகு
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தமிழே... அமுதே... - Page 2 Empty Re: தமிழே... அமுதே...

Post by dsudhanandan Tue Mar 22, 2011 11:11 am

அசுரன் wrote:அம்மாடியோவ் இம்பூட்டு பானை வகைகளா? தமிழ் அழகு

நன்றி தலைவா.... மேலும் தொடர்வேன் ..........


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

தமிழே... அமுதே... - Page 2 Empty Re: தமிழே... அமுதே...

Post by அசுரன் Tue Mar 22, 2011 11:13 am

dsudhanandan wrote:
அசுரன் wrote:அம்மாடியோவ் இம்பூட்டு பானை வகைகளா? தமிழ் அழகு

நன்றி தலைவா.... மேலும் தொடர்வேன் ..........
காத்திருக்கிறோம் (றேன்)
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தமிழே... அமுதே... - Page 2 Empty Re: தமிழே... அமுதே...

Post by சிவா Tue Mar 22, 2011 11:14 am

69 பானை வகைகளா? ஆயகலைகளின் எண்ணிக்கையைவிட அதிகமாக உள்ளதே! அறியத் தந்தமைக்கு நன்றி சுதா!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழே... அமுதே... - Page 2 Empty Re: தமிழே... அமுதே...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum