புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படம் எடுக்க ஏது பணம்? (மெள்ள சினிமா இனி .... சிதையும்)
Page 1 of 1 •
படம் எடுக்க ஏது பணம்?
மெள்ள சினிமா இனி... சிதையும்!
காலங்காலமாக தி.மு.க-வுக்கும், அதன் தலைவருக்கும் அனுதாபிகள்
திரை உலகப் படைப்பாளிகள். ஆனால், இப்போது அவர்கள் உதடுகள் மூடிக்கிடக்கின்றன. புதிய படங்களுக்கு பூஜை போடுவது தொடங்கி, முடிப்பது வரை, 'அவசரம் வேண்டாம்... தேர்தல் முடியட்டும்’ என்ற வார்த்தைகளைத்தான் தயாரிப்பாளர்கள் வாயில் இருந்து கேட்க முடிகிறது!
கடந்த மூன்றரை வருடங்களாகத் திரையரங்குகளைக் கைப்பற்றி வைத்திருந்த பெரிய குடும்பத்தின் சினிமாப் படைத் தளபதிகளும் போர் நிறுத்தம் போன்ற அமைதியில் இருக்கிறார்கள். மார்ச், ஏப்ரல், மே மாதங்கள் தேர்வு மற்றும் தேர்தல் காலம் என்பதால்தான் இத்தனை அமைதி!
புகழ் பெற்ற நிறுவனங்கள் படத் தயாரிப்பை நிறுத்திவிட்டன. புதியவர்கள் உள்ளே நுழைய பயப்படுகிறார்கள். கனவுத் தொழிற்சாலையில் என்னதான் நடக்கிறது?
கருணாநிதி ஆட்சிக்கு வந்ததும்... தியேட்டர்களுக்கு முழு வரி விலக்கு, படப்பிடிப்பு நடத்த கட்டணக் குறைப்பு, படப்பிடிப்புக்கு ஒரு முனை அனுமதி என்றெல்லாம் சலுகைகளை வாரி இறைத்தார். ஆனால், இந்த சலுகைகளை சினிமா உலகம் அனுபவிக்கத் தொடங்கும் முன்பே, ஆட்சியாளர்களின் ஆசை, தமிழ்த் திரையை நோக்கிப் பாய்ந்தது. முதலில் படங்களை வாங்கி வெளியிட ஆரம்பித்தவர்கள், தடாலடியாக மொத்த சினிமா உலகத்தையும் வளைத்தனர்.
சன் பிக்சர்ஸ், உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட், தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன் மற்றும் கலைஞர் டி.வி. போன்றவை சினிமா வியாபாரத்துக்குள் குதித்தன; படத் தயாரிப்பிலும் இறங்கின. ஆட்சி அதிகாரம், பண பலம் இருந்ததால் ஒட்டுமொத்தத் திரையுலகமும் இவர்கள் கட்டளைக்கும், கட்டுப்பாட்டுக்கும் விழுந்தன.
''சன் நிறுவனம் 1992-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பப்ளிக் லிமிடெட் கம்பெனியாக வளர்ந்தது. அடுத்ததாக சன் பிக்சர்ஸைத் தொடங்கியது. ஆனால், ரெட் ஜெயன்ட், கிளவுட் நைன், கலைஞர் டி.வி. ஆகிய மூன்றும் மூன்று ஆண்டுகளுக்குள் முளைத்தவை. கோடிக்கணக்கில் பணம் போட்டு படங்களைத் தயாரிக்கவும், அல்லது தயாரித்த படங்களை கோடிகளைக் கொட்டி வாங்கவும் இவர்களுக்குப் பணம் எங்கே இருந்து வருகிறது? அவை முறைப்படியானதுதானா? இந்தத் தொழிலில் முப்பது நாற்பது வருடங்களாக வலம் வரும் தயாரிப்பாளர்கள்கூட இரண்டு மூன்று தோல்விகளுக்குப் பிறகு அமைதியாகிவிடும்போது, இவர்களால் மட்டும் அடுத்தடுத்து எப்படிப் படங்கள் எடுத்து வெளியிட முடிகிறது?'' என்ற கேள்வி கோடம்பாக்கம் வட்டாரத்தில் சுழன்றடிக்கிறது.
''கூந்தல் உள்ளவள் அள்ளி முடிகிறாள் என்பது மாதிரி, பணம் வைத்திருப்பவர்கள் படம் எடுக்கிறார்கள். அதை நாங்கள் தவறு சொல்லவில்லை. ஆனால், தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி அடுத்தவர்களைப் படம் எடுக்கவிடாமலும், எடுத்த படத்தை ஓடவிடாமலும், தங்கள் படத்தில்தான் முக்கிய ஹீரோக்கள் நடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதும் எந்த வகையில் நியாயம்?'' என்றும் இவர்கள் கேட்கிறார்கள்.
கடந்த வருடம் 150 நேரடித் தமிழ்ப் படங்கள் வெளியாகின. இதில் 10 படங்கள் மட்டுமே வசூல்ரீதியாகத் தயாரிப்பாளர்களை சந்தோஷப்படுத்தின. கிட்டத்தட்ட 100 படங்கள் வந்ததும்... போனதும் தெரியவில்லை. சில படங்கள் நன்றாக இருந்தும், திரையரங்குகளில் மூன்று நாட்கள் தாண்டும் முன்பே எடுக்கப்பட்டன. அத்தனை படங்களின் தயாரிப்பாளர்களும் முக்காடு போட்டுக்கொண்டார்கள். இதுபற்றி வேதனையோடு பேசும் தயாரிப்பாளர் ஒருவர், ''ஒரு படம் பூஜை போடப்பட்ட அன்றே வியாபாரம் ஆகிற நிலை இருந்தது. தயாரிப்பாளர் முதல் ஷெட்யூல் முடிப்பார். எடுத்தவற்றை ஸ்டில்களாக பிரின்ட் போட்டு ஆல்பமாகத் தயாரிப்பார். மீடியேட்டர்கள் அலுவலகத்துக்கு வந்து ஆல்பம் பார்ப்பார்கள். விநியோகஸ்தர்களை அழைத்து வருவார்கள். ஹீரோ வேல்யூ பொறுத்து, வியாபாரம் பேசி ஒரு தொகையை முன்பணமாகக் கொடுப்பார்கள். இப்படியே சில ஏரியாக்கள் வியாபாரமாகிவிடும். தியேட்டர்காரர்களிடம் இருந்து வாங்கியும், விநியோகஸ்தர்கள் தங்களது பங்காகவும் கொடுக்கும் பணத்திலேயே, தயாரிப்பாளர் படத்தை முடித்துவிடுவார். வியாபார முடிவில் விநியோகஸ்தர்களிடம் பேசிய தொகைக்கும் படத்துக்கு ஆன செலவுக்கும் இடையே நிற்கும் தொகை 'டெபிசிட்’ எனவும் 'லாபம்’ எனவும் பார்க்கப்படும். இதுதான் காலம்காலமாக தமிழ் சினிமாவில் நிலவிய வியாபார முறை. எல்லாப் படங்களுக்கும் வியாபாரம் இருந்தது.
ஆனால், இது வரை நிலவிவந்த வியாபாரக் கட்டமைப்புக்குள் வராமல் அதிகாரத்தைப் பயன்படுத்தி, விநியோகஸ்தர்களைப் புறக்கணித்து நேரடியாக அரசியல் குடும்பங்கள் தமிழகத் திரையரங்குகளைப் பங்கு போட்டுக்கொண்டதில் தொடங்கியது பிரச்னை. சம்பாவும் அவர்களே... குறுவையும் அவர்களே என்றாக... மற்ற தயாரிப்பாளர்கள் ஊடுபயிர் ஆனார்கள்.
ஓர் ஊரில் நான்கு நல்ல தியேட்டர்கள் இருந்தால், அவற்றை ஆளுக்கு ஒருவர் தங்களது ஆளுமைக்குள் கொண்டுவந்தார்கள். '10-ம் தேதி எனது படம், 15 நாட்கள் கழித்து 25-ம் தேதி உனது படம்’ என தங்களுக்குள் செனட் அமைத்துக்கொண்டு படங்களை ரிலீஸ் செய்து தள்ளினார்கள். தடாலடியான விளம்பரங்களால், இவர்கள் ரிலீஸ் செய்யும் படங்களுக்கு ஓப்பனிங் எகிறிவிட... தியேட்டர்காரர்கள் காட்டில் மழையோ மழை!
