புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் அறிவிப்புக்கு கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு Poll_c10அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் அறிவிப்புக்கு கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு Poll_m10அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் அறிவிப்புக்கு கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு Poll_c10 
41 Posts - 67%
heezulia

10 Posts - 16%
Dr.S.Soundarapandian

8 Posts - 13%
mohamed nizamudeen

2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் அறிவிப்புக்கு கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு Poll_c10அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் அறிவிப்புக்கு கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு Poll_m10அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் அறிவிப்புக்கு கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு Poll_c10 
206 Posts - 74%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் அறிவிப்புக்கு கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 17, 2011 9:31 am

எங்களது வெற்றி வாய்ப்பு தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்துவதா? ஏற்க முடியாது, அ.தி.மு.க. பட்டியல் அறிவிப்புக்கு கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு: அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி கம்யூனிஸ்டு, தே.மு.தி.க. இன்று ஆலோசனை

தாங்கள் அளித்த தொகுதி பட்டியலில் பல தொகுதிகளுக்கு அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று கம்யூனிஸ்டுகள் மற்றும் தே.மு.தி.க. குற்றஞ்சாட்டி உள்ளது. இது தொடர்பாக விவாதித்து முடிவு எடுக்க அந்த கட்சிகளின் அவசர கூட்டம் சென்னையில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.

மார்க்சிஸ்ட்

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நேற்று இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இன்று (நேற்று) மாலை அ.தி.மு.க பேச்சுவார்த்தை குழுவை மார்க்ëசிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பேச்சுவார்த்தை குழு சந்தித்து கட்சிக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டிய 12 தொகுதிகள் பற்றி ஏற்கனவே அளிக்கப்பட்ட பட்டியலின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்ற தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதோடு மேலும் வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினோம்.

எங்கள் பொதுச்செயலாளரை சந்தித்து கலந்து ஆலோசித்து விட்டு இன்று (நேற்று) இரவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்திற்கு பேச்சுவார்த்தைக் குழுவோடு பேச்சுவார்த்தை நடத்தி இறுதி செய்வதாக அ.தி.மு.க. பேச்சுவார்த்தை குழு தலைவர்கள் கூறினார்கள்.

அதிர்ச்சி அளிக்கிறது

ஆனால், அடுத்த ஒரு மணி நேரத்தில் அ.தி.மு.க. போட்டியிட இருக்கும் 160 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 2006-ல் வெற்றி பெற்ற 6 தொகுதிகளுக்கும், மேலும் நாங்கள் போட்டியிட விரும்பி அளித்துள்ள பட்டியலில் உள்ள தொகுதிகளுக்கும் அ.தி.மு.க. தலைமை வேட்பாளர்களை அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதை ஏற்க இயலாது.

பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிற போதே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வலியுறுத்தி வரும் தொகுதிகளுக்கும் சேர்த்து வேட்பாளர்களை அறிவித்திருப்பது சரியான அணுகுமுறை அல்ல. எனவே, அ.தி.மு.க. அறிவித்துள்ள வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வற்புறுத்தும் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை வாபஸ் பெற வேண்டும்.

இன்று அவசர கூட்டம்

இந்த நிலைமை குறித்து விவாதித்து முடிவுகளை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு அவசர கூட்டம் சென்னையில் நாளை (இன்று) கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் நடைபெறும்.

இவ்வாறு ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்டு

இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் இந்த பிரச்சினை பற்றி விசாரிப்பதற்காக இன்று மாவட்ட செயலாளர்களின் அவசர கூட்டத்தை கூட்டி உள்ளது.

தே.மு.தி.க. அவசர ஆலோசனை

அ.தி.மு.க. கூட்டணியில், தே.மு.தி.க.வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்தன. அவை, எந்த தொகுதிகள் என்று அறிவிக்கப்படாத நிலையில் நேற்று, அ.தி.மு.க. போட்டியிடும் 160 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது, தே.மு.தி.க.வுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள 17 தொகுதிகளில் அ.தி.மு.க.வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டதாகவும் தே.மு.தி.க.வினர் தெரிவித்தனர்.

இது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு அவசர ஆலோசனை நடத்த தே.மு.தி.க. தீர்மானித்து உள்ளது.

புதிய தமிழகம்

இதேபோல புதிய தமிழகமும் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் அறிவிப்புக்கு அதிருப்தி தெரிவித்து உள்ளது. இதுகுறித்து புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது-

"ஒட்டப்பிடாரம் ஏற்கனவே புதிய தமிழகம் வெற்றி பெற்ற தொகுதியாகும். அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவிடம் ஒட்டப்பிடாரம் தொகுதியுடன் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய மூன்றில் ஏதாவது ஒரு தொகுதி, ஆக இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டு இருந்தோம்.

இன்று அவசர ஆலோசனை

புதிய தமிழகம் கேட்ட 4 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தமது வேட்பாளர்களை அறிவித்து இருக்கிறது. இது முழுக்க முழுக்க ஏமாற்றம் அளிக்கிறது. எனவே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து புதிய தமிழகம் மாவட்ட நிர்வாகிகள் அவசர கூட்டம் சென்னை தலைமை அலுவலகத்தில் 17-3-11 (இன்று) காலை 10 மணி அளவில் நடைபெறும்''.

இவ்வாறு அறிக்கையில் கூறி இருக்கிறார்.

அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் அறிவிப்புக்கு கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Mar 17, 2011 10:00 am

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தன்னிச்சையாக 160 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டது கூட்டணிக் கட்சிகளான சிபிஎம், சிபிஐ, புதிய தமிழகம் ஆகியவற்றுக்கு கடும் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் அளித்துள்ளது. இதுகுறித்து தஙக்ளது நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப் போவதாக அவர்கள் அறிவித்துள்ளதால் கூட்டணியில் பிளவு ஏற்படுமா என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.

நம்பகத்தன்மை இல்லாதவர் என்ற பெயரை மீண்டும் ஜெயலலிதா நிரூபித்துள்ளார். கூட்டணிக் கட்சிகளுடன் நீண்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த அதிமுக, சிபிஎம், சிபிஐ, மதிமுக ஆகிய கட்சிகளை பெரும் பரிதவிப்புக்குள்ளாக்கியது.

பின்னர் ஒரு வழியாக சிபிஎம்.முக்கு 12, சிபிஐக்கு 10 சீட்களை ஒதுக்கினார் ஜெயலலிதா. ஆனால் மதிமுகவை தொடர்ந்து கிடப்பில் போட்டு வைத்திருந்தார். ஆனால் நேற்று 160 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அதிரடியாக அறிவித்தார் ஜெயலலிதா. இதனால் மதிமுக முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு விட்டது.

ஜெயலலிதாவின் இந்த அதிரடியான அறிவிப்பு சிபிஎம், சிபிஐ, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுக்குப் பெரும் அதிர்ச்சியும், அதிருப்தியும் அளித்துள்ளது. அதிமுகவின் செயல் மிகவும் ஏமாற்றமளிப்பதாக அக்கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

உண்மையில் நேற்று காலைதான் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து அதிமுக தலைமை இறுதிக் கட்ட ஆலோசனையை நடத்தி வந்தது. தேமுதிக, சிபிஎம், சிபிஐ, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றன. ஓரிரு நாளில் தொகுதிகள் முடிவாகும் என்று அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தையும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் திடுதிப்பென்று நேற்று இரவில் தனது கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு ஒட்டுமொத்த கூட்டணிக் கட்சிகளையும் அதிர வைத்துள்ளார் ஜெயலலிதா.