விநியோகஸ்தர்கள் ஓரங்கட்டப்பட, பெரிய பட்ஜெட் படங்கள் பாதுகாப்பாக இவர்கள் கையில் வந்து விழ, சின்ன மற்றும் மீடியம் பட்ஜெட்டில் படமெடுக்கும் தயாரிப்பாளர்கள் நிலைமை பரிதாபமானது. எடுத்த படத்தை தியேட்டர்களுக்குக் கொண்டுசெல்ல முடியாத நிலை!
இதில் உச்சபட்சக் கொடுமை என்னவென்றால், அரசியல் குடும்பங்களது படங்களை 15 நாட்களுக்குக் குறையாமல் ஓட்டும் தியேட்டர் அதிபர்கள் (ரசிகர்களைப் பெரிய அளவில் கவராத 'தூங்கா நகரம்’ இன்னும் ஏராளமான தியேட்டர்களில் ஓடுகிறது!) மற்ற படங்களை ஓரிரு நாட்களில் தூக்கி எறிவதுதான். இவர்கள் தவிர்த்து வேறு யார் படத்தை ரிலீஸ் செய்ய தியேட்டர் புக் செய்யச் சென்றாலும், ''சார், 20-ம் தேதி அந்தப் படம் வருகிறது. உங்கள் படத்துக்கு ஒரு வாரம்தான்...'' என்று தயாரிப்பாளரின் 25 நாள் கனவை(?!) நசுக்கிவிடுவார்கள்.
தயாரிப்பாளர் தயங்கி நிற்கையில்... வரிசையாக அதிகார மையம் தயாரிக்கும் படங்களின் ரிலீஸ் தேதிகளை விளக்கி, 'ஆகஸ்ட் கடைசியில் நாங்கள் சொல்கிறபோது, உங்கள் படத்தை ரிலீஸ் செய்யலாம்’ என ஜனவரி மாதம் பேசுகிறார்கள். அதாவது எட்டு மாதங்கள் பொறுமையாக இரு என்பார்கள்.
இதுகூடப் பரவாயில்லை. கோடிகளைக் கொட்டிப் படமெடுத்த தயாரிப்பாளர், 'சரி, நீங்கள் சொல்லும் தேதியில் ரிலீஸ் செய்கிறேன்... ஏதாவது, அட்வான்ஸ் கொடுங்கள், வட்டி கட்ட வேண்டும்’ என்று தியேட்டர்களிடம் கேட்டால். நமுட்டுச் சிரிப்பும் நக்கல் பார்வையுமே பதிலாகக் கிடைக்கும். ''படத்தை ரிலீஸ் செய்கிறோமே, அது போதாதா?'' என்கிற பஞ்ச் டயலாக் கேட்டு தயாரிப்பாளர்களுக்கு மயக்கம் வராத குறைதான்.
தியேட்டர்காரர்களிடம் கமிட்மென்ட் இல்லாத நிலையில் படத்தை ரிலீஸ் செய்தால், வெள்ளிக்கிழமை வெளியாகும் படம் திங்கள் அன்றுகூட திரையில் இருப்பதில்லை. இராம.நாராயணனின் டப்பிங் படங்களையோ, ராஜ கன்னிகளின் குளியல் படங்களையோ போட்டு அடுத்த வியாழக்கிழமை வரை காலம் தள்ளுகிறார்கள். வெள்ளியன்று ரெட் ஜெயன்ட்டோ, கிளவுட் நைனோ!
நல்ல படங்களை தியேட்டரில் போய்ப் பார்க்க விரும்பும் ரசிகர்கள், 'எது நல்ல படம்?’ என்பதற்கு அளவுகோலாக, ஊடக விமர்சனங்களையும், படம் பார்த்தவர்களின் கமென்ட்டுகளையும்தான் எடுத்துக்கொள்வார்கள். விமர்சனம் படித்துவிட்டு அல்லது படம் பார்த்தவர்கள் கூறுவதைக் கேட்டு, ஆடியன்ஸ் தியேட்டருக்கு வருவதற்குக்கூட இப்போதெல்லாம் அவகாசம் கொடுக்காமல் படத்தை எடுத்துவிடுகிறார்கள்.
சில மாதங்களுக்கு முன் வெளியான 'தென்மேற்கு பருவக்காற்று’, வெளியான மூன்றாவது நாளே பல திரையரங்குகளில் காணாமல் போனது. பத்திரிகை விமர்சனங்கள் வெளியாகி படம் பார்க்கும் ஆர்வத்தில் மக்கள் தியேட்டருக்குப் போனபோது, பல ஊர்களில் படம் இல்லை!