அதாவது கூட்டணிக் கட்சியினர் பேசி முடித்து விட்டுக் கிளம்பிச் சென்றதும், பின்னாலேயே அதிமுக வேட்பாளர் பட்டியலும் வெளியாகியது. இது பெரும் அவமானச் செயலாக கூட்டணிக் கட்சியினர் மத்தியில் பார்க்கப்படுகிறது.

மேலும் ஜெயலலிதா அறிவித்துள்ள பல தொகுதிகள் கடந்த தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்டு வென்ற இடங்களாகும். அதாவது திமுக கூட்டணியில் போட்டியிட்டு வென்றவை.

குறிப்பாக சிபிஐ கட்சி திருத்துறைப்பூண்டி, நன்னிலம், சிவகங்கை, ஆலங்குடி, மன்னார்குடி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய தொகுதிகளில் வென்றிருந்தது. ஆனால் இப்போது அனைத்திலும் அதிமுக வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

இப்படி அவர்கள் வென்ற தொகுதிகளை தனக்காக எடுத்துக் கொண்ட ஜெயலலிதா, சிபிஐக்கு எதைக் கொடுக்கப் போகிறார் என்று தெரியவில்லை.

இதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த தேர்தலில் திண்டுக்கல், பெரம்பூர், அரூர், திருப்பூர், நாகை, மதுரை தெற்கு தொகுதிகளிகளுக்கும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

புதிய தமிழகத்திற்கும் இதே நிலைதான். இந்க் கட்சி ஒட்டப்பிடாரம், வாசுதேவநல்லூர் தொகுதிகளைக் கேட்டிருந்தது. ஆனால் இரண்டிலும் அதிமுக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பார்வர்ட் பிளாக் கட்சி வழக்கமாக போட்டியிடும் உசிலம்பட்டியைக் கேட்டிருந்தது. ஆனால் அங்கும் அதிமுக போட்டியிடுகிறது.

இப்படி கூட்டணிக் கட்சிகள் கேட்ட, போட்டியிட்ட, ஏற்கனவே வென்ற அனைத்துத் தொகுதிகளையும் ஜெயலலிதா பிடுங்கி விட்டார். இதனால் அனைத்துக் கட்சிகளும் கடும் அதிருப்தி அடைந்துள்ளன.

அதிர்ச்சி அளிக்கிறது - சிபிஎம்:

இதை சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கை விட்டு பகிரங்கமாக கண்டித்துள்ளார். அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியான சில நிமிடங்களில் ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில்,

அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் புதன்கிழமை நடத்திய பேச்சின்போது, கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதிகளோடு, மேலும் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளையும் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்.

அவர்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுடன் கலந்தாலோசித்து விட்டு, புதன்கிழமை இரவே மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு வந்து தொகுதிகள் பற்றி இறுதி செய்வதாக கூறினர்.

ஆனால், அடுத்த ஒரு மணி நேரத்தில் வெளியிடப்பட்ட அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலில், கடந்த தேர்தலில் எங்கள் கட்சி வெற்றி பெற்ற 6 தொகுதிகள், நாங்கள் கேட்டு வரும் பிற தொகுதிகளுக்கும் சேர்த்து வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.

இது மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்நிலையில், இப்போதைய நிலைமை குறித்து விவாதித்து முடிவுகளை மேற்கொள்ள, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் அவசரமாக சென்னையில் வியாழக்கிழமை நடைபெறும் என்று ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் சி. மகேந்திரனிடம் கேட்டபோது, அ.தி.மு.க.வின் இந்த அறிவிப்பு சற்றும் எதிர்பாராதது. எனவே, இது பற்றி விவாதிக்க எங்கள் கட்சியின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டத்தை அவசரமாக சென்னையில் வியாழக்கிழமை கூட்டியுள்ளோம் என்றார்.

புதிய தமிழகம் கூட்டம் கூட்டுகிறது:

இதேபோல புதிய தமிழகம் கட்சியும் கடுப்பாகியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறுகையில்,

4 தொகுதிகளின் பெயர்களை கூறுமாறு எங்களிடம் கேட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள், அதிலிருந்து 2 தொகுதிகளை எங்களுக்கு ஒதுக்குவதாகக் கூறியிருந்தனர்.