அதேபோல், 'களவாணி’ திரைப்படத்தை ஒரு குறிப்பிட்ட நிறுவனம் ஓடவிடாமல் விரட்டி விரட்டி அடித்தது. 'மதராச பட்டினம்’ மற்றும் 'தில்லாலங்கடி’ படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதற்காக, களவாணியை 15 நாட்களிலேயே திரையரங்குகளில் இருந்து களவாடினார்கள். 'பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்துக்காக 'எந்திரன்’ ரிலீஸை ஒரு வாரம் தள்ளிவைத்தார்கள். வேறு படங்களை ஒப்பந்த ரீதியில் ரிலீஸ் செய்திருந்தால்கூட, அந்த ஒப்பந்தத்தை அலட்சியம் செய்துவிட்டு அதிகார மையத்தின் படங்களை ரிலீஸ் செய்தார்கள். இப்படியாக கழகத்தார் மட்டுமே வாசிக்கும் 'முரசொலி’போல ஆகிவிட்டது தமிழ்த்திரை!
கிட்டத்தட்ட 80 படங்கள் சென்ஸார் முடிந்து காத்திருக்கின்றன. நூற்றுக்கணக்கான படங்கள், சென்ஸாருக்குத் தயாராக இருக்கின்றன.
விலைவாசி உயர்வைப்பற்றி குறிப்பிடும்போதெல்லாம் முதல்வர் கருணாநிதி அண்டை மாநிலங்களை மேற்கோள் காட்டுவது உண்டு. இதுபற்றி பேசும் தயாரிப்பாளர் ஒருவர், ''ஆந்திராவில் ஒரு படம் ஃபிளாப் என்றாலும் மூன்று வாரங்கள் ஓடும். கன்னடம் மற்றும் மலையாளப் பட உலகிலும் இதுதான் சூழ்நிலை. 100 நாட்கள் வெள்ளி விழா எல்லாம் இந்த மாநிலங்களில் சாத்தியம், சகஜம். ஆனால், தமிழ் சினிமாவின் தலை எழுத்துதான் தாறுமாறாகப் போய்விட்டது. படம் நன்றாக இல்லை என்றால்... ஒரு நாள், சுமார் என்றால்... மூன்று நாள், வெற்றிப் படம் என்றால்... ஒரு வாரம். அவ்வளவுதான்.
ஏன், அண்டை மாநிலங்களில் ஆளும் கட்சிக்காரர்கள் படம் எடுக்கவில்லையா? அல்லது அவர்களது வாரிசுகள் பட வியாபாரத்தில் இல்லையா? இருக்கிறார்கள். அங்கெல்லாம் மனசாட்சியோடு, நேர்மையோடு சினிமா வியாபாரம் நடக்கிறது. இங்கு, 'தடி எடுத்தவன் தண்டல்காரன், வல்லவன் வகுத்ததே வாய்க்கால்’ என்கிற பழமொழியை நினைவூட்டுவதுபோல முதல்வர் குடும்பத்தினார் தமிழ் சினிமாவை மேலாதிக்கம் செய்கிறார்கள்...'' என்கிறார்.
இதோ தேர்தல் நெருங்கிவிட்டது. முதல்வருக்குக் கூடிக் கூடி விழா எடுத்து அதன் பலனை அனுபவித்தவர்கள் ஒருபுறம் இருக்க... பணத்தைக் கொட்டிப் படம் எடுத்து, அதை ரிலீஸ் செய்ய முடியாமல் தவிக்கும் தயாரிப்பாளர்களும், சுதந்திரமாகச் செயல்பட முடியாமல் தவிக்கும் படைப்பாளிகளும் இன்னொரு புறம். இவர்கள்தான், 'தேர்தல் முடியட்டும்...’ என்று நம்பிக்கையோடு காத்துக்கிடக்கிறார்கள்.
''தேர்தலுக்குப் பிறகும் இதே நிலைமை தொடருமானால், அண்டை மாநிலங்களுக்கு ஓடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழி இருந்தால் சொல்லுங்கள்?'' என்று சில தயாரிப்பாளர்கள் கேட்கிறார்கள். சொல்லுங்கள்!
- கேள்வியின் நாயகன்
ஐம்பது நாள் ஓட்டணும்?
ரெட் ஜெயன்ட் முதலில் தயாரித்த 'குருவி’ எதிர்பார்த்த அளவுக்குப் போகவில்லை. அடுத்த படம் 'ஆதவன்.’ அதன் ரிசல்ட்டும் சரியாக இல்லை. ஒரு வாரத்தில் தியேட்டர்கள் காத்தாட... படத்தை எடுப்பதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு செய்தார்கள். இந்தத் தகவல் கிடைத்தவுடன், அதிகார மையத்தைச் சேர்ந்தவர் எடுத்தார் போனை... பிடித்தார் திரையரங்குகளை!
'தியேட்டர் நடத்தணும்ல...’ என்கிற ரீதியில் எகிற... வடிவேலு பாணியில் பல்டி அடித்தார்கள் திரையரங்க ஓனர்கள். இப்ப, '50 நாள்தானே ஓட்டணும்... பாருங்க...’ என்றபடி அதிகார மையத்தின் படங்களை பிரின்ட் தேயத் தேய ஓட்டுகிறார்கள்!
தீர்மானம் என்னாச்சு?
கடந்த ஜனவரியில் தயாரிப்பாளர்கள் சங்கம் அவசரக் கூட்டம் ஒன்றைக் கூட்டியது. 'வாரத்துக்கு இரண்டு படங்கள் மட்டுமே ரிலீஸ் செய்ய அனுமதி வழங்கப்படும். அதோடு, இனி எந்த சேனலும் ஒரு படத்தின் விளம்பரத்தை ஒரு நாளைக்கு ஐந்து தடவைக்கு மேல் போடக் கூடாது, திரையரங்கங்கள் அரசாங்கம் நிர்ணயித்த கட்டணத்தைக் கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும். பெரிய படங்கள் 100 பிரின்ட்டுகளுக்குள் திரையிடப்பட்டால் மட்டுமே வரி விலக்கு, மான்யம்...’ என்றெல்லாம் தீர்மானம் போட்டுப் பரபரப்பு ஏற்படுத்தினார்கள்.
விஜய் நடித்த 'காவலன்’ படத்தையும், கார்த்தி நடித்த 'சிறுத்தை’யும் முடக்கப் போடப்படுகிற திட்டம் என்பதை விவரமானவர்கள் அறிந்துகொண்டார்கள்.
அவர்கள் எதிர்பார்த்தது மாதிரியே, போதுமான விளம்பரம் இல்லை என்பதால், பெரிய விலை கொடுத்து காவலனை வாங்குவதற்கு விநியோகஸ்தர்கள் தயங்க, நடிகர் விஜய் கிட்டத்தட்ட சொந்தமாக ரிலீஸ் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
அதைப் போலவே, 'சிறுத்தை’யும் சொந்தமாக வெளியிடப்பட்டது. ஆனால், 'இளைஞன்’ படம் தமிழ்நாட்டில் உள்ள நம்பர் ஒன் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.
அதே நேரம், கவுன்சில் போட்ட தீர்மானத்தின்படி விளம்பரத்திலும் கட்டுப்பாடு வரவில்லை. பிரின்ட் போடுவதிலும், டிக்கெட் விலையிலும் கட்டுப்பாடு இல்லை.
தடாலடி விளம்பரம்
சேனல்களில் செய்யப்படும் விளம்பரம்தான் ஒரு படத்துக்கான ஓப்பனிங்கை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. அதிகார மையம் வாங்கியோ அல்லது தயாரித்தோ ரிலீஸ் செய்யும் படங்களுக்கான விளம்பரம், ரிலீஸுக்கு முந்தைய ஒரு வாரத்தில் இருந்து ரிலீஸாகி, குறைந்தபட்சம் ஆறு வாரங்கள் வரை செய்யப்படுகிறது.
டி.வி-யில்10 நிமிடங்களுக்கு ஒரு முறை என 24 மணி நேரமும் கலங்கடிக்கும் விளம்பரங்களின் மொத்த மதிப்பு 30 கோடியைத் தாண்டுமாம். இந்த விலை கொடுத்து எந்த ஒரு தயாரிப்பாளரும் தனது படத்துக்கு விளம்பரம் செய்ய முடியாது!
நன்றி விகடன்

என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1