இதன்படி, வாசுதேவநல்லூர், ஒட்டபிடாரம், சங்கரன்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 4 தொகுதிகளின் பெயர்களைக் கொடுத்திருந்தோம். இப்போது, 4 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் எங்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை சென்னையில் வியாழக்கிழமை கூட்டியுள்ளோம் என்றார்.

விஜயகாந்த் தும் எரிச்சலில்!

அதிமுகவின் இந்த புல்டோசர் அறிவிப்பால், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் எரிச்சலடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த அம்மா இப்படி அதிரடியாக செயல்பட்டால் எப்படி நாம் அவருடன் இணைந்து கூட்டணியாக செயல்பட முடியம் என்று எரிச்சலுடன் தனது கட்சி நிர்வாகிகளிடம் கேட்டாராம் விஜயகாந்த்.

தேமுதிக கோரியதில் 17 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை ஜெயலலிதா அறிவித்துவிட்டதால் கடுப்பான விஜய்காந்த், நாம் கோரியதில் ஒரு தொகுதி கிடைக்காவிட்டால் கூட அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறுவோம் என்று தனது கட்சி நிர்வாகிகளிடம் கூறியுள்ளார்.

இந் நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க இன்று கட்சியின் உயர் மட்டக் கூட்டத்தை விஜய்காந்தும் கூட்டியுள்ளதாகத் தெரிகிறது
தட்ஸ்தமில்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Mar 17, 2011 10:03 am

அவரவர் வெற்றி வாய்ப்புத்தொகுதியை விட்டுக்கொடுத்து கூட்டணிக்கட்சிக்கு பாடுபட்டு வெற்றி தருவது தானே முறை..? அதை விடுத்து தாம் வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகளில் மட்டுமே நின்று வெற்றி பெற கூட்டணி எதற்கு..?

என்ன அரசியலோ... கருமம்.. என்ன கொடுமை சார் இது

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Mar 17, 2011 10:06 am

ஜயலலிதாவின் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியிலும் அவருக்கு கேட்ட பெயர் ஏற்படுத்தி கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை ,,,ஐந்து வருடத்திற்கும் மேலாக கூட்டணியில் இருந்த வைகோவை ஜெயலலிதா புறம் தள்ளுவதும் அவருடைய வெற்றி வாய்ப்பை குறைக்கும் என்பதில் ஐயமில்லை

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 17, 2011 10:09 am

ஜெயலலிதா கலைஞரைப் போல் கட்சி, பதவிகளுக்காக யாருடைய காலிலும் விழமாட்டார் என்பது இந்த அதிரடி வேட்பாளர் அறிவிப்பு மூலம் நிரூபித்துவிட்டார்.

அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் அறிவிப்புக்கு கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Mar 17, 2011 10:17 am

ஜெயலலிதாவுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம்.. ஏன் என்றால் கலைஞர் எதிர்ப்பலை மிக அதிகமாக பரவி வருகிறது..இலவசங்கள் சில பிச்சைக்காரகளைக் கவர்ந்தாலும் பொதுவான கணிப்பு கலைஞர் ஆட்சி கயமைத்தனமானது என்பதே..

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 17, 2011 10:21 am

தமிழகத்தில் இப்பொழுதே வாக்காளர்காளர்களுக்கு பணம் கொடுக்க ஆரம்பித்துவிட்டதாம் திமுக! சாலைகளில் கார்களை மறித்து பணத்தை போலீஸ் கையகப் படுத்துவது ஒரு நாடகம் என அங்கிருந்து வந்த சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்!

மேலும் வாக்கு எண்ணிக்கையை ஒரு மாதத்திற்கு தள்ளி வைத்திருப்பதையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள திமுக அரசு திட்டம் தீட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளார்கள்!

அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் அறிவிப்புக்கு கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக